Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்கி: மிகவும் பிடித்து இருந்தது: நிழலி

Featured Replies

 நன்றி ,நான் எழுத நினைத்தை எழுதியதற்கு .அரசியலுக்கு ஒரு அளவுகோலும் சினிமாவிற்கு இன்னுமொன்றும் என்று தமக்கேற்ற தொப்பிதான் அணிகின்றார்கள் .

 தொப்பி உங்களுக்கதான் பொருத்துகின்றது, உங்களுக்கு தேவையென்றால் யாருடைய பதிலையும் கொப்பி பண்ணுவீர்கள், பதில் போடமுடியலைன்னா, "கண்டவர்களுக்கு பதிலிடமாட்டேன், என்ன தகுதியிருக்கு,..."

நான் பருத்த பழம், வெம்பி வெடிக்கபோகிறேன் என்ற கணக்கில்தான் உங்கட கதைகளிருக்கு, நீங்க அடிக்கடி நிறம்மாறுமினம்

  • Replies 57
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
நான் இங்கு துப்பாக்கி பற்றி கதைக்க வர‌வில்லை ஆனால் இங்கு நிழலியின் எழுத்தைப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது...முந்தி ஒரு திரியில் கிருபன் ர‌மணிச்சந்திர‌னின் எழுத்துக்கள் இலக்கியத் தர‌ம் இல்லை என எழுதப் போக அதெப்படி கிருபன் தர‌ம் பிரிக்கலாம் அதாவது ர‌.......... .ச நாவல் இலக்கியத்தர‌ம் இல்லை என கிருபன் எப்படி சொல்லலாம் என நிழலி கிருபனோடு சண்டைக்கு போனதாக ஞாபகம்.
 
இலக்கியத்தை எப்படி தர‌ம் பிரிக்க இயலாதோ அதே மாதிரி சினிமாவையும் தர‌ம் பிரிக்க முடியாது...விஜயின் பட‌ம் இப்படித் தான் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்...விஜய் வித்தியாச‌மான வேட‌த்தில் நடித்தால் ர‌சிகர்கள் ஏற்க மாட்டார்கள்...தன்னுடைய ர‌சிகர்களுக்கு எது பிடிக்குதோ அதை தன்னுடைய பட‌த்தில் விஜய் கொடுக்கிறார்...அதே மாதிரித் தான் ஒவ்வொரு நடிகரும்,டைர‌க்கரும் செய்கிறார்கள்...அதற்காக எல்லாத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது கூடாது.
 
பட‌ம் சரியில்லை என கருத்து சொல்வது சரி ஆனால் அதை இன்னொரு வித வேறு பட்ட சினிமாவுட‌ன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு.
 
  • தொடங்கியவர்
நான் இங்கு துப்பாக்கி பற்றி கதைக்க வர‌வில்லை ஆனால் இங்கு நிழலியின் எழுத்தைப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது...முந்தி ஒரு திரியில் கிருபன் ர‌மணிச்சந்திர‌னின் எழுத்துக்கள் இலக்கியத் தர‌ம் இல்லை என எழுதப் போக அதெப்படி கிருபன் தர‌ம் பிரிக்கலாம் அதாவது ர‌.......... .ச நாவல் இலக்கியத்தர‌ம் இல்லை என கிருபன் எப்படி சொல்லலாம் என நிழலி கிருபனோடு சண்டைக்கு போனதாக ஞாபகம்.

இவ்வாறு நடக்கவில்லை. ஒரு முறை யாரோ ர.ச பற்றி உயர்வாக எழுதியதை மறுத்து எழுதியதாகத்தான் நினைவு. ஒரு வேளை நக்கல் அடித்தாலும் அடித்து இருப்பன் என நினக்கின்றன்.

மற்றப்படி, இலக்கியத்திலும் நல்ல இலக்கியம் தரமற்ற இலக்கியம் உண்டு என்பதை ஆணித்தரமாக நம்புகின்றதுடன், தரமற்ற இலக்கியத்தை தூக்கிப் பிடிப்பவர்களை பல தடவை மட்டம் தட்டியும் கதைத்துள்ளேன். பொதுவாக ரா.ச, சிவசங்கரி போன்றோர் எழுதும் கதைகளை வாசிப்பவர்களுடன் இலக்கியம் பற்றிக் கதைக்க கூட முயல்வதில்லை.

லா.ச.ரா, சுந்தரராமசாமி, டால்ஸ்டாய், எம்.டி. வாசுதேவன் போன்றவர்களின் கதைகளைப் படிப்பதால் நான் உயர்ந்த இலக்கியத் தரமான விடயங்களை வாசிப்பவன் என்ற திமிரும் எனக்கு இருக்கு. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி தன்னை மேதாவியா காட்டி ஏதாவது எழுதலாம் எண்டு முயற்சித்தால்  ஊகும் ....விடுங்கப்பா...

அடி ஆத்தாடி இவ்வளவு பெயர்களை எப்படித்தான் மனப்பாடம் பண்ணினீங்களோ?  அதுக்காகான நான் எப்பிடி மனப்பாடம் பண்ணுறன் எண்டு கேக்க கூடாது :lol:

Edited by sathiri

நீங்கள் கிருபனுக்கு எழுதினதை நான் பார்த்தேன் நக்கலுக்கு சொன்னீர்களோ அல்லது சீரியசாக சொன்னீர்களோ தெரியாது அதை விட‌ க.களத்தில் சொன்னீர்களோ அல்லது திண்ணையில் எழுதினீர்களோ எனக்கு ஞாபகமில்லை ஆனால் நீங்கள் திண்ணையில் எழுதியிருந்தால் அதை க.களத்திற்கு காவி வந்ததிற்கு மன்னிக்கவும்
 
நிழலி தன்னை மேதாவியா காட்டி ஏதாவது எழுதலாம் எண்டு முயற்சித்தால்  ஊகும் ....விடுங்கப்பா...

அடி ஆத்தாடி இவ்வளவு பெயர்களை எப்படித்தான் மனப்பாடம் பண்ணினீங்களோ?  அதுக்காகான நான் எப்பிடி மனப்பாடம் பண்ணுறன் எண்டு கேக்க கூடாது :lol:

இல்லை  நிழலிக்கு  சினிமாவிலும் சரி இலக்கியத்திலும் சரி தரம்பிரித்து பார்ப்பதிலும் வாசிப்பதிலும் திறமையும் தெளிவும் இருக்கு ஆனால் அவர் தரம்பிரிக்காது பார்க்கும்  ஒரே ஒரு விடையம்.

அமலா பாலையும் அழகு என்று சொல்லுவார் அதே நேரம் வடிவேல் சாறி காட்டி வந்தால் அதையும் அழகு என்று தரம் பிரிக்காது ரசிப்பார். :D

  • தொடங்கியவர்

நிழலி தன்னை மேதாவியா காட்டி ஏதாவது எழுதலாம் எண்டு முயற்சித்தால்  ஊகும் ....விடுங்கப்பா...

நீ தானே பொன் வசந்தம் பார்க்கலாம் என்றும் இருக்கின்றன்...அதைப் பார்த்த பின் எழுதி இன்னும் கொஞ்சம் மேதாவித் தனத்தைக் காட்டலாம் என்று இருக்கின்றன். உங்கள் உதவியும் தேவை.

அமலா பாலையும் அழகு என்று சொல்லுவார் அதே நேரம் வடிவேல் சாறி காட்டி வந்தால் அதையும் அழகு என்று தரம் பிரிக்காது ரசிப்பார். :D

சில நேரங்களில் சாறி கட்டின வடிவேலைப் பார்க்க ஒரு மார்க்கமாக கண்ணுக்குத் தெரிவது உண்மைதான்  :D 

  • கருத்துக்கள உறவுகள்

கும்கி போன்ற குப்பை படங்களை விட நீ தானே என் பொன் வசந்தம் சூப்பர் அதுவும் கெளதம் மேனன் direction சொல்லி வேலை இல்ல :D

கும்கியின் அட்டகாச வசூல் – சிவாஜியின் மாஸ் December 16, 2012 by Chinnappayyan in பாக்ஸ் ஆபீஸ் with 0 Comments ஸ்டுடியோ கிரீன் வசம் கும்கி சென்றவுடனேயே அனைவரும் இது ஒரு வெற்றிப் படமாகப் போகுதென்று கூற ஆரம்பித்ததை உண்மையாக்கி உள்ளார்கள் ஸ்டுடியோ கிரீன். முதல் மூன்று நாட்களின் வசூலைப் பார்த்து பெரிய நடிகர்களே அசந்து போய் உள்ளார்கள். சிவாஜியின் பேரனுக்கு சூப்பர் ஒபெனிங் இருக்கப் போவதை கும்கி காட்டியுள்ளது. இதற்கு சிவாஜியின் விசுவாசிகளும் ஒரு காரணம் என கோடம்பாக்கம் சந்தோசத்துடன் கொண்டாடிக்கொண்டுள்ளது. சமீபத்தில் மறு வெளியீடான கர்ணன் படத்தின் வசூலை மேற்கோள் காட்டுகிறார்கள். வெளியான முதல் மூன்று நாட்களில் இதுவரை சுமார் 10.1 கோடி வசூலித்துள்ளது கும்கி. ஒரு அறிமுக நாயகனின் படமாக இருந்தாலும் அதிகமான எம்.ஜி கொடுத்து வெளியிட்ட திரை அரங்குகள் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளார்கள். இந்த வேகத்தில் போனால் இந்த வார இறுதிக்குள் போட்ட முதலயும் எடுத்து லாபமும் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் விநியோகஸ்தர்களும் திரை அரங்கு உரிமையாளர்களும். சிவாஜிக்கு பராசக்தி. விக்ரம் பிரபுவுக்கு கும்கி என இனி துணித்து சொல்லலாம் myoor

கும்கி போன்ற குப்பை படங்களை விட நீ தானே என் பொன் வசந்தம் சூப்பர் அதுவும் கெளதம் மேனன் direction சொல்லி வேலை இல்ல :D

சுண்டடலுக்கு யார் மேல் கோபம்?' கும்கி படத்தின்மீதா? அல்லது ' துப்பாக்கி குப்பை என்று சொன்னதால் நிழலி மேலேயா?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருங்க அண்ணா நானே பயந்திட்டு இருக்கன் தலை எனக்கு எப்ப எப்பிடி எந்த வழில ஆப்பு வைக்க போறாரோ எண்டு.....

துப்பக்கினா சுடும்

கும்கி எல்லாம் ஒரு படம்

நம்ம நிழலினா யாழ் களம்

:D

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தில் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் நண்பன் ஆகிய படப்பெயர்களும் அடக்கம்.

2012ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகளில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் நண்பன் ஆகிய படப்பெயர்களும் அடக்கம்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஏராளமானோர் சினிமா என்ற வார்த்தையை கூகுள் தேடலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய நகரங்களான கோவை, சென்னை மற்றும் விஜயவாடாவில் தான் அதிகமானோர் சினிமா குறித்து கூகுளில் தேடியுள்ளனர்.

பிற மாநிலங்களில் உள்ளவர்கள் பல்வேறு பொருட்கள் குறித்து கூகுளில் தேடியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் மகக்ள் படங்கள் குறித்து தான் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி, நண்பன் ஆகிய படங்கள் விஜய் நடித்தது. பில்லா 2 அஜீத் குமார் நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

துப்பாக்கி பேசுகின்ற அரசியலை தவிர்த்து அதை ஒரு ஆக்சன் திரைப்படம் என்னும் வகையில் பார்க்கின்ற பொழுது நன்றாக விறுவிறுப்பாகத்தான் இருந்தது. காதல் காட்சிகளும் ரசிக்கும்படி இருந்தது.

  • தொடங்கியவர்
. காதல் காட்சிகளும் ரசிக்கும்படி இருந்தது.

ஓ  அதில் காதல் காட்சிகள் வேற இருந்ததா? சொல்லவே இல்லை...

நான் அவற்றைத் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளை அரை லூசு போன்று காட்டும் தனத்தின் உச்சக் காட்சிகள் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தன்.

துப்பாக்கி படத்தின் காதல் காட்சிகளில் விஜய்தான் அரைலூசு மாதிரி காட்சி தருவார். நிழலி படம் பார்க்கவில்லை போல் இருக்கிறது.

  • தொடங்கியவர்
துப்பாக்கி படத்தின் காதல் காட்சிகளில் விஜய்தான் அரைலூசு மாதிரி காட்சி தருவார். நிழலி படம் பார்க்கவில்லை போல் இருக்கிறது.

இந்தக் கொடுமையை தியேட்டரில் போய் பார்த்த துன்பத்தை என்னவென்று சொல்வது.

நிழலி! உங்களுக்கு அண்மையில் பார்த்த படங்களில் பிடித்த சில படங்களை சொல்லுங்களேன்

  • தொடங்கியவர்

நிழலி! உங்களுக்கு அண்மையில் பார்த்த படங்களில் பிடித்த சில படங்களை சொல்லுங்களேன்

தமிழ்ப் படங்களில் கும்கி, சாட்டை, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காட்சியமைப்பின் மூலம் அலற வைத்த 'பீட்சா' எனும் படம். 'நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படம் அதன் நீளத்தால் சலிப்புத்தந்துட்டுது, மற்றப்படி அதுவும் நல்ல படம் தான்.

இவற்றை விட எழுத்தாளர் ரஞ்சகுமாரின் புண்ணியத்தால் பல வேற்று மொழிப் படங்களை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தன. அநேகமானவை அருமை!

  • கருத்துக்கள உறவுகள்
இலக்கியத்தை தர‌ம் பிரிப்பது குறித்தும்,சினிமாவை தர‌ம் பிரிப்பது குறித்தும் நீண்ட‌தொரு விவாதம் செய்ய வேண்டும்...அதை இன்னொரு தனித் திரியில் வைத்து கொள்வோம்
 
தலைப்பு கும்கி பற்றியது ஆனால் எல்லோரும் எழுதியது துப்பாக்கி பற்றி :lol:

Edited by ரதி

கும்கி இன்னும் பார்க்கவில்லை. சாட்டை, பீட்சா, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய மூன்று படங்களையே நானும் அண்மையில் பிடித்த படங்களாக சொல்வது. இதில் ஓரே ரசனையாகத்தான் இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு காலத்தில் திரையிசை,திரைப்படங்களே தஞ்சம் என  இருந்தது. :( வயது போகப்போக எல்லாம் ஒரு போலியாகவே தெரிகின்றது :icon_idea: எல்லாம் ஒரு அனுபவம் தான் :D பொழுது போக்கில் கூட அதுபெரிது இது பெரிது என விவாதிப்பது சுத்த கோமாளித்தனம் :huh:

யானை மேல் செய்யும் காதல் சவாரியே 'கும்கி’!

'காட்டு யானையை அடக்கும் கும்கி யானைக்குப் பதில் ஒரு கோயில் யானையை அனுப்பிவிட்டால் என்னாகும்?’ என்ற சுவாரஸ்ய ஒன் லைனில், ஆதி காடு, 200 வருடக் கட்டுப்பாடு, ஒரு வனக் காதல், காட்டு யானையின் மூர்க்கம், பழகிய யானையின் பாசம் என பிரியமும் பிளிறலும் புதைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

அறிமுகத்திலேயே அசத்தலாக ஃபர்ஸ்ட் க்ளாஸ் தாண்டுகிறார் ஹீரோ விக்ரம் பிரபு. யானையை அடக்கும் பாகனாக செம ஃபிட். ஊறுகாய் திருடிய யானையிடம், 'உனக்கு எதுல குறைவெச்சேன்? எங்கேடா படிச்ச இந்தத் திருட்டுப் பழக்கத்த?’ என்று கோபம் காட்டுவதா கட்டும், 'அவளப் பார்த்ததுல இருந்து மனசுக்குள்ளே என்னென்னவோ பண்ணுதுடா’ என்று காதலில் உருகுவதாகட்டும்... ஆல் இஸ் வெல்.

p6.jpg

படத்தின் செகண்ட் ஹீரோ யானை மாணிக்கம் தான். விக்ரம் பிரபுவுக்குப் பின்னே நாய்க்குட்டி போல் ஓடுவதும், தன் மேல் ஏறச் சொல்லி காலைத் தூக்கிப் பிளிறுவதும், அம்மாஞ்சி யானையாக கும்கி பயிற்சியில் திணறுவதும்... 'மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறது’ அந்த யானை.

வன தேவதையாக லட்சுமி மேனன். அத்தனை பெரிய விழிகளில் பயம், பிரமிப்பு, காதல், சோகம் என எல்லாமே ரம்மியம்!

சலம்பல் பாதி புலம்பல் மீதி என அப்ளாஸ் அள்ளுகிறார் தம்பி ராமையா. தன்னைப் பெரிய வீரன் என்று நினைத்துக் கொண்டாடும் கிராமவாசிகளிடம் மைண்ட் வாய்ஸில் மண்டிபோட்டு உருள்வது என மனிதருக்கு செம ஸ்பேஸ். ''உனக்கு எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ஆரம்பிக்கிறப்ப பக்கவாதம் வந்துடும்டா'' என வசனங்களில் அதிரடித்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இவரது மைண்ட் வாய்ஸ் ஓவர் டோஸ்! 'உண்டியல்’ அஸ்வின், கிராமத் தலைவர் ஜோமல்லூரி என்று ஒவ்வொருவரும் நிறைவான கேரக்டர்கள்.

p6a.jpgஇசை, ஒளிப்பதிவு இரண்டும் கும்கியின் கம்பீரத் தந்தங்கள். கொம்பன் வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பதைபதைப்பூட்டும் இமானின் இசை, பாடல்களில் சொக்கவைக்கிறது. புற்களுக்கு இடை யில் பயணிக்கும்போதும், ஹோவெனக் கொட்டும் அருவியின் தலை மேல் ஏறி இறங்கிச் சுற்றிச் சுழன்று பரவசப்படுத்தும்போதும் மயக்குகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. யுகபாரதியின் பாடல் வரிகள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.

கொம்பனும் மாணிக்கமும் சந்தித்துவிட்டால் படம் முடிந்துவிடும் என்பதாலேயே, இறுதிக் காட்சி வரை யானைத் தும்பிக்கையைவிட நீள மாக நீள்கிறது படம். ஊருக்குள் ஹீரோ வந்த பிறகு, நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறது கதை. ஆதி காடு என்றொரு மலைக் கிராமமும் அவர்களின் வாழ்வியலும் எப்படி இருந்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங். பரணில் உட்கார்ந்து எந்நேரமும் மலைக் கிராமத்தையே விக்ரம் பிரபு பார்த்துக் கொண்டு இருப்பது முதலில் ஜோராக இருந்தாலும், போகப் போக செம பேஜார். படத்தின் உயிர்நாடிக் காட்சியே கொம்பனும் மாணிக்கமும் மோதிக் கொள்ளும் சண்டைதான். ஆனால், அதன் கிராஃபிக்ஸ்... ப்ச்!

இருந்தாலும், திரையில் யானையைப் பார்த்ததுமே குழந்தையாகிவிடுகிற மனசு, எல்லாவற்றையும் மறக்கடித்துவிட... கம்பீர நடை போடுகிறான் கும்கி!

vikatan...

  • கருத்துக்கள உறவுகள்
நான் நேற்றுத் தான் "பீசா" பார்த்தேன்...ஒரு சின்ன கதை கருவினை வைத்துக் கொண்டு நகைச்சுவை நடிகர்,குத்துப் பாட்டும் ஒன்றும்பெரிதாக இல்லாமல் பட‌த்தை எடுத்த விதம் அழகு...தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு முயற்சி ஆர‌ம்பம்
 
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பூட்டப்பிள்ளைகளைக் கண்டாலும் அழகை ரசிப்பதில் தவறில்லை தானே அண்ணை.

ஒரு பெண்ணின் அழகை ரசிக்கத் தெரிகின்றவர்களால் மட்டுமே அழகியல் கவிதைகளை ரசிக்க முடியும் என நினைக்கின்றேன்.

அதுவும் அழகிய இளம் பெண்களின் கண்ணை கண் நோக்கிப் பாருங்கள்..அவர்களின் கருவிழிகள் ஆடும்.. பரதத்தின் முன்.. பரத நாட்டியம் தோற்றுவிடும்.

விட்டுத்தள்ளுங்க.. இயற்கை தந்த அழகை ரசிக்கத் தெரியாதவங்க உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுறாங்க..! :lol::icon_idea:

அது சரி இது ஆன்லைனில வந்திட்டுதா..??! வரவிட்டு பார்ப்பம். :)

வந்துவிட்டது... Torrents சைட்டுகளிலும் உள்ளது. அத்துடன் தரமான பிரதி வீடியோ கடைகளிலும் கிடைக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.