Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை:-
28 டிசம்பர் 2012
 
யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசும் அதனது முகவர்களும் அபிவிருத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கையில் இன்று நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
மண்டைத்தீவு கிணறொன்றிலிருந்து இன்று மதியம் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியான சுரேந்திரன் சுதந்தினி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான நிலையில் சடலமாக வீசப்பட்டிருந்தமை இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
 
மனித பயன்பாட்டிலில்லாத குறித்த கிணற்றினுள் சிறுமி அணிந்து சென்றிருந்ததாக நம்பப்படும் பாதணியும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வகையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இச்சிறுமி வீசப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்திருந்தது. 
 
யாழ்.போதனாவைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட ஆய்வில் இப்படுகொலை பாலியல் வன்புணர்ச்சியின் பின்னரே மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறும் உட்தரப்புத் தகவல்கள் போதைப் பொருள் பாவனையாளர் அல்லது மோசமான மதுப் பாவனையாளர் அல்லது கொடூர பாலியல் வன்புணர்வாரள் ஒருவராலேயை சிறுமி பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளன.
 
ஏற்கனவே நெடுந்தீவில் இதே பாணியில் ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்ந்தும் சிறைச்சாலையினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலை வழக்கின் குற்றவாளிகளுள் அந்நபரும் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.  

முத்தம்மா பெற்ற பிள்ளை

மூன்று பேர் உயிரோடு இல்லை

 

 

முத்தப்பன் வளர்த்த பிள்ளை

உடம்பில கை கால் இல்லை

பத்துமாத தமிழ்ப் பிள்ளை

படுத்துறங்க மடியில்லை

படைவெறியன் பிடியில்

அழக்கூட முடியல்ல

 

நன்றி - முகநூல்

Edited by akootha

வட்டுக்கோட்டையில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 26 வயது இளைஞர் கைது

 

காதலிப்பதாகக் கூறி 15 வயது சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயதுடைய இளைஞரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

இச்சம்பவம் வட்டுக்கோட்டை கிழக்கில் இடம்பெற்றதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிப்ரி தெரிவித்தார்.

 

இம்மாதம் 20ஆம் திகதி குறித்த இளைஞர் அச்சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார் .

 

இக்குற்றம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2302

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வயது, பதினைந்து வயது என்று... வித்தியாசமில்லாமல் எல்லா இடமும்... பாலியல் வன்புணர்வுச் செய்திகளாக உள்ளது.
மனிதர்களில்... வித்தியாசமான, ஹோமோன் சுரக்க ஆரம்பித்துள்ளதா. :(

<p></p><blockquote class='ipsBlockquote'data-author="தமிழ் சிறி" data-cid="842124" data-time="1356755128"><p>நான்கு வயது, பதினைந்து வயது என்று... வித்தியாசமில்லாமல் எல்லா இடமும்... பாலியல் வன்புணர்வுச் செய்திகளாக உள்ளது.<br>

மனிதர்களில்... வித்தியாசமான, ஹோமோன் சுரக்க ஆரம்பித்துள்ளதா. :(</p></blockquote><p></p><br />அப்படி இல்லை சிறி தமிழனுக்கு எதை செய்தாலும் கேட்க யாரும் இல்லை என்ற

மனோ நிலையும் துணிவுந்தான் இதுக்கெல்லாம் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள்கூட இப்படிச் செய்வதில்லை.. ஆகையால் இவர்களை மிருகங்கள் என்று சொல்லி மிருகங்களைக் கேவலப்படுத்த விரும்பவில்லை.

 

ஒன்றில் நாட்டில் காவல்துறை அதியுச்ச பாதுகாப்பை வழங்கவேண்டும். இல்லையென்றால் இவர்களுக்கு புலிகளைப் போன்று உடன் தண்டனை வழங்க வேண்டும். இரண்டும் இல்லாதுபோனால் பல மனநோயாளிகள் இவ்வாறு தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிடுவார்கள்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

அண்மையில் இந்தியாவில் பயிற்சி பெற்ற சிங்கள இராணுவப் பயங்கரவாதிகள் சிலர் புதிதாக மண்டைதீவுக்கு வந்ததாக தகவல்.

இவர்களுக்கு புலிகளைப் போன்று உடன் தண்டனை வழங்க வேண்டும்.

 

 

 

உண்மை இசை.......அன்று   பிசாசுக்கூட்டத்தை ,அரக்கர் கூட்டத்தை அன்று அந்த கடவுள் கொன்றான் ......................

இன்று உந்த கேவலம் கேட்ட நாய்க்கூட்டத்தை  போஸ்ட் இல் கட்டி  பொட்  என்று ஒரு பொட்டு போட்டால்தான் ..இந்த உலகம் சமத்துவமாகும் ...

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள்கூட இப்படிச் செய்வதில்லை.. ஆகையால் இவர்களை மிருகங்கள் என்று சொல்லி மிருகங்களைக் கேவலப்படுத்த விரும்பவில்லை.

 

ஒன்றில் நாட்டில் காவல்துறை (மிருகங்கள்) அதியுச்ச பாதுகாப்பை வழங்கவேண்டும்

 

இது சீரியசான திரி.. நாம கருத்து எழுதவில்லையென்றாலும் சிம்பாலிக்க சொல்லுவம்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது.ஆனால் யார் யாரை கண்டிப்பது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

யார்.. யாருக்கு, அனுதாபம் தெரிவிப்பது...
நடந்த அசிங்கம், நாலு வயது பாலகிக்கு. பிள்ளைக்குச் சமன். இந்தக் கேடு கெட்ட, நாய்கள்... ஊரில் இருப்பதே... அவமானம்.
இதை, ஒரு தமிழன் செய்தான், அல்லது செய்ய... இடம் கொடுத்தான்... எனும் போது, எனது ஆத்திரம், அவ்வளவும்... புலிகளைக் காட்டிக் கொடுத்த, ஒட்டுக் குழுக்கள் மீதே... திரும்புகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் தங்கி நிற்கும்.. ஒட்டுக்குழு பயங்கரவாதி ஒருவனை திருமணம் செய்யச் சென்ற கனடா நாட்டுப் பிரஜையான தமிழ் பெண்ணும் அண்மையில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

 

ஈழத்தில்.. இந்தியப் படைகளின் காலத்தின் பின்னர் தற்போது சிங்கள இனவாத இராணுவப் பயங்கரவாதிகளும்.. முஸ்லீம் மதவாதப் பயங்கரவாதிகளும்.. (அண்மை மாதங்களில்.. காரைநகரில் வைத்து.. ஒரு உடல்நலக் குறைவான தமிழ் பெண் முஸ்லீம் காடைக் கும்பலால் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி இருந்தார்.).. தமிழ் ஒட்டுக்குழு பயங்கரவாதிகளும் மேற்கொள்ளும் பெண்கள் மீதான பாலியல் வெறியாட்ட நடவடிக்கைகளுக்கும்..கேட்பார் யாருமின்றி.. மிக மோசமான நிலையை அடைந்துள்ளதுடன்.. மானுட உலகில் பெண்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தான சூழலை.. ஏற்படுத்தியுள்ளன.

 

இவை குறித்த கண்டனங்களும் தற்போதைய நிலையில் உரத்து.. ஆணித்தரமாக உலகின் முன் கொணரப்பட வேண்டும். இந்திய உபகண்டத்தில் பாலியல் பலதரப்பட்டவர்களாலும் ஆயுதமாக பல்வேறு வடிவங்களில் மிகச் சாதாரணமாக பயன்படுத்தப்படுவது பற்றி சர்வதேசக் கவனம் இழுக்கப்பட்டு.. இந்த நாடுகள் மீதும் அவற்றின் ஆட்சியாளர்கள் மீதும்.. அவற்றின் இராணுவ இயந்திரங்கள் மீதும்.. அவர்களுக்கு சேவகம் செய்யும் ஒட்டுக்குழுப் பயங்கரவாதிகள் மீதும்.. ஒரு காத்திரமான நடவடிக்கைக்கு உலகை தள்ள வேண்டும். இதன் மூலமே இந்த அவலங்களை எதிர்காலத்தில் என்றாலும் கொஞ்சமாவது குறைக்க முடியும். இன்றேல்.. எமது பெண்களை கிணறுகளும்.. சுருக்குகளும்.. வீதிகளும்.. மோச்சரிகளுமே நிரப்பி நிற்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எமக்கு தமிழீழம் கிடைத்தாலும் கூட புலிகளின் காவல்துறை போன்று ஒரு காவல்துறை இல்லாதவிடத்து இவ்வாறான கொடுமைகள் நடைபெற்றபடியே இருக்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

மிருகத்தால் குதறப்பட்ட  ஈழத் தமிழ்க்குழந்தைக்கு  கண்ணீர் அஞ்சலிகள் 

யாழில் ஓட்டுக் குழுக்கள் இருக்கும், வரை  சிறுவர்களை சீரழிப்பவர்கள் தப்பிக் கொண்டு இருப்பார்கள்.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்கும் குமைவதைத் தவிர வேறு வழியேதும் தெரியவில்லை!

 

தமிழினம் நாதியற்றுப் போய்க் கிடக்கின்றது என்பது தான் நம்மால்,ஜீரணிக்கப்பட முடியாவிட்டாலும்,உண்மை!

 

இதைத் தடுத்து நிறுத்தும் பலமோ,சக்தியோ யாரிடமும் இப்போதைக்கு இல்லை!

 

ஆழ்ந்த இரங்கல்களும்,அனுதாபங்களும்!

 

Edited by புங்கையூரன்

யாழில் ஓட்டுக் குழுக்கள் இருக்கும், வரை  சிறுவர்களை சீரழிப்பவர்கள் தப்பிக் கொண்டு இருப்பார்கள்.

 

ஒட்டுக்குளுக்களுக்கு தேவை அடக்குமுறை இராணுவம்.

அடக்கு முறை இராணுவத்திற்கு தேவை - தமிழின அழிப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிருகங்கள்கூட இப்படிச் செய்வதில்லை.. ஆகையால் இவர்களை மிருகங்கள் என்று சொல்லி மிருகங்களைக் கேவலப்படுத்த விரும்பவில்லை.

 

ஒன்றில் நாட்டில் காவல்துறை அதியுச்ச பாதுகாப்பை வழங்கவேண்டும். இல்லையென்றால் இவர்களுக்கு புலிகளைப் போன்று உடன் தண்டனை வழங்க வேண்டும். இரண்டும் இல்லாதுபோனால் பல மனநோயாளிகள் இவ்வாறு தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிடுவார்கள்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

ஈழத்தமிழர்களுக்கு அதுவொரு பொற்காலம்.......விடுதலைப்புலிகளின் கொள்கைகளும்,சட்டங்களும் ஒருசிலருக்கு கசப்பாக இருந்தாலும்.........பிற்காலத்தை நோக்கின்..............அதுதான் அத்திவாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறுவுகள் அற்ற ஒரே ஒரு தேசம் உலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது.

தமிழீழம் .(FB)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வன்புணர்வின் பின் கொலைசெய்யப்பட்ட மண்டைதீவுச் சிறுமியின் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு! 
[sunday, 2012-12-30 11:14:36]
 
மண்டைதீவில் வன்புணர்வின் பின் கொலைசெய்யப்பட்ட நான்கு வயதுச் சிறுமியின் உடற்பாகங்கள் இழையவியல் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணசேகரம் சுதாகினி (வயது4) என்ற சிறுமியே வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்கு அயலில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து நேற்றுமுன் தினம் அவர் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வியாழக்கிழமை வீட்டிலிருந்து பிற்பகல் பிரஸ்தாப சிறுமி திடீரெனக் காணாமல் போயிருந்தார். அவரை எங்கு தேடியும் காணாததால் ஊர்காவற்றுறைப் பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.
 
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் கிணற்றில் சடலமாகக் கிடக்கக் காணப்பட்டார். அவரது உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போதே சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது. சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் விசாரணை, பரிசோதனையின் பின்னர் நேற்றுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் உடற்பாகங்கள் இழையவியல் கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுப் பெண்ணுக்கோ அல்லது டில்லிப் பெண்ணுக்கோ நாம் அனுதாபம் மட்டும் தான் சொல்ல முடியும்...ஆனால் எங்கட குட்டிப் பொண்ணுக்கு நடந்த அநியாயத்திற்கு நாங்கள் யாராவது நினைத்தால் பழி வாங்க முடியும்...யார் அதைத் செய்தது என கண்டு பிடித்து அந்த கயவனின் ஆண் உறுப்பை சிதைக்க வேண்டும்...யாராவது தைரியமானவர்கள் இதை செய்ய வேண்டும்...இதை செய்ய புலி தான் திரும்பி வர வேண்டும் என்று இல்லை...அதன் பின்னர் தான் அக் குழந்தையின் ஆத்மா சாந்தியடையும்.

  • கருத்துக்கள உறவுகள்
யாராக இருந்தாலும் இன மத பேதம் பார்க்காமல் இவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். 
 
 

பயங்கரவாதத்தை ஒழித்த நாடு Sri Lanka
பாலியல்/வன்கொடுமைகளை மற்றும் இன்ன பிற குற்றங்களை  ஒழித்த நாடு (X) தமிழீழம்

 

 

ரதி சொன்னமாதிரி நாங்கள் யாரும் ஏன் செய்யதயார் இல்லை?

குற்றசெயல்கள் எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ளபட முடியாதவை ,பாலியல பாலத்காரம் மிக மோசமான ஒரு குற்றம் அதற்கு மரணதண்டனை கொடுத்தாலும் தகும் ,
ஆனால் இப்படியான குற்றசெயல்கள் சர்வாதிகார நாடுகளில் ,கபிடல் பனிஷ்மென்ட் உள்ள நாடுகளில் நடப்பது மிக குறைவு என்றுதான் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.கொம்மினியூச நாடாக ரஷ்யா இருக்கும் போது அங்கு குற்றச்செயல்கள் இல்லை எனும் அளவிற்கு இருந்தன ,இன்று நிலைமை மிக மோசம் .பாலியல் பாலாத்காரம் அதிகம் நடக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று ஆனால் அங்கு பெரும்பாலும் குற்றவாளியை பிடித்து தண்டனை கொடுத்துவிடுவார்கள் இந்தியா ,இலங்கை போன்ற நாடுகளில் குற்றவாளி பெரும்பாலும் தப்பிவிடுவான் .

 

நியானி: அவதூறுக் கருத்துக்கள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டுத் தாலிகட்டின பொண்டாட்டியையே அவளுக்கு விருப்பமில்லாமல் கைவைக்க மனம் வருகுதில்லை. மனித இனம் அருவருக்கத் தக்க இழிபிறவிகள் தன்னுடைய பெயரைக் கூட முழுமையாக சொல்லத் தெரியாத 4 வயது குழந்தையை வன்புணர்ந்து கொலைசெய்து புதைத்திருக்குதுகள்.

 

இபடியான ஈனப்பிறவிகள் நிரந்தரமாக அண்ணகர்களாக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல், மாட்டுக்கு வைக்கிற மாதிரி முகத்தில் குறி வைக்க வேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.