Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிட்டுக்கு மனம் சுமந்து .....

Featured Replies

நானும் ஒரு புட்டுப் பிரியன் ஆனால் உடம்பு வைக்கும் என்பதால் இரவில் சாப்பிட கொஞ்சம் தயக்கம். மனிசி அந்த மாதிரி புட்டவிக்கும். கூடுதலாக ஸ்டீமர் தான் பாவிப்பது. அலுமினிய குழலும் இடைக்கிடை பாவிப்பாள். ஒருமுறை விருந்தினர்களுக்கு புட்டு நைட் வைத்தோம். புட்டு, கோழிக்கறி, டெவில்ட் சிக்கின், முட்டை ஒம்லட், உருளைக்கிழங்கு சொதி எண்டு அந்த மாதிரி இருந்திச்சு. புட்டுடன் பாலும் சீனியும் எனக்கு பிடிக்கும். அதிலும் ஊரிலே அரிசிமாப் புட்டுடன் பாலாடையுடன் சேர்ந்த பாலை கொஞ்சம் சீனி சேர்த்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். புட்டுடன் தேங்காய்ப் பாலும் சேர்த்து

சாப்பிடலாம். நீங்கள் யாராவது தேங்காய்ப் பாலுடன் சாப்பிட்டிருக்கிறீர்களா?

556208_353364174732379_1632497474_n.jpg

599567_353363904732406_1816517412_n.jpg

304461_393314907403972_606296359_n.jpg

290305_388361434565986_145147940_o.jpg

தும்பரின் படங்கள் அந்த மாதிரி இருக்கு.

'கணவனின் விருப்பத்திற்காக மனைவி விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது' என்று பொடி வைத்து எழுதிய திரியில், அதை தவிர்த்து விட்டு புட்டை பற்றி எல்லோரையும் எழுத வைத்ததுதான் புட்டின் மகிமை.

இந்தக் கிழமை 'புட்டுக் கொத்து' செய்வதாக இருக்கிறேன்.

  • Replies 147
  • Views 25.7k
  • Created
  • Last Reply

புட்டு எனக்கும் பிடித்த உணவு, எந்த கறியுடனும் சுவைத்து சாப்பிடலாம். என் வடமாராட்சி நண்பன் வீட்டில் நெத்தலிப்புட்டு சாப்பிட்டிருக்கிறேன், அந்த மாதிரி சுவை. சிறு மீன்களையும் புட்டைமாவையும் கலந்து நீத்து பெட்டியில் அவிப்பார்கள். என் மனைவி கீரைப்புட்டு அவிப்பா மிகவும் சுவையாக இருக்கும்

  • வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
  • புளி - 20 கிராம்
  • தேங்காய் துருவல் - 40 கிராம்
  • சின்ன வெங்காயம் - 50 கிராம்
  • செத்தல் மிளகாய் - 5
  • மல்லி - ஒரு மேசைக்கரண்டி
  • நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - 8 பற்கள்
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு நெட்டு

A0564_01.jpg

வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

A0564_02.jpg

செத்தல் மிளகாய், நற்சீரகம், மல்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை அரைத்து எடுக்கவும்.

A0564_03.jpg

வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

A0564_04.jpg

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

A0564_05.jpg

அதில் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

A0564_06.jpg

வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மல்லி, மிளகாய் விழுதை போட்டு பிரட்டி விடவும்.

A0564_07.jpg

அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டவும்.

A0564_08.jpg

புளியுடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றி கரைத்து பிரட்டி வைத்திருக்கும் மசாலா கலவையில் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

A0564_09.jpg

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கி வைக்கவும்.

A0564_10.jpg

சுவையான வெந்தயக் குழம்பு ரெடி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு பொரியல் வகையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இலங்கை தமிழரான திருமதி. அதிரா அவர்கள் திருமதி. மாலதி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த வெந்தயக் குழம்பு இது.

http://www.arusuvai.com/tamil/node/12754

மேலே உள்ளது இணையத்தில் காணப்படுவது.

எனது முறை:

1. ஒரு அளவானா உருளைகிழங்கு.

2. ஒரு பெரிய பம்பே வெங்காயம்.

3. மூன்று மேசைகரண்டி வெந்தயம்.

4. இரண்டு அல்லது மூன்று கொவ்வை தக்காழிப்பழம்.

5. தேவையான அளவு உரித்த உள்ளி.

Lalah’s கறிப்பவுடர் இரண்டு மேசை கரண்டி(தேங்காய் தேவைப்படாது- விருப்பமான குழம்பு தடிப்புக்கு ஏற்றபடி  Lalah’s கறிப்பவுடரை கூட்டலாம் குறைக்கலாம்). Jaffna  கறிப்பவுடர் 1 மேசை கரண்டி(உறைப்பு தேவைப்படி Hot or Mild பாவிக்கவும்).

காலையில் புட்டுக்கு வைக்கும் குழம்பானால் படுக்க போகும் போது வெந்தயத்தை சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவிடவும்.  (சிறிய கிளாசில் போடுவதை தவிர்க்கவும்)

காலையில் வெந்தயத்தை வடித்து தண்ணிர் வடியவிடவும். உடனேயே வெங்காயம், தக்காழிப்பழம், உருளை கிழங்கை சுத்தம் செய்து பதம் செய்து நறுக்கி எடுத்து கொள்ளவும்.

வானெலியில் சற்று மிதமான ஒலிவ் ஓயில் விட்டு சூடானபின்னர்  அரை அரை தேக்கரண்டி கடுகு, பெருஞ்சீரகத்துடன் ஆரம்பித்து சிறிதளவு உழுத்தம் பருப்பையும் போட்டு கருகும் போது சிறிதளவு பெருங்காயப் பவுடரையும் போட்டு முழுவதாக கருக முதல் உருளை கிழங்கை சேர்க்கவும்.

உருளைகிழங்கு துண்டுகளின் வெளிப்பாகம் மட்டும் பொரிந்த அடையாளங்களை காட்டும் போது வெந்தயத்தையும் போடுட்டு வதக்கவும். வெந்தயம் வதங்கிய பின்னர் வெங்காயம் உள்ளி  ரண்டையும் போட்டு வதக்கவும். வெங்காயம் தாளிதத்தில் போல கருக்க கூடாது. ஆனால் பொரிந்து முடிய வேண்டும்.  

அப்போது தக்காளிப்பழத்தை போடவும். தக்காழிப்பழம் போடும்போது சட்டியில் வெங்காயம் பொரிந்து மிகுதி எண்ணை இல்லாமல் இருந்தால் நல்லது. தக்காழிப்பழம் வெங்காயம், வெந்தயத்தில் உள்ள எண்ணையை பாவித்து பொரிய ஆரம்பிக்கும். பொரிந்து முடிய முழுவதாக உருகி இளகிய கழி நிலைக்கு வரும். அப்போது Lalah’s கறிப்பவுடரை சேர்த்து ஒரு நிமிடம் வரை கிழறவும். பின்னர் தேவையான அளவு தண்ணிர் (சட்டியில் இருக்கும் கலவைக்கு ஒரு சென்டி மீற்றர் மேலே போகும் வரையும்) சேர்த்து உப்பு, புளி(அதிகம் தேவை இல்லை), Jaffna கறிப்பவுடர் எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் சூட்டை குறத்து மெல்லிய கொதியுடன் வேகவிடவும். 30-45 நிமிடம் வரை வேக வைத்தால் தான் கறிப்பவுடர்களின் சுவை குழம்பில் இறங்கும். அதன்பின் இறக்கி உடனேயே கறிவேப்பிலை, மல்லி இலையை சேர்த்து மூடிவிடவும். அதன் பின்னர் புட்டை ஆரம்பித்து செய்து குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழம்பை கூட்டும் போது ¼ தே கரண்டியிலும் குறைவான சீனியும் சேர்த்துவிடலாம்.   

Edited by மல்லையூரான்

மிக்க நன்றி மல்லை. சில ஆட்கள் உருளைக்கிழங்குக்குப் பதிலாகப் பொரித்த கத்தரிக்காய் போடுறவர்கள். இரண்டு முறையிலும் செய்து பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

அது சரி ஏன் சீனி சேர்ப்பது??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

..தும்பளையான் உங்கள் உணவு அறையும் கோழி டெவிலும் நன்றாக உள்ளன. :D

304461_393314907403972_606296359_n.jpg
 
290305_388361434565986_145147940_o.jpg
 
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசதியாயின் சுவையான வெந்தய்க் குழம்பு எப்பிடி செய்கின்றனீர்கள் என்று ம் எழுதுங்கோ மல்லை, சுமோவுக்கும், நிழலிக்கும் மிக உதவியாய் இருக்கும் :lol: ( பக்கத்து இலைக்குப் பாயசம் வேணுமப்பா :lol: )

நல்ல ஆள்த்தான் அலை நீங்கள். என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்தாச்சோ. சுமேக்குத் தெரியாத சமையல் இல்லைத் தெரியுமோ. அம்மாவின் சுவை வராது என்று எழுதினேனே தவிர நான் வைப்பது சுவை இல்லை என்றேனா?? :lol: :lol:

புட்டு எனக்கும் பிடித்த உணவு, எந்த கறியுடனும் சுவைத்து சாப்பிடலாம். என் வடமாராட்சி நண்பன் வீட்டில் நெத்தலிப்புட்டு சாப்பிட்டிருக்கிறேன், அந்த மாதிரி சுவை. சிறு மீன்களையும் புட்டைமாவையும் கலந்து நீத்து பெட்டியில் அவிப்பார்கள். என் மனைவி கீரைப்புட்டு அவிப்பா மிகவும் சுவையாக இருக்கும்

உங்கள் கணவர் அப்ப நன்றாகச் சமைப்பார் என்று சொல்லுங்கள். :lol:

எனது  வெந்தயக் குழம்பு

பெரிய வெங்காயம் - 2

தக்காளிப் பழம் - 2

வெந்தயம் - 2 மே . கரண்டி

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - அளவானது

எண்ணெய் - 3 மே .கரண்டி 

தேங்காய்ப் பால்ப் பவுடர் - 3 மே. கரண்டி அல்லது

doble கிறீம் - 50ml 

பழப்புளி, உப்பு  - அளவானது

மிளகாய்த் தூள் - 2 மே. கரண்டி

உள்ளி - ஒரு முழுப் பூடு 

தண்ணீர் - அளவானது

முதலில் வெங்காயத்தை நீளமாக வெட்டி, சட்டி காய்ந்ததும் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடேறியதும் கடுகு, சீரகம் போட்டு, வெடித்ததும் வெங்காயத்தையும் போட்டு மிதமான சூட்டில்

வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கி வர வெந்தயத்தைப் போட்டு சிறிது நேரம் விட வேண்டும். அடிக்கடி கிளறி மீண்டும் சிறிதாக வெட்டிய தக்காளிப் பழங்களையும் போட்டு வதக்க வேண்டும். அப்போது உள்ளியையும் போட்டு வதக்கலாம். எல்லாம் சுருண்டு வரும் நேரம் தூள்,உப்பு, நீர்,பழப்புளி, பால்பவுடர், கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விட்டால் கறி தயார்.

வெந்தயத்தின் நீரை வெளியே ஊற்றினால் அதன் சத்துக்களும் அதனுடன் போய்விடும். 10 நிமிடம் கறி கொதிக்கும்போதே வெந்தயமும் அவிந்துவிடும். கடுகு தாளிக்கும் போது  வெந்தயத்தைப் போட்டால் வெந்தயம் கசக்கும் அதனாலேயே பின்னர் போடுவது.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

மிக்க நன்றி மல்லை. சில ஆட்கள் உருளைக்கிழங்குக்குப் பதிலாகப் பொரித்த கத்தரிக்காய் போடுறவர்கள். இரண்டு முறையிலும் செய்து பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

அது சரி ஏன் சீனி சேர்ப்பது??

அரிசி புட்டோடு சாப்பிடும் போது மிக சிறிய அளவு சீனி சேர்ப்பது ஒரு சுவையான சித்திணிப்பை கொடுக்கும்.

நான் இது வரயில் கதரிக்காயை சேர்த்ததில்லை. ஆனால் அதை தனியாக குழம்பு வைத்து புட்டுடன் சாப்பிடுவதுண்டு. இனி அதையும் செய்து பாரக்கலாம் என்று நினைக்கிறேன்.

சுமே அக்கா சற்று வித்தியாசமாக எழுத்தியிருக்கிறா. அதையும் முயற்சி பண்ணிபார்க்கலாம்.

நான் Lalah's கறிப்பவுடர் போடுவதால் பால்மா, தேங்காய் பாவிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சிதான் பக்கத்து இலைக்கு சொதி இல்லை என்றிருக்கிறவே. நீங்களும் அதே துணிச்சலுடன் சொல்லியிருந்தால் போனால் போகுது ஒரு சட்டி குழம்பிலை  இன்னுமொரு மாங்காய் விழுகிறது என்று சொல்லி உங்களுக்கும் ஒரு சட்டி குழம்பு அனுப்பி வைத்திருக்கமாட்டேனா. :lol: :lol:

இருந்தாலும் இரண்டு பேருமே இரப்பானை பிடித்த பறை பிராந்துகள்தான். இனித்தன்னும் சும்மா பகிடி சேட்டை விளங்காதவர்களுக்காக உண்மையாக ஒரு வெந்தய குழம்பு வைத்துப் பார்த்துவிட்டு எழுதுகிறேன். அதற்கிடையில் யாரும் வந்து என்னை காப்பாத்தினாலும் பரவாயில்லை. :D

அண்ணை மச்சியின்ரை சாட்டில நானும் உங்களது சமையலை செய்யலாமெண்ட நல்லெண்ணத்தில மச்சியை துணைக்கு கூப்பிட்டேன். பறவாயில்லை ஒரு சட்டி கறியெல்லாம் வேண்டாம் ஒரு கிண்ணத்தில மட்டும் தாங்கோ. :lol:

நாங்க பகிடியா கறிகேட்க உண்மையாவே செய்முறை தந்து அசத்தீட்டீங்கள். நன்றியண்ணா வெந்தயக்கறி செய்முறைக்கு. கொஞ்சம் பொறுங்கோ கறி சமைச்சு சாப்பிட்ட பின்னர் தான் உங்களை நீங்கள் காப்பாற்றுவதா அல்லுது நாங்கள் உங்களைக்காப்பாற்றுவதா என்பது தெரியும்.

இருந்தாலும் இரண்டு பேருமே இரப்பானை பிடித்த பறை பிராந்துகள்தான். :D

மண்வாசம் கலந்த மறந்து போன சொல்லை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் மல்லை.

நல்ல ஆள்த்தான் அலை நீங்கள். என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்தாச்சோ. சுமேக்குத் தெரியாத சமையல் இல்லைத் தெரியுமோ. அம்மாவின் சுவை வராது என்று எழுதினேனே தவிர நான் வைப்பது சுவை இல்லை என்றேனா?? :lol: :lol:

சுமேயக்கா அலையோடு ஒரு சமையல் போட்டி வைச்சா அலை அலையாகி கடலாகீடும். :lol:

நல்ல ஆள்த்தான் அலை நீங்கள். என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்தாச்சோ. சுமேக்குத் தெரியாத சமையல் இல்லைத் தெரியுமோ. அம்மாவின் சுவை வராது என்று எழுதினேனே தவிர நான் வைப்பது சுவை இல்லை என்றேனா?? :lol: :lol:

என்னவோ நீங்களே உங்களைப் புழுகிறியள் நான் உங்கட சமையலைச் சாப்பிட்டுப் பார்த்த பிறகு தான் சொல்லலாம் ( எனக்கு முன்னாலேயே சமைக்கணுமப்பா) :lol: 

உங்கள் கணவர் அப்ப நன்றாகச் சமைப்பார் என்று சொல்லுங்கள். :lol:

எனது  வெந்தயக் குழம்பு

பெரிய வெங்காயம் - 2

தக்காளிப் பழம் - 2

வெந்தயம் - 2 மே . கரண்டி

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - அளவானது

எண்ணெய் - 3 மே .கரண்டி 

தேங்காய்ப் பால்ப் பவுடர் - 3 மே. கரண்டி அல்லது

doble கிறீம் - 50ml 

பழப்புளி, உப்பு  - அளவானது

மிளகாய்த் தூள் - 2 மே. கரண்டி

உள்ளி - ஒரு முழுப் பூடு 

தண்ணீர் - அளவானது

முதலில் வெங்காயத்தை நீளமாக வெட்டி, சட்டி காய்ந்ததும் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடேறியதும் கடுகு, சீரகம் போட்டு, வெடித்ததும் வெங்காயத்தையும் போட்டு மிதமான சூட்டில்

வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கி வர வெந்தயத்தைப் போட்டு சிறிது நேரம் விட வேண்டும். அடிக்கடி கிளறி மீண்டும் சிறிதாக வெட்டிய தக்காளிப் பழங்களையும் போட்டு வதக்க வேண்டும். அப்போது உள்ளியையும் போட்டு வதக்கலாம். எல்லாம் சுருண்டு வரும் நேரம் தூள்,உப்பு, நீர்,பழப்புளி, பால்பவுடர், கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விட்டால் கறி தயார்.

வெந்தயத்தின் நீரை வெளியே ஊற்றினால் அதன் சத்துக்களும் அதனுடன் போய்விடும். 10 நிமிடம் கறி கொதிக்கும்போதே வெந்தயமும் அவிந்துவிடும். கடுகு தாளிக்கும் போது  வெந்தயத்தைப் போட்டால் வெந்தயம் கசக்கும் அதனாலேயே பின்னர் போடுவது.

நன்றி நண்பி !

புட்டு எதனோடும் சாப்பிடலாம்.  இனிப்பாக உறைப்பாக என அனைத்தோடும் சாப்பிடலாம்.  இதுவரை யாருமே மாம்பழத்தோடு புட்டுச் சாப்பிடுவதைக் குறிப்பிடவில்லை?  எங்கள் வீட்டின் இரவுத் தேசிய உணவு புட்டு தான்.  நான் அநேகமாக உறைப்பு அயிட்டங்களோடுதான் புட்டு சாப்பிடுவேன். எப்போதாவது இருந்துவிட்டுத்தான் பழங்களோடு புட்டு சாப்பிடுவது.  எனக்கு அதிகம் பிடித்தது குழல் புட்டுத்தான்.  நாங்கள் புட்டுக்கு மாக்குழைப்பது Food Processorஇல்.  மிகவும் குறுனியாகக் குழைக்கலாம்.  மல்லையூரான் குறிப்பிட்டதுபோல, ஒரு கிழமைக்குத் தேவையான அளவு குழைத்து வைத்து விட்டு அவிப்போம்.

அட ........ குளாய் புட்டிலை தொடங்கி இப்ப வெந்தைய குழம்பு வைக்கிற றெசிப்பியிலை  கப்பல்
வந்து நிக்குது  :lol:  :lol:  . இனி அப்பிடியே சொதிக்கும் போவம் :unsure::wub: . எனக்கெண்டால் ஒண்டுமே விளங்கேலை :icon_mrgreen: :icon_mrgreen: .

Edited by கோமகன்

புட்டுடன் விளாம்பழமும் தேங்காய்ப் பாலும் சீனியும்  குழைத்துச் சாப்பிட  அந்த மாதிரி இருக்கும்.

எல்லாரும் தீனிப் பண்டாரங்கள். :lol:

இது விளங்கவில்லை? சமையலுக்கு தனித் திரிகள் திறந்தவர் இல்லையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுடன் விளாம்பழமும் தேங்காய்ப் பாலும் சீனியும்  குழைத்துச் சாப்பிட  அந்த மாதிரி இருக்கும்.

எல்லாரும் தீனிப் பண்டாரங்கள். :lol:

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

ஏன் இல்லை கொம்புத் தேன் இருக்கப்பு :D .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இல்லை கொம்புத் தேன் இருக்கப்பு :D .

நீங்க எதை சொல்லுரிங்க  :D

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்களிலே எனக்கு பிடித்தது வெள்ளை மா புட்டு...எனக்கு புட்டை மாசிச் சம்பல்,முட்டைப் பொரியல்,ரின்மீன் குழம்பு ஆகியவற்றோடு சாப்பிட மிகவும் பிடிக்கும்...மரக்கறி என்டால் கத்தரிக்காய் பொரித்த குழம்பு அல்லது உருளைக்கிழக்கு கறி ஆகியவற்றோடு சாப்பிடப் பிடிக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்கா நாடுகளில்  திரிந்த காலங்களிலை  புட்டு சாப்பிட இருந்த ஆசையால் நானே அங்கு கிடைத்த சோளன் மாவை வாங்கி சட்டியில் துணியை  கட்டி அவித்து சாப்பிட்ட அனுபவம் உண்டு  இறப்பர் துண்டுகளை சாப்பிட்ட மாதிரி இருந்தது . வித்தியாசமான புட்டு யாரிற்காவது சாப்பிடவேணும் போல இருந்தால் சோளன் மாவில்  அவித்து சாப்பிட்டு பாக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் சொன்னதுபோல, எனக்கு சின்னன்ல பால் புட்டு ரொம்ப பிடிக்கும். நான் நினைக்கிறேன் தேங்காய்ப்பால், சீனி போட்டு தான் செய்வார்கள் என்று. அம்மா எப்பாவது இருந்திட்டு தான் செய்வா. இப்போ நினைச்சாலும் நாவூறுது.

குழல் புட்டும் பழைய மீன் கறியும் மாதிரி, அல்லது குழல் புட்டும் கூழாம் பிலாப்பழம் மாதிரி சுவையை நான் பார்த்ததில்லை. அவ்வளவு சுவை. இதை எழுதும்போதே வாயிலிருந்து வடிந்து விசைபலகை மேலே விழுகிறது வீணீர். :lol:

பகலவன் எச்சிலைத் துடையுங்கோ. எங்களுக்கும் பறக்கப் போகுது :lol: :lol:

நான் புட்டும் கறிகளும் பற்றி எழுதியதில் முக்கியமான ஒன்று விடுபட்டுவிட்டது. அவர் தான் புட்டும் வாழைப்பழமும், சீனியும்.  புட்டில் வாழைப்பழம் (முக்கியமாக கதலி) போட்டு சீனியும் போட்டு குழைத்து (குழைக்கும் போது 5 விரல்களாலும் குழைக்க வேண்டும்) சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி.

நானும் சிறு வயதில் பால்புட்டு சாப்பிட்டு இருக்கின்றேன். சிலர் சுறாப் புட்டும் செய்வார்கள். இங்கு கனடாவில் என் உறவினர் ஒருவர் Spinach கீரைய அரிஞ்சு புட்டு மாவோடு கலந்து கீரைப் புட்டு செய்து சாப்பிடுவார்.

நிழலி, சுறாப் புட்டு என்பது சுறாவறையைத்தான் கூறுவார்கள் சில ஊரார். புட்டுக்குள் சுறா போட்டு எப்படி? தெரிந்தால் எழுதுங்கோ.

ஆபிரிக்கா நாடுகளில்  திரிந்த காலங்களிலை  புட்டு சாப்பிட இருந்த ஆசையால் நானே அங்கு கிடைத்த சோளன் மாவை வாங்கி சட்டியில் துணியை  கட்டி அவித்து சாப்பிட்ட அனுபவம் உண்டு  இறப்பர் துண்டுகளை சாப்பிட்ட மாதிரி இருந்தது . வித்தியாசமான புட்டு யாரிற்காவது சாப்பிடவேணும் போல இருந்தால் சோளன் மாவில்  அவித்து சாப்பிட்டு பாக்கவும்.

இதை கோதுமை மா கலந்து வீட்டில் செய்கின்றனாங்கள். Food Processor இல் அடித்துவிட்டு, அவித்த உடன் சாப்பிட்டால் மெதுமையானதாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புடு சாபிடும்பொது விக்காமல் இருக்க தண்ணி குடிக்கவெணும்.இல்லாட்டி புட்டு விக்க்யே ஆக்கள் செத்துபொயிருக்கினம்.

வண்டு, பிட்டை வடிவாக மென்று உண்டால் விக்காது, பட்டினி கிடந்தவர்கள் அவதியில் உன்னும்போதுதான் விக்கும். :D

புட்டு எதனோடும் சாப்பிடலாம்.  இனிப்பாக உறைப்பாக என அனைத்தோடும் சாப்பிடலாம்.  இதுவரை யாருமே மாம்பழத்தோடு புட்டுச் சாப்பிடுவதைக் குறிப்பிடவில்லை?  எங்கள் வீட்டின் இரவுத் தேசிய உணவு புட்டு தான்.  நான் அநேகமாக உறைப்பு அயிட்டங்களோடுதான் புட்டு சாப்பிடுவேன். எப்போதாவது இருந்துவிட்டுத்தான் பழங்களோடு புட்டு சாப்பிடுவது.  எனக்கு அதிகம் பிடித்தது குழல் புட்டுத்தான்.  நாங்கள் புட்டுக்கு மாக்குழைப்பது Food Processorஇல்.  மிகவும் குறுனியாகக் குழைக்கலாம்.  மல்லையூரான் குறிப்பிட்டதுபோல, ஒரு கிழமைக்குத் தேவையான அளவு குழைத்து வைத்து விட்டு அவிப்போம்.

மாம்பழத்துடன் உண்பதும் எனக்குப் பிடிக்கும்.ஆனால் மாம்பழம்  எனக்கு ஒத்துவராத உணவு.அதனால் அடிக்கடி உண்பதில்லை.

என்னவோ நீங்களே உங்களைப் புழுகிறியள் நான் உங்கட சமையலைச் சாப்பிட்டுப் பார்த்த பிறகு தான் சொல்லலாம் ( எனக்கு முன்னாலேயே சமைக்கணுமப்பா) :lol:

வேணுமெண்டால் ஒருமாதம் லீவு போட்டுவிட்டு வாங்கோ அலை. எல்லா உணவும் செய்து பழக்கிவிடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

நந்தனுக்கு மனிசி புட்டு அவித்துத் தாறதில்லைப் போல :lol:

புட்டுக்களிலே எனக்கு பிடித்தது வெள்ளை மா புட்டு...எனக்கு புட்டை மாசிச் சம்பல்,முட்டைப் பொரியல்,ரின்மீன் குழம்பு ஆகியவற்றோடு சாப்பிட மிகவும் பிடிக்கும்...மரக்கறி என்டால் கத்தரிக்காய் பொரித்த குழம்பு அல்லது உருளைக்கிழக்கு கறி ஆகியவற்றோடு சாப்பிடப் பிடிக்கும் :)

மாசிச் சம்பலும் நன்றாகத்தான் இருக்கும். நான் பருப்புக்குள் மாசி போட்டுச் சமைப்பேன். அதுக்கும் பிட்டுடன் உண்ணச் சுவையானது.

ஆபிரிக்கா நாடுகளில்  திரிந்த காலங்களிலை  புட்டு சாப்பிட இருந்த ஆசையால் நானே அங்கு கிடைத்த சோளன் மாவை வாங்கி சட்டியில் துணியை  கட்டி அவித்து சாப்பிட்ட அனுபவம் உண்டு  இறப்பர் துண்டுகளை சாப்பிட்ட மாதிரி இருந்தது . வித்தியாசமான புட்டு யாரிற்காவது சாப்பிடவேணும் போல இருந்தால் சோளன் மாவில்  அவித்து சாப்பிட்டு பாக்கவும்.

எதைஎதையோ சாப்பிடுறம். உதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டாப் போச்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நல்லாய்தான் புட்டு அவிக்குறிங்கள் . நான் ஓட்ஸ் புட்டுதான் இங்கை அவிக்கிறனான் . என்ரை அவருக்கு ஓட்ஸ் புட்டு எண்டால் காணும் . சாதரணமாய் கறியளோடை சாப்பிட நல்லாய் இருக்கும் . நான் ஊரிலை இருந்த நேரம் புட்டும் பழைய முருங்கைக் கறியும் எண்டால் எனக்கு உயிர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புட்டும் கறிகளும் பற்றி எழுதியதில் முக்கியமான ஒன்று விடுபட்டுவிட்டது. அவர் தான் புட்டும் வாழைப்பழமும், சீனியும்.  புட்டில் வாழைப்பழம் (முக்கியமாக கதலி) போட்டு சீனியும் போட்டு குழைத்து (குழைக்கும் போது 5 விரல்களாலும் குழைக்க வேண்டும்) சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி.

நானும் சிறு வயதில் பால்புட்டு சாப்பிட்டு இருக்கின்றேன். சிலர் சுறாப் புட்டும் செய்வார்கள். இங்கு கனடாவில் என் உறவினர் ஒருவர் Spinach கீரைய அரிஞ்சு புட்டு மாவோடு கலந்து கீரைப் புட்டு செய்து சாப்பிடுவார்.

இதை நாங்கள் சுறா வறை எண்டுதான் சொல்லுவம் .  வல்வெட்டித்துறை ஆக்கள்தான் சுறாவறையை , சுறாபுட்டு எண்டு சொல்லுறவை .

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் சொன்னதுபோல, எனக்கு சின்னன்ல பால் புட்டு ரொம்ப பிடிக்கும். நான் நினைக்கிறேன் தேங்காய்ப்பால், சீனி போட்டு தான் செய்வார்கள் என்று. அம்மா எப்பாவது இருந்திட்டு தான் செய்வா. இப்போ நினைச்சாலும் நாவூறுது.

அவ்வளவு சுவை. இதை எழுதும்போதே வாயிலிருந்து வடிந்து விசைபலகை மேலே விழுகிறது வீணீர். :lol:

வீணி வடிச்சது காணும் போய் சுமேயக்கான்ரை செய்முறையை பாத்து புட்டவிச்சு வீட்டை குடுங்கோ. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.