Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாபெரும் அகிம்சைப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாபெரும் அகிம்சைப் பேரணி

lordsprotest170620060010xb.jpg

Tel: 07939289699

எல்லோரும் திரண்டு வருக. எம் குலத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கொடூரங்களையும் வெளிஉலகத்திற்குக் காட்டிட உதவுக.

வாழ்த்துக்கள் உங்களுடய இப்படியான சேவைக்கு. இது இந்தக்காலத்தின் கட்டாயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே! இதனைப் படித்தவர்கள் என்ன கூறுகின்றீர்கள்? இதற்கு எல்லோருடைய ஆதரவும் வேண்டும். சிறிய சிறிய விடையங்களுக்கெல்லாம் பக்கம் பக்கமாகக் கருத்தெழுதும் உறவுகள் இதனைக் காணவில்லையா? இதிலிருந்து நாம் வெறும் வார்த்தை வீரர்களா? அல்லது செயல் வீரர்களா? என்பது தெளிவாகும்.

முதலில் இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இப்படியான போராட்டங்கள் தொடர்ச்சியாக ஐரோப்பா எங்கும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் இங்கு அரசியல் தாக்கம் மட்டுமல்லாது, அகதிகள் விடயம், இலங்கைக்கான உல்லாசப்பயனத்துறைக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதை விடுத்து கொடிவாரம் என்று பயனில்லா போராட்டங்களில் நேரத்தை செலவிடுவது அர்த்தமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம் தான். சிட்னியில் வைத்திருந்தால் சிங்கக்கொடி காட்டிக் கொண்டு இலங்கை அணியின் உடைகளினைப்போட்டுக் கொண்டு தமிழர்கள் விளையாட்டினைப்பார்க்கச் சென்றிருப்பினம். லண்டன் பிள்ளைகளினைப் பார்த்தாவது சிட்னிமக்கள் திருந்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜயா உங்கள் நிகழ்வுக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து எல்லா மக்களும் கலந்து கொண்டு குரல் கொடுங்கள்.

இலங்கையின் கோரமுகத்தை உலகுக்கு வெளிக்காட்டவேணும். பேரணி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

பேரணி பேரெளுச்சியுடன் நடை பெற சகல பெற்றோரும் ஆதரவு நல்க வேண்டும்.லண்டன் வாழ் தமிழர்கள் தொடந்தும் தமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்.

நமது ஒற்றுமையே நமது அரசியற் பலம், நமது அரசியற் பலமே நமக்கு விடிவைத் தரும்.ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

நல்ல முயற்சி,

தமிழுணர்வு உள்ள அனைவரும் கலந்து கொண்டு இந்தப்

போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாலு பேர் கூடிப் பேசுகின்ற போது எங்கள் மண், எங்கள் மக்கள், எங்கள் போராட்டம் என்று பேசிக் கொள்பவர்களே உங்கள் கடமையை நிறைவேற்றுவதற்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திங்கொள்ளுங்கள். (அல்லது வாய்ப் பேச்சு மட்டும் தானா?)

விளையாட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாது என்று தத்துவம் பேசுபவாகளுக்காகச் சில வார்த்தைகள்.

இலங்கைக் கிறிக்கெற் அணியின் தலைவராக உலகக் கிண்ணத்தை வென்று விட்டு நாட்டைக் காக்கின்ற தேசிய இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்து இனவாதம் கக்குகின்ற அர்ஜுன ரணதுங்கவை மறந்து விட்டீர்களா? அவர் அந்தக் கிறிக்கெற்றின் மூலம் சம்பாதித்த பெயரைப் புகழை வைத்துக் கொண்டு அண்மையில் கூட இங்கிலாந்து வந்து இலங்கை ஒரு அமைதிப் புூங்கா என்றும் புலிகள் ஆங்காங்கே சில வன்முறைகளைச் செய்தாலும் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றும் சொல்லி சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரும்படி பேட்டி கொடுத்ததைக் கேட்கவில்லையா?

அடுத்ததாக இலங்கை அணியின் 'கறிவேப்பிலை' முரளி என்னதான் சிங்களத்திற்கு வால் பிடித்து தனியொருவனாய் பந்து வீச்சில் விக்கட்டுக்களைச் சாய்த்தாலும் அணியின் உதவித் தலைவர் பதவியைக் கூடப் பெறமுடியாமல் இருக்கின்றNது இதை அறிய மாட்டீர்களா? இது அரசியல் இல்லையா?

(இதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். இது அதற்குப் பொருத்தமற்ற களம் என்பதால் நிறுத்துகிறேன்)

ஆக வேலையென்றும் குளிரென்றும் மழையென்றும் வெயிலென்றும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சாக்குப் போக்குச் சொல்லாமல் தமிழர்கள் நாம் கூடுவோம். போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்.

அன்புடன்

மணிவாசகன்

வணக்கம் ஆசிரியாரே

உங்கள் பள்ளி மாணவர்களை வைத்து நடக்கப்போகும் இந்த மாபெரும் அகிம்சைப்பேரணி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். மக்கள் அலையாக திரண்டு வருவார்கள் என்றா நம்பிக்கையுடன் வாழ்த்துக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லமை தந்தோம்.

இளைய கனல்களே!

ஈழம் காக்கும் பணி ஏற்க

இகத்தில் எழுகவே!

போர் அணைத்த புூமி - ஆயுதக்

கூர் உரசும் காற்று

சீர் கெட்ட ஆட்சி - நெருப்புத்

தூர் முட்டும் வானம்

மார் தட்டும் மனிதம் - அங்கு

வேர் அழிந்த பண்பு

கார் சூழ்ந்த வாழ்வு - தமிழர்

கண்ணீரின் கனதி

இவையெல்லாம் எடுத்தியம்ப

இளைய கனல்களே!

இலண்டன் களத்தில் எழுகவே!!

வல்லமை தந்தோம் - எம்

இளைய புயல்களே!

எழுச்சி கொள்க!!

தமிழ் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாது எல்லாரும் ஒண்றுகூடி செய்யப்படவேண்டிய போராட்டம்....

வாழ்த்துக்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு....

நல்ல விடயம் , மாணவர்களை வைத்து நடக்கப்போகும் இந்த மாபெரும் அகிம்சைப்பேரணி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

மாபெரும் அகிம்சைப் பேரணி

அசைக்கட்டும் இறுகிய மனங்களை...

வாழ்த்துக்களுடன்...

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் நன்றி.

பல தமிழ்ப்பாடசாலை மாணவர்கள் தாமாகவே முன்வந்து கணனியில் அட்டைகள் தயாரிப்பதிலும், பெயர்களைச் சேகரிப்பதிலும், வேண்டிய உதவிகளைச் செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர். எமது எதிர்காலம் அவர்கள்தானே. அவர்களில் பலர் இங்கே பிறந்திருந்தாலும் அவர்களுக்கிருக்கும் தாயாக உணர்வுகளைப் பார்க்கும்போது மனம் மகிழ்கின்றது. எமது மக்கள் விடிவு பெறும்வரை யாரும் ஓயக்கூடாது. உலகெங்கும் இப்படியான நிகழ்வுகள் தெடரவேண்டும்.

தெரிந்தவர்களுக்கெல்லாம் கூறுங்கள், உங்கள் தமிழ்ப்பாடசாலைக் கொடிகளுடன் வாருங்கள். உங்கள் பிள்ளைகள் அங்கு படிக்காதுவிட்டாலும் வாருங்கள்.

இன்னும் ஒன்று, நாமெல்லாம் எமது உறவுகளை நாளிலும் பொழுதிலும் தனியாகவும், குடும்பங்களாகவும் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கையில் பிரச்சனைகள் இல்லை, அங்கே உல்லாசப்பயணிகளை தயங்காது வரும்படி இலண்டனிலுள்ள இலங்கைத் து}தரகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வு ஒன்றும் எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு அன்று ரவல்கா சதுக்கத்தில் (Trafalgar Square) நடைபெற இருப்பதாகவும் அறிகிறோம். (விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்). அங்கே பொய்யும், புரட்டும்தான் பேசப்போகின்றன.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ஆசிரியரே... இப்படியான போராட்டங்கள் இப்போது உள்ள நிலையில் பயனுள்ளதாகவே அமையும். உங்கள் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒன்று, நாமெல்லாம் எமது உறவுகளை நாளிலும் பொழுதிலும் தனியாகவும், குடும்பங்களாகவும் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கையில் பிரச்சனைகள் இல்லை, அங்கே உல்லாசப்பயணிகளை தயங்காது வரும்படி இலண்டனிலுள்ள இலங்கைத் து}தரகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வு ஒன்றும் எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு அன்று ரவல்கா சதுக்கத்தில் (Trafalgar Square) நடைபெற இருப்பதாகவும் அறிகிறோம். (விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்). அங்கே பொய்யும், புரட்டும்தான் பேசப்போகின்றன.

வாத்தி சில்வமுத்து!

உது ரவல்கார் சதுக்கத்தில் (Trafalgar Square) அல்ல ரஸல்ஸ் சதுக்கத்தில் (Russell Square) நடைபெற இருக்கிறதாம். இலங்கை தூதரகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட உல்லாசப்பிரயானத்தை ஊக்குவிப்பதற்காக யானைக்குட்டிகள், சிங்களக்குட்டிகள், சிறுவர்களையெல்லாம் காட்டி, சனிக்கிழமை(17/06/06) தொடங்கி சில நாட்களுக்கு நடைபெற இருக்கிறதாம்.

ஆனால், அந்நிகழ்விலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நம்மவர்கள் தயார்! 50000 துண்டுப்பிரசுரங்களுடன் நிகழ்வில் பங்கு பற்ற இருக்கிறார்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு: Mr.Rajan 07751717097

http://www.nitharsanam.com/?art=18021

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவல்கார் சதுக்கத்தில் சாந்தன் அவர்களின் தலமையில் செயற்படுவதற்கு ஒரு பெரிய அணி தயார் நிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* லோட்ஸ் கிறிக்கெட் மைதானத்தின்(Lord's Cricket Ground) முன் நடைபெறவுள்ள பேரணி!

* ரசல்ஸ் சதுக்கத்தில்(Russell Square) நடைபெறவுள்ள துண்டுப்பிரசுர விநியோகம்!

இவ்விரு நிகழ்வுகளும் வரும் சனிக்கிழமையன்றே நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். முதலாவது காலை 9.30இற்கு தொடங்கி 12.00மணிக்கு முடிவடைகிறது. இரண்டாவது நிகழ்வு 12.30மணியளவில் இடம்பெற இருக்கிறதாம்.

இயலுமானவரை நாமும் பங்குபற்றி எமக்குத் தெரிந்தவர்களும் அறியச்செய்து பங்குபற்றச் செய்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த றாஜபக்சவின் மனைவி மங்கள சமரவீர உட்பட அனைவரும் தமிழ் தேசிய ஆதரவாளர்களால் கொடுக்கபட்ட துண்டு பிரசுரத்தை வாங்கி பார்க்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் பல கோடி பணம் இறைத்து நடாத்திய ஏமாற்று நாடகத்தை தமிழ் சிறுவர்கள் தமது தமிழ் தேசிய பிரச்சார களமாக மாற்றிவிட்டார்களே எண்று மங்கள சமரவீர குமுறியதாக அறியமுடிகிறது

நன்றிகள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், அதில் கலந்து கொண்டவர்களுக்கும்.

ஆகா அருமையான செய்திகள். கேட்கவே நன்றாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் கனடாவிலும் முன்னெடுக்கப்படவேண்டும். பல தமிழ்இளைஞர்கள் இதற்கு ஆதரவளிக்கக் காத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு தடைவிதிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தமிழீழ தாயக மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொலை வெறியாட்டங்களை மேற்குலக மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

லண்டன் (ளொர்ட்ச்) லோட்ஸ் துடுப்பெடுத்தாட்ட மைதானத்தில் நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பிரித்தானியா வாழ் தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறிலங்கா அரசாங்கத்தின் கொலை வெறியாட்டங்களை வெளிப்படுத்தும் வகையிலான பதாதைகளை தாங்கியவாறு உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர்.

"உலகச் சமூகமே சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதி"

"சிறிலங்கா அரசாங்கமே தமிழின அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து"

"உல்லாசப் பயணிகளே சிறிலங்காவிற்கு செல்வதை தவிருங்கள்"

என முழக்கமிட்ட பிரித்தானியா வாழ் தமிழர்கள் துண்டுப்பிரசுர விநியோநிகத்திலும் ஈடுபட்டனர்.

லோர்ட்ஸ் துடுப்பெடுத்தாட்ட மைதானத்தில் நேற்று சினேபூர்வ போட்டியில் சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணி ஈடுபட்டிருந்த ஏக காலத்தில், பிரித்தானிய வாழ் தமிழீழ மக்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கறுப்பின மக்கள் ஒடுக்கப்பட்ட போது, தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாட்ட அணிக்கு விதிக்கப்பட்ட தடை போன்று, சிறிலங்கா துடுப்பெடுத்தாட்ட அணிக்கும் தடை விதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சுஜீந்தன்!!!

"ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா?" ... அப்படி உந்தப் பூசாரிகள் ஏற்பாடு செய்தால்தான் நடக்குமென்றால் ஒண்டும் நடக்கப் போவதுல்லை!!!!

நீங்களப்பு, தெரிந்த பத்தோடு துண்டுப்பிரசுரங்கள் ஏதாவது தயார் செய்து கொண்டு உங்கத்தையான் சட்ட திட்டங்களுக்கு அமைய வீதியில் இறங்குங்கள்!! பின்பு இருந்து பாருங்கள், பத்து நூறாகும் ... நூறு ஆயிரமாகும் .... தொடரும்!!!!!

இன்றைய தருணத்தில் எமது பிரசாரங்களுக்கு தவறுவோமாயின் வருந்த வேண்டி வரும்!!!!! மற்றும் உந்தப் பூசாரிகளில் பத்துக் கோஸ்டி இருக்கும்!!!! ஒவ்வொன்றும் ஒன்றைச் சொல்லும்!!! கடைசியில் கறுத்தக்கொடி வாரமாகத்தான் முடியும்!!!!!!!!!!!!!!!

பலர் பலவிதமாக மிரட்டுவார்கள்!!! ஆனால் லண்டன் நிகழ்வுகள் பலருக்குப் பாடமாக அமைய வேண்டும்!!! இங்கும் உண்டியலான் கும்பல் போடாத மொட்டைக்கடிதங்களா??? துரோக வாணொலி மூலம் மிரட்டாத மிரட்டல்களா??? எல்லாவற்றையும் தவிடு பொடியாக உடைத்தெறிந்து பொலிஸாரின் பூரண ஒத்துளைப்புடன் இங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது!!!

முதலில் தெருவில் இறங்குங்கள்!!! எல்லாம் வெற்றியே .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.