Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்புகளால் பாதுகாப்பு சிக்கல் – இரவோடு இரவாக சுவாமி தரிசனம் செய்கிறார் மகிந்த

Featured Replies

எதிர்ப்புகளால் பாதுகாப்பு சிக்கல் – இரவோடு இரவாக சுவாமி தரிசனம் செய்கிறார் மகிந்த [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 00:06 GMT ] [ அ.எழிலரசன் ]

MR%20in%20Thiruppathi.jpgபாதுகாப்புக் காரணங்களால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரவோடு இரவாக திருப்பதியில் சுவாமி தரிசம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று திருமலைக்கு வரவுள்ளார். 

இவரது வருகைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்றன. 

சென்னை, கோவை, சேலம், மதுரை, இராமநாதபுரம், புதுவை, சிதம்பரம் என்று பரவலாக இடம்பெறும் போராட்டங்களில் சிறிலங்கா அதிபரின் உருவபொம்மைகள் எரிக்கப்படுகின்றன. 

இத்தகைய போராட்டங்களில், தமிழ் அமைப்புகள் மட்டுமன்றி, பல்கலைக்கழக, கல்லுரி மாணவர்களும் நூற்றுக்கணக்கில் பங்கெடுத்து வருகின்றனர். 

பல இடங்களில் சட்டவாளர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதால், நீதிமன்றப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இன்று இந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை திருப்பதிக்கு வரும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்புக் கருதி இரவோடு இரவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சிறிலங்கா அதிபரின் வருகை மற்றும் அவரது பயண ஒழுங்குகள் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் சொலமன் ஆரோக்கியராஜ் தகவல் வெளியிட்டுள்ளார். 

“சிறிலங்கா அதிபர் தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். 

மாலை 4.40 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு 5.25 மணிக்கு திருமலையைச் சென்றடைவார். 

அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள, சிறிகிருஸ்ணா மாளிகையில் இரவு தங்குகிறார். 

நாளை அதிகாலை 2.20 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கச் சென்று, சுப்ரபாத சேவையில் பங்கேற்று, தரிசனம் செய்கிறார். 

பின்னர் விடுதிக்குத் திரும்பும் அவர் அங்கு ஓய்வுவெடுத்து விட்டு, காலை 8.35 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் செல்கிறார். 

அங்கிருந்து நாளை காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் கொழும்பு செல்கிறார்.“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்கா அதிபரின் வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரையிலும், அவர் தங்கும் வளாகத்திலும் அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130208107739

துடெல்லியையும் இந்தியத் தலைவர்களையும் தவிர்க்கிறார் சிறிலங்கா அதிபர் [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 00:01 GMT ] [ கார்வண்ணன் ]

MR-M.mohan.jpgசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வரவுள்ள போதிலும், அவர் புதுடெல்லிக்குப். பயணம் மேற்கொள்ளவோ, இந்திய அரசியல் தலைவர்களை சந்திக்கவோ மாட்டார் என்று புதுடெல்லியில் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு கொழும்பு மறுத்துள்ளதால், இந்திய சிறிலங்கா உறவுகள் இறுக்கமடைந்துள்ள சூழலிலேயே, சிறிலங்கா அதிபர் இன்று புத்தகயாவுக்கும், திருப்பதிக்கும் பயணம் மேற்கொள்கிறார். 

கொழும்பில் இருந்து தனி விமானத்தில் பீகார் செல்லும் அவர் புத்தகயாவில் வழிபாடுகளை நடத்துவார். 

இதன் பின்னர், பீகாரில் மாநில முதல்வர் நித்தீஸ்குமாரை, சிறிலங்கா அதிபர் ராஜபக்ச சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன் புத்தகயாவில் கலாசார நிலையம் ஒன்றையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். 

திருப்பதியில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு ராஜபக்ச கொழும்பு திரும்புவார் என்றும், இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இந்தியா எவ்வாறு வாக்களிக்கும் என்ற கவலை சிறிலங்காவுக்கு உள்ள போதிலும், தனிப்பட்ட பயணம் என்று அடையாளப்படுத்தப்பட்டு சிறிலங்கா அதிபர் புதுடெல்லியை தவிர்த்துக் கொள்வதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130208107738

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வருகைக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும், தமிழக உறவுகளுக்கு... சிரம் தாழ்ந்த நன்றிகள்.

வரலாற்றில் மிக மோசமான ஒரு சிங்கள பௌத்த பயங்கரவாதிக்கு சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதன் மூலம் திருப்பதி தேவஸ்தான பொறுப்பாளர்களும் மனிதாபிமானம் அற்ற காட்டுமிராண்டிகளாகவே கருதப்பட வேண்டும்!


தமிழர்கள் இனிமேல் திருப்பதியை முழுமையாக பகிஸ்கரிக்க வேண்டும்!

  • தொடங்கியவர்

திருப்பதியை மீட்டெக்க முயலவேண்டும்.

இந்து முன்னணி எப்போது புத்த முன்னணியானது?



திருப்பதி தேவஸ்தானம் முற்றுகை!
ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு!

 

ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வருவதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை அதியமான் தலைமையில் தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 40 தோழர்கள் முற்றுகை செய்தனர்.

 

சென்னை பனகல் பூங்காவின் அருகே இருந்து பேரணியாக புறப்பட்டு போராட்டக்காரர்கள் தேவஸ்தானத்தை நோக்கி நகர்ந்தனர். தேவஸ்தானத்தை நெருங்கும் முன்பே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய காவல் துறை அவர்களை கைது செய்வதாக கூறியது.

 

அதனால் போராட்டக்காரர்கள் கோபம் கொண்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு போய் காவல்துறை பேருந்தில் ஏற்றினர். அதேநேரத்தில் காவல் துறை கவனம் வேறு திசையில் இருந்த போது, ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு போராட்டக் குழுவினர் சிலர் தீயிட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்தது. காவல் துறை இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

சிறுது நேரத்தில் தண்ணீர் கொண்டு வந்து எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை அணைத்தனர் காவல் துறை. பின்பு போராட்டக் காரர்கள் அனைவரையும் தி.நகர் , வினோபா மண்டபத்தில் அடைத்து வைத்தது காவல் துறை.

 

08-02-2013-7.jpg



http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91787

  • கருத்துக்கள உறவுகள்

 

எரிந்த ராஜபக்சவை அலறியடித்துக்கொண்டு காப்பாற்றிய தமிழக காவல்துறை..

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு பெண் (ஞாபகம் இல்லை) துடக்குடன் கோயிலுக்குள் நுழைந்ததுக்கு கோயிலை மூடியவர்கள் இப்போ ஒரு இனச்சங்காரத்தையே நடாத்தி முடிந்தவரை எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கிறார்களோ?

திருப்பதி வந்தார் ராஜபக்ஷே

 

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே இன்று திருப்பதி வந்தார். பல்வேறு அமைப்புககளின் எதிர்ப்புகள் மத்தியில் திருப்பதியில் 60 பேர் கொண்ட குழுவினருடன் வந்த இவர் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீலமகால் தியேட்டர் அருகே நின்ற பலரை போலீசார் கைது செய்தனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-144100939.html

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் இவரால் எங்கேயும் நிம்மதியாய் போய்வர முடியல............மனிதன் செய்த பாவத்திற்கு ..இறைவன் மனிதன் மூலமே மனிதனுக்கு தண்டனை கொடுப்பார் என்று எங்கோ கேட்ட நினைவு.. :rolleyes:

தமிழ்நாட்டுக்காரர்கள்  உந்த அலுவல்களை  அந்த மாதிரி பார்ப்பார்கள் ,ஒரு முறை தன்னுடைய வேட்டியிலேயே ஒருவர் நெருப்பை வைத்து ஓடுப்பட்டு திரிந்தார் .

தமிழக உறவுகளே உங்கள் உணர்வுகளுக்கு நன்றிகள்.

 

உங்கள் தொடர்ச்சியான போராட்டங்களால் டெல்லியில் நிலையான கொள்கை மாற்றம் விரைவில் வரும்.

 

மீண்டும் சிரம் தாழ்த்திய நன்றிகள்!!

தமிழ்நாட்டுக்காரர்கள்  உந்த அலுவல்களை  அந்த மாதிரி பார்ப்பார்கள் ,ஒரு முறை தன்னுடைய வேட்டியிலேயே ஒருவர் நெருப்பை வைத்து ஓடுப்பட்டு திரிந்தார் .

 

தமிழ்நாட்டு உறவுகளை சீண்டும் இந்தக்கருத்தை வன்மையாய் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்காரர்கள்  உந்த அலுவல்களை  அந்த மாதிரி பார்ப்பார்கள் ,ஒரு முறை தன்னுடைய வேட்டியிலேயே ஒருவர் நெருப்பை வைத்து ஓடுப்பட்டு திரிந்தார் .

 

தவறான தகவல்களை வழங்க வேண்டாம் அர்ஜுன். அந்த வேட்டி எரிந்த சம்பவம் கேரளாவில் நடந்தது, தமிழ்நாட்டில் அல்ல.

இந்து முன்னணி எப்போது புத்த முன்னணியானது?

 

இராமகோபாலன் என்பவன் ஒரு பச்சோந்தி நாய்.

அவன் தமிழனுமல்ல, இந்துவும் அல்ல பிச்சைக்கார பரதேசி.

இவனுக்கு, மொட்டை அடித்து... புத்த பிக்குகளின் காவி ஆடையைப் போட்டு... ஆமத்துறு ஆக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தகவல்களை வழங்க வேண்டாம் அர்ஜுன். அந்த வேட்டி எரிந்த சம்பவம் கேரளாவில் நடந்தது, தமிழ்நாட்டில் அல்ல.

 

இராமகோபாலன் என்பவன் ஒரு பச்சோந்தி நாய்.

அவன் தமிழனுமல்ல, இந்துவும் அல்ல பிச்சைக்கார பரதேசி.

இவனுக்கு, மொட்டை அடித்து... புத்த பிக்குகளின் காவி ஆடையைப் போட்டு... ஆமத்துறு ஆக்க வேண்டும்.

சின்ன திருத்தம் - கறல் பிடிச்ச பாக்குவெட்டியால் வெட்டி ஆமத்துறு ஆக்கவேணும், இப்படிக்கு தமிழ்சிறி. :D

800 people taken into custody near Tirupati for Sri Lankan president's visit

 

Sri Lankan president Mahinda Rajapakse was greeted by protestors today in Bodh Gaya in Bihar, where he visited Buddhist temples. In cities that he did not tour, including Delhi and Chennai, large demonstrations were held against his two-day personal visit to India, with protestors demanding that he be held accountable for alleged atrocities against Sri Lankan Tamils, who are a minority in his country.

 

Mr Rajapakse will offer his prayers at the famous Tirupati temple in Andhra Pradesh early tomorrow morning. He has landed near Tirupati with a delegation of 62 people that includes his family. He will travel by road to the temple. 800 people in the Chittoor district, where the temple is located, just 135 kms from Chennai, have been taken into preventive custody; they were reportedly planning large protests.

 

http://www.ndtv.com/article/south/800-people-taken-into-custody-near-tirupati-for-sri-lankan-president-s-visit-328118?pfrom=home-health

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன திருத்தம் - கறல் பிடிச்ச பாக்குவெட்டியால் வெட்டி ஆமத்துறு ஆக்கவேணும், இப்படிக்கு தமிழ்சிறி. :D

 

இந்துவும், பௌத்தனும்... அங்கை வெட்டுவதில்லை. கறள் பிடிச்ச பாக்கு வெட்டியால்... இவங்களின் நாக்கை, இழுத்து வைச்சு... ஒட்ட அறுக்க வேணும்.

அப்ப தான்... ஒரு சொல்லும்.. கதைக்காமல்... உம்மாண்டி மாதிரி, இருப்பாங்கள். இவங்கடை வாய், தான் பெரிய பிரச்சினை.

ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம்
 
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழகத்திலும், டெல்லியிலும் வேறு பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.


பௌத்த புனிதத் தலமான பீகாரில் உள்ள புத்த கயாவுக்கும், ஆந்திரத்திலுள்ள திருப்பதிக்கும் இலங்கை ஜனாதிபதி தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதை இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள், வழக்குரைஞர்கள் சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் போன்றவை கண்டித்துள்ளன.



சென்னை



சென்னையில் திமுக தலைமையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெஸோவில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளும் இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை கண்டித்து கூட்டம் ஒன்றை நடத்தியது.


இந்தக் கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழையும் தமிழர்களையும் அழிக்க இலங்கை ஜனாதிபதி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் ரயில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன், இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்க இந்திய அரசு முயல வேண்டும் என்று தெரிவித்தார்.

 



தில்லி
இலங்கை ஜனாதிபதி தில்லி வந்து அங்கிருந்து புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் மதிமுக தலைமையில் தில்லியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் அவர் தில்லி வராமல் ஒரிசா மாநிலம் கட்டாக் சென்று அங்கிருந்து புத்த கயா சென்றதாகத் தெரிகிறது.

 

தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் முன்னர் பேசிய அக்கட்சியின் தலைவர் வைகோ, இந்தியா வர ராஜபக்ஷவை அனுமதித்தமைக்காக இந்திய அரசைக் கண்டித்தார்.

 

பிரதமர் அலுவலகத்துக்கு ஊர்வலம் செல்ல முயன்ற வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிசார் கைதுசெய்தனர்.



புத்த கயா
புத்த கயாவில் உள்ள மஹாபோதி விகாரையில் இலங்கை ஜனாதிபதி பிரார்த்தனையில் ஈடுபட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.


இலங்கை ஜனாதிபதிக்கு பீகார் முதல்வர் நித்தீஷ் குமார் விருந்து உபச்சாரம் வழங்கிய விடுதியின் முன்பாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாணவர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

 

புத்த கயாவில் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு இலங்கை ஜனாதிபதி திருப்பதி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

 

 

திருப்பதி
சனிக்கிழமை காலை திருப்பதியில் இலங்கை ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவுள்ளார்.


திருப்பதி அமைந்துள்ள ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்திலும் தமிழக ஆந்திர எல்லையிலும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கும் முகமாக நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தின் விழுப்புரம், திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் வழக்குரைஞர்களும் ராஜபக்ஷவின் வருகையைக் கண்டித்து நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/02/130208_rajapakseindiavisit.shtml

  • தொடங்கியவர்

பெரிய ராஜதந்திரி மாதிரி படல.

 



ஏன் தான் அங்கே போனார்?

பெரிய ராஜதந்திரி மாதிரி படல.

 

ஏன் தான் அங்கே போனார்?

 

இந்தியாவில் வரலாறு காணாத எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன.

 

பல நூறு இடங்களில் பல ஆயிரம் மக்கள் போராட்டம்!

 

இந்த இன உணர்வை வளர்த்து விட்டுள்ளது - மகிந்த சிந்தனை !

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய ராஜதந்திரி மாதிரி படல.

 

ஏன் தான் அங்கே போனார்?

 

ஏழுமலையான் சக்திமிக்கவர் என்று போயிருக்கிறார். :rolleyes:

இதுதான் மகிந்தாவின் கடைசி இந்திய பயணம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய ராஜதந்திரி மாதிரி படல.

 

ஏன் தான் அங்கே போனார்?

 

இந்தியா, பிள்ளையையும்.... கிள்ளி, தொட்டிலையும்... ஆட்டுது போலை கிடக்குது. :rolleyes:

புத்தன் நில ஆக்கிரமிப்பில் இரவு பகலாக குடியெறுகிறான்

பாரம் பாரிய எம் மண்ணில் இன்று காலம் காலமாக இருந்த

கோவில்கள் பள்ளிகள் உடைபட்டு அதில் புத்தன் வீற்றிருகிறான்

இங்கு நாளை உன் வீட்டு முற்றத்தில் வந்து நின்று உன்னை களைப்பான்

 

533697_383989331696636_1604814263_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் மகிந்தாவின் கடைசி இந்திய பயணம்  :D

 

இப்படித் தான் போன தடவை போன போதும் சொன்னீர்கள் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.