Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரியா அணு ஆயுத மிரட்டல்: எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தியது அமெரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சியோல்: அமெரிக்க நிலைகளை இலக்காகக்கொண்டு அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளத தொடர்ந்து, அமெரிக்கா, தனது பசிபிக் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தி வருகிறது.

தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வரும் வடகொரியா, இரு நாடுகள் மீதும் அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான கடைசி உத்தரவை ராணுவத்துக்கு பிறப்பித்து விட்டோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

எனவே வடகொரியா ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சநிலை அங்கு உருவாகியுள்ளது. எனவே இதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்காவும், தென்கொரியாவும் எடுத்துள்ளன.

வடகொரியா அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் என்ற தீவு உள்ளது. இதன் மீதுதான் வடகொரியா முதல் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது

வடகொரியா ஏவுகணை மூலம் அணுகுண்டு வீசினால் அதை நடுவானிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா தயாராக வைத்துள்ளது. வடகொரியாவின் கடைசி எச்சரிக்கையை அடுத்து அமெரிக்கா தனது ஏவுகணைகளை முன் நகர்த்தி வருகிறது.

ஏவுகணைகளை ஏவும் டிரக் லாஞ்சர்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு முன் நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோல எதிரிநாட்டு ஏவுகணையை முன்கூட்டியே கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் ரேடார்களும் முன் நகர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் சுக் ஹாகெல் கூறுகையில், "உண்மையான, தெளிவான ஆபத்தாக வடகொரியாவின் செயல் அமைந்துள்ளது; அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கு அணு ஆயுத வலிமையும் உள்ளது, அதனை எடுத்துச் செல்லும் ஏவுகணைத் தொழில் நுட்பமும் உள்ளது. இந்த அச்சுறுத்தலை மிகவும் கவனமுடன் எடுத்துக் கொண்டுள்ளோம், மிக கவனமுடன் எடுத்துக் கொள்வோம்ல்ல்" என்றார்.

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13515

  • Replies 58
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை தாக்க கூடிய அளவுக்கு வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை என ஆயுத விற்பன்னர்கள் கூறுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை வருமா வராதா..? சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இதில் பலமான இராஜதந்திரத் தோல்வியை ஏலவே சந்தித்துவிட்டது.

 

வடகொரியா அணு ஆயுதங்களையும் நீண்ட தூர ஏவுகணைகளையும் பெறக் கூடாது என்று பலவேறு வழிகளில் வடகொரியாவை தண்டித்தும்.. வடகொரிய மக்கள் மீது பொருண்மியத் தடையைப் போட்டு நலித்தும் வந்துள்ளது அமெரிக்கா..!

 

ஆனால் அன்று அமெரிக்காவிடம் அடிவாங்கிய வடகொரியா.. இன்று இத்தனை தடைகள் மத்தியிலும்.. அமெரிக்காவிற்கு சவால்விடும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.!

 

இது அமெரிக்கா அங்கு கண்ட மிகப் பெரிய இராஜதந்திரத் தோல்வியாகும்..!

 

இதைச் சரிக்கட்ட.. இப்போ.. ஸ்ரில்த்.. சீல்ட் என்று கொண்டு திரியுது அமெரிக்கா. இந்தத் தொழில்நுட்பங்கள் சேர்பியாவிற்கு எதிரான போரிலும் பயன்படுத்தப்பட்டிருந்தன. அமெரிக்காவின் ஸ்ரில்த் விமானங்களை சேர்பியா ரஷ்சியாவின் மூன்றாம் தர ஏவுகணைகளைக் கொண்டே சுட்டும் வீழ்த்தி இருந்தது. இப்போ அதே வகைகளை கொண்டு.. விடுப்புக் காட்டுகிறது அமெரிக்கா. இது ஒன்றும் விடுதலைப்புலிகளோ தமிழ் மக்களோ அல்ல.. வெறும் இலகு ரக ஆயுதங்களோடு நின்ற ஓர் அமைப்பு மீது பொஸ்பரஸ் குண்டும்.. கொத்துக் குண்டும்.. மல்ரி பரல் குண்டும்.. கொட்டுவது போன்றதல்ல....!

 

ஏலவே இந்தத் தொழில்நுட்பங்கள்.. இஸ்ரேலாலும் பலஸ்தீன கமாஸ்களுக்கு எதிராக பாவிக்கப்பட்டிருந்தன. அங்கு கூட அவை இஸ்ரேலை நிமிர வைக்க முடியவில்லை. மாறாக கமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு எகிப்து வர வேண்டிய நிலை தோன்றியது. 

 

ஆகவே.. இவற்றை நம்பி.. அமெரிக்கா.. மீண்டும் ஜப்பான் கொரிய பசுபிக்கடற் பிராந்தியத்தில் அணுகுண்டுகளை வெடிக்க வைச்சு விடுப்புக் காட்ட நினைத்தால் அது அமெரிக்காவிற்கே பேரழிவாகும். ஏனெனில் இன்று ஜப்பான் அமெரிக்க நட்பு நாடு மட்டுமன்றி பெரும் தொகையான அமெரிக்கப் படைகளிற்கான வீடும் ஆகும்.

 

இந்தப் பிரச்சனை முற்ற அமெரிக்காவின் நீண்ட கால.. சண்டித்தனம் தான் முக்கிய காரணம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/A3ejFbInmuM

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சண்டை தொடங்கலியா? :(

வட கொரியாவின் Preemptive measure தான் இந்த யுத்த முனைப்புகள். அமெரிக்க அழுத்தங்களை முறியடிக்க.
 
அது சரி,
 
 
கொரிய யுத்தம் எங்களுக்கு நல்லதா ?
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எங்களுக்கு நன்மையோ தீமையோ....அது வேற....

எத்தின நாளைக்கு தான் நாங்க ட்வென்டி ட்வென்டி கேம் பாகிறது? ரியலா .... ஒரு கேம் வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எங்களுக்கு நன்மையோ தீமையோ....அது வேற....

எத்தின நாளைக்கு தான் நாங்க ட்வென்டி ட்வென்டி கேம் பாகிறது? ரியலா .... ஒரு கேம் வேண்டாமா?

சுண்டு, இந்த 'அணு ஆயுத' நகர்த்தலுக்குப் பாரிய பணச்செலவு ஏற்படும் என்று, அமேரிக்கா, அதில் பெரும்பகுதிச் செலவினத்தை, அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது! அதற்கு 'பொப் காரும்' உங்களைக் கேட்காமல் 'ஓம்' எண்டு சொல்லிப்போட்டாராம்!

 

ஒரு 5 %  உங்கட வரி கூடும் என்று கதை அடிபடுகுது!

 

உங்களுக்கு ஒகே எண்டால், எனக்கும் ஓகே! :D

April 2, 2013

 

வடகொரியா தாக்கினால் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தென்கொரியா அதிபர் உத்தரவு.

 

news_02-04-2013_19jetfighters.jpg

 

வடகொரியா தாக்கினால் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என்று ராணுவ மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு தென்கொரியா ஜனாதிபதி பார்க் ஜியூன் ஹை உத்தரவிட்டார்.

போர் மூளும் பதற்றம்

கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை, ராக்கெட் ஏவுதல் ஆகியவற்றில் வடகொரியா ஈடுபடுவதால் பொருளாதார தடைக்கு ஆளாகி இருக்கிறது. இந்த நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதால் வடகொரியா கடும் கோபத்தில் இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர் ஒத்திகை நடத்துகிறது. அதில் அமெரிக்காவின் அதிநவீன பி–2, எப்–22 போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வடகொரியா அதை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா, தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தது. பீரங்கி படையையும், ஏவுகணைகளையும் தயார் நிலையில் வைத்தது.

அத்துடன் தென்கொரியாவுடன் போர் பிரகடனத்தை நேற்று  வெளியிட்டது. இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் போர் மூளும் பதற்றம் அதிகரித்தது.

தென்கொரியாவும் தயார்

வடகொரியாவின் இந்த மிரட்டல் வெற்று சவால் என அமெரிக்காவும், தென்கொரியாவும் கருதுகின்றன. இருப்பினும் வடகொரியா தாக்குதல் தொடுத்தால் அதை முறியடிக்க தென்கொரியாவும் தயாராகி விட்டது.

இதற்கிடையில் வழக்கம் போல நேற்று முன்தினம் நடைபெற்ற போர் ஒத்திகையில் அமெரிக்காவின் எப்–22 ரக போர் விமானங்களும் ஈடுபட்டன.

ராணுவத்துக்கு அதிபர் உத்தரவு

இந்த சூழ்நிலையில் தென்கொரியா நாட்டு பெண் ஜனாதிபதி பார்க் ஜியூன் ஹை இன்று  ராணுவ மந்திரி மற்றும் ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தென்கொரியா மற்றும் மக்களுக்கு எதிராக எந்த விதமான எரிச்சலூட்டும் செயல் (தாக்குதல்) நடத்தப்பட்டால் உடனே கடுமையான பதிலடி கொடுக்க தயாராக இருங்கள். இதில் அரசியல் பரிசீலனைக்கு இடமில்லை’ என்று ஆணித்தரமாக கூறி விட்டார்.

இதன் மூலம் மேலிட உத்தரவு எதையும் எதிர்பார்த்து காத்திராமல் உடனே தாக்குதலை தொடுக்க தென்கொரியா ராணுவத்திற்கு, அதிபர் பச்சைக்கொடி காட்டி விட்டார் என்றே தோன்றுகிறது.வடகொரியா தாக்கினால் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என்று ராணுவ மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு தென்கொரியா ஜனாதிபதி பார்க் ஜியூன் ஹை உத்தரவிட்டார்.
 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYwNTE5MDA0.htm#.UV6JSUqG2Qs


 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

April 3, 2013

 

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஐ.நா. யோசனை.

 

news_03-04-2013_45un.jpg

வடகொரியா, தென்கொரியா இடையேயான பிரச்சினை பூதாகரமாகி, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் ஐரோப்பியாவில் உள்ள அந்தோராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கொரிய தீபகற்ப நிலவரம் குறித்து கூறும்போது, ‘‘ வடகொரியா பிரச்சினை மிகவும் தீவிரமான நிலைக்கு போய் விட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல் என்பது புதிதான ஒன்றல்ல. தீவிர வெற்று ஆரவாரமும், ராணுவ நடவடிக்கைகளும் மோதல் போக்குக்கு வழிநடத்தும். அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தும்’’ என்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ நிலைமை அமைதியாக வேண்டும். தகவல் தொடர்பு பற்றாக்குறையால்தான் நிலைமை மோசமானது. இந்தப் பிரச்சினைக்கு இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதற்கு உதவத்தயார்’’ என கூறினார்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYwNzM2Mjc2.htm#.UV6KnUqG2Qs

 

பி.கு: இந்த ஐநாவை நம்பி யாரும் ஏமாந்திடாதீர்கள்... :o:rolleyes:

Edited by துளசி

பாங்கி மூன் ஈவு இரக்கம் இல்லாமல் தமிழரை அழித்தவர். தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்கிறது.  குழந்தைகள், இயலாதவர்கள், வயோதிபர்கள் என்றெல்லாம் கொன்றதால வரும் பிரமகத்தி தோசம் அவருடன் நிற்காமல் அவரின் நாடுவரைக்கும் வந்து தட்டுகிறது. மீள்வார்களா தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை வருமா வராதா..? சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. :D 

 

இன்னும் சண்டை தொடங்கலியா? :(

 

அடப்பாவிகளா

இது அணுஆயுத யுத்தம் ராசாக்கள்

தொடங்கினால் ஒன்றும் மிஞ்சாது

பிறகு எதை எவர் பார்க்கிறதாம்.......... :lol:

பாங்கி மூன் ஈவு இரக்கம் இல்லாமல் தமிழரை அழித்தவர். தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்கிறது.  குழந்தைகள், இயலாதவர்கள், வயோதிபர்கள் என்றெல்லாம் கொன்றதால வரும் பிரமகத்தி தோசம் அவருடன் நிற்காமல் அவரின் நாடுவரைக்கும் வந்து தட்டுகிறது. மீள்வார்களா தெரியாது.

 

இவர் தலையிட்டால்தான் வேகம் அதிகரிக்கும்

இவர் தென் கொரியர் என்ற ஒன்றே  போதாதா  வட கொரியருக்கு...........

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இதில் தலையிடக் கூடாது.. அது வடகொரியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதுபோல் ஆகிவிடும்.. அமெரிக்கா இந்தியாவின் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா..

 

வட கொரியாவின் ஏவுகணை அமெரிக்காவரை போகாது என்கிறார்கள்.. பிறகு ஏன் பயம்?  குவாமிலுள்ள அமெரிக்கத் தளத்தை தாக்கலாம் என்கிறார்கள்..! ஆனால் அது ஒரு இராணுவ இலக்குதானே.. அதனால் இதில் கவலைப்படக்கூடாது..

 

மற்றது, வடகொரியாவை எதிர்த்தால் அங்கே சீனா இன்னும் வலுவாக குந்திவிடும் அபாயமும் உள்ளது.. அதனால் வடகொரியாவிடம் பேச வேண்டும்.. தென்கொரியாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமெரிக்கா கோதாவில் இறங்கப்படாது..

 

ஒருவேளை வடகொரியா தென்கொரியாவின்மேல் அணுகுண்டு போட்டு இரண்டு லட்சத்துக்குமேல் தென்கொரியர்கள் இறந்துபோனால் பான்கிமூன் உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.. அவருக்கு ஆலோசகராக ஒரு சீனரை நியமிக்க வேண்டும்.

 

வட கொரியா குண்டுபோடும் பட்சத்தில், கொரிய இனங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவை வடகொரியாவே ஏற்படுத்த வேண்டும்.. அதை அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டும்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனனக்கென்னமோ கண்மாதிரி நிப்பன் எண்டு அடம்பிடிக்கும் கருஞ்சிறுத்தை வடிவேலு நிலமை வடகொரியாவுக்கு ஆகிடுமோன்னு சந்தேகமாயிருக்கு... :D 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

7735669962076912549government2.gif

கொரிய தூதுவர்களுக்கு ஆலோசனை

கொரிய வலயத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் மிகுந்த சூழலுக்கு மத்தியில் அவதானத்துடன் செயற்படுமாறு வெளிநாட்டு தூதுவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தென் கொரியாவின் இலங்கை தூதுவர் மற்றும் வட கொரியா தொடர்பில் செயற்படும் சீனாவின் இலங்கை தூதுவர் ஆகியோருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

தென் கொரியாவில் 20,000 இலங்கை பணியாளர்கள் உள்ள நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து அவதானத்துடன் இருக்கும்படி வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னமோ சீனாவுக்கு தேவையில்லாத வேலையெண்டு நினைக்கிறன் :unsure: ....அமெரிக்கா அடிச்சால் வடகொரியா வரைபடத்திலையே இருக்காது எண்டு இஞ்சை கனபேர் கதைக்கிறாங்கள்.ஈரானுக்கும் இது பாடமாய் இருக்குமாம். :o

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ சீனாவுக்கு தேவையில்லாத வேலையெண்டு நினைக்கிறன் :unsure: ....அமெரிக்கா அடிச்சால் வடகொரியா வரைபடத்திலையே இருக்காது எண்டு இஞ்சை கனபேர் கதைக்கிறாங்கள்.ஈரானுக்கும் இது பாடமாய் இருக்குமாம். :o

 

ஆனாலும்.. ஜப்பான் மீது அணு குண்டுகளை போட்டிட்டு.. இப்பவும் காயா இருக்கிற நிலைமை அமெரிக்காவிற்கு எனி இல்லை..!

 

அங்க அடிச்சா.. அமெரிக்காவும் அடி வாங்கும்..!

 

லிபியா.. ஈராக் என்று.. தடால் புடாலா இறங்கினவை.. இங்க முழுசிட்டு நிற்கிறதில தெரியல்ல..! கியூபாவில வந்த சோவியத் - அமெரிக்க சண்டித்தனம் போலத்தான்.. இது முடியும்..! :lol:

வட கொரியாவுக்கு சினேகிதர்கள் குறைவு. அமெரிக்கா இறங்கினால் வரத்தக்க உதவி என்று ஒன்றும் இல்லை. ஆப்கான், ஈராக் வியட்நாம் மாதிரி அல்ல. கிம் யங்க் உன் போனால் கம்யூனிஸ்ட் கட்சியால் உடனே ஒன்றும் செய்ய இயலாது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் ரஷ்யாவை நம்பின நாடுகள் எல்லாம் இப்ப நடுத்தெருவிலைதான் நிக்கிது.....அமெரிக்காவோடை கூட்டு வைச்ச நாடுகள் எல்லாம் ஓரளவுக்கு பொருளாதார ரீதியாகவாவது குறையில்லாமல் வாழ்க்கையை கொண்டு போகுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா களத்தில் இறங்காமல் ஆயுத உதவிகளை மட்டும் வழங்குகிறது. லிபியா, சிரியாவில் இது தான் நடக்கிறது. வடகொரியா விடயத்தில் நேர்ந்து விடப்பட்ட ஆடு தென்கொரியா.
 
ஆப்கானிஸ்தான், ஈராக் தோல்விகளால் நேரடியாக களத்தில் இறங்கும் எண்ணத்தை கைவிட்டிருக்கலாம்.

நான் பார்த்த தொலைகாட்சில் ஒரு முன்னால் இராணுவ அதிகாரி சொன்னார்:

 

 வட கொரியாவின்  ஏவுகணை ஏதாவது ஒன்று அமெரிக்காவை தாக்குமாயின் (  100/001) தான் வடகிரியா  முழுவதும் தரைமட்டம் ஆக்குவதும் அத்தோடு உலகில்  ஈரான் சீனா போன்ற நாடுகள் அடங்கிவிடும் என்றும்   அமெரிக்கா நீண்ட கால போரை விரும்பவில்லை எனவும்.....

 

 

எனக்கும்  நேரடி மோதல் பார்க்க ஆசை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா களத்தில் இறங்காமல் ஆயுத உதவிகளை மட்டும் வழங்குகிறது. லிபியா, சிரியாவில் இது தான் நடக்கிறது. வடகொரியா விடயத்தில் நேர்ந்து விடப்பட்ட ஆடு தென்கொரியா.
 
ஆப்கானிஸ்தான், ஈராக் தோல்விகளால் நேரடியாக களத்தில் இறங்கும் எண்ணத்தை கைவிட்டிருக்கலாம்.

ஆப்கானிஸ்தானும் , ஈராக்கும் அமெரிக்காவுக்கு தோல்வியல்ல என பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.குள்ளநரித்தனமாக சிந்தித்தால் அமெரிக்காவிற்கு மகாவெற்றி..... பெரிய பிரித்தனியாவுக்கும்தான் :D

5 ஏப்ரல், 2013 - 15:28

 

"வடகொரியாவை விட்டு வெளியேறப் பாருங்கள்"
 

வடகொரியத் தலைநகர் பியாங்யொங்கில் உள்ள ரஷ்ய, பிரிட்டிஷ் தூதரகங்கள் உட்பட பல வெளிநாட்டு தூதரகங்கள் அங்கிருந்து தமது பணியாளர்களை வெளியேற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வடகொரியா கேட்டிருக்கிறது.

இது சம்பந்தமாக தமதுஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்திப்பதாக லண்டனில் உள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்த புதிய பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா தனது இரு நடுத்தர தூர ஏவுகணைகளை அவற்றை ஏவக்கூடிய வாகனங்களில் பொறுத்தியிருப்பதாக தென்கொரியா கூறியிருக்கும் நேரத்தில், இந்த வேண்டுகோள் வந்திருக்கிறது.

ரயிலின் மூலம் ஏவுகணைகள் அவை ஏவப்படக்கூடிய முக்கிய இடமான நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகளை ஆதாரம் காட்டி தி யொன்ஹாப் செய்திச் சேவை கூறியுள்ளது.

ஆனால், இது குறித்து பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து எந்தவிதமான உறுதியும் வரவில்லை.
 

 

"கடிந்துகொண்டார் காஸ்ட்ரோ"

இதனிடையே வடகொரிய அரசு சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என வடகொரியாவின் நெடுநாள் கூட்டாளிகளிலொருவரான ஃபிடல் காஸ்ட்ரோ வலியுறுத்தியுள்ளார்.

தங்களுடைய தொழில்நுட்ப முன்னேற்றம் அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காண்பித்திருக்கின்ற வட கொரியர்கள், இனி சற்று பொறுமை காக்க வேண்டும் என்று கூபாவின் முன்னாள் அதிபர் கூறினார்.

அணு - ஆயுத யுத்தம் ஒன்று உருவாகுமானால் உலக மக்களில் எழுபது சதவீதத்துகும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்த காஸ்ட்ரோ, அப்படி ஒரு யுத்தம் வராமல் தவிர்க்க வேண்டிய பொறுப்பு வடகொரியாவுக்கும் அதன் எதிரி நாடுகளுக்கும் உள்ளது என்று கூறினார்.

அமெரிக்கர்களையும் காஸ்ட்ரோ கடிந்துகொண்டார்.

அணு - ஆயுத யுத்தம் ஒன்று வெடிக்குமானால் சரித்திரத்தில் மிகவும் அபாயகரமான அமெரிக்க அரசாங்கமாக அதிபர் ஒபாமாவின் அரசாங்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்று காஸ்ட்ரோ கூறினார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130405_northkorea.shtml

யுத்தம் வரப்போகுதோ இல்லையோ..
 
இரண்டு விசயங்கள் நடக்கலாம்.
 
1. அமெரிக்கா தான் நினைத்ததைச் செய்யலாம் என்ற ஆளுமைக்கு அடி விழப்போகிறது.
 
2. சீனா ஒரு தனித்த வல்லரசு என்ற நிலை மாறி, அதனுடனுன் ஒரு பலமான நாடாக வட கொரியா இணைந்த ஒரு அணியின் கை உயரப் போகிறது. அமெரிக்கா சீனாவை தனிமைப்படுத்தி கையாள நினைத்தது. ஆனால் சீனா, வட கொரியாவிற்கு பலத்தைக் கொடுத்து தங்களுடைய கூட்டு பலத்தை அதிகரித்திருக்கிறது.    Game theory.

இதுவும் வடகொரியாவின் ஒருவித ராஜதந்திர விளையாட்டுத் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.