Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

என்ன ஜீவா அம்மன் எழும்ப விடேலையோ ???  கதையை காணேலை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜீவா அம்மன் எழும்ப விடேலையோ ???  கதையை காணேலை .

:D :D :D  மிக விரைவில் தொடரும் அண்ணா.

நன்றி உங்கள் அன்பான ஊக்கத்திற்கு. :)

தொடர்ந்து எழுதுங்கள் .ஆவலுடன் காத்திருக்கின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாளாச்சியும் நானும் ......பகுதி-2....

photo.jpg

எழுப்பும் போதே நினைச்சேன் இண்டைக்கு சாத்துப்படி தான் என்று.

அந்தளவு கோவம் அண்ணாவின் கண்களில். அவனட்டைப் போய் சொல்லவா முடியும் நான் அம்மாளாச்சியைப் பார்க்கத் தான் வந்து படுத்தனான் என்று.

சொன்னாலும் பொடியனுக்கு ஏதோ மூளை சுகம் இல்லை என்று "அங்கொடை"யிலை தான் போட்டிடுவாங்கள்.

இதுக்குள்ளை ஆளாளுக்கு கேள்விகள் எங்கை போனாய்? ஏன் வீட்டை வரேல்லை என்று

ஆயிரம் கேள்விகள்? இந்தப் பச்சைப்பிள்ளை என்ன பாடுபட்டிருக்கும். பேசாமல்

மண்டிக்கொண்டு வந்தால் வாசல்லை வச்சு ஒரு "குட்டு" குட்டினான், மூளை கலங்கி

மூலம் வரைக்கும் கணத்தாக்கம் கடுகதி வேகத்திலை இறங்கிச்சுது.

"டேய்.. அவனுக்கு அடிக்காதை பாவம் பிள்ளை, தெரியாமல் அவன் படுத்திட்டான் போலை".

நல்ல காலம் வாசல்லை நின்ற அப்பா தான் காப்பாற்றிக் கூட்டிக்கொண்டுபோனார்.

 என்ரை அம்மாளாச்சியின் திருவிழா எப்பவும் ஏதாவது ஒரு சண்டை வராமல்

முடிஞ்சதே இல்லை. கோயில்காரருடன் பிரச்சனை,இல்லை வடக்கான், தெற்கான் என்று

பொடியளுக்குள்ளை சண்டை , இல்லாட்டிச் சாதிச் சண்டை என்று ஏதாவது ஒன்று

நடக்கும் அப்படி நடக்கேல்லை என்றால் தான் அதிசயம்.

"பூங்காவனமும்,இளைஞர் விழாவும்" என்று தீர்த்தத் திருவிழாவுக்கு அடுத்த

நாள் கொண்டாவது கூட கோவில்காரருடன் பிரச்சனைப் பட்டு அவங்கள் தமிழீழக்

காவல் துறையிடம் முறையிட எல்லாப் பொடியளையும் காவல்துறை பிடிச்சுக்

கொண்டுபோய் வதிரி காம்பிலை கனநாள் வச்சிருந்து பல பேச்சுவார்த்தைகளின்

பின்னர் தான் அனுமதி கிடைத்தது.

அந்த சந்தோசத்தில் தான் அம்மனுக்கு "ஆனந்தக் காவடி" எடுப்பது என்று வருடா

வருடம் தீர்த்தத் திருவிழா அன்று பொடியள் காவடி எடுப்பாங்கள்.

குறைஞ்சது இருபத்தைந்து, முப்பது காவடி என்று அமர்க்களமா இருக்கும்.

539230_247775338676614_429434767_n.jpg

விடியக்காலை பூசை முடிஞ்சு ஐந்து மணிக்கெல்லாம் சுவாமி தீர்த்தமாட

இன்பர்சிட்டி கடற்கரைக்கு போய் தீர்த்தமாடி முடிஞ்சு அங்கை பூசை நடக்க

இன்பருட்டி பிள்ளையார் கோவிலில் வைத்து பொடியளுக்கு அலகு,செடில் குத்தல்

நடக்கும். பறை அடிக்கிற அடிக்கு உரு வராதவனுக்கே வரும் அந்தமாதிரி

அடிப்பாங்கள். சுவாமி தீர்த்தமாடி கோவிலுக்கு வாறதுக்குள்ளையே பொடியள்

களைச்சுப் போடுவாங்கள். ஆனால் பார்க்குற சனங்களும் செடில் பிடிக்கிறவனும்

ஆடடா ஆடடா என்று உசுப்பேத்த  தொங்கித் தொங்கிப் பாய வேண்டியது தான்.

அதுவும் "டாவடிக்கிற" இல்லாட்டி பெட்டையளைக் கண்டால் கால் நிலத்திலை

நிக்காது, போதாக்குறைக்கு கோலாவுக்குள்ளை சாராயத்தையும் கலந்து

குடுத்துடுவாங்கள் சொல்லவா வேணும்.

"ஆனால் இந்தளவுக்கும் காரணம் கணேசர் தான்." அவன் தான் அந்தக் கோவில் தலைவர்

பொடியளை எல்லாம் காவல்துறையிலை பிடிச்சுக்குடுத்தது அவன் தான். தலைவரா

வாறதுக்குத்தான் பல இடங்களில் தகுதி தேவைப்படுவதில்லைப் போல அப்படி

ஒருத்தன் தான் அவன், ஆனால் கொஞ்சம் பசைப்பிடிப்பு,இயக்கத்திலை செல்வாக்கு

என்று தலைவராவிட்டான். கனபேருக்குப் பொடியள் இருட்டடி குடுத்தும், அவன்

கனதரம் தப்பி விட்டான் அந்தளவுக்கு "கீரி" ஆள்."

"பொடியளோட தலமையிலை கோயில் நிர்வாகம் இருக்கும் போது கூட தலைவரை விடப்

பொருளாளரா இருந்தவரின் மேற்பார்வையில் தான் கோவில் பல வளர்ச்சிகளைக்

கண்டது, ஒரு தேர்த்திருவிழாவின் போது தான்

இந்த அவலம் நிகழ்ந்தது "தேரோட்டம் முடிந்து தேர்முட்டியில் வைத்து

அர்ச்சனைகள் பூர்த்தியாக சுவாமி இருப்பிடம் போவதற்காய் தூக்கி வரும் போது

வாசலில் வைத்து ஐயர் மந்திரம் ஓதி,தேவாரம் படித்து முடித்து சுவாமி வாசல்

படியில் ஏறும் போது சுவாமி தூக்கிக்கொண்டு வந்த பொருளாளர் பொடியனை கணேசரின்

மனுசி கைப்பையில் வைத்திருந்த போத்தலால் தலையில் தாக்கி மண்டை உடைச்சு

விட்டாள்." அதிலை அவரை மந்திகை வைத்திய சாலைக்கு அனுப்பி விட்டு ஒரு சண்டை

அத்தோடு பொடியள் நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி விட்டார்கள், பழையபடி

முன்னர் இருந்த அதே கணேசர் தலமையில் நிர்வாகம் தான். இப்படி

அதிகாரத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமாக நடக்க முடியுமோ அப்படி நடக்கும் போது

தான் அரசியலின் ஆரம்பமே புரிந்தது."

தொடரும்..

  • கருத்துக்கள உறவுகள்
மட்டக்களப்பில் ஒரு அம்மன் கோயில் இருக்குது...அந்தக் கோயில் ஒவ்வொரு வருடத்திற்கு ஒருக்கால் தான் திறக்கும் என்று நினைக்கிறேன்...[அங்கு அநேக அம்மன் கோயில்கள் வருடத்திற்கு ஒருக்கால் திறந்து திருவிழா முடிந்ததும் பூட்டி அடுத்த வருடம் தான் திறக்கும்.] திருவிழா நாட்களில் திருவிழா முடிந்ததும் சாமியார் உரு எல்லாம் ஆடி சாமியை உள்ளே கொண்டு போய் வைப்பார்கள்...வைத்து விட்டு கதவை சாத்தினால் கோயில் மூலஸ்தானம் அடுத்த நாள் திறப்படும்...ஒரு நாள் ஒரு சின்னப் பிள்ளை மூலஸ்தானத்திற்குள் போய் விட்டது பூசாரியும் கவனிக்கவில்லை,ஒருத்தரும் கவனிக்கவில்லை மூலஸ்தானம் பூட்டுப்பட்டு விட்டது...அதன் பிறகு தான் பெற்றோர் பிள்ளை தேட கிடைக்கவில்லை மூலஸ்தானத்தில் மாட்டுப்பட்டது தெரிந்து விட்டது...பூசாரி அடுத்த நாள் காலை வரை மூலஸ்தானம் திறக்க முடியாது என்று விட்டார்...காலை கதவை திறந்ததும் பிள்ளை இறந்து கிட‌ந்ததாம்.
 
காளியாத்தா பலி எடுத்திட்டார் என பக்தர்களும்,மூச்சுத் திணறித் தான் இறந்தார் என விஞ்ஞானத்தை நம்புபவர்களும் சொல்கிறார்கள்...எது உண்மை என்று காளிக்குத் தான் வெளிச்சம்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளாச்சியும் நானும் ......பகுதி-2....

photo.jpg

எழுப்பும் போதே நினைச்சேன் இண்டைக்கு சாத்துப்படி தான் என்று.

அந்தளவு கோவம் அண்ணாவின் கண்களில். அவனட்டைப் போய் சொல்லவா முடியும் நான் அம்மாளாச்சியைப் பார்க்கத் தான் வந்து படுத்தனான் என்று.

சொன்னாலும் பொடியனுக்கு ஏதோ மூளை சுகம் இல்லை என்று "அங்கொடை"யிலை தான் போட்டிடுவாங்கள்.

இதுக்குள்ளை ஆளாளுக்கு கேள்விகள் எங்கை போனாய்? ஏன் வீட்டை வரேல்லை என்று

ஆயிரம் கேள்விகள்? இந்தப் பச்சைப்பிள்ளை என்ன பாடுபட்டிருக்கும். பேசாமல்

மண்டிக்கொண்டு வந்தால் வாசல்லை வச்சு ஒரு "குட்டு" குட்டினான், மூளை கலங்கி

மூலம் வரைக்கும் கணத்தாக்கம் கடுகதி வேகத்திலை இறங்கிச்சுது.

"டேய்.. அவனுக்கு அடிக்காதை பாவம் பிள்ளை, தெரியாமல் அவன் படுத்திட்டான் போலை".

நல்ல காலம் வாசல்லை நின்ற அப்பா தான் காப்பாற்றிக் கூட்டிக்கொண்டுபோனார்.

 என்ரை அம்மாளாச்சியின் திருவிழா எப்பவும் ஏதாவது ஒரு சண்டை வராமல்

முடிஞ்சதே இல்லை. கோயில்காரருடன் பிரச்சனை,இல்லை வடக்கான், தெற்கான் என்று

பொடியளுக்குள்ளை சண்டை , இல்லாட்டிச் சாதிச் சண்டை என்று ஏதாவது ஒன்று

நடக்கும் அப்படி நடக்கேல்லை என்றால் தான் அதிசயம்.

"பூங்காவனமும்,இளைஞர் விழாவும்" என்று தீர்த்தத் திருவிழாவுக்கு அடுத்த

நாள் கொண்டாவது கூட கோவில்காரருடன் பிரச்சனைப் பட்டு அவங்கள் தமிழீழக்

காவல் துறையிடம் முறையிட எல்லாப் பொடியளையும் காவல்துறை பிடிச்சுக்

கொண்டுபோய் வதிரி காம்பிலை கனநாள் வச்சிருந்து பல பேச்சுவார்த்தைகளின்

பின்னர் தான் அனுமதி கிடைத்தது.

அந்த சந்தோசத்தில் தான் அம்மனுக்கு "ஆனந்தக் காவடி" எடுப்பது என்று வருடா

வருடம் தீர்த்தத் திருவிழா அன்று பொடியள் காவடி எடுப்பாங்கள்.

குறைஞ்சது இருபத்தைந்து, முப்பது காவடி என்று அமர்க்களமா இருக்கும்.

539230_247775338676614_429434767_n.jpg

விடியக்காலை பூசை முடிஞ்சு ஐந்து மணிக்கெல்லாம் சுவாமி தீர்த்தமாட

இன்பர்சிட்டி கடற்கரைக்கு போய் தீர்த்தமாடி முடிஞ்சு அங்கை பூசை நடக்க

இன்பருட்டி பிள்ளையார் கோவிலில் வைத்து பொடியளுக்கு அலகு,செடில் குத்தல்

நடக்கும். பறை அடிக்கிற அடிக்கு உரு வராதவனுக்கே வரும் அந்தமாதிரி

அடிப்பாங்கள். சுவாமி தீர்த்தமாடி கோவிலுக்கு வாறதுக்குள்ளையே பொடியள்

களைச்சுப் போடுவாங்கள். ஆனால் பார்க்குற சனங்களும் செடில் பிடிக்கிறவனும்

ஆடடா ஆடடா என்று உசுப்பேத்த  தொங்கித் தொங்கிப் பாய வேண்டியது தான்.

அதுவும் "டாவடிக்கிற" இல்லாட்டி பெட்டையளைக் கண்டால் கால் நிலத்திலை

நிக்காது, போதாக்குறைக்கு கோலாவுக்குள்ளை சாராயத்தையும் கலந்து

குடுத்துடுவாங்கள் சொல்லவா வேணும்.

"ஆனால் இந்தளவுக்கும் காரணம் கணேசர் தான்." அவன் தான் அந்தக் கோவில் தலைவர்

பொடியளை எல்லாம் காவல்துறையிலை பிடிச்சுக்குடுத்தது அவன் தான். தலைவரா

வாறதுக்குத்தான் பல இடங்களில் தகுதி தேவைப்படுவதில்லைப் போல அப்படி

ஒருத்தன் தான் அவன், ஆனால் கொஞ்சம் பசைப்பிடிப்பு,இயக்கத்திலை செல்வாக்கு

என்று தலைவராவிட்டான். கனபேருக்குப் பொடியள் இருட்டடி குடுத்தும், அவன்

கனதரம் தப்பி விட்டான் அந்தளவுக்கு "கீரி" ஆள்."

"பொடியளோட தலமையிலை கோயில் நிர்வாகம் இருக்கும் போது கூட தலைவரை விடப்

பொருளாளரா இருந்தவரின் மேற்பார்வையில் தான் கோவில் பல வளர்ச்சிகளைக்

கண்டது, ஒரு தேர்த்திருவிழாவின் போது தான்

இந்த அவலம் நிகழ்ந்தது "தேரோட்டம் முடிந்து தேர்முட்டியில் வைத்து

அர்ச்சனைகள் பூர்த்தியாக சுவாமி இருப்பிடம் போவதற்காய் தூக்கி வரும் போது

வாசலில் வைத்து ஐயர் மந்திரம் ஓதி,தேவாரம் படித்து முடித்து சுவாமி வாசல்

படியில் ஏறும் போது சுவாமி தூக்கிக்கொண்டு வந்த பொருளாளர் பொடியனை கணேசரின்

மனுசி கைப்பையில் வைத்திருந்த போத்தலால் தலையில் தாக்கி மண்டை உடைச்சு

விட்டாள்." அதிலை அவரை மந்திகை வைத்திய சாலைக்கு அனுப்பி விட்டு ஒரு சண்டை

அத்தோடு பொடியள் நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி விட்டார்கள், பழையபடி

முன்னர் இருந்த அதே கணேசர் தலமையில் நிர்வாகம் தான். இப்படி

அதிகாரத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமாக நடக்க முடியுமோ அப்படி நடக்கும் போது

தான் அரசியலின் ஆரம்பமே புரிந்தது."

தொடரும்..

ஜீவா இர‌ண்டாம் பகுதியை அவச‌ர‌ப்பட்டு எழுதின மாதிரிப் படுது :unsure:  குறை நினைக்க வேண்டாம்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்  ஒத்தக்காலில  நிண்டு தொங்கினா  ஜீவா  என்ன செய்யுறது  (ஆனாலும் அவசரமா  எழுதினமாதிரித் தான்  இருக்கு  :D )

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை ஆளாளுக்கு கேள்விகள் எங்கை போனாய்? ஏன் வீட்டை வரேல்லை என்று

ஆயிரம் கேள்விகள்? இந்தப் பச்சைப்பிள்ளை என்ன பாடுபட்டிருக்கும். பேசாமல்

மண்டிக்கொண்டு வந்தால் வாசல்லை வச்சு ஒரு "குட்டு" குட்டினான், மூளை கலங்கி

மூலம் வரைக்கும் கணத்தாக்கம் கடுகதி வேகத்திலை இறங்கிச்சுது.

இங்கு தான் ஜீவாத்தம்பி, மினுங்குகிறார்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா..அரசாங்கத்தின் சொல்லைநம்பி...அம்மன் கோவிலில்  இருக்க வந்தவர்கள் நாம்....செல்லடி தொடங்கியவுடன்...பிராதான வாசலை நோக்கி சனம் இடிபட்டு போகும்போது ..எமது உறவுகளும் அந்த பாதைக்கே போனார்கள்..என்ன நினைத்தேனோ..தெரியாது...கொடித்தம்பத்தை நெருங்கிய என் உறவுகள் அனைவரையும் வடக்கு வாசலால் இழுத்துவந்துவிட்டேன்...அந்த ஒரு கணப்பொழுதில் விழுந்த செல்லில் அவ்விடத்தில் இருந்த அனைவருமே பலியாகிவிட்டார்கள்..இன்று முத்துமாரி அம்மன் அருளால்...கனடாவில் சுகமாக இருக்கிறேன்...நீங்கள் இவ்விடயம் எழுத தொடங்கியவுடன் எல்லாமே படம்போல திரையில் ஓடுகிறது...

அம்மாளாச்சி நல்லாய்த் தான் தீர்த்தம் ஆடிறா  :icon_idea:  .ஆனால் கணேசற்றை சொந்தம் ஏதாவது வெளியிலை இருந்தால் நீங்கள் கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும்   :lol:  . வாழ்த்துக்கள் ஜீவா  :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்பர்சிட்டி கடற்கரைக்கு போய் தீர்த்தமாடி/// இன்பருட்டி கடற்கரைதான் எனக்கு தெரியும் தம்பி . சிலவேளை நான் இங்கை வந்தால் பிறகு பேர் மாத்தினவையோ தம்பி ??  உங்கடை கதை நல்லாய் தான் போகுது . கணேசற்றை மூத்த மகள் என்னோடை ஒண்டாய் படிச்ச நெருக்கமான நண்பி . போனமுறையும் போனபோது சந்திச்சன் .உங்கடை கதைக்கு எனது பாராட்டுக்கள் தம்பி .

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் திருவிழா இளசுகளின் களியாட்டம்.

அவர்களின்  அட்டகாசங்கள் எனப் பல பழைய ஞாபகங்களை மீண்டும்

நினைவில் வருகின்றன.

என்ன இருந்தாலும் எங்களைப் போல அட்டகாசம் :) பண்ணவில்லை எனத் தோன்றுகின்றது.

எழுதினால் என்னவென்று தோன்றுகின்றது. :lol:

நேரம் கிடைத்தால் உங்கள் பதிவிலேயே எழுதுகின்றேன்.

தொடருங்கள் ஜீவா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்பருட்டி கடலுக்கை தீர்தமாட இறங்கின அம்மாளாச்சியை காணேலை . தம்பி ஜீவா எங்கை போட்டீங்கள் ??

  • 10 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2013 at 09:00, ஜீவா said:

அப்ப உங்கள் வயதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. :rolleyes:

பல சம்பவங்கள் கேள்விப்பட்டவற்றையே வைத்து எழுதுவதால் சிலதை தவிர்த்தே எழுதுகிறேன்.

ஏதும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி அல்வாயான் அண்ணா, உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

அப்ப என்னை ஆமி பிடிச்சுக்கொண்டுபோனது.. வயசு....படிக்கிறபள்ளிக்குடம் கேட்டபின் சிலரை..வி..ட்டவை ..அந்த குறூப்பிரிப்🙃பிலை நீங்களும் இருந்தனீங்களோ ... கப்பலிலை ஏத்தும்போது எங்கை ஏத்தினவை..😄 இந்த இடத்திலை நடந்த அந்த கோடூரம் யாருக்கும்  ஏற்படக்கூடாது.....மறக்கவும் மாட்டேன்...மன்னிக்கவும் மாட்டேன்..சிங்களவனை

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தக் கதை இப்போதுதான் என் கண்ணில் பட்டது .......என்றாலும் மிகுதியை எப்ப படிப்பது.......!  😴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.