Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'
 
சவுதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள திருகோணமலை பெண் ரிசானா நஃபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவுதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டாக்டர் ஹிபாயா இஃப்திகர் கூறியுள்ளார்.

முன்னர் ரிசானாவுக்கு மரண தண்டனையை வழங்கிய சவுதி நீதிமன்றம், தற்போது அந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளதாக டாக்டர் ஹிபாயா இப்திகார் கூறியுள்ளார்.

இந்த மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அது எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.

டாக்டர். ஹிபாயா இஃதிகார்
 
அதேவேளை இறுதிக் கணம்வரை ரிசானாவின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கமும், ரிசானாவுக்காக செயற்படுபவர்களும் போராடிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக ரிசானாவுக்கு மரணதண்டனையை விதித்த சவுதி நீதிமன்றம், அவரால் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் சவுதி பெற்றோர் மன்னிப்பளித்தால் அவருக்கு விடுதலை வழங்கலாம் என்று கூறியிருந்தது.

ஆனால், அவர்கள் இதுவரை அப்படியான மன்னிப்பை வழங்காத காரணத்தால், தற்போது அது அந்த தண்டனையை உறுதி செய்துள்ளதாக டாக்டர் ஹிபாயா கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130106_rizanacase.shtml

  • Replies 71
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள் சிங்களத்தின் பொருளாதாரத்தைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்..! ஆகவே ரிசானாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு (அவர் தவறேதும் செய்யாத பட்சத்தில்) சிங்களத்துக்குத்தான் உண்டு.

ரிசானா தான் குழந்தையின் மரணத்துக்கு முக்கிய பொறுப்பு. அப்போது அவர் வயது 17. ஒரே ஒரு வயது தான் குறைவு Major ஆவதற்கு. ஒன்றில் அவர் வேண்டும் என்றே இந்த குற்றத்தை செய்து இருப்பார். அல்லது அவரது கவலையீனத்தால் குழந்தை இறந்து இருக்கலாம். ஆக எந்த விதத்தில் பார்த்தாலும் இவர் குற்றவாளிதான். இவருக்கு மரண தண்டனை சரியான தண்டனையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

அப்படியானால் ஒரு குழந்தைத் தொழிலாளியை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி அந்த வருமானத்தில் போரை நடத்தியிருக்கிறது சிங்களம்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்
ரிசானா தான் குழந்தையின் மரணத்துக்கு முக்கிய பொறுப்பு. அப்போது அவர் வயது 17. ஒரே ஒரு வயது தான் குறைவு Major ஆவதற்கு. ஒன்றில் அவர் வேண்டும் என்றே இந்த குற்றத்தை செய்து இருப்பார். அல்லது அவரது கவலையீனத்தால் குழந்தை இறந்து இருக்கலாம். ஆக எந்த விதத்தில் பார்த்தாலும் இவர் குற்றவாளிதான். இவருக்கு மரண தண்டனை சரியான தண்டனையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

படிக்கின்ற வயதில் பள்ளிக்கூடம் அனுப்பாமல் பிள்ளைபராமரிக்க அனுப்பிய அவரின் பெற்றோர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

குழந்தைப் பிள்ளையை வேலைக்கு அனுமதித்த சவூதிக் குடும்பத்திற்கும் அந்த நாட்டின் அரசிற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்?

வயதைக் குறைத்து வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

என்பதையும்  சொன்னால் நாங்களும் விளங்கிக் கொள்ளலாம் நிழலி

ஒரு உயிரைப் பறிப்பதற்கு இந்த உலகில் எவருக்கும் உரிமையில்லை

உண்மைதான்,

இவர்கள் அனைவரும்; முக்கியமாக ரிசானாவின் பெற்றோர்கள் தெரிந்தே வயதைக் குறைத்து passport எடுத்து அனுப்பி வைத்தவர்கள் என்று முன்னர் செய்திகளில் தெளிவாக வந்திருந்தது. அவர்களும் குற்றவாளிகள் தான். இதற்கு உடந்தையாக இருந்தது பயண முகவர் (Agency). இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இப்படி செய்து ஏராளமானனோர் மத்திய கிழக்குக்கு சென்று உழைக்கின்றனர்.

ஆனால் இவரது பெற்றோர்கள் உட்பட ஏனையோர் செய்த குற்றங்களை reverse பண்ண முடியும். பெரிய இழப்பு இல்லை.ஆனால் ரிசானா செய்த குற்றத்தை எவராலும் நிவர்த்தி செய்ய முடியாது. Irreversible crime. அந்தக் குழந்தையை மீண்டும் உயிர்பிக்க முடியாது. 18 வயதினை அடைந்த பெண் என நம்பி தம் குழந்தையினை ஒப்படைத்த அந்த அரபுக் குடும்பம் என்ன தவறு செய்தது?

ஒரு உயிரைப் பறிப்பதற்கு இந்த உலகில் எவருக்கும் உரிமை இல்லை என்றால் ரிசானாவுக்கு யார் அந்த உரிமையை வழங்கியது?

மீண்டும் சொல்கின்றேன், மரண தண்டனை இந்த குற்றத்துக்கு அதிக பட்ச தண்டனையாக இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக கடும் தண்டனை வழங்க வேண்டும். வயதைக் குறைத்து மகளை வெளிநாட்டுக்கு அனுப்பிய பெற்றோருக்கும் மகளுக்கு கொடுக்கும் தண்டனை கண்டிப்பாக உறைக்கவே செய்யும்.

நீங்கள் அந்த அரபுப் பெற்றோரின் இடத்தில் இருந்தால் மன்னித்து எந்த தண்டனையும் கொடுக்காமல் விடுதலை செய்யலாம் என்று சொல்வீர்களா? ...கண்டிப்பாக நான் அந்தக் குழந்தையின் தந்தை எனில் மாட்டேன்.

ரிசானா தெரிந்து குற்றம்  செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா 

என்பது ஒரு முக்கியமான விடயம்.  

என்னைப் பொறுத்தளவில் அவர் ஒரு குழந்தைத் தொழிலாளி.

குழந்தைகள் விடும் தவறை மன்னிப்பதே பெற்றோர்கள் செய்யும் சிறந்தவிடயம்.

ரிசானாவின் இறப்பினால் இறந்த குழந்தை திரும்பி  வருமா??

அல்லது செய்த குற்றத்திற்காக மரண தணடனை அளித்து விட்டால் 

இப்படியான தவறுகள் நிறுத்தப்படுமா??

இன்று ரிசானாவின் பெற்றோர்கள் போன்று நாளையும்  இன்னும் பல பெற்றோர்கள் 

தங்கள் பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளியாக்கத் தயாராக இருக்கின்றார்கள்.

அவர்களை வெளிநாடு அனுப்புவதற்கு முகவர்கள் காத்திருக்கின்றார்கள் 

அவர்களை வேலைக்கு அனுமதிக்க சவூதிப் பெற்றோர்கள் காத்திருக்கின்றார்கள் 

ஆரம்பம் எங்கேயோ இருக்கின்றது . தவறுகள் நடைபெறுவது எங்கேயும் உண்டு.

ஆனால் தண்டனையால் மட்டும் தறுகளையும் குற்றங்களையும் கட்டுப்படுத்த முடியாது.

அதுவும் மரண தண்டனையால் நாங்கள் மேன்மேலும் குற்றங்களையே செய்துகொண்டிருக்கின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையின் தாய்தகப்பனுக்கும் ஏஜென்சிகாரனுக்கும் முதல்லை  தண்டனை குடுக்கோணும்........எய்தவன் இருக்க அம்பை ஒருநாளும் நோகக்கூடாது. 

மரனதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை( மதம் வேறையாக இருந்தாலும்) . மேற்கு நாடுகளில் ஏன் இந்த பெண் குழைந்தையை  கொலை செய்தார் என்று பார்த்து தான் தண்டனையும் கொடுக்கப்படும்.

என்னைப் பொறுத்தளவில் அவர் ஒரு குழந்தைத் தொழிலாளி.

குழந்தைகள் விடும் தவறை மன்னிப்பதே பெற்றோர்கள் செய்யும் சிறந்தவிடயம்.

ரிசானாவின் இறப்பினால் இறந்த குழந்தை திரும்பி  வருமா??

அல்லது செய்த குற்றத்திற்காக மரண தணடனை அளித்து விட்டால் 

இப்படியான தவறுகள் நிறுத்தப்படுமா??

நல்லது வாத்தியார்,

இதே மாதிரித்தான் 17 வயது 'சிறுவன்'  பாலியல் வல்லுறவை செய்து, குடலையும் உருவி காயம் ஏற்படுத்தி டெல்லியில் ஒரு பெண்ணை கொலை செய்தார்....பாவம் குழந்தை அவர்,,,Just one year less than to become Major!....மன்னிப்போம்...ஏனெனில் அந்தக் காமுகனும் ஒரு பச்சைக் குழந்தை.

ஒரு 17 வயது குழந்தை இன்னொரு குழந்தையைக் கொன்றது சட்டத்தின் படி குழந்தைக் குற்றம்: அதுவே 12 மாதம் கழிந்து செய்தால் தவறு என்ற நியாயம் உங்களனைவருக்கும் சரி என்றாலும் கண்டிப்பாக எனக்கு அது சரி அல்ல.

கண்டிப்பாக குற்றங்களுக்கான தண்டனை அளிக்கப்படல் வேண்டும். சட்டமும் தண்டனையும் குற்றங்களை முற்றாக நிறுத்தாது; ஆனால் கண்டிப்பாக குறைக்கும். குற்றங்களுக்கு தண்டனை தேவை இல்லை எனில் ஒரு நாட்டில் வெறுமனே தேவாலயங்களும் கோவில்களும் மட்டும் நிறுவினால் போதும். நீதி மன்றங்கள் தேவை இல்லை.

எனக்கு போலி மனித உரிமை முகம் தேவை இல்லை. ரிசான கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். அவர் செய்த குற்றம் Irreversible. அவர் குற்றம்  செய்யத் தூண்டிய சூழ்நிலைகள் பற்றிய ஆய்வுகள் இன்னொருவர் இதே குற்றத்தை செய்ய விடாது தடுக்க உதவுமே தவிர ரிசானாவின் குற்றத்தை நியாயப்படுத்த உதவாது.

ரிசானாவுக்கு கிடைக்கும் கடும் தண்டனையை கேட்க மிக ஆவலாக இருக்கின்றேன்.

மத்திய கிழக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள் சிங்களத்தின் பொருளாதாரத்தைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்..! ஆகவே ரிசானாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு (அவர் தவறேதும் செய்யாத பட்சத்தில்) சிங்களத்துக்குத்தான் உண்டு.

ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரங்களில் நீதித்துறையில் தலையீடு செய்வது முறையோ? :D  அது தகுமோ ?  :D

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி மன்னர் உடனடியாக தலையிட்டு இந்த மரணதண்டனையை நிறுத்தவேண்டும் நான் அன்று தொடக்கம் இன்று வரை கூறுவது இலங்கை தனது நாட்டு பெண்களை பணிப்பெண்களாக அனுப்பவதை நிறுத்தி அவர்களுக்கு இதரவழிகளில் வருமானம் கிடைக்க செய்யவேண்டும் அவர்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து தொழில் கல்வி சார்ந்த வேலைகளுக்கு வெளிநாட்டிற்கு அனுப்பலாம் இலங்கை போன்ற ஒரு நாடு இன்னும் பணிப்பெண்களை வீட்டு வேலைக்கு அணுப்புவது வெட்கக்கேடு .

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு வீடு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்கள் பலர் வீட்டு முதலாளிகளின் பாலியல் தேவைக்காகவும் பயன்படுத்த படுகின்றார்கள் இப்பிடி போன பல பெண்கள் இன்று நடுத்தெருவில் அவர்களுடைய குடும்பம் நடுத்தெருவில் ஒருமுறை இலங்கை ஜனாதிபதி அவர்கள் கூறினார் தான் இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக போகும் பெண்களை படிப்படியாக குறைக்க போவதாக அதனை உடனடியாக செயல்ப்படுத்த தொடங்க வேண்டும் பல்வேறு மட்டங்களில் நாட்டை அபிவிருத்தி செய்கின்ற போது தான் இது சாத்தியமாகும் பல தாதியர் பயிற்சி கல்லூரிகள் அமைத்து தாதியர்களை உருவாக்கி அவர்களை அனுப்பலாம் இப்பிடி பல இருக்கின்ற போது இலங்கை பெண்கள் தொடர்ந்தும் பணிப்பெண்களாக போய் அவமானப்பட வேண்டுமா?

மத்திய கிழக்கு நாட்டுக்காரன் இலங்கைக்கு இலவசமாக பேரிச்சம் பழம் கொடுத்து கொடுத்தே பெண்களை வீட்டு வேலைக்கு கூட்டிட்டு போறான் ஆகவே பேரிச்சம் பழத்தை நாட்டிலே உற்பத்தி செய்ய வேண்டும்

நிழலி,

இந்தப்பெண் கொலை செய்ததாக சவூதி காவல்துறை குற்றம் சாட்டியுள்ளதேயொழிய அது கொலை என நிரூபிக்கப்படவில்லை என்றல்லவா கூறப்படுகின்றது? குழந்தை பாலூட்டலின்போது மரணம் அடைந்துள்ளது. பிரேத பரிசோதனையும் - postmortempostmortem செய்யப்படவில்லயெனவும், ரிசானாவிடமிருந்து வாக்குமூலம் பலாத்காரமாக வாங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தப்பெண் கொலையே செய்தார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் வறுமை காரணமாக அந்த ஏழை பெண்ணின் வயதைக்குறைத்து வேலைக்கு அனுப்பிய பெற்றோர் இப்படி நடக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.அது போக புலம் பெயர்ந்த ஆரம்ப நாட்களில் பெற்றோரின் பிரிவு நாட்டின் பிரிவு என மிக மோசமான மன உளைச்சல் களுக்கு ஆளாகி பல துன்பப் பட்டவர்கள் நாம்.அந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல.வயதுக்கு மீறிய வேலைப்பளு.சுருங்கிப்போன இரவு.புரியாத மொழி.இத்தனையும் சேர்ந்து அந்த பெண்ணை குற்றவாளியாக்கி விட்டது.இத்தனை வருட சிறையே அப்பெண்ணுக்கு போதுமான தண்டனை.மரணதண்டனைக்கைதியாக தினம் தினம் செத்துப்பிழைக்கும் அப்பெண்ணை விடுதலை செய்தால் நன்றாக இருக்கும்.அவள் ஒரு சூழ்நிலை குற்றவாளி.

 அவள் ஒரு சூழ்நிலை குற்றவாளி -  - கோத்தபாய & ஓட்டுக்குழுக்களின் கைகளில் அகப்பட்ட எம்மவரை போல.

அவளுக்கு அவர்களின் மொழி கூடத்தெரியுமோ தெரியாது. சவுதியர்கள் காட்டுமிராண்டிகள். அல்லாவுக்குத்தான் வெளிச்சம் 

  • கருத்துக்கள உறவுகள்
ரிசானாவுக்காகப் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்
By General 
2013-01-08 10:32:19
 
இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அவருக்காக இலங்கை மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஐந்து நிமிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டு உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று ரிசானா நபீக்கின் விடுதலை தொடர்பாக சவூதியில் இருந்து பணியாற்றும் டாக்டர் ஹிபாயா இப்திகார் தெரிவித்தார்.
 
அவர் இலங்கையிலிருந்து ரிசானா நபீக்கின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் ஐக்கிய சகோதரத்துவ கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.ஜி. நஜீப் உடன் தொலைபேசி ஊடாக சவூதியிலிருந்து தொடர்புகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
 
சவூதி அரேபியா ஷரீஆ சட்டத்தை கண்டிப்பாக அமுல்நடத்தும் நாடு என்பதால் ரிசானா நபீக்கிற்கு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே விடுதலை கிடைக்கும்.
 
இதேவேளை இலங்கையில் போராட்டங்கள் நடத்துவதாலோ அறிக்கைகள் விடுவதாலோ பலன் கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.
 
ஷரீஆ சட்டத்தின் படி மன்னரினால் கூட மன்னிப்பு வழங்க முடியாது. எனவே எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை டாக்டர் ஹிபாயா, மூதூரிலுள்ள ரிசானா நபீக்கின் குடும்பத்தினரின் புகைப்படம் ஒன்றினை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
 
இந்தப் புகைப்படம் சிறையில் இருக்கும் ரிசானாவிடம் இறுதி நேரத்தில் காண்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மூதூரிலுள்ள ரிசானாவின் தாயாருடன் வீரகேசரி செய்திப்பிரிவு தொடர்புகொண்டு வினவியபோது ஒரு புகைப்படப்பிடிப்பாளர் தான் ஓர் ஊடகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி குடும்பத்தினரின் புகைப்படத்தை எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.
 
மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை இந்தச் செய்தி எழுதும் வரை ரிசானாவின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
 
இதேவேளை, டாக்டர் ஹிபாயா ரிசானாவின் தாயாரை தொடர்புகொண்டபோதும் இதுகுறித்துக் கூறாது, ரிசானா விரைவில் விடுதலையாவாள், விடுதலைக்காகப் பிரார்த்தியுங்கள் என்றே தெரிவித்துள்ளார்.
அவளுக்கு அவர்களின் மொழி கூடத்தெரியுமோ தெரியாது. சவுதியர்கள் காட்டுமிராண்டிகள். அல்லாவுக்குத்தான் வெளிச்சம் 

நிச்சயம் அவர் சார்பாய் நியாயத்தை எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. பணிப்பெண்கள் அடிமைபோல் நடாத்தப்படும் சவூதியில் ஓர் குழந்தை இறந்தபோது எவ்வளவு வேகமாக பணிப்பெண் மீது குற்றஞ்சாட்டி அவளை தண்டிப்பதற்கு எஞமானரும், காவல்துறையும் முயன்றிருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.

கனடா Lifesaving Societyஇல் நானும் ஓர் அங்கீகாரம் பெற்ற Standard First Aid With Cpr-C உறுப்பினர் எனும் வகையில் கூறுகின்றேன்; அவசர காலங்களில் முதலுதவி செய்வது என்பது நீண்டகால அனுபவம் உள்ளவர்களுக்கே மிகுந்த சவாலான ஓர் விடயம். குழந்தையிற்கு பாலூட்டலின்போது மரணம் ஏற்பட்டுள்ளது. இப்படியானதோர் தருணத்தில் தனியாக பணிப்பெண் குழந்தையைக் கவனித்தபோது எத்தகைய உளவியல் சவால்களை அவர் எதிர்கொண்டிருப்பார் என்றும் எண்ணிப்பார்க்கவேண்டும். மொழிப்பிரச்சனை தொடக்கம், அவரது தனிமைப்படுத்தல் வரை குழந்தையின் மரணத்தின்பின் எத்தகைய சூழ்நிலைகளிற்கு அவர் முகம் கொடுத்திருப்பார் என்றும் எண்ணிப்பார்க்கவேண்டும்.

தவிர, இறந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்படாமை எஞமானர், காவல்துறை ஆகியபகுதிகளில் சந்தேகத்தை வலுவூட்டுகின்றது. அதாவது, தமது ஓர் குழந்தை இறந்தால் அதற்கு நிகராக இன்னோர் உயிர் விழவேண்டும் அல்லது பறிக்கப்படவேண்டும் எனும் நோக்கில் எஞமானர் குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே பிடியாக உள்ளதுபோல் தெரிகின்றது. 

Rizana Nafeek executed:Unconfirmed reports

Rizana Nafeek, the Sri Lankan maid who was imprisoned at Saudi Arabia's Dawadami Prison since 2005, was executed today (Jan 9) according to unconfirmed reports.

President Mahinda Rajapaksa sent an appeal to King Abdullah on January 6, 2013, requesting a stay of the execution until a settlement could be reached between the baby’s family and a Saudi reconciliation committee.

Saudi Arabia’s Interior Ministry under Prince Mohammed bin Nayef bin Abdul Aziz  issued instructions for Rizana Nafeek’s execution, Human Rights Watch (HRW) reported today.

HRW however said that under the system of qisas (retaliation) that governs murder cases in Saudi Arabia, thebaby’s parents may still grant Nafeek a pardon or seek blood money in compensation.

Nafeek had been working in Saudi Arabia for two weeks in 2005 when the ‘Utaibi family’s 4-month-old baby died in her care. Nafeek retracted a confession that she said was made under duress, and says that the baby died in a choking accident while drinking from a bottle. Authorities have incarcerated Nafeek in Dawadmi prison since 2005.

http://www.sundaytimes.lk/index.php?option=com_content&view=article&id=28775:rizana-executed&catid=1:latest-news&Itemid=547

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றல்

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்க்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56542-2013-01-09-10-00-58.html

சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக மூதூரை சேர்ந்த ரிசானா நபீக், அங்கு தான் புரிந்த வீட்டு உரிமையாளரின் நான்கு மாத குழந்தையினை கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நீண்ட காலமாக அந்நாட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தையை கொலை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அந்நாட்டு நீதிமன்றம் ரிசானாவிற்கு மரண தண்டனை தீர்ப்பு விதித்திருந்தது.

இந்த தீர்ப்பினை மீள் பரீசிலினை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைப்புகளும் சவூதி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாய்கிழியக் கத்தும் முஸ்லிம் கட்சிகள் இந்த விவகாரத்தில் என்ன செய்தவை?

  • கருத்துக்கள உறவுகள்
2ஆம் இணைப்பு:- ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
09 ஜனவரி 2013
 
சவூதி அர்ரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
 
இந்தத் தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
 
நான்கு மாத சிசுவொன்றை கொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
கடந்த 2005ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா இரண்டு வாரங்களில் சிசுவொன்றை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
 
கடவுச் சீட்டில் வயதை மாற்றி ரிசானா சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரிசானாவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் திருகோணமலையில் உள்ள அவரது உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் போன்ற பல்வேறு தரப்பினரும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
ரிசானாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் இளவரசர் நயீப் பின் அப்துல் அசீஸ் இன்று உத்தரவிட்டார்.
 
இதன் அடிப்படையில் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
ரிசானாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவு
01:45
 
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப் பெண் ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக மனித உரிமை கண்காணப்பகம் அறிவித்துள்ளது.
 
எவ்வாறெனினும், ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்ககக் கூடிய சந்தர்ப்பம் பெற்றோருக்கு இன்னமும் காணப்படுகின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 
இஸ்லாமிய சட்டத்தின்படி நட்டஈட்டுத் தொகையை வழங்கி மன்னிப்புப் பெற்றுக்கொள்ள சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கை அதிகாரிகள், கொலையுண்ட சிசுவின் பெற்றோர் ஆகியோருடன் சவூதி அரேபிய உள்துறை அதிகாரகிள் பேச்சுவார்த்தை நடாத்தி மரண தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
 
2005ம் ஆண்டு நான்கு மாத சிசுவை கொலை செய்ததாக ரிசானா நாபீக்கிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2007ம் ஆண்டில் ரிசானாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, ரிசானாவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சவூதி அரேபிய மன்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு வருமானம் என்பது சிங்கள இனவாத அரசின் வாழ்வாதாரம்.

ஒரு மரண தண்டனைக்காக சிங்களம் ஒரு பேய்க்காட்டு கூத்து ஆடியது. மகிந்தாவோ இல்லை பீரிசோ ஒன்றும் செய்யவில்லை.

வழமை போல முஸ்லீம் கட்சிகள் தமது மக்களை ஏமாற்றின.

இலங்கையில் வாய்கிழியக் கத்தும் முஸ்லிம் கட்சிகள் இந்த விவகாரத்தில் என்ன செய்தவை?

முஸ்லிம் கட்சிகள் அதிகம் எதையும் பேசபோவதில்லை. ரிசான தொடர்பாக அவை இதற்கு முதலும் எதனையும் குறிப்பிடத்தக்க அளவு செய்யவும் இல்லை சொல்லவும் இல்லை.

இந்த தண்டனை ஷரியா சட்டத்தின் படி வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை பின்பற்றும் சவூதி போன்ற நாடுகளில் இது தான் சட்டம். முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் இந்த தீர்ப்பை, தண்டனையை எதிர்ப்பது என்பது ஷரியாவை எதிர்ப்பது போன்றது. ஷரியாவை எதிர்ப்பது என்பது இஸ்லாம் மார்க்கத்தினை எதிர்ப்பது போன்றது. முஸ்லிம் தனி நபர் கூட இதனை எதிர்க்கமாட்டார். ஆதரித்தால் மனித உரிமை எதிர்ப்பாளி என்று பெயர் கிடைக்கும். எதிர்த்தால் இஸ்லாம் எதிர்ப்பாளி என்று பெயர் கிடைக்கும். ஏன் வம்பு என்று அவர் தன் 5 ஆவது தொழுகைக்கு சரியான நேரத்துக்குச் சென்று விடுவார். மதம் முக்கியமப்பு.

என்னைப் போன்ற ஒரு சில வேலை வெட்டி இல்லாத தமிழர்கள் தான் இது பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ அடிக்கடி எழுதிக் கொண்டு இருப்பர். எந்த ஒரு முஸ்லிமும் இது பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

அல்லாஹு அக்பர்!

  • கருத்துக்கள உறவுகள்

ரிசானாவின் வீட்டில்...
rizana1.jpg
இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து மூதூரிலுள்ள ரிசானாவின் வீட்டின் நிலமைகளை படங்களில் காணலாம். (படங்கள்: முறாசில்)
rizana2.jpg
rizana4.jpg
rizana5.jpg
rizana7.jpg
rizana3.jpg
rizana6.jpg

http://tamil.dailymirror.lk/--main/56553-2013-01-09-12-13-27.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.