Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் யார்.... கலவிகளின் மன்னன்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

science.jpg

 

 

Up.. Down

குவாக்சுகளின் கலவையில்

குவா குவா என்றே

பிறந்திட்ட

இரட்டைப் பிறவிகள்

புரோத்தனும்.. நியூற்றனும்..!

அண்டை அயலில்

அலைந்து திரிந்த...

லெப்ரோன்கள் மீது

கொண்ட காதலில்

கலவி கொண்டே

தந்தன..

அணுக் குழந்தைகள்.

 

காபனின் கறுப்பில்

கவர்ந்திட்ட ஐதரசனும்

காந்தர்வமாய் கலந்திட்ட

ஒக்சிசனும்..

இடையில்..

நைசா நுழைந்திட்ட

நைதரசனின் நாட்டமும்

கூடவே..

பொஸ்பரஸின் கூட்டும்

கூடிக் கண்ட விளைவே 

டீ என் ஏ...!

 

டீ என் ஏ

சுருளிச் சுற்றில்

சிக்கிக் கொண்ட

காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள்

அமினோ அமிலங்களாய்

வாசிக்கப்பட

அங்கு பிறந்த

கவர்ச்சிச் சண்டையில்

நடந்த கலவியில்..

புரதங்கள் பிறப்பெடுக்க

கருக்கொண்டது

உயிரின் உருவம்..!

 

அழகும் வர்ணமும்

அறிவும் திறனும்

கூடவே பரிமாறுப்பட

சூழல் என்னைத்

தத்தெடுக்க

தந்தையின் பரிசில்

தாயின் வாங்கலில்

வளர்ப்பில்

நானும் உதித்தேன்...

மனிதக் குழந்தையாய்.

 

அடுத்த வந்த வினாடியில்

போர்கள் மீது

மனிதன் கொண்ட காதலில்

இரும்புத் தண்டுகள்

செப்புக் குண்டுகளோடு

கலவி செய்ய

எழுந்த சண்டையில்

நிகழ்ந்த

பிரிவினையில்

கக்கிய

ஒற்றை செப்புத் துண்டில்

பறிபோனது

சமனிலை..

மரணம் என்று

அது சொல்லப்பட்டது.

 

இருந்தும்..

இயற்கையில்

காபனும்..ஐதரசனும்..

ஒக்சிசனும்.. நைதரசனும்

கலவி செய்வது மட்டும்

நிற்கவே இல்லை..!

அடுத்த சுற்றுக்கும்

அவை தயார்..!

 

கலவி என்பது

இயற்கை என்பதன்

இருப்பின்..

இயங்கு நிலையின்

உன்னத உருவம்..!

நெடுக்ஸ் நீங்கள் லெப்ரோன்கள் எனக் குறிப்பிடுவது எலக்ட்ரான்களையா(electrons)??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் நீங்கள் லெப்ரோன்கள் எனக் குறிப்பிடுவது எலக்ட்ரான்களையா(electrons)??

 

http://en.wikipedia.org/wiki/Lepton

 

மென்மி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
300px-Lepton.png
magnify-clip.png
பொருள்களின் அடிப்படைத் துகள்களின் அட்டவணை. முப்பிரிவாக உள்ள மென்மிகள் பச்சை நிறக் கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. முப்பிரிவு மென்மிகள் : (1) எதிர்மின்னியும் எதிர்மின்னி நுண்நொதுமியும், (2) மியூவானும், மியூவான் நுண்நொதுமியும் (3)டௌவானும் , டௌவான் நுண்நொதுமியும்

மென்மி, அல்லது லெப்டான், அல்லது லெப்டோன் (Lepton) என்பது அணுக்கூறான அடிப்படைத் துகள்கள் சிலவற்றின் பொதுக் குடும்பப்பெயர். எதிர்மின்னி (எலக்ட்ரான்), மியூவான், டௌவான் (டௌ துகள்), மற்றும் இத் துகள்களின் நியூட்ரினோக்களும் (நுண்நொதுமிகளும்) மென்மிகள் அல்லது லெப்டான்கள் எனப்படும் அடிப்படைத் துகள் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த மென்மிகள் யாவும் தற்சுழற்சி எண் 12 கொண்டவை. பெர்மியான்கள் அல்லது (ஃவெர்மியான்கள்) தற்சுழற்சி எண் 12 கொண்டவை. இந்த மென்மிகள் அல்லது லெப்டான்கள் அணுக்கருவின் உள்ளே இயங்கும் அணுக்கரு வன்விசையை போல் வலுவான விசையுடன் இயங்குபவை அல்ல. மென்மிகள் உறவியக்க விசை, அணுக்கரு வன்விசையைக் காட்டிலும் ஏறத்தாழ 1013 மடங்கு மெலிவானது (10 டிரில்லியன் மடங்கு குறைந்த வலுவுடைய விசை).

பொருளடக்கம்
மென்மிகளின் பண்புகள்

எல்லா மென்மிகளும் மென்மி எண் 1 (எண் ஒன்று) கொண்டவை. மென்மி எண் என்பது துகள்கள் பற்றிய இயற்பியலில் அறியப்படும் ஓர் அடிப்படை குவாண்டம் எண். மென்மிகள் அல்லது லெப்டான்கள் ஆறு வகையான “மணம்” கொண்டவை. இங்கே மணம் என்பது உயிரினங்கள் நுகரும் மணம் அல்ல. இத் துகள்கள் ஒவ்வொன்றின் அடிப்படை இயக்கத் தன்மையையும் ஒரு மணம் என்று இயற்பியலாளர்கள் வரையறை செய்கிறார்கள். அதாவது மணம் என்பது ஒரு குறிப்பிட்ட மென்மி எண், அடிப்படை மின்மம், மெல்லுறவு உயர்மின்மம் (weak hypercharge) ஆகியவற்றின் தொகுதியைக் குறிக்கும். எதிர்மின்னித் தன்மை கொண்டவற்றை எதிர்மின்னி “மணம்” கொண்ட மென்மிகள் (லெப்டான்கள்) என்பர்.

அதே போல மியூவான் தன்மை கொண்ட மென்மிகளை மியூவான் மணம் என்பார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு மென்மி அடிப்படை மின்மம் “-1” (= -1 e), மென்மி எண் “1”, மெல்லுறவு உயர்மின்மம் “-1” ஆகியவை கொண்டிருந்தால் அது எதிர்மின்னி வகை மணம் உடையது. வழக்கமாகக் குறிக்கும் குறியெழுத்துகளில் L என்பது மென்மி எண்ணைக் (லெப்டான் எண்ணைக்) குறிக்கும். Q என்பது அடிப்படை அளவு எண்ணிக்கையில் மின்மத்தைக் குறிக்கும், YW என்பது மெல்லுறவு உயர்மின்மத்தைக் குறிக்கும். மென்மிகளில் ஆறுவகையான மணங்கள்:

  • எதிர்மின்னி e (Le=1, Q = −1, YW= −1)
  • எதிர்மின்னி நுண்நொதுமி (எதிர்மின்னி நியூட்ரினோ) νe (Le=1, Q=0, YW = −1)
  • மியூவான் μ (Lμ=1, Q=−1, YW = −1)
  • மியூவான் நுண்நொதுமி (மியுவான் நியூட்ரினோ) νμ (Lμ=1, Q=0, YW = −1)
  • டௌவான் (டௌ துகள்) τ (Lτ=1, Q = −1, YW = −1)
  • டௌவான் நுண்நொதுமி (டௌவான் நியூட்ரினோ) ντ (Lτ=1, Q=0, YW = −1)

இந்த ஆறுவகையான மணம் கொண்ட மென்மிகள் மூன்று பிரிவுகளாக (குடும்பங்களாக) பிரிக்கப்படுகின்றன. இதனை ஆங்கிலத்தில் “generation” என்று கூறுவர். முதல் பிரிவில் எதிர்மின்னியும் எதிர்மின்னி-நுண்நொதுமியும் அடங்கும். இப்படியாக மென்மிகளின் மூன்று பிரிவுகளையும் கீழ்க்காணுமாறு அட்டவனைப்படுத்தலாம்:

  முதல் பிரிவு இரண்டாவது பிரிவு மூன்றாவது பிரிவு மென்மி (லெப்டான்) எதிர்மின்னி மியூவான் டௌவான் நியூட்ரினோ வகை மென்மி எதிர்மின்னி நுண்நொதுமி மியூவான் நுண்நொதுமி டௌவான் நுண்நொதுமி

ஒவ்வொரு மென்மிகளுக்கும் ஒவ்வொரு மறுதலை மென்மிகள் உண்டு. எதிர்மின்னிக்கு மறுதலைத் துகள் நேர்மின்மம் கொண்ட மறுதலை-எதிர்மின்னி (பாசிட்ரான் அல்லது குறுநேர்மின்னி). அதே போல எல்லா மென்மிகளுக்கும் தனித்தனியாக மறுதலைத் துகள்கள் உண்டு.

துகள் மறுதலைத் துகள் எதிர்மின்னி மறுதலை எதிர்மின்னி

குறுநேர்மின்னி

antielectron

(or positron) மியூவான் மறுதலை மியூவான் டௌவான் மறுதலை டௌவான் எதிர்மின்னி-நுண்நொதுமி மறுதலை எதிர்மின்னி-நுண்நொதுமி மியூவான் நுண்நொதுமி மறுதலை மியூவான் நுண்நொதுமி டௌவான்-நுண்நொதுமி மறுதலை டௌவான்-நுண்நொதுமி மென்மிகளின் (லெப்டான்களின்) அட்டவணை மின்மம் உடைய மென்மி / மறுதலை துகள் மின்மமற்ற மென்மி

நுண்நொதுமி (நியூட்ரினோ) / மறுதலை நுண்நொதுமி பெயர் குறியீடு மின்மம்[1] (e) நிறை[2] (MeV/c2) பெயர் குறியீடு மின்மம்[3](e) நிறை[4]

(MeV/c2) எதிர்மின்னி / பாசிட்ரான்(குறுநேர்மின்னி) e/e+ −1 / +1 0.511 எதிர்மின்னி நுண்நொதுமி /மறுதலை எதிர்மின்னி நுண்நொதுமி νe/νe 0 < 0.0000022 [1]மியூவான் μ/μ+ −1 / +1 105.7 மியூவான் நுண்நொதுமி / மறுதலை மியூவான் நுண்நொதுமி νμ/νμ 0 < 0.17 [1]டௌவான் τ/τ+ −1 / +1 1777 டௌவான் நுண்நொதுமி / மறுதலை டௌவான் நுண்நொதுமி ντ/ντ 0 < 15.5 [1]

நுண்நொதுமிகளுக்கு நிறை (திணிவு) உண்டு ஆனால் அவை மிக மிகச் சிறியது. 2008 ஆம் ஆண்டளவிலே இன்னும் அவற்றின் நிறையை செய்முறை சோதனைகள் எதன் அடிப்படையிலும் நிறுவவில்லை. ஆனால் நுண்நொதுமி அலைவு (நியூட்ரினோ அலைவு)களில் இருந்து தோராயமாக அவற்றின் நிறைகளின் (திணிவுகளின்) இருமடி வேறுபாடுகளைக் கீழ்க்காணுமாறு அறிந்துள்ளார்கள்: e02ca0dfb4709d982decc999e331b415.png and 1b13ee3bb59ff44ef3f59b63d43a376a.png. மேலும் இதிலிருந்து அறியத்தக்க முடிவுகள்:

  • மியூவான் நுண்நொதுமியும் டௌவான் நுண்நொதுமியும் எதிர்மின்னி நுண்நொதுமியைக் காட்டிலும் 2.2 eV நிறை குறைவானவை. நிறை வேறுபாடுகள் மில்லி எலக்ட்ரான்வோல்ட் அளவானவையே
  • நுண்நொதுமிகளில் ஒன்றோ அதற்கு மேலானவையோ 0.040 eV ஐ விட மிகுந்த நிறையுடையவை
  • நுண்நொதுமிகளில் இரண்டோ மூன்றோ 0.008 eV ஐ விட மிகுந்த நிறையுடையவை

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்கு அறிவியல் கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் லெப்ரோன்கள் எனக் குறிப்பிடுவது எலக்ட்ரான்களையா(electrons)??

 

ஆம்.. இலத்திரன்கள் அந்த வகைக்குள் தான் அடங்குகின்றன. அந்த வகையில் அவற்றின் பிரதான வகை இருப்பை குறிப்பிட்டு இருக்கிறேன்.

 

ஜீவாவால் பகிரப்பட்ட இணைப்புக்களில் இன்னும் கூடுதல் விபரங்கள் உள்ளன நண்பரே. :)

மேலும் மேலதிக.. விடயங்களுக்கான இணைப்பை வழங்கிய ஜீவாவிற்கும்.. கருத்துச் சொன்ன சுமே அக்காக்கும் நன்றிகள். :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இப்படியான கவிதைகள் தமிழில் வெகு அரிது அல்லது நான் பார்த்த,படித்தது குறைவு..

அறிவியல் சொற்களை வைத்து அருமையாக பின்னியுள்ளீர்கள். டீ என் ஏ க்கு இவ்வளவு இலகு விளக்கம் .. சூப்பரண்ணா..

பீக்கோனில் பயோலொஜி எடுத்த குணசீலன் சேர் தான் ஞாபகத்தில் வந்துபோனார். நன்றி அண்ணா.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உண்மையில் இப்படியான கவிதைகள் தமிழில் வெகு அரிது அல்லது நான் பார்த்த,படித்தது குறைவு..

அறிவியல் சொற்களை வைத்து அருமையாக பின்னியுள்ளீர்கள். டீ என் ஏ க்கு இவ்வளவு இலகு விளக்கம் .. சூப்பரண்ணா..

பீக்கோனில் பயோலொஜி எடுத்த குணசீலன் சேர் தான் ஞாபகத்தில் வந்துபோனார். நன்றி அண்ணா.. :)

 

நன்றி ஜீவா.

 

உங்களுக்கும் எங்களுக்கும் இதிலும் ஒரு ஒற்றுமை. நாங்களும் குண்சீட (குணசீலன் சேரை அப்படித்தான் நாங்கள் அழைப்பது. அதுமட்டுமன்றி நாங்கள் முன் வாங்கு தற்கொலைப்படை வீரர்கள்.. தெரியும் தானே குணசீலன்.. கேள்வி ஆட்லறிகளை எம்மீது தான் அடிக்கடி ஏவுவார். :D ) மாணவர்கள் தான்.

 

ஆனால் எனக்கு இன்றும் புரியல்ல.. ஏன் தான் அந்த உயிரியல் பெயர்களைக் கேட்டு அந்த மனிசன் இவ்வளவு பின்னி எடுத்தது என்று. உயர்தரத்திற்குப் பிறகு அதனால.. (பிகருகளுக்கு பட்டப் பெயர் வைச்சதுக்கு உதவினதை தவிர) ஒரு பிரயோசனமும் இல்லை..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

நல்ல கவிதை நெடுக்கு. தலைப்பை மாற்றினால் நல்லது.

 

நீங்கள் கலவிகளின் மன்னனா?

 

Quote "ஆனால் எனக்கு இன்றும் புரியல்ல.. ஏன் தான் அந்த உயிரியல் பெயர்களைக் கேட்டு அந்த மனிசன் இவ்வளவு பின்னி எடுத்தது என்று. உயர்தரத்திற்குப் பிறகு அதனால.. (பிகருகளுக்கு பட்டப் பெயர் வைச்சதுக்கு உதவினதை தவிர) ஒரு பிரயோசனமும் இல்லை"

 

ஞாபக சக்தியை அதிகரிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்ல கவிதை நெடுக்கு. தலைப்பை மாற்றினால் நல்லது.

 

ஒரு உயிரின் உடலும்.. அந்த உடல் சார்ந்து எல்லாவிதமான பெளதீகவியல்.. இரசாயனவியல்.. உயிரியல்.. கலவிகளும் நடப்பதனாலும்.. உயிரின் உடல் என்பது எல்லாக் கலவிகளின் ஒட்டுமொத்த வடிவம் என்பதாலும்.. அதனை மன்னன் என்று ஆக்கி.. அப்படித் தலைப்பிட்டேன். :icon_idea:

 

இதில் வேறு.. பொருள்... தவறு.. இருப்பின் அதற்கு வருந்துகிறேன். உங்கள் கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நன்றி ஜீவா.

 

உங்களுக்கும் எங்களுக்கும் இதிலும் ஒரு ஒற்றுமை. நாங்களும் குண்சீட (குணசீலன் சேரை அப்படித்தான் நாங்கள் அழைப்பது. அதுமட்டுமன்றி நாங்கள் முன் வாங்கு தற்கொலைப்படை வீரர்கள்.. தெரியும் தானே குணசீலன்.. கேள்வி ஆட்லறிகளை எம்மீது தான் அடிக்கடி ஏவுவார். :D ) மாணவர்கள் தான்.

 

ஆனால் எனக்கு இன்றும் புரியல்ல.. ஏன் தான் அந்த உயிரியல் பெயர்களைக் கேட்டு அந்த மனிசன் இவ்வளவு பின்னி எடுத்தது என்று. உயர்தரத்திற்குப் பிறகு அதனால.. (பிகருகளுக்கு பட்டப் பெயர் வைச்சதுக்கு உதவினதை தவிர) ஒரு பிரயோசனமும் இல்லை..! :icon_idea::lol:

 

ஓ மை காட்.. :D

நீங்கள் எங்கை சயன்ஸ் ஹோலிலையா அவரட்டை படிச்சனிங்கள்?

கரணவாயிலை தான் அவற்றை வீடு. அவற்றை வகுப்பிலை ஒரு ஒழுங்கிலை எல்லாரும் மாறி மாறி முன்வாங்கு,பின்வாங்கு என்று இருந்தே ஆகணும் ஒருத்தரும் தப்ப முடியாது..  ஆனால் ஒன்று அண்ணே பொடியள்,பெட்டையள் என்று வஞ்சகம் பார்க்காமால் வாங்கு வாங்குனு வாங்கும்.. :D:lol:

 

ஒரு தீபாவளிக்கு GAP என்று t-shirt வந்த புதிது கழுத்தில் அதுக்கு கயிறு போல போட்டு வரும். நான் போட்டு போக என்ன தூக்குபோட போறியோ என்று கேட்டார் அப்படி பம்பலும் அடிப்பார். :D

போய் அப்பரை கூட்டிட்டு வா என்று கலைச்சுகூட விட்டிருக்கார் என்னை.. :(

 

நன்றி அண்ணா, பழைய நினைவுகளை பகிர வைத்ததுக்கு.. அத்தோடு மன்னிக்கவும்

அருமையான திரியில் இவற்றை பகிர்ந்ததுக்காய்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு உயிரின் உடலும்.. அந்த உடல் சார்ந்து எல்லாவிதமான பெளதீகவியல்.. இரசாயனவியல்.. உயிரியல்.. கலவிகளும் நடப்பதனாலும்.. உயிரின் உடல் என்பது எல்லாக் கலவிகளின் ஒட்டுமொத்த வடிவம் என்பதாலும்.. அதனை மன்னன் என்று ஆக்கி.. அப்படித் தலைப்பிட்டேன். :icon_idea:

 

இதில் வேறு.. பொருள்... தவறு.. இருப்பின் அதற்கு வருந்துகிறேன். உங்கள் கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி. :)

 

என்னப்பா இது வீரபாண்டியகட்டப்பொம்மன் படத்திலை சிவாஜிகணேசன் பேசின வசனம் மாதிரி கிடக்கு :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஓ மை காட்.. :D

நீங்கள் எங்கை சயன்ஸ் ஹோலிலையா அவரட்டை படிச்சனிங்கள்?

கரணவாயிலை தான் அவற்றை வீடு. அவற்றை வகுப்பிலை ஒரு ஒழுங்கிலை எல்லாரும் மாறி மாறி முன்வாங்கு,பின்வாங்கு என்று இருந்தே ஆகணும் ஒருத்தரும் தப்ப முடியாது..  ஆனால் ஒன்று அண்ணே பொடியள்,பெட்டையள் என்று வஞ்சகம் பார்க்காமால் வாங்கு வாங்குனு வாங்கும்.. :D:lol:

 

ஒரு தீபாவளிக்கு GAP என்று t-shirt வந்த புதிது கழுத்தில் அதுக்கு கயிறு போல போட்டு வரும். நான் போட்டு போக என்ன தூக்குபோட போறியோ என்று கேட்டார் அப்படி பம்பலும் அடிப்பார். :D

போய் அப்பரை கூட்டிட்டு வா என்று கலைச்சுகூட விட்டிருக்கார் என்னை.. :(

 

நன்றி அண்ணா, பழைய நினைவுகளை பகிர வைத்ததுக்கு.. அத்தோடு மன்னிக்கவும்

அருமையான திரியில் இவற்றை பகிர்ந்ததுக்காய்.. :)

 

ஆம். நாங்க சயன்ஸ் கோலில் தான் அவரிடம் படித்தனாங்கள்.  நாங்கள் முன் வாங்கு. அவரே எங்களை பிரேவ்ஸ் என்று தான் கூப்பிடுறவர். எங்களை மாற்றுவதில்லை. பொதுவா அவருடைய வகுப்பில்  முன் வாங்கில் அமர யாரும் முன் வராத படியால்.. முன் வாங்கில் அடிக்கடி கேள்வி எறிகணைகளை ஏவுவதால்.. முன் வாங்கு ஆக்களை மாற்றுவதில்லை. இரண்டில் இருந்து மிச்சாக்கள் வாரா வாரம் சுழற்சி முறையில் மாறனும்.

 

உண்மை தான் பெட்டையளுக்கு விழுற பேச்சைக் கேட்டால்.. தலையைக் குனிஞ்சுகிட்டு நிற்பினம் எல்லாரும். ஆனால் சில பெட்டைகளுக்கு அப்படித் தான் கொடுக்கனும்.. இல்லைன்னா அவை தாங்க தான் ஏதோ உலகத்தில பெரிய ஆக்கள்.. அழகிகளின்ர நினைப்பில இருப்பினம். அப்படித்தான் ஆக்களோட நடந்து கொள்ளுவினம்.

 

ஆம்... நல்லா பகிடியும் விடுவார். அத்தோடு நாங்கள் கொஞ்ச நெருக்கமும். அவரின் நண்பரான இன்னோர் ஆசிரியர் கூட நாங்கள் சின்னனில் இருந்து பழக்கம் என்பதால்.. அந்த நட்பு வட்டப் பழக்கம். அதுவே.. தொல்லையும்.. அடிக்கடி கேள்வி கேட்டுத் தொலைப்பார். அதனால் எப்பவுமே அலேட் தான்.

 

மாணவப் பருவ காலங்களை படிப்போட சம்பந்தப்பட்ட தலைப்பில் பகிர்ந்து கொள்வதில் தப்பில்லைத் தானே.

 

நன்றி ஜீவா. :)

 

 

என்னப்பா இது வீரபாண்டியகட்டப்பொம்மன் படத்திலை சிவாஜிகணேசன் பேசின வசனம் மாதிரி கிடக்கு :lol:  :D

 

 

 

சத்தியமா நாங்க அதைக் கொப்பி பண்ணல்ல. அதெல்லாம் ஒரு புலோல வருகுது. :lol:

 

நன்றி கு.சாண்ணா வரவுக்கும் கருத்திற்கும். :)

Edited by nedukkalapoovan

பென்சீனை வைத்து ஒரு கவி வடியுங்கள், மகாதேவாவிடம் படித்திருந்தால் இந்த பகிடி பிரபல்யம்.

 

முன்னுக்கிருந்த பிள்ளையை எட்டிப்பார்த்துவிட்டு: 

 

"என்ன நீ உள்ளுக்குள் ஒன்றும் போடவில்லை, இன்று மட்டும்தான் இப்படியா அல்லது என்றுமே நீ போடுவதில்லையா?"

 

 

Benzene Image

 

benzene.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்ததும், தலை விறைச்சுப் போச்சு!

பிறகு உள்ளுக்குள்ள போய்ப் பார்த்த பிறகுதான், உண்மை விளங்கியது, நெடுக்ஸ்!

நல்ல அறிவூட்டல் கவிதை! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பென்சீனை வைத்து ஒரு கவி வடியுங்கள், மகாதேவாவிடம் படித்திருந்தால் இந்த பகிடி பிரபல்யம்.

 

முன்னுக்கிருந்த பிள்ளையை எட்டிப்பார்த்துவிட்டு: 

 

"என்ன நீ உள்ளுக்குள் ஒன்றும் போடவில்லை, இன்று மட்டும்தான் இப்படியா அல்லது என்றுமே நீ போடுவதில்லையா?"

 

 

Benzene Image

 

benzene.jpg

 

ஹெகுலேயின்

கனவில் வந்த பாம்பே

வகுப்பில்..

என் உயிர் எடுத்த வளையமே,

புன்னகை சிந்திடா..

விறைச்ச மண்டை - வாத்தியார்

மகாதேவாவின்

நெஞ்சிலும் ஈரம் உண்டு

காட்டிய கடவுளே....!

 

ஆறுமுக சாமி - நீ

மூவிரு பிணைப்புக்கள் காட்டி

எனக்கருள வேண்டும்

நானும் organic

pass ஆக வேண்டும்..!

வளையம் போட்டுக் காட்டி

வளைத்துவிட்ட அவளுக்கும்

எனக்கும்..

biology ஓகே

chemistry யும் வேர்க்கவுட் ஆகனும்..!

 

அந்த வேகத்தில்..

வகுப்புக்கு வெளியே

வாழ்வெனும் பேரின்பம் காண

physical ஆக நாங்க இணைய..

பிறக்கும் பிள்ளையின்

பேபி கிறீமாக

நீ இருந்து

எம்மோடு

இரண்டறக் கலக்க வேண்டும்..

அதற்கும் நீயருளல் வேண்டும்..

பென்சீன் (Benzene) ஆண்டவரே

போற்றி போற்றி..! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தலைப்பைப் பார்த்ததும், தலை விறைச்சுப் போச்சு!

பிறகு உள்ளுக்குள்ள போய்ப் பார்த்த பிறகுதான், உண்மை விளங்கியது, நெடுக்ஸ்!

நல்ல அறிவூட்டல் கவிதை! 

 

நன்றி புங்கையூரன். :)

benzene.jpg

 

ஹெகுலேயின்

கனவில் வந்த பாம்பே

வகுப்பில்..

என் உயிர் எடுத்த வளையமே,

புன்னகை சிந்திடா..

விறைச்ச மண்டை வாத்தியார்

மகாதேவாவின்

நெஞ்சிலும் ஈரம் உண்டு

காட்டிய கடவுளே....!

 

ஆறுமுக சாமி - நீ

மூவிரு பிணைப்புக்கள் காட்டி

எனக்கருள வேண்டும்

நானும் organic

pass ஆக வேண்டும்..!

வளையம் போட்டுக் காட்டி

வளைத்துவிட்ட அவளுக்கும்

எனக்கும்..

biology ஓகே

chemistry யும் வேர்க்கவுட் ஆகனும்..!

 

அந்த வேகத்தில்..

வகுப்புக்கு வெளியில்

வாழ்வெனும் பேரின்பம் காண

physical ஆக நாங்க இணைய..

பிறக்கும் பிள்ளையின்

பேபி கிறீமாக

நீ இருந்து

எம்மோடு

இரண்டறக் கலக்க வேண்டும்.

பென்சீன் (Benzene) ஆண்டவரே

போற்றி போற்றி..! :lol::D

 

  :lol:  :D  :D

 

சூப்பர் கவி. ஆகா இதைத்தானா சொல்வது சுட சுட கவிதை என்று, எழும்பினவுடன் கவி படைக்க உங்கள் மனம் தூமையாக அமைதியில் இருக்கின்றது. இப்படியே என்றுமிருக்க வாழ்த்துக்கள் நெடுக்கு. நன்றி பகிர்வுக்கு

நன்றி ஜீவா & நெடுக்ஸ்.
 

 

பென்சீனை வைத்து ஒரு கவி வடியுங்கள்.

 

காது வளையங்களை விட்டு கார்பன் வளையங்களின் மேல் வந்திக்கு ஏன் மோகமோ?? :)

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்வாடை பிடியாத மனுசனுக்கு எப்படி கலவி ஞானம் வந்தது என்று போய் பார்த்தால் அது கல்வி சம்பந்தப்பட்ட விடயம்......ஓ மை பென்சின் ஆண்டவரே....:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வளையம் போட்டுக் காட்டி

வளைத்துவிட்ட அவளுக்கும்

எனக்கும்..

biology ஓகே

chemistry யும் வேர்க்கவுட் ஆகனும்..!

 

chemistry தானண்ணா பல இடங்களில் வேர்கவுட்(workout) ஆவதில்லை.. :lol::D:icon_idea:

 

மீண்டும் ஒரு அருமையான கவிதை, வாழ்த்துக்கள் அண்ணா.. :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு என்ன ஒரு மாதிரி கலவியைப்பற்றி கதைக்க வெளிக்கிட்டீங்க, அனுபவியுங்க, பிறகு கவிதை பல தானா கொட்டும். இரு கவிதைகளும் அருமை, நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும் நன்றி. எழுத்துக்களை வாசிச்சு எழுதத் தூண்டும் உங்களின் ஆக்கமும் ஊக்கமுமே இந்த ஆக்கங்களின் மூலம். :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்குள்ள நல்ல 'கெமிஸ்ரி" இருக்கு எண்டு அடிக்கடி 'நடன நிகழ்சிகளில் சொல்லுறவை...அதன் அர்த்தம் இண்டைக்கு நெடுக்ஸ் அண்ணையால் தான் புரிஞ்சு கொண்டேன். :)

'பென்சீன்' இற்கு பெண் என்றால் 'சீன்' தானே,  ஹைட்ரஜன் ஆகத் தொங்குபவர்கள் எல்லாம் 'hasbands' தானே  என்று கவிதை வருமென்று எதிர்பார்த்தேன். :D

  

ஹெகுலேயின் கனவில் வந்த 'ஆறுமுகமான பொருள்' இற்கான விளக்கம் நல்லாருக்குநெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உங்களுக்குள்ள நல்ல 'கெமிஸ்ரி" இருக்கு எண்டு அடிக்கடி 'நடன நிகழ்சிகளில் சொல்லுறவை...அதன் அர்த்தம் இண்டைக்கு நெடுக்ஸ் அண்ணையால் தான் புரிஞ்சு கொண்டேன். :)

 

அப்ப இவ்வளவு நாளும் இது புரியாமல் தானா.. மானாட மயிலாட பார்த்துக்கிட்டு இருக்கீங்க..! சோ.. சாட். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.