Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தம் தொலைந்த வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை.. வாசகர்களை நிமிர்ந்து உட்காரக்கூடிய நிலைக்கு கதை கொண்டுவந்துள்ளது.. :D

 

என்ன

மாடியிலிருந்து பாய்வதற்கான ஊக்குவிப்பா....... :( .

நடக்கட்டும்

நடக்கட்டும்

இணையவனும் பச்சை  போட்டுள்ளார்

திகைத்துப்போனேன் :(

  • Replies 239
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் தரும் உறவுகள் யாயினி, இசை, நிலா அக்கா, விசுகு அண்ணா, இணையவன், அலை ஆகியோருக்கு நன்றி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 14

வசந்தி ஒரு ஓட்டோ பிடித்து கணவனுடன் மிகச் சாதாரண தங்குவிடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கள் பொருட்களை அங்கு வைத்துவிட்டு, தன் நகைகள் கடவுச் சீட்டு என்பவற்றை கைப்பையில் வைத்துக்கொண்டு வசந்தனைப் பார்த்து வாங்கோ என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே செல்ல வசந்தனும் ஒன்றுமே கூறாமல் பின்னால் சென்றான். நல்ல காலம் நகைகளை தன்னுடனேயே கொண்டு திரிந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அல்லது அதையும் ராம் எடுத்திருப்பான். வசந்தி கணவனையும் கூட்டிக்கொண்டு  நகைக் கடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவளிடமிருந்த நகைகளை விற்றாள். எல்லாமாக இருபத்தையாயிரம் தான் வந்தது. கொடியை மட்டும் கழற்றவில்லை. இங்கிருந்தால் ராம் யாரையும் விட்டு ஏதும் செய்யப் பார்ப்பான். அதனால் கணவனைக் கூட்டிக்கொண்டு பம்பாய் போவதே அவளது திட்டம். ஏனெனில் அவள் ஏஜெசியுடன் கதைத்தபோது அவர்களும் பம்பாயில் இருந்தே ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் எனக் கூறியிருந்தது நினைவில் நின்றது. மீண்டும் அவர்களிடம் சென்று தன் நிலைமையைச் சொல்லி பம்பாயில போய் யாரைச் சந்திக்க வேணும் என்று சொன்னால் நாங்கள் சந்திக்கிறம் என்றவளை மறுக்க மனமின்றி  விலாசத்தை எழுதிக் குடுத்தார் அவர்.

வெளியே வந்ததும் நீ என்ன உன்ர பாட்டுக்கு முடிவெடுக்கிறாய் என்னை ஒன்றும் கேட்காமல் என்ற வசந்தனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, ஒரு ஆம்பிளையைக் கலியாணம் கட்டுறது அவன் தன்னை வச்சு வடிவாப் பாப்பான் என்றுதான். நான் நீங்கள் ஆண்  என்று நம்பித்தான் உங்களைக் காதலிச்சு ஏமாந்து போனன். படுக்கையில மனைவியைத் திருப்திப்படுத்தினால் மட்டும் ஒருத்தன் ஆண் ஆகமாட்டான். பெண்சாதிக்கு மற்றவையால கஷ்டம் வரேக்க, ஆபத்து வரேக்க எதிரித்து நிக்கிறவன், காப்பாத்திறவன்தான்  உண்மையான ஆம்பிளை. நான் நல்ல அம்மா அப்பாவாலை வளர்க்கப்பட்டதால என்னால இப்பவும் உங்களை விட்டுவிட்டுப் போக முடியேல்லை. எனக்குப் பிறகு இரண்டு தங்கச்சியள் இருக்கினம். உங்கடை ஆட்களே என்னைப்பற்றி கூடாமல் கதைச்சு அவையளின்ர வாழ்வையும் நாசமாக்கிப் போடுவினம். அதாலைதான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கிறன் என்றாள். வசந்தன் மூச்சுக் காட்டவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவனைப் பார்த்தவள், வசந்த் எனக்கு இப்பவும் உங்களில நிறைய அன்பு இருக்கு. நீங்கள் நான் சொல்லுறதை கேட்டீங்கள் எண்டால் காணும். எனக்கு உங்களில இல்லாத அக்கறையோ மற்றவைக்கு வரப்போகுது. உங்கட அத்தானாக  இருக்கலாம். அதுக்காக அவருக்கு ஏன் நீங்களோ நானோ பயப்பிடவேணும். பாக்கப்போனால் அவர்தான் எனக்குச் செய்ததுக்குப் பயப்பிட்டிருக்க வேணும் என்று கூறி அவனருகில் சென்று நெருங்கி அமர்ந்து கொண்டாள். சரி வசந்தி நான் இனிமேல் நீர் சொல்லுறபடியே கேட்கிறன். இப்பவே வெளிக்கிடுறமோ பம்பாய்க்கு என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.  

வசந்திக்கு மனம் நின்மதியாகிப் போனது. இவன் அடிப்படையில் நல்லவன்தான். என்ன செய்வது பெற்றோரும் சகோதரிகளும் இவனை வெருட்டி வைத்தபடியால் அவன் அவர்கள் சொல்கேட்டு ஆடுகிறான். நான் இவனைத் திருத்திவிடுவன் என மனதில் நினைத்துக்கொண்டு வெளிக்கிடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினாள். அத்தோடு மனதில் தன் துணிவைத் தனக்குள் மெச்சியபடி ஒன்றும் தெரியாத இடத்தில் வந்து நானும் பயந்தவளாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என எண்ணிக்கொண்டாள்.மூன்றாம்நாள் பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். ஏஜென்சி கொடுத்த விலாசத்தை வைத்துக்கொண்டு அங்கு சென்றால் பலர் வெளிநாடு போக காவல் இருந்தனர். மிகக் குறுகிய ஒரு அறையில் எந்த அடிப்படை வசதிகளுமற்று அறை இருந்தது. என்ன செய்வது காசும் மட்டுமட்டாக இருக்கு, எல்லாம் சமாளிக்க வேண்டியதுதான் என்று எண்ணிகொண்டு காலம் கழித்தாள்.

இங்கும் ஏஜென்சி நாற்பதாயிரம் இருந்தால் இருவரையும் அனுப்பலாம் என்றார். தேவன் என்ற பெயர் கொண்ட அவர் இவளுடன் வாஞ்சையுடன் கதைத்தார். உங்களுக்கு பணக் கஸ்ரம் என்றால் நான் ஒரு சூட்கேஸ் தருவன். அதை நீங்கள் நான் சொல்லுற இடத்தில குடுத்தால் நான் உங்களுக்கும் டிக்கட் போட்டு அனுப்பிவிடுறன் என்றுவிட்டு இவள் என்ன கூறுவாளோ என்று இவளைப் பார்த்தார். இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன சூட்கேஸ் அண்ணை  என்றாள். அதொன்றும் நீங்கள் கேட்கக் கூடாது சொல்லுற இடத்தில குடுத்தால் சரி என்றார். வசந்தன் இவள் காதில் உது கடத்தல் சாமான் என்றதும் இவள் அதிர்ந்துபோய், அண்ணை நான் உப்பிடியான வேலை செய்ய மாட்டன். உப்பிடிச் செய்யிறதிலும் பாக்க இங்க கிடந்தது சாவேனே தவிர என்னால முடியாதண்ணை என்று கூறிக்கொண்டு எழுந்தாள். அவர் உடனே தங்கச்சி கொஞ்சம் பொறுங்கோ. வெளிநாடு போறதுக்கு என்னண்டாலும் செய்வினம். நீங்கள் செத்தாலும் சாவேனே தவிர உப்பிடிச் செய்ய மாட்டன் என்று சொன்னது என்ர நெஞ்சைத் தொட்டுவிட்டுது. நான் உங்கட நேர்மையை மதிக்கிறன். உங்களிட்டைக் கிடக்கிற காசைத் தாங்கோ. உங்களை யேர்மனிக்கு அனுப்புறன். அங்க போய் செட்டிலான உடன என்ர காசைத் தந்தால்  சரி என்றார். வசந்திக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. இப்பிடிக் கூட ஆட்கள் இருக்கினமா?? நான் கும்பிடுற முருகன்தான் எனக்கு இந்த வழியைக் காட்டிக்கிடக்கு என்று மனதுள் முருகனுக்கும் நன்றி சொன்னாள். பின் தேவன் அண்ணை உங்கடை உதவியை நான் வாழ்க்கை பூரா மறக்க மாட்டன் என்று மனமாரக் கூறிவிட்டு, நெஞ்சு நிறைந்த மகிழ்வோடு அறைக்குச் சென்றனர். வசந்தனுக்குக் கூட நம்ப முடியாமல்த்தான் இருந்தது. தன் மனைவியில் அவனுக்கு மரியாதை கூடியது. நானெண்டா என்ன செய்திருப்பன் என யோசித்தவன், மேற்கொண்டு எதையும் எண்ணாமல் அவளுடன் நடந்தான்.

தொடரும்......... 



     

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத் தான் சுடு பிடிக்கத் தொடங்கி இருக்குது :lol:  தொடருங்கள் சுமோ

 

இந்த வசந்தனை எப்படித் தான் உங்கள் நண்பி காதலித்தாவோ தெரியாது, தொடருங்கள் வாசிக்க ஆவல் சுமே!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சுமே! 

 

இறுதிப் பாகங்களை, வாசித்தபிறகு எல்லாமே தெளிவாகப் புரிகின்றது!

 

உங்கள் தோழி ஒரு ' Split Personality'.

 

வசந்தன் ஒரு நரி!

 

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த ரதி, அலைமகள், புங்கை, வந்தி, இசை ஆகியோருக்கு நன்றி.

 



ஜேர்மனி என்றவுடன் பல விடயங்கள் விளங்கிவிட்டது.. :D

 

உங்கள் அற்ப ஆசையை ஏன் கெடுப்பான். நீங்கள் அப்பிடியே நினைச்சுக்கொண்டு இருங்கோ இசை :lol:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 15

தேவன் அண்ணை சொன்னபடியே இருவருக்கும் டிக்கெட் போட்டு அனுப்பிவிட்டார். இவர்கள் போய் பேர்லினில் இறங்கிய உடனேயே அங்கும் இவர்களுக்கு உதவ ஒருவரை ஒழுங்குசெய்திருந்தார். அந்தப் பையன் விமான நிலையத்தில் இவர்களுக்காகக் காத்திருந்தான். இவர்களைப் புகையிரத நிலையத்துக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து மேற்கு யேர்மனிக்குச் செல்லும் புகைவண்டியில் ஏற்றி கையில் 100 ஜேர்மன் மாக்குகளும் கொடுத்துவிட்டார். வசந்தி மீண்டும் அந்த முருகனுக்கே நன்றி கூறினாள். கடவுள் தான் எனக்கு தேவன் அண்ணையைக் காட்டியிருக்கு என்று.

ஒருவாறு யேர்மனியுடன் பொருந்தியாயிற்று. இரண்டு மாதங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு அகதியாகியும் விட்டனர். உதவித்தொகையும் வரத் தொடங்க மனம் கொஞ்சம் நின்மதியானது. இத்தனை நாளும் அகதி முகாமில் ஒரு அறை. அவர்கள் தரும் உணவு. சிறைச்சாலை போல் நேரத்துக்கு மணியடித்தால் உணவு. வேறு எங்கும் செல்லவும் முடியாது. மற்றவர்களுடன் அரட்டை இப்படியே போன பொழுது, இப்ப மாறி இவர்கள் எங்கும் சென்று இருக்கலாம் என கூறியபடியால், அகதிமுகாமில் பழக்கமான இன்னுமொரு குடும்பத்துடன் சேர்ந்து தனியே வசிக்க முடிந்தது.

வசந்தன் ஒருவாறு வேலை தேடி ஒரு சீன உணவகத்தில் தட்டுக்கள் கழுவும் வேலை எடுத்துவிட்டான். எக்கவுண்ட்ஸ் படித்துவிட்டு இந்தவேலை செய்வது அவமானமாக உணர்ந்தாலும், யேர்மனியில் துவேசம் காரணமாக அதுகும் கருப்பு நிறத்தவற்கு நல்ல வேலை கிடைப்பது கடினம். எனவே கிடைத்ததை விடாது பகுதிநேரத்தில் யேர்மன் மொழியையும் இருவரும் கற்று, வசந்தியும் ஒரு தொழிற்சாலையில் வேலை எடுத்துவிட்டாள். முதல் சம்பளம் வந்த உடனேயே ஒரு கணிசமான தொகையை இவளிடம் சொல்லாமல் தன் வீட்டுக்கு அனுப்பினான் வசந்தன். ஒரு வாரம் கழிய பணம் அனுப்பிய விபரம் வசந்திக்குத் தெரியவர நீங்கள் திருந்திவிட்டியள் என்று நினைத்தேன் என்றால் மனத்தாக்கலுடன் வசந்தனைப் பார்த்து. என்ர அம்மா அப்பாக்கு நான் ஒரு ஆண்பிள்ளைதான் காசு அனுப்புறது என்ற கடமை என்றான் அவன். உங்கட கடமைதான் அதுக்காக எனக்கு ஏன் சொல்லவில்லை என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். சரி அப்பா விடும். இதுகும் உம்மட குடும்பம் தானே என்று சடைந்துவிட்டு அவன் போய் விட்டான்.

இன்னும் ஒரு மாதத்தில் வசந்தனின் தமக்கையும் கணவரும் வெளிநாடு வந்து இவர்கள் இருக்கும் நகரத்திற்கே வந்தார்கள். வசந்தன் தான் இங்கு வரச் சொல்லி இருப்பான் என்று இவளுக்குப் புரிந்தது. இவள் நினைத்ததுபோலவே இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தவனை கோபப் பார்வை பார்ப்பது தவிர வேறெதுவும் செய்ய முடியாது வசந்தி எதுவும் நடக்காததுபோல் வாங்கோ என வரவேற்றாள். எங்கு வந்தாலும் சிலர் மாற மாட்டார்கள். அவர்கள் இருவரும் வசந்தனிடம் விழுந்துவிழுந்து காதைத்துவிட்டு  இவளிடம் ஏனோ தானோ எனக் கதைத்துவிட்டுக் கிளம்பினர். அவர்களுக்கு இரு சிறிய பிள்ளைகள் இருந்ததால் அரசாங்கம் அவர்களுக்கு இரு படுக்கை அறையுடன் கூடிய வீட்டு வசதிசெய்து கொடுத்தது. ஒரு வாரத்தின் பின் நாங்கள் அக்கா ஆட்களுடன் போய் இருப்பம் என்றான் வசந்தன். பாம்புப் புற்றுக்குள் கையை விட வசந்தி தயாராக இல்லை. நான் வரமாட்டன் அங்கே என வசந்தி மறுத்தும், அவனோ விடாப்பிடியாக நின்றதனால் வேறு வழியின்றி அவனின் பின்னே வசந்தி போகும்படியாயிற்று. அங்கு சென்றபின் வசந்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான். எதோ மூன்றாம் ஆள்போல் வசந்தியை அவர்கள் நடத்தியதை பார்வையானனாய் பார்த்துக்கொண்டிருந்தானே அன்றி மனைவி என்று அவள்மேல் இரக்கப்படவில்லை. காலையில் பல்விளக்குவது கூடப் பச்சைத் தண்ணீரில்தான். சுடுநீர் கொதிக்கும் தாங்கியை தமக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் தான் போடுவாள். அதற்குமுன் யார் தண்ணீரைப் பயன்படுத்தினாலும் குளிர் நீர்தான். வசந்திக்கு வரும் கோபத்தில் கணவனிடம் கத்தியும் எதுகும் அவன் காதில் ஏறவே இல்லை. சமையல் விடயம் கூட அவர்களின் விருப்பப்படிதான். இவள் இன்று நாங்கள் அதை வாங்கிக் கொண்டு வந்து சமைப்பமோ என்றாலும் அக்காவுக்குப் பிடிக்காது என்பான். இவளுடன் வெளியே போவதோ சந்தோசமாக இருந்து கதைப்பதோ கூட தமக்கையின்அனுமதியோடுதான். வசந்திக்கு அவனை அங்கிருந்து எப்பிடியாவது கிளப்பிக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

அன்று எழும்பவே அவளுக்கு தலை சுற்றுவது போல இருக்க வேலைக்குப் போகாது படுத்தே கிடந்தாள். மாலை முழுவதும் கூட எழும்ப முடியவில்லை. அடுத்தநாள் வசந்தனே இவளை வைத்தியரிடம் அழைத்துக்கொண்டு போனான். இவள் கற்பமாக உள்ளதாகவும் இன்னும் நான்கு வாரத்தில் மறுபடியும் வரும்படியும் கூறி இவள் வீக்காக இருப்பதால் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். இவளுக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வசந்தனின் முகத்தில் பெரிதாக மலர்வைக் காணவில்லை. இவள் இனி வேலையை விடட்டோ  என்றதற்கு பொறு அக்காவைக் கேட்பம் என்றான். நான் வேலையை விடுறதுக்கு எதுக்கு உங்கள் அக்காவைக் கேட்க வேண்டும் என கேட்டவள் எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகுது. இனி எண்டாலும் திருந்துங்கோ என்றால் அழுகையுடன். நான் என்ன திருந்தக் கிடக்கு. அக்கா இரண்டு குழந்தை பெத்தவ. அதனாலதான் சொன்னேன் என்று இவள் வாயை அடைத்தான்.

தமக்கையிடம் கூறியபோதும் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாது அப்பிடியே என்றுவிட்டு எழு மாதம் வரையும் வேலை செய்யலாம். அதுக்குப் பிறகு லீவு தருவாங்கள். வேலை செய்தால்தான் சுகமாக குழந்தை பிறக்கும் என்றாள் தமக்கை. வசந்திக்கு குழந்தை சுகமாகப் பிறந்தால் சரி என்ற எண்ணம். அவளுக்கு முடியாமல் இருக்கும்.ஆனாலும் குழந்தைக் கனவுடனே வேலைக்குப் போனதால் கனவு பொய்யாகி கரு பன்னிரண்டாவது  வாரமே கலைந்தது. இரு வாரங்கள் வைத்திய சாலையில் இருந்தவள், வீட்டுக்கு வந்தும் கவனிப்பாரற்று கணவனின் கருணை இல்லாது ஆறுதல் வார்த்தை இல்லாது, தாய்க்கு தன் உள்ளக் கிடக்கையை எல்லாம் மடலாக வடித்துப் போட்டாள். தாய் வழமைபோல் உவர்களோடு இருக்காதை. உவர்கள் உன்னைச் சாக்காட்டிப் போடுவினம் என்று எழுத இவளுக்கு தாயின்மேல் வெறுப்புத்தான் வந்தது. வீட்டில் இருந்தால் உதை  நினைத்து நினைத்து நோய்தான் எற்படும் என எண்ணியவளாய் மீண்டும் வேலைக்குப் போக ஆயத்தமானாள். சும்மா ஒரு பேச்சுக்குத் தன்னும் இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிட்டுப் போ என வசந்தன் கூறவே இல்லை.

சரி இத்தனை நாளில் அவரின் குணம் தெரிந்ததுதான். என்ன எண்ணியும் பயனில்லை என எண்ணிக்கொண்டு தன்பாட்டில் இருந்தாள். வசந்தன் இப்பவெல்லாம் இவளிடம் வரும்போது பாதுகாப்பு உறையுடனே வந்தான். ஏன் எனக் காரணம் கேட்டதுக்கு திரும்ப உடன பிள்ளை உண்டாகிவிட்டால் உமக்குத்தான் கூடாது என  அவன் கூறியதை நம்பி நான்கு மாதங்கள் அவளும் பேசாமல் இருந்தாள். அதன் பின் அவனின் சொல்லைக் கேட்காது வசந்தி பிடிவாதம் பிடித்ததில் மீண்டும் வசந்தி கருத்தரித்தாள். இம்முறை இவர்களைக் கேட்காமல் அவளே வேலையை விட்டு நின்றது வசந்தனுக்கும் தமக்கைக்கும் கடுப்பாகியது.

இவள் தாயிடம் பொதுத் தொலைபேசி இருக்கும் இடத்துக்கு வரும்படி கூறி தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டாள். எதுக்கும் கவனமா இரு என்றுவிட்டு தாய் போனை வைத்தார். இம்முறை வசந்தன் இவளுடன் கற்பம் பற்றி அக்கறையாகக் கேட்டது இவளை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. பத்தாததுக்கு பிள்ளைக்கு நல்லது என்று கூறி ஒரு கப்சுலும் கொண்டுவந்து கொடுத்தான். ஒரு நாளைக்கு இரண்டு தடவை எடுக்கிறதாம். எனது உணவு விடுதியில் வேலை செய்யும் ஒரு சப்பட்டை கொண்டுவந்தது என்றான். இவளுக்கு தன்  கணவனுக்கு தன்மேல் அக்கறை இருக்கிறது.  நான்தான் எப்போதும் அவரைப்பற்றி தவறாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என எண்ணிணாள்.
 
ஒரு வாரம் செல்ல அவளுக்கு அடி வயிறு சுண்டி இழுப்பதுபோல் இருக்க,  வீட்டில் இருந்தவள் தனியாக வைத்தியரிடம் சென்று தன நிலைமையை எடுத்துக் கூறினாள். வேலை செய்கிறாயா இப்பொழுதும் என்று கேட்டவர் அவள் இல்லை என்றதும் இவளைப் பரிசோதித்துவிட்டு நான் தந்த மருந்துகளை ஒழுங்காக உண்கிறாயா என்று கேட்டார். அவள் மருந்துகளை தன் கைப்பையுள் வைத்திருப்பதால் இந்த மருந்துகள் தானே என எடுத்துக் காட்டினாள். அவள் எடுத்து வைத்த மருந்துகளோடு வசந்தன் கொடுத்த மருந்தும் இருந்தது. இது நான் தரவில்லையே என்று கூறியவர், இதுவும் உண்கிறாயா என கேட்க இவள் ஆம் எனத் தலையாட்டினாள். அதை எடுத்து வடிவாக வாசித்துவிட்டு கணனியில் தட்டி அதன் விபரம் பார்த்தார். என்னைக் கேட்காமல் கண்ட மருந்துகளையும் உன்னை யார் உண்ணச் சொன்னது. இது கற்பம் கலைக்கும் மருந்து என்று கூறி இவளை உறைய வைத்தார். இவளுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. காதுகள் இரண்டும் அடைத்து மண்டை பிளந்துவிடுவதுபோல் வந்து கதிரையிலே மயங்கிச் சரிந்தாள்.


தொடரும்...........

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் இணையவன், ரதி, விசுகு அண்ணா, இசை ஆகியோருக்கு நன்றி.

 

தூ.................. வசந்தனும் ஒரு ஆளா. கேடு கெட்ட மனிதப் பிறவி! தொடருங்கள் சுமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை முடியிறதிற்கு இடையில் இணையவன் சுமோவிற்கு சிலை வைப்பார் போல :D நீங்கள் தொடருங்கள் சுமோ :) அந்தப் பெண்ணை எங்காலும் கண்டால் செருப்பால அடிப்பேன்னு சொல்லுங்கோ <_<

 

நீங்களும் சிலை வைக்க மாட்டியள். யாரும் வச்சாலும் விட மாட்டியள். அப்ப நாங்கள் என்னதான் செய்யிறது ரதி. :D  ஏற்கனவே செத்த பாம்பை நீங்கள் அடித்து என்ன பயன்.

 

 

பாவம் சுமே

தாளம்போட???  ஆரம்பித்திருப்பது தெரிகிறது :lol:

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

 

செருப்பு மட்டுமல்ல.. வசந்தனுக்கு கத்தியால் செருகி எடுக்கவேணும்.. இழிபிறப்புக்கள்..

 

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இதென்ன அண்ணா விளங்கும்படி எழுதினால் அல்லோ எனக்கு விளங்கும் :(

 

கதையில் ஒரு பக்கம் அதி வேகத்தில்  சாய்வது தெரிகிறது

இது கள கண்மணிகளின் எதிர்பார்ப்புக்காகவா என்று கேட்டேன் :D

 

(தேவன் எனது ஊரைச்சேர்ந்தவர்..??)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிய கதையை விரைவில் முடித்து விடவேண்டும் என்று ஓடுறீங்கள் புரிகிறது..ஏற்கவே குறுகியகதையாக முடிக்க விட்டு இருக்கலாம் போல இருக்கு....ச்சே... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையில்

 

ஆண்கள்(வசந்தன்) பற்றி  ஒரு முகம் காட்டப்டபடுகிறது.

அது எம்மில் பலருக்கு ஒருவித எரிச்சலையும் ஆத்திரத்ததையும் தருகிறது.

ஆனால் உண்மையில் பல ஆண்கள்  ஏறக்குறைய முழு ஆண்களுமே  அவரது குடும்பத்துக்கும் மனைவியின் குடும்பத்துக்கும்  தனது குடும்பத்துக்கும் இடையே ஆன பிணைப்பை உருவாக்க அந்த பாலத்தைப் போட பல தியாகங்களைச்செய்யவேண்டியுள்ளது.  பெரும் பொறுமையைக்கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

ஊரில் சொல்வார்கள்

எதையும் உடைப்பது சில செக்கன் வேலை

ஆனால் மீண்டும் ஒட்டுவது....................??? :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் இசை,பிறகு யாழில் எழுதிறதே சாட்சியா வந்திடும் :o .

உங்கள் நட்பு வட்டாரங்கள் எனக்குப் பரீட்சயம் ஆகாதவரை சேதாரம் குறைவாகத்தான் இருக்கும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தியின் கதை, நெஞ்சை உருக்குகின்றது!

 

வசந்தன் போன்றவர்கள் பிறக்கும் போதே, பொறுப்புச் சங்கிலிகள் பிணைக்கப்பட்ட படியே பிறக்கின்றார்கள் என்பது உண்மையே எனினும், வசந்தனின் அக்காவினது நிலைக்கும், வசந்தனின் நிலைக்கும் பொருளாதார ரீதியில் அதிக வேறுபாடுகள் இல்லை. சொல்லப் போனால், அக்கா வசதியாக இருக்கின்றார். ஆனால் பொறுப்பு  என்று வரும்போது, அக்காவும், வசந்தனுடன் சேர்ந்து அதைப் பகிர்ந்து கொள்ளவதில்லை. முழுப் பொறுப்புக்களும், நேரடியாக வசந்தன் மீதும், மறைமுகமாக வசந்தியின் மீதும் சுமத்தப்படுவதே, எமது கேடுகெட்ட சமுதாய அமைப்பாகும். அதற்குப் பலியாவது வசந்தி என்னும், எதிலும் நல்லதையே காணத் துடிக்கும் ஒரு அப்பாவி!

 

சுமே, கதையை நகர்த்தும் விதம், வாசகர்களை 'எரிபற்று நிலைக்குக்' கொண்டு செல்கின்றது! :D

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத்தனமா குளுசை குடுத்தது என்னை எரிபற்று நிலைக்குள் கொண்டு சென்றுவிட்டது புங்கை.. :icon_mrgreen:

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் தான்! :D

 

மட்டுக்களை நினைக்கப் 'பக்கெண்டு' இறங்கீற்றுது! :o

 

அதனால்தான் நான் இப்போ

திரவநிலைக்குள் உள்ளேன்  ஐயா........ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே! உங்கள் எழுத்துக்கள் எனக்கு கள் குடித்ததுபோல் ஆகிவிட்டது. முறியிறதுக்கு ஒரு முழுநாள் வேணும்போல கிடக்கு. :D :D

யாயினி, கொஞ்சம் இழுத்துப் பிடித்து நன்றாக எழுத முயல்கிறேன்.

அனைத்து உறவுகளுக்கும் நன்றி. :rolleyes:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.