Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொப்பையா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மின்னஞ்சலில் வந்தது... தொப்பை எனக்கில்லாவிடினும், யாழ்கள உறவுகளுக்கிருந்தால் பயன்படுமே! என்றவிதத்தில் இதை பதிகிறேன். :)

 

 

 

 

1261766531_1677223270_1036488006big.jpg
 

தொப்பையா...?


மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது? என்று தெரிந்துகொள்வோம்.

நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க, 'கலோரி' என்கிற ஆற்றல் தேவை. அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில், எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.

உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.

 

பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே, ஏன்?

ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை! காரணம், பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம்? என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.

'மெனோபாஸ்' துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.

தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை, அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம்.

 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும்.

 

 

-மின்னஞ்சலில் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்பிற்கு நன்றி...ஆண்களே கவனத்தில் எடுங்கள் :lol:

பெண்களே தங்கள் தொடைகள் கவனம்  :o

இணைப்பிற்கு நன்றி. நானும் முகநூலில் வாசித்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

தனுராசனம்

 

 

 

சலபாசனம்

 

 

சர்பாசனம்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொப்பை பியர் வயிறாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

குண்டானவர்கள் ஒல்லியாக...
 
honey1.jpg

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

* இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

 

http://atozthagavalkalangiyam.blogspot.in/2013/02/blog-post_9702.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தொப்பை பியர் வயிறாகவும் இருக்கும்.

 

வந்தால் ஒழுங்காய் வாசிச்சிட்டு போகோணும்...இல்லாட்டி தாங்ஸ் பண்ணிட்டு அப்பிடியே போகோணும்......அதை விட்டுட்டு..அதென்ன பியர் வயிறு எண்டு நைக்கல் நையாண்டியள்....எங்கடை கஸ்ரம் எங்களுக்குத்தான் தெரியும் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

வந்தால் ஒழுங்காய் வாசிச்சிட்டு போகோணும்...இல்லாட்டி தாங்ஸ் பண்ணிட்டு அப்பிடியே போகோணும்......அதை விட்டுட்டு..அதென்ன பியர் வயிறு எண்டு நைக்கல் நையாண்டியள்....எங்கடை கஸ்ரம் எங்களுக்குத்தான் தெரியும் ^_^

கூல் கூல். டென்ஷன் ஆகாதேங்கோ. மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கோ!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொப்பைக்கு குட்பை டாக்டர் கார்த்திக் காஸ்மடிக் சர்ஜன்

'மடியில் கனமில்லை, எனவே வழியில் பயமில்லை' என்று ஒரு பழமொழி உண்டு. மடியில் பணமோ விலை உயர்ந்த பொருளோ எடுத்துக் கொண்டு செல்பவர்களுக்கு வழிப்பறிக் கொள்லையர்கள் பற்றிய பயமுண்டு. அப்படி இல்லாதவர்களுக்கு பயமில்லை என்று சொல்ல வந்த பழமொழி அது.

ஆனால் இன்று பலரும் 'மடியில் கனமுண்டு, வாழ்க்கையில் பயமுண்டு' என்று இருக்கிறார்கள். இன்று உடல் பருமன் பிரச்சினை பலருக்கும் உள்ளது. உடல் எடை கூடி தொப்பையோடு அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்தால் இதய நோய்கள் பற்றிய பயத்தோடு வாழ வேண்டி இருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு வரப்பிரசாதமாக வந்துள்ள நவீன சிகிச்சை முறைதான் 'லைப்போசக்ஷன்' (Lipo Suction) இந்த முறைப்படி பலருக்கும் உடல் பருமனை சீர் செய்து உற்சாகமான மறுவாழ்வு கொடுத்து வருபவர் டாக்டர் கார்த்திக். காஸ்மடிக் சர்ஜனான இவரிடம் சிகிச்சை பெற்று உடல் பருமன் குறைத்துக் கொள்பவர்களில் பட்டியலில் பல திரைப்பட நட்சத்திரங்களும் அடக்கம். இனி டாக்டர் கார்த்திக்குடன் பேசுவோம்.

இந்த உடல் பருமன்- உடல் எடை கூடுவது எதனால் ஏற்படுகிறது?

இந்த உடல் பருமனுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உடலுழைப்பு இல்லாதது, உணவுப் பழக்கம், பரம்பரைத்தன்மை இப்படி பல காரணங்களை சொல்லலாம்.

இதில் ஆண் பெண் வித்தியாசம் உள்ளதா?

இந்தப் பிரச்சினை ஆண்களுக்கும் வருகிறது. பெண்களுக்கும் வருகிறது. ஆண்களுக்கு வயற்றுப்பக்கம் இருபுறங்களிலும் டயர் சதை போடும். அடிவயிறு, பின்புறம், மார்புகளில் சதை அதிகரித்து அவர்களின் இயல்பான உடலழகைக் கெடுக்கும், பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் உடலில் பின்புறம், இடுப்பு, தொடை, கை போன்ற பகுதிகளில் சதைபோட்டு பருமன் ஏற்படும்.

ஆண்களானாலும் பெண்களானாலும் இப்படி அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேர்ந்ததால்தான் இப்படி பருமனாகி எடை கூடி இயங்க முடியாமல் போகிறது. இதற்கு நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

எவ்வளவு காலமாக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது?

இந்த சிகிச்சை முறையின்படி எங்கு கொழுப்பு சேர்ந்துள்ளதோ அங்கு ஒரு சிறிய ஊசி மூலம் சேர்ந்துள்ள கொழுப்புகள் உறிஞ்சி எடுக்கப்படும். சிறு துவாரத்தின் மூலமே இது செய்யப்படும் இந்த சிகிச்சை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்பெல்லாம் இதை செய்ய வெளிநாடு போக வேண்டி இருக்கும். இப்போது இது நம் நாட்டில் சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல இதில் உள்ள பல குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு முழு நவீன நம்பகமான முறைகள் வந்துவிட்டன.

நீங்கள் செய்வது எந்த அளவுக்கு நவீனமானது? எந்த அளவுக்கு நம்பகமானது?

முன்பு இருந்தது சாதாரண லைப்போ சக்ஷன் முறை. இப்போது சூப்பர் பிஷியல் லைப்போ சக்ஷ்ன் (Super Fitial Liposuction)  என்று வந்திருக்கிறது. இது. 'ஹை Defenition  லைப்போ சக்ஷ்ன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் படி கூடுதல் பயன்கள் உண்டு. நம்பகத்தன்மை அதிகம்.

முன்பெல்லாம் இந்த முறையில் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மீண்டும் அந்த இடத்தில் சில ஆண்டுகளில் கொழுப்பு சேரும்.  பருமன் அதிகமாகும் இப்போதும் சிலர் செய்யும் முறையில் மீண்டும்  இது வருகிறது. பொதுவாக இப்படி சேரும் கொழுப்புகள் தோலிற்கும் தசைகும் இடையில் இருக்கும் அதை மட்டுமே உறிஞ்சி எடுக்கிறோம். வயிறு என்று எடுத்துக் கொண்டால் மேல் ஒரு அடுக்கும் கீழே ஒர் அடுக்கும் இருக்கும். இந்த கீழ் அடுக்கை மட்டும் எடுப்பார்கள். அத்துடன் விட்டுவிடுவார்கள். அதனால் மீண்டும் சேர வாய்ப்பு  உண்டு.  நான்  மேலுள்ள அடுக்கையும் இம்முறையில் உறிஞ்சி எடுத்து அகற்றி விடுவேன். நவீனமாக  உள்ள கருவிகள் மூலம் இதை செய்வதால்  எந்தவித அச்சமுமின்றி செய்து கொள்கிறார்கள். நான் சிகிச்சை செய்த பகுதியில் மீண்டும் வர வாய்ப்பு இல்லை. இதுதான் நான் செய்வதில் உள்ள உத்திரவாதம்.

பெண்களின் மார்பகத்தை போல இருந்த ஒர் ஆணுக்கு இந்த சிகிச்சை மூலம் சிக்ஸ் பேக்ஸ் போன்று இறுக்கமான மார்பு வடிவம் மாறிய அனுபவமும் உண்டு. அந்த அளவுக்கு இது துல்லியமானது. பாதுகாப்பானது இதை செய்து கொண்டு காலையில் செய்து மாலையே வீடு சென்று விடலாம். சில அரிதான கேஸ்களுக்கு மட்டுமே வீட்டு ஓய்வு அவசியம் இருக்கும்.

கொழுப்பு கூட, உடலில் சக்தி இழப்பு ஏற்படும் போது சக்தி கொடுத்து ஈடு செய்யும் என்பார்கள். இப்படி கொழுப்பை எடுப்பதால் உடல் சேர்வு ஏற்படுமா?

நம் உடலில்  தொப்பை வீணான சதை உள்ள இடங்களில் மட்டும்தான் கொழுப்பு இருக்கிறது என்றில்லை. உடலில் பிற இடங்களிலும் அதாவது வயிறு, இதயதை சுற்றி.. இப்படி பிற இடங்களிலும்  கொழுப்பு இயல்பாகவே இருக்கும். எனவே உடலிருந்து எல்லா கொழுப்பும் எடுக்கப்படுவதில்லை. எனவே உடல் சோர்வு, மயக்கம், பலவீனம் எதுவும் ஏற்படாது. இப்படி கொழுப்பு எடுத்து முடிந்தபின் பலரும் இப்படி கொழுப்பு எடுத்து முடிந்த பின் பல்ரும் 'அப்பாடா..' என்று நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள் மிகவும் சந்தோஷம் அடைந்ததாகக் கூறுவார்கள்.

 இதனால் உடல் எடை குறையுமா?

இதனால் உடல் எடை அப்படியே குறைந்த விடும் என்கிற தவறான கருத்து இருக்கிறது. ஆனால்  சிறிதளவே முறையும், இந்த சிகிச்சையில் சீரான உடல் எடை பராமரிக்கப்படும். உடல் எடையும் குறைய வேண்டுமென்றால் சிகிச்சைக்குப்பின் நாங்கள் கூறும் உணவுக் கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகளை பின்பற்றினால் போதும். எங்களிடம் இப்படி செய்து கொண்ட பின் ஒருவர் 147 கிலோ இருந்தவர் 142 ஆனார். சிகிச்சைக்குப் பிந்தையை பராமரிப்பான் இப்போது 120 கிலோ ஆகியிருக்கிறார். திடீரென்று தடாலடியாக உடல் எடை குறைப்பதை நாங்கள் விரும்புவதிலை. அது ஆரோக்கியமனதல்ல. பாதுகாப்பானதுமல்ல, அதனால் அப்படி குறைப்பதை நாங்கள் ஊக்குவப்பதில்லை.

இது தவிர வேறு என்னென்ன சிகிச்சைகள் செய்கிறர்கள்?

ஆண்களின் அளவுக்கதிகமான மார்பு வளர்ச்சிக்கான Gynane Comosita வயிறு சதைக் குறைக்கும் Tummy Tuck  நெற்றியை சீரமைக்கும் Fore Head Lift  புருவசீரமைப்பு செய்யும் Brow Lift முகச்சீரமைப்புக்குரிய Face  Lift  மார்பகம் அளவு சீராக்குதல் Breast Reduction சிறிய மார்பகத்தை பெரிதாக்கும் Breast Enlargement, தளர்ந்த மார்பகத்தை நிமிர்த்தி சீராக்கி நேர்செய்யும்  Breast lift  பெரிதான தளர்ந்த தொடைகளை சரிசெய்யும் Thign Lift மூக்கு குறைகளை சரிசெய்யும் Rhino Plasty வழுக்கைத் தலைக்கு முடி பொருத்தும் Hair Transplantation ஆகியவையும் செய்கிறோம். பெரும்பாலும் லைப்போ சக்ஷ்ன் சிகிச்சை தினசரி செய்து வருகிறோம்.

இந்தியாவில் சென்னையில் குமரன் மருத்துவ மனையில் நான் இந்த சர்ஜரியை செய்து வருகிறேன். பெங்களூர்,டில்லியிலும் எங்களுக்கு இயங்கி வருகிறது.

உங்களது சிறப்பம்சங்கள் என்ன?

டாக்டர் நோயாளி என்கிற அணுகுமுறை இருக்காது. நட்புடன் இணக்கமுடன் அணுகுவது எங்கள் அணுகுமுறை. இதற்கான செலவுகள் 40 ஆயிரத்திலிருந்து பிரச்சனையைப் பொறுத்து 80 ஆயிரம் வரை இருக்கலாம். பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு. அதனால்  வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் தங்கள் பயணத் திட்டத்தில் சென்னை வந்து இந்த சிகிச்சையும் முடித்து ஆரோக்கிய சுற்றுலாவாக செல்கிறார்கள் என்கிறார் டாக்டர் கார்த்திக், தொப்பை இனி சுமை இல்லை. தொப்பைகு கார்த்திக்கை அணுகினால் குட்பை சொல்லி விடலாம்.

http://www.thangamonline.com/news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Back%20Stroke.jpg

 

 

மேலே படத்திலுள்ள மாதிரி நீச்சலடித்தால், வெகு விரைவில் தொப்பை குறையுமென கிராமத்தில் பெரியோர்கள் கூற கேள்விப்பட்டுள்ளேன். எனது கிராமம் சென்றால் கிணற்றில் குதித்து இப்படி நீச்சலடிப்பது உண்டு.

ஆனால், தமிழ் சிறி சொல்லும் 'விளக்கம்' புரியவில்லை!

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Back%20Stroke.jpg

 

 

மேலே படத்திலுள்ள மாதிரி நீச்சலடித்தால், வெகு விரைவில் தொப்பை குறையுமென கிராமத்தில் பெரியோர்கள் கூற கேள்விப்பட்டுள்ளேன். எனது கிராமம் சென்றால் கிணற்றில் குதித்து இப்படி நீச்சலடிப்பது உண்டு.

ஆனால், தமிழ் சிறி சொல்லும் 'விளக்கம்' புரியவில்லை!

 

அதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு வயசு காணாது, வன்னியன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

Back%20Stroke.jpg

 

 

மேலே படத்திலுள்ள மாதிரி நீச்சலடித்தால், வெகு விரைவில் தொப்பை குறையுமென கிராமத்தில் பெரியோர்கள் கூற கேள்விப்பட்டுள்ளேன். எனது கிராமம் சென்றால் கிணற்றில் குதித்து இப்படி நீச்சலடிப்பது உண்டு.

ஆனால், தமிழ் சிறி சொல்லும் 'விளக்கம்' புரியவில்லை!

 

 

எங்கப்பா அந்த 'விளக்கம்'? விளக்கத்தையே தூக்கிட்டாங்களா? :D

 

எங்கப்பா அந்த 'விளக்கம்'? விளக்கத்தையே தூக்கிட்டாங்களா? :D

 

 

பார்க்கவே இல்லையா?

பார்த்த பின் இரண்டு இஞ்சி குறைந்துள்ளேன். அற்புதமான விளக்கம். :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா அந்த 'விளக்கம்'? விளக்கத்தையே தூக்கிட்டாங்களா? :D

 

 

எனப்பா

ராத்திரி என் கூட்டாளிக்கு எச்சரிக்கைப்புள்ளி  வாங்கிக்கொடுத்தது நீங்கள் தானா???

நல்ல  ஒற்றுமை

வாழ்க வளர்க..........

எனப்பா

ராத்திரி என் கூட்டாளிக்கு எச்சரிக்கைப்புள்ளி  வாங்கிக்கொடுத்தது நீங்கள் தானா???

நல்ல  ஒற்றுமை

வாழ்க வளர்க..........

 

தமிழ்சிறி அண்ணா ஏதோ விளக்கம் எழுதியிருக்கிறார். அதை இசை அண்ணா வாசிக்க முன்னம் நிர்வாகம் அகற்றி விட்டது என்று நினைக்கிறேன். அது தான் இசை அண்ணா "எங்கப்பா அந்த 'விளக்கம்'? விளக்கத்தையே தூக்கிட்டாங்களா?" என்று கேட்டிருக்கிறார். :rolleyes: 

 

நானும் வாசித்திருக்கவில்லை. அப்படி என்ன தான் தமிழ்சிறி அண்ணா எழுதினார் என்று தெரியவில்லை. :icon_idea:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் குருஜி தமிழ்சிறி அண்னாவை யாரு தப்பா பேசியது..? குருஜி நீங்கள் வரணும்..

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யால.... தமிழ் சிறி அண்ணா இங்கையா பதிந்தார்... அவரின் வெள்ளி இரவு பதிவுகளை தேடி பாத்துகொண்டிருந்தேன்.... அந்தாள் இங்கை தான் பதிந்திருக்கிறார்.... இந்த முறையும் மிஸ் பண்ணிட்டேன்....;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.