Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

130408115336_margaret_thatcher_512x288_b


இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை காலமானார்.

அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும்.

 

பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார்.

பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் இவராவார். இவர் காலத்தில்தான் ஃபோக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது.

1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார்.

சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்டிஷ் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130408_tatcherdies.shtml



Ex-Prime Minister Baroness Thatcher dies
_66802416_66802411.jpg
Baroness Thatcher, was the first woman to be UK prime minister

Former Prime Minister Baroness Thatcher has died at 87 following a stroke, her spokesman has said.

Lord Bell said: "It is with great sadness that Mark and Carol Thatcher announced that their mother Baroness Thatcher died peacefully following a stroke this morning."

Lady Thatcher was Conservative prime minister from 1979 to 1990.

David Cameron called her a "great Briton" and the Queen spoke of her sadness at the death.

Downing Street said Lady Thatcher would be accorded the same status of funeral as the Queen Mother and Princess Diana, but will not lie in state, in accordance with her own wishes.

'Great leader'

Lady Thatcher, born Margaret Roberts, became the Conservative MP for Finchley, north London in 1959, retiring from the Commons in 1992.

Having been education secretary, she successfully challenged former prime minister Edward Heath for her party's leadership in 1975 and won general elections in 1979, 1983 and 1987.

Baroness Thatcher's government privatised several state-owned industries. She was also in power when the UK went to war with Argentina over the Falkland Islands in 1982.

In a statement on the Downing Street Twitter feed, Mr Cameron said: "It was with great sadness that l learned of Lady Thatcher's death. We've lost a great leader, a great prime minister and a great Briton."

A Buckingham Palace spokesman said: "The Queen was sad to hear the news of the death of Baroness Thatcher. Her Majesty will be sending a private message of sympathy to the family," it said.

http://www.bbc.co.uk/news/uk-politics-22067155

உலகின் மிக செல்வாக்கான பெண்மணியாகத் திகழ்ந்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்க்கரெட் தாட்சர் இன்று காலாமனார்.

margaret-thatcher.jpg

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொற்றுநோய் காரணமாக லண்டன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவரது உடல் நிலையில் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் மரணமடைந்தார்.

1979 முதல் 1990 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்து சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கினார் தாட்சர். மரணமடைந்த தாட்சரின் உடலுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அஞ்சலி செலுத்தினார்.

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட மார்கரெட் தட்சருக்கு இறக்கும் போது 87 வயதாகும்.

கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார்.

சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்டிஷ் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.  

http://tamilworldtoday.com/archives/3911

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஒரு சரித்திரம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள்.
 
பிரித்தானிய வரலாற்றில் தனக்கென்று இடம் பிடித்த சரித்திர நாயகி மார்கரெட் தாட்சர்.
  • கருத்துக்கள உறவுகள்

சமதர்மக் கொள்கைகளில் பற்றும், தாராளவாதக் கருத்துக்களில் பிடிப்பும் எனக்கு இருந்தும் பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட இரும்புச் சீமாட்டி மார்கிரட் தாட்சர் அவர்களின் உறுதியான ஆளுமை அவர் மீது பெரும் மரியாதையைத் தோற்றுவித்திருந்ததால் அவரது மரணித்த இன்றைய நாளை ஒரு துக்கநாளாக உணர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட முறையில், அரசியலைப் புறந்தள்ளி விட்டுப் பார்க்கையில், நான் அண்ணார்ந்து பார்த்த பெண்மணிகளில், இவரும் ஒருவராவர்.

 

The Lady is not for Turning என்ற இவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்ததாகும்!

 

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mar_zps6eaae577.jpg

 

ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் உலகையே ஆட்டிப்படைத்தவர்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டபவர்கள். இருவரும் மரண வேதனையை வருடக்கணக்காக அனுபவித்தவர்கள்.

கறுப்பின மக்கள் தென் ஆபிரிக்காவில் ஆட்சி அமைக்க கூடிய சாத்தியத்தை உருவாக்கியதால் எனது மதிப்பை பெற்றவர்.

 

பிடிக்காதது : போக்லாந்த் தீவிற்கு சண்டை பிடித்தது .

 

 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு பெண் என அழைக்கப்படும் தட்சரின் பொருளாதார கொள்கை பிரிட்டன் பிரஜைகள் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

மார்கரெட் தாட்சருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

 

markret-that.gif

 

இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் (வயது 87) நேறு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

வழக்கமான தலைவர்களுக்கு அரசு மரியாதையுடன் நடக்கும் இறுதிச்சடங்கை விட தாட்சரின் இறுதிச்சடங்கு சற்று வித்தியாசமாக நடைபெற உள்ளது. அதாவது, ராஜகுடும்பத்தினர் மற்றும் குறிப்பிடத்தக்க முக்கிய பிரமுகர்களுக்கான ராஜமரியாதை அவருக்கு வழங்கப்படுகிறது. செயின்ட் பால் தேவாலயத்தில் இச்சடங்குகள் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து வேறு இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று, ராஜகுடும்பம் அல்லாத வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதையுடனான இறுதிச்சடங்கு, கடைசியாக 1965ல் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilcnn.org/archives/157805.html

ஆழ்ந்த இரங்கல்கள் .

இரும்பு பெண்மணியான இவர் பிழையான சில நடவடிக்கைகளிலும் தனது இரும்புகொள்கையை வைத்திருந்தது எனக்கு இவரில் பிடிக்காதது .தேவையில்லாத கபடமான போக்லாந்து யுத்தம் ,தென்னாபிரிக்க வெள்ளை அரசுக்கு ஆதரவு ,இமிகிரேசன் போன்றவை .

கவுன்சில் வீடுகளில் பல வருடங்கள் குடியிருப்பவர்களுக்கு வீட்டை அவர்கள் சொந்தமாகியது அவரின் மதிப்பை உயர்ந்தியது .இவர் பிரதமராக இருந்த காலத்தில் லேபர் கட்சி தலைமைகள் உருப்படியாக இருக்கவில்லை (மைக்கல் பூட் ,நீல் கின்னோக் ) அதுவும் அவர் வெற்றிக்கு முக்கியகாரணம் .

  • கருத்துக்கள உறவுகள்
 
தாட்சரின் இறுதிச்சடங்கு 17ம் தேதி - பிரிட்டன் அரசு அறிவிப்பு! 
[Wednesday, 2013-04-10 06:25:20]
 
தாட்சரின் இறுதி சடங்கு வரும் 17ம் தேதி நடைபெறும் என்று பிரிட்டன்அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு கடந்த ஜனவரியில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின், அவர் ரிட்ஸ் ஓட்டலில் தங்கி இருந்தார். நேற்றுமுன்தினம் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தாட்சர் இறந்த செய்தி கேட்டதும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணிகள் நிறுத்தப்பட்டன. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 17ம் தேதி செயின்ட் பால்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில் தாட்சர் உடல் அடக்கம் செய்யப்படும். அவருக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=80112&category=WorldNews&language=tamil

  • 2 weeks later...

மார்க்ரெட் தாட்சரின் பிரமாண்ட இறுதி அஞ்சலி நிகழ்வுகள் : கண்ணீரில் கலங்கியது லண்டன்!

 

news_18-04-2013_67london.jpg

 

பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சரின் இறுதி அஞ்சலி அணிவகுப்பு லண்டன் புனித போல் சதுக்கத்தில் நேற்று பிரமாண்டமாக இராணுவ மரியாதையுடன்  நடைபெற்றது.

பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியார் இறுதி அஞ்சலி நிகழ்வில் பாடப்பட்ட இரங்கல் பாடல்களை வழிநடத்தினார். 2002 இல் நடைபெற்ற பிரித்தானிய மகாராணியார் எலிசபெத்தின் தாயாரின் இறுதிச்சடங்கை அடுத்து பிரிட்டனில் மிகப் பிரம்மாண்டமாக நிகழும் அஞ்சலி நிகழ்வு இதுவாகும். உலகம் முழுதும் இருந்து 2000 முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றினர்.

முப்படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மத்தியில் லண்டன் நகர வீதியில் தாட்சரின் பூதவுடல் கொண்டு செல்லப் பட்டது. பிரித்தானிய மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த முக்கிய தலைவர் ஒருவருக்கு வழங்கும் மிகப் பொருத்தமான அஞ்சலி இதுவென பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இந்நிகழ்வை வர்ணித்தார்.

மத்திய இலண்டனில் நகர வீதிகளில் 4000 போலிசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப் பட்டிருந்தனர். இறுதி ஊர்வலம் நடைபெற்ற வீதிகளின் இரு மருங்கிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்து, தாட்சருக்கு கண்ணீருடன் தமது அஞ்சலியை செலுத்தினர்.  சில இடங்களில் பேரணியும் நடந்ததாகக் கூறப்படினும் எதிர்பார்த்தளவு பெரியளவு ஆர்ப்பாட்டங்கள் நிகழவில்லை எனப் போலிசார் தெரிவித்தனர்.

இம் மரணச்சடங்கில் பிரிட்டன் சார்பாகக் கலந்து கொண்ட முக்கிய நபர்களில் முன்னால் பிரதமர்களான டோனி பிளேயர், கோர்டொன் பிரவுன், மற்றும் சர் ஜோன் மேயர் ஆகியோரும் தாட்சரின்  ஆட்சிக்காலத்தில் பணி புரிந்த முக்கிய அரசியல் பிரமுகர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் தாட்சரின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த வைபவத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப் பட்ட போதும் புகழுரைகள் வாசிக்கப் படவில்லை. தாட்சரின் சவப்பெட்டி பண்டைய இங்கிலாந்து அரசரின் ஆர்ட்டிலரி வண்டியில் வைத்துக் கொண்டு செல்லப் பட்டது.

1979 தொடக்கம் 1990 வரை பிரிட்டனின் முதல் பெண் பிரதமராகக் கடமையாற்றிய மார்கரெட் தாட்சர், கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி மூளை செயலிழப்பால் 87 வயதில் காலமானார்.  பிரித்தானியாவை நவீன நூற்றாண்டுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரிட்டிஷ் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் ஆவார்.

1925ம் ஆண்டு சாதாரண மளிகை கடைக்காரரின் மகளாக பிறந்த தாட்சர், தனது திறமையினாலும், ஆளுமையினாலும் உயர்ந்து 1979ம் ஆண்டு பிரித்தானியாவின் பிரதமர் ஆனார்.

அவர் மேற்கொண்ட துணிச்சலான இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக இரும்புப் பெண் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து தொழில்துறையில் முன்னணி நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 1965ம் ஆண்டு சேர் வின்ஸ்டன் சேர்ச்சில் காலமான போது அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் பிரித்தானிய மகாராணியார் கலந்து கொண்டார். அதன் பிறகு எந்தவொரு அரசியல் தலைவர்களின் மரண அஞ்சலி நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவில்லை. தற்போது தட்சரின் மரண அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அந்தளவுக்கு தாட்சர் பிரித்தானிய மக்களின் மனங்களில் மாத்திரமல்லாது மகாராணியார் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYzNzY4MjA4.htm#.UXBNq0qC9S0

 

Edited by துளசி

இறுதிச் சடங்குகளுக்கு பிறகு தாட்சரின் உடல் தகனம் செய்ப்பட்டது

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121193

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 மரணச்சடங்கில் கூட ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு இவர் அவ்வளவு கொடுமையானவரா?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.