Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு விழுந்த இளைஞர் மரணத்தை தழுவிய சோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டையம்: கேரளாவில் லாட்டரி சீட்டு மூலம் கோடி ரூபாய் பரிசு வென்ற அதிர்ஷ்ட இளைஞர் ஒருவர், அந்த பணத்தை கண்ணில் காணும் முன்பாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டம் அடித்தும் அதை அனுபவிக்க முடியாமல் உயிரிழந்த அந்த நபரின் பெயர் உண்ணி. அவர் திருவனந்தபுரம் அருகே பாலா என்ற ஊரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

வந்த 24 வயதாகும் உண்ணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலித்தொழில் செய்து பிழைத்து வந்தார்.

ஏழ்மையான வாழ்க்கை

தனது ஏழ்மையைப் போக்க அதிர்ஷ்டத்தை நம்பினார் உண்ணி. அதற்கு ஒரே வழி லாட்டரிச்சீட்டுதான் என்று நம்பி வருடக்கணக்கில் கட்டு கட்டாக வாங்கினார். ஆனால் பரிசுதான் விழுந்த பாடில்லை.

அதிஷ்ட தேவதை கண் திறந்தாள்

முயற்சியை கைவிடாத உண்ணி, தொடர்ந்து பரிசுச் சீட்டுக்களை வாங்கினார். சமீபத்தில் கேரள அரசு லாட்டரியான காருண்யா பாக்யஸ்ரீ என்ற லாட்டரி மூலம் உண்ணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. முதல் பரிசான ரூ1. கோடி உண்ணிக்கு கிடைத்த உடன் பெற்றோரிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தார் உண்ணி.

வங்கிக் கணக்கில் பணம்

பரிசு பணத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியவருக்கு ஒரு கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதாக உண்ணிக்கு தகவல் கிடைத்தது.

உயிரிழந்த உண்ணி

வங்கியில் இருந்து பணத்தை எடுக்கப் போகும் முன்பாக அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்கப் போனார் உண்ணி. ஆனால் பரிதாபம், எதிர்பாராமல் உயிரிழந்து விட்டார் உண்ணி.

வாய்க்காலில் மிதந்த பிணம்

நீண்ட நேரமாகியும் உண்ணி வீடு திரும்பாத காரணத்தால் அவரை தேடி பெற்றோர்களும், உறவினர்கள் அங்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாய்க்காலில் உண்ணி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

சோகத்தில் மூழ்கிய பெற்றோர்

லாட்டரியில் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் இருந்த உண்ணியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அந்த பரிசு பணத்தை பெறும் முன்பே உண்ணி உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதை அனுபவிக்க முடியாமல் மகன் உயிரிழந்து விட்டானே என்று எண்ணி அவரது பெற்றோர்கள் அழுது புரண்டனர்.

http://tamil.oneindia.in/news/2013/04/23/india-man-wins-bumper-lottery-but-dies-before-174001.html

இதைத்தான் சொல்வார்களோ படைத்த கடவுளுக்கும் கண்ணில்லை என்று .... :(

இதைத்தான் சொல்வார்களோ படைத்த கடவுளுக்கும் கண்ணில்லை என்று .... :(

 அவர் போய் விழுந்ததுக்குக் கடவுள் என்ன செய்கிறது?  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொத்தர் விளையாட்டுக்களில்... உலகம் பூராகவும்... ஒரு மாஃபியா கும்பலே... இயங்கி வருகின்றது.
இதனையிட்டு நம்மவர் விழிப்புக் கொள்வது, மிக அவசியம்.
 
முதலில், நாம்.... சீட்டிழுப்பில்.... ஒரு சீட்டு, ஒரு டொலருக்கு  வாங்கும் போது... லட்சாதிபதியானால்... அதை கட்டி ஆளும் தகுதி இருக்கா? என்பதை.
 
பல ஏழைகள்... தான் இந்த சீட்டிழுப்பில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு படிப்பறிவு, இல்லாததால்.... ஏமாற்றுபவர்கள் அதிகம். அதே... நிலையில் தான்.... ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் உள்ளன.
 
இது ஒரு.... பயங்கர, சுத்துமாத்து வேலை.... இதன் பின்... பெரிய கும்பலே.... இயங்கிக் கொண்டிருக்கின்றது.
எமது, ஒரு ஐரோவை... சூதாட்டத்தில் விட்டு, லட்சாதிபதியாக கனவு கண்டால்... இருக்கிற உயிருக்கு... உத்தரவாதமில்லை. :rolleyes:

  • தொடங்கியவர்

100 % உண்மை. 

வங்கிக் கணக்கில் பணம்

பரிசு பணத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியவருக்கு ஒரு கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதாக உண்ணிக்கு தகவல் கிடைத்தது.

உயிரிழந்த உண்ணி

வங்கியில் இருந்து பணத்தை எடுக்கப் போகும் முன்பாக அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்கப் போனார் உண்ணி. ஆனால் பரிதாபம், எதிர்பாராமல் உயிரிழந்து விட்டார் உண்ணி.

வாய்க்காலில் மிதந்த பிணம்

நீண்ட நேரமாகியும் உண்ணி வீடு திரும்பாத காரணத்தால் அவரை தேடி பெற்றோர்களும், உறவினர்கள் அங்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாய்க்காலில் உண்ணி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

விபத்தாகவோ அல்லது கொலையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணி, ஏன்..  வங்கியில்.... தனிய காசு எடுக்கப் போனவர்?
 
  • கருத்துக்கள உறவுகள்

உண்ணி, ஏன்..  வங்கியில்.... தனிய காசு எடுக்கப் போனவர்?

இந்தக்காலத்தில ஆரை நம்பி கூட்டிக்கொண்டுபோகமுடியும் மனிசர்..? அதுதான் உன்னியும் தனிய போக முடிவெடுத்திருக்கிறார் போல...தனிய வாழ முடிவெடுத்த உன்னி இறந்து போனது சங்கத்துக்கு பேரிழப்பு.. :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்தில ஆரை நம்பி கூட்டிக்கொண்டுபோகமுடியும் மனிசர்..? அதுதான் உன்னியும் தனிய போக முடிவெடுத்திருக்கிறார் போல...தனிய வாழ முடிவெடுத்த உன்னி இறந்து போனது சங்கத்துக்கு பேரிழப்பு.. :(

இந்தியாவில்.... உள்ள காசுத் தாள்களில்... ஆயிரம் ரூபாய் தான்.... உயர்ந்த தொகை. அதை.... ஒரு கோடி ரூபாய்க் கணக்கில்,  நிறுத்து வைத்துப் பார்த்தாலும்.... 100 கிலோவுக்கு  மேல்... அந்தக் காசு வரும்.

அதை தனியத் தூக்க... உன்னிக்கு எப்படி, தெம்பு வந்தது.

இப்ப... உன்னியும் இல்லை, காசும் இல்லை.

எல்லாத்துக்கும்.... நாமம் போட்டுட்டாங்கள்.

பாவம்... உன்னியின், குடும்பம்.

தமிழ்சிறி அண்ணாவின் கணக்கை பாத்து எனக்கு மயக்கம் வருது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான  திடீர்பணவரவு

உடலளவிலும் ரத்த ஓட்டத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.

எனவே அவரது சாவுக்கு அதுவே யமனாகிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் இந்த லாட்டரி விழாமல் இருந்திருந்தால் உண்ணி உயிருடன் இருந்திருப்பார் போல இருக்கு .. 

  • கருத்துக்கள உறவுகள்

--"வங்கியில் இருந்து பணத்தை எடுக்கப் போகும் முன்பாக அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்கப் போனார் உண்ணி. ஆனால் பரிதாபம், எதிர்பாராமல் உயிரிழந்து விட்டார் உண்ணி"-- வங்கியில் பணம் அப்படியே இருக்கும் என்று நினைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் உன்னியின் மரணத்திற்குகுப் பின்னால்  ஒரு மர்மம் இருக்கின்றது.

பாவம் உன்னி கொடுத்து வைக்கவில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்ணிக்கு அதில வேற என்னும் திருமணம் வேறு நடக்கவில்லையாம்.  :( 

நிறைவேறாத ஆசையோடு இறந்து விட்டார் இனி ஆவியாக அலையப்போகின்றார்.  :o

இந்தியாவில்.... உள்ள காசுத் தாள்களில்... ஆயிரம் ரூபாய் தான்.... உயர்ந்த தொகை. அதை.... ஒரு கோடி ரூபாய்க் கணக்கில்,  நிறுத்து வைத்துப் பார்த்தாலும்.... 100 கிலோவுக்கு  மேல்... அந்தக் காசு வரும்.

அதை தனியத் தூக்க... உன்னிக்கு எப்படி, தெம்பு வந்தது.

இப்ப... உன்னியும் இல்லை, காசும் இல்லை.

எல்லாத்துக்கும்.... நாமம் போட்டுட்டாங்கள்.

பாவம்... உன்னியின், குடும்பம்.

10,000 ஆயிரம் ரூபாய் தாள்கள் 100 கிலோ வருவதற்கு ஒரு ஆயிரம் ரூபாய் தாள் 10 கிராம் கனமாக இருக்க வேண்டும். தாள்களை கட்டு கட்டாக இணைக்கும் போது பயன்படுத்தும் பட்டியை சேர்த்தாலும் ஒட்டு மொத்தமாய் அவ்வளவு கனதி வராது. ஒரு கோடி தாள்களாக சீராக ஒழுங்கு செய்து ஒரு சூட்கேசில் (அல்லது இரண்டு) அடுக்கினால் ஒருவர் தூக்கி கொண்டு போககூடிய கனமே.

ஆனால், வங்கியில் ஒரு போதும் ஒரு கோடி ரூபாயை தாள்களாக காசாக ஒரே தரத்தில் கொடுக்க மாட்டார்கள். :D

நிம்மதியாக போய் சேர்ந்துவிட்டார் இனி வருங்காலங்களில் வரும் பிடுங்குப்பாட்டை பார்க்காமல்

  • கருத்துக்கள உறவுகள்

10,000 ஆயிரம் ரூபாய் தாள்கள் 100 கிலோ வருவதற்கு ஒரு ஆயிரம் ரூபாய் தாள் 10 கிராம் கனமாக இருக்க வேண்டும். தாள்களை கட்டு கட்டாக இணைக்கும் போது பயன்படுத்தும் பட்டியை சேர்த்தாலும் ஒட்டு மொத்தமாய் அவ்வளவு கனதி வராது. ஒரு கோடி தாள்களாக சீராக ஒழுங்கு செய்து ஒரு சூட்கேசில் (அல்லது இரண்டு) அடுக்கினால் ஒருவர் தூக்கி கொண்டு போககூடிய கனமே.

ஆனால், வங்கியில் ஒரு போதும் ஒரு கோடி ரூபாயை தாள்களாக காசாக ஒரே தரத்தில் கொடுக்க மாட்டார்கள். :D

mk3okqjdgbe_small.jpg

ஊரில் புழங்கும் காசுத் தாள்கள் எல்லாம்..... சலவை நோட்டுகள் இல்லையே...

மீன் சந்தை, மரக்கறி சந்தை, பேக்கரி, சாப்பாட்டுக்கடை என்று... ஒரு ரவுண்டு போய்வர..... ஒரு தாளில் 10 கிராமுக்கு மேல்..... ஊத்தை சேர்ந்துவிடும். :D

லொட்டோ அரசுகளால் இயக்கபடுவது .இதில் வரும்பணத்தை கொண்டு பல நல்லவிடயங்கள் செய்கின்றார்கள் பாடசாலைகள்,வைத்தியசாலைகள் பராமரிப்பது போன்றவை முக்கியமானவை.

சிறியதாக குளறுபடிகள் எதுவும் நடந்திருக்கலாம் அதற்காக முடிந்தவரை வெளிப்படைத்தன்மையாகாவே பல விடயங்களை நடாத்திவருகின்றார்கள் .

வர வர யாழில் ஒரு அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டு போகின்றது போலுள்ளது .

Ever wonder where the money goes?

This year, OLG generated $3.7 billion* in economic activity in Ontario.

red_circle.png

includes:

  • $120 million – Gaming proceeds distributed through the Ontario Trillium Foundation to local and provincial charities
  • $10 million – Support for amateur athletes through the QUEST FOR GOLD program
  • $1.7 billion – Hospitals, health-related programs and other provincial priorities
green_circle.png

includes:

  • $62.6 million – Goods and services purchased from local Ontario businesses to support OLG activities**
  • $950.6 million – Payroll for 17,850 employees across the Province (includes employees of OLG’s Resort Casinos and the Great Blue Heron Slot Machine Facility)
  • $112.3 million – Payments to municipalities that host OLG gaming facilities, including Resort Casinos and Charitable Gaming Centres
  • $347.3 million – Payments to Ontario’s horse racing industry***
  • $222.2 million – Commissions paid to lottery retailers
blue_circle.png

includes:

  • $53.9 million – Partnering with the Province in the education, research, prevention and treatment of problem gambling
  • $2.3 million – Sponsorship of community festivals and events
  • $8.4 million – Charitable Gaming proceeds distributed to participating local charities

In addition, OLG awarded over $1.7 billion in lottery prizes to our players.

*based on the period April 1, 2011 to March 31, 2012

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் வெளிநாடுகள்ள இந்தியாவில் இது ஒரு மோசாடியாகவே பல தனியார்களால் நடத்தப்பட்டு வருவதும் தமிழ்நாட்டில் தடையில் இருப்பதும் எல்லாம் தெரிந்த உங்களுக்கு தேயாமல் இருப்பது ஆச்சரியமே...

CHENNAI: The Jayalalithaa government on Wednesday night banned sale of all lotteries, including online, within the territory of the state.

The ban would cover sale of all lotteries, both paper and online, organised, conducted or promoted by every state, including Tamil Nadu, a home department notification said.

It said, "In exercise of the powers conferred by Section 5 of the Lotteries (Regulation) Act, 1998 (Central Act 17 of 1998), the governor of Tamil Nadu hereby prohibits the sale of tickets within the territory of Tamil Nadu of all lotteries, organised, conducted or promoted by every state, including the state of Tamil Nadu."

Times of India

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.