Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணுக்கும் அந்த வலி உண்டா?

Featured Replies

முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது. 

ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது . 

எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் ஒன்றுதான்.அது: அன்பு இல்லம்

பலர் நினைப்பது போல பறவைகள் கூடுகளில் தங்குவது இல்லை. மனிதர்களைப் போல கூடுகளில் உறங்கி மறுநாள் விடிந்ததும் வேலைக்குக் கிளம்புவதில்லை. அவை கட்டுவது வீடுகள் அல்ல. விடுதிகள். பிரசவ விடுதிகள். முட்டையிடவும். முட்டைகளுக்குள்ளிருந்து முகிழத்தெழும் குஞ்சுகளுக்கு உணவளிக்கவும், சிறகு முளைக்கும் வரை அவற்றைச் சீராட்டவும் உருவாக்கப்படும் இடம்தான் இந்தக் கூடுகள்.

காக்கையின் கூடுகள் சற்றுப் பெரிதுதான். விட்டம் ஒரடியாவது இருக்கும். முன்பக்கம் முரட்டுச் சுள்ளிகளால் அமைந்திருந்தாலும் உள்ளே இருக்கும் ’கிண்ண’த்தில், மூன்றங்குல ஆழத்திற்கு மெத்து மெத்தென்று வைக்கோல், தென்னை நார், சணல் கயிறு உலர்ந்த இலைகள் இவற்றைக் கொண்ட ஒரு ’மெத்தை’ இருக்கும்.

ஒரு குச்சியைப் பொறுக்கிக் கொண்டு உயரே பறந்த அந்தக் காக்கையைக் கண்ட போது எனக்குள் ஒரு கேள்வி வந்து உட்கார்ந்தது. அந்தக் காக்கை ஆணா? பெண்ணா? தாயா? தந்தையா?

முட்டையிலிருந்து வெளிவந்து மூன்று வாரங்கள் வரை காகங்களுக்குப் பறக்கத் தெரியாது. (முதல் நாள் அதற்குக் கண்ணே தெரியாது) அந்தக் காலங்களில் அங்கும் இங்கும் நகராமல் அம்மா காக்கா அருகிலேயே இருக்கும். அப்பாக் காக்கா உணவு தேடிக் கொண்டுவரும். ஆனால் வீட்டைக் கட்டுவது இருவரும் சேர்ந்துதான் என்கின்றன புத்தகங்கள்.

இயற்கை இந்தப் பறவைகளுக்கு இயல்பாகக் கற்றுக் கொடுத்திருக்கிற செய்திகளை ஆற்றலும் அறிவும் மிக்க மனித குலம் போராடிப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது விளக்கமுடியாத வேடிக்கைகளில் ஒன்று.

காக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த என்னைத் தொலைக்காட்சி அழைத்தது. இயற்கையின் அதிசயங்களிலிருந்து மனிதர்களின் விசித்திரங்களுத் திரும்பினேன். இந்திரா நோயியின் உரையாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இந்திரா இன்று பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி. இந்தியர். சென்னையில் வளர்ந்தவர். ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனத்திற்குப் பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார் என்ற பிரமிப்பிலேயே ஊடகங்கள் அவரைப் பேட்டி கண்டு வந்திருக்கின்றன. இந்தப் பேட்டியும் அந்தக் கோணத்திலேயே அமைந்திருந்தது.

“நீங்கள் மேற்கொள்ளூம் நிர்வாகச் செயல்பாடுகளை ஒரு பெண்ணின் அணுகுமுறை என்பதாகவே உலகம் பார்க்கிறது. அது உங்களை எவ்வளவு எரிச்சலடையச் செய்யும் என்பது எனக்குப் புரிகிறது. ஏனெனில் பெண்களாகிய நாம் தொழில் முறையில் இதை நிறையவே எதிர்கொண்டு வருகிறோம்.” என்று உரையாடலுக்குக் களம் அமைக்கிறார் பேட்டி காணும் பெண். அவர் நாடறிந்த பத்திரிகையாளர் பர்க்காதத்.

”இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை”. என்கிற இந்திரா, தொடர்ந்து “எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிற்து. பெண்ணின் அணுகுமுறை என்பது ஒரு வணிக முயற்சியின் மனிதப் பக்கம்.( the human side of the enterprise,) என்கிறார். ” ஒரு உதாராணம் சொல்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் சொன்ன செய்தி சுவையானது.
“எங்கள் நிறுவனத்தில் இருக்கும் இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஊழியர்களுக்கும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நான் கடிதம் எழுதுகிறேன். வேறு வேலைகளின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதற்காக என் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஒரு பதினைந்து நிமிடம் இதற்காகச் செலவிடுகிறேன்.. இந்தக் கடிதங்கள் ஒரு பக்க அளவில்தான் இருக்கும் ஒரே ஒரு பக்கம்தான். பிசினஸ் விஷயம், சொந்த விஷயம் எல்லாம் அதில் எழுதுவேன். இரண்டு வாரத்திற்கு முன் எழுதிய கடிதம் என் மகளைப் பற்றியது. அவள் இப்போது மேல்நிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கும் முதல் நாளன்று நானும் என் கணவரும், கையில் காமிராவை எடுத்துக் கொண்டு எங்கள் தெருமுனயில் உள்ள ஸ்கூல் பஸ் நிற்கும் இடத்திற்குச் சென்று ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் அவளோடு படம் எடுத்துக் கொள்வோம். இந்த ஆண்டும் அவள் புறப்படும் போது நாங்களும் காமிராவும் கையுமாகக் கிளம்பினோம். அவள் “ அம்மா! நான் இன்றிலிருந்து காரில் போகப் போகிறேன். நானே காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொள்கிறேன்” என்றாள். அவள் இப்போது சிறுமியல்ல, வளர்ந்த ஒரு இளம் பெண் என்பது அப்போதுதான் எங்கள் புத்தியில் உறைத்தது. ஒரு கணம் நிலை குலைந்து போனோம். அவள் எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு ந்டந்தது, நாங்கள் அவளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றி உட்கார வைத்தது, அவள் மூஞ்சியை ’உம்’ என்று வைத்துக் கொண்டு டாடா காட்டியது, பஸ் மெல்ல நகர்ந்து சென்றது எனப் பழைய காட்சிகள் நினைவில் வந்து போயின. ஸ்கூல் யூனிபார்மில் இருந்த அந்தச் சிறுமி என்ன ஆனாள்? இன்று ஒரு இளம் பெண்ணாக ஆகிவிட்டாள். காலம் பறந்து கொண்டிருக்கிறது. நான் இதை என் சக ஊழியர்களுக்கு எழுதினேன். காலம் பறந்து கொண்டிருக்கிறது நண்பர்களே உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். ஏனென்றால் ஒரு சிறுமி இளம் பெண்ணாகி உங்களிடமிருந்து பிரிந்து செல்லும் நாள் வரும் போது உங்கள் உள்ளம் உடைந்து போகும். அதன் பின் இந்த நாட்கள் திரும்பக் கிடைக்காது என்று எழுதினேன். ஒரு ஆண் தலைமை அதிகாரி இதை எழுதியிருப்பாரா?” என்று முடித்தார் இந்திரா. . 

சொல்லுங்கள், ஆண் அதிகாரிகள் இப்படி எழுதியிருப்பார்களா? இந்திரா சொன்னதைப் பற்றி ஆண் காகங்கள், -மன்னிக்கவும் - ஆண் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வைத்த பதிவு, தமிழீழன்! நன்றிகள்!

 

கருணாநிதி, தனது  உடன்பிறப்புகளுக்கு வரைந்த கடிதங்கள், ஆண்களுக்கும் அந்த வலி உண்டு என்றுதான் உணர்த்துகின்றன! :D  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இவா எப்படி ஒரு உயர் அதிகாரி ஆனா என்பதே ஆச்சரியமா இருக்குது. ஒரு நிறுவனத்தின் உச்சியில் இருந்து கொண்டு.. ஆண் - பெண் பால் வேறுபாட்டின் அடிப்படையில் சிந்திப்பதே அவ்வளவு ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய விடயம் அல்ல.

 

இன்று பிரித்தானியாவை எடுத்துக் கொண்டால்.. CV இல் ஆணா அல்லது பெண்ணா என்று.. பாலைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. காரணம்.. இந்த வகையான அதிகாரிகளின் சிந்தனை தான்...! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. இந்த உலகில் ஆண்களின் இடத்தில் பெண்கள் இருந்திருந்தால்.. நிச்சயமாக ஆண்களை அவர்கள் பெண்களை ஆண்கள் முன்னேற்றிய அளவிற்கு முன்னேற்றி இருப்பார்களோ என்பது சந்தேகத்திற்குரியதே. உதாரணத்திற்கு.. பல நாடுகளில் ஆண் மாணவர்களின் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளில் தசாப்தங்கள் கடந்த வீழ்ச்சி இருக்கிறது. ஆனால்.. அதைப் பற்றி பெண்களோ.. பெண்கள் அமைப்புக்களோ அக்கறைப்பட்டது கிடையாது. ஆனால் பெண்களின் கல்வி வீழ்ச்சி அடைந்திருந்த காலத்தில் அவர்களை நிமிர வைத்தவர்களில் அதிகம் ஆண்களே  பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். அதை அவன் தனக்காக செய்தானோ இல்லையோ ஒட்டுமொத்த மனித குலத்தின் தேவை கருதிச் செய்தான்.  ஆனால் பெண்கள்... அப்படிச் சிந்திக்கும் நிலையில் இல்லை.

 

ஏன் நான் இதனை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்.. இன்றைய கல்வி நிலையை எடுத்துப் பார்க்கின்ற போது பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெறுகின்றனர். அது அவர்களை அக்கடமிக்களாக மிக இலகுவாக அதிக எண்ணிக்கையில்.. உயர்பதவிகளை வகிக்க.. இடமளிக்கும் காலம் நெருங்கி வருகிறது...! அப்படி ஒரு நிலை வந்தால்.. இப்படியான சிந்தனை உள்ள பெண்களினால் பால் சமத்துவம் பேணப்படுமா என்பது கேள்விக்குறியே..!!!

 

எதிர்கால உலகில் ஆண்களின் தலைமைத்துவம் பெண்களின் தலைமைத்துவத்துக்கு (Equal Leadership) நிகராக அல்லது இணை தலைமைத்துவம் (Joint Leadership) கொண்டதாக இருக்க வேண்டிய கட்டாயத்தையே இந்த ஆக்கம் எமக்கு உணர்த்துகிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிரான்சில் அரச அலுவலகங்களில் பத்து பெண்கள் வேலை செய்தால் அதே அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண்களே வேலை செய்கிறார்கள்...ஆண்கள் சட்டத்தின் மூலம் எல்லா இடங்களிலும் புறக்கணிப்படுகிறனர் மேலைத்தேய வளர்ச்சி அடைந்த நாடுகளில்..ஆனால் இதுவே இலங்கை இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் தலைகீழ்..அங்கு ஆண்களே எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்...பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்...வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆண்கள் புறக்கப்படுகின்றனர்..வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் பெண்கள் புறக்கணிக்கப் படுகின்றனர்..மொத்தத்தில் சம உரிமை என்பது வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலும் பேச்சளவிலேயே இருக்கிறது...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
இந்த இடத்தில் கடந்தகாலங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு ஆண் பெண் தலைமைத்துவ அதிகாரிகளின் போக்குகள் குறித்து (தமிழர் விடயம் தொடர்பில்) ஒரு உறுத்தலான விடயத்தை சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதென கருதுகின்றேன்.
 
எந்த ஒரு ஆண் அதிகாரியும் தமிழர் விடயத்தில் தனது கருத்துக்களையும் அறிக்கைகளையும் தமது பதவியின் காலத்தில் நியாயமான முறையிலும் உண்மையான வகையிலும் வழங்கவில்லை என்பது என் வாதம். அதற்கான மெய்யான காரணம் என்னவென்றால் அவர்கள் வந்து இறங்கியவுடன் கபட சிங்கள அரசு அவர்களை வீழ்த்துவதற்காக கவனிக்கின்ற விதம். அதனால்தான் அவர்கள் எப்போதும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் சார்பாகவுமே நடந்து கொண்டார்கள் கொண்டுள்ளார்கள். அது என்ன கவனிப்பு என்று கேட்கின்றீர்களா? அதுதான் விதம் விதமான இளம் பெண் குட்டிகளின் தாலாட்டுதல்கள். வந்து சேரும் கிழடுகளுக்கு 16, 17 வயசுகளில் கிடைக்குதென்றால் சும்மா இருப்பானா? அதனால், நக்குண்டான் நாவிழந்தான்.
 
ஆனால், மேற்சொன்ன விடயம் தொடர்பில் வருகை தரும் பெண் அதிகாரிகளை நயவஞ்சக சிறிலங்கா இனவாதிகள் இந்த வலைக்குள் வீழ்த்த முடியாமையினால் இவர்களின் கூற்றுக்களும் அறிக்கைகளும் நேர்மையானவையாகவும் நடுநிலைமையானவையாகவுமே இருந்தன என்பது கண்கூடு.
 
இவைகள்தான்  விடயம் தொடர்பில் ஆண் பெண் அதிகாரிகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகள்.
  • கருத்துக்கள உறவுகள்

 தம்பி சுபேஸ்

ரொம்ப குளம்பியுள்ளார் என்று மட்டும் தெரிகிறது :D  :D 

 

பதிவுக்கு நன்றி தமிழீழன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கட்டளையிடும் தலைமைத்துவ பதவி நிலைகளில் பத்து பெண்களுக்கு ஒன்று அல்லது இரன்டு ஆணளே ஒரு ஒபிஸில் வேலை செய்கையில் சாதாராண இரும்பு வெட்டும் பக்றி போன்ற ஒரு ஒப்பரேசன் லெவல் தொழில்களில் பத்து ஆண்களுக்கு சில இடங்களில் ஒரு பெண்ணைக்கூட காணமுடிவதில்லை வளர்ச்சி அடைந்த நாடுகளில்..கடினமான வேலைகளை ஆண்களிடம் தள்ளிவிட்டு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெண்கள் நல்ல தொழில்களை வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆண்களுக்கு சம அளவில் கிடைக்கவிடாமல் தட்டிக்கொள்ளும் நிலை காணப்படும் அதே வேளை வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் தலைமைத்துவ பதவிகளை ஆண்களே அலங்கரித்துக்கொள்ளா கல்லுடைத்தல் போன்ற சாதாரண கூலித்தொழில்களில் பெண்கள் அமர்த்தப்படுகின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
 தம்பி சுபேஸ்

ரொம்ப குளம்பியுள்ளார் என்று மட்டும் தெரிகிறது :D  :D 

 

பதிவுக்கு நன்றி தமிழீழன்

 

விசுகண்ணா..நான் ஒன்றும் குழம்பவில்லை..நாட்டு நடப்பை நேரில் பார்த்ததைதான் எழுதி இருக்கிறேன்..நீங்களும் இவற்றை பார்த்திருப்பீர்கள்..ஆக மொத்தத்தில் புலம்பெயர் நாடுகளில் ஆண்களே சம உரிக்காக தற்போதெல்லாம் போராடவேண்டிய நிலமை உருவாக்கப்படுகிறது. :( 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்
விசுகண்ணா..நான் ஒன்றும் குழம்பவில்லை..நாட்டு நடப்பை நேரில் பார்த்ததைதான் எழுதி இருக்கிறேன்..நீங்களும் இவற்றை பார்த்திருப்பீர்கள்..

 

இது ஈர்ப்பு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் சுபேஸ்

 

முன்பு ஆண்கள் அதிகாரம் செய்தபோது கூடுதலாக பெண்களை தம்முடன் வேலைக்கமர்த்தி  இருப்பார்கள்.

அதனால் இப்பொழுது பெண்கள் பெரும்பான்மையாகி  இருப்பார்கள்.

அதிலும் இனி  வரும் தலைமுறை  உங்களுக்குத்தான் பயன் அதிகம்.

இனி  பெண்கள் அதிக  ஆண்களை  தம்முடன் வேலைக்கு அமர்த்துவார்கள்.

அனுபவியுங்கோ................ :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
இது ஈர்ப்பு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் சுபேஸ்

 

முன்பு ஆண்கள் அதிகாரம் செய்தபோது கூடுதலாக பெண்களை தம்முடன் வேலைக்கமர்த்தி  இருப்பார்கள்.

அதனால் இப்பொழுது பெண்கள் பெரும்பான்மையாகி  இருப்பார்கள்.

அதிலும் இனி  வரும் தலைமுறை  உங்களுக்குத்தான் பயன் அதிகம்.

இனி  பெண்கள் அதிக  ஆண்களை  தம்முடன் வேலைக்கு அமர்த்துவார்கள்.

அனுபவியுங்கோ................ :D  :D  :D

 

விசுகு அண்ணா.. இது சினிமா ஜோக்குக்கு நல்லா இருக்கும்.. ஆனால் யதார்த்தம் என்பது வேறுபட்டுள்ளது..!

 

வீட்டுக்குள்ள பதிங்கிக் கிடந்த பெண் எனும் மனித வலுவை மனித இன வளர்ச்சிக்கு பயன்படுத்தத் துணிந்தவனும் ஆணே.. அந்த வலுவை கட்டி வளர்த்தவனும் ஆணே. அவனிடம் போய்..

 

இன்றும் கூட சில துறைகளில் பெண்கள் வேலைக்கு அமரத் தயங்குகிறார்களே.. அதற்கு நீங்கள் என்ன காரணத்தைக் கண்டுபிடிச்சு வைச்சிருக்கீங்க.............???????! ஆணாதிக்கம் என்றும் ஒரு ஆணே பேசிக்கிட்டு இருப்பதில் அர்த்தமில்லை. இன்று ஆண்கள் பல வழிகளிலும் அடிப்படை உரிமைகளை இழந்து வாழத் தள்ளப்படும் நிலையும் இந்த உலகில் உள்ளது என்ற புரிதல் இன்றி  உங்களைப் போன்றோர்.. பழைய பெண்ணிய சித்தாந்தத்துக்குள் இன்னும் கட்டிக்கொண்டு கிடப்பது கவலைக்கிடம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
விசுகு அண்ணா.. இது சினிமா ஜோக்குக்கு நல்லா இருக்கும்.. ஆனால் யதார்த்தம் என்பது வேறுபட்டுள்ளது..!

 

வீட்டுக்குள்ள பதிங்கிக் கிடந்த பெண் எனும் மனித வலுவை மனித இன வளர்ச்சிக்கு பயன்படுத்தத் துணிந்தவனும் ஆணே.. அந்த வலுவை கட்டி வளர்த்தவனும் ஆணே. அவனிடம் போய்..

 

இன்றும் கூட சில துறைகளில் பெண்கள் வேலைக்கு அமரத் தயங்குகிறார்களே.. அதற்கு நீங்கள் என்ன காரணத்தைக் கண்டுபிடிச்சு வைச்சிருக்கீங்க.............???????! ஆணாதிக்கம் என்றும் ஒரே ஆணே பேசிக்கிட்டு இருப்பதில் அர்த்தமில்லை. இன்று ஆண்கள் பல வழிகளிலும் அடிப்படை உரிமைகளை இழந்து வாழத் தள்ளப்படும் நிலையும் இந்த உலகில் உள்ளது என்ற புரிதல் இன்றி  உங்களைப் போன்றோர்.. பழைய பெண்ணிய சித்தாந்தத்துக்குள் இன்னும் கட்டிக்கொண்டி கிடப்பது கவலைக்கிடம்..! :icon_idea:

 

நானும் இதே இனம் தான் ராசா

 

என்ன  கொஞ்சம் அடக்கி  வாசிக்கவேண்டியிருக்கு....... :(

எந்த உலகத்தில், எந்த நூற்றாண்டில் வாழ்கின்றீர்கள் ?

 

"வந்து சேரும் கிழடுகளுக்கு 16, 17 வயசுகளில் கிடைக்குதென்றால் சும்மா இருப்பானா? அதனால், நக்குண்டான் நாவிழந்தான்."

இப்படி ஒரு வசனம் எழுத உந்த மாதிரி பெயர் வைத்தவர்களால் தான் முடியும் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்
இந்த இடத்தில் கடந்தகாலங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு ஆண் பெண் தலைமைத்துவ அதிகாரிகளின் போக்குகள் குறித்து (தமிழர் விடயம் தொடர்பில்) ஒரு உறுத்தலான விடயத்தை சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதென கருதுகின்றேன்.
 
எந்த ஒரு ஆண் அதிகாரியும் தமிழர் விடயத்தில் தனது கருத்துக்களையும் அறிக்கைகளையும் தமது பதவியின் காலத்தில் நியாயமான முறையிலும் உண்மையான வகையிலும் வழங்கவில்லை என்பது என் வாதம். அதற்கான மெய்யான காரணம் என்னவென்றால் அவர்கள் வந்து இறங்கியவுடன் கபட சிங்கள அரசு அவர்களை வீழ்த்துவதற்காக கவனிக்கின்ற விதம். அதனால்தான் அவர்கள் எப்போதும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் சார்பாகவுமே நடந்து கொண்டார்கள் கொண்டுள்ளார்கள். அது என்ன கவனிப்பு என்று கேட்கின்றீர்களா? அதுதான் விதம் விதமான இளம் பெண் குட்டிகளின் தாலாட்டுதல்கள். வந்து சேரும் கிழடுகளுக்கு 16, 17 வயசுகளில் கிடைக்குதென்றால் சும்மா இருப்பானா? அதனால், நக்குண்டான் நாவிழந்தான்.
 
ஆனால், மேற்சொன்ன விடயம் தொடர்பில் வருகை தரும் பெண் அதிகாரிகளை நயவஞ்சக சிறிலங்கா இனவாதிகள் இந்த வலைக்குள் வீழ்த்த முடியாமையினால் இவர்களின் கூற்றுக்களும் அறிக்கைகளும் நேர்மையானவையாகவும் நடுநிலைமையானவையாகவுமே இருந்தன என்பது கண்கூடு.
 
இவைகள்தான்  விடயம் தொடர்பில் ஆண் பெண் அதிகாரிகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகள்.

எங்கை  இருக்கிறியள் தமிழீழன் இமெல்டா சுகுமார் தொடக்கம் சார்ள்ஸ்,யோகேஸ்வரி பற்குணராஜா வரைக்கும் நேர்மையாவா அறிக்கை விட்டவை

  • தொடங்கியவர்
எங்கை  இருக்கிறியள் தமிழீழன் இமெல்டா சுகுமார் தொடக்கம் சார்ள்ஸ்,யோகேஸ்வரி பற்குணராஜா வரைக்கும் நேர்மையாவா அறிக்கை விட்டவை

 

இந்த இடத்தில் கடந்தகாலங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு ஆண் பெண் தலைமைத்துவ அதிகாரிகளின் போக்குகள் குறித்து (தமிழர் விடயம் தொடர்பில்) ஒரு உறுத்தலான விடயத்தை சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதென கருதுகின்றேன்.

 

வாதவூரன், மேலேவுள்ளதை மீண்டும் கொஞ்சம் நோக்குங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் கவனிக்கவில்லை



ஆனால் அவர்களும் தான் சும்மா அறிக்கை அறிக்கையா விட்டிச்சினமே ஒழிய எந்த ஆக்கபூர்வமான செயற்பாடும் செய்யவில்லையே.ஆக பெண் அதிகாரிகளால் பாசம் போல் வேஷம் போடப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு தமிழீழன் பதிவுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் வளர்ந்து சிறந்த ஆளுமையுடன் தமது காரியங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைமை வந்தாலும் பிள்ளைகளை விட தமக்கு அதிக காலம் வாழ்ந்த அனுபவம் உள்ளதால் பிள்ளைகளைச் சிறுவர் பராயத்தில் இருப்பவர்கள் போன்று நினைத்து நடாத்தும் சிலரைப் பார்த்திருக்கின்றேன். இதில் ஆண் பெண் பேதமில்லை.

 

பிள்ளைகள் வளர்வதே தெரியாமல் ஓடி ஓடி ஓடாகத் தேய்ந்து உழைக்கும் இயந்திரத்தன்மையால் வாழ்வின் தருணங்களை இழப்பதை விட சமநிலை கொண்ட வாழ்வை சந்தோசமாக வாழப் பழகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 



Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.