Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவை காப்பாற்றும் நோக்கில் சுப்பிரமணியசாமி: அமெரிக்கா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

Featured Replies

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் நோக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி அவசரமாக அமெரிக்காவுக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வோஷிங்டனில் [Aerica washington ] அமெரிக்க உயர்அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேய ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை சென்று மகிந்த ராஜபசவை சந்தித்து உரையாடினார் சுப்பிரமணிய சாமி.

ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு மொத்தம் உள்ள 47 நாடுகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ள நிலையில், இதை எப்படி தோற்கடிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்பது குறித்து ராஜபக்சவும் சுப்பிரமணியசாமியும் பல்வேறு கோணங்களில் கலந்துரையாடினர்.

சுப்பிரமணியசாமிக்கு பல்வேறு நாடுகளில் தொடர்பு உண்டு. அவர் பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகளோடு நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார்.

இந்நிலையில், ராஜபக்சேவை எப்படியாவது இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் சுப்பிரமணியசாமி அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நியூயார்க்கில் [ new york ] உள்ள கென்னடி [ kennedy airport ] விமான நிலையத்தில் இறங்கிய சுப்பிரமணியசாமி  ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.பின்னர் தலைநகரான washington  வோஷிங்டனுக்கு சென்று அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என மேலும் குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில் சுப்பிரமணிசாமியின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13165:subiramaniya-suwamy-america&catid=36:tamilnadu&Itemid=102

சுப்பிரமணியத்துக்கு அப்படி என்னதான் தமிழர்கள் செய்தார்கள் எப்படியாவது அவர்களை பழிவாங்க துடிக்கின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்
சுவாமியோடு ருவீட் செய்ய விரும்பின்
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thirumurugan Gandhi on Facebook

 

ராபர்ட் பிளேக் எனப்படும் அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான அதிகாரியின் அமைதிப் பேச்சுவார்த்தை காலகட்டத்திலிருந்து 2009 மார்ச் மாதம் 11ம் தேதி கொழும்புவில் “பிரபாகரன் அழிவிற்கு பிறகு இலங்கை அரசு தமிழர்களுக்கு தீர்வு அளிக்கவில்லையெனில் அமெரிக்கா அமைதியாக இருக்காது” என்பதையும், “பின் லாடனும், பிரபாகரனும் கொல்லப்படுவது அவசியம், அவர்கள் பயங்கரவாதிகள் “ என்றும் , சென்னையில் அதே 2009 மார்ச் மாதத்தில் “இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவேண்டும், அதற்கான உதவிகளை இலங்கைக்கு செய்வோம்” என்று சொன்னதையும் மறந்து விட முடியாது. 

ஹுகோ சாவேஸ் ராஜபக்சேவிற்கு ஆதரவாக அவரைச் சந்தித்ததை மறக்காத நாம், தமிழர்களை காக்கிறோம் என்று வெளியில் கூறிவிட்டு இலங்கையோடு கைகோர்த்து அமெரிக்க இன்று வரை செயல்படுவதையும் மறந்து விடக் கூடாது. ஹுகோ சாவேஸின் செயல்பாடு என்பது ராஜபக்சேவின் கைகுளுக்கியதோடு நிற்கிறது. ஒபாமாவின் செயல்பாடு ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்கள் இணக்கமாக வாழவேண்டும் என்கிற கட்டாயத்தினை தமிழர்கள் மீதி திணிக்கிறது (2009 ஆகஸ்டில் இருந்தே இந்த நிலைப்பாட்டினை தமிழர்களிட்த்தில் முன்வைக்கிறார்கள். மேலதிக விபரங்களை தமிழ்னெட்டில் பார்க்க முடிகிறது) . மேலும், இனப்படுகொலை-போர்க்குற்றம் சாட்டப்பட்ட இலங்கை ராணுவ அதிகாரியை தனக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வெகு சமீபத்தில் நியமித்ததையும் நாம் மறக்க முடியாது. 

மன காயத்துடன் இருக்கும் நம்மிடம் நேரடியாக எதிரியின் அருகே நின்று நமக்கு எதிரியாக தோற்றமளிக்கக் கூடியவர்களை எதிர்க்கும் அதே நேரம் நமக்கு அருகே அமர்ந்து ஆதரவு வார்த்தைகள் கூறி நமது விடுதலையை அழிக்கும் யுக்தி படைத்தவர்களை விட்டுவிட முடியாது. முன்னவரை விட பின்னவரே மிக மிக ஆபத்தானவர். இந்தியா இதுவரை தமிழர்களுக்கு எதிரான கருத்தினை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் அதை செயலில் காட்டி இருக்கிறது. அதே யுக்தியே அமெரிக்காவின் யுக்தியும். மறுபடியும் அடிபட்டே புரிந்து கொள்ளப் போகிறோமா எனத் தெரியவில்லை.. பாலஸ்தீன விடுதலை என்பது அமெரிக்காவின் துணையுடன் வெல்லப்பட வில்லை... 

சர்வதேசத்தின் கருத்தியல் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கான விவாதங்கள் பாலஸ்தீன - இசுரேல் 1993 அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2000 வருடத்திற்கு மேல்பட்டே உண்டாகின. அதுவரை சர்வதேசம் மேற்குலகம்-லத்தின் அமெரிக்க நாடுகள் பாலஸ்தீன மக்களிடத்தில் ஆதரவு காட்டவில்லை.. இன்று இது சாத்தியமானதற்கு (ஐ. நா பொது அவையில் பங்கேற்பு நாடாக/பிரதேசமாக அறிவிக்கப்பட்ட்தற்கு) காரணம் மிகச் சிறு நாடுகள் தங்களது நேர்மையான செயல்பாடுகள் மூலமாக சாத்தியப்படுத்தப் பட்டது. 

விரிவான அரசியல் தளத்திலேயே நமது அரசியலை நகர்த்திச் செல்லமுடியும். தமிழீழ அரசியல் என்பது ராஜபக்சேவுடன் மட்டுமே முடிந்து விடக்கூடியதல்ல. பல நாடுகள், நபர்கள், அரசுகள், நிறுவன்ங்கள் என பின்னிப் பினைந்து கிடக்கிற சமகால அரசியல் நிகழ்வு. சிறு சிறு எளிமையான முடிவுகளால் நம்மைச் சூழந்துள்ள அரசியலை புரிந்து கொண்டு வென்று விடமுடியாது. 

அமெரிக்காவினை எதிர்ப்பதாக இலங்கை காட்டிக் கொண்டு நடித்துவருகிறது. அதன் மூலமாக அது ஈட்டிய சர்வதேச உதவிகளை , அம்பலப்படுத்துவதன் மூலமாகவே முறியடிக்க முடியும். அது பல தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. மலேசியாவில் தமிழர்களுக்கு விரோதமான நிலைப்பாடெடுத்த, தமிழர்கள் கோவிலை அகற்ற உத்திரவிட்ட இப்ராகிம் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவதாக சொல்கிறார்கள். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் நிகழ்ந்த தமிழர்கள் மாநாட்டில் “ இலங்கை ஒரு இனப்படுகொலை அரசு, அது தண்டிக்கப்பட வேண்டும்” என முழங்கினார். தான் அதிகாரத்திற்கு வரும் போது அதற்கான ஆவன செய்வதாக உறுதி அளித்தார். தவறான புரிதலால் நிலைப்பாடினை தவறாக எடுத்த்தாக சொன்னவர் அவர். உலகில் இது பலருக்கு நிகழ்ந்திருக்கிறது. நமக்கு இவர்கள் நிரந்தர எதிரிகள் அல்ல. ஆனால் எவர் நமது வரலாற்றினைப் புரிந்து நமக்கு ஆதரவாக இருப்பதைப் போன்றதொரு செயல்பாட்டின் மூலமாக இலங்கைக்கு துணை செய்கிறார்களோ, எவர் நமது விடுதலையை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சிகளை செய்கிறார்களோ, எவர் நமது விடுதலைப் போராளிகளை களத்திலும், வெளியிலும் முடக்க வேலை செய்தார்களோ, எவர் நம்மை இன்னும் அகதிகளுக்கான பாதுகாப்பினை வழங்க மறுத்து திருப்பி அனுப்புகிறார்களோ அவர்களே நமது உண்மையான நீண்டகால எதிரிகள். 
நமக்கு இனிப்பு வழங்குபவர்கள் நண்பர்களுமல்ல, கசப்பினை அளித்தவர்கள் நிரந்தர எதிரியுமல்ல. விவாதிப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rajkumar Palaniswamy on facebook

 

182456_613168018698052_2078483812_n.jpg

 

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை நீள்கிறது சுப்பிரமணியன் சுவாமியின் செல்வாக்கு. உலக அளவில் மாமா வேலை பார்க்கும் வலிமை இவனுக்கு எப்படி கிடைக்கிறது? யார் இவனது பின்புலத்தில் இருக்கிறார்கள் என்பதை இனியாவது தமிழர்கள் ஆராய முற்பட வேண்டும்? தமிழக சட்டசபைக்கு இந்திய வெளியுறவு கொள்கையில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்று கூறும் இவன் மட்டும் தனியாளாக அமெரிக்கா வரை சென்று இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவை பணிய வைக்க சென்றுள்ளான். 

ஒரு சட்டமன்றத்திற்கே இல்லாத வலிமை, திறமை இவனுக்கு எப்படி வந்தது. இது வரை தமிழக அரசு ஐ நா மன்றத்திற்கு தனது சார்பில் ஒரு குழுவையும் அனுப்பவில்லை. தமிழர்களின் மேல் அக்கறை வைத்து சர்வதேசத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் ஒரு குழுவை கட்டி அமைக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு . ஆனால் அதை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டது . ஆனால் சிங்களவன் தமிழகத்தில் இருந்து ஒரு சர்வதேச தரகரான சு சுவாமியை தேர்ந்தெடுத்து தமிழர்களுக்கு எதிராக களம் இறக்கி உள்ளான். 

சிங்களவன் புத்திசாலியாக இருக்க தமிழக அரசோ இதை எல்லாம் வேடிக்கை பார்க்கிறது. இவனுடைய மாமா வேலையை நிறுத்தும் நடவடிக்கையையாவது தமிழக அரசு எடுக்க முன்வர வேண்டும் . தமிழக அரசின் சார்பில் ஈழப் பிரச்னையை கையாள ஒரு உயர்மட்ட குழுவை தமிழக அரசு உடனே உருவாக்க வேண்டும். இல்லையென்றால் சு சுவாமி போன்ற மாமாக்கள் நமது இனத்தை முற்றிலும் அழிக்காமல் ஓயமாட்டார்கள். தமிழக மக்களும் இனி சு சுவாமியை உன்னிப்பாக கவனித்து சரியான பாடம் புகட்ட வேண்டும். அவனை அம்பலப் படுத்துதல் வேண்டும். தக்க நேரத்தில் இவனை எல்லாவகையிலும் வீழ்த்த முன்வரவேண்டும். தமிழர்கள் சர்வதேச அரசியலில் தங்களை ஈடுபடுத்தி களமாட வேண்டும். அதற்கான அறிவை , திறமையை தமிழர்கள் வளர்த்துக் கொள்ளுதல் தற்போது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சி ஐ ஏ ஏஜெண்டு. ராஜீவ் கொலையில் சி ஐ ஏ யின் பங்களிப்பு இவர் மூலம் இருந்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

 

சும்மா பேச்சுக்கு ஒரு கட்சி. மற்றும்படி இவர் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு அரசியல்வாதி கூட இல்லை. மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒருவரும் அல்ல..!

 

அப்படி இருக்க.. அமெரிக்கா இவரைக் கண்டு அடக்கி வாசிக்குது என்றால்.. இவர் அமெரிக்கா எச்சரிக்கை கொள்ளத்தக்க தகவல்களை செயல்களை நகர்வுகளைச் செய்கிறார் என்பது தான் பொருள்..!

 

இவர் மூலம் அமெரிக்கா இந்திய குறிப்பாக தமிழக அரசியலைப் பற்றி உளவு பார்த்துக் கொண்டிருக்கிறது..! அதுமட்டுமன்றி... இவரை மாமா வேலைக்கும் அமர்த்தி அமெரிக்கா இந்திய உள்ளூர் அரசியல் மற்றும் பிரபல்யங்களையும் விலைக்கு வாங்கிறது என்ற அச்சம் நிறையவே உள்ளது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிலிந்த மொறகொட புஸ்சின் உறவினரை மணந்ததால் புஸ்ஸிடம் மிக நெருக்கமாக இருந்தார்.ஆனால் சுவாமி அப்படி இல்லாத போதும் அமெரிக்க அரசுடன் நெருக்கமாக இருப்பது (இவர் காவேட்டில் பேராசியராக இருந்தது காரணமாக இருக்க முடியாது)இந்தியாவின் பல தகவல்களை பரிமாறுகிறார் என்பது தவிர (நெடுக்ஸ் சொன்னது போல)வேறு காரணம் இருக்க முடியாது. சிறிலங்கா அரசும் இவரை வைத்து ஏதாவது காயை நகர்த்தலாம் என முயற்சிக்கிறது.

 

இந்தியாவில் பலரும் சந்தேகிப்பது போல் ராஜீவ் கொலையில் இவரும் ஏதோ வகையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதும்  ஆனால் ஒரு வழக்கிலும் இவர் மாட்டுப்படாமல் இருப்பது "கழுவிய மீனில் நழுவிய மீனாக" எப்படி இருக்கிறார் என்பது மேலும் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சாமி நினைத்தமட்டில் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க முடிகிறது என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்தான். :unsure::blink:

சாமி ஒபாமாவுடன் நிற்பது உண்மையில் எடுத்தது செங்கல்லால் அடிப்பது போன்ற படம் ஒட்டியது ,இதுதான் சுய இன்பம் .

ஜெனிவாவில் எம்மவர் என்ன செய்கின்றார்கள் என்று முக புத்தகத்தில் இருந்ததை இங்கு பதிந்தால் யாழ் நிரந்தரமாக என்னை வெட்டிவிடும் .

சாமியை விட பெரிய இடங்களில் தொடர்பு உள்ள பல ஈழத்தமிழர்கள் இருந்தார்கள் .அவர்கள் பலரை வித்துவான்கள் மேல்லோகம் அனுப்பிவிட்டார்கள் ,மற்றவர் துண்டை காணோம் துணியை காணோம்  என்று ஓடி ஒழிந்து விட்டார்கள் . 

மொழி பெயர்த்து சொன்னதையே விளங்காத பலர் தான் பேச்சுவார்த்தைக்கு போனதாக ஒரு நிருபர் நக்கலடித்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

Subramanian Swamy meets Barack Obama

ஜூலை 2012 இல் தான் ஒபாமாவை சந்தித்துள்ளார் சுவாமி.
 
 

 

Janata Party President Subramanian Swamy met US President Barack Obama at a dinner at Mclean Virginia.

The dinner was hosted for an exclusive group by philanthropist couple Earl and Amanda Stafford last night.

Later, Swamy said he exchanged views with Obama during a

brief one-to-one meeting at the dinner and the President asked

him to convey his regards to Prime Minister Manmohan Singh.

Swamy, who is on a lecture tour of US, said the President

told him that he looked forward to working closely with India.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதுவும் ஒரு பித்தலாட்டமா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

சாமி ஒபாமாவுடன் நிற்பது உண்மையில் எடுத்தது செங்கல்லால் அடிப்பது போன்ற படம் ஒட்டியது ,இதுதான் சுய இன்பம் .

ஜெனிவாவில் எம்மவர் என்ன செய்கின்றார்கள் என்று முக புத்தகத்தில் இருந்ததை இங்கு பதிந்தால் யாழ் நிரந்தரமாக என்னை வெட்டிவிடும் .

சாமியை விட பெரிய இடங்களில் தொடர்பு உள்ள பல ஈழத்தமிழர்கள் இருந்தார்கள் .அவர்கள் பலரை வித்துவான்கள் மேல்லோகம் அனுப்பிவிட்டார்கள் ,மற்றவர் துண்டை காணோம் துணியை காணோம்  என்று ஓடி ஒழிந்து விட்டார்கள் . 

மொழி பெயர்த்து சொன்னதையே விளங்காத பலர் தான் பேச்சுவார்த்தைக்கு போனதாக ஒரு நிருபர் நக்கலடித்தார் .

 

http://janatapartyblog.blogspot.ca/2012/08/dr-swamy-meets-us-president-obama.html

அரிசுன் எழுதுவதை சற்றுக் கவனிக்கவும். "சாமி ஒபாமாவுடன் நிற்பது உண்மையில் எடுத்தது"

அவர் சொல்வது சாமி ஒபாமாவுடன் எடுத்த படம் உண்மை என்பது. போனது வந்தது பேசிய விடையங்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.  எந்தப் படமும் ஒபாமைவை சந்தித்து வெள்ளை மாளிகையில் இருந்து அரசியல் பேசும் படம் இல்லை என்பதை அரிசுனன் முதலிலேயே கவனித்துவிட்டார். அவர் கனடாவில் இருப்பதால் அதிபருடன் படம் எடுப்பது பணம் கொடுத்து என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதானால் தான் அவர் தனது கருத்தை மட்டுப்படுதியவர்.

 

அமெரிக்காவில் கிட்டத்தட்ட எல்லா சிறு சிறு கடை முதலாளிகளும் கூட தனது அதிபருடன் படம் எடுத்து கடையில் தூங்க விட்டிருப்பார்கள். இது காசு சேர்க்கும் நிகழச்சிக்கு போய் காசு கொடுப்பவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை மட்டுமே. அந்தபடத்தை வைத்து சாமி கூட்டம் அரசியல் செய்கிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சாமி ஒபாமாவுடன் நிற்பது உண்மையில் எடுத்தது செங்கல்லால் அடிப்பது போன்ற படம் ஒட்டியது ,இதுதான் சுய இன்பம் .

ஜெனிவாவில் எம்மவர் என்ன செய்கின்றார்கள் என்று முக புத்தகத்தில் இருந்ததை இங்கு பதிந்தால் யாழ் நிரந்தரமாக என்னை வெட்டிவிடும் .

சாமியை விட பெரிய இடங்களில் தொடர்பு உள்ள பல ஈழத்தமிழர்கள் இருந்தார்கள் .அவர்கள் பலரை வித்துவான்கள் மேல்லோகம் அனுப்பிவிட்டார்கள் ,மற்றவர் துண்டை காணோம் துணியை காணோம்  என்று ஓடி ஒழிந்து விட்டார்கள் . 

மொழி பெயர்த்து சொன்னதையே விளங்காத பலர் தான் பேச்சுவார்த்தைக்கு போனதாக ஒரு நிருபர் நக்கலடித்தார் .

 

சர்வதேசம் பேச்சு என்று அழைக்க கூடிய அனைத்து தகுதிகளையும் தாமாகவே உருவாக்கி அதில் ஏறி நின்றவர்கள்தான் வந்தார்கள். 
கூடு கட்டுவதுதான் குருவிக்கு பெருமை.
வீடு கட்டுவதுபோல் படம் பிடிப்பது குருவிக்கு இழுக்கு.
அதை நாலரை அறிவு குருவியே செய்வதில்லை.
ஆறடி வளர்ந்த மனிதன் செய்வது அழுக்கு.
 
உங்களுடைய அறிவை எதை கிழித்தீர்கள் என்பதை வைத்துதான் பிறரால் எடைபோட முடியும்.
எதை பீற்றீநீர்கள் என்பதை வைத்தல்ல.
பீற்றுவதட்கு நா விருக்கும்  வாய்மட்டும் போதும், 
 
கிழிக்க வேண்டுமெனில் புலிகளை போல் நெஞ்சில் தில் வேண்டும்.

அரிசுன் எழுதுவதை சற்றுக் கவனிக்கவும். "சாமி ஒபாமாவுடன் நிற்பது உண்மையில் எடுத்தது"

அவர் சொல்வது சாமி ஒபாமாவுடன் எடுத்த படம் உண்மை என்பது. போனது வந்தது பேசிய விடையங்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.  எந்தப் படமும் ஒபாமைவை சந்தித்து வெள்ளை மாளிகையில் இருந்து அரசியல் பேசும் படம் இல்லை என்பதை அரிசுனன் முதலிலேயே கவனித்துவிட்டார். அவர் கனடாவில் இருப்பதால் அதிபருடன் படம் எடுப்பது பணம் கொடுத்து என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதானால் தான் அவர் தனது கருத்தை மட்டுப்படுதியவர்.

 

அமெரிக்காவில் கிட்டத்தட்ட எல்லா சிறு சிறு கடை முதலாளிகளும் கூட தனது அதிபருடன் படம் எடுத்து கடையில் தூங்க விட்டிருப்பார்கள். இது காசு சேர்க்கும் நிகழச்சிக்கு போய் காசு கொடுப்பவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை மட்டுமே. அந்தபடத்தை வைத்து சாமி கூட்டம் அரசியல் செய்கிறது.

ஒபாமாவுடன் நின்று எடுத்த போடோ என்னிடமும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவை பிரிப்பதென்றால் ..............?
என்று சி ஐ ஏ போட்ட திட்டத்தில் சிக்கியவர்கள்தான் இந்த சாமி..... மன்மோகன் சிங் ஜெயலலிதா  எல்லோரும். 
இந்திய அமெரிக்காவிற்கு எதிரானால் எப்படி பிரட்டுவது என்றுதான் அந்த திட்டம் உருவானது. ஒருபக்கத்தால் பாகிஸ்தானை வளர்த்து வந்தது மறுபுறத்தில் உள்ளிருந்தே குழிபறிக்க சில திட்டங்களை தீட்டியது.
 
இப்போ பிரிக்க எந்த தேவையும் இல்லை அமெரிக்காவின் இன்னொரு மகனமாகத்தான் இந்தியா இராணுவ தளத்தில் இருக்கிறது. இரகசியம் என்று எதுவும் இல்லை. இந்த விஷ பரிட்சை புலிவாலை பிடிப்பது போல் எக்காலத்திலும் கைவிட முடியாது. ஒன்றில் அவரை போட்டு தள்ள வேண்டும் அல்லது எதோ ஒருவகையில் அவருடன் நட்பு பேணி யாகியே வேண்டும். 
கிளறி கிளிண்டன் ஜெயலலிதா முதல்வர் ஆனவுடன் போய் சந்தித்து வந்ததும் அதன் தொடர்ச்சிதான். 
இந்த சுவாமி இப்போ சி ஐ ஏ யை பொருத்தமட்டில் ஒரு விசுகொத்துதான் .... எபோதாவது ஏதும் இலையான் அடிக்க என்றாலும் உதவும் என்றுதான் வைத்திருக்கிறார்கள்.
சர்வதேச அரசியலில் எமது திட்டம் என்பது எதிரி என்ன திட்டம் தீட்டுகிறான் என்பதை பொறுத்தே சாத்தியம் ஆகும்.
ஒருவேளை ஒரு நல்ல இந்தியன் பிரதமர் ஆகி பாகிஸ்தானுடன் நட்பு பேணி பங்கலதேசத்துடன் அதை இணைத்து ஐரோப்பிய ஜூனியன் போன்று ஒன்றை உருவாக்கினால்???? அதற்கு சீனாதான் நண்பனாக முடியும். 
இது நடக்கவே வாய்ப்பில்லை என்று ஒரு நாட்டின் உளவுத்துறை இருக்க முடியாது. இந்தியாவை எப்படி கையுக்குள் போடுவது என்று தினமும் சீனாவும் திட்ட்டம் தீட்டிக்கொண்டே இருக்கும்.
 
எப்போ பிடல் காஸ்ட்ரோ சாவார் அப்போது செத்த பாம்பை அடித்து விசில் ஊதலாம் என்று அமெரிக்க காத்திருந்தது. பிடல் காச்ற்றோவிட்கு நட்பான தெற்கு அமெரிக்க நாடுகளையும் அப்போது  பார்க்கலாம் என்று தவம் இருக்க. சீன எல்லோரையும் பிரேசிலின் தலைமையின் கீழ்  இணைத்துவிட்டது . அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க போவதாக அர்ஜண்டீன  அறிவித்துள்ளது. இது அமெரிக்காவின் சோம்பேறி தனம் தவிர வேறு ஒன்றும் இல்லை. தரைவழி பாதை இருக்க கூடிய நாடுகளின் சந்தையே சீனாவிடம்  போய்விட்டது. 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.