Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசிகர்களுக்கு ரஜினி பிறந்தநாள் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது   ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajinikanth%20birthday%201.jpg

வழக்கமாக தனது பிறந்த நாளன்று தனிமையில் கழிக்கும் ரஜினிகாந்த்,இன்று தனது   பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு  முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார்.  அப்போது செய்தியாளகள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி  நன்றி கூறினார்.

Rajini%20birthday2.jpg

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,"என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள்  வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது.  எனது பிறந்த நாள் 12.12.2012 தேதியில் வந்து இருப்பது பெரிய விஷயம்.
 

  என்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் அவர்களின் பெற்றோரை வழிபடும் நாளாக  கொண்டாடினால் இன்னும் சந்தோஷப்படுவேன். அப்பவும், இப்பவும், எப்பவும்  சொல்வேன், என்னைவிட பெற்றோர்கள்தான் முக்கியம். அவர்களை நன்றாக கவனித்துக்  கொள்ளவேண்டும்.

‘கோச்சடையான்’ படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம்  மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும்  இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறும்.

நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்போது  வருவீர்கள் என்று கேட்கிறீர்கள். அதுபற்றி எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன்.  இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை"என்றார்.

 

முன்னதாக  வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசிய் ரஜினி,"எனது ரசிகர்கள் அனைத்து விஷயங்களையும் நேர்மையான கண்ணோட்டத்துடனேயே அணுக வேண்டும். ‘கோச்சடையான் படம் நவீன தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் சிறப்பான வெற்றி பெற்றால் தமிழில் உள்ள இலக்கியங்கள், இதிகாசங்களை படமாக்கும் முயற்சி வெற்றி பெறும். உங்களால் நான் வாழ்கிறேன். என்னை காண்பதற்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"என்றார்.

ரஜினி பிறந்த நாளையொட்டி, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகளை செய்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.சென்னையில் உள்ள ராகவேந்திரர் கோவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, பொதுமக்களுக்கு ரசிகர்கள் பிரசாதம் வழங்கினர்.

 

http://news.vikatan.com/?nid=11594#cmt241

 

Edited by பிழம்பு

இன்றைக்கு யாருக்கோ பிறந்தநாளாம்...யார் அவன்..
தமிழனுக்கு மாமனா..இல்லை மச்சானா..?
கறண்டை கண்டு பிடிச்சவனா...?
இல்லை ரெயினை கண்டு பிடிச்சவனா...?


காவிரித் தண்ணீர் வரவில்லை என்று ஏழை விவசாயிகளுக்கு குரல் கொடுத்து தண்ணீரை வரவழைத்தானா..?
மின்சாரம் இல்லை என்று மத்திய அரசிடம் உழைப்பாளிகளுக்காக குரல் கொடுத்தானா..?
அணு உலைக்கு எதிராக கூடங்குளம் கடலில் இறங்கிப் போராடினானா..?

 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடை பெற்ற உண்ணாவிரதத்திற்கு காலை வேளையில் வந்தானா...?(காலை சாப்பாடு மதியச் சாப்பாடு இரண்டையும் சாப்பிட்டு 11 மணிக்குத்தான் வந்தான்)


தமிழனுக்கு மாமனா...மச்சானா..?
மானங் கெட்டவனே..

இவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் நீங்க தமிழர்களா..?

 

(முகநூல்)



748_309553869148532_125234934_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துகள்!!!.....உங்களால் 'திரையுலகம்' வாழட்டும்! வாழ்க!! வாழ்க!...வாழ்க!. :) 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தலைவனே

தமிழ் இனத்திற்கு கிடைத்த தனையனே....

வாழிய நீ இன்று போல் என்றும்

தங்கத்தலைவனே

தமிழ் இனத்திற்கு கிடைத்த தனையனே....

வாழிய நீ இன்று போல் என்றும்

 

 தங்க மகனே ,மின்னலே ,ஊர்க்காவலனே ,எஜமானே ,பாட்சாவே .படையப்பா வாழ்க வாழ்க என்திரனாய் வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கத்தலைவனே

தமிழ் இனத்திற்கு கிடைத்த தனையனே....

வாழிய நீ இன்று போல் என்றும்

 

பிறந்தநாளில் போய் எதுக்கு இந்த நக்கல்? !! பாவம்....விட்டு விடுங்கள்!....:))

 கோச்சடையான்’ படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம்  மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும்  இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறும்.
 

 

சுப்பர் ஸ்டார் :

 

பணம் உன்னிடம் இருந்தால்
உன்னை உனக்கு தெரியாது!!

 

 

அவரின் பரம இரசிகன்:
 

பணம் உன்னிடம் இல்லையேல்
உன்னை ஒருவருக்கும் தெரியாது!!



37104_291409294312974_1882975961_n.jpg

ரஜனி பற்றிய சில விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் அவரை எனக்குப் பிடிக்கும். தன்னை நல்ல மனிதனாக வெளிக்காட்டி அதன்ற்கேற்றவாறு வாழ்கின்றவர். தமிழகத்தில் உள்ள கருணாநிதி, ஜெயலலிதா போன்ற எத்தனையோ அரசியல் வாதிகளை விட ரஜனி எவ்வளவோ மேல். பிறப்பில் தான் கர்நாடகத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் தன் இரண்டு மகள்களையும் தமிழ் ஆண்களுக்குத்தான் கட்டி வைத்தவர்.

 

நடிப்பின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அதே வேளை இவரது படம் ஓடினால்,  தமிழக சினிமாத்திரையரங்கில் இனிப்பு விற்பவர்களில் இருந்து புலம்பெயர் நாடுகளில் திருட்டு விசிடிகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள் வரைக்கும் லாபம் சம்பாதிக்கின்றனர். சாதாரண ஒரு குடும்பத்தில் இருந்து வந்து இன்று இந்தளவுக்கு முன்னேறியிருப்பது இலகுவான ஒரு விடயம் அல்ல.

 

எல்லாவற்றையும் இன ரீதியாகப் பார்ப்பதும் அதனூடாக ஒருவரது முன்னேற்றத்தினை அநாகரீக வார்த்தைகளாலும் ஒருமையிலும் விமர்சிப்பது தமிழ் தேசியம் ஆகாது.  ஒரு நடிகரை நடிகராக பாருங்கள். அவர் படத்துக்கு போய் மனம் விட்டு சிரித்து விசிலடித்து மகிழ்ந்து கொள்ளுங்கள்.வெளியே வந்த பின் மறந்து விடுங்கள்.

 

அவரை சிலர் 'தலைவா' என்று அழைப்பது எந்தளவுக்கு தவறோ அதே போன்று தான் ஒரு தலைவரிடம் எதிர்பார்க்கும் விடயங்களை  அவரிடம் எதிர்பார்ப்பதும். 

 

தமிழகத்து ஊடகங்களின்  துயரம் என்னவென்றால், நேற்று வந்த மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்துக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இன்று ரஜனியின் பிறந்த தினத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான். இது ரஜனியின் பிழையல்ல....அவரை வைத்து எல்லா ரீதியிலும் பணம் சம்பாதிக்க நினைக்கும் தமிழக ஊடகங்களின் கருத்தியல் வங்குரோத்துத் தனம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி நா படம்

அகூதா நா கடிதம்

சுண்டல் நா கடலை

நந்தன் நா விடலை

அந்தா பாரு படலை

நீ வெளில போய்டு முதல்ல

:D

தமிழகத்து ஊடகங்களின்  துயரம் என்னவென்றால், நேற்று வந்த மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்துக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இன்று ரஜனியின் பிறந்த தினத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான். இது ரஜனியின் பிழையல்ல....அவரை வைத்து எல்லா ரீதியிலும் பணம் சம்பாதிக்க நினைக்கும் தமிழக ஊடகங்களின் கருத்தியல் வங்குரோத்துத் தனம்.

தவறு  இரஜனியில் இல்லை, ஆனால் தமிழக ஊடகங்கள் / இரசிகர்கள் மத்தியில் வியாபார நோக்கும் விழிப்புணர்வு இன்மையும் காரணம் என்கிறோம்.

 

 

அண்மையில் ஈழத்தில் விஜய்க்கு ரசிகர் மன்றமொன்று முளைத்துள்ளது. முதல் காட்சிகளின் போது சிதறு தேங்காய் உடைப்பு மற்றும் மேளதாள கொண்டாட்டங்கள் போன்றவையே நடந்து முடிந்திருந்தபோதும் அடுத்து வரும் காலங்களில் கட்அவுட்களுக்கான பாலாபிசேகம் போன்றவையும் நடைபெறலாமென திரையரங்க உரிமையாளர்கள்; தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது. இதிலும் அங்குள்ள வர்த்தகர்கள் அடக்குமுறை இராணுவம் வெளிநாட்டு காசு என பல காரணிகள் உள்ளன. ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=111267


புலம்பெயர் பெயர் வாழ் தமிழர்கள் ஒப்பீட்டளவில் பணம் உள்ளவர்கள், கொஞ்சம் உலகம் அடிபட்டவர்கள். ஆனால் இதே இரஜனியோ இல்லை விஜயோ வந்தால் ..... தமிழக - ஈழ உறவுகளை பல விடயங்களிலும் பிரமிக்க வைத்து விடுவார்கள்.  

 

 

 தமிழக, ஈழ மற்றும் புலம்பெயர் தமிழர்கள் எல்லோருமே இந்த விடயத்தில் - தொப்புள் கொடி உறவுகள்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணா எப்ப Australia வாரிங்க எண்டு சொல்லுங்க சும்மா மேள தாளம் தார தப்பட்டை மாலை மரியாதைன்னு அசத்திபுடுவம் :D

அகூதா அண்ணா எப்ப Australia வாரிங்க எண்டு சொல்லுங்க சும்மா மேள தாளம் தார தப்பட்டை மாலை மரியாதைன்னு அசத்திபுடுவம் :D

உண்மையில் அப்படிஒரு தகுதியில் அகூதா இருக்கிறார் .................அதாவது தமிழையும்,தேசத்தையும் நேசித்து தமிழீழ விடுதலைக்கு செயல்வடிவம் கொடுப்போர் தான் உண்மையில் கீரோக்கள் .....அந்த வகையில் தோழர் சுண்டலின் சிந்தனை சரியே

  • கருத்துக்கள உறவுகள்
அகூதாவிற்கு பேரும் புகழுட‌ன் தமிழக் கலைஞர்களிருப்பது பிடிக்காது போல இருக்குது...எப்ப பார்த்தாலும் எதிர் மறையான விமர்சனங்கள் வருகுது.
 

அகூதாவிற்கு பேரும் புகழுட‌ன் தமிழக் கலைஞர்களிருப்பது பிடிக்காது போல இருக்குது...எப்ப பார்த்தாலும் எதிர் மறையான விமர்சனங்கள் வருகுது.

 

 எல்லாம் நீங்கள் தந்த துணிவும் வழிகாட்டலும் தான்  :D

 

சிங்கள ஆடை இறக்குமதிகளை புறக்கணிக்க முன்னர் எமது தமிழ் வர்த்தகர்கள் தமது இறக்குமதியை நிற்பாட்ட வேண்டும் என்பதற்கு ஆதரவு தருவோம். ஆனால், கிரிக்கெட் என்றால் அதில் அரசியல் கலக்கக்கூடாது என்கிறோம் (நீங்கள் இல்லை பொதுவாக)  :D

 

அதேவேளை இரஜனியின் இரசிகர்கள் ஆடுவெட்டி, பறவைக்காவடி எடுத்தால் அங்குள்ள ஊடகங்களையும் ஏன் அறியாமையையும் காரணங்களாக கூறுகின்றோம். யாழில் விஜய் இரசிகர்களை பார்த்து ஒரு விடுதலை உணர்வு இருந்த மண்ணிலா இது என்கிறோம்.

 

 ஆனால், புலம்பெயர்ந்த நாமோ அவற்றை செய்கிறோம், தாரளமாக. எம்மை நம்பித்தான் 'இலாபத்தை' தமிழக சினிமா தயாரிப்பாளர்கள் உள்ளார்கள். எம்மை பார்த்து தமிழக மற்றும் ஈழ இரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணி எழுதினேன்  :D

 அதேவேளை பல அமெரிக்க சினிமா காரர்கள் மனித உரிமை , மக்கள் விழிப்புணர்வு மற்றும் சமூக தேவைகளுக்கு நிதி சேகரிப்பு என பல நல்ல காரியங்களை செய்கிறார்கள். தமிழில் அவ்வாறு செய்வதில்லை. அதற்கு இரசிகர்களும் ஒரு காரணம், நாமும்  அதை எதிர்பார்ப்பதில்லை. அவர்களும் தமது 'ஸ்டார் பவரை' சமூகத்திற்காக பாவிப்பவதில்லை. அது மாறவேண்டும், இல்லை மாற்றப்பட வேண்டும்  :D

ரஜனி பற்றிய சில விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் அவரை எனக்குப் பிடிக்கும். தன்னை நல்ல மனிதனாக வெளிக்காட்டி அதன்ற்கேற்றவாறு வாழ்கின்றவர். தமிழகத்தில் உள்ள கருணாநிதி, ஜெயலலிதா போன்ற எத்தனையோ அரசியல் வாதிகளை விட ரஜனி எவ்வளவோ மேல். பிறப்பில் தான் கர்நாடகத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் தன் இரண்டு மகள்களையும் தமிழ் ஆண்களுக்குத்தான் கட்டி வைத்தவர்.

 

 

அண்ணா தனுசு தெலுங்கன் அவர் தமிழ் இல்லை. 

நான் அறிந்தவரை மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் மற்றும் அமிதாப்பச்சன் மக்கள்  நலன்களுக்கு தமது நேரத்தை பணத்தை செலவு செய்கிறார்கள். தமிழக நடிகர்கள், நடிகைகளிடம் அது குறைவு இல்லை அறவே இல்லை.

 

நடிகர்களிடம் பிழை இல்லை, பிழை இரசிகர்களிடம்தான்.

'செலுலோயிட்' சுருள்களில் அசையும் ரஜனி விம்பத்தின் பரம ரசிகன். தனி வாழ்க்கையில் ரசிகர்களை வைத்து ஏமாற்றுவதற்கு பரம எதிரி (அது அவர் குடும்ப உறுப்பினர்களின் வழிநடத்துதலாகவும் இருக்கலாம்).

ரஜனி நினைத்திருந்தால் இரசிகர்களுக்கும் தமிழக உறவுகளுக்கும் நிறையச் செய்திருக்கலாம். தனது 'இமேஜை' வைத்து இன்னும் வியாபாரங்களை பெருக்குவதில் குறியாகவே உள்ளார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை, தமிழனுக்கு யாராவது ஒருத்தரை தலையில் வைத்துக் கொண்டாடாவிட்டால் தூக்கம் வராது.

அதிகளவில் வறுமையில் வாழும் தமிழக உறவுகளுக்கு இனிய திரைப்படத்தை தரவும்;


போட்டி  போட்டு தமிழக திரைப்படங்களை வாங்கி மன உளைச்சலில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கவும்;
 

"எங்கும் எப்போதும் இராஜா" போன்ற பல மில்லியன்கள் டாலர்கள் நேரடி நிகழ்வுகள் மூலம் எம்மை உயர்த்தவும்;

 

 

 இந்த 'சுப்பர் ஸ்டார்கள்' தேவை  :D

  • கருத்துக்கள உறவுகள்
[b]தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது   ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.[/b]

தனது பிறந்தநாளில்... உலகத்துக்கு, அரிய தத்துவத்தைக் கூறிய தலைவா... நீ, இன்னும்... நூறு ஆண்டு வாழ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் திறமைகளை முதலீடுகளை வளர்க்கும் அதே நேரம்.. திறமை உள்ள மற்றவர்களுக்கும் இடமளிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு திறமைப் போட்டி ஏற்பட்டு தமிழர்களிடமும் வளர்ச்சி ஏற்படும். அதற்காக தமிழர்கள் பிறரையே அண்டி வாழும் நிலை இருக்கக் கூடாது.

 

இன்றைய சினிமாக்காரங்க தாங்கள் மக்களை அண்டி வாழ்வதை மறந்து மக்கள் தங்களை அண்டி வாழ்வதாக கற்பனை பண்ணிக்கிட்டு.. தாங்கள் தலைவர்கள்.. தத்துவஞானிகள் என்ற தோறணையில் செயற்படுவது ரெம்ப ஓவர்..!

 

அந்த வகையில் எனக்கு இவரைப் பிடிக்காது. முதலில் இவர் தன்னை நடிகனாக... மக்களிடம் திரைக்கு அப்பால்... இனங்காட்டாமல்.. சாதாரண மனிதனாக.. நடந்து கொள்ள வேண்டும். மக்களிடம் பறித்த பணத்தில் குறித்த ஒரு சதவீதத்தை அவர்களுக்கே குறிப்பாக ஏழை மக்களுக்கே நல்ல வழியில் செலவழிக்கவும் முன் வர வேண்டும்..! :)

 

 

இந்த கடா வெட்டுறது.. பால் அபிசேகம் பண்ணுறது.. கட்டவுட் கட்டிறது.. கோவில் கட்டிறது.. இது போன்ற பைத்தியக்காரத்தனங்களை தமிழர்கள் கைவிட ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை உருவாக்க வேண்டும். அதில் செலவு செய்யப்படும் பணத்தைக் கொண்டு இளைஞர்களுக்கு ஏதேனும் பயனுள்ள தொழிற்பயிற்சிக் கல்வி வழங்கலாம். :)

 

 

Edited by nedukkalapoovan

இந்த கடா வெட்டுறது.. பால் அபிசேகம் பண்ணுறது.. கட்டவுட் கட்டிறது.. கோவில் கட்டிறது.. இது போன்ற பைத்தியக்காரத்தனங்களை தமிழர்கள் கைவிட ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை உருவாக்க வேண்டும். அதில் செலவு செய்யப்படும் பணத்தைக் கொண்டு இளைஞர்களுக்கு ஏதேனும் பயனுள்ள தொழிற்பயிற்சிக் கல்வி வழங்கலாம். :)

 

இந்த பிற்போக்கான சிந்தனையை கண்டிக்கின்றேன்  :D

தமிழர்களிடம் திறமைகளை முதலீடுகளை வளர்க்கும் அதே நேரம்.. திறமை உள்ள மற்றவர்களுக்கும் இடமளிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு திறமைப் போட்டி ஏற்பட்டு தமிழர்களிடமும் வளர்ச்சி ஏற்படும். அதற்காக தமிழர்கள் பிறரையே அண்டி வாழும் நிலை இருக்கக் கூடாது.

 

இன்றைய சினிமாக்காரங்க தாங்கள் மக்களை அண்டி வாழ்வதை மறந்து மக்கள் தங்களை அண்டி வாழ்வதாக கற்பனை பண்ணிக்கிட்டு.. தாங்கள் தலைவர்கள்.. தத்துவஞானிகள் என்ற தோறணையில் செயற்படுவது ரெம்ப ஓவர்..!

 

அந்த வகையில் எனக்கு இவரைப் பிடிக்காது. முதலில் இவர் தன்னை நடிகனாக... மக்களிடம் திரைக்கு அப்பால்... இனங்காட்டாமல்.. சாதாரண மனிதனாக.. நடந்து கொள்ள வேண்டும். மக்களிடம் பறித்த பணத்தில் குறித்த ஒரு சதவீதத்தை அவர்களுக்கே குறிப்பாக ஏழை மக்களுக்கே நல்ல வழியில் செலவழிக்கவும் முன் வர வேண்டும்..! :)

 

 

இந்த கடா வெட்டுறது.. பால் அபிசேகம் பண்ணுறது.. கட்டவுட் கட்டிறது.. கோவில் கட்டிறது.. இது போன்ற பைத்தியக்காரத்தனங்களை தமிழர்கள் கைவிட ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை உருவாக்க வேண்டும். அதில் செலவு செய்யப்படும் பணத்தைக் கொண்டு இளைஞர்களுக்கு ஏதேனும் பயனுள்ள தொழிற்பயிற்சிக் கல்வி வழங்கலாம். :)

 

அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் என்ற ஒரு பழமொழி இருக்கு. திராவிட அரசியல் என்று தமிழகத்தை நாறடித்த அரசியல் தான் சங்கம் தந்த தமிழகத்தின் கலை இலக்கிய போக்கை மாற்றியமைத்தன. கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் இலக்கியத்தினதும் கலைகளினதும் தரத்துடன் ஒப்பிடும் போது தமிழகம் தாழ்ந்து போயிருப்பதுக்கும் தியேட்டரை விட்டு வெளி வந்த பின்னும் நடிகர்களை தாங்கி தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கும் இது தான் காரணம். 80 வயதிலும் வீணி வழிய மானாட மயிலாட பார்த்து ரசிக்கும் பேர்வழிகள் கூட தமிழகத்தை ஆளலாம் என்றால் அதன் கலை வெளிப்பாடும் இப்படித்தான் இருக்கும்.

 

இவற்றை விட, நடிகர்கள் மேலான அதீத பற்று இருப்பது தமிழகத்தில் மட்டுமல்ல. மற்ற இடங்களில் இதைப் போன்ற செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவது அதிகம். ஹொலிவூட் பட நாயகர்களைக் கண்டவுடன் மேலாடையக் முழுமையாகக் கழட்டி மார்புகளை காட்டிக் கொண்டு கூச்சலிட்டு ஆராவரிக்கும் கனடிய இளம் பெண்களைக் கண்ணால் கண்டுள்ளேன். எல்லா இடங்களிலும் எல்லா மக்களும் இருக்கின்றனர். எண்ணிக்கையில் தான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் பரம ரஐனி ரசிகன்

 

எமது அழிவுகள் பற்றி  தொடர்ந்து மௌனம் காத்ததால் அவரது ரசிகனாக பார்த்த படம் தளபதி  என்று நினைக்கின்றேன்.  அதன்பின் முற்றாக திரைப்படத்திலிருந்தே  ஒதுங்கிவிட்டேன். (நல்ல படம் என்று எவராவது சொன்னால் மட்டும் பார்ப்பது தற்போதைய  நடைமுறை.)

 

ஆனால்  முள்ளிவாய்க்காலின் போது எமக்கான  போராட்டங்களில் கலந்து  கொண்டது பேசியது ஒரளவுக்கு பாராட்டத்தக்கது.

 

இருந்தாலும்

வேசம் போட்டு எம்மை ஏமாற்றிவர்களுக்கு மத்தியில் தானுண்டு தன் குடும்பம் வேலை  உண்டு என்று வாழும் இவர் பரவாயில்லை  என்பதே எனது நிலை.

 

வாழ்க பல்லாண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.