Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 
04-self-immolation-66-300.jpg   04-mani-immolation-rajapaksa-300.jpg
 
கடலூர்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இன்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியபடியே தமது உடலுக்கு தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீப் பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்தோர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலைமையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

உயிருக்குப் போராடிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணி, தனித் தமிழீழம் அமைய வேண்டும் - இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும்.

இதேபோல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிதி கிடைக்காமல் ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டனர். இதனால் ஊழலற்ற இந்தியா மலர வேண்டும். அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரது வலுவான லோக்பால் மசோதா கோரிக்கை நிறைவேறவும் எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என்றார்.

கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் உடனிருந்து சிகிச்சைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

 
 

 

போராட ஆயிரம் வ்ழிமுறைகள் இருக்கையில் ஏனிந்த உணர்ச்சிகரமான முடிவு? 

 

விரைவில் நலம்பெற வேண்டுதல்கள்.

 

 

Reason for edit: added one more image.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி முட்டாள் தனமான காரியங்களைச் செய்து.. சாவதிலும்.. இந்த உயிர்கள்.. போர்க்குற்றவாளிகளை தண்டிக்க ஏதாவது உருப்படியாகச் செய்யலாம். நாம் தமிழர் கட்சித் தலைமை இவர்களை சரியாக வழிநடத்த வேண்டும்..! மக்களே உணர்ச்சி வேகத்தில் இப்படியான காரியங்களைச் செய்யாதீர்கள். உங்கள் உயிரும் உயிர் வாழ்வும் விலைமதிப்பற்ற சொத்து. எங்கள் இன இருப்பின் மூலதனமே அதுதான்.

 

அந்த வகையில் இந்த இளைஞர் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். மருத்துவர்கள் இவருக்கு  உச்ச சேவை வழங்க முன்வர வேண்டும்..!

Edited by nedukkalapoovan

அவர் எடுத்த முடிவு தவறுதான். ஆனால் அவர் உணர்ச்சி வேகத்தில் செய்ததாக கருதவில்லை. தமிழர்களின் உண்மையான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் தங்கள் நலன் சார்ந்தது இயங்கும் அரசியல் கட்சிகளிடமும் , அரசுகளிடமும் ஒரு ஒரு முறையும் போராடி போராடி விரக்தியடைந்த நிலையையே இது பிரதிபலிக்கிறது. இந்நிலையில் தன்னுடைய இந்த முடிவாவது ஒரு பெரிய மாற்றத்தை இங்கு விதைத்து நோக்கம் நிறைவேற உதவாதா ? என்ற ஏக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே கருதுகிறேன்.

 

அவர் உடல் நலத்துடன் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் இவ்வாறான மரணங்கள் வேண்டாம்!

 

எங்களை நாங்கள் அழித்துக் கொள்ளவும் வேண்டாம்!

 

முத்துக்குமாரன் இன்று இருந்திருந்தால், இன்னொரு திருமுருகனாக இருந்திருப்பான்!

 

மணி அவர்கள் விரைந்து நலம் பெறப் பிரார்த்திக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

60(1784).jpg

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களைச் செய்திருப்பின் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் தீக்குளித்துள்ளார். 

உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், கடலூர் மாவட்டம், நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வரும் இவர், இன்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் போத்தலுடன் வந்து, இலங்கை ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிக்க வேண்டும் என்று கூச்சலிட்டவாறு தனக்குத் தூனே தீக்குளித்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அங்கிருந்தோர் தீயை அணைத்து மிகவும் ஆபத்தான நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

உயிருக்குப் போராடிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணி, 'தனித் தமிழீழம் அமைய வேண்டும் - இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும்' என்று கூறியுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59962-2013-03-04-08-36-33.html

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து உங்கள் உன்னதமான உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவின் உயிரைக் காப்பாற்ற ஆண்டவனை வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது தொப்புல் கொடி உறவுகளே இனி இப்படி செய்யாதீங்கள்...அண்ணன் முத்துக் குமார் தீக் குளிசு மரணம் அடைய ..அவர் காதல் தோல்வியால் தீக்குளிச்சார் என்று சொன்ன காங்கிரஸ்சிடம் உங்களின் தியாகம் மன வேதனை புரியப் போவது இல்லை... :(

  • கருத்துக்கள உறவுகள்

mani%201.jpg

mani%202.jpg

mani%203.jpg

mani%204.jpg

mani%205.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ராசா

எழும்பி  வாடா

செய்வதற்கு ஆயிரம் உள்ளது

இந்த மனத்துணிவை  வலிமையை உயிரையே  துச்சமாக நினைக்கும் உன்  தியாக வீரத்தை

எமது போராட்டத்துடன் நின்று செய்.

 

உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து உங்கள் உன்னதமான உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள்

தீ குளிப்புகள் 
தீர்வு ஆவதில்லை
நீ ஆகிப்போவது 
அரசியல் வாதியின் 
கபட நாடகத்தின் 
விளம்பர பாதகையாய் 
மட்டுமே ..

உயிர் இருக்கும் வரை 
ஓயாமல் ஒலிக்க செய் 
நம்
உரிமைக்குரலை ...
.
..
.
.
.
பொது சனம் உங்களில் ஒருவன் ..

  • கருத்துக்கள உறவுகள்

ஈகைத்தியாகி மணி உயிர்பிழைக்க வேண்டும்..

இது வெறும் உணர்ச்சி அரசியல் அல்ல.. ஆற்றாக்கொடுமையில் எடுக்கப்பட்டுள்ள கடைசி முடிவு.. ஆனாலும் தவிர்க்கப்பட வேண்டியவை..

தீக்குளிக்க வேண்டியவர்கள் இல்லை தீக்குளிக்க வைக்கப்படவேண்டிடியவர்கள் சில தலைவர்களே. அவர்களை முழுமையாக அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவேண்டும்.

மணி உன் உயிரை வீன் அடித்து விட்டயே பேதுன்டா நம் இனம் அழிந்து நீ தீயில் கருகினள் என்ன பலன் ஈழத்தில் இழந்த நம் உறவுகள் திரும்ப வந்து விடுவார்கள மணி

 

நம் தலைவன் நமக்கு சொன்னது நமக்கு இரண்டு கண் போனலும் நம் எதிரிக்கு ஒரு கண்னாவது போயி இருக்கவேண்டும் அப்பேதுதான் நம் உயிர் போகவேண்டும் அதை விட்டு இப்படி தீயில் கருக வேண்டிய வனை விட்டு வைத்து இருக்கோம் ?

 

நம் சாகபிறந்தவர்கள ? ஆளபிறந்தவன். சாகின்றய தமிழா சாகின்றய் உன்னை சாகசெய்தவனை சாகச்செய்யாமாள் சாகின்றய் தமிழா சாகின்றய் ?

 

- முருகன் சென்னை



தமிழீழ விடுதலைக்காக தங்களையே தீயிட்டு கொளுத்தி கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

 

இது ஒரு தவறான போக்கு.இதை ஒரு போதும் ஆதரிக்க கூடாது.


சாத்தியமான தீர்வுகளையும், அதை அடைவதற்கான பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டுமே ஒழிய, இது போன்ற தவறான உதாரணங்களை நாம் ஊக்குவிக்க கூடாது. உயிர்களை மதிக்கும் அளவுக்கு, இங்குள்ள அரசுகள் இல்லை என்பதை உணர வேண்டும்.

 

- பொறியாளர். ஆன்டனி வளன்



இந்தச் சகோதரனின்
கருத்தை மதிக்கிறேன் ஆனால்


அவர் தேர்ந்தெடுத்த வழி தவறானது

 

நாம் எதையும் போராடியே பெறவேண்டும் இந்தியாவில் தமிழனின் உயிருக்கு
மதிப்பே கிடையாது ....!!!!!!


எதற்க்காகவும் எதிர்காலத்தில்
இனி ஒரு தமிழன்
தன் உயிரை தானே
அழித்துவிடக் கூடாது ....!!!!!

 

இப்படியான வீரர்கள் சீமானுனுடன்
துணை நிற்க வேண்டும்...!!!!!!

 

இதைவிட இந்த சகோதரன்
தமிழகத்தில் இரண்டு
சிங்களவனை உயிருடன் கொளுத்தி இருந்தால் ...!!!!

 

அதன் பாதிப்பு மிக அதிகமாகி இருக்கும் அப்பபொழுது
இந்தியா என்ன உலகமே
தமிழனை தேடி வந்து அடி பணியும்
இனி ஒரு போதும்

தற்கொலை பண்ணாதீர்கள் ...!!!

முடிந்தால் சிங்களவனையோ ..!!!!

கருனா குடும்பத்தினரயோ ..!!!!
கொளுத்துங்கள்....!!!!!

 

- வாஸ் மில்லர் ஈழத்தமிழன்

 

(சில முகநூல் பதிவுகள்)

இந்த இளைஞன் உயிர் பிழைக்க வேண்டும். தமிழனுக்கு ஒரு நாடு ஆவதை கண்ணார காணவேண்டும்.

 

கருணாநிதி ஆட்சியின் போது தமிழகத்து இளைஞர்கள் நம்பிக்கை இழந்தவர்களால மாற்றப்பட்டது உண்மையே. ஆனால் அது இப்போது சுகமாக்கிக்கொண்டும் வருகிறது. இது கடையாக இருக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் தம்பிகளே! இழந்தது போதும். களமாட, வெற்றி பெற இலட்சியம் மிக்க இலக்குகள் இருக்கின்றன: சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டதை தமிழ்த் தேசிய இனம் தனது ஆன்மாவில் ஆறாத காயமாய் சுமந்து வருகிறது என்பதற்கு சான்றாக கடலூர் மாவட்டம், கடலூர் தாலுக்கா, நல்லவாடு கிராமத்தினைச் சேர்ந்த தம்பி இல.மணியின் தீக்குளிப்பு சம்பவம் அமைந்துவிட்டது.

சிங்கள பேரின வாத அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரக் கோரியும், கடலூர் சுனாமி குடியிருப்பு கட்டிடப் பணிகளில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க கோரியும் தீக்குளித்த என் அருமைத் தம்பி இல.மணி நாம் தமிழர் கட்சியின் கடலூர் பகுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக களமாடியவர். எமது அமைப்பின் பெருமைமிக்க தளபதியாக விளங்கும் இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது.

நீண்ட நெடிய காலமாக தமிழ்த் தேசிய இனம் தம் வரலாற்றுப் பாதையில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரின வாதத்தினால் பெருக்கெடுத்து ஓடிய தமிழனின் குருதி இன்றும் உலராத நிலையில் தம்பி. இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி இந்த இனம் இன்னும் தன்னை அழித்தே தழைக்க முயல்கிறது என்பதை உணர முடிகிறது.

தமிழரின் தாய்நிலமான  ஈழத்தில் உயிராக உடலாக உதிர்ந்த இந்த இனம் துளிர்ப்பதற்காக உணர்வோடும், அறிவோடும் களமாடவேண்டிய, என் அன்பிற்கினிய தளபதி தம்பி இல.மணி இப்படி தன்னைத்தானே அழித்துக்கொண்டு இந்த இனத்தை எழுப்ப முயற்சிப்பதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன விடுதலை பாதையில் தமிழினம் இழந்த உயிர்கள் ஏராளம் இருக்க, தம்பி.இல.மணி போன்ற என்னுயிர்த் தம்பிகளை இழக்க குடும்பத்தின் மூத்த அண்ணனான என்னால் ஒரு போதும் முடியாது. சத்தியத்தின்  திரு உருவாக விளங்கும் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனின் தம்பிகளான நாம் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கையோடு களமாட வேண்டிய எம் தம்பிகள் இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

மாவீரர்கள் அப்துல்ரவூப், முத்துக்குமார், செங்கொடி போன்ற நம் இனத்தின் பெருமைமிக்க ஆளுமைகளை, வளர்ந்து வாழ்ந்து இந்த இனத்திற்கு உதாரணங்களாய் விளங்க வேண்டியவர்களை, தீயின் செந்நாவிற்கு பலி கொடுத்துவிட்டு, பரிதவித்து நிற்கின்ற இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தற்கொலை முயற்சி என்னை மட்டும் அல்ல, நாம் தமிழர் என்கின்ற இந்த இனத்தின் பெரும் குடும்பத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேண்டாம் தம்பிகளே! இழந்தது போதும். களமாட, வெற்றி பெற நமக்கு இலட்சியம் மிக்க இலக்குகள் இருக்கின்றன. நம் இனத்தை அழித்த சிங்கள பேரின வாத அரசினை தமிழ்த் தேசிய இனம் சினம் கொண்டு, வன்மம் சுமந்து உலகச் சமூகத்தின் முன் நிறுத்தி பழிதீர்த்துக் களமாடவேண்டிய இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தற்கொலை முயற்சி தவிர்க்கபட்டிருக்க வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகிறேன். எம்மை ஆற்றொணாத் துயரிலும், கண்ணீரிலும் ஆழ்த்தி இருக்கிற தம்பி.இல மணியின் தற்கொலை முயற்சி போன்ற தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயல்களில் தமிழின இளைய சமூகம் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

உயிரை தர வேண்டாம்..தம்பிகளே..நாம் தமிழர் என்கிற உணர்வினை தாருங்கள்.அது போதும். இந்த இனத்தின் விடுதலைக்கு. என உங்களிடம் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93404

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உடல் நலத்துடன் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தீக்குளித்த மணி உயிரிழப்பு - புதியதலைமுறை :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

இந்த விதமான போராட்டம் வேண்டாம் நண்பர்களே.. உறவுகளே.. திலீபன் உயிர்நீத்தபோதே காந்தி தேசம் அகிம்சைக்கு கொடுத்து வந்த மரியாதை தெள்ளத்தெளிவாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

601296_611429532205234_398380678_n.jpg

மணி அவர்களின் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !!!

 

 

இவரின் இறப்பிற்கு காரணம் காருணாநிதியும் மன்மோகன்சிங்குமே.

திரு மணி அவர்களின் பேச்சு

 

தனி ஈழம் அமைய வேண்டும்

- இந்தியாவில் ஊழல் ஒழிய வேண்டும்

 

 

நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மணி அவர்களுக்கு சீமான், வைகோ அவர்கள் இறுதி வணக்கம்!

 

http://www.youtube.com/watch?v=FjC3ap1KECQ

ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் நாட்டு உறவுகளே ஐ.நா வில் பிரேரணை இருக்கும் போது இப்படி ஒன்று இனி முயற்சிக்கப்படாது என்பது அன்பான வேண்டுகோள். நமக்கு நிச்சயமான விடிவு இருக்கு; வீணே உயிரை தியாகம் செய்யாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞசலிகளும், அனுதாபமும்.

ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

 

தமிழர்களின் உயிரை செல்லாக் காசாக அனைத்து அரசுகளும் நினைத்திருக்கும் இக்காலவேளையில், இலக்கை அடைய இன்னும் பயனுள்ள வேறு வழிகளில் முயற்சித்திருக்கலாம். மக்களின் மனோநிலைபடி இத்தியாகம் சில நாட்கள் பேசப்படும், பின் மறைந்துவிடும்.

Edited by ராஜவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.