Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் அப்பனும் வெளிநாட்டு பிள்ளையும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது........... இந்த தவறைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள்.. :(

 

தமது இரத்தம், தனது பிள்ளை வளர்ப்பில் நம்பிக்கை இருந்தால் இப்படியான எண்ணங்கள் வராது.

 

 

 

நன்றி தம்பி  கருத்துக்கு...

நானும் ஒரு சாதாரண தமிழ் பெற்றோரில் அடங்குபவன் தானே.

இதைச்சொல்ல  வெட்கப்படணுமா என்ன?

ஆனால் எனக்கு விழுந்த குட்டு  உங்களுக்கும் விழுந்துவிடக்கூடாது என்ற ஒரு நோக்கத்துக்காகவே பதிந்தேன்.

 என்ன செய்யிறது விசுகு

உங்கள் மகனின் வயதில் நீங்கள் என்ன செய்தீங்களோ அதே மனநிலையிலை மகனையும் நினைச்சிருக்கிறீங்கள். அவ்வளவுதான். :icon_idea: :icon_idea:

 

 

 

இது அடுத்த குட்டு எனக்கு

ஆனால் உண்மையும் அதுதான்

நான் ரொம்ப அலைஞ்சவன் சிறு வயதில்.

உண்மை சுடும்

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

ஜீவாவின் கருத்தே எனதும்.  பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கு முக்கிய காரணமே இந்த சந்தேகக் குணம்தான்.  பிள்ளைகள் வளர்ந்தபின்னர் பிள்ளைகள் பெற்றோரிடையே இடைவெளி வருவதற்கும் இது காரணமாகிவிடுகிறது.

 

 

 

இதை சந்தேகம் என்பதற்குள் அடக்கமுடியுமா என தெரியவில்லை

ஒரு சூழ்நிலையில் எமது மனம் படும் பாட்டையே நான் எழுதினேன்.

ஒரு பெற்றோராக எமக்கு சில கடமைகள் உண்டு.

அதை சந்தேகம் என்று மட்டும் சொல்லி தப்பித்துவிடமுடியுமா? என்பதே கேள்வி.

நன்றி கருத்துக்கும் நேரத்துக்கும் பிள்ளாய்.

  • Replies 77
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் உங்கள் மனதில் வந்ததை வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள் .

ஆணும பெண்ணும் கதைத்தாலே அதுக்குத்தான் என நினைக்கும் ஒரு கலாச்சாரத்தில் இருந்து வந்துவிட்டோம்  அப்படிதான் நினைக்க சொல்லும் .

ஆனால் பலர் இப்போ அந்த நிலையில் இல்லை என நினைக்கின்றேன் .கரீபியன் தீவுகள் ,அமெரிக்கா ,இந்தியா என்று எமது பெண்பிள்ளைகளே தனிய படிக்க போய்விடுகின்றார்கள் ,இப்படி எல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கமுடியாது .

 

இங்கிருந்தும்... பலர் படிக்க, கிழக்கு ஐரோப்பாவிற்க்கு செல்கிறார்கள்.

அதில்... பொத்தி வளர்த்த பிள்ளைகள்... வாழ்க்கையை, தொலைத்தது, அதிகம் அர்ஜூன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விசுகு அண்ணா நினைத்ததில் தவறில்லை. பெற்றோர் அந்தவயதில் பிள்ளைகளாக மாறவே முடியாது. :D

 

 

 

உண்மைதான்

ஆனால் சில விடயங்களில் மாறவும் கூடாது அல்லவா?புலம் பெயர் தேசத்தில் பிள்ளை  வளர்ப்பு என்பது சூறாவளிக்குள் பட்டம் விடுவதற்கு சமன்.

 

நன்றி  தங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பல வேளைகளில், தேவையில்லாமல், சுமைகளை நாங்களே எம்மீது ஏற்றிக் கொள்கிறோம்!

 

சிவன் கூட முருகனிடம் தான் பாடம் கற்றான்!

 

வெட்கப் படத் தேவையில்லை! பெருமைப் படுங்கள்! :D

 

 

உண்மை

ஆனால் வெட்கப்படவில்லை

வெட்கப்பட்டால் இங்கு கொண்டுவந்து கொட்டுவோமா???

என்னையும் கழுவி

சமூகத்தையும் முடிந்தால்..........???

 

நன்றி  கருத்துக்கும் நேரத்திற்கும்

விசுகு அண்ணா,

 

தலைமுறை இடைவெளிகள் புரிந்து கொள்ளும் விடயங்களில் கண்டிப்பாக வித்தியாசத்தினை ஏற்படுத்தும். நீங்கள் வளர்ந்து, வாழ்ந்த சூழ்நிலைகளுக்கும் இன்று இருக்கும் சூழ்நிலைக்கும் இடையேயான வேறுபாடு கூட புரிந்துணர்வுகளில் மாறுபாட்டைக் தந்து இருக்கும். இதே மகன் ஊரில் உங்களுடன் வளர்ந்து இருந்தால் அவரை புரிந்து கொள்வது இன்னும் கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கும்.

 

இதை வெளிப்படையாக நீங்கள் எழுத முற்படும் போதே அவரை புரிந்து கொள்ள அதிகம் முயற்சி எடுக்கின்றீர்கள் என்பது தெரிகின்றது. தந்தையிடம் புரிந்துணர்வை பெறும் எல்லாக் குழந்தைகளும், பிள்ளைகளை புரிந்து கொள்ள முயலும் தந்தையர்களை பெறும் எல்லாப் பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள் தான். உங்கள் மகனும் கொடுத்து வைத்தவர் தான்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதை வெளிப்படையா எழுதுவதற்கே பெரிய மனசு வேணும் அண்ணா

 

 

 

நன்றி  சுண்டல்

என்னமோ தெரியவில்லை

உங்களை  எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனது மக்களில் ஒருவராகத்தான் தற்பொழுது நினைக்கின்றேன்.

தற்பொழுது  இதை உங்களிடம் சொன்னது போல் அவனை இப்படி நான் நினைத்தேன் என்பதை

ஒரு நாள் என் பிள்ளையிடமும் இதை அப்படியே  சொல்லுவேன்

 

(பல விடயங்களில் சாதாரணமானவன் என நான் நினைத்திருக்க அதையெல்லாம் தாண்டி இருக்கும் உங்கள்  எழுத்தும்  கருத்துக்களும் தேசப்பற்றும்.

 

உங்கள் வயதில் இது பெரும் கொடை எமது இனத்துக்கு.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் விசுகு ஐயாவின் சொந்த முகம் <_<

 

பிள்ளைகள் வளர்ந்து பக்குவமாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தைப் பிள்ளைகளாகவே தெரிவார்கள்.  அதனால்தான் அவர்களை தொடர்ந்தும் வழிநடத்தவேண்டும் என்று விரும்புகின்றார்கள் போலும்..

 

 

 

நான் தான் முகத்தை நன்றாக கழுவ  முயல்கின்றேனே

அதற்கு பின்னரும் இந்த குத்து அவசியமா ராசா???

 

நன்றி  கருத்துக்கும் நேரத்திற்கும்.

உண்மை கிருபன் அண்ணா ..............வயதில் ,அனுபவத்தில் சிறியவனாய் இருந்தாலும் .......என்னுள்ளும் அதே எண்ணமே உள்ளது ..............ஏனனில் என்னை எனது தந்தை தாய் வளர்த்த பின்னோட்டத்தை என்னால் மறக்க முடியாமலுள்ளது ........அன்று அவர்கள் அப்படி வளர்த்ததால் நான் இன்று சாதாரண மனிதன் என்னும் வரம்புக்குள் வாழ முடிகிறது .............ஆனால் இந்த புலம்பெயர் வாழ் வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சவால் நிறைந்த பகுதியில் ,இடத்தில் ,இரண்டு கலாச்சாரங்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமியில் ................ சொல்ல வார்த்தைகள் வரவில்லை ...ஆனாலும் முயற்சிப்போம் .........ஒருவர் அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்வோம் .அந்த வகையில் வி அண்ணாவுக்கு நன்றிகள் ...................கடினமான ,ஆனால் உண்மைகள் நிறைந்த பாதையூடு பயணிக்க முயற்சிப்போம் ..

 

 

 

நன்றி  தமிழ் சூரியன்

 

இதை எழுதுவதற்கு  காரணம் உங்களது அடுத்த கட்டத்துக்குத்தான்.

அதுவே வெற்றி  எனக்கு.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்திற்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதுதான் சிறீலங்காவில் அநேக பிள்ளை வளர்ப்பிற்கும்.. மேற்குலகில் உள்ள வளர்ப்பிற்கும் உள்ள வேறுபாடு.

 

 

மேற்கு நாடுகளில் நண்பி என்றால் நண்பி தான். அதுக்குள்ள வேறையை செருகிறதில்ல நாங்க. கேர்ள் பிரண்ட் என்றால் கேர்ள் பிரண்டு என்று சொல்லுவம். அதை மறைக்கனுன்னு அவசியம் இல்லை

 

. ஆனால் சிறீலங்காவில.. கேர்ள் பிரண்டை பிரண்டு.. என்று சொல்லி சமாளிச்சு.. அந்தப் பொய் பித்தலாட்டம்.. வளர்ந்தும் போறதில்ல. அதையே பிள்ளைகளிடமும் எதிர்பார்க்கிறது தப்பு. ஏன்னா.. இங்க சூழலும் வளர்ப்பு முறையும் வித்தியாசம்.

 

வீட்டில நீங்க உங்களுக்கு விரும்பிற வடிவில வளர்க்கிறதா நினைக்கலாம்..

ஆனால் உண்மையில் பிள்ளைகள் பள்ளியில் தான் அதிகம் சூழலுக்கு இசைவாக்கப்படுகின்றன.

 

இங்குள்ள பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள இடைவெளிதான் இந்த கருத்து வேற்றுமைக்குக் காரணம். நீங்களும் இங்க படிச்சிருந்தா... நிச்சயம் இப்படி நினைக்கமாட்டீங்க.. விசுகு அண்ணா.

 

 

இது உங்க தப்பும் இல்ல. உங்களை வளர்த்த சமூகம் சூழல் அப்படி..!  :lol: உண்மைச் சம்பவத்தை சுய தவறை உணர்ந்து தரும்.. நல்ல பகிர்வு..! இந்த மனநிலை எல்லோருக்கும் வராது..!

 

இது  நீங்கள் மற்றவர்களில் இருந்து மாற்றி யோசிக்க செய்வதை இனங்காட்டுகிறது.

இதுவே உங்களை பிள்ளைகளுக்கு குடும்பத்திற்கு நல்ல விடயமும் கூட..! :icon_idea::)

 

 

இதை பதிய  முன்னர் கொஞ்சம்  யோசித்தேன்.

அப்புறம் தம்பிமாருக்கு நான் ஏன் பதிகின்றேன் என்பது தெரியும்.  அதனால்  மனதில் பட்டதை அப்படியே  பதிந்து விட்டேன்.  ஒரு வரீயைக்கூட மாற்ற  முயற்சிக்கவில்லை.

 

உங்கள் கருத்து எனக்கு ஒத்தடம் தருகிறது.

 

எனது பிள்ளைகளுடன் நான் நண்பனாக பழகுபவன்  என்ற பெயர் எனக்கு இங்கு உண்டு.

அதை ஆதரிப்போரும் மறுப்போரும் இங்கு உண்டு.

ஆனால்  அவர்கள் வளர வளர அவர்களது பழக்க வழக்கங்களை பார்ப்பவர்கள்  முன்பு எதிர்த்தவர்கள் கூட தற்பொழுது இவரது வளர்ப்புத்தான் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

பிள்ளைகளது தற்பொழுதைய நிலையால் மேலும் மேலும்  அவர்களுடன் நண்பனாக பழகணும் என்ற எனது நிலை ஊக்கப்படுத்தப்படுகிறது.

அதையே  தங்கள் போன்ற அடத்த தலைமுறை சொற்களும் சொல்லி  நிற்கின்றன.

 

குடும்ப வாழ்விலும் வெல்வேன் என்ற சொல் காதுவரை ஒலிக்கிறது.

நன்றி  ஐயா கருத்துக்கும் நேரத்திற்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மேற்கு நாடுகளில் நண்பி என்றால் நண்பி தான்.

 

 

ஆனால் எனது ஆயுளுக்குள் இதை புரிந்து கொள்வேனா??

சந்தேகம் தான்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிள்ளைகளது உணர்வுகளை மதிப்பதற்கான, ஒரு நல்ல விடையத்தை தான்கள் பதிவு செய்திருக்கிறேர்கள். .

 

 

ம்ம்ம்

எனது மனதில் ஒரு நெருடல் உண்டு

ஆகக்கூடுதலாக போனால் நான் இந்த வயதில் அனுபவித்தவைகளையாவது எனது மக்கள் அனுபவிக்க அனுமதிப்பேனா  என்பது.

 

நன்றி  தங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ஒன்று.அது சரி அன்று மழை இல்லாவிட்டால் இறக்கி விட்டு போய் இருப்பிங்கள் தானே .மற்றது நீங்கள் நினைத்த அப்படி இருக்குமோ என்ற அப்படிஎன்பது அப்பனை மட்டும் அல்ல நாரையும் காக்க வைத்து விட்டு முடிக்க ஏலாதப்பா. (சிரிப்புக்குறி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் வாழ்ந்த சூழல், பார்த்த திரைப்படங்கள் உங்களை அப்படி எண்ண வைத்தாலும், உங்கள் மனகட்டுபாடோடு உங்கள் மகனிடம் அது குறித்து கேள்வி கேட்காதாது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.

 

அதே வேளை இதே புலம்பெயர் நாட்டில் பாலுறவு வைத்தல், போதைக்கு அடிமையாதல் தப்பில்லை என்ற உணர்வில், நண்பிகளுடன் உடலுறவு கொள்ளும், போதைவஸ்து உட்கொள்ளும்  பிள்ளைகளும் உண்டு என்பதும் மறுபதற்கு இல்லை.  

 

வெளிப்படையான உங்கள் அனுபவத்துக்கு பாராட்டுகள் விசுகு அண்ணா .

 

 

புலம் பெயர் தேசத்தில் இந்த பயம் இருக்கத்தான் செய்கிறது.

தாயகத்தைவிட இங்கு சுதந்திரமும் அதிகம்

பாதுகாப்பு  மற்றும் உறவினர் கண்காணிப்பும் குறைவு.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவ பகிர்வை தந்த விசுகுக்கு நன்றிகள்.இன்றைய காலகட்டத்தில் புலத்திலும் சரி தாயகத்திலும் சரி நல்லதொரு பிரஜயை உருவாக்குவது என்பது பெற்றோரின் கையில் தங்கியுள்ளது....

 

 

 

அதிலும் எனக்கு இரட்டிப்பு கடமை புத்தர்

அதிலும் நாம் வெல்லணும்

இல்லாது விட்டால் எதை வென்றும் பலனில்லாது போய் விடும்.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

இத்தகைய பிணைப்பு அவர்களை நல் வழியில் இட்டுச் செல்லும்.

 

 

 

நன்றி  பாட்டி

உங்களது எழுத்து என்னை  மேலும்மேலும ஊக்கப்படுத்தும்.

இதை ஒரு வாழ்த்தாகவே  எடுத்துக்கொள்கின்றேன்.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

வணக்கம் விசுகர்! நீங்களும் ஒரு சாதாரண தகப்பன் தான். ஒழுங்கான பெற்றோருக்கு இருக்க வேண்டிய உணர்வுகள்.

 

 

 

நன்றி  அண்ணா

உங்களுக்கு தெரியாததா?

ஒரு சாதாரண  தகப்பன்

அதனால் தான் தலைப்பை புலம் பெயர் அப்பன் என்று வைத்தேன்.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய இளையோர்கள் பரந்து தூர நோக்கோடு சிந்திக்கிறார்கள்(பலர்).
 
பெற்றோர் தமது பிள்ளைகள் தவறான வழியில் போகக்கூடாது என்பதில் கவனமாக இருத்தல் தவறில்லை. உங்கள் மகன் உங்கள் நிலையில் (பெற்றோர்) எனும் நிலை வரும்  போது  நீங்கள் நினைத்தது போல் நினைக்க மாட்டார் என்று சொல்ல முடியாது.
 
 
என்னுடன் வேலை செய்யும் வெள்ளை தாய் பாடசாலை விடுமுறையில் அடிக்கடி வீட்டுக்கு போன் செய்வார்.எல்லாம் ஓகேயா என நான் கேட்க அவர் தன்னுடைய ரீன் ஏஜ் பெண் என்ன செய்கிறார் என அடிக்கடி செக் பண்ணுவதாக கூறுனார்.  அப்படி என்ன செய்யப்போகிறார்கள் என்று நான் கேட்க தான் கல்லூரி நாட்களில் செய்த கூத்துக்களை தனது பிள்ளையும் செய்து விடுமோ என படபடப்புடனும், வெட்கத்துடனும் கூறினார். விசுகு அண்ணாவின்  சந்தேகத்துக்கான காரணம் இப்போ விளங்குகிறது.  :)  :)

 

 

அப்படியே தடவிப்போட்டு குட்டியுள்ளீர்கள்.

 

நான் என்னை  பல தடவை  நொந்துள்ளேன்

அதிலும் பெண் பிள்ளைகள் சம்பந்தமாக மிகவும்  வருந்துவதுண்டு.

இவனாவது ஆண்

இதையே  என்  பெண் பிள்ளை  செய்திருந்தால்..........???

நான் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவளை  எவ்வளவு குத்தும் காயப்படுத்தும் என்று நினைத்தால் நாக்கை பிடிங்கிக்கொண்டு சாகலாம்  ராசா.

 

(சில பெற்றோர் நினைக்கின்றார்கள் தாங்கள் புத்திசாலித்தனமாக பெண் பிள்ளைகளின் நடவடிக்கைகள் பற்றி  கேள்வி கேட்கின்றோம்.  அவர்களுக்கு அது புரியாது என்று. நான் எனது மக்களுடன் நிறைய ஒன்றிப்பேசுவதால் இது போன்ற  பெற்றோர் பற்றி  அவர்களுக்கு எல்லாமே தெரியும் என்பதை அறிய  முடிகிறது.  நீங்கள் குறிப்பிடும் பெண்ணும் தொலைபேசி  எடுப்பதன் நோக்கத்தை அவரது மகள் அறிந்திருப்பார்.  நிச்சயம் அது அவர்களிடையே  இடைவெளியையும் மறைப்புநிலையையும் தான் கொண்டு வரும்.)

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

எல்லா தமிழ் தந்தைகளிலும்... உள்ள சந்தேகம், விசுகுக்கும்... ஏற்பட்டதில் வியப்பில்லை.

எப்படிக் கட்டுப்பாடாக... வளர்த்தாலும், குறிப்பிட்ட வயது தாண்டு மட்டும் தாயோ... தகப்பனோ... மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேணும்.

 

 

ம்ம்ம்

பிள்ளை  வளர்ப்பு சம்பந்தமாக எங்களிருவரது சிந்தனையிலும் மாற்றங்களை நான் காண்பதில்லை.

அதையே இங்கும் காண்கின்றேன். மடியில் நெருப்பை கட்டியவனுக்குத்தான் தெரியும் சிறி அதன் கொதிப்பு. இதுவும் கடந்து போகும்.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

விசுகருக்கு... பயங்கர உள்குத்து விழுந்திருக்கு. :D  :lol:  :icon_idea:

 

 

 

ம்ம்ம்

நாமே குத்துவாங்கி  இங்க வந்து மூச்சுவிடுவம் என்று வந்தா.....

இங்கையும்.............???

 

சரி

சரி

இதென்ன  முதல் முறையா சிறி சுணைப்பதற்கு................. :D

விறுவிறுப்பாய் சென்றது கதை.

 

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

இதை கதை எண்டு சொல்லேலாது . தாய்தகப்பன் பிள்ளையளிலை ஒரு கண் வைக்கத்தான் வேணும் . அது பிள்ளையளுக்கு தெரியாமல் இருக்கவேணும் . இல்லாட்டில் எப்பவுமே ஒரு இடைவெளி இருக்கும் .

 

 

 

கண்டுக்காமல்  இருந்தது  பல தரம்

ஆனால் நாமே காவலுக்கு இருக்கும்போது மனதில் எழும் கேள்விகள் எல்லோருக்கும் வரக்கூடும்.

தற்காகவே  பதிந்தேன்.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

அந்த நேரம் உங்கள் மனதில் வந்ததை வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள் .

ஆணும பெண்ணும் கதைத்தாலே அதுக்குத்தான் என நினைக்கும் ஒரு கலாச்சாரத்தில் இருந்து வந்துவிட்டோம்  அப்படிதான் நினைக்க சொல்லும் .

ஆனால் பலர் இப்போ அந்த நிலையில் இல்லை என நினைக்கின்றேன் .கரீபியன் தீவுகள் ,அமெரிக்கா ,இந்தியா என்று எமது பெண்பிள்ளைகளே தனிய படிக்க போய்விடுகின்றார்கள் ,இப்படி எல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கமுடியாது .

 

 

உங்கள் கருத்து என்னை குத்தும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் வயசும் அனுபவமும் என்னோடு சேர்ந்து பயணிக்கிறது.

 

பிரான்சில் ஒரே பாலார் திருமணம் செய்யலாம் என்ற சட்டம் வரவிருக்கிறது.

அதன் பின் பிள்ளைகளை கட்டுப்படுத்தி வளர்த்துவிட்டு அதே பாலாரோடு பழக விடுவதும் ஆபத்தாக முடியும் போலுள்ளதை தற்பொழுதே என் மனம் சொல்லத்தொடங்கிவிட்டது.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

விசுகு அண்ணா,

 

தலைமுறை இடைவெளிகள் புரிந்து கொள்ளும் விடயங்களில் கண்டிப்பாக வித்தியாசத்தினை ஏற்படுத்தும்.

நீங்கள் வளர்ந்து, வாழ்ந்த சூழ்நிலைகளுக்கும் இன்று இருக்கும் சூழ்நிலைக்கும் இடையேயான வேறுபாடு கூட புரிந்துணர்வுகளில் மாறுபாட்டைக் தந்து இருக்கும்.

இதே மகன் ஊரில் உங்களுடன் வளர்ந்து இருந்தால் அவரை புரிந்து கொள்வது இன்னும் கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கும்.

 

 

இதை வெளிப்படையாக நீங்கள் எழுத முற்படும் போதே அவரை புரிந்து கொள்ள அதிகம் முயற்சி எடுக்கின்றீர்கள் என்பது தெரிகின்றது.

தந்தையிடம் புரிந்துணர்வை பெறும் எல்லாக் குழந்தைகளும், பிள்ளைகளை புரிந்து கொள்ள முயலும் தந்தையர்களை பெறும் எல்லாப் பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள் தான். உங்கள் மகனும் கொடுத்து வைத்தவர் தான்.

 

 

நன்றி ஐயா

எனது குடும்பத்தை சந்தித்தவர் என்ற ரீதியில் இது பெரும் வாழ்த்து எனக்கு.

அப்படி ஒரு தகப்பனாக நானும்

அப்படி ஒரு பிள்ளையாக அவர்களும் இருக்கணும் என்பதே எனது ஆசை.

நிச்சயம் அதை தொடர்ந்து செய்வேன்.

அதற்காக என்னை சுத்தம் செய்தலே இத்திரியின் நோக்கம்.

 

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

நல்ல பதிவு ஒன்று.அது சரி அன்று மழை இல்லாவிட்டால் இறக்கி விட்டு போய் இருப்பிங்கள் தானே .மற்றது நீங்கள் நினைத்த அப்படி இருக்குமோ என்ற அப்படிஎன்பது அப்பனை மட்டும் அல்ல நாரையும் காக்க வைத்து விட்டு முடிக்க ஏலாதப்பா. (சிரிப்புக்குறி)

 

 

 

நான் நநிற்காது போயிருந்தால்

எனது மனம் வேறு விடயங்களில் திரும்பியிருக்கும்

இதை பெரிது படுத்தியிருக்காது  இந்தளவுக்கு.

இல்லையா சயீவன்???

 

அடுத்த கேள்விக்கு

அவனுக்கு எனது அல்லது உங்களது வயசு இல்லை.............. :D

  • கருத்துக்கள உறவுகள்
சிக்கலான கேள்வி, ஆனால் இந்த நொடி வரை முயற்சி செய்கிறேன் என்று தான் சொல்லுவேன்.

ஆனால் வெளிநாடு போக வேண்டும் என்று தீர்மானித்தது நான் அல்ல, நான் வரவேண்டிய காரணமும் அவர்களுக்கு தெரியும். நீ இங்கை இருப்பதை விட எங்கையாவது முதல் போ என்று சொல்லி அனுப்பியது அவர்கள் தான். காதல் என்ற ஒரு விடையத்தை தவிர்த்து வேறு எதிலும் நான் அவர்கள் அவநம்பிக்கை கொள்ளும்படி நடக்கவில்லை. 

 

இன்னொருத்திக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் என் வீட்டார் என் மீது வைத்த  நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் நான் செய்தது பிழையாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் என்னை நானே திருப்திபட்டுக்கொள்ளவும் முடிகிறது அக்கா. :(

 

ஜீவா.. அதே.. அதே.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நானெண்டால்.. நமக்குத்தான் வாய்க்கேல்லை.. :D பெடியாவது சந்தோசமா இருக்கட்டுமே எண்டு நினைச்சிருப்பன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
நானெண்டால்.. நமக்குத்தான் வாய்க்கேல்லை.. :D பெடியாவது சந்தோசமா இருக்கட்டுமே எண்டு நினைச்சிருப்பன்.. :D

 

இசையின் மனசை போல யாருக்கு வரும்???  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானெண்டால்.. நமக்குத்தான் வாய்க்கேல்லை.. :D பெடியாவது சந்தோசமா இருக்கட்டுமே எண்டு நினைச்சிருப்பன்.. :D

 

ஆனால் நீங்கள் நினைக்க முடியாதே.. :rolleyes:

 

அழகு தேவதைய பெத்துபோட்டு இப்படி எல்லாம் நினைக்க கூடாது மாம்ஸ்.. :lol:

ஜீவா.. அதே.. அதே.. :unsure:

 

அப்படி என்றால் மாம்ஸும் இப்படி ஒரு சிச்சுவேஷன்ல இருந்திருக்கிறிங்கள் போல ... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நானெண்டால்.. நமக்குத்தான் வாய்க்கேல்லை.. :Dபெடியாவது சந்தோசமா இருக்கட்டுமே எண்டு நினைச்சிருப்பன்.. :D

 

 

 

என்னுடைய காலத்தில் இதை பரீசிலிக்கும் அளவுக்கு வந்துள்ளேன்.

உங்களது காலத்தில் இதை அனுமதிக்கும் அளவுக்கு வருவீர்கள் என்பது உண்மை.

ஆனால்  அடுத்து ஒரு கேள்வி  இருக்கே...

கீழே ஜீவா  கேட்டுள்ளது

அதற்கு எத்தனை பரம்பரை  இன்னும் போகணும்.................???

 

(அதை நினைத்துத்தான் நான் சிலவற்றிற்கு எனது பெடியளுக்கு  கட்டைப்போட்டுள்ளேன்.

அதை  பார்த்து இன்னொன்று வீட்டில் கண்ணை  கசக்குவதை காணப்பொறுக்குதில்லை.)

 

நான் அந்த வலைக்குள் இருப்பதால்.................

எல்லாவற்றையும் நடைமுறையில் சந்திக்கின்றேன்.

இதற்காக நாம் கனக்க பேசணும்.

பேசலாம்.

இப்படியான சிந்தனை எழுந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தான் இப்போ எமது சமூகம் நகருகின்றது ,என் போன்ற பலர்  கூட இருபது வயதுகளில்  நாட்டை விட்டு வெளிக்கிட்டு தனியாத்தான் வெளிநாடுகளில் வாழ்கையை வாழ்ந்தோம் .ஊரில் இருந்த பெற்றோர் இப்படியான சிந்தனைகளில் இருந்தார்களா என எனக்கு தெரியவில்லை .பெண் நண்பிகளை வைத்திருந்த பல நண்பர்கள் இருந்தார்கள் ,அவர்களுக்கான உறவு பற்றி கூட நாம் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை .

எனது அக்காவின் மகள் ரொறோண்டோவில் மருத்துவம் கிடைக்கவில்லை என்று நியு ஜெர்சியில் கொலம்பிய யுனிவேர்சிடியில் அனுமதி எடுத்து வீடும் தானே எடுத்து காரை வாடகைக்கு எடுத்து தானே அங்கு போய்விட்டார்.இப்போ படிப்பு முடித்து அங்கே வேலை வேறு எடுத்துவிட்டார்.இது ஒரு உதாரணம் ,நேற்று எனது மகன் (பதினோராம் வகுப்பு )இரவு சாப்பாடு சாப்பிட வெளியில் போனார் ,காரில் வந்து ஏற்றியது ஒரு பிலிப்பைன் பெண்நண்பி.சும்மா கன்னா பின்னா என்று கற்பனையெல்லாம் பண்ணிக்கொண்டிருக்க முடியாது .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என் போன்ற பலர்  கூட இருபது வயதுகளில்  நாட்டை விட்டு வெளிக்கிட்டு தனியாத்தான் வெளிநாடுகளில் வாழ்கையை வாழ்ந்தோம் .

 

 

 

எனது பெரிய பொடி

யூனி  நாலாவது வருடமாதலால்  குரூப்பாக படித்தல் அது இது என்று கொஞ்சம் லேற்றாக வீட்டுக்கு வருவான்.

 

தாய் ஒரு நாள் என்னிடம்  சொல்லி  கவலைப்பட்டார்.

அப்பா கொஞ்சம் கவனியுங்கோ.

காலம் கெட்டுக்கிடக்கு என்று.

 

நான் சொன்ன பதில்

நானும் இந்த வயதில் தனியாகத்தானே இங்கு வந்தேன்.

ரூமில் பத்துக்கும் மேற்பட்டோர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள்.

நான் என்ன  கெட்டா போனேன்?

 

இலக்கு

கடமை

எமது எதிர்காலத்திட்டங்கள் என வந்திருக்கும் வயது.

 

அத்துடன் நாலாவது வருடம் பொறியியல் படிப்பு

இதற்கு மேலும் நாம் அவனுக்கு ஏதாவது சொல்லணுமா?

அவனுக்கு தெரியும்  என்றேன்

தாயின் கவலையை  அப்படியே  அவனிடமும் சொன்னேன்

நான் உங்கள் பிள்ளையம்மா என்று தாயிடம் சொன்னானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கின்றேன். எந்தவொரு பொறுப்புள்ள தகப்பனும் இந்த உளவியலில்தான் இருப்பார் என எண்ணுகின்றேன். வெளிநாடுகளில் நண்பன் அல்லது நண்பி என்ற உறவுக்கு வரவிலக்கணம் இல்லை. அது ஒரு சாதாரண நட்பாகவோ அல்லது உடலுறவு வரை செல்லும் நட்பாகவோ இருக்கக்கூடும்.

 

 ஒர் இந்தியன் ஒரு பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும், ஒர் ஈழத்தமிழன் ஒரு பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. இந்தியனுக்கும் பிரெஞ்சுக்காரிக்கும் அவர்கள் தத்தமது விழுமியங்களைக் கைவிட்டு மாற்றுப் பாதையில் பயணித்தாலும், அவர்களது விழுமியங்களையும் பண்பாடுகளையும் காப்பாறிக்கொள்ளுமளவுக்கு அவர்களுக்கு ஒரு தாயகம் உண்டு.

 

நாங்கள் உலகளவில் பரந்துபட்டு சிதறிவாழும் இனம். ஆனாலும் எமக்கு என்று ஒரு பண்பாடு விழுமியங்கள் என சிலவுண்டு. எங்களுடைய தாயகம் நிலைபெற்று எழுச்சியடைந்து இருக்குமாயின் அங்கேயாவது இவை பாதுகாக்கப்படும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கமுடியும். ஆனால் இப்போது நம்பிக்கையற்ற ஒரு நிலையில் எமது பண்பாட்டையும் விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். எனவே உங்கள் பிள்ளையிடம் நீங்கள் எதிர்பார்த்தது தப்பில்லை என்பது எனது திண்ணமான கருத்து.

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

 இப்படியும் சொல்லுறீங்க விசுகு அண்ண...அப்ப ஏன் முன்னரே சீ அப்படி இருக்காது,இப்படி இருக்காது என்று ஒரு புரிந்துணர்வு அற்ற முறையில் யோசித்தீர்கள்..உண்மையாக சொல்கிறன் இப்படியான குட்டீஸ் பாவங்கள்.
 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கின்றேன். எந்தவொரு பொறுப்புள்ள தகப்பனும் இந்த உளவியலில்தான் இருப்பார் என எண்ணுகின்றேன். வெளிநாடுகளில் நண்பன் அல்லது நண்பி என்ற உறவுக்கு வரவிலக்கணம் இல்லை. அது ஒரு சாதாரண நட்பாகவோ அல்லது உடலுறவு வரை செல்லும் நட்பாகவோ இருக்கக்கூடும்.

 

 ஒர் இந்தியன் ஒரு பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும், ஒர் ஈழத்தமிழன் ஒரு பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. இந்தியனுக்கும் பிரெஞ்சுக்காரிக்கும் அவர்கள் தத்தமது விழுமியங்களைக் கைவிட்டு மாற்றுப் பாதையில் பயணித்தாலும், அவர்களது விழுமியங்களையும் பண்பாடுகளையும் காப்பாறிக்கொள்ளுமளவுக்கு அவர்களுக்கு ஒரு தாயகம் உண்டு.

 

நாங்கள் உலகளவில் பரந்துபட்டு சிதறிவாழும் இனம். ஆனாலும் எமக்கு என்று ஒரு பண்பாடு விழுமியங்கள் என சிலவுண்டு. எங்களுடைய தாயகம் நிலைபெற்று எழுச்சியடைந்து இருக்குமாயின் அங்கேயாவது இவை பாதுகாக்கப்படும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கமுடியும். ஆனால் இப்போது நம்பிக்கையற்ற ஒரு நிலையில் எமது பண்பாட்டையும் விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். எனவே உங்கள் பிள்ளையிடம் நீங்கள் எதிர்பார்த்தது தப்பில்லை என்பது எனது திண்ணமான கருத்து.

 

 

 

நன்றி  சேரன்

புலத்தில் பிள்ளை  வளர்ப்பு என்பது மிகவும் கடினமானது.

கரணம் தப்பினால் மரணம்தான்.

சூறாவளியில் பட்டம் விடுவது என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டேன்.

காரணம் அவர்கள் பக்கம் காற்று அதிகம்.

கொஞ்சம் அயர்ந்தாலும்  எம்மை தமது வழிக்கு இழுத்துவிடுவார்கள்.

அல்லது கயிற்றை அறுத்துவிடுவார்கள்.

அவர்கள் எமது பாசத்தால் கொஞ்சம் அயர்ந்தாலும் நண்பர்கள் முழுங்கிவிடுவார்கள்.

 

ஆனால் எங்கும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

உனக்கு வேண்டியதை  நல்லதாக பொறுக்கு என்றே  எனது மக்களுக்கு சொல்வேன்.

இது வரை நான் தப்பி  வந்துவிட்டேன் என்று தான் சொல்லணும்.

 

சிறு சிறு குளப்படிகளை கண்டும் காணாமல் இருப்பதுமுண்டு.

இப்படி எல்லாம் இருந்தும் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருக்கின்றேனே என்று கலங்குவதுண்டு.

 

(நன்றி  உங்கள் முள் வருகைக்கு. அதிகமாக காணமுடிகிறது)

 இப்படியும் சொல்லுறீங்க விசுகு அண்ண...அப்ப ஏன் முன்னரே சீ அப்படி இருக்காது,இப்படி இருக்காது என்று ஒரு புரிந்துணர்வு அற்ற முறையில் யோசித்தீர்கள்..உண்மையாக சொல்கிறன் இப்படியான குட்டீஸ் பாவங்கள்.

 

 

 

 

ஐயோ பிள்ளை

கவனமாக வாசிக்கவேண்டும்

 

அது இரண்டாமவன் (18 வயசு)

இவன் மூத்தவன்.

நானெண்டால்.. நமக்குத்தான் வாய்க்கேல்லை.. :D பெடியாவது சந்தோசமா இருக்கட்டுமே எண்டு நினைச்சிருப்பன்.. :D

 

இதை வாசித்து விட்டு உருண்டு பிரண்டு, மல்லாக்க படுத்து பிறகு கவிண்டு கிடந்து சிரிச்சன்... :D :D :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.