Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலமான இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்த விரும்பவில்லை: அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kuru1(1).jpg
நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை மேலும் கட்டுமீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுவதற்கு நான் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வு துறையா இங்கு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

"இந்த நாட்டில் கொழுந்து விட்டு எரிகின்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் நாங்கள் மாட்டிக்கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எவ்வாறு அணுகப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்வீட்டு சில்லறை பிரச்சினைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாது  முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இன்றுள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு இருப்பதையே விமர்சனப் பார்வையோடு நோக்குகின்றனர். 

பத்திரிகைகளில் அவ்வாறான கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருப்பதைக் காணலாம். முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஒருவிதமான மௌன விரதத்தை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பதாக விமர்சனைக்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் உரிய தீர்வுகளைக் காண வேண்டும் என்று ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் வெளிப்படுத்துகின்ற காலத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். 

முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் வீரியம் சம்பந்தமாக நிறைய கேள்விகளை தொடுக்கின்றார்கள். இந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? இது அரசியல் பிரதிநிதிகளை உற்பத்தி செய்து உருவாக்குகின்ற வெறும் தொழிற்சாலையா எனக் கேட்கிறார்கள். 

இந்தக் கட்சியில் இருந்து மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படுபவர்களை சூறையாடிக்கொள்கிறார்கள். கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு அவ்வாறு அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போனவொரு கூட்டம் இருக்கிறது. இந்தக் கட்சியினுடைய அரசியல் பலம் முக்கியம் வாய்ந்தது. ஆனால் இந்தக் கட்சியின் மீது ஒரு சந்தேகப் பார்வை நிலவத்தான் செய்கிறது. 

வேறு கட்சியிலிருந்து வந்து மீண்டும் அடுத்த தேர்தலில் மாறி விடுவார்களா என்ற ஒரு சந்தேகம் இல்லாமல் இல்லை. இந்த நம்பிக்கை இடைவெளியினால் அதிகமாக சங்கடப்படுபவர்களாக நானும் எனது செயலாளர் நாயகமும் இருக்கிறோம். ஏனென்றால் எங்களது கட்சியின் ஒவ்வொரு அரசியல் உயர்பீட கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடிப்பதுண்டு. 

பிரச்சினைகளை கையாள்வதில் எங்களுக்குள்ளே தடுமாற்றம் இருக்கிறதா என்றும் யோசிக்கிறார்கள். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திற்குப் பிறகு எத்தனையோ விடயங்கள் நடந்தாகிவிட்டன. குருநாகல் நகருக்கு அண்மையிலும் அவ்வாறானதொரு பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அது பற்றி நாங்கள் பாதுகாப்புச் செயலாளருடன் கதைத்தோம். போதாக்குறைக்கு பலசேனா என்ற ஒன்று இப்பொழுது பல இடங்களில் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளது. 

மஹரகமயில் ஒரு நவீன ஆடை விற்பனை நிலையத்தின் மீது ஆர்ப்பாட்டம் தொடுக்கப்பட்;டது. ஹலால் சான்றிதழுக்கும் புடைவை விற்பனை நிலையத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இது முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடுகின்ற முயற்சியாகும். 

இன ரீதியான பிரச்சினைகளை எதுவுமே அறியாத அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய விஷமத்தனமான கருத்துகளை பரப்பும் இயக்கத்தினர் பயம் பீதி எதுவுமின்றி அவ்வாறான முயற்சிகளில் துணிச்சலுடன் ஈடுபட்டிருக்கிறார்கள். 

ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. ஏனெனில், அரசியலமைப்பில் கருத்துச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிந்தனைச் சுதந்திரம், சமய வழிபாட்டுச் சுதந்திரம், ஆர்பாட்டம் செய்வதற்கான உரிமை என்பன எல்லோருக்கும் உள்ளது. 

ஆனால், இப்பொழுது நடக்கும் விடயங்களை அரசாங்கம் பொறுப்போடு கையாள வேண்டும். இன்னொரு சமூகத்தோடு மோதலை உருவாக்குவதற்கு வலிந்து சண்டையை வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த விஷமத்தனமான விடயங்களை கருத்துச் சுதந்திரம் சிந்தனை சுதந்திரம் என்பவற்றின் பெயரில் செய்வதற்கு தடை விதிப்பதற்கு அரசியல் அமைப்பிலேயே அரசாங்கத்திற்கு இடம் இருக்கிறது. 

அதை செய்யாது, இவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள சக்திகளுக்கு ஏதாவது ஒத்தாசை வழங்கப்படுகிறதா என மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

30 வருடமாக நீடித்த யுத்தத்தை வென்ற ஜனாதிபதிக்கு சமாதானத்தை ஏற்படுத்த எத்தனையோ உயிர்களை பறிகொடுத்து பெற்ற வெற்றியின் பின்னர் மீண்டும் இன்னுமொரு பாரிய அனர்த்தத்திற்கு வழிகோலுவதற்கு இடமளிப்பதா என்பதுதான் இன்று எழுந்துள்ள கேள்வி. 

பலவீனமானவர்களை பாதுகாக்க முடியாத அரசாங்கம் ஓர் அரசாங்கமே அல்ல என நான் முன்னரே விமர்சித்திருக்கிறேன்.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதே கேள்வியை மீண்டும் எழுப்ப வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இனி மேலும் சகித்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்கு மனிதனுடைய மதிநுட்பத்தை அவமதிக்கின்ற ஒரு கூட்டம் இடத்திற்கு இடம் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. நாளையே இந்த நாட்டை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என்ற தோரணையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

முஸ்லிம்களை வந்தான் வரத்தான்களாகவும் கள்ளத் தோணிகளாகவும் சித்திரிக்கின்ற ஒரு போக்கை நாங்கள் காண்கிறோம். இப்பொழுது அது கட்டுப்பாட்டை மீறியிருக்கிறது.  1914 இல் ஒரு கலவரம் மூண்டபோது அதன் உண்மையான அடிப்படை முஸ்லிம்களுக்கு இருந்த வியாபார மேலாதிக்கம் என்று கூறப்பட்டது. 

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் என்பதற்காக கரையோர சிங்களவர்கள் தோற்றுவித்த ஒன்றாக அது நோக்கப்பட்டது. அது தொடர்பாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் லண்டன் வைட் ஹோலில் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு சார்பாக பேசினார் என்ற விடயத்தை பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது. 

அன்றைய ஆங்கில அரசாங்கம் அந்த கலவரத்தை அடக்குவதற்கு தனது முழு பலத்தையும் பிரயோகித்தது. எத்தனையோ கலகக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு கொலையும் செய்யப்பட்டார்கள்.அப்போது கூடிய அதிகாரத்தை ஆங்கில அரசாங்கம் பிரயோகித்தது என்பது இன்னும் ஒரு வடுவாக இருக்கிறது. 

அன்று ஆரம்பித்த எதிர்ப்பு முஸ்லிம்களின் பொருளாதார  ஆதிக்கத்தின் மீது இன்றும் மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் பெரும்பாலான முஸ்லிம்கள் வறுமையின் கீழ் வாழ்கிறார்கள் என்பது தெரியாத விஷயமல்ல. வேறெந்த சமயத்திலும் இல்லாத சகிப்புத் தன்மை இஸ்லாத்தின் உண்டு. அந்த சகிப்புத் தன்மையின் காரணமாகத்தான் இஸ்லாம் உலகளாவ வளர்ந்திருக்கிறது. அந்த உச்சக் கட்ட சகிப்புத் தன்மையோடுதான் நாங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கின்றோம். 

இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை ஒழித்து மறைத்து செய்யப்படுவது அல்ல, பகிரங்கமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறிருக்க, தொடர்ந்து பொறுப்புவாய்ந்த அரசாங்கம் இந்த விடயத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? 

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பொலிஸார் என்ன செய்கிறார்கள். புலனாய்வுத் துறை என்ன செய்கிறது? எங்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை இடைவெளி காரணமாகவே ஆவேசப்படாது பொறுமை காத்தோம்.
மதிநுட்பத்தோடு சில விடயங்களை அணுக வேண்டும் என்பதால் அவ்வாறு பொறுமை காத்தோம். ஒரு தவறான நேரத்தில் பேசி நாட்டுக்கோ நாட்டுத் தலைமைக்கோ சர்வதேச ரீதியாக அபகீர்த்தி ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. 

ஏனெனில், இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் முயற்சி மேற்கொள்ளப்பட்ட பொழுது அரசை பாதுகாப்பதற்காக நாங்கள் அரபு நாடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டினோம். அதற்கு உரிய கைமாறு இதுதானா என்ற அடிப்படையில் நாங்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து கிழக்கில் நாங்கள் ஆட்சியமைக்க முன்வரவில்லை என்ற ஒரு விடயம் பற்றி கூறப்படுகின்றது. சேதமற்ற ஒரு விட்டுக்கொடுப்பை சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

சேதாரமில்லாத ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்து இந்த இயக்கத்தை அழியவிடாது பாதுகாத்திருக்கிறோம். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்திருக்கும் எமக்கு ஒரு பெறுமானம் வேண்டும் அல்லவா?  அது ஒரு கனதி இருக்க வேண்டும் அல்லவா? 

இத்தகைய சந்தர்ப்பத்தில் அதனை பிரயோகிக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் உள்ளோம். அமைச்சர் பௌசியுடைய இல்லத்தில் ஒன்றுகூடி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் நாளை பேசப்போகிறோம். ஆனால் மூடிய அறைக்குள் பேசிப் பேசி எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே. இப்பொழுது வெளிப்படையாகவே பேசியாக வேண்டிய கட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். 

இதை விடவும் காட்டமாக பேச முடியும். ஆனால் நிதானத்தை இழக்க விரும்பவில்லை. இத்தகையை முஸ்லிம் விரோத நடவடிக்கை இன்னும் கட்டு மீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. இந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுவதற்கு இடமளிக்க நான் விரும்பவில்லை. 

ஏனென்றால், அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த இந்த சக்திகள் முயல்கின்றன. எங்கிருந்து, எந்த வெளிச்சக்திகளிடமிருந்து இந்த சக்திகளுக்கு உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வுத் துறையா இங்கு இருக்கிறது? அவ்வாறானால் எங்களது புலனாய்வுத் துறை எதற்காக இருக்கிறது? 

30 வருடங்கள் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் தடுமாறிய ஒரு நிலையில் மூன்று வருடங்களுக்குள் அதனை முடித்து வைத்த இந்த ஜனாதிபதிக்கு ஒத்துழைத்த இராணுவ புலனாய்வுத் துறையும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றன என மக்கள் கேட்க தலைப்பட்டிருக்கிறார்கள். 

ஜனநாயக உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பயன்படுத்தி விசமத்தனமாக  இனக்கலவரத்தை ஏற்படுத்த எத்தனிக்கும் சக்திகளின் பின்னணியில் செயல்படும் வெளிச்சக்திகளை கண்டுபிடித்து கட்டுப்படுத்த ஏன் முடியாது என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் இந்த கேள்வி எழுகின்றது.

இதைவிட காணிப் பிரச்சினையை குறிப்பாக வடக்கு கிழக்கில் பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. அதனை நிதானமாக கையாள வேண்டியிருக்கின்றது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சிலர் அதனை தங்களுக்கு புள்ளிகளை போட்டுக்கொள்வதற்காக அதனைச் சிக்கலாக்கி இருக்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்க புதிய உள்ளுராட்சி தேர்தல் நடைமுறை சிறுபான்மை கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு வெளியே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மிகவும் சமயோசிதமாக நடந்துகொண்டு அவற்றில் எமது பிரதிநிதித்துவத்தை எவ்வாறு கூட்டிக்கொள்ளலாம் என்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் குருநாகல் மாவட்டத்தின் மாறி மாறி வந்த மாகாண சபைத் தேர்தல்களில் உறுப்பினர்கள் இருவரை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதில் நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். இதனால் இந்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு தனியான முகவரியை எங்களால் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.

முரண்பாடுகள் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. அதனை முற்றாக இல்லாமல் செய்துவிட முடியாது. விமர்சனங்கள் வேண்டும், அத்தகைய விமர்சனங்கள் திறந்த தன்மை கொண்டனவாகவும் இருக்க வேண்டும். தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம் விமர்சனங்களை ஜீரணிக்க கூடிய தன்மையாகும்' என்றார். 

இந்த நிகழ்வில் கட்சி செயலாளர் ஹசன் அலி, வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, தொழிலதிபர் தஸ்லீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
kuru2(1).jpg
kuru3(1).jpg
kuru4.jpg
kuru5.jpg

பௌசியின் வீட்டில் கூட்டம் போட்டால் என்ன, கோடியில் கூட்டம் போட்டால் என்ன பௌசி SLFP யுடன் krazy glue போட்டு ஒட்டப்பட்டிருப்பவர்.  பௌசியுடன் சேர்பவர்கள் பன்றியுடன் சேரும் கன்றுகள் தான்.

 

 

உள்ளுர் ஆட்சி தேர்தல் பிற்போடப்பட்டதாக தானே கேள்விப்பட்டேன். அப்புறம் எதற்கு மு.கா.முதலாளி இப்படியெல்லாம் முறுக்குகிறார். யாருக்காவது தேர்தல் திகதி தெரியுமா?

 

 

 

"இதை விடவும் காட்டமாக பேச முடியும். ஆனால் நிதானத்தை இழக்க விரும்பவில்லை. இத்தகையை முஸ்லிம் விரோத நடவடிக்கை இன்னும் கட்டு மீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. இந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுவதற்கு இடமளிக்க நான் விரும்பவில்லை. "

 

ஜெ.ஜெ. பொன்னம்பலம். மு.கா. வின் வீரப்பலம்! 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தன்னுடைய அரசியல் நலனுக்காக ..விடுதலைபுலிகலை போரில்வென்ற விடயத்தை அடிக்கடி அழுத்துவது போல் தெரிகிறது....இவர்களெல்லாம் ஒரு.........(மீறி எழுதினால்...இங்கு கத்தி விழும்)

ஒபாமா தனது அமைச்சரவையில் தனது எண்ணங்களை "ஏன்" "எதற்கு" என கேள்விகளை கொண்டுள்ளார்.

 

மகிந்தா  தனக்கு 'ஓ' போடுவர்களை கொண்டுள்ளார். பிழை மகிந்தாவில் அல்ல.

ஒபாமா தனது அமைச்சரவையில் தனது எண்ணங்களை "ஏன்" "எதற்கு" என கேள்விகளை கொண்டுள்ளார்.

 

மகிந்தா  தனக்கு 'ஓ' போடுவர்களை கொண்டுள்ளார். பிழை மகிந்தாவில் அல்ல.

 

ஒபாமாவின் இன்றைய பேச்சில் சர்வதேசநாடுகளில் அடக்கு முறையால் குறுக்கவைக்கபட்டிருக்கும் மக்களையும், அமெரிக்காவின் கடமையையும் பற்றி சில வரிகள் கூறி யிருக்கிறார். பேச்சை கிடைப்பவர்கள் இணைத்துவிடுங்கள். நேரம் போட்டு மொழிபெயர்க முடிந்தாலும் நல்லது போன்றிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாண்டா உலகிலேயே சகிப்புதன்மையுடைய சமயம் இஸ்லாம்தான் ரிசானாவின் கழுத்தை அறுத்த போது கூட பல்லுளிமங்கன் மாதிரி சகிப்புத் தன்மை காட்டிதைத்தான் பாரத்தோமே!!!சவூதியின் சகிப்புத் தன்மை கழுத்தை வெட்டியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.nytimes.com/2013/01/21/us/politics/obamas-second-inaugural-speech.html?_r=0

The following is a transcript of President Obama’s second inaugural speech. For anyone who wants something shorter, The Times has condensed the speech in a way that keeps its main themes. No words have been changed, but roughly 60 percent of the text has been removed.

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து கிழக்கில் நாங்கள் ஆட்சியமைக்க முன்வரவில்லை என்ற ஒரு விடயம் பற்றி கூறப்படுகின்றது. சேதமற்ற ஒரு விட்டுக்கொடுப்பை சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

சேதாரமில்லாத ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்து இந்த இயக்கத்தை அழியவிடாது பாதுகாத்திருக்கிறோம். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்திருக்கும் எமக்கு ஒரு பெறுமானம் வேண்டும் அல்லவா?  அது ஒரு கனதி இருக்க வேண்டும் அல்லவா? 

 

முஸ்லிம்களை வந்தான் வரத்தான்களாகவும் கள்ளத் தோணிகளாகவும் சித்திரிக்கின்ற ஒரு போக்கை நாங்கள் காண்கிறோம்.

 

 

நாங்கள் முஸ்லிம்களை அப்படிப் பாக்கவில்லை, தொப்பி பிரட்டிகளாகத் தான் பாக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுவதற்கு இடமளிக்க நான் விரும்பவில்லை. "

 

இதை வெளியல் இருந்து கேக்கறவன் எல்லாம் கேணை,,,

அவர்களே பலவீனமாகிட்டாலும் ...நீங்கள் அப்போது பலமானவரிடம் போக போகிறீர்கள்.. இதுதானே உலக நியதி..

டிஸ்கி:

ஓவர் பேச்சு ஒடம்புக்கு சூடு..
 

ஆமாண்டா உலகிலேயே சகிப்புதன்மையுடைய சமயம் இஸ்லாம்தான் ரிசானாவின் கழுத்தை அறுத்த போது கூட பல்லுளிமங்கன் மாதிரி சகிப்புத் தன்மை காட்டிதைத்தான் பாரத்தோமே!!!சவூதியின் சகிப்புத் தன்மை கழுத்தை வெட்டியுள்ளது.

 

கக்கீம் சகிக்கிறாரொ இல்லையோ, சரத் என் சில்வா வருவதாய் இருந்தால் இவர் பொறுமை காக்க வேண்டும்.

ஏதாவது பேசினால் பதவி போய்விடும். :D

நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை மேலும் கட்டுமீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுவதற்கு நான் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வு துறையா இங்கு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

நீங்கள் நினைத்தால் அரசாங்கத்தின் ஸ்திர தன்மையை பலவீனப்படுத்த உங்களால் முடியுமா ஹக்கீம் சார்?

உலக நாடுகளே எதுவும் செய்ய முடியாமல் திணறி நிற்கின்றன. இதற்குள் நீங்கள் வேறு பகிடி விட்டுக்கொண்டு... :D

வெளிச்சக்திகளிடம் இருந்து அவர்களுக்கு ஒத்தாசை கிடைக்கவில்லை. அரசாங்கமே திட்டமிட்டு முஸ்லிம்கள் மேல் பிரச்சனைகளை கட்டவிழ்த்து விடுகின்றன. :D

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.