Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறகொடிந்த சுதந்திரப் பறவைகளே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

page_5.jpg

 

சிங்காரச் சிறகு விரித்து

சிறகடித்த வானம் அழுகிறது..

நர்த்தன நடை பயின்று

நடந்து திரிந்த பூமி கனக்கிறது..

சுதந்திர வானில்

உயரப் பறந்த நீங்கள்

உயிரற்ற உடல்களாய்

உடை களைந்து கிடந்தீர்

அங்கே...

புதையுண்டு போன  உண்மைகள்

விக்கித்து நிற்கின்றன

காட்சிகளோடு..

வினாக்கள் மட்டுமே மிச்சமாய்..!

 

தமிழீழ மண்ணில்

சென்ரி போட்டு

தாய் நிலம் காத்து நின்று

மக்கள்

கையெடுத்து கும்பிட்ட வாழ்ந்தீர்..!

இறுதியில்..

தாயக பூமியில்

பேரினப் பிசாசுகளின்

அடிமை விலங்கு

உங்களை...

விலங்கிலும் கேடாய்

நசுக்கிக் கொல்ல

கையறு நிலை சென்றோம் நாம்..!

இன்று

முற்றே கைவிட்டு விட்டோம்

தப்பியோர் உம்மில் பலரை

நட்டாற்றில்..!

 

தேச விடுதலை என்றும்

மகளிர் விடுதலை என்றும்

அடுப்படிக்கு ராரா என்றும்

நெற்றிப் பொட்டுக் கலைத்து

நீண்ட முடி வெட்டித்தள்ளி

பெண்ணியப் பாசறை அனுப்பி..

உசுப்பேற்றி விட்டோம்.

இடையில்

நாமோ பிளேன் ஏறிவிட்டோம்

வெளிநாட்டில்

குங்குமமும் தாலியும் தர

நல்ல மாப்பிள்ளை அமைந்து விட்டதால்..!

நீங்களோ...

கொள்கைக்காய்

பிறந்த மண்ணோடு வாழ்ந்துவிட

இன்று

கண்ணீரே வாழ்வாகி நிற்கின்றீர்.

 

நீண்ட பனர் பிடித்து

வருடா வருடம்..

மார்ச் 8 இல்

முழக்கமிட்டோம்..

வீர மிகு வசனம் எழுதி..

ஊர்திகள் பவனி வந்து

ஆணுக்கு நீவிரும்

சமன் என்றோம்...!

வந்த சிங்களப் காடையர் மத்தியில்

நீவிர் சீரழிந்த போது

சமத்துவம் செத்துப் போனது

உங்கள் அலறலில்..!

நாமோ..

இரண்டு நாள் ஆர்ப்பாட்டம்

மூன்றாம் நாள் ஆர்ப்பரிப்பு

நான்காம் நாள்

குத்தாட்டம் என்று ஆகிவிட்டோம்..!

 

சினிமாவில்

நடிகையின்..

அரைகுறை ஆடையில் தெரிவது என்ன

அழகா அசிங்கமா..

இதுவே இன்று எம் ஆராய்ச்சி..!

வரிப்புலிகளாய் நீங்கள்

வலம் வந்த போது

கண்ணில் பட்டீர்கள்

கருத்துள் நுழைந்தீர்கள்..!

உலக வல்லரசுகளின்

அடாவடித்தனம்

உங்களை..

சிங்களப் பாசறை தள்ள

ஓர் நாள் தடுப்பிருப்பினும்

நீவிரும் ஆனீர்

நடிகையிலும் கேடாய்..!

இப்போ

உம்மை நாம்

அர்ச்சிக்கிறோம்

பூக்களால் அல்ல

இழிவு வார்த்தைகளால்..!

 

தேச விடுதலையொடு

பெண் விடுதலை

தேடிப் பறந்த சுதந்திரப் பறவைகளே..

இன்று..

சிறகொடிந்தும்

தலை இழந்தும்

கற்பிழந்தும்

காலிழந்தும்

கடைசியில்

வாழ் விழந்தும் போன

எங்கள் சிங்காரச் சிட்டுக்களே..

சிறையிலும் தெருவிலும்

கிணற்றிலும் குடிசையிலும்

தூக்கிலும் வாழும் எம்

காவல் தெய்வங்களே..

உங்களின் வலி உணர்ந்து பாடுகிறேன்

இந்தப் பாடல்

உங்கள் வலி தீர்க்கும்

மருந்தாய் அன்றி

மானுட நேயம்

உங்களை அரவணைக்கும் என்ற

அற்ப ஆசையில்..!

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்.. மகளிர் தினத்துக்காக எழுதப்பட்ட கவிதையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்.. மகளிர் தினத்துக்காக எழுதப்பட்ட கவிதையா?

 

ஒரு பகுதி மகளிர் துயர் தொடர்பில்... இன்னொரு பகுதி.. மகளிரின் பாராமுகத்தை கண்டு பொங்கிய வரிகள். என்ன மனிதர்களோ இந்த உலகில்....??!  வெறுப்புத்தான் அதிகமாகிறது. :icon_idea:

 

http://youtu.be/KyZRe0KwF_A

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல உண்மையின் தரிசனங்கள். ஆனாலும் எம்மை என்ன செய்யச் சொல்கிறீர்கள்
நெடுக்ஸ்? நாமும் எத்தனையச் செய்வது? எழுதுவது இலகு ஆனால் செய்வது கடினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

69655_10152639044205637_1450066430_n.jpg

 

நாளை லண்டனில் நடக்க இருக்கும் மகளிர் தின ஊர்வலத்தில் பங்கேற்று எம் மகளிரின் சம காலக் கொடுமைகளை உலகிற்குச் சொல்லுங்கள்.

 

இந்த உலகில் மகளிர் தமக்கான உரிமைக்காகப் போராடி வென்ற களங்களும் உண்டு. நாம் என்ன செய்ய முடியும்.. என்று கேட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே கிடந்தால்.. உரிமை வெல்லப்பட முடியாது. இது வரிகள் அல்ல.. உணர்வுகள்..!

 

While World Celebrates Women’s day - 90,000 Tamil War Widows Face Sexual Abuse by Sri Lankan Security Forces: TGTE
 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"தேச விடுதலையொடு


 

பெண் விடுதலை


 

தேடிப் பறந்த சுதந்திரப் பறவைகளே..


 

இன்று..


 

சிறகொடிந்தும்


 

தலை இழந்தும்


 

கற்பிழந்தும்


 

காலிழந்தும்


 

கடைசியில்


 

வாழ் விழந்தும் போன


 

எங்கள் சிங்காரச் சிட்டுக்களே..


 

சிறையிலும் தெருவிலும்


 

கிணற்றிலும் குடிசையிலும்


 

தூக்கிலும் வாழும் எம்


 

காவல் தெய்வங்களே..


 

உங்களின் வலி உணர்ந்து பாடுகிறேன்"

 

 

இழப்புக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.


 

எமக்கென்றொரு தேசம் விரியும்போது மட்டுமே 


 

எமது இழப்புக்களைத் தவிர்க்கலாம்.


 

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்  

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

59693_348382465265672_1159425395_n.jpg

 

நன்றி முகநூல்.

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் நெடுக்கர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணர்வேந்தல் திரியில் பங்கெடுத்துக் கொண்ட உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், கவிதைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிகவும் நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், நெடுக்கர்!

 

ஏதோ ஒரு இலக்கொன்று,

எங்கோ தொலைவில் இருந்தது!

அது எட்டாத தூரத்தில்,

எம்முடன் கண்ணாமூச்சி ,

விளையாடியது!

தொட்டுத் தடவும்,

தூரம் வரை சென்றோம்!

இதில் வெட்கப்படுவதற்கு,

என்ன இருக்கின்றது?

விதியின் தலையில்,

பாரத்தைப் போட்டுவிட்டு,

வெறும் வீணர்களாய்,

வீழ்ந்து மடிவதா?

தெரிகின்ற வெளிச்சங்களை,

தேடித் பறக்கின்ற,

விட்டில் பூச்சிகளாகி,

விடிவொன்றைத் தேடுவோம்! :D

 

 

சமூக முன்னேற்றத்தை வேண்டி நிற்கும் கவிதைக்கு பாராட்டுக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு எதிராக பேசும் இந்த ஆள் கவிதை ஒன்றை போட்டிருக்கார் அவர்(ளு}க்கு எனது மகளீர் தின‌ வாழ்த்துக்கள் :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி உறவுகளே..!

 

வாங்கோ முனிவர் ஜீ அத்தி பூத்தாற் போல்.. என்ற பழமொழிக்கு பொருந்தி வந்து போறீங்க. ரசிகைகள் மத்தியில் பிரபல்யம் ஆகிட்டிங்களோ என்னவோ..?!

 

பெண்கள் என்றல்ல.. உடல்வலுவில் கொஞ்சம் ஆண்களை விட குறைந்த.. சக மனிதர்கள் என்ற வகையில் அவர்கள் மீதான.. இந்தக் கோலங்கள்.. வேதனையாக இருக்கின்றன. அதன் தாக்கமே இது முனிவர் ஜீ..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.