Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது

எழுதியது இக்பால் செல்வன்
 
11.jpg

இந்தியப் பெண்களே இனி கவலை வேண்டாம். பெரும்பான்மையான நீங்கள் கரும் மாநிறமாக இருக்கின்றீர்கள் என்ற ஆதங்கங்களை தூக்கி எறியுங்கள். வெள்ளை நிறமாக ஒரு முகப் பூச்சு - அடுத்து உங்களின் பிறப்புறுப்புக்களையும் வெள்ளையாக்கிக் கொள்ள இன்னொரு பூச்சு - அதுவும் போதாதா ! உங்களின் பிறப்புறுப்புக்களை இறுக்கமாக்கிக் கொள்ளவும் ஒரு பூச்சு என வகைவகையாக வந்துவிட்டது. இனி உங்கள் ராஜகுமாரான் உங்களைத் தேடி வந்து உங்கள் காலடியில் கிடக்கப் போகின்றார். 

ஒரு பெண் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்ற கருத்தியல் சமூகத்தில் ஆழ ஊன்றியுள்ளது. அவளின் அதிகப் பட்சக் கடமை ஆணோடு கன்னித் தன்மையோடு புணர்வதும், அவனின் பிள்ளைகளைப் பெறுவதும், பேணுவதுமே ஆகும். கல்வி பெற்று விட்டாலும், வேலைக்கு சென்றாலும் அடிப்படைக் கடமைகள் மாறவில்லை என்பது மட்டுமே உண்மையாக இருக்கின்றது. பெண்களின் கல்வியும், வேலையும் கூட ஆண்களின் தேவைக்களுக்காகவே என்ற நிலை தான் நீள்கின்றது.

இந்திய மக்களின் பொது நிறமான கரும் நிறமும், மாநிறமும் ஒதுக்கப்பட்டதாகவே ஆக்கிவிட்டனர். காலம் காலமாக ஆரியர், கிரேக்கர், இஸ்லாமியர், ஐரோப்பியர் என அயலகத்தில் இருந்து வந்தவர்களின் வருணம் வெள்ளை என்பதால், அதிகாரத்தின் நிறம் வெள்ளை என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இருபதாம் நூற்றாண்டின் கல்வியும், சமூக மாற்றங்களும் கூட நிற பேதங்களை நீக்கிவிடவில்லை. வெளிர் நிற மோகத்தை பிற்காலத்தில் வந்த சினிமா, பத்திரிக்கைகள் முதல் இன்றைய இணையம் வரை நன்கு வளர்த்துவிட்டன. அந்த ஊடகங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் பலரும் ஆதிக்கச் சாதியினர் என்பதால் அவற்றை மாற்ற ஒருவரும் முயலவில்லை. 

பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இனி வரும் காலத்தில் பத்திரிக்கைகளில் பெண் தேடுவோர் சாதி, மதம், கல்வி, வேலை, தோல் நிறத்தையும் தாண்டி - பெண்ணுறுப்பின் நிறமும் வெள்ளையாக இருக்க வேண்டும் அதுவும் இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற விளம்பரம் வந்தாலும் வியக்க வேண்டியதில்லை.

அட மூடர்களா ! இவர்கள் உங்களின் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துகின்றார்கள். இப்போதும் மௌனமாக இருப்பீர்களானால் - நம் வீட்டுப் பெண்களை வன்புணர்வு செய்யவும் தயங்க மாட்டார்கள் இந்த சமூக வியாபாரிகள். இது ஒரு பெண்ணை உச்சக் கட்டமாக அவமானப்படுத்தும் செயலே ஆகும். ஒரு பெண்ணின் உடல் நிறத்தை மட்டம் தட்டிய சமூகம், ஒரு படிக்கு மேல் சென்று அவளின் பிறப்புறுப்பின் வர்ணத்தையும் மட்டம் தட்டும் வேலையில் இறங்கியது. '' பெண்ணுறுப்பினை வெண்மையாக்கும் கிரீம். இது உச்சக்கட்ட அவமானம்'' என ட்விட்டரில் எழுதினார் ரூபா சுப்ரமணியம். இன்னும் பலர் இவற்றுக்கு கண்டனம் எழுப்பினார்கள். 

இதை விட கேவலமாக ஒரு பெண்ணை சித்தரிக்க முடியாது. கற்பு என்ற ஒரு கற்பனை விரிப்பை காலம் காலமாக சமூகத்தில் திணிக்கப்பட்ட வந்தது. அதுவும் அந்த கற்பு என்பது பெண்ணுக்குறிய அணிகலனாகவும், திருமணத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான சீதனமாகவும் இருந்தது. ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் அவை மாற்றமடைந்து வருகின்றன. 

சராசரியாக ஒரு இந்தியப் பெண் முதன்முறையாக உறவுக் கொள்ளும் வயதானது 2006-யில் 23 என்ற நிலையில் இருந்து 2011-யில் 19.8 ஆக மாறிவிட்டது. திருமணத்துக்கு முன்னான களவொழுக்கம் என்பது இந்திய சமூகத்தில் மீண்டும் திரும்பி வருகின்றன. இந்த நிலையில் இந்திய சமூக மாற்றத்தில் ஆதாயம் காணவே இப்படியான கண்டுப்பிடிப்புக்கள் புகுத்தப்படுகின்றன. 

இந்த பூச்சுக்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பர படத்தினைப் பார்ப்பீர்களானால் - ஒரு குடும்பத்த தலைவி வேலைக்கு செல்லும் கணவனிடம் தனது அல்குல் இறுகிவிட்டதாகவும், தான் ஒரு கன்னிப் பெண்ணைப் போல மாறிவிட்டதாகவும் துள்ளிக் குதித்து ஆடுகின்றாள். அவனும் அவளும் பெற்றோர், பிள்ளைகள் முன்னர் கட்டித் தழுவிக் கொண்டாடுகின்றார்கள். அதனை அங்குள்ள ஒரு சிறுவன் செல்பேசியில் படம் பிடிக்கின்றான். இறுதியில் அந்த வீட்டு முதியப் பெண்ணும் இந்த கிரீமினைப் பெற இணையத்தில் பெற முயற்சிக்கின்றாள். இந்தப் பூச்சும், அதற்கான விளம்பரமும் பெண்களை மொத்தமாக அவமானப்படுத்தும் ஒரு செயலே ஆகும்.

இந்த விளம்பரத்தை வெளியிட்ட கறி நேசன் நிறுவனத்தின் மேலாளர் நாகேஸ் பன்னஸ்வாமி கூறுகையில் இது பெண்களின் உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை வளர்க்கின்றதாம். அத்தோடு நோய் தொற்றுக்களை தடுப்பதாகவும் புளுகுத் தள்ளியுள்ளார்.

முதலில் அறிவியல் ரீதியாக நாம் சொல்ல விரும்புவது இயற்கையிலேயே ஆண் மற்றும் பெண்ணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் சுரப்பிகள் பல நோய் தொற்றுக்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. ஒழுங்காக குளித்து வந்தாலே நோய்த் தொற்றுக்கள் வர வாய்ப்பில்லை. அடுத்து இப்படியான பூச்சுக்களை தடவுவது பிறப்புறுக்களில் தேவையற்ற தொல்லைகளையும், நோய்களையும் கூட உண்டுப்பண்ண வாய்ப்புள்ளது. அதே போல ஒருவரின் இயற்கையான நிறத்தை எந்தவொரு பூச்சுக்களும் மாற்றிவிடாது, கன்னித் தன்மையையோ, இறுக்கங்களையோ வெறும் பூச்சுக்கள் கொடுத்துவிடாது. 

சமூக ரீதியாக ஆராய்வோமானால் இதைப் போன்ற பூச்சுக்களால் பெண்களின் தன்னம்பிக்கை உயரப் போவதில்லை. கல்வியறிவு, வேலை வாய்ப்புக்கள் மற்றும் சமூக சம உரிமைகள் மட்டுமே பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தக் கூடியவை. இப்படியான முகத்தை, உடலை, பிறப்புறுப்பை வெள்ளையாகவோ அல்லது கன்னித் தன்மை பெற்றது போலவோ ஆக்கும் பூச்சுக்கள் வெறும் ஏமாற்று வேலை மட்டுமில்லாமல் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, ஆண்களுக்காக பலியாக்கப்படும் சரக்குப் பொருளாகவுமே பெண்களை மாற்றும். உங்களின் உண்மையான உடல் மற்றும் மனதை விரும்பக் கூடியவரே உண்மையான வாழ்க்கைத் துணைவர் ஆவார். அவரின் தேவைகளுக்காக உங்களின் உண்மை அடையாளங்களை மறைக்கவும், மாற்றவும் முற்படல் என்பது வேசித் தனமான ஒன்றாகும். சக மனிதனான ஆண்களும், பெண்களும் ஒருவரை மதிக்கவும், சமமாக அன்பு செலுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரின் தேவைக்களுக்காக மட்டும் இன்னொருவரின் அடையாளங்களைத் துறக்க வேண்டியதில்லை.

ஆண்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவெனில் மனிதன் என்பவர்களில் இவை ஒன்று மாத்திரம் உயர்வானது, மேன்மையானது என்றக் கருத்தியலை கைவிடுங்கள். உங்கள் முகங்களை முதலில் கண்ணாடிகளில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் - நீங்கள் எப்படி இருந்தாலும் ஏற்கும் மனோபாவம் பெண்களுக்கு இருப்பது போல அவள் எப்படி இருந்தாலும் ஏற்கும் மனோபாவம் உங்களுக்கு வரவேண்டும். பெண் என்பவள் ஆண்களின் அடிமையல்ல - உங்களுக்காக படுக்கையை பகிரவும், சம்பாதியத்தங்களை பகிரவும், உங்களின் தேவைகளையும், உங்களின் பிள்ளைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அட்சயப் பாத்திரம் இல்லை அவள். இரத்தமும், தசையும், சலமும், மலமும் கூடிய ஒரு மனிதப் பெண். அவளுக்கும் உணர்வுகள், ஆசைகள், சிந்தனைகள் இருக்கின்றன. அவள் ஒன்றும் ரோபோக்கள் இல்லையே !!! 

திருமணத்தில் சக மனப் பொருத்தத்தை மட்டும் எதிர்ப்பாருங்கள் - நிறம், சாதி, மதம், பணம், கல்வி போன்ற வேற்றுமைகளை தூக்கி எறியக் கற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக ஊடகங்களின் வியாபார உத்திகளுக்குள் பலியாகாதீர்கள். வெள்ளை நிறம் என்பது மானுடத்தின் ஒரு பகுதியே ! நாம் அனைவரும் கலப்பினமானவர்கள் - வெள்ளை, கருப்பு, மாநிறம் என கலந்துவிட்டவர்கள். 

சினிமா, விளம்பரங்கள் காட்டும் வெள்ளை நிற மாயைகளில் சிக்கி சின்னா பின்னாமாகாதீர்கள். அழகும், இளமையும் ஒருக் காலக் கட்டம் வரைக்கும் தான். இறுதிக் காலங்களில் முதிர்ந்த வயதில் அழகும், இளமையும் இல்லாமல் போன பின்னர் வெறும் அன்பும், அரவணைப்புமே நிலையான ஒன்று என்பதை மறவாதீர்கள். இன்றைய இந்தியாவில் வெள்ளை நிற மேன்மை முகம் முதல் பிறப்புறுப்பு வரை என்பது அதிகாரத்தின் அடையாளம், அடக்குமுறையின் அடையாளம் இவற்றை தகர்த்தெறிய வேண்டியக் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன். 

கன்னித் தன்மை பேணும் என்று உளறும் இந்த கிரீம்களை வாங்கி ஏமாற வேண்டாம். ஏனெனில் பெண் எப்படிப் பட்டவளாக இருந்தாலும் ஏற்கும் மனோபாங்கு உடையவனே உண்மையான ஆண் மகன். ஒரு ஆண் மகனால் ஒரு போதும் ஒரு பெண் கன்னியா இல்லையா என்பதைக் கண்டுப் பிடிக்கவே முடியாது. எத்தனை எத்தனை கிரீம்கள் போட்டாலும், சர்ஜரிகள் செய்தாலும் கூட ஆணால் கண்டறியவே முடியாது. அதிகப் பட்சம் கன்னித் திரை கிழிதலையே கன்னித் தன்மையின் அளவுக் கோலாகி வைத்துள்ளனர். அதுவும் மாயையே ! ஏனெனில் கன்னித் தன்மை உடைய பெண்ணுக்கு குருதி வராமல் இருப்பதும் உண்டு - கன்னித் தன்மையற்ற பெண்ணுக்கு குருதி வருவதும் உண்டு, வர வைக்கவும் முடியும். 

ஆகவே ! உடல் சார்ந்த கற்பு என்ற மாயை நிழலுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். கற்பு என்பது மனம் சார்ந்த விடயமே ஒழிய ! உடல் சார்ந்தவையாக இருக்க முடியாது. உடலைப் பகிர்ந்தாலும் மனதளவில் வேறு ஒருவரோடு பிணைப்புடன் இருந்தால் உடல் தரும் கற்பின் சுகம் எல்லாம் குப்பைத் தொட்டியே.

மீண்டும் 18 என்ற இந்த பூச்சிற்கும், இதனை வெளியிட்ட அல்ட்ரா டெக் நிறுவனத்துக்கும் எமது கண்டனங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.
 
http://www.kodangi.com/2012/08/After-fairness-cream-vaginal-tightening-cream-is-here-to-empower-the-Indian-woman.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது

--------

இந்த பூச்சுக்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பர படத்தினைப் பார்ப்பீர்களானால் - ஒரு குடும்பத்த தலைவி வேலைக்கு செல்லும் கணவனிடம் தனது அல்குல் இறுகிவிட்டதாகவும், தான் ஒரு கன்னிப் பெண்ணைப் போல மாறிவிட்டதாகவும் துள்ளிக் குதித்து ஆடுகின்றாள். அவனும் அவளும் பெற்றோர், பிள்ளைகள் முன்னர் கட்டித் தழுவிக் கொண்டாடுகின்றார்கள். அதனை அங்குள்ள ஒரு சிறுவன் செல்பேசியில் படம் பிடிக்கின்றான். இறுதியில் அந்த வீட்டு முதியப் பெண்ணும் இந்த கிரீமினைப் பெற இணையத்தில் பெற முயற்சிக்கின்றாள். இந்தப் பூச்சும், அதற்கான விளம்பரமும் பெண்களை மொத்தமாக அவமானப்படுத்தும் ஒரு செயலே ஆகும்.

அக்குள் இறுக, ஆண்களுக்கும்... ஏதாவது மருந்து கண்டுபிடிக்க மாட்டார்களா? :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்குள் இறுக, ஆண்களுக்கும்... ஏதாவது மருந்து கண்டுபிடிக்க மாட்டார்களா? :D  :lol:  :icon_idea:

இவருக்கு அக்குள் மட்டும் தான் இறூகமாட்டுதாம் <_<

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் மக்களை பாலியலுக்குள்ளும்.. அழகு என்ற எண்ணவியலுக்குள்ளும்.. வியாபாரத்துக்குள்ளும் மூழ்க வைச்சு முட்டாள் ஆக்கும் செயல்களின் பகுதி. இது இந்தியப் பெண்களுக்கு மட்டுமான வியாதியல்ல. உலகில் மனிதர்களில் ஒரு பகுதியினர் பிற மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கும் தந்திரோபாயத்தின் நீட்சி..! இதற்கு வெள்ளைத் தோலும் அடிமை. கறுப்புத் தோலும் அடிமை. பிறவுன் தோலும் அடிமை..! என்ன இப்ப தான் பிறவுன் தோல் முழுமையான அடிமையாக வெளிக்கிட்டுள்ளது. உலக மயமாக்களில் வயக்கராவோடு..யோனிக் களிம்பும்.. இணைந்து கொண்டுள்ளது..! புதிசா ஒன்றுமில்லையே..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அறிவியல் ரீதியாக நாம் சொல்ல விரும்புவது இயற்கையிலேயே ஆண் மற்றும்

பெண்ணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் சுரப்பிகள் பல நோய்

தொற்றுக்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. ஒழுங்காக குளித்து வந்தாலே

நோய்த் தொற்றுக்கள் வர வாய்ப்பில்லை. அடுத்து இப்படியான பூச்சுக்களை

தடவுவது பிறப்புறுக்களில் தேவையற்ற தொல்லைகளையும், நோய்களையும் கூட

உண்டுப்பண்ண வாய்ப்புள்ளது. அதே போல ஒருவரின் இயற்கையான நிறத்தை எந்தவொரு

பூச்சுக்களும் மாற்றிவிடாது, கன்னித் தன்மையையோ, இறுக்கங்களையோ வெறும்

பூச்சுக்கள் கொடுத்துவிடாது.

உலகிலேயே அதிக நுண்ணங்களில் வாழும் மனித உறுப்புகளில் இதுவும் ஒன்று. பல பக்ரீரியாக்களின் வாழ்விடமாகவும் பல புரட்டோசோவன்களின் வாழ்விடமாகவும் அல்குல் விளங்குகிறது. எச் ஐ வி உட்பட்ட கொடிய வைரஸுக்கள் வாழத்தக்க இடமாகவும் இது விளங்குகிறது._44250013_hiv_population_gr416.gif

எனவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்துவிட்டு ஜொள்ளு மிகுதியில் ஆட்டம் போட்டால்.. ஆட்டம் நின்று விடும் காலத்தை நீங்கள் விரைந்து தானாக வரவழைத்துக் கொள்வீர்கள்..! :):icon_idea:

இதைப்பற்றி கடந்த ஆண்டே பிபிசியில் செய்து வந்திருந்தது. இப்ப தான் யாழை எட்டி இருக்குது.

Virginity cream sparks Indian sex debate.

"Tightening the vagina is done by the vaginal muscles so I don't know how a local cream can do the job," she says, but believes it has the potential to do well in India because even if practices are changing, attitudes are not catching up as fast, so some people would try anything to cover up any hint of their actions.

"It's all very under wraps and discreet, no-one really discusses their sex lives with their friends or boyfriends," says Dr Nakhoda.

She says she has even heard stories of companies which work at night, such as call centres, finding their toilets full of condoms which they cannot flush down, as some couples find it hard to find a place to be alone.

A survey of more than 5,000 people by India Today magazine last year showed that fewer than 1 in 5 (19%) of respondents were open to the idea of pre-marital sex, or live-in relationships, with a quarter of people saying they did not object to sex before marriage, as long as it was not happening in their family.

_62515786_6445c68f-e46e-4be1-b4a1-5a9d67

http://www.bbc.co.uk/news/world-asia-india-19353039

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஆடு குட்டிபட அரசாங்கப் பண்ணைக்கு கொண்டுசென்ற ஞாபகம் வருகிறது. அங்கு பணம் கொடுக்கத் தேவையில்லை இலவசம். 15 - 20 ஆடுகள் வரும். ஒரே ஒரு வெளிநாட்டுக் கிடாய் தலை நிமிர்த்தி இராஐநடைபோட்டு வரும். எல்லாவற்றையும் மணந்து பார்க்கும் கடைசியில் ஒன்றுடன் மட்டும் தங்கிவிடும். மற்றவை எல்லாம் வீடு திரும்ப வேண்டியதுதான். திரும்பிச் செல்லும் ஆடுகள் கிடாயை முழுமையாக தேடவில்லை என்று பேசிக்கொள்வார்கள். நானும் நம்பிக்கொள்வேன். ஆனால் அது சுத்தப்பொய். கிடாய்க்கும் கன்னித்தன்மையைக் கண்டறியும் திறன் அபரிதமாக உள்ளதென்பது. இப்போதுதான் புரிகிறது,

உலகிலேயே அதிக நுண்ணங்களில் வாழும் மனித உறுப்புகளில் இதுவும் ஒன்று. பல பக்ரீரியாக்களின் வாழ்விடமாகவும் பல புரட்டோசோவன்களின் வாழ்விடமாகவும் அல்குல் விளங்குகிறது. எச் ஐ வி உட்பட்ட கொடிய வைரஸுக்கள் வாழத்தக்க இடமாகவும் இது விளங்குகிறது._44250013_hiv_population_gr416.gif

எனவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்துவிட்டு ஜொள்ளு மிகுதியில் ஆட்டம் போட்டால்.. ஆட்டம் நின்று விடும் காலத்தை நீங்கள் விரைந்து தானாக வரவழைத்துக் கொள்வீர்கள்..! :):icon_idea:

இதைப்பற்றி கடந்த ஆண்டே பிபிசியில் செய்து வந்திருந்தது. இப்ப தான் யாழை எட்டி இருக்குது.

Virginity cream sparks Indian sex debate.

"Tightening the vagina is done by the vaginal muscles so I don't know how a local cream can do the job," she says, but believes it has the potential to do well in India because even if practices are changing, attitudes are not catching up as fast, so some people would try anything to cover up any hint of their actions.

"It's all very under wraps and discreet, no-one really discusses their sex lives with their friends or boyfriends," says Dr Nakhoda.

She says she has even heard stories of companies which work at night, such as call centres, finding their toilets full of condoms which they cannot flush down, as some couples find it hard to find a place to be alone.

A survey of more than 5,000 people by India Today magazine last year showed that fewer than 1 in 5 (19%) of respondents were open to the idea of pre-marital sex, or live-in relationships, with a quarter of people saying they did not object to sex before marriage, as long as it was not happening in their family.

_62515786_6445c68f-e46e-4be1-b4a1-5a9d67

http://www.bbc.co.uk/news/world-asia-india-19353039

:(

இறைவா! நெடுக்கரிடமிருந்து என்னைக் காப்பாற்று. கிருமிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா! நெடுக்கரிடமிருந்து என்னைக் காப்பாற்று. அல்குல்லில் உள்ள கிருமிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். :D

உலகம் சில விடயங்களில் மனிதனை கற்பனையில் மிதக்க விட்டுள்ளது. அதன் விளைவுகளே இவை. அறிவியலோ.. உள்ள நுழைஞ்சு.. பிரிச்சுக் காட்டுது. உள்ள என்ன இருக்கென்று. அதைப் பார்த்திட்டு முடிவுக்கு வாங்கோ.. எவ்வளவு பெரிய கற்பனையில மனிதன் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறான்னு புரியும்.

முடிஞ்சா.. இந்த vaginal cosmetic surgery பாருங்கள். இதற்குப் பதிலாகத்தான் இந்தக் கிறீம் என்று சொல்லி விற்கிறார்கள்..! ஆனால்.. ஒருபோதும் உற்பத்தியாளர்களின் claims அறிவியல் சார்ந்ததாகக் கருதுவதில்லை..!

இந்தக் காணொளியை யாரும் பார்க்கலாம். இது மருத்துவ ரீதியான தகவலோடு வெளியானது. இருந்தாலும் சத்திரசிகிச்சை ஒன்றைக் காண விரும்பாதவர்களும்.. மனிதப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் தோற்றத்தை திரையில் காண விரும்பாதவர்களும் இதனைக் காண்பதை தவிர்க்கும் பொருட்டு மறைப்பிடப்பட்டுள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலியை சாமியாராக்காமல் ஒயமாட்டார் என நினைக்கிறேன்.. :rolleyes::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை மூதாதையர்மார் ஒரு கீறீமும் தடவுமில்லை......கண்டகண்ட நாதாரிவருத்தங்களும் வரவுமில்லை...மெயின் இடத்திலை சொறிசிரங்கு எண்டு திரியவுமில்லை...பெயர்தெரியாத வருத்தங்களும் வரவுமில்லை..இறுக்கம் பெருக்கம்...தொய்ஞ்சு போனதையும் கவலைப்படவுமில்லை...அவையளுக்கு எத்தினை பிள்ளையள் எண்டு கேட்டால்....பன்ரெண்டு பிள்ளையள் அதிலை மூண்டு குறுக்காலை போட்டுதுகள்.....மிச்சம் ஒன்பது...அந்த ஒன்பதும் கலியாணம் கட்டீட்டுதுகள்.....அதிலை ஏழுக்கு தலா இரண்டு பிள்ளையள்.....மிச்சத்துக்கு மினைக்கெட நேரமில்லையாம்....யு நொ ரெஞ்சன் லைவ்.......ஓகே......மிச்சம் இரண்டு பிள்ளையளின்ரை விசயத்துக்கு வருவம்.......அவையள் அப்பப்ப கரைக்க வெளிக்கிட்டதாலை........இனி அந்த.....அதுதான் பிள்ளைப்பாக்கியத்துக்கு சந்தர்ப்பமேயில்லையெண்டு டாக்குத்தர் மேசையிலை அடிச்சே சொல்லுறானாம்........தேவையில்லாமல் மப்பிலை குமாரசாமி உளறிட்டான் மன்னியுங்கோ :(

உலகம் சில விடயங்களில் மனிதனை கற்பனையில் மிதக்க விட்டுள்ளது. அதன் விளைவுகளே இவை. அறிவியலோ.. உள்ள நுழைஞ்சு.. பிரிச்சுக் காட்டுது. உள்ள என்ன இருக்கென்று. அதைப் பார்த்திட்டு முடிவுக்கு வாங்கோ.. எவ்வளவு பெரிய கற்பனையில மனிதன் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறான்னு புரியும்.

முடிஞ்சா.. இந்த vaginal cosmetic surgery பாருங்கள். இதற்குப் பதிலாகத்தான் இந்தக் கிறீம் என்று சொல்லி விற்கிறார்கள்..! ஆனால்.. ஒருபோதும் உற்பத்தியாளர்களின் claims அறிவியல் சார்ந்ததாகக் கருதுவதில்லை..!

இந்தக் காணொளியை யாரும் பார்க்கலாம். இது மருத்துவ ரீதியான தகவலோடு வெளியானது. இருந்தாலும் சத்திரசிகிச்சை ஒன்றைக் காண விரும்பாதவர்களும்.. மனிதப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் தோற்றத்தை திரையில் காண விரும்பாதவர்களும் இதனைக் காண்பதை தவிர்க்கும் பொருட்டு மறைப்பிடப்பட்டுள்ளது. :)

ஒரு கதைக்குச் சொன்னால், படம் போட்டு பாகம் கீறி மனுசனைப் பயமுறுத்தாட்டிப் போட்டீங்கள். :D

இங்கு முஸ்லிம் பெண்கள் கன்னித் திரை சத்திர சிகிச்சை செய்வதாக இரு வருடங்களிற்கு முன் ஒரு செய்தி வந்தது.

http://undhimmi.com/2010/07/29/uk-taxpayers-funding-muslim-virginity-repair-surgery/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே அதிக நுண்ணங்களில் வாழும் மனித உறுப்புகளில் இதுவும் ஒன்று. பல பக்ரீரியாக்களின் வாழ்விடமாகவும் பல புரட்டோசோவன்களின் வாழ்விடமாகவும் அல்குல் விளங்குகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லி விற்கும் Yogurt இலும் நிறைய பக்ரீரியாக்கள் வாழுகின்றனதானே நெடுக்ஸ் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லி விற்கும் Yogurt இலும் நிறைய பக்ரீரியாக்கள் வாழுகின்றனதானே நெடுக்ஸ் :icon_mrgreen:

அவை ஆபத்தற்றவை. இவை ஆபத்தானவை..! எமது உடலின் உள்ளும் பக்ரீரியாக்கள் இயற்கையாக வாழ்கின்றன. அவை ஆபத்தற்றவை..! :lol:

கொக்காகோலாவிற்குப் பதிலாக அதே நிறத்தில் உள்ள பூச்சிநாசினியை குடிக்கலாமோ..??! இல்ல குடிக்கலாம் என்று நீங்க நினைச்சா நல்லா குடியுங்கோ..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவை ஆபத்தற்றவை. இவை ஆபத்தானவை..! எமது உடலின் உள்ளும் பக்ரீரியாக்கள் இயற்கையாக வாழ்கின்றன. அவை ஆபத்தற்றவை..! :lol:

கொக்காகோலாவிற்குப் பதிலாக அதே நிறத்தில் உள்ள பூச்சிநாசினியை குடிக்கலாமோ..??! இல்ல குடிக்கலாம் என்று நீங்க நினைச்சா நல்லா குடியுங்கோ..! :lol:

நெடுக்ஸ் பட்டினத்தாரின் சீடன் மாதிரி இருக்காதீர்கள். பிற்காலத்தில் தெருவில் ஒட்டுத்துணியில்லாமல் ஞானி மாதிரி நடமாடும் நிலை வந்துவிடும்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பட்டினத்தாரின் சீடன் மாதிரி இருக்காதீர்கள். பிற்காலத்தில் தெருவில் ஒட்டுத்துணியில்லாமல் ஞானி மாதிரி நடமாடும் நிலை வந்துவிடும்.  :lol:

கல் என்பவனுக்கு கல்

கடவுள் என்பவனுக்கு கடவுள் :wub:

விடுங்கப்பா........

நெடுக்கு சொல்வதைப் பார்த்தால் நான் 25 வயதுக்குள் எக்கச்சக்கமாக வருத்தம் வந்து மேலே போயிருக்க வேண்டும். :icon_mrgreen:

பதிவை எமக்காக இங்கு தந்த கிருபன் அண்ணாவுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவர்களே! நீங்கள் ஏதோபாட்டிற்கு இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது என்று எழுதிவிட்டீர்கள். நேற்று இராத்திரி இந்திரன் என் கனவில் வந்து என்னைப் பெரும்பாடு படுத்திவிட்டார். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தான் ஆயிரம் பெண்ணுறுப்புகளை கொள்வனவு செய்ததாகவும், அவற்றை இன்னமும் விற்றுமுடியவில்லை, அதற்கு முன்னே இவன் யாரடா கிருபன்! அவனுக்கு நீங்கள் சப்போட்டா? என்று தனது வஜ்ராயுதத்தையே தூக்கிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சொல்வதைப் பார்த்தால் நான் 25 வயதுக்குள் எக்கச்சக்கமாக வருத்தம் வந்து மேலே போயிருக்க வேண்டும். :icon_mrgreen:

இதில இருந்து என்ன தெரியுது.. செய்யுறதை நல்ல முன்னெச்சரிக்கையோட செய்யுறீங்க என்று..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதில இருந்து என்ன தெரியுது.. செய்யுறதை நல்ல முன்னெச்சரிக்கையோட செய்யுறீங்க என்று..! :lol:

இந்தக்கதையெல்லாம் வேண்டாம்

இரு பந்திகளாவது வேண்டும்

1- என்ன    செய்கிறார்?

2- என்ன  முன்னெச்சரிக்கை  மேற்கொள்கின்றார்???

:D

இந்தக்கதையெல்லாம் வேண்டாம்

இரு பந்திகளாவது வேண்டும்

1- என்ன    செய்கிறார்?

2- என்ன  முன்னெச்சரிக்கை  மேற்கொள்கின்றார்???

:D

அடுத்த முறை கனடாவுக்கு நீங்கள் வரும் போது ஒரு Demo வே காட்டுறன்..சரியா.. :D

எமது சமுகத்தில் இருக்கும், நிறம் மற்றும் கற்பு சார்ந்த எண்ணகருக்களை சரியாக நாடிபிடித்து பார்த்து, பல் தேசிய வியாபார நிறுவனக்களின் காசு பார்க்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

நுண்ணங்கி பற்றிய கருத்துகள் பற்றி சில குறிப்புக்கள்.

நுண்ணங்கிகள் எமது உடலின், தோல், தலை முடி, வாய், சமிபாட்டு தொகுதி , நாம் சுவாசிக்கும் காற்று, தொடும் மேசை, உண்ணும் உணவு என எங்கும் நிறைந்திருக்கிறன. அதே போல பெண்களின், ஆண்களின் பிறப்புறுப்பிலும் இருக்கிறன. பொதுவாக இப்படியான இடங்களில் (பெண்களின் பிறப்புறுப்பு உட்பட) காணப்படும் நுண்ணங்கிகள்  தீங்கற்றவை. தீங்கற்ற நுண்ணங்கிகள் போதுமான அளவில் இப்படியான இடங்களில் இருப்பது முக்கியமானது. இல்லது போனால் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகள் இப்பகுதிகளில் தோற்றி பதிப்பை ஏற்படுத்தும்.

A healthy vagina is populated with lactic acid-producing bacteria, explained Forney. The environment maintains a low pH balance that inhibits the growth of pathogens. “The vagina is elegant in its simplicity,” he said. “A healthy vagina maintains itself and is able to self-correct when minor imbalances occur.”

மேலதிகமாக அறிய.

http://phys.org/news103344050.html
 
அத்துடன் பெண்களின் பிறப்புறுப்பில் காணப்படும் நுண்ணங்கிகள் பிறப்புறுப்பினூடு இயற்கையாக பிறக்கும் குழந்தையின் நலனுக்கும் அத்தியாவசியமாக கருதப்படுகிறது.

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வில் இயற்கையாக பிறந்த குழந்தைகளிலும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் நோய்  தாக்கத்துக்கு உட்படும், ஒவ்வாமை நோய்களை எதிர்கொள்ளும் சாத்தியகூறு அதிகம் என சொல்லபட்டுள்ளது.

மேலதிகமாக அறிய.

Researchers found that, among the infant subjects, those delivered by C-section were about five times more likely to develop sensitivity to common household allergens such as dust mites and pet dander.

“We believe a baby’s exposure to bacteria in the birth canal is a major influencer on their immune system,” said lead researcher Dr Christine Cole Johnson, from the Henry Ford Hospital in Detroit.

The theory is that through exposure to the mother’s bacteria during a traditional, natural birth, infants pick up microbes that make it easier for their own immune systems to develop defenses akin to the mother’s against allergens she’s regularly exposed to. Think of it as an extension of the “hygiene hypothesis” that says children raised in overly antibacterial environments are more likely to develop allergies later in life.

http://life.nationalpost.com/2013/02/26/babies-born-by-c-section-at-much-higher-risk-for-developing-common-household-pet-dust-allergies-study/

http://www.womenshealthcaretopics.com/VaginalBirthvsCesareanSection.html

எழுத்து பிழை திருத்தவும், குறிப்பிட்ட ஆங்கில மூலத்தை இணைக்கவும் திருத்தப்பட்டது.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை கனடாவுக்கு நீங்கள் வரும் போது ஒரு Demo வே காட்டுறன்..சரியா.. :D

ராசா

மன்மதனிடம் லீலைகள் பற்றி  கேட்பேனா??? :wub:

நெடுக்குக்கு இவை எப்படித்தெரியும்????

அது தான் தலை வெடிக்குது :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமுகத்தில் இருக்கும், நிறம் மற்றும் கற்பு சார்ந்த எண்ணகருக்களை சரியாக நாடிபிடித்து பார்த்து, பல் தேசிய வியாபார நிறுவனக்களின் காசு பார்க்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

நுண்ணங்கி பற்றிய கருத்துகள் பற்றி சில குறிப்புக்கள்.

நுண்ணங்கிகள் எமது உடலின், தோல், தலை முடி, வாய், சமிபாட்டு தொகுதி , நாம் சுவாசிக்கும் காற்று, தொடும் மேசை, உண்ணும் உணவு என எங்கும் நிறைந்திருக்கிறன. அதே போல பெண்களின், ஆண்களின் பிறப்புறுப்பிலும் இருக்கிறன. பொதுவாக இப்படியான இடங்களில் (பெண்களின் பிறப்புறுப்பு உட்பட) காணப்படும் நுண்ணங்கிகள்  தீங்கற்றவை. தீங்கற்ற நுண்ணங்கிகள் போதுமான அளவில் இப்படியான இடங்களில் இருப்பது முக்கியமானது. இல்லது போனால் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகள் இப்பகுதிகளில் தோற்றி பதிப்பை ஏற்படுத்தும்.

A healthy vagina is populated with lactic acid-producing bacteria, explained Forney. The environment maintains a low pH balance that inhibits the growth of pathogens. “The vagina is elegant in its simplicity,” he said. “A healthy vagina maintains itself and is able to self-correct when minor imbalances occur.”

மேலதிகமாக அறிய.

http://phys.org/news103344050.html

அத்துடன் பெண்களின் பிறப்புறுப்பில் காணப்படும் நுண்ணங்கிகள் பிறப்புறுப்பினூடு இயற்கையாக பிறக்கும் குழந்தையின் நலனுக்கும் அத்தியாவசியமாக கருதப்படுகிறது.

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வில் இயற்கையாக பிறந்த குழந்தைகளிலும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் நோய்  தாக்கத்துக்கு, ஒவ்வாமை நோய்களை எதிர்கொள்ளும் சாத்தியகூறு அதிகம் என சொல்லபட்டுள்ளது.

மேலதிகமாக அறிய.

http://life.nationalpost.com/2013/02/26/babies-born-by-c-section-at-much-higher-risk-for-developing-common-household-pet-dust-allergies-study/

http://www.womenshealthcaretopics.com/VaginalBirthvsCesareanSection.html

அப்ப இவளவு நாளும் நெடுக்கர் எங்களை ஏமாத்தி தன் கட்ச்சிக்கு ஆள் பிடித்திருகிறார் :rolleyes:  :D  :D  :D .எங்களை நெடுக்கரிட்டை இருந்து காப்பாத்திய குளம் வாழ்க. :)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இப்ப எட்டுப் பந்தியில் மறுப்பு அறிக்கை விடுவார். அதை வாசித்துத் "தெளிந்த" பின்னர் கட்சியை விட்டு நீங்கலாமா இல்லையா என்று முடிவு எடுங்கள் சுவை. ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.