Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஐ.நாவின் பரிந்துரைகளை மதிக்கத் தவறினால் இந்தியா எதிராக வாக்களிக்கும்

Featured Replies

மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் சிறிலங்காவுக்கு எதிரான எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் பணியகத்துக்கான மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை இந்தியா ஆதரித்தது.

மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீளவும் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும்.

மத்திய அரசு எப்போதும் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

அவர்களுக்கு ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தன உடன்பாட்டின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை, இப்போது சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில தமிழ்க்கட்சிகள், தமிழ்நாடு அரசாங்கம் போன்றன முன்யோசனையின்றி தீர்மானம் நிறைவேற்றியது போலன்றி, இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது அதனால் தான்.

சிறிலங்கா பிரச்சினையை இந்திய அரசு நாசூக்காகவே கையாள வேண்டி உள்ளது.

அங்குள்ள தமிழர்களுக்காக 500 கோடி ரூபா செலவில் வீடமைப்பு, சாலை அமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

இன்னும் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்த இருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு கூறுவதுபோல், சிறிலங்கா மீது பொருளாதார தடை விதித்து அவர்களை விரோதித்து கொண்டால், அங்குள்ள தமிழர்களுக்கு நம்மால் உதவி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=470951829711462047

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் வரை

27886217-49ca-4ac6-89af-8c44d820a1ce1.jp

அவர்களுக்கு ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தன உடன்பாட்டின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை, இப்போது சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

முள்ளிவாய்க்காலின் பின்னர்

Sri-Lanka-%E2%80%93-China.jpg

அங்குள்ள தமிழர்களுக்காக 500 கோடி ரூபா செலவில் வீடமைப்பு, சாலை அமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

இன்னும் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்த இருக்கிறோம்.

தமிழருக்கு 500 கோடி ரூபா உதவி என்று இந்திய அரச காடையர்கள் கடந்த 3 வருடங்களாக உலகை ஏமாற்றி வருகின்றனர்.

(1) 50,000 வீடுகள்  500 கோடி ரூபாவில் அமைப்பதென்றால் ஒரு வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 100,000/-. இதில் ஒரு நல்ல மாட்டுக் கொட்டில் கூட அமைக்க முடியாது.

(2) இதில் ஒரு பகுதியை சிங்கள அரச பயங்கரவாதிகள் சிங்களவர்க்கும், முஸ்லிமுக்கும் செலவழித்து விட்டார்கள். எனவே இந்திய அரச ஏமாற்றுப் பேர்வழிகள் "தமிழருக்கு 500 கோடி ரூபா" என்பது சுத்த ஏமாற்று நாடகம்.

(3) இன்னும் கொடுமை என்னவென்றால் இதே 500 கோடி ரூபாவில் தெருக்களும், வேறு நலத்திட்டங்களும் செய்கிறார்களாம் - இந்திய அரச காட்டுமிராண்டிகளின் லொள்ளுக்கு அளவே இல்லை.

ஆனால் இந்திய அரச காட்டுமிராண்டிகளின் இந்த ஏமாற்று வேலைகளை உணரும் மதி இல்லாத மதிகெட்ட கைக்கூலிகள் இந்தியக்  காட்டுமிராண்டிகள் வரும் ஜெனீவா கூடத்தொடரில் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு எதிராக வாக்களிப்பர் என்று கசிய விடப்பட்ட (உத்தியோகப்பற்றற்ற தகவலை) வைத்துக் கொண்டு, மீண்டும் தமிழின படுகொலைகளுக்கு உறுதுணையாக இருந்த இந்திய  அரச பயங்கரவாதிகளுக்கு ஜால்ரா போட ஆரம்பித்துவிட்டனர்.

மற்றவர்களும் இந்திய  அரச பயங்கரவாதிகள் பற்றிய உண்மைகளை கூறாமல் - தமது தப்புத் தாளங்களை நம்பவேண்டுமாம். அப்போது தானாம் இந்தியா தமிழருக்கு சார்பாக நடக்குமாம் என்று சோதிடர் பாணியில் தமது கைக்கூலிப் பிழைப்பை ஆரம்பித்துள்ளனர்.

போலி ஜனநாயக வேடம் போட்டுள்ள இந்தியாவுக்கு தமது போலி வேடத்தை தக்க வைக்க வேறு வழிகளே இல்லை -  எனவே அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாகவே இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.

இதை வைத்து தமிழகத்தையும், தமிழ் மக்களையும் ஏமாற்ற கைக்கூலிக் கும்பல் கிளம்பியுள்ளது. இந்தக் கைக்கூலிக் கும்பல் தங்கள் நண்பர்களாக உள்ள சில இணையப் பொறுப்பாளர்களையும் தமது கைக்குள் போட்டபடி - இந்திய சார்பு செய்திகளை பிரசுரிப்பது மட்டுமல்ல - இந்திய விரோத கருத்துக்கள் அத்தளங்களில் வராமலும் பார்த்துக் கொள்கிறது.

தமிழர்கள் மீண்டும் ஏமாறாமல் விழிப்பாக இருக்க வேண்டும்!

நூற்றுக்கு நூறு உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே தனித்துவமான ஒரு இனம், இந்த இந்தியர்கள்!

போன கிழமை, திறந்துவிட்ட காவிரி நீரை, இன்னும் தமிழ்நாட்டில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!

புவியீர்ப்புத் தத்துவத்தையே மாற்றி அமைக்கக் கூடிய வல்லமை, இவர்களிடம் உண்டு! :icon_mrgreen:

இலங்கை ஐ.நாவின் பரிந்துரைகளை மதிக்கத் தவறினால் இந்தியா எதிராக வாக்களிக்கும்

 உண்மையாவா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஐ.நாவின் பரிந்துரைகளை மதிக்கத் தவறினால் இந்தியா எதிராக வாக்களிக்கும்

 உண்மையாவா?

எப்ப?2999 ஆம் ஆண்டிலா?

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப?2999 ஆம் ஆண்டிலா?

போற போக்கைபார்த்தா, இந்த முறை, இந்தியாவை ஒருத்தரும் கணக்கில எடுக்கிற ற மாதிரித் தெரியேல்லை! :o

கடைசியில, நானும் வாறன்... நானும் வாறன் எண்ட மாதிரித் தான் முடியும் போல கிடக்கு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைபார்த்தா, இந்த முறை, இந்தியாவை ஒருத்தரும் கணக்கில எடுக்கிற ற மாதிரித் தெரியேல்லை! :o

கடைசியில, நானும் வாறன்... நானும் வாறன் எண்ட மாதிரித் தான் முடியும் போல கிடக்கு! :icon_idea:

அமேரிக்கா இருப்பதனால் இந்தியா என்ற நாடு இருக்கின்றது......இல்லாவிடில் இந்தியாவை சீனா எப்பவோ இல்லாமல் பண்ணியிருக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா இருப்பதனால் இந்தியா என்ற நாடு இருக்கின்றது......இல்லாவிடில் இந்தியாவை சீனா எப்பவோ இல்லாமல் பண்ணியிருக்கும்.....

உண்மைதான்

இந்தியாவுக்கு நிலையான கொள்கை கிடையாது

அமெரிக்காவுடன் மட்டுப்பட்டபோது ரசியாவுடன் ஒட்டிக்கொண்டது

தற்பொழுது ரசியா பலவீனமடைந்துள்ளதால் சீனாவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவுக்குள் பதுங்குகிறது. பக்கத்திலுள்ள சிறு நாடுகளையே  சமாளிக்க முடியாத இந்தியா சீனாவை நெருங்குவது  மலையுடன் தலையை  மோதுவதற்கே சமன். 

இந்தியாவில் எமக்கு இருக்கும் காழ்ப்புணர்வு நியாயமானது ஆனால் அதற்காக சர்வதேசத்தில் செல்லாகாசு ,இலங்கை சீனாவின் பிடியில் போய்விட்டது என்பதெல்லாம் வெறும் கற்பனை .

சீனா உலகின் அனைத்து நாடுகளிலும் தனது சந்தையை திறந்துகொண்டிருக்கின்றது .(nexen ஒயில் டீல் என்று கனடாவரை வந்துவிட்டது ).அதற்காக அவர்களின் அரசியல் சர்வதேசத்தில் செல்லாது .இலங்கையை பொறுத்தமட்டில் எக்காலத்திலும் எந்த ஒரு நாடும் போய் சீனாவிடம் இலங்கை பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என சொல்லபோவதில்லை . ***

இந்தியாவின் ஆழுமை  நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகில்  முக்கிய பங்கை வகிக்கின்றது .

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கேட்பது என்னவோ.. இந்தியா கொடு என்பது என்னவோ.. அமெரிக்கா செய் என்பது என்னவோ.. சிங்களம் செய்வன் என்பது என்னவோ..???!

இதெல்லாம் எப்ப ஒரு புள்ளில சந்திக்கப் போகுதோ..???!

புலிகள் இருந்திருந்தால்.. கூடிய வரைவில் சந்திச்சிருக்கும்... எனி..????! எத்தனை தசாப்தங்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அதற்குள் சிறீலங்கா முழு சிங்கள பெளத்த நாடாகிவிடும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

,இலங்கை சீனாவின் பிடியில் போய்விட்டது என்பதெல்லாம் வெறும் கற்பனை .

சீனா உலகின் அனைத்து நாடுகளிலும் தனது சந்தையை திறந்துகொண்டிருக்கின்றது .(nexen ஒயில் டீல் என்று கனடாவரை வந்துவிட்டது ). .

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆழுமை  நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகில்  முக்கிய பங்கை வகிக்கின்றது .

இந்தியாவின் ஆளுமை என்று சொல்ல முடியாது அர்ஜூன்... பிரித்தானியாவின் அடிமைகளாக இருந்ததின் பலன்.....தெற்காசியபிராந்தியத்தில் மேற்குலகின் ஒரு சில ஜனநாயக விழுமியங்களை இந்தியா கடைப்பிடிப்பதால் மேற்குலகின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைக்கின்றது. மத அடிப்படைவாத தலமை,இராணுவ தலமை,சிந்தாந்த தலமை இந்தியாவில் கடந்த 60 வருடத்தில் தலை தூக்கவில்லை ஆகவே தான் ...

பிரித்தானியாவிற்கு அடிமையாக இருந்ததற்கும் இன்றைய உலக ஒழுங்குக்கும் எதுவித சம்பந்தமுமில்லை .

மனிதராக பிறந்தவர்கள் எல்லாம் முதல் தேவையாக நினைப்பது சுதந்திரம் என்ற ஒன்றுதான் .அதற்குதான் நாம் கூட இந்த பாடு படுகின்றோம் ,ஒப்பீட்டு ரீதியில் பார்க்கும் போது பல நாடுகளை விட இந்தியா இந்த விடயத்தில் எவ்வளவோ மேல் .

சீனாவில் அரசே குற்றவாளிகளை சுட்டு உடனேயே அவர்களின் உறுப்புகளை எடுத்து உலகில் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு உறுப்புகளை மாற்றிவிடுகின்றார்கள் .இதற்காக வருடக்கணக்கில் பதிந்து விட்டு காவலிருக்கின்றார்கள்.குறிப்பாக சவூதி அரேபியர்கள்.ரஷ்யாவில் குற்ற செயல்கள் இந்தியாவை விட ஆயிரம் மடங்கு அதிகம் .

போனவாரம் தான் எனது சகோதரம் ஒன்று இந்திய சுற்றுப்பயணம் முடித்து வந்தார் ,இரவில் பொம்பேயில்   ரயிலில் சுற்றி திரிந்ததாக சொன்னார்கள் .அது இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

போனவாரம் தான் எனது சகோதரம் ஒன்று இந்திய சுற்றுப்பயணம் முடித்து வந்தார் ,

இரவில் பொம்பேயில்   ரயிலில் சுற்றி திரிந்ததாக சொன்னார்கள் .அது இந்தியா

உங்கள் சகோதரம் சேலை கட்டி ரயிலில் போயிருந்தால்

இந்திய வீரம் பற்றி  நல்ல கதைகள் சொல்லியிருப்பார் :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு வேறு வழியில்லை இந்தியா வாக்களிக்காமல் விட்டாலும் தீர்மானம் வெல்லும்.தோற்கிற குதிரையில் காசைக் கட்டி தனிமைப்படத்தப்படுவதை விட நானும் ஈதரிக்கிறேன் என்று சொல்லி தீர்மானத்தின் கடுமைத்தன்மையைக் குறைக்க ஆலோசனைகள் வழங்கும். மொத்தத்தில் கூடியியிருந்து குழி பறிப்பது..போனதடவை இதுதான் நடந்தது. இந்த முறை அமெரிக்கா தான் நினைத்ததைச் செய்யுமென்றே நினைக்கிறேன்(தீர்மானத்தைப் பொறுத்தவரையில்)

  • தொடங்கியவர்

இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்ட அயல்நாடுகள் என்றால் இப்பொழுது மாலைதீவு மட்டும்தான். அதுவும் ஊசலாக ஆரம்பித்துள்ளது. அங்கும் சீனா காலை வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka: Colombo spits in Delhi’s face again _ Kumar David

http://www.southasiaanalysis.org/node/1164

  • கருத்துக்கள உறவுகள்

767056918san.jpg

ஜெனீவா மாநாட்டில் இந்தியா மீண்டும் பிழை விடாது நடுநிலை வகிக்க வேண்டும் - சங்கரி கோரிக்கை

ஜெனீவாவில் மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மீண்டும் கொண்டு வரப்படும் பிரேரணையில் இந்தியா முதல் முறை போன்று பிழை விடாது இம் முறை நடுநிலை வகிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். 

இன்று (14) வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவத்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 

கடந்த முறை பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்ததுடன் தமிழ் நாட்டையும் தூண்டிவிட்டு அனைவரும் கோசமெழுப்பியதால் இந்திய பிரேரணையை ஆதரித்தது. அதன் விளைவு ஜப்பானை இந்தியாவுக்கு பயந்து ஓரக்கண்ணால் பார்த்த இலங்கை ஜனாதிபதி தற்போது நேராக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. 

ஜப்பானும் சொல்லியள்ளது உனக்கு என்ன உதவி வேண்டுமோ கேள் தருகின்றேன் என. எங்கெங்கு இராணுவ முகாம் அமைக்க வேண்டுமோ அமைத்துக்கொள்ள அதற்கான உபகரணங்களை தருகின்றேன் எனவும் சொல்லியுள்ளது. 

இதற்கு காரணம் இந்தியா ஆதரிக்காமையே. இந்தியா பொதுவானதாக இருந்தோலேயே நடுநிலைமை வகிக்க முடியும். எனவே இந்தியா இரண்டாம் முறையும் அதே பிழையை விடாது இந்தியா இம்முறை பிரேரணை தொடர்பில் நடு நிலை வகிக்க வேண்டும். 

இல்லையேல் சீனாவை இலங்கை கட்டிப்பிடித்து உறவு கொண்டாடும் நிலை ஏற்படும். சீனாவை கட்டிப்படித்தால் அது எமக்கு ஆபத்தானது. இந்தியில் அங்கு அரசியல் தெரியாது உழற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். காந்தி 80 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையுடன் நாம் சண்டை பிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார் என்பதனை சொல்ல வேண்டும். 

தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. இங்கு சுயநலமும் தங்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாகவும் பிரச்சினை காணப்படுகின்றது. எல்லாவற்றுக்குளம் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது நாங்களே. அதற்கு நானே தலைவராகவும் இருந்தேன். பின்னர் கூட்டணி உடைவடைந்ததன் பின்னர் மாவை சேனாதிராஜா தமிழ் செல்வனிடம் சொல்லியே இரண்டாம் தடவையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

அப்போது அங்கு முதல் இருந்து மூன்று கட்சிகளுக்கும் தனிச்சின்னம் இருந்தது. எனினும் பொது சின்னத்திற்காக தமிழரசுக்கட்சியின் சின்னத்தை தூசு தட்டி பயன்படுத்தி வருகின்றனர். தன் பின்னர் மக்களும் ஏனையோரும் கேட்டதற்கிணங்கள் நானும் சித்தார்த்தனும் இணைந்துள்ளோம். தற்போது நாம் இணைந்து இரண்டு வருடங்கள் ஈகிவிட்டது. 

சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ, சித்தார்த்தன் பதியவேண்டும் என கேட்கின்றார். நாமும் அவ்வாறே கேட்கின்றோம். ஏனெனில் அவர்கள் எம்மை மட்டம் தட்டி தம்மை வளர்த்துக் கொண்டிருப்பதால். ஆனால் அனைவரும் சம்மதம் தெரிவித்தும் தமிழரசுக்கட்சி மாத்திரம் உடன்படாதுள்ளது. அதற்கு சம்பந்தரும் சோதிராஜாவுமே இடையூராகவும் உள்ளனர். 

அவ்வாறு பதியாது எவ்வாறு எம்மையும் பயன்படுத்தி பணம் சேகரிக்க முடியும். இல்லையேல் எம்மை வெளியில் விடவேண்டும். அவ்வாறெனில் நாம் பதிவு தொடர்பில் கேட்க மாட்டோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எமது கட்சியினர் பலர் தேர்தலில் வென்றுள்ளனர். எனவே பதிவதில் என்ன பிரச்சினையுள்ளது என்பது தெரியாது. 

தமிழ் தேசிக் கூட்டமைப்பில் கேட்டவர்களை தமிழரசுக்கட்சியில் இணைத்துள்ளனர். எனவே உண்மையும் விசுவாசமும் இல்லைமையே இதற்கு காரணமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் எவ்வித கஸ்டமும் இல்லை. அதன் மூலம் மக்களுக்கு பலம் கூடும், பல ஸ்தானம் கிடைக்கும். என்னையும் சித்தார்த்தனையும் சேவகர் மாதிரி தேனீர் காவுவதற்கே வைத்துள்ளனர். 

திருகோணமலையில் எனது கட்சியில் வெற்றி பெற்றவரை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியில் இணைத்துள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடைந்தபோனால் தம்மை பலப்படுத்துவதற்கான செயற்பாட்டை சிலர் இப்போதே மேற்கொள்கின்றனர். 

ஏன் ஒரே கட்சியாக செய்ற்பட பயப்படுகின்றனர். தந்தை செல்வா தொடங்கிய கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி. அதில் வந்து அனைவரும் சேருங்கள். நான் எனது கட்சியை விட்டுத்தருகின்றேன். அதில் வந்து அனைவரும் சேருங்கள். அது தானே தந்தை செல்வாவின் விருப்பமும் கூட என தெரிவித்தார். 

இவ்வாறு ஆனந்த சங்கரி தெரிவித்தார். 

நன்றி அததெரண.

சீனா அமெரிக்காவின் கப்பல்களுக்கு மரியாதை காட்டும். ஆனால் அதையேதான் இந்தியாவுக்கும் காட்டும் என்று இல்லை. இலங்கை எறி மிதிக்கிற இந்தியாவை கண்டு சீனா இலங்கையில் பின்வாங்காது. சீனா வெறும் சின்ன படகுகளில் துணிச்சலாக இந்திய கரைகளில் வேவு பார்க்கிறது. இன்றல்ல, இனி வரும் காலத்தில் சீனாவுக்கு ஒரு பாரிய கடல்படை கட்டும் ஆசை இருப்பதை அதன் நடத்தைகள் காட்டுகிறது.  அது அமெரிக்காவை எட்டிப்பிடிக்க 20-30 வருடங்கள் எடுக்கலாம். ஆனால் அமெரிக்கா ஐரோப்பாவுடன் வரத்தக வலயம் திறக்க முயல்கிறது. அப்படி நடந்தால் நேட்டோ மிகவும் பலம் அடையும். அப்போது அமெரிக்கா திரும்ப சீனாவின் கடல் படைக்கு அஞ்சாது. ஆனால் ரசிஸ்சியா முன்னேறிக்கொண்டு வந்தாலும் குழப்ப அரசியலை கடைப்பிடிப்பத்தால் ஐரோப்பிய சமநிலை ஒன்று ஆவது சிக்கலாக இருக்கிறது. வளர்ந்துவரும் தென் அமெரிக்க நாடுகள் எப்படி ஒரு அரசியல் ஆதிக்கம் கேட்கப்போகிறார்கள் என்பதும் தெளிவில்லை.

இந்தியா, சீனா, இலனகையை பற்றி குமார் தெளிவாக பேசியிருக்கிறார். அதோடு இந்தியா சீனாவை வைத்து காட்டும் பூச்சாண்டியை குமார் நன்றாக புட்டுவைத்திருக்கிறார். இந்திய புவிசார் பாதுகாப்பு கொள்ளகை பண்டிதர்களையும் கண்களைத்திறக்க வைத்திருக்கிறார். காங்கிரசின் நாடகங்களை நாடகங்கள் என்று சொல்ல துணிச்சல் உள்ள எழுத்து.

The pop-press rationalises that Delhi suffers unplanned bowel movements when it thinks of China in the Indian Ocean and encounters bed-wetting nightmares, in which yellow hordes crawl all over the Island their eyes aslant the subcontinent while great fleets of sampans exit Hambantota to capture Visakhapatnam. இப்படி ஒன்றை நாம் யாழில் எழுதினால் பண்டிதர்கள் அந்த திரியை கொத்தி குதறிவிடுவார்கள். தமிழரோடு மட்டும் இருந்த மகிந்தா சிராணிக்கு கிட்ட போய் தன்னைத்தான் கொலைசெய்துவிட்டதையும் கூறியிருக்கிறார். நம்ம ஜெயராஜா இதை பார்த்து இனிமேல் எழுதபழகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.