Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்கரைப் பச்சை

Featured Replies

வணக்கம் சகோதரர்களே,

இத்துடன்"புபாள ராகங்கள் சிறுகதைப் போட்டியிலே பரிசுபெற்ற என்னுடைய அக்கரைப் பச்சை என்ற சிறுகதையை இணைக்கிறேன். உங்களுடைய கருத்துக்களை ஆஆஆஆவலுடன் (அடேயப்பா எவ்வளவு ஆவல்) எதிர்பார்க்கிறேன்

அன்புடன்

மணிவாசகன்

அக்கரைப் பச்சை

இருளரக்கனை விரட்டியடிப்பதற்கான கதிரவனின் இறுதிக் கட்டத் தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம். விடிந்தும் விடியாத அந்தப் பொழுதின் குளுமையை, அமைதியை, அழகை ஒரே நொடியில் அஸ்தமிக்கச் செய்த அந்தச் சத்தம் ஊரையே பரபரப்படையச் செய்கிறது. உயிர்ப்பலி எடுப்பதற்காய் யமதர்மன் 'பொம்மர்' உரு எடுத்து வந்து விட்டான்.

"தம்பி சத்தம் கேக்குது. எழும்பி பங்கருக்கை ஓடடா"

சொல்லிக் கொண்டே ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் வீராங்கனைக்கே சவால் விடக்கூடிய வேகத்தில் அம்மா ஓடிக்கொண்டிருக்கிறார். எனக்கு எரிச்சலாயிருக்கிறது.

"சீ.. இதென்ன வாழ்க்கை. உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமா .. .. இதை விட இப்படியே கிடந்து செத்துப் போகலாம்."

விரக்தியின் எல்லையில் மனதிற்குள் எண்ணிக் கொண்டவனாய் அப்படியே கட்டிலில் கிடக்கிறேன்.

"டும்"

"பொம்மர்" தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. குண்டு கன தூரந் தள்ளித் தான் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அதிர்ச்சியிலே எங்கள் கூரையிலிருந்து பெயர்ந்து வந்த ஓட்டுத் துண்டொன்று என் தலைமாட்டில் விழுகின்றது.

சில அனர்த்தங்கள் நடப்பதற்கு முன்பாக ஏதாவது "சிக்னல்" தெரியுமாம். பாட்டி கதை கதையாகச் சொல்லுவார். அப்படியானால் அடுத்த குண்டு உன் தலையில் தான் என்று இயற்கை எச்சரிக்கின்றதோ?

மனத்திலிருந்த உறுதி எங்கோ சென்று ஒளித்துக் கொள்ள சட்டென்று எழுந்து பங்கரை நோக்கி ஓடுகிறேன். மரணபயம் யாரைத்தான் விட்டது?

நான்கு வீடுகளுக்குப் பொதுவான அந்தச் சிறிய பங்கர் ஏற்கனவே நிரம்பி வழிகின்றது. உள்ளே நின்ற இருபது உருப்படிகளுடன் இருபத்தொன்றாவதாக என்னையும் இணைத்துக் கொள்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.

அப்பாடா! ஒரு காலை வைப்பதற்கு இடங் கிடைத்து விட்டது. பங்கருக்குள் 'சிதம்பர நடராஜர்' வடிவம் எடுக்கிறேன்.

இதற்குள் இரண்டு பெண்கள் தங்கள் குடும்பிச் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள்.

"ஆரப்பா இடிக்கிறது? கொஞ்சந் தள்ளி நில்லுங்கோ பாப்பம்."

"இதுக்கிள்ளை எங்கை தள்ளி நிக்கிறது. நாங்களே இஞ்சை மூச்சு விட ஏலாமல் நிக்கிறம். நெரிபடாமல் நிக்க வேணுமெண்டால் வீட்டிலை தனி பங்கர் வெட்ட வேண்டியதுதானே?"

"நீ வந்து வெட்டித் தாவன்"

வார்த்தைகள் தடித்து ஒருமையில் வந்து நின்றன.

"மச்சான், 'ஓயாத அலைகள் 5' தொடங்கிட்டுது"

இளைஞன் ஒருவன் ஜோக்கடிக்க பங்கருக்குள் கொல்லென்ற சிரிப்பொலி.

இத்தனை அவலத்திற்குள்ளும், மரண அரக்கன் தலைக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிரருகின்ற இந்த நிலையிலும் இவர்களால் இப்படிச் சிரிக்க முடிகின்றதே என்று நினைத்த போது ஆச்சரியமாகவும் இருக்கிறது.

மற்றக் காலையும் நிலத்தில் வைக்க வேண்டும் என்ற என் நினைப்பை அந்தச் சண்டை அடியோடு கைவிட வைத்துவிடுகிறது.

"பறவாயில்லை, காலையிலை கொஞ்சம் உடற்பயிற்சியாகவாவது இருக்கட்டும்"

இயலாமை சமாதானமாக மாறுகிறது. மனஞ் சமாதானஞ் சொல்லிக் கொண்டாலும் கால் கடுமையாக வலிக்கிறது.

"மூன்று குண்டுகளையும் போட்டிட்டாங்கள். வாங்கோ வெளியிலை போவம்"

முன்வீட்டுப் பென்சனியரின் அனுபவபுூர்வமான வார்த்தை வயிற்றில் பால் வார்க்க வெளியே வந்து வேண்டா வெறுப்புடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வைத்தியசாலைக்குச் செல்லத் தயாராகிறேன்.

"இந்தா தம்பி. .. இதைச் சாப்பிட்டிட்டுப் போ"

அம்மா இடியப்பத்தையும் கத்தரிக்காய்க் கறியையும் கொண்டு வந்து தருகின்றார்.

'இந்த வயதிலும் இப்படி சுறுசுறுப்பாக இருக்க உன்னால் எப்படியம்மா முடிகிறது? இத்தனை துன்பத்திற்குள்ளும் சிரித்தபடியே ஓடி ஓடி வேலைசெய்கின்ற வித்தையை எங்கேயம்மா கற்றுக் கொண்டாய்?'

மனதிற்குள் வியந்தவாறே மளமளவென்று சாப்பிட்டுவிட்டு சைக்கிளில் ஏறி மிதிக்கிறேன். அது கிறீச் கிறீச் என்ற சத்தத்தடன் மௌ;ள நகருகிறது.

'என்னோடை படிச்சவங்கள் எல்லாம் கொழும்பிலை காரெண்டும் பங்களா எண்டும் வசதியா இருக்கிறாங்கள். நான் இஞ்சை இந்த ஓட்டைச் சைக்கிளோடை கிடந்து மாயுறன்.'

ஏக்கம் பெருமூச்சாக வெளிக்கிளம்புகிறது.

"ஐயா வாறார் .. ஐயா வாறார்.."

சந்தோசம் மேலிட கூடியிருந்த மக்களிடம் காணப்பட்ட சலசலப்பும் ஆரவாரமும் என்னை நிஜவுலகிற்குக் கொண்டு வருகிறது.

"கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ பாப்பம்.. .. மனிசர் போறதில்லையே?"

மனஉளைச்சலை அந்த அப்பாவிகளிடம் கொட்டியபடியே போய் ஆசனத்தில் அமர்கிறேன்.

நான் மேசையிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு வெறுங்கிளாசை வைக்கும் வரை பொறுமையாகப் பாhத்துக் கொண்டிருந்த சிற்றூழியன் கந்தசாமி

"ஒவ்வொருத்தரா வரிசையா வாங்கோ .."

என்று குரல் கொடுக்கிறான்.

ஆட்களை அனுப்பச் சொல்லி நான் சொல்லவில்லை. ஒருநாளும் சொல்வதில்லைத் தான். கடமைக்கு வந்த முதல் நாள் நான் தண்ணீரைக் குடித்து விட்டு ஆட்களை அனுப்பச் சொன்னதிலிருந்து அதையே நேரசுூசியாக்கி நான் அசனத்தில் அமர்ந்து தண்ணீரைக் குடித்து விட்டு வெறுங் கிளாசை வைத்ததும் தனது தொழிலை ஆரம்பித்து விடுவான்.

இங்கே கந்தசாமியைப் பற்றி கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும்.

கந்தசாமி சிற்றூழியன் என்றாலும் புத்திசாலி. குறிப்பறிந்து செயற்படுவதில் விண்ணன். ஆனால் என்னொடு அதிகம் கதைக்க மாட்டான். எதாவது கதைப்பது என்றாலும் நான்காக மடிந்து நாக்குழறச் சொல்லி முடிப்பான். கேட்டால் மரியாதை என்பான்.

"ஏன் கந்தசாமி உப்பிடிப் பயப்படுறாய்?... சும்மா சொல்லன்"

நானும் எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். அவன் மாறுவதாயில்லை.

"ஆச்சி கெதியா வாணை"

கந்தசாமி அவசரப்படுத்துகிறான்.

நடக்க முடியாமல் வந்து என்னருகே அமர்ந்த அந்த மூதாட்டியை உற்றுப் பார்க்கிறேன்.

உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆகக் குறைந்த தசைகளையும் இயக்கத்தையும் கொண்ட உருவம் அது. ஒட்டி உலர்ந்த உடல். குழிவிழுந்த கண்கள். தொய்ந்து தூங்கும் கன்னங்கள். கந்தல் உடை .. .

வறுமையின் முத்திரைகள் அப்பட்டமாகத் தெரிந்தன.

"தம்பி ராசா.. ஒரே கிறுதியாக் கிடக்குது. எழும்பி நடக்கவும் முடியேல்லை. நல்ல மருந்தாத் தா தம்பி. உனக்குப் புண்ணியங் கிடைக்கும்.."

குரல் தளுதளுக்க என் இரு கைகளையும் ஆதரவுடன் பற்றிக் கொள்கிறாள்.

"முதலிலை கையை எடுங்கோ பாப்பம். அதுக்குள்ளை சொந்தங் கொண்டாடுறியள்."

எனது அதட்டலில் பயந்து போய் தன்கைகளை விடுவித்துக் கொள்கிறாள்.

"உது வருத்தமில்லையெணை. .. . உடம்பு பலவீனமா இருக்குது. மூண்டு நேரமும் நல்ல சத்தாச் சாப்பிட்டால் உந்தக் கிறுதியெல்லாம் சரியாப் Nபுhயிடும் .. . .. பொயிட்டு வாங்கோ.. .."

சத்தாகச் சாப்பிடக்கூடிய பொருளாதார நிலை அவருக்கு இல்லை என்பது எனக்குப் புரியாமலில்லை. நானும் என்ன தான் செய்ய முடியும்? சத்துக்கான விட்டமின் குளுசைகளைக் குடுக்கலாம் என்றால் அவையும் தாண்டிக்குளம் தாண்டி வருவதில்லையே. ஏமாற்றத்தோடு

அந்த மூதாட்டி எழுந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒவ்வொருவராகப் பார்த்து முடிப்பதற்குள் மூன்று மணியாகிவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளுகிறது.

"சாப்பாடுமில்லாமல் இந்தச் சனத்தோடை கிடந்து மாய வேண்டிக் கிடக்குது. எப்படியும் கொழும்புக்கு மாற்றம் எடுத்துக் கொண்டு போயிட வேணும்."

மனதினுள் திடமாகக் குடிகொண்ட எண்ணத்தைச் செயலாக்க முனைகிறேன்.

எனது அதிஸ்டமோ அல்லது அந்த மக்களின் துரதிஸ்டமோ மாற்றல் உடனடியாகவே கிடைத்து விடுகிறது. சந்தோசத்துடன் கடிதத்தை அம்மாவிடம் காட்டுகிறேன்.

"உனக்கு விருப்பமெண்டால் பொயிட்டு வா தம்பி"

உயிர்ப்பில்லாமல் சொல்லுகிறார்.

அம்மா எப்போதும் இப்படித்தான். என்னுடைய எண்ணத்துக்கும் செயல்களுக்கும் ஒரு நாளும் குறுக்கே நிற்க மாட்டார். அவருடைய விருப்பங்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் தன்னுடைய மனதிற்குள் போட்டு மூடி விடுவார். எல்லாத் தாய்மாரும்இப்படித்தான் இருப்பார்களோ?

அம்மாவிற்கு என்னுடைய முடிவில் துளியும் விருப்பமில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி நான் கிளற அவர் தன் மனந்திறந்து 'போக வேண்டாம்' என்று சொல்லி விட்டால் என்னுடைய தலைநகரக் கனவு என்னாவது?

இரண்டு நாட்களுக்குள் செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. ஊரே சோகத்தில் மூழ்கிவிட்டது போலிருந்தது. மக்களெல்லாம் எங்கள் வீட்டிற்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

"யுத்த சீரழிவுக்குள்ளையும் பசிபட்டினிக்குள்ளையும் நோய்நொடிக்குள்ளையும் கிடந்து சீரழியிற எங்களை நீங்கள் தான் கடவுள் மாதிரிக் காப்பாற்றினீங்கள். .. . . நீங்களும் எங்களைக் கைவிட்டிட்டுப் போனா நாங்கள் என்ன செய்வம்?..."

கெஞ்சியவர்களின் கண்களில் பனித்த கண்ணீர்த்துளிகளுக்கு நான் என்ன பதிலைத்தான் சொல்ல முடியும்?

"ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ? நான் போனால் இன்னொரு புது டொக்டர் வருவார்தானே?"

அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக இப்படிச் சொன்னாலும் என்னைப் போலவே பலரும் தென்னிலங்கையை நாடிச் செல்லும் நிலையில் புது வைத்தியர் வருவது முயற்கொம்பு என்பதும் நானறியாததல்ல.

ஆக மொத்தத்தில் என்னுடைய பயணம் ஊரில் ஒருவருக்கமே பிடிக்கவில்லை. என்னையும் ரவியையும் தவிர. அவன் பக்கத்துக் கிராமத்தில் வைத்தியராகப் பணிபுரிபவன். என்னைப் தொடர்ந்து தலைநகரம் வரக் காத்திருப்பவன் எனக்குச் 'சப்போர்ட்' பண்ணித் தானே ஆக வேண்டும்.

அப்பாடா! என்னுடைய ஆசைக்கனவுகளும் கற்பனைகளும் நனவாகும் அந்த நாளும் வந்துவிட்டது. என்னுடைய தலைநகரப் பயணம் ஆரம்பித்து விட்டது. அந்த நாட்களில் அப்பா வவுனியாவில் வேலை செய்து விட்டு காலையில் புறப்பட்டு பகல் சாப்பாட்டிற்கு வீட்டில் நிற்பார். ஆனால் நான் வவுனியா வந்தடைவதற்கு முழுதாக இரண்டு நாட்கள் பிடித்தன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அடையாள அட்டை தன்னுடைய முக்கியத்துவத்தை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறது.

தடை முகாமில் இரண்டு பக்கமும் முட்கம்பி அடைக்கப்பட்ட இடத்திற்கூடாக வரிசையாக நகர்த்தப்பட்டு ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடக்கிறது. என்னுடைய முறை வந்து விட்டது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே கேள்விக் கணைகள் தொடுக்கப்படுகின்றன. இவர்களுக்குப் பயிற்சியளிக்கும் போதே சிரிக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிடுகிறார்களோ தெரியாது.

"பெயரென்ன"

"சங்கர்"

"தொழில்"

"டாக்டர்"

"புலிக்கு மருந்து குடுத்ததா?"

எனக்கு வந்த எரிச்சலில் நான் மிருக வைத்தியர் இல்லை என்று சொல்ல நினைத்தாலும் உயிரின் மீதான ஆசை என்னை மௌனியாக்கிவிடுகிறது.

அப்பாடா! ஒருவாறாக விசாரணைகளை முடித்துக் கொண்டு இரவு ரயிலேறி கொழும்புக்கு வந்து சேர்ந்தாயிற்று. தலைநகரின் பிரமாண்டமும் இரவைப் பகலாக்கும் மின்னொளியும் ஏசியின் குளுமையும் பட்ட கஸ்ரத்தையும் களைப்பையும் மறக்கச் செய்ய அப்படியே தூக்கம் அணைத்துக் கொள்கிறது.

"மகத்தயா நகிடென்ன". (ஐயா எழும்புங்கள்)

தேனீருடன் நின்ற விடுதிப் பையனின் குரலிலே விழித்தவனாய் மணிக்கூட்டைப் பார்க்கிறேன். ஏழு மணியாகி விட்டிருந்தது. மளமளவென்று குளித்துத் தயாராகி வைத்தியசாலையை அடைகிறேன்.

வைத்தியசாலை என்னைப் பிரமிக்க வைக்கிறது. நோயாளர்களின் நெரிசலிலும் வியர்வையிலும் நனைந்து பழகிய எனக்கு குளிரூட்டப்பட்ட வைத்தியசாலை புது அனுபவத்தைத் தருகிறது.

நோயாளர்கள் வரத் தொடங்கவே நான் தொழிலில் லயித்து விட்டேன். இயந்திர வேகத்துடன் வந்து ஒப்புக்காக உதட்டளவில் ஒரு 'தாங்யுூ' வுடன் திரும்பிச் செல்லும் இவர்களையும் உளமார அன்பு செய்து தம் இதயத்தில் என்னை வைத்திருந்த ஊர் மக்களையும் ஒப்பிட்டுப் பார்த்த போது இதயத்தின் ஓர் மூலையிலே மெல்லிய நெருடல் ஏற்படத்தான் செய்தது.

எப்போதும் சற்றுத் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தானே யதார்த்தங்கள் புரிகின்றன.

"தொஸ்தருக்கு வணக்கம்"

தடித்த குரலிலான கொச்சைத் தமிழ் என்னை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.

"பெகெத் தென்ன" (மருந்து தாருங்கள்)

ஏதோ தந்து வைத்த ஒரு பொருளைக் கேட்பதுபோல அவன் கேட்டது எரிச்சலைத் தந்தது. என்னைச் சீண்ட வேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறான் என்பதும் விளங்கியது. என்னைச் சுதாகரித்துக் கொண்டு

"உள்ளுக்கு ஒருவரைப் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறேன். போய் வரிசையிலே வாருங்கள்"

என்று சிங்களத்தில் அமைதியாகவே சொல்லுகிறேன்.

"ஆ! எகெமத? அபெ பலாதத்தட அவில்லா அபடம உகண்ணணவா .. பற தெமலா. உம்பலாவ மறல தாண்ண ஓணே.." (ஆ! அப்படியா? எங்களது பகுதிக்கு வந்து எங்களுக்கே படிப்பிக்கிறாய். கெட்ட தமிழா… உன்னைக் கொல்லவேணும்)

ஏதோ பிரச்சினை எடுக்கப் போகிறான் என்று உள்ளுணர்வு

எச்சரிக்க சிற்றூழியனை அழைத்து அவனை வெளியே அனுப்பும்படி சொல்கிறேன்

"மே மகத்தயாத்தெக்க றண்டுவென்ன மட்டபே. ஒயா கிஹின் லொக்காட்ட கியன்ன" (இந்த ஐயாவுடன் சண்டை பிடிக்க என்னால் ஏலாது. நீங்கள் போய் பெரியவரிடம் சொல்லுங்கள்)

முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.

ஆத்திரம் கொப்பளிக்க விறுக்கென்று எழுந்து மேலதிகாரியின் அறைக்குள் சென்று நடந்த சம்பவத்தை ஒப்புவிக்கிறேன்.

"சுட்டக கலபல நத்துவ வாடிவென்ன" (கொஞ்சம் கலவரமில்லாமல் அமருங்கள்)

ஆசனத்ததைக் காட்டி விட்டு சிற்றூழியனை அழைத்து விசாரித்தவர் செருமலுடனே ஆரம்பிக்கிறார்.

"பதட்டப்பட வேண்டாம். வந்திருக்கிறது ஒரு அரசியல் புள்ளியின் கையாள். அவங்களை எதிர்த்து நான் ஒன்றும் செய்ய ஏலாது. மற்றது நீங்கள் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறீர்;கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாங்கள் உங்களுடைய பக்கத்துக்கு வர முடியாது. ஆனால் நீங்கள் நாடு முழுவதும் சுற்றுவீர்கள். அவர்கள் உங்களை இங்கே இருக்க விட்டிருப்பதற்காக நீங்கள் சந்தோசப்பட வேண்டும்."

ஆங்கிலத்திலே சொல்லி முடிக்கிறார்.

இது வழமையான இனவாதப் பல்லவி தான். ஆனால் டொக்டர் பெர்னாண்டோ போன்ற ஒருவரிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. எனது அமைதியைச் சாதகமாக்கிக் கொண்டு அவரே தொடர்கிறார்.

"சரி, சரி, வந்தவருக்கு மருந்தைக் குடுத்துவிட்டு வேலையைப் பாருங்கள்"

சொன்னவரை இடைமறித்து

"எனக்கேலாது சேர்! மானம் ரோசம் எல்லாம் எனக்கும் இருக்கிறது"

பொரிந்து தள்ளுகிறேன்.

"அப்படியெண்டால் லீவைப் போட்டிட்டுப் போங்க. இல்லாட்டி வீண் பிரச்சினை வரும். உங்களுக்குத் தான் கஸ்ரம்"

தொடர்ந்து பேச்சை வளர்க்க விரும்பவில்லை என்பதற்கு அடையாளமாக தொலைபேசியை எடுத்து யாருடனோ உரையாடலை ஆரம்பித்து விட்டார்.

லீவைப் போட்டுவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.

அறைக்கதவைப் 'படார்' என்று அடித்துச் சாத்திவிட்டு கட்டிலிலே விழுந்து விட்டேன்.

இங்கே எங்களது கோபத்தைச் சடப் பொருட்களிலே தானே காட்ட முடியும்.

கட்டிலிலே புரண்டு புரண்டு படுத்தும் நித்திரை வருவதாக இல்லை. மனம் கொதித்துக் கொண்டிருக்கும் போது எப்படி நித்திரை வரும்?

கடவுளைப் போல மதித்து, தங்களில் ஒருவராக அன்பு காட்டிய அந்த மக்களைத் தவிக்க விட்டு விட்டு வந்து இப்படி அவமானப்பட வேண்டி இருக்கிறதே என்ற நினைப்பு கண்களைக் குளமாக்குகிறது.

குளுமை தந்து கொண்டிருந்த 'எயார்கொண்டிசனும்' மேசையில் கிடந்த புறியாணிப் பார்சலும் பஞ்சணை மெத்தையும் வெறுப்பேற்றின.

என்னை மதித்த மக்களிடமே மீண்டும் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றல் கோரிக் கடிதம் எழுதிவிட்டு இன்னுமொரு கடிதம் எழுதுகிறேன். அது ரவிக்குரியது.

அன்பின் ரவிக்கு,

தலைநகரம் சொர்க்கபுரியாகத் தானிருக்கிறது. எல்லா வசதிகளும் குவிந்து கிடக்கின்றன. சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் ஒரு விஸயம். தன்மானத்தையும் தனித்துவத்தையும் மறந்த மனிதராக (பிராணியாக) வாழச் சம்மதம் என்றால் மட்டுமே இவற்றை அனுபவிக்கலாம். யோசித்து முடிவெடுக்கவும்.

அன்புடன்

சங்கர்.

மீண்டுமொருமுறை கடிதத்தை வாசித்தப் பார்த்தபோது மனம் இலேசாகி இருப்பதைப் போலிருந்தது.

நல்லாக நகைச்சுவை கலந்து எழுதி இருக்கிறீங்க. யதார்த்தத்தை கதையாக சொல்லி இருக்கிறீங்க. நன்றிங்கோ

ம்ம் உண்மைதான் அக்கரைக்கு இக்கரை பச்சை. நல்ல அழகாக நகைச்சுவையுடன் யதார்த்தமாக நிஜக் கதை போல் உள்ளது. வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் மணி வாசகன் நன்றாக எழதியுள்ளீர்கள் உங்கள் படைப்புகளை தொடருங்கள்

பாராட்டுகள் மணி வாசகன் நன்றாக எழதியுள்ளீர்கள் உங்கள் படைப்புகளை தொடருங்கள்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் சகோதரர்களே,

கதையை வாசித்துக் கருத்துச சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்

அன்புடன்

மணிவாசகன்

கதை மிகவும் நன்றாக இருக்கு மணிவாசகன் நகைச்சுவையுடன் யதார்த்தமான சிந்தனை தொடர்ந்து எழுதுங்கள் :P :wink: :arrow:

ÍôÀ÷ Á½¢Å¡º¸ý... þýÛõ ¿¢¨È ±ØÐí¸û...

¯í¸û ¬Å¨Äò¾£÷ì¸ ´Õ «Å¨Ä(¨Ç) ¯í;¸ÙìÌ þÉ¡Á¡¸ ÅÆí̸¢§Èý.. (þôÀÊ ¿¢¨È ¸¨¾¸û ±Ø¾ ´Õ ¸¢ì ¾¡ý) ;-) ;-) ;-)

  • தொடங்கியவர்

வணக்கம் பாலன், பொடியன்

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள், நல்லா எழுதியிருக்கிறிங்க., இடைக்கிடை சில நகைச்சுவைகள் சுப்பர். தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

  • தொடங்கியவர்

வணக்கம் விஸ்ணு,

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

மணி கதை நல்லாக இருக்கிறது.கொந்தாய் தவத் லியன்ட...

  • தொடங்கியவர்

வணக்கம் புத்தன்,

உங்கள் கருத்துக்கு நன்றி,

ஒபவஹன்சே மேவிதியட சஹயோகய தெனவனம் மம தவத் லியனவா ஹறித?

அன்புடன்

மணிவாசகன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொந்தாய் மம சகாய தெனவா தவத் லியண்ட.........

வணக்கம் மணிவாசன் அண்ணா

சிறுகதை நன்றாக உள்ளது. இன்றுதான் வாசித்தேன். சிறுகதைக்குரிய அத்தனை பண்புகளையும் கொண்டுள்ளது. நிறைய விடயங்களை உள்ளடக்கி இதை ஒரு கதை ஆக்காமல் தேவையானவற்றைத் தவிர்த்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சிறுகதை என்ற வட்டத்துக்குள் முடித்திருக்கின்றீர்கள். எனக்குப் பிடித்து சிறுகதை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதை போன்று உள்ளது. தொடர்ந்து இது போன்ற சிறுகதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். :lol: :arrow:

சொர்க்கமே என்றாலும் நம் நாடு போல வருமா?

அழகான கதையை தந்து இருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்.

சுவாரிசயமாக கதை சொல்லும் பாணியே அழகு மணிவாசன்.அருமையான சிறுகதை .

நீங்கள் நகைச்சுவைக்கா எழுதினீர்களோ தெரியவில்லை.ஆனால் அந்த குடுமிச்சண்டையோடு மட்டும் ஒத்துப்போக முடியவில்லை.ஒரு பத்துக்குடும்பங்கள் சேர்ந்து ஒரே பங்கருக்குள் பல இரவுகளைக் கழித்திருக்கிறோம்.நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரு சம்பவத்தை நானிறியவில்லை...இது என் கருத்து மட்டுமே சொன்னதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

இந்த வைத்தியர்மாரோட சொந்தங்கொண்டாடுறது எங்கட ஆக்களுக்கு இரத்தத்தில ஊhறினது.தாத்தாட்ட வாறாக்கள் கொண்டுவாற சாமான்களைப் பார்க்கோணும்.மாதாளம்பழத்தில

  • தொடங்கியவர்

வணக்கம் மணிவாசன் அண்ணா

சிறுகதை நன்றாக உள்ளது. இன்றுதான் வாசித்தேன். சிறுகதைக்குரிய அத்தனை பண்புகளையும் கொண்டுள்ளது. நிறைய விடயங்களை உள்ளடக்கி இதை ஒரு கதை ஆக்காமல் தேவையானவற்றைத் தவிர்த்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சிறுகதை என்ற வட்டத்துக்குள் முடித்திருக்கின்றீர்கள். எனக்குப் பிடித்து சிறுகதை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதை போன்று உள்ளது. தொடர்ந்து இது போன்ற சிறுகதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். :lol: :arrow:

வணக்கம் சுஜிந்தன்

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி.

நானும் எழுத்தாளர் முத்துலிங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய கதை எதையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

உங்களுக்குத் தெரிந்த இணைப்புக்கள் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

  • தொடங்கியவர்

சொர்க்கமே என்றாலும் நம் நாடு போல வருமா?

அழகான கதையை தந்து இருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்.

கருத்துக்கு நன்றி ரமா

  • தொடங்கியவர்

aaaaaaaaa lllllllllll kkkkkkkkkkkkkkkkk jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

tg df

  • தொடங்கியவர்

சுவாரிசயமாக கதை சொல்லும் பாணியே அழகு மணிவாசன்.அருமையான சிறுகதை .

நீங்கள் நகைச்சுவைக்கா எழுதினீர்களோ தெரியவில்லை.ஆனால் அந்த குடுமிச்சண்டையோடு மட்டும் ஒத்துப்போக முடியவில்லை.ஒரு பத்துக்குடும்பங்கள் சேர்ந்து ஒரே பங்கருக்குள் பல இரவுகளைக் கழித்திருக்கிறோம்.நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரு சம்பவத்தை நானிறியவில்லை...இது என் கருத்து மட்டுமே சொன்னதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

இந்த வைத்தியர்மாரோட சொந்தங்கொண்டாடுறது எங்கட ஆக்களுக்கு இரத்தத்தில ஊhறினது.தாத்தாட்ட வாறாக்கள் கொண்டுவாற சாமான்களைப் பார்க்கோணும்.மாதாளம்பழத்தில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டு நிலமையை சொல்கின்ற அழகான கதை

வணக்கம் சுஜிந்தன்

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி.

நானும் எழுத்தாளர் முத்துலிங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய கதை எதையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

உங்களுக்குத் தெரிந்த இணைப்புக்கள் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள்

உங்கள் ஆர்வத்தையிட்டு மகிழ்ந்தேன். அவருடைய சிறுகதைககள் அனைத்தையும் 2 நாட்களுக்கு வாசித்து முடித்தேன். மிகவும் அருமையாக இருக்கும். அந்தச் சிறுகதைகள் வாசிக்கும்முன் அவருடைய முன்னுரையையும் வாசியுங்கள். சிறுகதைகளைவிட அது இன்னும் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதைவிட அவர் சிறுகதை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு கொடுக்கும் விளக்கம் அருமை. அதையே நான் சிறுகதை எழுதும் போதும் பின்பற்றுவேன். அவரைப்பற்றி மிகுதியை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். புத்தகம் ஒன்றைக் கையில் வைத்து படுக்கையில் இருந்து வாசிக்கும் மகிழ்ச்சியில்லாவிட்டாலும் அதன் கால்வாசியாவது இணையத்திலிருந்து வாசிக்கும்போது கிடைக்கும். இந்த இணைப்பில் அவரின் அனைத்துச் சிறுகதைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

http://www.noolaham.net/library/books_aharam.htm

உங்களுக்கு ஏற்பட்ட முதலாவது அனுபவத்தை வைத்து எழுதியிருக்கிறீர்கள்.எண்பத்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் வாசித்தேன். நன்றாக எழதியுள்ளீர்கள். பாராட்டுகள் மணி வாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.