Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5000 பதிவுகளை தாண்டிய மல்லையூரானுக்கு வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • Replies 54
  • Views 3.9k
  • Created
  • Last Reply

வாழ்த்துகள் மல்லை.

 

உங்களின் கருத்துகளில் சிலவற்றைத் தான் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அநேகமானவற்றை புரிந்து கொள்ள முயன்று முடியாமல் "இது ஏதோ பெரிய ஆழமான விசயம் போல கிடக்கு" என்று விட்டு தமிழ்சிறி ஒட்டும் படங்களை பார்க்க போய்விடுவதுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் மல்லையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகின்றேன் மல்லையூரான்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மல்லையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் மல்லை.

 

உங்களின் கருத்துகளில் சிலவற்றைத் தான் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அநேகமானவற்றை புரிந்து கொள்ள முயன்று முடியாமல் "இது ஏதோ பெரிய ஆழமான விசயம் போல கிடக்கு" என்று விட்டு தமிழ்சிறி ஒட்டும் படங்களை பார்க்க போய்விடுவதுண்டு.

 

நீங்க மட்டும்... படத்தைப் பாத்திட்டு, மற்ற ஆக்கள் பாக்க முதல் வெட்டுறதை... இனியாவது நிப்பாட்டுங்கோ.... நிழலி. :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

103476,xcitefun-congratulations2.jpg

வாழ்த்துக்கள் மல்லை அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்
5000 பதிவுகளை தாண்டிய மல்லைக்கு எனது வாழ்த்துக்கள் ..
 
மல்லை அவர்கள் ஆழமாக அரசியலை புரிந்து எழுதும்  கள உறவுகளில் ஒருவர். 
எனக்கு பிடித்த கள உறவுகளில் மல்லையும் ஒருவர், என்னும் பல ஆயிரம் கருத்து பதிவுகளை இட .... வாழ்த்துகின்றேன். 

வாழ்த்துகள் மல்லை! :)

என் நண்பன் மல்லை அண்ணைக்கு வாழ்த்துக்கள். :)

பிரக்கிராசி மல்லையர் லோப்பொயின்ருகளை எடுத்துவிடுகிறதிலை வலு கில்லாடி  :D  :D  . அண்ணாச்சி தொடர்ந்து தன்ரை பதிவுகளாலை எல்லாரையும் குசிப்படுத்தவேணும் எண்டிறது என்ரை ஆசை . வாழ்த்துக்கள் மல்லையர் :) :) .

 

 

 

கோ! நீங்கள் உங்களுக்குக் கூறிய வாழ்த்துக்களைப் புறக்கணித்தீர்கள் ஆகையால் நீங்கள் வந்து வாழ்த்துக்கள் கூறுவது அவ்வளவு நல்லாயில்லைப் பாருங்கோ  :lol:  :lol:

கோ! நீங்கள் உங்களுக்குக் கூறிய வாழ்த்துக்களைப் புறக்கணித்தீர்கள் ஆகையால் நீங்கள் வந்து வாழ்த்துக்கள் கூறுவது அவ்வளவு நல்லாயில்லைப் பாருங்கோ  :lol:  :lol:

அதுதானை அலைமகள்.நெத்தியடி.

வாழ்த்துக்கள் மல்லையூரான் அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை அண்ணா...வாழ்த்துக்கள்...

நன்றி வந்திய தேவன். நான் எத்தனை என்று கணக்கு வைக்காததை நீங்கள் வைத்து என்னனை பெருமை படுத்திவிட்டீர்கள். 

 

உங்களோடு சேர்த்து நன்றிசொல்லப்பட வேண்டியவர்கள்  மோகன், நிழலி, இணையவன், நியானி, நுணாவில்லான். சிறியதோ, பெரியதோ, நீங்கள் பாராடியிருக்கும் இந்த சாதனையை நான் அடைய களம் அமைத்து, பாதை திறந்து, வழிநடத்தி வருபவர்கள் அவர்கள்.  

 

நன்றி அவர்களுக்கும்.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு; பன்றி கூட, தன் குட்டிகளுக்கு என்ன தேவை காத்திருக்கிறது என்பதை அறியாத அறிவிலி, தான் போட்ட குட்டிகளுக்கு தான் தாயாக உணர்வதுண்டு. எனவே உங்கள் வாழ்த்துகள் அவை எனக்கு  பெருமை தேடித்தந்திருக்கின்றன என்பதில் இருக்கும் சந்தேகத்தை நீக்கிவிடுகின்றது.

 

வெளியே அவை எப்படித்தான் வாங்கப்படுகின்றனவோ என்னவோ; அவை எல்லாமே சுவரால் தடுக்க முடியாத புயலாக வீசி , அணையால் அடக்கமுடியாத வெள்ளமாக பொங்கி, அமைதியான நதியாக ஓடி, அடங்கிப்போன தென்றலாக என் மனத்தில் முடிவடைந்துவிடும்.  ஒரு சொல்லாக இருந்திருக்கும், ஒரு வரியாக இருந்திருக்கும், ஒரு கதையாக இருந்திருக்கும் அவை எல்லாமே ஒரு தாயின் பிள்ளைகள்தான். அவை  ஆடிய ஊஞ்சல் கொடிகளும், நீந்தி விளையாடிய நதி ஓடைகளும் ஒரே காட்டில்தான் மலந்திருக்கின்றன.

 

சுமாராக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஒருகிழமையாக கதவை தொடர்ந்து தட்டி உள்ளே வந்தேன். (நான் வந்த கதையை அறிமுகத்தில் எழுதியிருக்கிறேன்.). கன்னா பின்னா என்று தமிழில் நிறைய எழுத வேண்டும் என்று ஒரு ஆசை.


அருமையான தமிழில் எழுத வேண்டும்……


அழகான தமிழில் எழுத வேண்டும்.

அதுதான் கலைநயம் வழிந்தோடும் மூவி ஒன்று, அந்த நேரம் கொறித்துக்கொள்ள அறுசுவை சிறுண்டி, ஒரு விஸ்கி போத்தல், அருகில் ஒரு துணைக்கா எழில் பொங்கும் அழகியொருத்தி, இங்கிதமான இளந்தென்றல் வந்து தழுவும் திறந்த அரங்கொன்று …எல்லாம் சேர்ந்து தரும் உல்லாசத்தை, கேளிக்கை களிப்பை ஒன்றாகத் தனியே தரவல்லது


நிறைய எழுத ஆசை. 


ஆனால் யதார்த்தம் கையளவு வசதி வைத்து கடல் போல் ஆசை வைத்திருந்துவிட்டால் வாழ்நான்
முழுவதும் ஏக்கம் மட்டும்தான்.  எழுதி முடித்துவிட்டால் ஒருவர் கழித்து வைத்தாலும் இன்னொருவர் படித்து முடித்துவிடுவார். ஆனல் இந்த உலகில் மேலும் சொல்வதற்கு தேவை ஒன்றிருக்கா?. சொல்வதில் என்றாவது குறைவிருந்ததா? புத்தன், யேசு, காந்தி முகமது, வள்ளுவன் சோகிரதீஸ்,மாக்ஸ், ஐன்ஸ்டீன், ராமணுஜம் என்று எத்தனை பேர் சொல்லி போய்விட்டார்கள். ஆனால் அந்த எழுத்துக்களால் இந்த உலகில் “வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை, வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை.” மேலும் அந்த எழுத்தொன்றாலும் மனிதனையும் மாற்றமுடியவில்லை.


ஆனால் அது கூடவே நல்ல செய்தியாகத்தான்படுகிறது, இல்லையா?. கடவுள் படைத்த மனிதன் மாறிவிடாமல் மனிதானாகவே வாழ்ந்து ஆசா பாசங்களுடன், போட்டி பொறாமைகளுடன், ஏக்கம் கனவுகளுடன், ஆதி மனிதன் எடுத்த அதே கோலை கை மாறி கை மாற்றிக்கொண்டு ஓடி மனித நாகரீகத்தின் இன்றை நிலைக்கு வந்து விட்டான்.  தடியை கொடுப்பவன் “ஆடி அடங்கும் வாழ்கையாடா ஆறடி நிலமே சொந்தமடா என்று பாடி முடித்து வைக்கிறான். தடியை புதிதாக பெறுபவன் “ஒளி மயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று பாடிக்கொண்டு ஓட்டத்தை ஆரம்பிக்கிறான். இருந்தாலும் சொல்லிபோவோர் எதையும் சொல்லிப்போகலாம், இருந்தும் வாழ்கையில் நிலையில்லாதது; முடிவடைந்து விடும் என்ற யாதார்தமோ, இல்லை இந்த பாரிய பிரபஞ்சத்தை கண்டு, பெரு மழையில் ஒருசிறுதுளி இடத்து தகமை தன்னும் இல்லாத உயிர்தானே இது என்ற சிற்றுணர்வு வந்து தாக்காமலோ சொல்லுவார், எழுதுவார் தமக்கென இடமெடுத்து தம் செயலை செய்துதான் வந்திருக்கிறார்கள்.


அவர்கள் நம் வழி காட்டிகள். நாம் செய்தது எத்துணை சிறியதென்றாலும் யாழில் வந்து நாமும் எமது மணல் வீடு கட்டி மகிழ்ந்திருக்கிறோம்.  அந்த வீட்டு அண்ணன் தம்பி, அக்கா தங்கை உறவுகள் தான் இந்த யாழ். இந்த கனவு மாளிகையில், அதில் குடியிருக்க என்னையும் சேர்த்து எனக்கும் ஒரு கட்டில் கொடுத்திருக்கும் உறவுகள் எல்லோருக்கும் நன்றி.


நிறைய எழுத வேண்டும் போல் தோன்றினாலும், ஏற்கனவே 5000 தடவைகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டுவிட்ட வாசகர்களை இந்த முறை கடுமையாக ஒரேயடியாகத் தண்டிக்காமலிருக்க இத்துடன் நிறுத்திவிடுகிறேன்.  

 

இந்த திரியில் வந்து வாழ்த்தியவர்களுக்கும், திரியிற்க்கு வரமுடியாமல் இருந்து வாழ்த்தியவர்களும், வர, வாழ்த்த மறுத்து மௌனமாக எனது தவறுகளை எடுத்து காட்டி என்னை வழி நடத்தியவர்களுக்கும் நன்றி. 


 

வாழ்த்துக்கள்  மல்லை 

நன்றி நந்தன்


 

5000 பதிவுகள் தாண்டிய மல்லை அண்ணாவுக்கு வாழ்த்துகள். :)

ஈழத்தின் மேல் அக்கறை கொண்ட ஒருவர்.

 

அரசியல் அறிவு, கவிதை கதை எழுதும் திறமை, நகைச்சுவை எழுத்து என பல ஆற்றல்கள் உள்ளது. தனியே அரசியலுடன் நிற்காமல் இடைக்கிட கதை கதையாம் பகுதி, கவிதைப்பகுதியில் உங்கள் ஆக்கங்களை போடுங்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். :)

நன்றி துளசி. முழுமனதாக முயற்சிக்கிறேன்.

Edited by மல்லையூரான்

மல்லை அவர்கள் ஆழமாக அரசியலை புரிந்து எழுதும்  கள உறவுகளில் ஒருவர். சிலவேளைகளில் பல தடவைகள் வாசித்த பின்னர் தான் விளங்கும். சில நேரத்தில் விளங்காது  :D

 

தொடரட்டும் உங்கள் பயணம் !!

நன்றி அகுதா.

 

மல்லை அவர்கள் ஆழமாக அரசியலை புரிந்து எழுதும்  கள உறவுகளில் ஒருவர். சிலவேளைகளில் பல தடவைகள் வாசித்த பின்னர் தான் விளங்கும். சில நேரத்தில் விளங்காது. அப்படி விள்ங்காதவற்றை எப்படி என்னால் ஒன்றென்று கருதி 5000 திற்கு வாழ்த்த முடியும்?-அகுதா

பிழைகளுக்கு கழித்துகொண்டு இந்த தடவை 2500 க்கு தன்னும் ஒரு வாழ்த்து போட முயற்சிக்க முடியுமா அகுத? :lol:  :lol: 

வாழ்த்துக்கள் மல்லை. :rolleyes:

நன்றி சுமே அக்கா.

Edited by மல்லையூரான்

வாழ்த்துக்கள் மல்லை..

 

மல்லைக்கு சிந்தனை வேகம் அதிகம் என நினைக்கிறேன்.. அதனால் அவர் தனது சிந்தனையில் வருவதையெல்லாம் எழுதமுடியாமல் அடிக்கடி தாவித்தாவிப் போய்விடுகிறார்.. :D

நன்றி இசைகலைஞன்.

 

மனம் போகும் நான் அதே வேகத்தில் நான் கையை போகவிடுவத்தில்லை. சிலதடவைகள கண்டும் காணாததும் மாதிரி தாவிவிடுவேன். அவ்வளவுதான்.  :D 

வணக்கம் மல்லையூரான். ஆரம்பத்தில் உங்களின் கருத்துக்கள் விளங்காவிட்டாலும் சிரத்தை எடுத்து பல முறை வாசித்து அறிந்து கொள்வேன்.இப்போ உங்கள் எழுத்து பழகி விட்டது.நகைச்சுவையாகவும் எழுதுவீர்கள்.சொந்த ஆக்கங்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்பது அன்பு கட்டளை.
மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

நன்றி நுணவிலான்.

 

இருந்தாலும் 5000 தடவை எழுதவேண்டியிருந்து குறைந்த பட்சம் ஒருவரை வாசிக்க பழக்கவே. பிரச்சனையான பாதைதான். :D 

வாழ்த்துக்கள்   மல்லையூரான்

நன்றி நிலா அக்கா.

வாழ்த்துக்கள், மல்லை!

 

அரசியல் திரிகள், என வரும்போது, உங்கள் கருத்துக்காகக் காத்திருப்பதுண்டு! :D

 

ஒரு விதமான நகைச்சுவை, உங்கள் பதிவுகளில் எப்போதும் இழையோடியபடியிருக்கும்!

 

அந்தப் பேய்க்கதை, இன்னும் அரைவாசியில நிக்குது, என்பதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்! :o

நன்றி புங்கை. 

 

கதை தொடர இருக்கு. அந்தப்பக்கம் போய் கருத்து எழுதியவர்களுக்கும் நான் இன்னமும் பதில் எழுதவில்லை.  எனவே கட்டயம் அந்த பக்கம் வருவேன்.

v9ceUM6.jpg

 

மல்லையூரானுக்கு தாய்நாட்டு அரசியலிலும், உலக அரசியலிலும் நல்ல புலமை உண்டு.

எப்படித்தான்... பல விடயங்களை, விரல் நுனியில் வைத்திருக்கின்றார் என்று ஆச்சரியப்படுவேன்.

உங்கள் ஐயாயிரம் தாண்டிய பதிவுகளுக்கு, வாழ்த்துக்கள் மல்லையூரன். :) 

நன்றி தமிழ் சிறி. 

வாழ்த்துக்கள்   மல்லையூரான்

நன்றி கறுப்பி.

Edited by மல்லையூரான்

வாழ்த்துக்கள் மல்லையூரான் அண்ணா !

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை அண்ணா...வாழ்த்துக்கள்...

இதில் கொஞ்சமாவது சுண்டலோடு சண்டை போட்டு வந்த கருத்துக்களா இருக்கும் :D

 

 மல்லையூரானுக்கு தாய்நாட்டு அரசியலிலும், உலக அரசியலிலும் நல்ல புலமை உண்டு.

எப்படித்தான்... பல விடயங்களை, விரல் நுனியில் வைத்திருக்கின்றார் என்று ஆச்சரியப்படுவேன்.

உங்கள் ஐயாயிரம் தாண்டிய பதிவுகளுக்கு, வாழ்த்துக்கள் மல்லையூரன். :) 

  

நன்றி விசுகண்ணை.

 

அட ஒரு presentக்காக ஜேர்மனிவரை  போய் வந்தீர்களா? இந்தமுறை இல்லை, அடுத்தமுறை பார்க்கலாம் என்றால் என்ன குறையா சொல்லியிருப்பேன். :D 

வாழ்த்துக்கள் மல்லையூரான், செய்திப் பகுதியில் அதிகமாக வாசித்துக் கருத்தெழுதும் மிகச் சிலரில் நீங்களும் ஒருவர். தொடர வாழ்த்துகிறேன்.

நன்றி இணையவன்.

வாழ்த்துக்கள் மல்லை.

 

எல்லாப் பகுதிகளிலும்  எழுதுமளவுக்கு நிறைய விடயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

நன்றி தப்பிலி. 

உங்கள் எழுத்துக்களால் நாங்கள் அறிந்துகொண்டவை பல 

 

 மல்லையூரான் வாழ்த்துகள்

நன்றி வாத்தியார்.

விரிவான விளக்கமான பதில்களோடு யாழில் வலம் வரும் மல்லையூரன் இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் படைக்க வாழ்த்துகின்றோம். :)

நன்றி நெடுக்காலைபோவான்.

 

விளக்கமான பதில்களோடு

 

சரிதான் போ. கெடுத்துப்புட்டியலே. கூகிலை மொழிபெயர்த்து கொண்டுவந்து போட்டு எல்லோரையும் இவ்வளவு நாளும் மடக்கமாய்த்தான் வைத்திருந்தேன். இனி நான் எழுதுவதை யாரும் திரும்பியும் பார்க்க மாட்டர்கள்.   :D

வாழ்த்துக்கள்....

நன்றி பையன்

வாழ்த்துக்கள்  மல்லை 

நன்றி உடையார்

வாழ்த்துக்கள் மல்லையூரான் அண்ணா...!

நன்றி தமிழினி.

Edited by மல்லையூரான்

வாழ்த்துக்கள் மல்லை. உண்மையில் ஈழத்தமிழனின் புலம்பெயர்  சூழலில், இன்றைய நிலையில், தேவையை அறிந்து அதற்கு தகுந்த வகையில் கருத்தாடும் ,இணய உறவு .

அரசியல் என்பது இதுதான் என்ற நிலையை ஆழமாக அறிந்து ,இப்படித்தான் அதை எழுத வேண்டும் என்று எழுதும் உறவு ............அந்த ஆழத்தை பலர் புரிந்து கொள்ள மாட்டார்கள்

 

 

 

Spoiler

என்னைப்போல் ஆழமானவர்களைத்தவிர............. :D 

நன்றி தமிழ்சூரியன்.

 

 

என்னாங்க ரொம்பத்தான்  புகழுகிறிங்க. அதவிடுங்க. கடவுள் படைத்த குமரியை விட கவிஞன் பாடுகிற பொண் அழகாக இருப்பாவா? :D

என்னைப்போல் ஆழமானவர்களைத்தவிர............

 

"முள்ளிவாய்க்கால் பின்னடவை நமக்கு நிரந்தர தோல்வி என்று நினைத்து அந்த புண்ணில் தொடர்ந்து குத்தி அடிபணியத்தான் வைப்பது என்று சிலர் நினைத்தார்களாயின், காத்திருக்கட்டும்; அவர்களும் தவறுவிடுவார்கள், தோல்வியை தழுவுவார்கள் என்பதை அவர்களுக்கு தமிழர் தெரியவைப்பார்கள்."

வாழ்த்துக்கள் மல்லை.ஒரு சிறு வேண்டு கோள் கொஞ்சம் சுருக்கமாக எழுதினால் உங்கள் கருத்தை வாசிக்க ஆவலாக இருக்கும்.நன்றி. :)

நன்றி சஜீவன்.

 

முயற்சிக்கிறேன்.

பிரக்கிராசி மல்லையர் லோப்பொயின்ருகளை எடுத்துவிடுகிறதிலை வலு கில்லாடி  :D  :D  . அண்ணாச்சி தொடர்ந்து தன்ரை பதிவுகளாலை எல்லாரையும் குசிப்படுத்தவேணும் எண்டிறது என்ரை ஆசை . வாழ்த்துக்கள் மல்லையர் :) :) .

நன்றி கோமகன்.

 

இதென்னடாப்பா ஒரு புது வில்லண்ட வழக்கு. பிரக்கிராசியாருக்கு இப்ப அவரசம் தேவை  ஒரு பிரக்கிராசியார் போலை கிடக்கு. :D  

மிகவும் குறுகிய காலத்தில் 5000 கருத்துக்களை எழுதிய மல்லையூரானுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்...மல்லையூரானின் கதை தான் எனக்கு பிடிக்கும்...தொடராமல் இடையில் விட்டது கவலை

நன்றி ரதி அக்கா.

 

அது தொடர இருக்கு. ஆரம்பத்தில் போட்ட திட்டப்படி இன்னும் மூன்று பகுதியாவது எழுதுவது என்பது தான் நோக்கம். குறைந்தது இரண்டு பகுதியாவது எழுதினால்த்தான் முடிக்கலாம். ஆனால் இனி தொடங்கினால் நிச்சயம் முடிவு வரையும்  அதிக இடைவெளி கொடுக்காமல் எழுத இருக்கிறேன். 

 

ஆனால் மார்ச் முடியும் வரை ............

Edited by மல்லையூரான்

வாழ்த்துக்கள் மல்லையூரான். 5000 பதிவிலும் எத்தனையாயிரம் சொற்கள் எழுதியிருப்பீர்கள்?

நன்றி கிருபன்.

 

 

தனி முகக்குறி கருத்துக்களை நியானி நீக்கிவிட்டதால் 5000 பதிவிலும் 5.சொற்கள்தான் தேறும்

 

'தோல்வியைக் கண்டு தளராதே. தொடர்ந்து போராடு"  :)

Edited by மல்லையூரான்

5000 பதிவுகளைத் தாண்டிய மல்லையூரானுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் உரித்தாகட்டும் தொடர்ந்தும் பல்லாயிரம் பதிவுகள் தாண்ட வாழ்த்துகள். :rolleyes:

நன்றி வல்லவை அக்கா.

 

என்னை அளவுக்கு அதிகமாக வாழ்த்தியிருக்கிறீர்கள் போலிருக்கு.  ஒரு சில ஆயிரம் என்றால் போததா? :D 

வாழ்த்துக்கள்.

நன்றி யாயனி

வாழ்த்துகள் மல்லை.

 

உங்களின் கருத்துகளில் சிலவற்றைத் தான் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அநேகமானவற்றை புரிந்து கொள்ள முயன்று முடியாமல் "இது ஏதோ பெரிய ஆழமான விசயம் போல கிடக்கு" என்று விட்டு தமிழ்சிறி ஒட்டும் படங்களை பார்க்க போய்விடுவதுண்டு.

நன்றி நிழலி

 

எல்லோரும் சேர்ந்து என்ன எழுதுகிறீர்கள் என்பது புரியலை. தமிழ்சிறி, இழுத்து விழுத்தி  தாழ்த்து போடத்தக்கதல்லாத மெல்லியததாக ஏதாவது போட்டிருக்கிறாரா? :D 

வாழ்த்துக்கள் மல்லையூரான்.

நன்றி சாமி அண்ணை.

வாழ்த்துகின்றேன் மல்லையூரான்!

நன்றி காவாலி

வாழ்த்துக்கள் மல்லையூரான்.

நன்றி ஈழப்பிரியன்

103476,xcitefun-congratulations2.jpg

வாழ்த்துக்கள் மல்லை அண்ணா. :)

நன்றி ஜீவா

5000 பதிவுகளை தாண்டிய மல்லைக்கு எனது வாழ்த்துக்கள் ..
 
மல்லை அவர்கள் ஆழமாக அரசியலை புரிந்து எழுதும்  கள உறவுகளில் ஒருவர். 
எனக்கு பிடித்த கள உறவுகளில் மல்லையும் ஒருவர், என்னும் பல ஆயிரம் கருத்து பதிவுகளை இட .... வாழ்த்துகின்றேன். 

நன்றி தமிழரசு.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.