Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்ல கூட்டமைப்பு தயார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA-Delhi_seithy-20121010-150.jpg

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். அண்மையில் வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது ஜனாதிபதி தேநீர் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டுள்ளார். இதன் போது பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு ஜனாதிபதி, கூட்டமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி திகதி ஒன்றை வழங்கினால், பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=71537&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிச் சொல்லியே மகிந்தவின் பதவிக் காலம் முழுக்க பரஸ்பர நம்பிக்கையை கட்டி எழுப்ப பேசிக்கிட்டு இருங்க. அதற்கிடையில்.. சிங்கள ஆமிக்காரனும்.. ஒட்டுக்குழுக்களும் செய்யும் அடாவடிகளும்... திட்டமிட்ட குடியேற்றங்களும்.. காணி அபரிப்புக்களும்.. காணாமல் போதல்களும்.. சிறை வைப்புக்களும்.. சிறைஇருப்புக்களும்.. மாணவர் மீதான அடக்குமுறைகளும்.. சமூக விரோதச் செயல்களும் சீரழிவுகளும்.. தமிழர் தாயக.. நில அழிப்பும் அபகரிப்பும் தொடரட்டும்..! :(:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யார் சுமந்திரனோ.....அடுத்த கிரிகட் மச் வருகுதுபோல......

பேச்சுவார்த்தைக்கு போறதும் வறதுமாக இருக்கினமே தவிர வேறு ஒரு மாற்றமும் நடப்பதாக காணோம் என்னும் எவ்வளவு காலம் போகுமோ தீர்வொன்று வருவதற்கு தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நடைபெற்ற சந்திப்பில் எமது தரப்பு விளக்கத்தையும் எமது மக்கள் நிலையையும் தெளிவாக அரசுக்கு எடுத்து இயம்பியுள்ளோம்
                                            -- சம்பந்தர்

கூட்டமைப்பு மட்டுமே தமிழர்களின் தெரிவாக நாம் கருதவில்லை சக பாராளுமன்று உறுப்பினர்களின் கோரிக்கை தொடர்ப்பாக மரியாதை நிமித்தமான சந்திப்பே இது..

                                            --மகிந்தர்

 

ஏதோ பேசுகிறார்கள்... ஏதாவது நல்ல முடிவு வர வாய்ப்பு உள்ளது ..நல்லா இன்னும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்

                             -- சர்வதேசம்

 

தலை சுத்துது ...


                  ... எனக்கு..

எத்தனை தடவைதான் பேசுவீங்க..?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழு சொல்லும் 13 க்கு மேல வேண்டும் என்று... மற்ற குழு சொல்லும் 13 க்கு கீழயே தர மாட்டோம் என்று... இறுதியில் மேலும் கீழும் சுத்தும் வரை பேச்சு நடக்கும்... தமிழர்கள்----?????????????????

Edited by putthan

06122012-md-hr-2.jpg

ஒரு காலத்தில் ஒரு அக்காவும் தம்பியும் இருந்தார்கள். ஒன்றாக அடித்துப்பிடித்து விளையாடி, ஒன்றாக பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் கிட்டி அடித்து, ஒன்றாக ஏபிரல் பூல் நாளில் எதிரிகளுக்கு மைதெளித்து, இருவரும் சேர்ந்து தங்கள் இரகசியங்களை வீட்டுக்கு ஒழித்து இணை பிரியாமல் வாழ்ந்து வந்தார்கள்.  பால்ய பருவம் கடந்து, இளைஞர்களாகி தொழில் தேடி குடும்பங்களாய்விட்டார்கள். வழமையான சகோதரப்போட்டி. சந்திப்பதை தவிர்க்க வேறு வேறு பதைகளால் தொழில் துறைக்கு போய்வருவார்கள். 

 

அவளுக்கு ஒரு ஆண்மகன். அவனுக்கு ஒரு பெண்பிள்ளை. குமரிப்பருவம் வந்து திருமணப்பருவம் அடைந்தாள் அந்த மகள். அவளுக்கும் மச்சானைத் தெரியும். மச்சானுக்கும் அவளை தெரியும். தம்பியின் மனத்தில் தானும் அக்காவும் இணைந்து வாழ்ந்த அன்றை பால்ய பருவம் நினைவுக்கு வந்தது. பிரிந்து போய்விட்ட இன்றைய பெரியவர்களாக வாழும் வாழ்க்கையும் அவன் கண் முன் வந்தது.  திரும்பி இணைய இதுதான் கடைசிச் சந்தர்ப்பம். பலநாள் கால் மிதியாத முத்தம் அக்காவீட்டு முத்தம். ஆனால் துணிச்சலாக அக்காவின் வீட்டுக்கு வந்து கதைவை தட்டினான். அவள் வெளியே வந்து "அட தம்பியா? என்ன சமாசரம்" என்று கேட்டள்.

"அக்கா! எனக்கு எங்கள் பழைய வாழ்க்கை நினைவுக்கு வந்தது. நாங்கள் திரும்ப இணைய வேண்டும். உன் பையனை, என் மருமகனை என் பெண்ணுக்கு கை பிடித்துவைக்க வேண்டும்" என்றான். 

அவளுக்கு அது பிடிக்கவில்லை.

"அதற்கு இப்படி வைத்து எப்படி பதில் சொல்ல முடியும். முறையான ஒரு பேச்சு வார்த்தை வேண்டாமா. இன்னொருநாள் வா" என்று பதில் சொன்னாள்.

"அக்கா எனக்கும் உனக்கும் இடையில் எதற்கு பேச்சுவார்த்தை. அவன் உன் பையன். இவள் என் பெண்" என்றாள். ஆனால் அவள் "அதெல்லாம் முடியாது. பேச்சுவார்தை நாளிந் அன்றுதான் பதில் சொல்ல" முடியும் என்று தட்டிக்கழித்துவிட்டாள்.

 

தம்பிக்கு பதில் விளங்கியது. ஆனால் அயலட்டை. அவன் பேச்சு வார்த்தைக்கு போக வேண்டும் என்றார்கள். 

அதனால் தான அவன் இன்று அக்கா வீட்டுக்கு  வருகிறான். இங்கே சகலரும் சொல்ல வேண்டிய பதிலை, தங்கள் வசனங்களை ஏற்கனவே மனனம் செய்து வைத்திருக்கிறார்கள். அவன் வந்த உடன் எல்லொரும் தங்கள் பங்கு வரிகளை வாசித்துக்காட்டுவார்கள். மனனம் செய்ததை அடி பிறலாமல் ஒப்பிவிப்பார்கள். அவன் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு கண்களைத்துடைத்துகொண்டு வீடு திரும்புவான். அதன் பின்னர் அயலட்டை அவன் பெண்ணுக்கும் ஒருவனை பார்த்து வைக்கும்.  இல்லையேல் அவள் வாழாவெட்டியாக இருப்பாள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வழியிலும் தோற்றுப்போனோம். மண் பறிபோகிறது. தேர்தலில் போட்டி ஏற்ப்பட்டதால் திருமலையில் எங்கள் பிரதிநிதித்துவம் ஒன்றாக குறுகிவிட்டது. அதுவும் மயிரிழையில்.

 

இத்தகைய நெருக்கடிகளையும் தாண்டி நாம் போராடுவதற்காவது நாம்   சர்வதேச சூழலைப் பயன்படுத்திக்நம் மண்ணில் கொஞ்சமாவது  நிமிரவேண்டும். சர்வதேசத்தின் உதவியை கைநழுவ விட்டால் அது இனி என்றுமே  சாத்தியமில்லை. இப்போ கொஞ்சமாவது நிமிராவிட்டால் நமக்கு என்றுமே மீட்ச்சியுமில்லை.

 

நமது போராளி அமைப்பு தோற்கட்க்கப் பட்டது இந்த நூற்றாண்டின் பெரும் துயரம். சர்வதேசம் தடை போர்குற்றச்சாட்டு என்று சர்வதேச ரீதியாக அவர்களது காலக் கட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்கள். ஆனாலும் நாம் நமது இனம் இதனை எல்லாம் கடந்து சாத்தியமான விடுதலையை நோக்கிச் முன் செல்லவேண்டும். .

 

நமது போராளிகள் அமைப்பு சர்வதேசத்தால் தடை பண்ணப் பட்டுள்ளது. சர்வதேசம் எதிரிகள்மீது மட்டுமன்றி அவர்கள்மீதும் போர்க்குற்றம் சுமத்தியுள்ளனர். இது சர்வதேசத்தால் நிராகரிக்கப் பட்ட குர்திஸ்கட்சியான  PKK நிலமையைவிட சிக்கலான நிலமையாகும்.

இந்த நிலையில் நாம் அவர்களைக் தற்காலிகமாகவேனும் கடந்து சென்றால் மட்டுமே சர்வதேசத்தின் தயவைப் பெற முடியும். சர்வதேசம் பேசு பார்க்கலாம் என்றால் ஜெனீவாவில் போராளிகள் எடுத்த நிலையை எடுத்து சர்வதேசத்துடன் பகைத்து தனிமைப் பட முடியாது. ஆனால் இராசதந்திர ரீதியாக எதிரியை சர்வதேசத்துடன் முரண்பட வைத்துத் தனிமைப் படுத்த முடியும்.சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்று சற்றேனும் பலப்பட முடியும்.

 

இன்றைய சூழலில் சர்வதேசத்துடன் இணங்கிச் சற்றேனும் பலப்படாமல் எமக்கு எதிர்காலமில்லை. 

நாம் சர்வதேசத்தின் அனுசரனையைப் பெறுகிற நோக்கத்தோடு கடந்த காலத்தைக் தாண்டிச் செல்லவேண்டிய தருணமிது.

 

சர்வதேசம் புலத்திலும் களத்திலும் சிலரை போர்குற்றவாளிகளின் ஆதரவாளர்களாக அடையாளப் படுத்தியுள்ளது. அவர்கள் spoilers ஆகவே பார்க்கப் படுகின்றனர்.இதனை உள்வாங்காமல் சம்பந்தர் சர்வதேச ஆதரவை நாடி அரசியல் செய்ய முடியாது. 

 

அரசு வன்னியில் கைபற்றிய உள்நாட்டு வெளிநாட்டு ஆவணங்களை எதிர்கால விசாரனைகளில்  முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தில் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது. இத்தகைய ஆவணங்களே போர்குற்றத்தில் இருந்து தப்பிக்கும்வகையில் - கைதாகி கேக்கிற்க்கு அல்லது  டெல்கிக்குக் கொண்டு போகப்படும் ஆபத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மலேசியாவில் சிலரை அரசின் கால்களில் விழ வைத்துள்ளது என  தோன்றுகிறது.

 

இன்றைய நிலையில் சம்பந்தரைப் பலப்படுத்துவது தவிர நமக்கு வேறு வழியில்லை. அரசு விரும்புகிறமாதிரி நெருக்கடி ஏற்பட்டால் சம்பந்தரை எதிர்ப்பவர்கலைக்கூட சம்பந்தரால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.

 

சர்வதேச ஆதரவை பெறும் கடைசி முயற்ச்சியில் சம்பந்தர் சரவதேசம் எதிர்பார்க்கும் மொழியில் பேசவும் சர்வதேசம் எதிர்க்கும் அமைப்புகளை நிராகரிக்கவும் வேண்டிய நேரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேணும். புலம்பெயர்ந்தநாம் விடுதலையாகவே உள்ளோம். விடுதலை களத்தில் அடிமைப் பட்டுள்ள நம் மக்களுக்கானது.இன்னுமொரு தோல்வி அவர்களது கனவுள் எல்லாவற்றுக்கும்  சமாதி கட்டிவிடும்.

 

தற்காலிகமாகவேனும் களத்தில் நம்மக்களால் தெரிவு செய்யப்பட்டு சர்வதேசம் அங்கீகரித்த தலைமையின் பின்னே அணிதிரழ்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது..

 

 

 

 

 

 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.