Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண் மீதான கொடுமை மோசமானது. அதன் மீது கடும் நடவடிக்கைகள் அவசியமும் கூட. அதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோல்..

இந்தப் பெண் மீது நடந்த கொடுமைகளை விட மோசமான கொடுமைகளை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளார்கள். நூற்றுக்கணக்கில் உயிரையும் விட்டுள்ளனர். போராடியும் உள்ளார்கள். ஏன் அப்போது எவருக்கும் அவர்கள் மீது மனிதாபிமானம் வரல்ல..???! பாங்கி மூனுக்கு அனுதாபம் பிறக்கல்ல..???! சோனியாவுக்கு.. அக்கறை வரேல்ல..????!

இந்தப் பெண்ணின் விடயத்தில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டவர்கள்.. மீனவர்கள் சாவில் கடிதம் எழுதிக்கிட்டு ஏன் காலத்தைக் கழித்தார்கள்..???!

அதுபோக.. ஈழத்துப் பெண்கள் மீதான படுகொலைகளை தமிழகம் கூடிக் கண்டித்தது. போராட்டங்கள் நடத்தின..!! ஏன் அதைப் பற்றி ஹிந்திய ஊடகங்கள் எதுவும் பேசல்ல. கருணாநிதியின் ஊடகம் ஊமையானது..???! சனல் 4 லு காணொளியை இன்று வரை கருணாநிதியின் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்திருக்கின்றனவே..???! ஆனால் இந்தப் பெண்ணின் விடயத்தில் மட்டும் எங்கிருந்து பாசம் கிளர்ந்தது. சொர்க்கம் தங்கம் சோனியா இல்வோல்ட் ஆனதாலா..??! அல்லது சொர்க்கத்தங்கம் ஆட்சியில் இருக்கும் தலைமையிடம் அங்கு உள்ளதாலா..???! அல்லது இது அவரின் ஆட்சிக்கு நெருக்கடி ஆவதோடு.. பெண்களின் வாக்கு வங்கியை சிதைக்கும் என்பதாலா..???! :icon_idea::(:rolleyes:

மக்கள் மாணவர் என்று கிளர்ந்தார்கள் ஆட்சியாளர்கள் பயந்தார்கள் அதானால் அக்கறை எடுத்தார்கள் இது எல்லா விஷத்திலையும் பொருந்தும் தமிழ் நாட்டில அவன் அவன் குடியும் சீரியல் உம் படமும் எண்டு இருக்காங்க அவங்க எங்க வந்து போராட போறாங்க

  • Replies 161
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
அதுக்கு தமிழக மக்கள் முதலில் வீதிகளில் வந்து போராடட்டும்

தமிழக மீனவர்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்தினார்கள். பட்டினி கிடந்து பகிஸ்கரிப்புக்களைச் செய்தார்கள். இருந்தும்.. கருணாநிதியோ.. சோனியாவோ.. மன்மோகன் சிங்கோ.. பாங்கி மூனோ.. ஒரு அறிக்கை தரேல்ல. சட்டத்திருந்தம் கொண்டு வந்து கச்சதீவை மீட்கவில்லையே. சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையே தூக்கி குப்பையில் போட்டவர்கள்... இதில் மட்டும்.. அவர்களுக்கு எங்கிருந்து பிறந்தது மனிதாபிமானம்.

தமிழக மக்கள் போராடவில்லை என்பது தவறு.தமிழக மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டமையும்.. வெற்றுக் கடிதப் பரிமாற்றங்கள் மூலம்.. அவர்கள் ஏமாற்றப்பட்டமையும்.. தங்களுக்கு இப்படியான போராட்டங்கள் மூலம் நீதி கிடைக்காது என்ற உள்ளுணர்வை அவர்கள் மத்தியில் வளர்த்துள்ளமையுமே அந்த மக்கள் விரக்தி உற்று இவற்றில் இருந்து விலகி இருக்கக் காரணம்.

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பில் எவ்வளவு போராட்டங்கள். எந்த ஹிந்திய ஊடகம் அதற்கு முன்னுரிமை அளித்தது. அங்கு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். எவர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செய்தார்கள்..???!  இந்த நிலையில் எதை நம்பி அந்த மக்கள் வீதியில் இறங்குவது..????!

Edited by nedukkalapoovan

அடக்கு முறை இருந்தாலும் அதையும் மீறி போராடலாம் எகிப்ப்தில மாணவர் புரட்சி அப்பிடி தான் நடந்திச்சு லட்சக்கணக்கில் மக்கள் திரளும் போது என்ன பண்ணிவிட முடியும் அத விட்டிட்டு இதுக்குள்ள வந்து அரசியல் பண்ணிட்டு

நீங்கள் கூட அதை செய்யலாம்.

உலக வல்லரசுகளையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் நாட்டை வேறு நாடுகளுடன் ஒப்பிட முடியாது. ஆதாரமில்லாமல் மக்களை சுட்டுப்பொசுக்கும் கொடூர தன்மை இலங்கை அரசிடம் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கனும்யா அப்போ தான் அவன் நம்ம வழிக்கு வருவான் அது டெல்லி காரனுக்கு தெரிஞ்சிருக்கு தமிழ் நாட்டுக்காரனுக்கு தெரியலியே

:D

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டின் ...இன்னொரு முகம் ...உண்மை முகம்
எங்கே இந்தியன் என்று மார்தட்டிக்கொள்ளும் எல்லா கிந்தியன்களும் இப்ப கத்துங்கோ பார்க்கலாம் .....!
நடந்திருப்பது மிகப்பெரிய துக்ககரமானது ...ஆனால் அதில் அரசியல் மறுப்பதற்கில்லை
பெண்களே நீங்கள் வரிந்த்துகட்டிகொண்டு ஆணாதிக்கம் .பெண்ணாதிக்கம் எண்டு பொரிந்து தள்ளுவதில்  எதுவுமேயில்லை

உண்மையாகவே இதற்கான காரணம் அந்த மிருகங்களின் வளர்ப்பு சரியில்லை. இவர்களின் இளமை அல்லது சிறுவயதில் ஏதாவது வித்தியாசமாக நடந்திருக்கும்

அல்லது வக்கிரகுணம் வெளிப்பட்டிருக்கும் அதை பெற்றோர் கண்டு பிடித்திருக்க வேண்டும்

ஆனால் இந்த தறுதலை கிந்திய  நாட்டில் பெற்றோரின் நடவடிக்கைகளே அதை தூண்டுகின்றன ..நம் நாட்டிலும் தான் முள்ளிவாய்க்காலில் கூத்தாடிய எல்லா குரங்குகளும் சிங்கள அடிமட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்கள் ...இவர்களின் வாழ்கை முறை அப்படியே கிந்திய சேரி வாழ்க்கைக்கு ஒத்தது 

அடிப்படை மனித அறிவு அற்ற கிந்தியரிடம் மற்றும் சிங்களவனிடம் மனிதாபிமானம் எதிர்பார்ப்பது எப்படி ....
மகாத்மா காந்தி சிரிக்கிறார் ......இந்திய நாணய நோட்டில் இருப்பதுபோல் ..... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்தினார்கள். பட்டினி கிடந்து பகிஸ்கரிப்புக்களைச் செய்தார்கள். இருந்தும்.. கருணாநிதியோ.. சோனியாவோ.. மன்மோகன் சிங்கோ.. பாங்கி மூனோ.. ஒரு அறிக்கை தரேல்ல. சட்டத்திருந்தம் கொண்டு வந்து கச்சதீவை மீட்கவில்லையே. சட்டமன்றதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையே தூக்கி குப்பையில் போட்டவர்கள்... இதில் மட்டும்.. அவர்களுக்கு எங்கிருந்து பிறந்தது மனிதாபிமானம்.

தமிழக மக்கள் போராடவில்லை என்பது தவறு.தமிழக மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டமையும்.. வெற்றுக் கடிதப் பரிமாற்றங்கள் மூலம்.. அவர்கள் ஏமாற்றப்பட்டமையும்.. தங்களுக்கு இப்படியான போராட்டங்கள் மூலம் நீதி கிடைக்காது என்ற உள்ளுணர்வை அவர்கள் மத்தியில் வளர்த்ததுள்ளமையுமே அந்த மக்கள் விரக்தி உற்று இவற்றில் இருந்து விலகி இருக்கக் காரணம்.

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பில் எவ்வளவு போராட்டங்கள். எந்த ஹிந்திய ஊடகம் அதற்கு முன்னுரிமை அளித்தது. அங்கு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். எவர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செய்தார்கள்..???! இந்த நிலையில் எதை நம்பி அந்த மக்கள் வீதியில் இறங்குவது..????!

போராடத்தில ஒரு பத்தாயிரம் பேரும் கலந்துக்கல அதெல்லாம் கானதுயா.... தமிழ் நாட்டு ஜனத்தொகைக்கு ஒரு 30 லட்சம் பேராவது வீதிக்கு வரணும்யா அப்புறம் பாருங்க

  • கருத்துக்கள உறவுகள்
மக்கள் மாணவர் என்று கிளர்ந்தார்கள் ஆட்சியாளர்கள் பயந்தார்கள் அதானால் அக்கறை எடுத்தார்கள் இது எல்லா விஷத்திலையும் பொருந்தும் தமிழ் நாட்டில அவன் அவன் குடியும் சீரியல் உம் படமும் எண்டு இருக்காங்க அவங்க எங்க வந்து போராட போறாங்க

இதில் ஆட்சியாளர்கள் கிளர்ச்சிகளைக் கண்டு அஞ்சவில்லை. கிளர்ச்சி நடக்கும் இடத்தைக் கண்டு அஞ்சினார்கள் என்பதே உண்மை.

டெல்லியின் வெங்காய விலையேற்றம்.. ஒரு ஆட்சி மாற்றத்தை இந்தியாவில் கொண்டு வந்தது. தமிழகத்தில் காய்கறி விலையேற்றம் அதைக் கொண்டு வரேல்ல.

டெல்லியில் அதிகார மையம் உள்ளது. அங்கு நிகழும் சின்னக் கிளர்ச்சியும் (டெல்லியில் ஒன்றும் இலட்சக்கணக்கில் கிளர்ச்சி நடக்கேல்ல. ஈழப் பிரச்சனையில் தமிழக மாணவர்கள் கிளர்ந்தெழ முற்பட்ட போது கருணாநிதி பள்ளிகளை மூடி... கூட்டம் கூட தடையும் போட்டார்.) சர்வதேச மயமாகும். மக்களிடம் போய் சேரும். ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகள் வரும். அதனால் தான்.. டெல்லியில் மறைக்கப்பட முடியாமல் வெளிவந்த இந்த விடயம் இவ்வளவு முதன்மை பெற்றதே ஒழிய.. அங்கு போராட்டம் என்று பெரிசா நடக்கல்ல. நடக்கவும் விடேல்ல.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை எப்படி நசுக்கினார்களோ.. அப்படி டெல்லியிலும் நசுக்கப்பட்டது. ஆனால்.. அது பெற்ற ஊடக முக்கியத்துவம்.. யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு இல்லை..!

இதே நிலைதான் தமிழகத்திலும். மக்களின் போராட்டத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றால்.. நிச்சயம் பல்லாயிரம் மக்கள் தமிழகத்தில் மட்டுமல்ல.. ஈழத்திலும் தெருவுக்கு இறக்கத் தயாராகவே உள்ளனர். ஆனால்... டெல்லி போல்.. சென்னையும்.. யாழ்ப்பாணமும் அமையுமா..???! சர்வதேச.. பாங்கி மூன் முக்கியத்துவம் அவற்றிற்கு கிடைக்குமா..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டின் ...இன்னொரு முகம் ...உண்மை முகம்

எங்கே இந்தியன் என்று மார்தட்டிக்கொள்ளும் எல்லா கிந்தியன்களும் இப்ப கத்துங்கோ பார்க்கலாம் .....!

நடந்திருப்பது மிகப்பெரிய துக்ககரமானது ...ஆனால் அதில் அரசியல் மறுப்பதற்கில்லை

பெண்களே நீங்கள் வரிந்த்துகட்டிகொண்டு ஆணாதிக்கம் .பெண்ணாதிக்கம் எண்டு பொரிந்து தள்ளுவதில் எதுவுமேயில்லை

உண்மையாகவே இதற்கான காரணம் அந்த மிருகங்களின் வளர்ப்பு சரியில்லை. இவர்களின் இளமை அல்லது சிறுவயதில் ஏதாவது வித்தியாசமாக நடந்திருக்கும்

அல்லது வக்கிரகுணம் வெளிப்பட்டிருக்கும் அதை பெற்றோர் கண்டு பிடித்திருக்க வேண்டும்

ஆனால் இந்த தறுதலை கிந்திய நாட்டில் பெற்றோரின் நடவடிக்கைகளே அதை தூண்டுகின்றன ..நம் நாட்டிலும் தான் முள்ளிவாய்க்காலில் கூத்தாடிய எல்லா குரங்குகளும் சிங்கள அடிமட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்கள் ...இவர்களின் வாழ்கை முறை அப்படியே கிந்திய சேரி வாழ்க்கைக்கு ஒத்தது

அடிப்படை மனித அறிவு அற்ற கிந்தியரிடம் மற்றும் சிங்களவனிடம் மனிதாபிமானம் எதிர்பார்ப்பது எப்படி ....

மகாத்மா காந்தி சிரிக்கிறார் ......இந்திய நாணய நோட்டில் இருப்பதுபோல் .....

இது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா Australia போன்ற நாடுகளிலும் தான் நடைபெறுகின்றன

இதில் ஆட்சியாளர்கள் கிளர்ச்சிகளைக் கண்டு அஞ்சவில்லை. கிளர்ச்சி நடக்கும் இடத்தைக் கண்டு அஞ்சினார்கள் என்பதே உண்மை.

டெல்லியின் வெங்காய விலையேற்றம்.. ஒரு ஆட்சி மாற்றத்தை இந்தியாவின் கொண்டு வந்தது. தமிழகத்தில் காய்கறி விளையேற்றம் அதைக் கொண்டு வரேல்ல.

டெல்லியில் அதிகார மையம் உள்ளது. அங்கு நிகழும் சின்ன கிளர்ச்சியும் சர்வதேச மயமாகும். மக்களிடம் போய் சேரும். ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகள் வரும். அதனால்.. டெல்லியில் மறைக்கப்பட முடியாமல் வெளிவந்த இந்த விடயம் இவ்வளவும் முதன்மை பெற்றதே ஒழிய.. அங்கு போராட்டம் என்று பெரிசா நடக்கல்ல.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை எப்படி நசுக்கினார்களோ.. அப்படி டெல்லியிலும் நசுக்கப்பட்டது. ஆனால்.. அது பெற்ற ஊடக முக்கியத்துவம்.. யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு இல்லை..!

இதே நிலைதான் தமிழகத்திலும். மக்களின் போராட்டத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றால்.. நிச்சயம் பல்லாயிரம் மக்கள் தமிழகத்தில் மட்டுமல்ல.. ஈழத்திலும் தெருவுக்கு இறக்கத் தயாராகவே உள்ளனர். ஆனால்... டெல்லி போல்.. சென்னையும்.. யாழ்ப்பாணமும் அமையுமா..???! :icon_idea:

மக்களுடைய உணர்சிகள பொறுத்து நிச்சியமாக போராட்டம் அமையும் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் முயற்சி செய்து பாப்பதில் தப்பே இல்லைய்யா

இது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா Australia போன்ற நாடுகளிலும் தான் நடைபெறுகின்றன

அங்கு சட்டம் ஒழுங்காக இருப்பதால் பாலியல் வன்முறைகள் மிக மிக குறைந்த அளவிலேயே நடைபெறுகின்றன. இந்தியாவில் சட்டம் ஓட்டைகள் நிறைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா Australia போன்ற நாடுகளிலும் தான் நடைபெறுகின்றன

எல்லா நாட்டிலும் நடப்பதுதான் ....ஆனால் புதைத்த இடம் காய்வதற்கு முன் அதனை அரசியலாகும் நதேரித்தனம்

கிந்தியாவில் மட்டுமே நடக்கும்

அதிலும் இப்படியான வேலைகளில் கிந்தியர்கள் விசேடமானவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாட்டிலும் நடப்பதுதான் ....ஆனால் புதைத்த இடம் காய்வதற்கு முன் அதனை அரசியலாகும் நதேரித்தனம்

கிந்தியாவில் மட்டுமே நடக்கும்

அதிலும் இப்படியான வேலைகளில் கிந்தியர்கள் விசேடமானவர்கள்

ஒரு பிரச்சனையை வைத்து அரசியல் ஆக்குவதும் எல்லா நாட்டிலும் தான் உள்ளது படகில் வந்தவர்கள் பலியான போது கூட ஆஸ்திரேலியாவில் அதை அரசியல் ஆக்கினார்கள் :D

இந்த பெண்ணிற்கு அனுதாபங்கள்.

இந்திய மேல்தட்டு வர்க்கத்திடம் பாலியல் வல்லுறவுக்கு எதிராக விழிப்புணர்வு  உருவானது வரவேற்கத்தக்கது.  அந்தப் பெண்ணுக்கு கொடுமை நடந்த விதமும் அது டெல்லியிலும் நடந்ததால் செய்தி பரபரப்பாக உள்ளது.  அல்லது இதுவும் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும்.  

போராடும் இனங்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவை ஆயுதமாகப் பாவிக்கும் இராணுவத்தைக்  கொண்ட  இந்திய ஆளும் வர்க்கத்திடம், இந்தப் போராட்டங்கள் எடுபடுமா?  

  • கருத்துக்கள உறவுகள்
இவ்வளவு பேசிற நீங்க.. தமிழச்சி தானே. பெண் தானே. ஏன் இன்னும் பெண்கள் மீதான இவ்வளவு கொடுமைகள் கண்டும்..கிளர்ந்து எழேல்ல...??! முதலில் உங்களைத் திருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியா இருக்கிற துணிவை வளர்த்துக் கொள்ளுங்க... அப்புறம்.. தான் மற்றவனைப் பார்த்து.. மற்றவன் என்ன செய்யனுன்னு  சொல்ல உங்களுக்கு தகுதி வரும்.

உலகமே ஆச்சரியமாப்.. அதிர்ச்சியோடு.. பார்க்கும் இந்தச் சம்பவத்தினூடு.. உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு நடத்தப்பட்ட.. நடத்தப்படும் பெண்கள் மீதான இதை விட மோசமான கொடுமைகளை..  பாலியலை ஆயுதமாக்கும் ஆட்சியாளர்களின் கொடுமைகளைச் சொல்வது ஒரு எந்த வகையில் கேவலம்..??! அதைக் கேவலம் என்று சிந்திக்கிற நீங்கள் தான் சொல்லனும்.. எப்படி அந்தக் கொடுமைகளுக்கு உலகின் கவனத்தை ஈர்ப்பது என்று. அதைச் சொல்லிட்டு திட்டுங்கள். எதிலும் சும்மா நாலு பேரின்.. கவன ஈர்ப்புக்கு மாற்றி எழுதினாப் போல.. அது எல்லாம் ஆரோக்கியமான கருத்தாகாது. :icon_idea::(

முதலில் நான் என்னத்தை குவேட் பண்ணி என்ட கருத்தை எழுதியிருக்கிறேன் என வடிவாய் வாசித்துப் போட்டு உங்கட கருத்தை எழுதவும்...தமிழ் நாட்டுப் பெண்ணுக்காக போராடாமல் டில்லிப் பெண்ணுக்காக போராடுகிறார்கள் என்ட கருத்திற்காக பதில் தான் அது.
 
உசுப்பேத்திற வேலையை நான் எப்பவும் செய்ததில்லை...உங்கள போல ஆட்களுக்குத் தான் அது கை வந்த கலை...நீங்கள் ஒரு பெண் வயிற்றில் பிறந்தீர்கள்.உங்களுக்கு கூடப் பிறந்த,பிறக்காத சகோதரிகள் பலர் இருக்கிறார்கள்.ஏன் கூடப் பிறந்தால் மட்டும் தான் சகோதரியா?...ஈழத்தில் பிறந்த அனைத்துப் பெண்களையும் தாயாக,சகோதரியாக நினைத்திருந்தால் அவர்களுக்காக நீங்கள் போராடி இருப்பீர்கள்?...பெண்களுக்காக பெண்கள் மட்டும் தான் போராட‌ வேண்டுமா?
 
சரி பெண்களுக்காக நீங்கள் போராட‌ வேண்டாம் விடுங்கள் உங்கள் ஆண் வர்க்கத்திற்காகவாவது போராட‌லாமே!...எதாவது ஒன்றென்ட‌வுட‌ன் கவிதை எழுத மட்டும் தான் தெரியுமாக்கும்...எனக்கு கவிதை எழுத தெரியாது நானும் ஒரு கவிதை எழுதிப் போட்டு நல்ல பிள்ளைக்கு இருந்திருப்பன்.
 
நான் டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்ததை பொதுவாக பெண்ணுக்கு நட‌ந்த அநீயாயமாகவே பார்க்கிறேன்...இப்படி ஒரு அநியாயம் உலகத்தில் எந்த பெண்ணுக்கு நட‌ந்திருந்தாலும் என்ட‌ கருத்து இது தான்...தமிழ் நாட்டு பெண்ணுக்கு நட‌ந்த கொடுமை இப்பத் தான் ஊட‌கத்தால் வெளியில் கொண்டு வர‌ப்படுகிறது...ஏன் அச் சம்பவம் நட‌ந்த உட‌ன் ஊட‌கங்கள் இதை வெளியில் கொண்டு வர‌வில்லை?...ஊட‌கங்கள் முதலில் வெளிக் கொண்டு வராமை யாருடைய பிழை?...அப்படித் தமிழ் நாட்டுப் பெண்ணுக்கு நட‌ந்தது முதலில் வெளியே வந்தாலும் என்னைப் பொறுத்த வரை தமிழ்நாட்டுப் பெண் என்ட‌ அதிக கவலையோ,வித்தியாச‌மோ இல்லை...மற்றவரை மாதிரி இவரும் பெண் என்ட‌ ரீதியில் தான் என்ட‌ கருத்து இருக்கும்.
 
ஈழத்தில் பெண்களுக்கு நட‌ந்த,நட‌க்கிற கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாட்டுக்கார‌ர் போராடினார்கள்,போராடிக் கொண்டு இருக்கிறார்கள் அதற்காக நாங்களும் த.நாட்டு பெண்ணுக்கா போராட‌ வேண்டும் என்பது போல் இருக்குது இங்கு பலர‌து கதை...பக்கத்தில் இருக்கிற த.நாட்டுக்கார‌ரே[ஒரு சிலரைத் தவிர‌] எமக்காக எப்போதும் குர‌ல் கொடுத்ததில்லை பிறகு எப்படி டில்லிக்கார‌ர் குர‌ல் கொடுக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல அங்க இருக்கிற சொந்த மக்கள் தங்கள் மக்கள் மேல கவனம் எடுக்கட்டும் பிறகு இந்தியாவும் இந்திய ஊடகங்களும் கவலைப்படுறதா பற்றி பாப்பம் என்ன

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் .. பெண்ணாதிக்கம்..  இந்த லொட்டு லொசுக்கு அப்பால் எல்லா உயிர்களுக்கும் ஒரு விலை இருக்கு.. அந்த உயிர் அங்க போனால் இவ்வளவு ஆர்பாட்டம் .. இங்கிட்டு சீண்டுவார் கிடையாது..  பெண்ணியம் குண்ணியம் என்று ஆயிரம் கட்டுரை எழுதுங்க.. ஏசி ரூமில் உக்கார்ந்து ரைப்படிப்பது ஈசியாகதான் இருக்கும்..

 அருமை அருமை இது போன்ற வார்த்தைகளை .. பெண் உரிமைக்காக போராடுபவர்களை நான்  பார்த்ததே இல்லை என்று கமெண்டு எழுதுவான்.. அதை பார்க்கும் போது கொஞ்சம் கிளு கிளுப்பாக இருக்கம்.. ஆனால் ரியல் லைப்பு வேற்...  எழையின் சொல் அம்பலதில் ஏறாது.. ஆக மொத்தம்  இது உயிர் விடயமாக இருந்தால் கூட  மரியாதை கொஞ்சம் கூட குறைய இருக்கு.. என்ன காரணம்...??

டிஸ்கி:

முதலில் பெண்ணியம் அண்ணியம்..  என்று டில்லி வாலாக்களுக்கு குரல் குடுப்பதை நிறுத்த வேண்டும்.. அகில உலக அண்டார்டிக்கா பெண்ணிய சங்கத்தின் குரல் இது என  நீங்க வேண்டி வேண்டி குரல் கொடுத்தாலும்  அவங்க கண்டு கொள்ள போவதில்லை... அது வேற விடயம்.. இங்கட்டும் ஏதும் நடக்குத்தில்லை.. முதலில் உங்களுக்காக உங்கள் பெண்களுக்காக நீங்கள் போராடவேணும் அதான் இந்த எளியவனின் வேண்டுகோள் :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசை அரசு சரியாக செய்யாதபோது அந்த அரசியலை மக்கள் செய்யமுற்படுவார்கள், எந்த பொதுவான விடயமும் அரசியல் இல்லாது நடைபெறாது. எந்த பொதுவான விடயத்திலும் அரசியல் கலந்தே இருக்கும்.

இந்தியாவை, உலகில் பெரிய மிக ஜனநாய நாடு என்பது மிகப் பெரிய காமடியான விடயம். அது தேர்தல் நடை முறையைக் குறித்து கருதிக் கொள்வது. அதுவும் ஊழலில் மிதந்து நடக்கும் ஜனநாயகம். மிகப் பெரிய பணநாயக நாடு.

மேற்கில் உள்ள ஜனநாயகம் இந்தியாவில் இல்லை.

பருவமெய்திய கன்னிகளை, முதல் புனர்விற்கு வியாபாரமாகுபவர்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசை அரசு சரியாக செய்யாதபோது அந்த அரசியலை மக்கள் செய்யமுற்படுவார்கள், எந்த பொதுவான விடயமும் அரசியல் இல்லாது நடைபெறாது. எந்த பொதுவான விடயத்திலும் அரசியல் கலந்தே இருக்கும்.

அதே சூப்பர்

பாலியல் வன்முறைகள் இந்தியாவின் முடிவில்லாத தொடர்கதை

எழுதியது இக்பால் செல்வன் *** Sunday, December 30, 2012
gang-rape-victim-shifted-out-of-safdarju
பலரும் பலவிதமாகத் தமது கோபங்களை, ஆதங்கங்களைக் காட்டி விட்டார்கள். இருந்த போதும் இதனைக் கடந்து அடுத்த விடயத்தை எழுத எண்ணால் முடியவில்லை. சில விடயங்களை நாம் கடந்து போக நினைத்தால் கூடப் போக முடிவதில்லை. 
 
பெண்களை தெய்வங்களாகக் கருதுவதாகப் பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் பெண்களின் யதார்த்த நிலை என்பது மிகவும் மோசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கின்றது. பெண்கள் மீதான வன்மம் இந்தியத் திருநாட்டில் இன்று நேற்று தொடங்கியது அல்ல, காலம் காலமாகவே பெண்களை இழிப் பிறவிகளாகவே சித்தரித்து வருகின்றன நமது சமூகம். 
 
தில்லியில் 23 வயதான ஒரு இளம் பெண், ஒரு ஆண் துணையோடு சென்றும் கூட அவளின் மானத்தையும், உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனது மிகவும் வருந்த தக்க, இல்லை இல்லை, இந்தியர்கள் என்பதில் அவமானம் கொள்ளத் தக்கதொரு சம்பவமாகும். 
 
சொல்லப் போனால் தாமினியின் மரணம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெண்கள் மீதான இந்தியர்களின் வன்முறைகளின் மூகமூடியைக் கிழித்தெறிந்து விட்டது. கலாச்சாரம் என்ற போர்வையில் இந்தியர்கள் பெண் இனத்துக்குச் செய்யாத கொடுமைகள் இல்லை எனலாம். 
 
இந்தியாவில் உருவாக்கம் பெற்ற கலாச்சார, சமயங்களை உற்று நோக்குக்கங்கள் பெண்கள் என்போர் கடவுளின் மனைவியாக, வைப்பாட்டியாக, அடி வருடியாகவே வலம் வருவாள். சொந்த மகளை மனைவியாக்கிய பிரம்மன் ஆகட்டும், மாற்றான் மனைவிமாரோடு குலாவிய கிருஷ்ணன் ஆகட்டும், சொந்த மனைவியைத் தீயிலிட்ட ராமன் ஆகட்டும், இரண்டு திருமணங்கள் செய்து பெண்களை வெறும் காமக் கிழத்திகளாக்கிய பற்பலக் கடவுளர் ஆகட்டும் அனைவரும் பெண்களைப் போகப் பொருளாகவே காட்சி தருகின்றன. 
 
அத்தோடு நின்றார்களா, பெண்களைத் தீட்டு உடையவள் என ஒதுக்கியும், சமய சம்பிரதாயங்களில் இருந்து விலக்கியும், அவர்களைத் தேவதாசிகளாய் மாற்றித் தமது சுயநல இச்சைகளைத் தீர்த்தும், பால்ய விவாகங்கள் என்ற போர்வையில் பற்பல சிறுமிகளின் வாழ்வைக் கெடுத்தும், கணவன்மாரை இழந்தோரை தீயிலிட்டும் இவர்கள் ஆற்றாத கொடுமை கொஞ்சம் நஞ்சமல்ல. 
 
அதன் நீட்சி இன்று வரை தொடரவே செய்கின்றன. ஒரு பெண் மணமாகுகின்ற போது வெறும் மனைவியாகவோ, துணைவியாகவோ போவதில்லை. முதல் எடுப்பிலேயே பணம் கொழிக்கும் மரமாகவும், சிறிதனங்கள், செல்வம், சொத்து போன்றவற்றைக் கொடுத்தே மணம் முடிக்கக் கட்டாயப்படுத்த படுகின்றாள். அத்தோடு நின்றுவிடுமா, கணவன் வீட்டாருக்குச் சேகவம் செய்யும் பணியாளாக, சமைத்துப் போடும் சமையல்காரியாக, வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரியாக, மாமனார், மாமியாரைக் கவனித்துக் கொள்ளும் தாசியாக, கணவனின் இச்சைகளைத் தீர்க்கும் வேசியாக, பின்னர் அவனால் உண்டாகும் பிள்ளைகளை வளர்க்கும் செவிலியாக உறிஞ்சப் படுகின்றாள். 
 
அத்தோடு நின்று விடுகின்றதா என்றால் இல்லை. பெண் பிறந்தது முதலே காமுகர் கூட்டத்தால் சூழப்படுகின்றது. பிறக்கும் முன், பிறந்த பின், வளரும் போது, வளர்ந்த பின் எனப் பெண்ணைக் கொல்லும் கொடும் பாரதச் சமுதாயம். பச்சிளம் பிள்ளையாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகுகின்றாள். காமுகர்கள் தந்தையாக, தமையனாக, மாமனாக, பக்கத்து வீட்டுக் காரனாக, ஆசிரியனாக, தோழனாக, காதலனாக, கணவனாக, சகப் பணியாளராக எனப் பற்பல ரூபங்களில் அவளைத் துரத்துகின்றன. 
 
வீட்டுக்குள், வீட்டின் வெளியில் என எங்குப் போனாலும் அவளைப் பாலியல் சொரூபமாகவே ஆணாதிக்கச் சமூகம் காண்கின்றது. பேருந்தில் ஏறினால், கடைத்தெருக்களுக்குச் சென்றால், திரையரங்குகளுக்குப் போனால், பள்ளி, கல்லூரி, அலுவலங்கள் எங்கும் எங்கெங்கும் அவளை உரசவும், அங்கவயங்களை அபகரிக்கவுமே பெரும் கூட்டம் உலாவுகின்றது. 
 
என்றாவது எந்த மீசை வைத்த ஆணாவது கண்முன்னே மாற்றுப் பெண்ணொருத்தி துன்பப்படும் போது குரல் கொடுக்கின்றானா சொல்லுங்கள். இரவில் சுயமைத்துனம் செய்வதைத் தாண்டி இன்றைய ஆண்களின் அடையாளங்கள் மண்ணின் புதைந்துவிட்டது. 
 
rape1_jpg_1310038f.jpg

தாமினியின் மரணத்தைத் தொடர்ந்து சினிமாக் காரர்கள், அரசியல் வாதிகள், ஊடகங்கள், இன்னப் பிற பிரபலங்கள் எல்லாம் கதறுகின்றன, அழுகின்றன. அப்பப்பா ! என்னவொரு நீலிக் கண்ணீர், எல்லாம் எத்தனை நாளுக்கு ஒரு வாரம், ஒரு மாதம் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வருடம். 

நன்றாகக் கேளுங்கள் ! அடுத்த ஆண்டும் இதே பாரத நாட்டில் பற்பல தாமினிகள் வன்புணரப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். நமது சமூகமும், அரசாங்கமும், கட்டமைப்பும், சட்ட திட்டங்களும் எல்லாப் பழியையும் தூக்கி பெண்கள் மீது போடுவார்கள். 
 
இவள் ஒழுக்கமற்றவள் பல ஆண்களோடு பேசுவாள், நவநாகரிக உடை அணிவாள், இரவில் சுற்றுவாள் அதனால் தான் ஆண்கள் அப்படிச் செய்வார்கள். ஏனெனில் அவர்கள் ஆண்கள் அவர்களுக்கு விந்து வெளியேற்றம் மட்டுந்தான் தெரியும், ஆணுறுப்பு உண்டல்லவே என ஏற்கனவே ஒரு கூட்டம் கொக்கரித்து வருகின்றன. 
 
மத்திய பிரதேசம், கர்கோன் தொகுதியின் பாராளமன்ற உறுப்பினர் முனைவர். அனிதா சுக்லா கூறுகின்றார், '' பாதிக்கப்பட்ட பெண் தானாகவே ஆறு பேரிடமும் தன்னை ஒப்படைத்திருக்கக் கூடும் '' என்று கூறினார். 
 
அவர் மட்டுமில்லை இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களைக் கேளுங்கள் இந்திய ஜனாதிபதியின் மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார், தில்லியில் போராடும் பெண்கள் எல்லாம் வேடதாரிகளாம்
 
திருணாமுல் காங்கிரஸின் பாராளமன்ற உறுப்பினர் காகோலி கோஷ் தாஸ்திதார் என்பவர் கொல்கத்தாவில் நடந்த பார்க் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்கின்றார். 
 
மேற்கு வங்க மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அனிசுர் ரஹ்மான் கூறுகின்றார், '' மம்தா பானர்ஜி வன்புணரப்பட எவ்வளவு கூலியாக அவர் பெறுவார் '' என்றார். 
 
இவை எல்லாம் ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதமானவர்களே. இந்தியாவின் அனைத்து அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களும் அது ஆணோ, பெண்ணோ பழமைவாத ஆணாதிக்கச் சிந்தனாவாதிகளாகவே இருக்கின்றார்கள். அவர்களின் பார்வையில் ஆன் என்ன செய்தாலும் தகும், பெண் மூடிக் கொண்டு போக வேண்டியவள். 
 
தில்லியைச் சார்ந்த உபமன்ய ராஜூ என்பவர் கூறுகின்றார், தமது தங்கை எப்போது வெளியே போனாலும் ஒரு கத்தியும், பெப்பர் ஸ்ப்ரேவும் கொண்டு போவாளாம், சமயத்தில் அது கூடப் பயன் தருமா என உறுதியாகச் சொல்ல முடியாது என்கின்றார். இந்தியாவின் தலைநகரமே இந்த லட்சணம் என்றால் இன்ன பிற பின்தங்கிய பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 
 
குற்றங்களை மறைப்பதில், மறுப்பதில் மட்டுமே நம்மவர்கள் கவனம் செலுத்துகின்றார்கள். அவர்கள் நினைக்கின்றார்கள் குற்றவாளிகள் வெளியே தென்பட்டு விட்டால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும், அல்லது பாதிக்கப்பட்டவர் மீதே எதாவது பழியைப் போட்டு விட வேண்டும் இது தான் நமது சிந்தனை வடிவம். நாமும் சரி , நமது அரசும் சரி தற்காலிக பிரச்சனைகளுக்குத் தற்காலிக தீர்வுகளை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம். 
 
இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்தால் மட்டுமே குற்றமாம். பாலியல் பலாத்கார முயற்சி பண்ணுவது குற்றமில்லையாம். அவற்றைக் குற்றப்படுத்த எந்தவொரு அத்தியாயமும் இந்திய பீனல் கோட்டில் இல்லை என்னும் செய்திக் கேட்டு அதிர்ந்து போனேன். ஐபிசி 375 சொல்லுகின்றது, '' Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of rape”. அடப் போங்கய்யா !!! 
 
இந்தியாவில் எவ்வளவோ மருத்துவ வசதிகள் இருந்த போதும், தாமினியை உடனடியாகச் சிங்கப்பூருக்கு நாடு கடத்தியது ஏன். அவள் இறக்கப் போகின்றாள் என்பதை அறிந்த அரசாங்கம், எங்கே தில்லியில் இறந்தால் பிரச்சனை வெடித்துவிடும் என்பதால் சிங்கப்பூருக்கு நாடு கடத்தியது. அங்கே அவள் இறந்ததும், சிங்கப்பூர் மருத்துவமனையின் மருத்துவர் செய்தியாளருக்குக் கூறுகின்றார், '' அமைதியாக இறந்துவிட்டாளாம் ''
 
மனசாட்சியுடன் சொல்லுங்கள் அந்த அப்பாவி பெண் அமைதியாகவா செத்தாள். ஆறு காம வெறிப்பிடித்த நாய்கள் அவளைக் கதற கதற வன்புணர்ந்து, பிறப்புறுப்புக்களில் குருதிக் கொட்ட கொட்ட சிதைத்து, குடலை உருவி, பின்னர் நிர்வாணமாய் ஓடும் பேருந்தில் இருந்து வீசி எறிந்தார்கள், இது அமைதியான சாவா சொல்லுங்கள். இந்திய அரசாங்கம் எழுதிக் கொடுத்ததை மருத்துவர் வாசித்தாரோ என்னவோ ? 
 
பெண்களை அடக்குவதிலோ உலகம் முழுவதும் உள்ள பல ஆணாதிக்கச் சமூகங்கள் குறியாக உள்ளன. இந்தியாவைத் தாண்டி இது உலகப் பிரச்சனை என்பேன். குறிப்பாக நடுநிலைக் கோட்டு அருகே இருக்கும் நாடுகள் அனைத்தும் பெண்களைக் கொடூரமாக நடத்தும் நாடுகளே ஆகும். அவர்களின் பார்வையில் பெண் புணரப்பட வேண்டிய ஒரு எந்திரம் அவ்வளவே. 
 
ஜி20 நாடுகளிலேயே இந்தியா தான் பெண்களுக்கு பாதுக்காப்பில்லாத நாடாம், சவுதி அரேபியக் கூட இந்தியாவை விட ஒரு படி முன்னுக்கு நிற்கின்றது தான் கொடுமை. 
 
map.jpg
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிறப்புக் காவல் படையால் வன்புணரப்பட்ட சுக்மா பழங்குடி பெண்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அங்கு மட்டுமில்லை தமிழ்நாடு, மணிப்பூர், கஸ்மீர் எனப் பற்பல இடங்களில் காவல் காக்க வேண்டிய ராணுவமும், போலிஸாருமே பற்பல பலாத்காரங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். எந்த ஒரு கயவனும் தண்டிக்கப்படவில்லை. அது குறித்து நமக்கு யாதொரு கவலையும் இல்லை. 
 
மகன்கள் என்ன செய்தாலும் தகும் எனத் தர்க்கம் கதைக்கும் பெற்றோரே முதல் குற்றவாளிகள் ஆவார்கள். எங்கோ ஒரு தில்லியில் நடக்கும் சம்பவமும் இல்லை, கல்வியறிவில்லாத பிகாரிகளின் செயல்களும் இல்லை. இச் செயல் இந்த ஒட்டு மொத்த உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் எனப் பீற்றிக் கொள்ளும் சமூகத்தின் தோல்வி ஆகும். என்ன தில்லியில் பாதிக்கப்படப் பெண் அறியப்பட்டு விட்டாள், குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு விட்டனர். ஆனால் இந்தத் தேசத்தின் தெருவில் அமர்ந்து நோக்கினால் அவற்றில் எத்தனை எத்தனை தாமினிகள் உள்ளத்தால் சாகடிப்பட்டு, தனது கோர சம்பவங்களை மனதில் புதைத்து கண்ணீரால் துடைத்து போலிக் கவுரவம், போலி சமூகம் போன்றவற்றால் அடக்கப்பட்டு அலைகின்றாளோ. எத்தனை எத்தனை கொடுமையான மிருங்கங்கள் வேடங்கள் அணிந்து நல்ல மனிதர்களைப் போல உலாவுகின்றார்களா. ஏன் இப்பதிவை வாசிக்கும் உங்களில் கூட ஒரு தாமினியும், அந்த ஆறு கொடிய மிருகவும் இருக்கக் கூடும். இந்திய ஆண்களுக்குக் காமவெறி நோய் தொற்றி வருகின்றதோ, தினம் தினம் பலாத்கார செய்திகள், வெளிவராதவை எவ்வளவோ. 
 
அத்தோடு சமூகச் சிக்கல்களை உருவாக்கிவிட்டு அதற்குத் தீர்வு தருகின்றேன் எனக் கசாயம் காய்ச்சுவோரிடம் கேட்கின்றேன், பெண்கள் இரவில் உலாவ வேண்டாம் என்போரே, ஏன் ஆண்கள் இரவில் உலாவத் தடை விதிக்கக் கூடாது. பெண்களின் ஆடை தான் பலாத்காரத்துக்குக் காரணம் என்னும் ஆண்களின் கண்களைப் பிடுங்கி விடலாம், பிரச்சனை தீர்ந்திடும் அல்லவா. 
 
இன்று தில்லியின் தாமினியின் மரணம் வெளிப்பட்டது, ஆனால் உங்களுக்குத் தெரியுமா தினம் தினம் ஆயிரம் ஆயிரம் பெண்கள் உலகம் முழுவதும் அடக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வேலை வாங்கப்பட்டு, எரிக்கப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பாலியல் தொழிலி தள்ளப்பட்டு, கட்டாய மணம் முடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு வருகின்றனர். 
 
நான் அறிந்தே ஒரு டஜன் பெண்களின் வாழ்க்கைக் கதைகள் மட்டுமே பல சோக காவியங்கள் எழுதக் கூடிய அளவிலான கொடூரங்களைக் கொண்டதாக உள்ளன. உலகம் முழுவதும் எத்தனை எத்தனை அப்பாவி பெண்கள் எத்தனை எத்தனை துயரங்களை அனுபவிக்கக் கூடும். 
 
ஊர்வலங்கள், கூக்குரல்கள், அழும் அரசியல்வாதிகள், குமுறும் சமூக ஊடகங்கள், மவுனிக்கும் மதவாதிகள், அடுத்தது என்ன என்பது மட்டுமே கேள்விக் குறியாக மிஞ்சுகின்றது.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்பாடு பண்பாடு என்று வாய்கிழிய கத்ததான் பாரதநாடு சரி உண்மையில் ஒரு பன்னாடை நாடு அது.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல்

30-ban-ki-moon-300.jpg

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுகொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது என்று கூறியுள்ளார்.

டிஸ்கி:

அரிச்சந்திரன் அறிக்கை விட்டு போட்டாருப்பா.. எவனுக்கும் இது ஒரு கண்டிக்க தக்க செயல் என்று தெரியாது... சுப்பன் வீட்டு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால்  இவரு அறிக்கை குடுப்பாரா..?

முள்ளி வாய்க்காலில் 1 லட்சம் பேருக்கும் மேல் இறந்தற்கே இந்த நாற வாய் திறக்கல.. இப்ப திறக்குது..
 
  எல்லா உயிருக்கும் ஒரு பெறுமதி இருக்கு அது..ஆண்/பெண் என்று வேறுபாடு கிடையாது.. அந்த பெறுமதிக்கு ஏற்பதான் உலகம் நகருகிறது.. நாம அந்த அளவிற்கு வளரணும்..அதான் உண்மை.

ல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
வன்னியில், சிதைக்கப்பட்ட தமிழச்சிகளின் யோனிக்கு பின்னால்,  இவரின் பாவக் கரங்கள்  உண்டு.

தலதாமளிகை மாளிகை புகழ் பன்-கி.மூன் கதைத்தால் தான் பெண்களின் பெறுமதி உயரும்.

அந்த மனிசனுக்குத்தான் கோழி விலை என்ன என்று தெரியும். அதனால்த்தான் துலஞ்சு போனதை நினச்சு துன்படுகிறார்.

ஐ.நாவின் உள்ள விசாரணையின் பின் வந்திருக்க வேண்டிய பதவி விலகல்களை கமிசன் அமைத்து காப்பாற்றியவர்.

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் நான் என்னத்தை குவேட் பண்ணி என்ட கருத்தை எழுதியிருக்கிறேன் என வடிவாய் வாசித்துப் போட்டு உங்கட கருத்தை எழுதவும்...தமிழ் நாட்டுப் பெண்ணுக்காக போராடாமல் டில்லிப் பெண்ணுக்காக போராடுகிறார்கள் என்ட கருத்திற்காக பதில் தான் அது.
 
உசுப்பேத்திற வேலையை நான் எப்பவும் செய்ததில்லை...உங்கள போல ஆட்களுக்குத் தான் அது கை வந்த கலை...நீங்கள் ஒரு பெண் வயிற்றில் பிறந்தீர்கள்.உங்களுக்கு கூடப் பிறந்த,பிறக்காத சகோதரிகள் பலர் இருக்கிறார்கள்.ஏன் கூடப் பிறந்தால் மட்டும் தான் சகோதரியா?...ஈழத்தில் பிறந்த அனைத்துப் பெண்களையும் தாயாக,சகோதரியாக நினைத்திருந்தால் அவர்களுக்காக நீங்கள் போராடி இருப்பீர்கள்?...பெண்களுக்காக பெண்கள் மட்டும் தான் போராட‌ வேண்டுமா?
 
சரி பெண்களுக்காக நீங்கள் போராட‌ வேண்டாம் விடுங்கள் உங்கள் ஆண் வர்க்கத்திற்காகவாவது போராட‌லாமே!...எதாவது ஒன்றென்ட‌வுட‌ன் கவிதை எழுத மட்டும் தான் தெரியுமாக்கும்...எனக்கு கவிதை எழுத தெரியாது நானும் ஒரு கவிதை எழுதிப் போட்டு நல்ல பிள்ளைக்கு இருந்திருப்பன்.
 
நான் டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்ததை பொதுவாக பெண்ணுக்கு நட‌ந்த அநீயாயமாகவே பார்க்கிறேன்...இப்படி ஒரு அநியாயம் உலகத்தில் எந்த பெண்ணுக்கு நட‌ந்திருந்தாலும் என்ட‌ கருத்து இது தான்...தமிழ் நாட்டு பெண்ணுக்கு நட‌ந்த கொடுமை இப்பத் தான் ஊட‌கத்தால் வெளியில் கொண்டு வர‌ப்படுகிறது...ஏன் அச் சம்பவம் நட‌ந்த உட‌ன் ஊட‌கங்கள் இதை வெளியில் கொண்டு வர‌வில்லை?...ஊட‌கங்கள் முதலில் வெளிக் கொண்டு வராமை யாருடைய பிழை?...அப்படித் தமிழ் நாட்டுப் பெண்ணுக்கு நட‌ந்தது முதலில் வெளியே வந்தாலும் என்னைப் பொறுத்த வரை தமிழ்நாட்டுப் பெண் என்ட‌ அதிக கவலையோ,வித்தியாச‌மோ இல்லை...மற்றவரை மாதிரி இவரும் பெண் என்ட‌ ரீதியில் தான் என்ட‌ கருத்து இருக்கும்.
 
ஈழத்தில் பெண்களுக்கு நட‌ந்த,நட‌க்கிற கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாட்டுக்கார‌ர் போராடினார்கள்,போராடிக் கொண்டு இருக்கிறார்கள் அதற்காக நாங்களும் த.நாட்டு பெண்ணுக்கா போராட‌ வேண்டும் என்பது போல் இருக்குது இங்கு பலர‌து கதை...பக்கத்தில் இருக்கிற த.நாட்டுக்கார‌ரே[ஒரு சிலரைத் தவிர‌] எமக்காக எப்போதும் குர‌ல் கொடுத்ததில்லை பிறகு எப்படி டில்லிக்கார‌ர் குர‌ல் கொடுக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்?
 
எனது கருத்து உங்களின் இதே விடயம் சம்பந்தப்பட்ட இரண்டு கருத்துக்களை உள்ளடக்கி வெளியானது.

1. இதனுள்.. தமிழக பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை பதிவு செய்தமை.

2. மண்டைதீவு பாலியல் கொடுமைக்கு.. யாரேனும் போய் அந்த ஆண்களை தண்டியுங்கோ என்பதற்கு.

இரண்டும் உங்களை உங்கள் கடமையில் இருந்தும்... தூர வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு  உபதேசிக்கும் பாங்கையும் இனங்காட்டுகின்றன.

இதனையே இங்கு வேறு சிலரும் செய்கின்றனர்.

அதிலும்.. யாழ் ஒரு ஊடகம் என்ற வகையில் அதனூடும் மறைக்கப்பட்ட விடயங்களை வெளிக்கொணரும் வகைக்கு கள உறவுகள் செய்யும் செயலை நான் வரவேற்கிறேன். அவை உசுப்பேத்தல்கள் அல்ல. மாறாக ஊடக வெளிப்படுத்தல்களாகும்.

நியானி: சில வரிகள் தணிக்கை

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.