Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வள்ளுவன் இளங்கோ பாரதி என்ற வரிசையில் வந்தவர் மட்டுமன்றி...நானும் ஏமாந்தேன்... - ஒரு அனுபவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சிலநட்களுக்கு முன்னர் லாட்சப்பலில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்துக்கு ஓய்வாக இருந்ததால் போவம் என்று நுழைந்தன்...சும்மாவே அந்த உணவகம் சனத்தால் நிரம்பி வழியும்..இதில நான் நுழைந்தது மதிய உணவு நேரம்..சனம் சொல்லி வேலை இல்லை...மேசை எல்லாம் நிரம்பி இருந்தது...பின்னுக்கு ஒரு மூலையில் மூன்றுபேர் உட்காரும் மேசை ஒன்று அப்பொழுதுதான் காலியாகிக்கொண்டிருந்தது..சரி அதில் போய் உடகாருவம் என்று போனபோது தம்பி தம்பி என்றுகொண்டு ஓடி வந்த வெயிற்றர் தம்பி நீங்கள் ஒராள்தான அதோ அந்த ரேபிள்ள உடகாருங்களன் ப்ளிஸ் தம்பி என்று அழுவாரைப்போல கேட்டு நெளிந்த வெயிற்றரின் வேண்டுகோளை தட்டமுடியாமல் அவர் சுட்டிக்காட்டிய ரேபிளைபார்த்த போது மூன்றுபேர் உட்காரக்கூடிய அந்த மேசையில் வயதான தந்தையுடன் ஒரு 22 அலது 23 வயது மதிக்கத்தக்க இளம் பொண்ணு...அந்தப்பொண்ணுக்கு நேர் எதிர இருந்த கதிரைதான் காலியாக இருந்தது..யாராவது புதிய ஆட்கள் முன்னால் இருந்தாலே நான் சப்பிடமாட்டன்..ஒருமாதிரி இருக்கும்..இதில ஒரு இளம்பெண் முன்னால...வெயிற்றருக்கு வேற ஓ.கே சொல்லீட்டன்..சனம் வேற சுத்தி..வேணாம் என்று சொல்லிவிட்டு போகவும் முடியாது..அந்தப்பொண்ணு வேற இடைக்கிடை குருகுரு எண்டு பார்க்குது..வேற வழி இல்லாமல் அரைமனசோட போய் உட்காந்தன்...
 
பொண்ணு தொலைபேசியில் இடையிடையே ப்ரெஞ்சையும் தமிழையும் கலந்து அன்ரி அன்ரி என்று யார்கூடவோ பேசிக்கொண்டிருந்தார்...தகப்பன் வெள்ளைசேட்டுபோட்டு இன்பன்னி ரவுசர் போட்டிருந்தார்..பொண்ணு பஞ்சாபி அணிந்திருந்தார்..முழுகி தலையை ஸ்ரெயித் பண்ணி இருந்தார்..தகப்பன் மகள் இருவரது நெற்றியிலும் சிறிதாக கோடுபோல் திருநீற்றுக்குறி..கோயில் போய் வந்திருக்கிறார்கள் போல..அப்படியே பதுமைபோல அமைதியாக பேசிக்கொண்டிருந்தார்...
 
சற்று நேரத்தில் அந்தப்பொண்ணிண் சுயரூபம் தெரிந்தது..வெயிற்றர் எனக்கு மனுக்காட்டை தந்துவிட்டுபோனார்...நான் மெனுக்காட்டை குனிஞ்சு பாத்துக்கொண்டிருக்க டொக்கென்று வெயிற்றர் தகப்பனுக்கும் மகளுக்கும் இரண்டு ப்ளேற்களில் ஏதோ உணவு அயிற்றம்கொண்டுவந்து வைத்துவிட்டு சென்றார்..குனிஞ்ச தலை நிமிராமல் இருந்த என் காதில் கறுக்கென்று ஒரு சத்தம்..என்னடான்னு நிமிர்ந்துபாத்தால் பொண்ணு சிக்கன் லெக்பீஸொன்றின் காலைப்பிடித்து துடையை கடித்து இழுத்து இழுத்து சாப்பிட்டிக்கொண்டிருந்தார்..தக்கப்பன்காறரைபார்த்தால் ரொட்டியையும் சீனிச்சம்பலையும் தொட்டு தொட்டு அப்பாவியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது மனுசன்...அடுத்து கொக்ககோல ரின்னை ஒன்றை அந்தப்பொண்ணுக்கு கொண்டுவைத்த வெயிற்றர் வேறு என்ன வேண்டுமென்று கேட்க ரத்தவறை இருக்கா என்றார்..நான் அப்படியே சாக் ஆகிட்டன்...எனக்கு அப்படியே அந்தப்பொண்ணிண் அழகிய முகம் மெதுவாக தலைவிரிகோலமாகி கையில் சூலத்துடன் ஆடும் கடவாய்ப்பற்கள் முழைத்த பத்ரகாளிபோல் தோன்றியது..
 
இல்லீங்க..அது புதன்கிழமைகளில்தான் கிடைக்கும் என்றதும் அப்ப குடல்க்கறி இருக்கா என்று அடுத்த வன்முறைதாக்குதலை தொடுத்தார்...
 
இல்லீங்க இண்டைக்கு ஆட்டுதலையிலை செய்த பிரட்டல் இருக்கு தரவா என்றதும் ஓ.கே என்றவரிடம் அப்பாவுக்குமா எண்டு வெயிற்றர் கேக்க இல்ல அவர் சாப்பிடமாட்டார் அவர் வெஜ்தான் என்று வெக்கப்பட்டு பொண்ணு சொல்லவும் தகப்பன் காறன் எனக்கு இன்னுமொரு ரொட்டி தாங்கோ போதும் என்று அப்பாவியாக சிரித்தார்..அப்படியே என்னிடம் திரும்பிய வெயிற்றர் அண்ணைக்கும் தலைக்கறியோட ஒரு சாப்பாடு ஓடர் பண்ணட்டோ எண்டதும்..அண்ணை இருங்கோ ஒருக்கா பாத்றூம் போயிட்டு வந்து ஓடர் பண்ணுறண் எண்டு பயத்தில் உழறியபடியே கிழம்பி பேயறஞ்சவனாய் நேர வீடுவந்து சேந்தவன்தான்..அண்டைக்கு முழுக்க சாப்பாடு தண்ணி இல்லை...
 
கம்பன் ஏமாந்தான்...இளம்கன்னியரை ஒரு மலரென்றானே..கற்பனை செய்தானே...
 
கம்பன் மட்டுமன்றி நானும் ஏமாந்தேன்... :(  :(  :(
 
கண்ணதாசனும் அப்படி ஒரு அதிர்ச்சியின் பின்னாடிதான் இப்படி ஒரு பாடலை எழுதி இருப்பார் போல.. :D
 
Edited by சுபேஸ்

ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அந்த பெண் இப்படி தான் இருப்பார் என்று கற்பனை செய்தது உங்கள் பிழை சுபேஸ் அண்ணா. :D

பொண்ணு தொலைபேசியில் இடையிடையே ப்ரெஞ்சையும் தமிழையும் கலந்து அன்ரி அன்ரி என்று யார்கூடவோ பேசிக்கொண்டிருந்தார்...தகப்பன் வெள்ளைசேட்டுபோட்டு இன்பன்னி ரவுசர் போட்டிருந்தார்..பொண்ணு பஞ்சாபி அணிந்திருந்தார்..முழுகி தலையை ஸ்ரெயித் பண்ணி இருந்தார்..தகப்பன் மகள் இருவரது நெற்றியிலும் சிறிதாக கோடுபோல் திருநீற்றுக்குறி..கோயில் போய் வந்திருக்கிறார்கள் போல..அப்படியே பதுமைபோல அமைதியாக பேசிக்கொண்டிருந்தார்...

அந்த பெண் பிரெஞ்சையும் தமிழையும் மாறிமாறி கதைத்ததை பார்த்த போதே அந்த பெண் பிரான்சில் தான் வளர்ந்தவர் என்பது தெரிகிறது. கோவிலுக்கு போகும் ஆர்வம் உள்ளதோ இல்லையோ தந்தையாருக்காக சென்றிருக்கலாம். இங்கு வளர்பவர்கள் அதிக பேர் அசைவ உணவு என்றால் நன்றாக சாப்பிடுவார்கள்.

இச்சம்பவத்தை வைத்து இது தான் அவர் சுயரூபம் என்று கூற முடியாது.

இதே செயலை ஓர் ஆண் செய்திருந்தால் உங்களுக்கு தோற்றியிராது. பெண் என்பதால் தான் இப்படி நினைத்துள்ளீர்கள். :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி

இதுக்கெல்லாம பயந்தால் எப்படி???

இன்னும் எவ்வளளளளளளளளளளளளவோ இருக்கு................ :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அந்த பெண் இப்படி தான் இருப்பார் என்று கற்பனை செய்தது உங்கள் பிழை சுபேஸ் அண்ணா. :D

அதுதான் நான் செய்த தப்பு...சும்மா சாதாரண பிழை இல்லை..பெரிய பிழை.. :D

தம்பி

இதுக்கெல்லாம பயந்தால் எப்படி???

இன்னும் எவ்வளளளளளளளளளளளளவோ இருக்கு................ :lol:  :D  :D

வளர்ந்துவார பெடியளை வேப்பமரத்தில பேய் இருக்கெண்டு சொல்லி ஊரில் எம் வீரத்தை முளையிலே கிள்ளுவதைப்போல்..இப்படி பயமுறுத்துகிறீர்களே அண்ணா.. :D ஆறுதல் வார்த்தைகள் தரவேண்டிய இடத்தில் இப்படி முளையிலேயே பயமுறுத்துதல் நியாயமா..இது தகுமா? :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சிக்கின் லெக்பீசையும்,ஆட்டுத்தலை பிரட்டலையும் சாப்பிட்டதற்கே இப்படி பயந்து போய் எழுதுகிறீர்கள் சுபேஸ்...அந்த பொண்ணுக்கு அகோர பசியாயிருக்கும் அல்லது வீட்டில அவங்கட அம்மா இப்படி சமைச்சு கொடுத்திருக்க மாட்டார் இந்தப் பொண்ணு ஆசையில சாப்பிட்டு இருக்கும்.
 
இங்கே கோயில்களுக்குப் போனால் தெரியும் ஆண்களும் சரி,பெண்களும் சரி சோத்தை றவுண்டு கட்டி அடிப்பினம்...எனக்கென்ன கவலை என்டால் அவர்களில் சிலர் எப்படி சாப்பிட்டாலும் அவர்களுக்கு உடம்பே வைக்கிறதில்லை...எனக்கென்டால் கொஞ்ச சோறு சாப்பிட்டாலே வண்டி வெளியாலே தெரியும்.
 
ஒரு உணவகத்தில் போய் மற்றவர்களோடு மேசை பங்கிட்டதே தப்பு...அதிலும் தப்பு அந்த பெண் சாப்பிட்டதைப் பார்த்துக் கண் வைச்சது...அவருக்கு எப்படி செமிச்சிருக்கும்?...இதே ஒரு பெடியன் என்டால் வந்து இப்படி எழுதியிருப்பீங்களா சுபேஸ்?...ஒரு பெண் இன்ன சாப்பாடு தான் சாப்பிட‌ வேண்டும் இவ்வளவு தான் சாப்பிட‌ வேண்டும் என்று நீங்களுமா அளவுகோல் போடுறீங்கள் சுபேஸ்                
  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன்,இளங்கோ,பாரதி என்று தலைப்பு எழுதி இருக்க நானும், ஏதாச்சும் நல்ல விடையங்களை தூக்கிக் கொண்டு ஓடலாம் என்று வந்து பார்த்தால் ச்சா இதுவா பிரச்சனை.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சி நீ அனுபவப்பட இன்னும் நிறைய இருக்கு.. :lol:

ஆனாலும் அதை ரசிப்பதை விட்டு இப்படி ஃபீல் பண்ணது கொஞ்சம் ஓவர் தான். :icon_mrgreen::icon_idea:

(லைக் முடிஞ்சுது அப்புறமா வாறேன்)

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்து உருண்டு பிரண்டு சிரித்தேன்..  :lol:  இன்னும் அதிர்ச்சிகளைத் தாங்கும் பக்குவத்தை உங்களுக்கு ஆண்டவன் அளிப்பாராக!!! :D

கிகிகி...எதைசாப்பிடணும் எதைச்சாப்பிடக்குடாதென்பது அந்த பெண்ணிண் சுதந்திரத்தில் தலையிடல்ல அக்கா..நான் அந்தபெண்ணை தப்பு சொல்லவில்லை..பிரச்சினை நெத்தியில் திருநீற்றுக்குறி..சற்றுமுன் தான் கோயில் போய் வந்திருக்கிறார்கள் போல..வந்தவர்கள் ஓடர் பண்ணிய அயிட்டங்களைப்பார்த்தே நான் பயந்துபோனன்..ரத்தவறி,தலைக்கறி,குடல்க்கறி என்பதை எல்லாம் என் வாழ்க்கையில் நான் தொட்டே பாத்ததில்லை..நினைக்கவே வாந்தி வருது..ஒவாக்...ஆனால் அவற்றை அந்த இளம் பெண் சர்வசாதாரணமாக ஓடர் பண்ணி சாப்பிட்டுக்கொன்டிருந்தார்...அதுதான் எனக்கு ஆச்சரியமாகப் போச்சு...அந்த ஆச்சரியத்தையும் தப்பான எனது எடுகோளையும் வச்சே இதை எழுதினன்...சோ நான் இதை என் பார்வையில் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமாக எனது ஒரு பார்வையில் அந்தப் பெண்ணைப்பற்றிய என் எடுகோளுக்கு ஏற்பட்ட ஏமாற்றமாகவே எழுதினேன்... 

இங்கே கோயில்களுக்குப் போனால் தெரியும் ஆண்களும் சரி,பெண்களும் சரி சோத்தை றவுண்டு கட்டி அடிப்பினம்...எனக்கென்ன கவலை என்டால் அவர்களில் சிலர் எப்படி சாப்பிட்டாலும் அவர்களுக்கு உடம்பே வைக்கிறதில்லை...எனக்கென்டால் கொஞ்ச சோறு சாப்பிட்டாலே வண்டி வெளியாலே தெரியும்.

அக்கா வயிற்றுக்கு மிகவும் உபயோகமான எழிமையான உடற்பயிற்சி செய்யும் முறையைகொண்ட வீடியோவை கீழே இணைக்கிறன்..தொடர்ந்து செய்யுங்கள்..கண்டிப்பாய் பலனை உணர்வீர்கள்...

ஒரு உணவகத்தில் போய் மற்றவர்களோடு மேசை பங்கிட்டதே தப்பு...அதிலும் தப்பு அந்த பெண் சாப்பிட்டதைப் பார்த்துக் கண் வைச்சது...அவருக்கு எப்படி செமிச்சிருக்கும்?...இதே ஒரு பெடியன் என்டால் வந்து இப்படி எழுதியிருப்பீங்களா சுபேஸ்?...ஒரு பெண் இன்ன சாப்பாடு தான் சாப்பிட‌ வேண்டும் இவ்வளவு தான் சாப்பிட‌ வேண்டும் என்று நீங்களுமா அளவுகோல் போடுறீங்கள் சுபேஸ்  

அக்கா..நானா மேசையை பங்கிட்டன்..அந்த வெயிற்றர்தான் அங்கைபோய் இருங்க எண்டு கூட்டிக்குடுத்தான்..படுபாவி... :D
 
அந்தப்பொண்ணு சாப்பிட்டதை பாத்து நான் எங்கை கண்ணு வச்சன்...அந்தப்பொண்ணுதான் என்னை பயமுறுத்தி போட்டுது... :D
 
ஜயய்யோ நான் அழவுகோள் போடலை அக்கா...என்னத்தையாவது சாப்பிட்டு தொலைக்கட்டும்..அது அந்தப்பொண்ணோட இஸ்டம்...ஆனால் இரத்தவறை,தலை,குடல் எண்டு இப்பிடி பப்ளிக் ப்ளேசில மனிசரை பயமுறுத்துவது நியாயமா..நீங்களே சொல்லுங்க.. :D

Edited by சுபேஸ்

ஜயய்யோ நான் அழவுகோள் போடலை அக்கா...என்னத்தையாவது சாப்பிட்டு தொலைக்கட்டும்..அது அந்தப்பொண்ணோட இஸ்டம்...ஆனால் இரத்தவறை,தலை,குடல் எண்டு இப்பிடி மனிசரை பயமுறுத்துவது நியாயமா..நீங்களே சொல்லுங்க.. :D

இங்கே ஆண்கள் பலரே இவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் பார்த்ததில்லை போலிருக்கு. :unsure: நான் சாப்பிடுவதில்லை. ஆனாலும் மற்றவர்கள் சாப்பிடுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். :rolleyes:

இங்கு வளர்ந்த பெண் என்பதால் வெளிநாட்டு உணவு பழக்கவழக்கமும் இருக்கும். எனவே இரத்தவறை, தலை, குடல் என்று அரியண்டப்படாமல் சாப்பிட்டிருப்பார்.

ஊரில் நல்லூருக்கு போய்விட்டு வந்து மச்சம் சாப்பிட்டவர்களையே நான் கண்டிருக்கிறேன். இந்த பிள்ளைக்கு கோவில் செல்வதில் ஆர்வம் இருந்திருக்காது. தந்தையாருக்காக சென்றிருப்பார். கோவில் சென்ற பின் அசைவ உணவு கடைக்கு கூட்டிக்கொண்டு வந்தது தந்தையாரின் பிழையே தவிர அந்த பெண்ணின் பிழை அல்ல. :rolleyes:  சிலவேளை அந்த பெண் சைவ உணவுகள் சாப்பிட மாட்டாரோ தெரியாது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஆண்கள் பலரே இவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் பார்த்ததில்லை போலிருக்கு. :unsure: நான் சாப்பிடுவதில்லை. ஆனாலும் மற்றவர்கள் சாப்பிடுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். :rolleyes:

அன்றைக்கு உங்களுக்குப் பக்கத்தில இருந்து ரொட்டி சாப்பிட்டது உங்கட மாமாதானே??!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்....... :D .

.பார்த்ததும் எடை போட்டது தான் உங்க தப்பு.

.

  ...........உலகத்தை   நன்னா  படிச்சுக்கோங்க கண்ணா

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

:"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்....... :D .

.பார்த்ததும் எடை போட்டது தான் உங்க தப்பு.

.

  ...........உலகத்தை   நன்னா  படிச்சுக்கோங்க கண்ணா

நிலா அக்கா.. நான் அடிக்கடி சொல்லுறதுதான்.. :D ஆனால் ச்ச்ச்சின்னப் பசங்க.. கேட்டால்தானே.. :lol:

அன்றைக்கு உங்களுக்குப் பக்கத்தில இருந்து ரொட்டி சாப்பிட்டது உங்கட மாமாதானே??!! :lol:

அடப்பாவி இசை அண்ணா, நான் அசைவ உணவு சாப்பிடுவதே மிகவும் குறைவு. சாப்பிட்டாலும் கூட இதெல்லாம் சாப்பிடுவதில்லை. :D

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன்,இளங்கோ,பாரதி என்று தலைப்பு எழுதி இருக்க நானும், ஏதாச்சும் நல்ல விடையங்களை தூக்கிக் கொண்டு ஓடலாம் என்று வந்து பார்த்தால் ச்சா இதுவா பிரச்சனை.... :)

யாயினி அக்கா...அங்கை நான் ஏமாந்தன்..இங்க நீங்க ஏமாந்தீங்களா...  :D

மச்சி நீ அனுபவப்பட இன்னும் நிறைய இருக்கு.. :lol:

ஆனாலும் அதை ரசிப்பதை விட்டு இப்படி ஃபீல் பண்ணது கொஞ்சம் ஓவர் தான். :icon_mrgreen::icon_idea:

(லைக் முடிஞ்சுது அப்புறமா வாறேன்)

இங்க பார்ற்றா... கலியாணம் கட்டி நாலஞ்சுமாசமாகலை..எப்பிடி பக்குவப்பட்டவனாய் பேசுறான் ஜீவா... :D என்னதான் அப்படி மாயம் செய்கிறதோ இந்த கல்யாணம்? :D

Edited by சுபேஸ்

தம்பியர் இவ்வளவு காலமும் சும்மா கற்பனைக் குதிரையில் சிறகடித்துப் பறந்திருக்கிறார் போல.  :D  

இன்னும் எவ்வளவு கண்ணதாசனின் பாடல்களைச் சந்திக்கக் கிடக்கு. :lol:

Edited by தப்பிலி

சுபேஸ் ஆயிரம் ஆயிரம் கற்பனைகளோடு அதாவது வாழ்கைத்துணையாக வருபவரைப்பற்றி இப்படித்தான் இப்படித்தான் என்று இதயத்திலே சுகமான  வரை விலக்கணம் கொடுத்து பதமான ,இதமான நினைவுகளுடன் வாழும் உங்கள் பருவத்தில் ,வயதில், நீங்கள் கண்ட காட்சி அனைத்தையம் புரட்டிப்போட்டிருக்கும். புரிந்து கொள்கிறேன் . நானும் அதே சூழலில் உருவாகியவன் என்பதில் என்னைப்போலவே உங்களை அந்த இடத்தில வைத்து பார்க்கிறேன் .......ஆனால் கண்ணுக்கு முன்னால் வெளிவேசமில்லாமல் அந்த இளம் நங்கையின் செயற்பாட்டிலிருந்து அவள் நல்ல ஒரு பெண்ணாக இருப்பார் என்பது திடம்....ஆனால் திருமணத்திற்கு முன் வெட்கி நாணி குனிந்து நடந்தவர்கள் எல்லாம் .தி,இக்குப்பின் ....எதிர்மாறான செயல்பாடாகவே நீங்கள் பார்க்கக்கூடும் ...........விதி விலக்குகளுமுண்டு ....அந்த விதிவிலக்கையே இப்போ ,இன்று வரை .இன்னுமும் தேடித்திரிகிறேன் .... :D ..........ம்ம்ம்ம் ஏமாற்றமே ?????

ஆகவே பேசாமல் திருமணமாகிய பின் கம்பன் ஏமாந்தான் என்ற பாடலை பாடாமல் .................

:lol:  :lol:  :lol:

சம்சாரம் என்பது வீணை ..சந்தோசம் என்பது ராகம் ..............சரணங்கள் அதில் இல்லை மணம் ,குணம் ஒன்றான முல்லை என்ற பாடலைப்பாடி மனதை தேற்றுவது .அழகு ....... :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்துவார பெடியளை வேப்பமரத்தில பேய் இருக்கெண்டு சொல்லி ஊரில் எம் வீரத்தை முளையிலே கிள்ளுவதைப்போல்..இப்படி பயமுறுத்துகிறீர்களே அண்ணா.. :D ஆறுதல் வார்த்தைகள் தரவேண்டிய இடத்தில் இப்படி முளையிலேயே பயமுறுத்துதல் நியாயமா..இது தகுமா? :D

கடுமையான பயிற்சி

இலகுவான சண்டை  ராசா

அதற்கான தயார்ப்படுத்தல் என்று வைத்துக்கொள்ளுங்கோவன். :D

ஆனாலும்   எங்க ஊர் வேப்ப மரப்பேயை  நீங்கள் இப்படி அவமானப்படுத்தக்கூடாது.

இதைக்கேட்டால் அவை தற்கொலை செய்தாலும் செய்வினம்.......... :lol:

சம்சாரம் என்பது வீணை ..சந்தோசம் என்பது ராகம் ..............சரணங்கள் அதில் இல்லை மணம் ,குணம் ஒன்றான முல்லை என்ற பாடலைப்பாடி மனதை தேற்றுவது .அழகு ....... :D  :icon_idea:

ஓம். மூணு வருசத்தால அதே மெட்டுக்கு வேற வரியைப் பாவிக்கலாம்.

சம்சாரம் என்பது வீணே சந்தோசம் என்பது பாழே

சமரசம் அதில் இல்லை சனம் பணம் எந்நாளும் தொல்லை

:lol: 

ஆனாலும்   எங்க ஊர் வேப்ப மரப்பேயை  நீங்கள் இப்படி அவமானப்படுத்தக்கூடாது.

இதைக்கேட்டால் அவை தற்கொலை செய்தாலும் செய்வினம்..........

ஐயோ சிரிச்சு வயிறு நோகுது ....தாங்கமுடியல :lol:

ஓம். மூணு வருசத்தால அதே மெட்டுக்கு வேற வரியைப் பாவிக்கலாம்.

சம்சாரம் என்பது வீணே சந்தோசம் என்பது பாழே

சமரசம் அதில் இல்லை சனம் பணம் எந்நாளும் தொல்லை

:lol: 

ஐயோ சிரிச்சு வயிறு நோகுது ....தாங்கமுடியல :lol:  :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழுந்து உருண்டு பிரண்டு சிரித்தேன்..  :lol:  இன்னும் அதிர்ச்சிகளைத் தாங்கும் பக்குவத்தை உங்களுக்கு ஆண்டவன் அளிப்பாராக!!! :D

இதுக்கு மேலயுமா..? கடவுளே...மலை என தெரிகிறது குடும்பவாழ்க்கை...ஆனாலும் எலியாக நான் எப்படியும் அடைவேன் நீங்க எல்லாம் இருக்கும் இடத்தை துளைபோட்டு ..!
:D

என்னைப் போல நல்ல சாப்பாட்டு ரசனை உள்ள பெண் போலக் கிடக்கு. அடுத்த முறை கண்டால், "உங்களை மாதிரியே இரத்த வறையில் இருந்து ஆட்டுத் தலை பிரட்டலுடன் மூளைப் பொரியலையும் சாப்பிடும் ஒருவர் கனடாவில இருக்கார், அவரின் தொலைபேசி இலக்கம் வேணுமா" என்று கேட்டு என்  தொலைபேசி இலக்கத்தினை கொடுக்கவும். இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ரி இருக்கும் என நினைக்கின்றன் (சும்மா...கவிதைகள் நாவல்கள் பற்றி பேசுவதற்கு)

ரதியின் பதில் அருமை. பெண்ணை மலர் என்ற நினைப்பதே முதல் தவறு. அதிலும் அவா இன்ன இன்னதான் சாப்பிடுவா என்று முன்முடிவு எடுத்துக் கொண்டு இருப்பது இன்னும் பெரிய தப்பு. ஒரு ஆண் சாப்பிட்டு இருந்தால் இங்கு வந்து எழுதியிருக்க மாட்டீர்கள். இதுவும் ஒரு வகை Chauvinism தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் நானும் உங்களைப் போலத்தான் மாடு ஆடு இறைச்சி வகைகள் உண்பதில்லை.

ஏன் மீன் சாப்பிடுவதே மனைவி அதிலிருக்கும் முட்களை எடுத்துவிட்டுத்தந்தால் மட்டுமே.

ஆனாலும் மற்றவர்கள் என்ன சாப்பிடுகின்றார்கள் அல்லது எப்படிச் சாப்பிடுகின்றார்கள்  

என அவதானிப்பது இல்லை 

ஏனெனில் எதுவாக இருந்தாலும் விருப்பமானதை  ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுவதே உடலுக்கு நலம்.

நீங்கள் செய்தது  தவறு மட்டுமல்ல மிகப்பெரிய குற்றம்  கூட . :D

அந்தப்பிள்ளைக்குச் சாப்பாடு எப்படிச் செமித்திருக்கும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்....... :D .

.பார்த்ததும் எடை போட்டது தான் உங்க தப்பு.

.

  ...........உலகத்தை   நன்னா  படிச்சுக்கோங்க கண்ணா

ஓ.கே அக்கா..இனிமேல் கண்ணை நம்பமாட்டன்..கையத்தான் நம்பபோறன்..எந்தப் பொண்ணா இருந்தாலும் ஒருதடவை துக்கிப்பாத்து எடை போட்டுக்கிறன்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.