Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
120418123546_patrol_304x171_afp.jpg
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார்.
 
இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி கூறினார்.
 
ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொதிநிலையை உண்டாக்கக் கூடியதாக இருந்துவருகின்றது.
 
இந்த எல்லை சர்ச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக இருநாட்டு அரசுகளும் நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளன.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130422_chinaindiaclash.shtml

இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அப்ப இந்திய இராணுவம் கூறவில்லை?

 

:lol:  இந்திய இராணுவத்துக்கு தெரியாமலா சீனன் உள்ளே வந்தார்கள்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் ஊடுருவல் - மறுக்கிறது சீனா, குழப்புகிறது இந்தியா! 

 

 

china-2342013-150.jpg

சீன ராணுவம் ஊடுருவல் விவகாரத்தில் இந்தியாவின் நலன்கள் காக்கப்படும் என்று ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.காஷ்மீரில் லடாக்கில் உள்ள தவ்லத் பெக் ஆல்டி பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் 10 கி.மீ தூரம் வரை ஊடுருவியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 17,000 அடி உயரமுள்ள இந்த பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு ஊடுருவியதுடன் அங்கு தற்காலிகமாக கூடாரம் அமைத்துள்ளனர். இதுபற்றி ராணுவ அமைச்சர் அந்தோணியிடம் நிருபர்கள் கேட்டனர்.

  

அதற்கு அந்தோணி அளித்த பதிலில், இந்த விவகாரத்தை சீன அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்தியாவின் நலன்கள் காக்கப்படும். நமது நலனை பாதுகாக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்என்றார். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அளித்த பேட்டியில், சீன ராணுவம் ஊடுருவல் தொடர்பாக முழுமையான தகவல்கள் இன்னும் வரவில்லை. மேலும் தகவல்களை பெற்று நிலைமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதன் பிறகே இறுதியான முடிவை எடுக்க முடியும். சீன அரசுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். இருதரப்பு ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். சீன ராணுவம் ஊடுருவலை அனுமதிக்க முடியாது. இந்திய பகுதிகளை காப்பதில் உறுதியாக செயல்படுவோம் என்றார்.

 

இதனிடையே, சீனாவில் பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை. இரு நாடுகளிடையே ஏற்கனவே ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையும் சீனா மதிக்கிறது. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன எல்லைக்குள் எங்கள் ராணுவத்தினர் ரோந்து சென்றனர் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=81059&category=IndianNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவங்களது எல்லைகளை கண்டுபிடிக்கமுடியுமா?

 

குடியிருக்கும்  மக்களுக்கு நகரங்களிலேயே  வாழவழியில்லை

வனாந்தரங்களை பாதுகாக்க கோடிக்கணக்கில் விரையம்.......... :(

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவங்களது எல்லைகளை கண்டுபிடிக்கமுடியுமா?

 

குடியிருக்கும்  மக்களுக்கு நகரங்களிலேயே  வாழவழியில்லை

வனாந்தரங்களை பாதுகாக்க கோடிக்கணக்கில் விரையம்.......... :(

 

இந்தியா தனது பங்கிற்கு.... சீனப் பெருஞ் சுவர் மாதிரி.... இந்திய பெருஞ் சுவரை கட்ட.... கொத்தனார்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். அதிலையும்..... ஊழல் பண்ணினால், இந்தியாவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. :D  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சீனர்களிடம் இருந்து நாட்டை காப்பற்றுவது ஒருபுறம் இருக்கட்டும் நாட்டுக்குள்ள இருக்கிற பெண்களை காப்பாற்றுங்கப்ப .... 

யாரும் பயப்பட தேவையில்லை அறிக்கை போரைத்தவிர வேறெந்த போரும் வராது :D

 

ஏற்கனவே சீனர்களின் கால்களில் வீழ்ந்துகொண்டு` அறிக்கை வீராப்பு காட்டுகிறார்களாக்கும்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்திய எல்லையில் 10 கி.மீ வரை சீனா ஊடுருவல்!: சீன ஹெலிகாப்டர்களும் அத்துமீறல்!!

 

ஜம்மு காஷ்மீர்: லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் 10 கிலோ மீட்டர் தொலைவு ஊடுருவி சீன ராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைத்துள்ள விவகாரம் தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் ஏற்படவில்லை.

 

லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி சோதனைச் சாவடி அமைத்திருப்பதாக கடந்த 15-ந் தேதியன்று இந்தோ-திபெத் எல்லை போலீசார் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் மத்திய அரசுக்கு விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.மேலும் கடந்த 15-ந் தேதியன்று இந்திய வான்பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறி பறந்ததும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

இன்று இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் எல்லையில் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

 

இதைத் தொடர்ந்து ராணுவ தளபதி பிக்ரம்சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைந்துள்ளார். இந்த ஊடுருவல் தொடர்பாக இந்திய- சீனா இடையே உயர் மட்ட அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லடாக் பகுதியில் கூடுதல் படைகளை குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதனிடையே வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் சீனத் தூதர் வெய் வெய்க்கு சம்மன் அனுப்பியுள்ளார். எல்லையில் உருவாகியிருக்கும் பிரச்சனைக்கு தீர்வுகாணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் வெளியுறவுத் துறை இணைச் செயலரும் சீனாவின் வெளியுறவுத் துறை இணைச் செயலருடன் இது தொடர்பாக விவாதித்திருக்கிறார்.

 

அதே நேரத்தில் இந்திய பகுதிக்குள் எந்த ஊடுருவலையும் தமது ராணுவத்தினர் மேற்கொள்ளவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சகசெய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதீன், எல்லைப் பகுதியைச் சேர்ந்த சீனா ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம் என்றார்.

 

 

http://tamil.oneindia.in/news/2013/04/23/india-chinese-incursion-india-moves-infantry-regiment-ladakh-173973.html

  • கருத்துக்கள உறவுகள்

 

சீனர்களிடம் இருந்து நாட்டை காப்பற்றுவது ஒருபுறம் இருக்கட்டும் நாட்டுக்குள்ள இருக்கிற பெண்களை காப்பாற்றுங்கப்ப .... 

 

அவ்..... மடியிலை கை வைக்காதீங்கப்பு. :D  :lol: 604027-hyt-new-dawn-watchmaking-smiley_r

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை: 

 

 

indian-china-border-news-150.jpg

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்துள்ள சீன இராணுவத்தினரை வெளியேற்ற இந்திய இராணுவ தளபதி காஷ்மீர் விரைந்துள்ளார். கடந்த வாரம் சீன ராணுவத்தைச் சேர்ந்த சில வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வந்து முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்குச் சென்ற இந்திய இராணுவத்தினர், இது இந்திய எல்லைப் பகுதி என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை அசைத்துக் காட்டியும், சீன வீரர்கள் வெளியேறவில்லை.

  

இந்த நிலையில், காஷ்மீர் அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அடுத்து, இந்திய இராணுவ தளபதி பிக்ரம் சிங், ஜம்மு சென்றுள்ளார். அவர் சீன ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=81116&category=IndianNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை

 

இந்தியா -  கொஞ்ச நாளைக்கு விட்டுக்கொடுக்கமுடியுமோ?

சீனா - என்ன விட்டுக்கொடுக்கிறதோ. அந்தளவுக்கு துணிவு வந்திட்டுதோ

 

இந்தியா - சத்தமாக பேசாதீங்கோ. தேர்தல் வருகுது. அதுவரையும் பின்னுக்கு   போங்கோ. அது முடிய இரண்டு மடங்கு உள்ள வரலாம். அதுக்கு நாங்க கரண்டி.

 

சீனா - சரி சரி  பிழைச்சுப்போ. காங்கிரசை விட்டா வேற எவரும் இல்லை இந்தியர்களுக்கு. அதால விடுகிறன். :D

'லடாக் பகுதியில் இருந்து திரும்பிச் செல்ல முடியாது': முரண்டு பிடிக்கிறது சீனா!
 
டெல்லி: இந்திய பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது தொடர்பாக, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஊடுருவிய படைகளை திரும்பப் பெற சீனா மறுத்து விட்டது.

காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் கடந்த 15-ந் தேதி சீன ராணுவம் ஊடுருவியது. இந்திய பகுதிக்குள் 10 கி.மீ. தூரம் வரை வந்து விட்ட சீன படைகள், அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டன.

மேலும், சீன ஹெலிகாப்டர்களும் அங்கு பறந்து சென்றன. இதையடுத்து டெல்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் வெய் வெய்யை இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் அழைத்து, இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார்.

இப்பிரச்சனையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர், சீன வெளியுறவு அமைச்சக இணை செயலாளரை தொடர்பு கொண்டு முறையிட்டார்.

இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவங்களின் பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுசுல் செக்டாரில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

வாபஸ் பெற வலியுறுத்தல்:

இந்திய தரப்புக்கு பிரிகேடியர் பி.எம்.குப்தாவும், சீன தரப்புக்கு சீனியர் கர்னல் அயன் யாந்தியும் தலைமை தாங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, எல்லை கோடு பற்றிய உண்மை நிலவரங்கள், இருதரப்பிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையின்போது, ஊடுருவிய இடத்தில் இருந்து சீன படைகளை திரும்ப பெறுமாறும், ஊடுருவலுக்கு முந்தைய நிலையை கடைபிடிக்குமாறும் இந்தியா வற்புறுத்தியது.

பதுங்கு அரண்களை இடிக்க வேண்டும்:

ஆனால், அதை ஏற்க சீனா மறுத்து விட்டது. அந்த பகுதி, தங்களுக்கு சொந்தமானது என்றும், எனவே, ஊடுருவல் நடக்கவில்லை என்றும், திரும்பி செல்ல முடியாது என்றும் சீனா கூறியது. மேலும், புக்ட்சே என்ற இடத்தில், பதுங்கு அரண்களை இந்தியா கட்டியதற்கு சீனா ஆட்சேபணை தெரிவித்தது. அந்த அரண்களை இடித்து விடுமாறு கூறியது.

 

தோல்வி: இந்த பேச்சுவார்த்தையில், சீனாவிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால், 3 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்தது.

இதனால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த பிரச்சனை, எல்லை கோடு தொடர்பான மாறுபட்ட புரிந்து கொள்ளல்களால் எழுந்துள்ளது. இருதரப்பு படைகள் இடையிலான நேருக்கு நேர் சூழ்நிலையாக இதை நாங்கள் பார்க்கிறோம். இருப்பினும், எல்லையில் அமைதி நிலவுகிறது. தற்போது, இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதில், அமைதி தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம். இரு நாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடந்த காலங்களில் கூட இத்தகைய பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்த்துள்ளோம். ஏப்ரல் 15ம் தேதிக்கு முந்தைய நிலையை (படைகளை திரும்ப பெறுதல்) கடைபிடிக்குமாறு சீனாவிடம் வற்புறுத்தி உள்ளோம் என்றார்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/24/world-flag-meeting-fails-china-remains-inside-174031.html

 

சீனன இந்தியாவோடு மினெக்கெட வைத்து வடகொரியாவுக்கு அமெரிக்கா அடிக்க போகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தமிழ்,கிந்தி படங்களுக்கு கதை தயார்.....சீனா இன்னும் 20 கி.மீட்டர் உள்ளே வந்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை....

சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய ராணுவம்

 

இந்திய எல்லையிலிருந்து வெளியேற சீனா மறுத்துவரும் நிலையில், இந்திய எல்லைக்கு கூடுதல் படைகளை பாதுகாப்பு துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன படைகள் ஊடுருவியதை திருமப பெற முடியாது, மேலும் தங்களுடைய பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியுள்ளதாக சீனா நேற்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை அடுத்து பதற்றத்தை தவிர்க்க இந்திய ராணுவமும் சீன ராணுவமும் இணைந்து மேற்கொண்ட சுமார் மூன்று மணி நேர கொடி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் ஊடுருவல் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அதே நிலையில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க லடாக் பகுதிக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இரு நாட்டு படைகளும் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதால் லடாக் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1304/25/1130425010_1.htm

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லைக்கோடு எல்லாம் சும்மா வரைபடத்தில் உள்ளதுதானே.. :D காஷ்மீர் என்று இந்திய வரைபடத்தில் உள்ள எல்லாப் பகுதிகளுமே இந்தியாவிடம் இல்லை. ஆகவே சீனா உள்ளே வந்தாலும் வரைபடங்களில் தொடர்ந்தும் பழைய எல்லைக்கோட்டையே காட்டவேண்டும் இந்தியா.. :D

 

_65189413_kashmir_304x260.gif

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும், இந்தியனுக்கு, நரம்புகள் முறுக்கேறும் எண்டு பாக்கிறன்! :D

 

அசையுதில்லையப்பா? ஒரு வேளை, பிளாஸ்டிக் நரம்புகளோ? :o

  • கருத்துக்கள உறவுகள்

நானும், இந்தியனுக்கு, நரம்புகள் முறுக்கேறும் எண்டு பாக்கிறன்! :D

 

அசையுதில்லையப்பா? ஒரு வேளை, பிளாஸ்டிக் நரம்புகளோ? :o

 

முறுக்கேறும் நரம்பு என்றல்... எப்பவோ ஏறியிருக்க வேணும்.

இனி... சீனனுக்கும், சிறிலங்கனுக்கும்.... குஷி தான்... :D

இந்தியாகாரனை விட சீனா இந்தியாவிற்குள் புகுந்துவிடும் என்று எம்மவர்களுக்குதான் அக்கறை :icon_mrgreen:

Edited by arjun

இந்தியாகாரனை விட சீனா இந்தியாவிற்குள் புகுந்துவிடும் என்று எம்மவர்களுக்குதான் அக்கறை :icon_mrgreen:

 

திரிகளைப் படிக்கமால் ஒற்றை வரி நக்கல்?

 

சீனா ஊடுருவியது தமிழ் நாட்டுள்குள்ளா? கஸ்மீரில்! நாம் எல்லாம் அதை ரசிப்பது உங்களுக்கு புரிந்தால் உங்களுக்கு யாழில் எழுத எதுவும் இருக்காது.

சீன ராணுவம் மேலும் 9 கி.மீ. ஊடுருவியது! டில்லி வரை வந்து விடுவார்களோ!!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121760

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

இந்திய எல்லைக்குள் 19 கி.மீ. சீனப் படைகள் ஊடுருவல்: மத்திய அரசு தகவல்

 

ஏப்ரல் 26, 2013

 

இந்திய எல்லைப் பகுதிக்குள் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவு வரை சீனப் படைகள் ஊடுருவி கூடாரம் அமைத்துள்ளதாக, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக இன்று ஆஜரான பாதுகாப்புத்துறை செயலாளர் சசி காந்த் சர்மா உள்ளிட்ட சில உயரதிகாரிகள், சீனப் படைகள் ஊடுருவல் நடத்திய பகுதிகளில் இந்திய ராணுவம் படைகளை நிறுத்தி வைத்துள்ளதாக விளக்கமளித்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள தவுலத் பேக் ஓல்டி என்ற இடத்தில் சீன ராணுவம் கடந்த வாரம் ஊடுவல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் இதுவரை 2 கொடி அமர்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாரதிய ஜனதா, இதுதொடர்பாக முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் இன்று நிலைக்குழு முன் ஆஜரான பாதுகாப்புத்துறை செயலாளர் சசி காந்த் ஷர்மா, கூடுதல் தகவல்களை அளித்த போதிலும், அவை போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

http://puthiyathalaimurai.tv/chinese-troops-have-intruded-19-km-into-indian-border-centre-shocks

 

Edited by துளசி

சல்மான் குர்ஷித் அடுத்த மாதம் சீனா பயணம்

 

ஏப்ரல் 26, 2013

 

salman-khurshid.png

 

 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் திட்டமிட்ட படி அடுத்த மாதம் 9 ஆம் தேதி சீனா செல்ல உள்ளார்.

சீனாவின் புதிய பிரதமராக லி கெகியாங் கடந்த மாதம் பொறுப்பெற்றுள்ள நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா சீனா இடையேயான எல்லை வரையரை செய்யப்பட்டு வரும் நிலையில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாலும் அடுத்த மாதம் இறுதியில் சீனாவின் புதிய பிரதமர் லி கெகியாங் இந்தியா வர உள்ள நிலையியும் சல்மான் குர்ஷித்தின் பயணம் இரு த்ரப்பு உற்வை மேம்படுத்த பயண் உள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குர்ஷித் சீனாவுடன் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாணப்படும் என்றும் இரு நாடுகளுக்கு இடையே சரியான எல்லையை வரையரை செய்யும் போது சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜமானதுதான் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

http://puthiyathalaimurai.tv/salman-khurshid-to-visit-china-on-may-9-despite-standoff

Edited by துளசி

சீன ஊடுருவல் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அந்தோணி

 

ஏப்ரல் 26, 2013

 

antony1.png

 

 

இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவியது தொடர்பான பிரச்சனையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்தபோது, அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பல்வேறு மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பிரச்சனை தொடர்பாக, ஏ.கே. அந்தோணியை நேற்று சந்தித்துப் பேசிய ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங், இந்திய - சீன எல்லைப்பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசித்தார்.

அப்போது, சீன ராணுவத்தை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு வழிமுறைகளை அவர் விளக்கினார். இந்த நிலையில், ஏ.கே. அந்தோணி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/will-resolve-chinese-incursion-row-at-the-earliest-a-k-antony

 

Edited by துளசி

தேர்தல் நேரம் சீனா எங்களுக்கு உதவினால் நன்றியாக இருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.