Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கன  நாளா மண் சட்டியில் கறி சமைக்க வேணும்
எண்டு ஆசை. இந்தியா இலங்கை என்று போன நாட்களில வாங்கிக் கொண்டு வருவமெண்டு நினைச்சாலும், சட்டி வாங்கும் பலன் இருக்கேல்ல.

உந்த யாழில மைதிரேயியின் சமையல் குறிப்பைப் பாத்திட்டு, கன நாளா அடங்கியிருந்த ஆசை திரும்பவும் மனதை நிரப்ப, போகும் கடைகளில எல்லாம் சட்டி இருக்கோ என்று கேட்டு சலிப்படைஞ்சு,  சரி எனக்கு இன்னும் சட்டி யோகம் வரவில்லையாக்கும் என்று மனதைத் தேற்றியும் விட்டன்.

ஒரு கிழமைக்கு  முதல் எனது அரையல் இயந்திரம் பழுதாப் போனதால், மீண்டும் அதைத் தேடி கடை கடையாய் ஏறி இறங்கினன். ஒரு கடையில பாத்தால் ஒரு தட்டு முழுக்க சட்டியள் அடுக்கி  வச்சிருக்கு. எனக்கு முகமெல்லாம் சந்தோசத்தில பூரிச்சுப் போச்சு. ஒரு சட்டி £5.99. எனக்கு எப்பவும் ஒண்டுக்கு இரண்டா மூண்டா வாங்கினாத்தான் பொச்சம்  தீரும். சரி எதுக்கும் இருக்கட்டும் எண்டு இரண்டு சட்டியை வாங்கினன்.

சட்டி வாங்கின சந்தோசத்தில மற்ற எல்லாம் மறந்து, காரில வரேக்கையே எந்தக் கறியை முதல் சட்டியில சமைக்கிறது எண்டு மாறிமாறி கற்பனை செய்து கொண்டு வீட்டை வந்தால், பிள்ளையள் அன்று பார்த்து அம்மா இண்டைக்கு ஒண்டும் சமைக்காதைங்கோ புதிசா சாப்பாட்டுக் கடை திறந்திருக்கு அங்க போய் சாப்பிடுவம் என்றாச்சு.

சரி என்ன செய்யிறது பிள்ளையளின்ட ஆசையை நிறைவேற்றுவம் எண்டு சட்டியில கறி காச்சிற ஆசையை அங்கால வச்சிட்டு சட்டி இரண்டையும் தூக்கி சாப்பாட்டு
மேசையில நடுவில வச்சன். வேலையால வந்த மனிசன் சட்டியைப் பாத்துப் போட்டு,
இன்னுமொரு குப்பையை வாங்கிக் கொண்டு வந்திட்டியோ எண்டு நக்கல். சட்டியில்
மீன் குழம்பு வச்சால் எவ்வளவு ருசி தெரியுமே என்று மனிசனை ஒருமாதிரிச்
சமாளிச்சாச்சு.

பிறகு வந்த ஒரு வாரமும் சட்டியை மறக்குமளவு வேலைப் பளு. மனிசன் அடுத்தநாள் உந்தச் சட்டியை மேசையில இருந்து எடு. உதில கிடந்துதோ சட்டிக்கு நான் பொறுப்பில்லை எண்டு சொல்லிப் போட்டார். வேறை வழியில்லை. நாளைக்கு எப்பிடியும் மீன்குளம்பு  வச்சே தீருவது என்று முடிவெடுத்து மீனும் போய் வாங்கியாச்சு.

சட்டியைத் தூக்கி மணந்து பாத்தன். மண் மணம் ஒரு மாதிரி இருந்துது. சரி இரண்டு தரம்  தண்ணி விட்டுக் கொதிக்கச் செய்தால் மணம் போவிடும் என்றுவிட்டு இரண்டு சட்டிகளிலும் தண்ணீரை விட்டு அடுப்பை எரியவிட்டன். நல்ல காலம் இங்க காஸ் அடுப்பு எண்டபடியா என்ர  நீண்டநாள் சட்டி ஆசை நிறைவேறப் போகுது எண்டு மனசுக்குள்ள நினைச்சுக் கொண்டு மிச்ச வேலையளைப் பாத்துக் கொண்டு இருந்தன்.

இருந்தாப்போல டும் டும் எண்டு சத்தம். எனக்கு சத்தம் எங்க நிண்டு வருகுது எண்டு விளங்கேல்ல. உடனே ச்ச்ஸ்ஸ்ஸ் எண்ட சத்தத்தோட அடுப்பு முழுக்கத் தண்ணி. அதுக்குப் பிறகுதான் எட்டிப் பாத்தா சட்டி  இரண்டும் வெடிச்சு அதில இருந்த தண்ணி
முழுதும் அடுப்பில. நல்ல காலம் மீன் குழம்பைக் கூட்டி அடுப்பில வச்சிருந்தா
அதைக் கழுவித் துடைக்கவே நேரம் போயிருக்கும்.

£ 12 பவுன்ஸ் நட்டம். கடைக் காரனையும் கேக்க ஏலாது. அதுகூடப் பறவாயில்ல உந்தப் பன்னிரண்டு பவுண்ஸ்  வீணாப்போச்செண்டு மனிசன் பதினைச்சு நாளைக்குச் சொல்லிக் காட்டும். அதுதான் கொடுமை. ம்....... பிறகென்ன சட்டி ஆசையும் போய் ............

ஆராவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ ஏன் சட்டி வெடிச்சது எண்டு.

நண்பி, அது பாருங்கோ உந்தச் சட்டைகள் இலங்கை விறகு அடுப்புக்குத் தான் சரி வரும்!

தொடருங்கள் சுமே  உங்கள் எழுத்துக்களுக்கு நான் விசிறி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விறகெண்டா என்ன காஸ் எண்டா என்ன நெருப்பு ஒண்டுதானே அலை.

விறகெண்டா என்ன காஸ் எண்டா என்ன நெருப்பு ஒண்டுதானே அலை.

ஏதோ வித்தியாசம் இருக்கிறபடியால் தானே வெடிச்சது சுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டி செய்த முறை தான் சரியில்லை என நினைக்கிறன் அலை.

பைப்பில என்ன தண்ணி பிடிச்சு வைச்சனீங்க ? குளிர் தண்ணியா கொதிதண்ணியா ?

(காச மிச்சம்  பிடிக்க குளிர் தண்ணியா?   <_<  )  

சட்டி செய்த முறை தான் சரியில்லை என நினைக்கிறன் அலை.

ஏன் வெடிச்சது எண்டு கண்டு பிடிக்கணும்

மண்சட்டி வடிவாக சூழையில் வேகப்படவல்லை என நினைக்கின்றேன் .  அதிகூடிய வெப்பநிலையிலேயே மட்பாண்டங்களை சூழையில் வைத்து சுடுவார்கள் . ஒன்றிரண்டு அரை வேக்காட்டில் வேகுவதும் உண்டு . அப்படி வேகாதவையை மீண்டும் நீரை வைத்து சூடாக்கும்பொழுது வேகாத பகுதிகள் சூட்டில் வெடித்து விடும் . இதுதான் உங்கள் மண்சட்டிக்கு நடந்தது . இதை தடுப்பதற்கு வீட்டில் இருக்கும் கணப்பி சிமினியில் எரிகின்ற நிலக்கரி அல்லது விறகுடன் மீண்டும் மட்பாண்டங்களை நீர் ஊற்றாது சுடவேண்டும் . பின்பு சமயலுக்குப் பாவிக்கலாம் :) :) .

இல்லாட்டி நீங்கள் அடுப்பில் வைக்கும் பொழுது அடுப்பின் வெப்பம் கூடுதலாக இருந்தாலும் வெடிக்கலாம் என்று நினைக்கிறன். 

சிலவேளை அது சுமேரியர் காலத்துச் சட்டியோ தெரியாது? :D

'காஸ்' அடுப்பில் வைத்தால் சட்டி வெடிக்கும் என்று ஒருவர் கூறியதால் சட்டி  வாங்கும் ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டேன்.  உண்மை போலதான் கிடக்கு.

அரையல் இயந்திரம் வாங்க வேண்டும். எது நல்லது? / எங்கே கிடைக்கும்? / எவ்வளவு?

  • கருத்துக்கள உறவுகள்

மண்சட்டி என்றதும் ஞாபகத்துக்கு வருது.. :unsure:

சின்ன வயதில் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தா அம்மா.. பலகைக்கட்டையில் குந்தியிருந்து.. அவ அடுப்பை ஊத முன்னுக்கு நகர்ந்தபோது பலகைக்கட்டையை எடுத்துவிட்டேன்.. :blink: பின்னால் சரிந்த அவவின் கால் அடுப்பைத் தட்டி சட்டி எல்லாம் உடைந்துவிட்டது.. :(

இப்ப நினைத்தால் சங்கடமா இருக்கு.. :(:D

விளையும் பயிரை முளையிலே தெரியும் எண்டு சொல்லுறது சரி தான் போலை  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பைப்பில என்ன தண்ணி பிடிச்சு வைச்சனீங்க ? குளிர் தண்ணியா கொதிதண்ணியா ?

(காச மிச்சம்  பிடிக்க குளிர் தண்ணியா?   <_<  )  

குளிர் தண்ணியும் இல்ல சுடு தண்ணியும் இல்ல சாதாரண தண்ணி தான் வச்சனான் ஈசன். :rolleyes:

ஏன் வெடிச்சது எண்டு கண்டு பிடிக்கணும்

கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ அலை நான் வேண்டாம் எண்டா சொன்னனான்.

:D

மண்சட்டி வடிவாக சூழையில் வேகப்படவல்லை என நினைக்கின்றேன் .  அதிகூடிய வெப்பநிலையிலேயே மட்பாண்டங்களை சூழையில் வைத்து சுடுவார்கள் . ஒன்றிரண்டு அரை வேக்காட்டில் வேகுவதும் உண்டு . அப்படி வேகாதவையை மீண்டும் நீரை வைத்து சூடாக்கும்பொழுது வேகாத பகுதிகள் சூட்டில் வெடித்து விடும் . இதுதான் உங்கள் மண்சட்டிக்கு நடந்தது . இதை தடுப்பதற்கு வீட்டில் இருக்கும் கணப்பி சிமினியில் எரிகின்ற நிலக்கரி அல்லது விறகுடன் மீண்டும் மட்பாண்டங்களை நீர் ஊற்றாது சுடவேண்டும் . பின்பு சமயலுக்குப் பாவிக்கலாம் :) :) .

சரி அப்ப பாபிகியூ போடும் அடுப்பில் சுட்டுப் பாக்கிறன் கோ. அதுகும் உடஞ்சால் மூண்டு சட்டிக் காசும் நீங்கள் தான் தரவேணும். :lol:

சிலவேளை அது சுமேரியர் காலத்துச் சட்டியோ தெரியாது? :D

'காஸ்' அடுப்பில் வைத்தால் சட்டி வெடிக்கும் என்று ஒருவர் கூறியதால் சட்டி  வாங்கும் ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டேன்.  உண்மை போலதான் கிடக்கு.

அரையல் இயந்திரம் வாங்க வேண்டும். எது நல்லது? / எங்கே கிடைக்கும்? / எவ்வளவு?

இல்லை  தப்பிலி. நான் வடிவா பிரட்டிப் பிரட்டிப் பாத்தனான்.சுமேரியரது இல்லையே.

பிறேமியர் நல்லது. 3 அரைக்கும் சில்வர் கிண்ணங்கள் வரும். ஒன்று பழுதடைந்தாலும் தனித்தனியாக வாங்கலாம்.

மண்சட்டி என்றதும் ஞாபகத்துக்கு வருது.. :unsure:

சின்ன வயதில் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தா அம்மா.. பலகைக்கட்டையில் குந்தியிருந்து.. அவ அடுப்பை ஊத முன்னுக்கு நகர்ந்தபோது பலகைக்கட்டையை எடுத்துவிட்டேன்.. :blink: பின்னால் சரிந்த அவவின் கால் அடுப்பைத் தட்டி சட்டி எல்லாம் உடைந்துவிட்டது.. :(

இப்ப நினைத்தால் சங்கடமா இருக்கு.. :(:D

அடிகிடி ஏதும் விழுந்துதோ இசை.

  • கருத்துக்கள உறவுகள்

அடிகிடி ஏதும் விழுந்துதோ இசை.

அம்மா லேசில அடிக்கமாட்டா.. இருந்தாலும் நாங்கள் அந்த ஏரியாவில் இல்லை.. :D

எனக்கும் மண் சட்டியில் சமைக்க விருப்பம். நான் இருக்கும் இடத்தில் தமிழ் கடைகள் இல்லை.

இங்குள்ள சமையல் பாத்திரங்கள் விற்கும் சிறப்பு கடை ஒன்றில் ஸ்பெயின் மண் சட்டி இருந்தது. அதை கண்ட உடன் வாங்கிவிட்டேன்.  அதில் சமைத்த கறியின்  குறிப்பை பின்னர் ஒரு நேரம் எழுதுகிறேன்.

நான் வாங்கிய சட்டியின் பெயர் Spanish Cazuela. மின்னடுப்பு, வாயு அடுப்பு, பபிக்கியூ அனைத்திலும் வைத்து சமைக்க கூடியது.

249977216_63521f0890.jpg?v=0

பட உதவி : http://www.ifood.tv/blog/how-to-cure-a-spanish-cazuela

உங்கள் நாட்டில் ஸ்பெயினில் செய்யப்பட்ட மண் சட்டி கிடைக்காதா?  

உந்த சட்டியை எப்பிடி சமையலுக்கு தயார் படுத்துறது எண்டும் மேலே உள்ள இணைப்பில் இருக்கிறது.

Edited by KULAKADDAN

ம் அக்கா எனக்கும் உங்களைப் போல் நீண்டநாள் ஆசை மண்சட்டியில் வைத்த மீன்குழம்பு சாப்பிட வேண்டுமென்று. கடந்தமுறை தாயகம் போன போது சட்டி செய்யுமிடத்துக்கு நேரடியாகவே சென்று 3 சட்டிகளை செய்து எடுத்து வந்தேன். சிமான நிலையத்தில் கையில் கொண்டு செல்ல அநுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். லக்கேஸ்சில்தான் போடலாம் என்றதால் போட்டுவிட்டு வந்தேன். இங்கே வந்து சேர்ந்தபோது கெந்தி விளையாட பாவிக்கிற சில்லு சைசில் சட்டி வந்து சேர்ந்தது,

அதன் பின் இங்குள்ள சைனீஸ் கடையொன்றில் எதேற்சயையாக சென்றபோது இந்தச் மண்சட்டியொன்றை கண்டேன். வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்து மீன்குழம்பு வைக்கச் சொல்லி சாப்பிட்டாச்சு. அதன் சுவை சொல்லி வேலையில்லை. நீங்களும் பார்பதற்காய் படம் கீழே.

meemkulambu.jpg

இந்தச் சட்டிக்கு உள்ளுக்கை நிறம் தீட்டி இருக்கே. அது எங்கள் சட்டிபோல் வருமா? நன்றி இணைப்புக்குக் குழைக்கட்டான்.

ஊரிலுள்ள சட்டிகளுக்கு உது போல் நிறம் தீட்டுவதில்லையே.அதன் தன்மை மாறிவிடுமே மயூரன்.

எனக்கு அம்மா ஊரிலிருந்து 2 சட்டி கொண்டுவந்தவா , ஒரு சட்டி 6 மாதத்திற்க்கு மேல் பாவித்தன் பிறகு உடைச்சிட்டன் , 2 வது 1 வருசமா மீன் சொதி , மீன் குழம்பு வைக்கிறன் காஸ் அடுப்பில் .

இந்தச் சட்டிக்கு உள்ளுக்கை நிறம் தீட்டி இருக்கே. அது எங்கள் சட்டிபோல் வருமா? நன்றி இணைப்புக்குக் குழைக்கட்டான்.

ஊரிலுள்ள சட்டிகளுக்கு உது போல் நிறம் தீட்டுவதில்லையே.அதன் தன்மை மாறிவிடுமே மயூரன்.

உள்ளே பூசியுள்ளது நிறப்பூச்சு என நினைக்கவில்லை . Porcelain பாத்திரங்களில் மினுக்கத்தை கொண்டுவர பாவிக்கும் தொழில் நுட்பத்தை உட்பக்கத்துக்கு பவித்திருப்பர்கள் என நினைக்கிறேன். இது நீர் கசிவை தடுப்பதுடன், சமையலின் பொது பொருட்கள் அடிப்பிடித்து ஒட்டுவதை குறைக்கும் என நினைக்கிறேன்.

TERRACOTTA AND CERAMIC KITCHENWARE

Spanish ceramics and terracotta can be found in every Spanish kitchen, the terracotta cazuela is by far the most famous piece of ceramic kitchenware and is used in many types of Spanish cooking. Cazuelas can be found in various designs and sizes and make a traditionally rustic addition to the

table. You can also discover a full range of other terracotta cookware from roasting trays to casseroles and a selection of terracotta plates, wine coolers

and sangria jugs plus many more.

http://www.orceserranohams.com/pages-shop/ceramics.htm

இது நிறந்தீட்டப்பட்ட சட்டியில்லை. நாம் தாயகத்தில் பயன்படுத்தும் அதே சட்டியின் இயற்கையான நிறம்தான். கைத்தொலைபேசி கமாராவால் எடுத்தபடம் ஆதலால் நிறம் கொஞ்சம் தூக்கலாகத் தெரியுது.

meemkulambu.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மா ஊரிலிருந்து 2 சட்டி கொண்டுவந்தவா , ஒரு சட்டி 6 மாதத்திற்க்கு மேல் பாவித்தன் பிறகு உடைச்சிட்டன் , 2 வது 1 வருசமா மீன் சொதி , மீன் குழம்பு வைக்கிறன் காஸ் அடுப்பில் .

நன்றி செவ்வந்தி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும். :D

உள்ளே பூசியுள்ளது நிறப்பூச்சு என நினைக்கவில்லை . Porcelain பாத்திரங்களில் மினுக்கத்தை கொண்டுவர பாவிக்கும் தொழில் நுட்பத்தை உட்பக்கத்துக்கு பவித்திருப்பர்கள் என நினைக்கிறேன். இது நீர் கசிவை தடுப்பதுடன், சமையலின் பொது பொருட்கள் அடிப்பிடித்து ஒட்டுவதை குறைக்கும் என நினைக்கிறேன்.

உண்மையில் எங்கள் சட்டிகளின் நுணுக்கமே நீர் கசிவை ஏற்படுத்தி உள்ளே

உள்ள பதார்த்தத்தை குளிர்மையாக வைத்திருப்பதே. அதனால் உணவும் விரைவில்

பழுதடையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுப் போய் இன்னொரு சட்டி வாங்கிக் கொண்டு வந்து, அடுப்பை மெதுவா எரியவிட்டு மூன்று தடவை நீர் கொதிக்கச் செய்தாச்சு. இதுவரை வெடிக்கவில்லை. ஆனால் நீ கசிகிறது. ஒருமுறை நெருப்பில் சுட்டுப் பார்ப்போம் என்று இருக்கிறன்.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ர மண் சட்டி ஆசைக்கு இண்டைக்குத்தான் விடிவு வந்திது. ஒருமாதிரி ஒரு குழம்பு வச்சிட்டன் சட்டிக்குள்ள. வெடிக்கவில்லை. வெடித்த அடுத்த சட்டியையும் எறிய மனமில்லை. பூங்கன்று ஒண்டை நட்டு வச்சாச்சு.P1000750_zps661c4a2a.jpg

P1000748_zps0710c757.jpg

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

ஏன் குழம்பு தடிக்கவில்லை . நேற்று ஊறின தண்ணீர் இன்று குழம்போட சேர்ந்து விட்டதோ? :)
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குழம்பு தடிக்கவில்லை . நேற்று ஊறின தண்ணீர் இன்று குழம்போட சேர்ந்து விட்டதோ? :)

இது சாப்பிடும் குழம்பல்ல. சாம்பிள் குழம்பு. சட்டி ஓட்டையோ என்று பார்க்க. அதுதான் அப்படி. :D  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.