Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி!
Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 16:20 (18/12/2012)
 
 

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-பாலியல் வல்லுறவுக்கு' தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு  அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று!

டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி  ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு  திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை  தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்னர் அவர்கள்  இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் டெல்லிவாசிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,மகளிர் தேசிய  ஆணையம் முதல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வரை இவ்விவகாரத்தில்  தலையிட்டதால், காவல்துறை முழு வீச்சில் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கியது.

பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அம்மாணவியின் நண்பர்  குற்றவாளிகளின் அடையாளம் குறித்து தெரிவித்த சில தகவலின் அடிப்படையில் 3 பேர்  கைது செய்யப்பட்டனர். 

 

24 மணி நேரத்தில் வ்ளைககப்பட்ட குற்றவாளிகள்

தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த  பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள்  நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன்  ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல  அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் ராமன் சிங் என்ற விவரமும்  தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை  குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர்  எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த  இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம்  இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின்  அடிப்படையில் மேலும் 1 குற்றவாளி கைது செய்யப்பட்டு, மேலும் 3 பேர் தேடப்பட்டு  வருகின்றனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டு, தற்போது அபாயகரமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி  செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் டெல்லி மாணவ,மாணவியர்களிடையேயும் மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்கள் இன்று டெல்லியின் வீதியில் இறங்கி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்றும் மாணவிகள் கூறினர். 

அதிர்ந்த நாடாளுமன்றம்

இதுஒருபுறம் இருக்க டெல்லி மாணவி பலாதகார நிகழ்வு நாடாளுமன்றத்திலும் இன்று  எதிரொலித்தது.

மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதாவினர் கேள்வி நேரத்தை ரத்து  செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் வலியுறுத்தியதோடு,  உள்துளை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்  என்றும் கோரினர்.

இப்பிரச்னை தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,  பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும்  என்று கூறினார்.

நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது என்று கூறிய  அவர், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும்  குற்றம்சாட்டினார்.மேலும் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னை குறித்து தங்களது  கவலையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் முன்பாக புதன்கிழமையன்று தர்ணா போராட்டம்  நடத்தவும் பா.ஜனதா எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

டெல்லிக்கு முதலிடம்

இதனிடையே பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய  குற்றப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 239  பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையில் சுமார் 2 மில்லியன் மக்கள் அதிகமாக  உள்ளபோதிலும்,பாதுகாப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் டெல்லியை ஒப்பிடுகையில்  மும்பையில் பாதி அளவே இக்குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.

தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 பாலியல் வல்லுறவு குற்றங்களும், சென்னையில் 76  மற்றும் பெங்களூரில் 96 பாலியல் வல்லுறவு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல்  கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பாலியல் வல்லுறவு குற்றங்களில் மிக மோசமாக  இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.

நாட்டின் தலைநகராக இருப்பதில்தான் டெல்லிக்கு பெருமையே தவிர,பாலியல் வல்லுறவுத் தலைநகராக இருப்பதில் அல்ல...! 

                                                                                                                                                                                 -   பா.முகிலன்                   

 

விகடன் செய்தி

உண்மையில் உலகம் அழியவேண்டுமப்பா ???? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது நடக்கும்போது ஓட்டுவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தாரா? :unsure: நிறைய தமிழ்சினிமா பார்ப்பார் போலை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தலைநகரம் தானா டெல்லி சொல்லவே வெக்கமா இருக்கு

டெல்லியில் இது ஒரு தொடர்கதை குறிப்பாக கல்லூரி மாணவிகள் மீது காரில் கடத்தியும் வாகனகளில் கடத்தியும் இந்த கொடுமை நடக்கின்றது இது கூடிக்கொண்டு போகின்றதே தவிர குறையவில்லை கையாலாகாத டெல்லி போலீஸ் வெக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி பலாத்காரம்... லோக்சபாவில் சுஷ்மா ஆவேசம், கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன்

Published: Tuesday, December 18, 2012, 17:15 [iST]

டெல்லி: டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார். ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அவையே உருக்கமான சூழ்நிலைக்கு மாறியது.

லோக்சபாவில் இன்று டெல்லியில் இளம் மருத்துவ மாணவியை ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்த கொடும் செயல் குறித்த விவாதம் இன்று நடந்தது. அப்போது பேசிய உறுப்பினர்கள் அனைவரும் கடும் ஆவேசத்துடன் பேசினர்.

பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது.

சம்பந்தப்பட்ட மாணவிக்கு மிகப் பெரிய கொடுமை நடந்துள்ளது. உடல் ரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடலிலிருந்து சில பகுதிகளை எடுக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாக இருந்துள்ளது என்றார் சுஷ்மா ஆவேசமாக.

கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன்

ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் பேசுகையில், கண்ணீர் விட்டு அழுதார். அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலைத் தெரிவித்ததா, வருத்தம் தெரிவித்ததா. இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?.

அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வருமே...ஆறாத வடுவாக அது கூடவே இருக்குமே... மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அழுதார் ஜெயா.

பின்னர் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்களது தந்தைகளாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிக் கொண்டுள்ளனர். நாட்டுக்கு இது மிகப் பெரிய அவமானமாகும். இந்த உலகுக்கு உங்களைக் கொண்டு வந்த பெண்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா.. அவர்களுக்கு பாதுகாப்பே கிடையாதா... என்றார் ஆவேசமாக.

Thatstamil

மரண தண்டனையைத் தவிர வேறு எந்த குறைந்தபட்ச தண்டனையையும் இச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கொடுக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இத நிறுத்துவதற்கு ஒரே வழி என் கவுண்டர் தான் போட்டு தள்ளனும்

நீதிமன்றுக்கு கொண்டுபோனால் அதுவும் இந்தியாவில் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஈஸியா தப்பலாம்

Edited by SUNDHAL

திருந்த முடியாத ஒரு நாடு இந்தியா .

டெல்கியில் பஸ் தரிப்பிடத்தில் நிற்காது slow பண்ணுவார்கள் ஓட ஓட ஏறிவிடவேண்டும்.

இலங்கையில் ஆமியில் சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்தில் நடந்தை பற்றி அறியாத, ஒருசொல் எழுத்தாத, கிடாரம் கிடாரமாக நீர்கொண்டலையும் கார்மேகக் கண்கள்,  ரவுடி கிந்திய தலை நகரத்தில் சிலகாவாலிகள் பாலியல் வன்பூணர்வை செய்தவுடன் அதை குழந்தைகள் ஐஸ்கீறிம் சுவைக்க விழுந்தடிப்பதுபோல் விழுந்தடித்து வாசித்துவிட்டு உக்குக்காத கண்ணீரை ஊத்தி கங்கையை பெருக்க வைக்கிறார்கள்.  என்னே இளகிய உள்ளங்கள். கர்னனை மிஞ்சிய கருணை உள்ளங்கள். <_<

 

வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி உங்கள் வாழ்த்து மழையில் நனைந்து ஐஸ் கிரீம் குடித்து கொண்டு இருக்கின்றோம் மழையில் நனைந்து கொண்டே ஐஸ் கிரீம் குடிப்பதில் இருக்கும் சுகம் எதில் உள்ளது வேணும்னா உங்களுக்கும் ஒண்டு ஆர்டர் பண்ணவா?

நடிகைகளின் கண்ணீர் இடம் பொருள்  பார்த்துதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களிற்கு குறைந்த பட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கவேண்டும்.

நன்றி நன்றி உங்கள் வாழ்த்து மழையில் நனைந்து ஐஸ் கிரீம் குடித்து கொண்டு இருக்கின்றோம் மழையில் நனைந்து கொண்டே ஐஸ் கிரீம் குடிப்பதில் இருக்கும் சுகம் எதில் உள்ளது வேணும்னா உங்களுக்கும் ஒண்டு ஆர்டர் பண்ணவா?

 

மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காப்பால் எதற்கடி குதம்பாய்? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
மரண தண்டனையைத் தவிர வேறு எந்த குறைந்தபட்ச தண்டனையையும் இச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கொடுக்கக் கூடாது.

 

இச்சட்டம் உலகம் முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காப்பால் எதற்கடி குதம்பாய்? :lol: :lol: :lol:

என்ன செய்றது மாங்கா பால் குடிச்ச உடன தேங்கா பால் கேக்குதே :lol:

Edited by SUNDHAL

ஒரு பக்கத்தால் சினிமா ஊடகங்கள் வாயிலாகவும் மேற்குலக கலாச்சரா மோகத்தாலும் காமத்தை அதீதமாககத் தூட்டிக்கொண்டும் என்னுமொரு பக்கத்தால் கற்பு கலாச்சாரம் என்று வடிகால்களை அடக்கி முடக்கிக்கொண்டும் இருக்கும் அருவருப்பான கட்டமைப்பை கொண்ட இடத்தில் இவ்வாறான துயரங்கள் தவிர்க்கமுடியாதது. மரணதண்டனையால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. கொடும் தண்டனைகள் கொண்டுவரப்படும்போது தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கான மற்று வழிகள் பிறக்கும் அவை இன்னும் பயங்கரமாக இருக்கும். மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சட்பூர்வமான பாலியல் தொழிலை அனுமதிப்பதினூடகாவே இவற்றை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கமுடியும்.
 

 

பின்னர் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்களது தந்தைகளாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிக் கொண்டுள்ளனர். நாட்டுக்கு இது மிகப் பெரிய அவமானமாகும். இந்த உலகுக்கு உங்களைக் கொண்டு வந்த பெண்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா.. அவர்களுக்கு பாதுகாப்பே கிடையாதா... என்றார் ஆவேசமாக.
 

 

உலகில் மிக மோசமாக தந்தை சகோதரர்களால் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றவர்கள் இந்திய உபகண்டததை சேர்ந்தவர்களே. இவற்றில் ஆயிரத்தில் ஒரு வீதமேனும் வெளியில் வருவதற்கு கலாச்சாரம் அனுமதிப்பதில்லை. இவைகள் மரணதண்டனைகளுக்கு அப்பாற்பட்ட குடும்பம் என்ற பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பது. 
 
  • கருத்துக்கள உறவுகள்
திருந்த முடியாத ஒரு நாடு இந்தியா .

டெல்கியில் பஸ் தரிப்பிடத்தில் நிற்காது slow பண்ணுவார்கள் ஓட ஓட ஏறிவிடவேண்டும்.

 

எமது இனபிரச்சனையை சிறந்த முறையில் தீர்த்து வைக்க கூடிய ஒரே நாடு இந்தியாதான்.

 
பல முறை முயன்றார்கள்.
புலி பயங்கரவாதிகள் விடவில்லை.
இனி தீர்த்து வைக்க பிரச்சனையே இல்லையே?

எமது இனபிரச்சனையை சிறந்த முறையில் தீர்த்து வைக்க கூடிய ஒரே நாடு இந்தியாதான்.

 
பல முறை முயன்றார்கள்.
புலி பயங்கரவாதிகள் விடவில்லை.
இனி தீர்த்து வைக்க பிரச்சனையே இல்லையே?

 

மின்கம்ப்பம், ஒரு நாய், பின்னங்ககால் தூக்கி வரும் காட்சி தான் உங்கள் கருத்து.

இத்தாலி சோனியாவின் ஆட்சி தூக்கி எறியும் வரை இதைப்போல் இன்னும் பல தொடரும் டொல்லியில். அவளுக்கு இதெல்லாம் சர்வசாதரணம். அதுதான் எம் மக்களுக்கு நடக்கும்போது பார்த்துக்கொண்டிருந்தவள்



மின்கம்ப்பம், ஒரு நாய், பின்னங்ககால் தூக்கி வரும் காட்சி தான் உங்கள் கருத்து.

 

  :rolleyes: இதில் நீங்க மின்கம்பத்தில் சாய்ந்திருப்பவரா?

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பக்கத்தால் சினிமா ஊடகங்கள் வாயிலாகவும் மேற்குலக கலாச்சரா மோகத்தாலும் காமத்தை அதீதமாககத் தூட்டிக்கொண்டும் என்னுமொரு பக்கத்தால் கற்பு கலாச்சாரம் என்று வடிகால்களை அடக்கி முடக்கிக்கொண்டும் இருக்கும் அருவருப்பான கட்டமைப்பை கொண்ட இடத்தில் இவ்வாறான துயரங்கள் தவிர்க்கமுடியாதது. மரணதண்டனையால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. கொடும் தண்டனைகள் கொண்டுவரப்படும்போது தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கான மற்று வழிகள் பிறக்கும் அவை இன்னும் பயங்கரமாக இருக்கும். மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சட்பூர்வமான பாலியல் தொழிலை அனுமதிப்பதினூடகாவே இவற்றை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கமுடியும்.
 

 

 

உலகில் மிக மோசமாக தந்தை சகோதரர்களால் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றவர்கள் இந்திய உபகண்டததை சேர்ந்தவர்களே. இவற்றில் ஆயிரத்தில் ஒரு வீதமேனும் வெளியில் வருவதற்கு கலாச்சாரம் அனுமதிப்பதில்லை. இவைகள் மரணதண்டனைகளுக்கு அப்பாற்பட்ட குடும்பம் என்ற பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பது. 
 

 

மூன்றாம் தர நாடாக இருந்து முன்னேறும் எல்லா நாட்டின் நிலையம்  இதுதான். இந்த கலாச்சார சிதைவு மேல்நாட்டு மோகம் என்பவற்றால் பல பிரச்சனைகளை அரபு நாடுகளே இப்போது எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். ஜப்பானின் டோக்யோ நகரம் என்ன கலாச்சாரத்தில் இயங்குகிறது எனபது யப்பானியருக்கு தெரியாத விடயமாக இருக்கிறது.

 
ஆனால் இந்த மோசமான அருவெறுப்பு சம்பவங்கள் இந்தியாவில்தான் நடக்கிறது.
இந்தியர்களை போன்ற மோசமானவர்கள் உலகில் வேறு எங்கும் இல்லை.
சக மனிதர்களை சாதி பிரித்து செய்யும் கொடுமைகள் இதைவிட மோசமானவை. இந்து சமயத்தை காவியதன் பலனாக தமிழரும் அதை குத்தகைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மற்றைய மனிதனை எந்த மனித உணர்வோ மனித நேயமோ இன்றி நோகடிக்கும் சாகடிக்கும் கலையில்  இந்தியரை எவராலும் வெல்ல முடியாது.
இந்த கட்டுரை எழுதியவர் இதை வாசித்து கண்ணீர் வடிக்கும் இந்திய பெண்கள் 
ஆர்ப்பாட்டம் போனவர் வந்தவர் எல்லாம் .............
வீடுகளுக்கு போனவுடன்.............. இதை விட கேவலம் ஆனவைகளியே அங்கு பணிக்கு உள்ள பெண்களுக்கு செய்வார்கள். 
இவர்கள் காட்டு மிராண்டிகள்.
ஈழ தமிழனை நஞ்சடித்து கொல்லும்  எண்ணம் இந்த அடிப்படையில் இருந்தே உதித்த ஒன்றாகும்.
  • கருத்துக்கள உறவுகள்
மின்கம்ப்பம், ஒரு நாய், பின்னங்ககால் தூக்கி வரும் காட்சி தான் உங்கள் கருத்து.

 

மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் வீழும்போது ..........

 
ஒருவனுக்கு புவி ஈர்ப்பு தெரிந்திருக்கிறது.
 
மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தபோது .............
ஒருவனுக்கு பூமி உருண்டையாக தெரிந்திருக்கிறது.
 
உங்களுக்கு இன்டர்நெட் வசதி கிடைத்த பின்பும் நாயும் அதன் பின்னம் காலும் மட்டும் தெரிகிறது.
கண் உங்களுடையது............. காணும் காட்சியும் உங்களுடையது.
கருத்து களத்தில் நிறைய கருத்து சுதந்திரம் இருக்கிறது.
தொடருங்கள்........................... 

இத்தாலி சோனியாவின் ஆட்சி தூக்கி எறியும் வரை இதைப்போல் இன்னும் பல தொடரும் டொல்லியில். அவளுக்கு இதெல்லாம் சர்வசாதரணம். அதுதான் எம் மக்களுக்கு நடக்கும்போது பார்த்துக்கொண்டிருந்தவள்

 

  :rolleyes: இதில் நீங்க மின்கம்பத்தில் சாய்ந்திருப்பவரா?

 

இல்லை , நாய்களின் சிந்த்னை  அனைத்தும் ஒன்றாகவே இருக்கு என்று நினைத்து ஆச்சரியப்படுபவன். :rolleyes:

மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் வீழும்போது ..........

 
ஒருவனுக்கு புவி ஈர்ப்பு தெரிந்திருக்கிறது.
 
மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தபோது .............
ஒருவனுக்கு பூமி உருண்டையாக தெரிந்திருக்கிறது.
 
உங்களுக்கு இன்டர்நெட் வசதி கிடைத்த பின்பும் நாயும் அதன் பின்னம் காலும் மட்டும் தெரிகிறது.
கண் உங்களுடையது............. காணும் காட்சியும் உங்களுடையது.
கருத்து களத்தில் நிறைய கருத்து சுதந்திரம் இருக்கிறது.
தொடருங்கள்........................... 

 

மரத்தில் இருந்து  ஆப்பிள் விழுந்ததுக்கும் , பூமி உருண்டை என்று கண்டு பிடித்தவர்களுக்கும் ஏன் நாய் மின்கம்ப்பத்தில் பின்ங்காலை தூக்கி தனது கழைவு நீரை வெளியேற்றுகிறது என்பதுக்கு சரியான விளக்கம்  கண்டுபிடிக்கப்படவில்லை( சிலர் சொல்வார்கள்  போகும் பாதை மறக்காது இருக்கக் என) ஆனால் யாழில்  எதை எங்கை எப்ப  வைக்க வேண்டும் என்று தெரியாது முன்கம்பத்தை கண்ட நாய் போன்று   ஒரே  கோட்டில்  போகிறார்கள் அதனால் தான்  இந்த  காசுகொடுத்து   இண்டர்நெட் வசதி வாங்கி  சுதந்திரமாக கருத்தை வைக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிக்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம்: குற்றவாளி பகீர் வாக்குமூலம்

புதுடில்லி: தனது ஆண் நண்பரை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு, சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டதாக, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி வாக்குமூலமாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிறன்று இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில், தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். டிரைவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், பஸ் டிரைவர் ராம் சிங், தனது சகோதரரின் பஸ்சை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஜாலி டிரிப் கிளம்பியுள்ளார். பஸ்சில் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே இருந்துள்ளனர். பஸ் முனிர்கா பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அங்கு இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த டிரைவர் அங்கு பஸ்சை நிறுத்தி, துவாரகாவிற்கு வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இளம் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பஸ்சில் ஏறிய சில நிமிடங்களில் ஆண் நண்பருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இளம் பெண்ணுடன் என்ன செய்கிறாய் என கும்பல் கேள்வி எழுப்ப, அதற்கு நண்பர் பதிலளிக்க, ஒரு கட்டத்தில் கும்பல் ஆண் நண்பரை தாக்க ஆரம்பித்துள்ளது. இதைத் தடுக்க இளம்பெண் கடுமையாக முயன்றுள்ளார். இதையடுத்து, கும்பலின் கோபம் இளம்பெண்ணை நோக்கி திரும்பியுள்ளது. அந்த பெண்ணிற்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது அந்த கும்பல். இவ்வாறு குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கும்பல் இளம்பெண்ணை பஸ்சில் ஏற்றுவதற்கு முன்பாக, டில்லி ஆர்.கே. புரம் செக்டர் 4ல் கார்பென்டர் ஒருவரை பஸ்சில் ஏற்றி, அவரிடமிருந்து ரூ. 8 ஆயிரத்தை பிடுங்கிக்கொண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருகே பஸ்சில் இருந்து மிரட்டி இறக்கி விட்டுள்ளார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த நபர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Dinamalar

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.""இந்த பாலியல் வல்லுறவு சம்பவம், நாட்டையே வெட்கி தலை குனிய வைத்து விட்டது. இதுபோன்ற பாலியல் வல்லுறவு சம்பவங்களை தடுக்க, குற்றவியல் சட்டத்தில், விரைவில், உரிய திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டார். நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, இந்த கொடூர சம்பவம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது.காலையில், ராஜ்யசபா கூடியதும் கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையாநாயுடு எழுந்து, மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு பிரச்னையை கிளப்பினார். அவருடன் சேர்ந்து, பா.ஜ., உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.

உடன், சபைத் தலைவர் ஹமீது அன்சாரி, ""அரசியல் காரணங்களுக்காகவே, கேள்வி நேரம் இடையூறு செய்யப்படுகிறது. இது மனித உரிமை மற்றும் பலாத்கார விவகாரம். இதை அரசியலாக்க வேண்டாம்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லாவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களை, சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அமளி தொடர்ந்தது. இதனால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.இதன்பின், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், அனைத்து கட்சிகளின், எம்.பி.,க்களும், இந்தப் பிரச்னை குறித்துப் பேசினர்.

மைத்ரேயன் - அ.தி.மு.க.,: இந்த கொடூர காரியத்தை செய்தவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான, மரண தண்டனை வழங்க வேண்டும்.

ராம் ஜெத்மலானி - பா.ஜ.,: டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமாரை, நீக்க வேண்டும்.

ஜெயா பச்சன் - சமாஜ்வாதி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் காலம்தாழ்த்தாது, நடவடிக்கை எடுக் வேண்டும்.

ரேணுகா சவுத்ரி - காங்.,: இளம் பெண்ணின் மீது நடத்தப்பட்டுள்ள, இந்த கொடூர அத்துமீறலுக்கு, எவ்வளவு பணத்தை இழப்பீடாக கொடுத்தாலும், அது ஈடாகாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், பொதுமக்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு உள்ளது.

மாயாவதி - பகுஜன் சமாஜ்: இதுபோன்ற பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபடும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்ட விதிகளை திருத்த வேண்டியது அவசியம்.

வசந்தி ஸ்டாலின் - தி.மு.க.,: இந்த பாலியல் வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மூலம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில், இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:இந்த பாலியல் வல்லுறவு சம்பவம், நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்துள்ளது. இனி, இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டங்கள் இயற்றப்படும். இதற்காக, குற்றவியல் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பான மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கலாகும்.இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

லோக்சபாவிலும், டில்லி பாலியல் வல்லுறவு விவகாரம் குறித்து, பேச அனுமதிக்கப்பட்டது.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:இந்த கொடூர செயலில், மொத்தம், ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், இன்னும் இரண்டு பேரை, போலீசார் கைது செய்யவில்லை. நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.டில்லி நகரின் சட்டம் - ஒழுங்கு என்பது, மாநில அரசின் கைகளில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, நடந்துள்ள சம்பவத்துக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பேருந்தில், இதுபோன்ற அநாகரிக சம்பவம், நடைபெற்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.

Dinamalar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.