Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் நான் போனில் எடுத்த சில படங்கள்.

Featured Replies

தமிழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பிரான்சில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

 

நான் செல்லும் போது பிரான்ஸ் பொலிஸ் பலர் இன்று அங்கு நின்றதால் என்னடா இன்று புதுமையாக இருக்கிறதே, எம்மக்கள் பிரச்சினை கொடுப்பதில்லையே என்று நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது, பிரான்ஸ் நாட்டு மாணவர்களும் அவ்விடத்தில் குவியவிருப்பதால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று. :D

எமது போராட்டம் நடந்த போது சிறிது நேரத்தின் பின் இடையில் எமக்கு அருகில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் வேலையில்லா பிரச்சினைக்காக (எனக்கு விளங்கியவரை அப்படித்தான் நினைக்கிறேன்) போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோசமும் விசிலடியும் உண்மையில் அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி விட்டிருந்தது.
 

இன்று நடந்த எமது போராட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது முக்கியமான ஒரு விடயம். :) அவர்களில் ஒருவர் அதை படம் எடுத்தார். சில பதாகைகளையும் படம் எடுத்தார்.அவர்கள் தமது போராட்ட படங்களை பிரான்ஸ் நாட்டு இணைய தளங்களில் அல்லது பத்திரிகைகளில் போடும் போது இவற்றையும் இணைத்தால் நல்லது. :rolleyes:

தமிழகத்தில் மாணவர்கள் பலர் போராடுவதால் இங்கும் நிறைய பேர் வருவார்கள் என்று நினைத்திருந்தேன். நான் நினைத்தது போல் மக்கள் வரவில்லை. :rolleyes:

30 ஆம் திகதி மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப்போவதாக கூறியிருந்தார்கள். எங்கு என்ன நேரம் என்று தெரியவில்லை. யாருக்கும் தகவல் கிடைத்தால் யாழில் இணையுங்கள். :)

வழமையாக அமைதியாக போராட்டம் நடந்தாலும் இன்று கோஷம் எழுப்பியபடி போராட்டம் நடந்தது. பிரெஞ்சில் கோஷமிட்டதால் எனக்கு அனைத்து வரிகளும் விளங்கவில்லை. ஆனால் we want tamileelam என்பதை nous voulons "tamileelam" என்று கோஷமிட்டது விளங்கியது. :lol:

 

முன்னுக்கு, பக்கப்புறமாக கொழுவி காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்களை நான் போட்டோ எடுக்கவில்லை. பின்னர் எடுப்போம் என்று நினைத்தேன். ஆனால் மற்றைய பகுதி இடையில் வந்து விட்டதால் அவற்றை கழற்றி விட்டார்கள். :(  அப்படங்கள் வேறெங்காவது கிடைத்தால் பின்னர் இணைக்கிறேன். :rolleyes:

 

 

 

இது இன்னொரு பக்கப்புறமாக கொழுவப்பட்டிருந்தது.
 

 

IMG_0718_zps36d01f25.jpg

 

IMG_0715_zps7c90c463.jpg

 

 

இது அங்குள்ள மக்கள் கையில் பிடித்து வைத்திருந்தவற்றில் ஒன்று.

 

IMG_0714_zpsbdd9ec2c.jpg

 

 

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள். (பொலிஸ் இடையில் நின்றதால் தூரமாக சென்று முழுமையாக உள்ளடக்கி படம் பிடிக்க முடியவில்லை.)

 

IMG_0719_zpsa3e9bf28.jpg

 

IMG_0710_zpsd13674aa.jpg

 

 

IMG_0707_zpsc56c52ff.jpg

 

IMG_0706_zps36d9c2ed.jpg

 

 

இதுதான் எமது பகுதி ஆர்ப்பாட்டமும் பிரான்ஸ் மாணவர்களின் ஆர்ப்பாட்டமும். அவர்களும் எமது பக்கம் என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள். அவர்களில் சிலருக்கு எமது பிரச்சினையை தாங்கும் சில தபால் அட்டைகளை ஒருவர் வழங்கினார்.

 

IMG_0703_zpseac892c6.jpg

 

மகிந்தவின் கொடும்பாவி இதுதான். :D
 

IMG_0678_zps5e5604e8.jpg

 

 

கொடும்பாவி எரிக்கப்பட்ட காட்சி. :D

 

IMG_0681_zpsa782eb8d.jpg

 

 

IMG_0684_zpsf1185384.jpg

 

 

IMG_0694_zps5ee099c9.jpg

 

 

cc29b387-6af8-499c-a636-8ddacbb5191d_zps

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி துளசி இணைப்பிற்கு...



எனது நண்பண் ஒருத்தனின் படமும் இதில்பிடிபட்டுவிட்டது..மேலே ஓர் படத்தில் நிற்கிறார்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி துளசி.....நெருப்பும் கொழுத்த விடுவார்கள....வாழ்துக்கள் உங்கள் நாட்டு போராட்டத்திற்கு...மேலும் மேலும் வெற்றி பெறும்வரை தொடர்க..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி துளசி இணைப்பிற்கு...

எனது நண்பண் ஒருத்தனின் படமும் இதில்பிடிபட்டுவிட்டது..மேலே ஓர் படத்தில் நிற்கிறார்.. :)

 

 

நண்பனா? சுபேசா? புலிக் கொடி பிடித்துக் கொண்டு நிற்பவர் :) ...
 
 
துளசி அண்மையில் புலத்திற்கு வந்தமையால் கொடி பிடிப்பது,கொடும்பாவி எரிப்பது எல்லாம் புதிசாய் தெரியுது
 
  • கருத்துக்கள உறவுகள்

நண்பனா? சுபேசா? புலிக் கொடி பிடித்துக் கொண்டு நிற்பவர் :) ...
 
 
 

நான் இல்லை அக்கா..எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவர்..ஆனால் யார் என்று சொல்வது அவருக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்..அதனால் தவிர்க்கிறேன்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், துளசி!

 

மகிந்த லைப் சைசில இருக்கிறார்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு  நன்றி துளசி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி சகோதரி துளசி

சுப்பர் துளசி எமது யாழ் செய்தியாளர் என்று போடாலாம் இனி   வாழ்த்துக்கள்

எமது அழுத்தங்கள் மூலம் மட்டுமே மாற்றங்களை கொண்டுவரலாம்.

 

நன்றிகள் உங்கள் நேரத்திற்கும் பதிவிற்கும்.

  • தொடங்கியவர்

கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றி.

 

இணைப்பிற்கு நன்றி துளசி.....நெருப்பும் கொழுத்த விடுவார்கள....வாழ்துக்கள் உங்கள் நாட்டு போராட்டத்திற்கு...மேலும் மேலும் வெற்றி பெறும்வரை தொடர்க..

 

நானும் பிரான்ஸுக்கு புதிதுதான். பிரான்ஸ் நடைமுறைகள் சரியாக தெரியாது.

 

ஆனால் நெருப்பு கொளுத்த அனுமதி உள்ளதோ இல்லையோ கொளுத்தினால் தண்டிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். :D

 

எமது ஆர்ப்பாட்டத்தில் கொளுத்தி விட்டு எரிந்து முடிய நீரூற்றி அணைத்து விட்டார்கள். :rolleyes: பக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் வெடிகொளுத்தினார்கள், சீறுவானம் போன்ற பட்டாசு கொளுத்தினார்கள், அதை விட பெருமளவு புகை வரத்தக்கதாக ஏதோ கொளுத்தினார்கள். :rolleyes:



துளசி அண்மையில் புலத்திற்கு வந்தமையால் கொடி பிடிப்பது,கொடும்பாவி எரிப்பது எல்லாம் புதிசாய் தெரியுது

 

கொடி பிடிப்பது, கொடும்பாவி எரிப்பது எனக்கு புதிதாக தெரியவில்லை. ஏற்கனவே புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்திருக்கிறேன். :)


 

சுப்பர் துளசி எமது யாழ் செய்தியாளர் என்று போடாலாம் இனி   வாழ்த்துக்கள்

இது கொஞ்சம் இல்லை... ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. :icon_mrgreen:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் கலந்துகொண்டு, பின்னர் செய்திகளையும் தந்த துளசிக்கு நன்றி! :D

தலையணையை கொழுத்துவதற்கும் ஒரு வீரம் வேண்டும் .தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்ததோ தெரியவில்லை .

Edited by arjun

  • தொடங்கியவர்

தலையணையை கொழுத்துவதற்கும் ஒரு வீரம் வேண்டும் .தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்ததோ தெரியவில்லை .

 

தலையணை கொளுத்துவதற்கும் ஒரு நாட்டு ஜனாதிபதியின் உருவ பொம்மையை கொளுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே. :icon_mrgreen: ஒரு வெள்ளைக்காரனே படம் எடுக்குமளவுக்கு இது அவனுக்கு பெரிய விடயமாக தெரிந்திருக்கு. :D பாவம் அந்த வெள்ளைக்காரனும் மொக்கு கூட்டம் போலிருக்கு. :icon_mrgreen:

 

கொடும்பாவி கொளுத்துவது எமக்கு வீரமல்ல. அது மகிந்தவுக்கு அவமானம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.