Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தேர்தலை எதிர்க்கப்போவதாக முஸ்லீம்கள் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

risaarth%20pathiyuthiin.jpg

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பூரணமாக மீள்குடியேற்றப்படாமல் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என அரச அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களை பூரணமாக குடியேற்றாமல் வட மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம் பிரதிநிதிதித்துவம் இழக்கப்படும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர்;.எஸ்.ஹமீட் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதனால் முஸ்லிம்களை பூரணமாக குடியேற்றிவிட்டே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தமது கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கொழு;மிபினில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எஸ்.ஹமீட்,வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முன்னர் புத்தளம் மாவட்ட வாக்களர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தனர். எனினும் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை எங்கும் இல்லை. இவ்வாறான நிலையில் தேர்தல் நடத்தினால் இந்த மக்கள் வாக்களிக்க முடியாமல் போகும். இதனாலேயே வடக்கில் முஸ்லிம்கள் பூரணமாக மீள்குடியேற்றப்படாமல் வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்றார்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20451:2013-04-23-14-05-19&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 இதற்கு... தமிழனாகப் பிறந்து... தமிழனிடம்... கொள்ளையடிக்கும் ஒட்டுக்குழுக்கள் தான்... பதில் சொல்ல வேண்டும். :rolleyes: 
நாங்கள் சொன்னால்...... புலி சொல்லுது,  என்று.... "கெயார்புள்ளாய்"  இருந்திடுவார்கள். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

 இதற்கு... தமிழனாகப் பிறந்து... தமிழனிடம்... கொள்ளையடிக்கும் ஒட்டுக்குழுக்கள் தான்... பதில் சொல்ல வேண்டும். :rolleyes: 

நாங்கள் சொன்னால்...... புலி சொல்லுது,  என்று.... "கெயார்புள்ளாய்"  இருந்திடுவார்கள். :D  :lol:

யாரோ  எழுதியதாக ஞாபகம்

இவர்களுடன் சேர்ந்து தான் தமிழீழம் அமைக்கலாம் என்று............ :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ  எழுதியதாக ஞாபகம்

இவர்களுடன் சேர்ந்து தான் தமிழீழம் அமைக்கலாம் என்று............ :(

இவங்களோடு சேர்ந்து தமிழ் ஈழம் எடுத்தால் குரங்கு அப்பம் பிரித்தது போலதான் ஆகும் .

இந்த முட்டாள் எல்லா முஸ்லிம்களும் குடி ஏறிய பின்னர்தான் தேர்தல் வைக்கவேண்டும் என்று நினைக்கின்றார் அதற்கிடையில் சிங்களவர் அதற்க்கு மேல் குடி அமர்த்தப்பட்டு அவர்கள் தேர்தலில் பெரும்பான்மை வகிப்பார்கள் என்பது இவருக்கு புரியவில்லையா  

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ  எழுதியதாக ஞாபகம்

இவர்களுடன் சேர்ந்து தான் தமிழீழம் அமைக்கலாம் என்று............ :(

 

ஆரப்பா... சொன்னீங்கள்?

தொப்பி... அளவானவர்கள், வந்து பதிலைச் சொல்லுங்கப்பா....smileygarden.de_Ganzschoenkalt.gif

எதோ தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது மாதிரி ?

முஸ்லிம்களை துரத்திவிட்டு பின்னர் தமிழன் நல்ல ஒற்றுமையாக போராடி இப்ப நாடு வேறு எடுத்துவிட்டான் .

உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை தமிழனுக்கே என்றுமே விடிவில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதோ தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது மாதிரி ?

முஸ்லிம்களை துரத்திவிட்டு பின்னர் தமிழன் நல்ல ஒற்றுமையாக போராடி இப்ப நாடு வேறு எடுத்துவிட்டான் .

உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை தமிழனுக்கே என்றுமே விடிவில்லை .

அதுதான் இப்போது நாங்கள் ஒதுங்கி நிற்கிறம் நீங்கள் தமிழ் ஈழத்தை பெற்றுத்தாருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

எதோ தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது மாதிரி ?

முஸ்லிம்களை துரத்திவிட்டு பின்னர் தமிழன் நல்ல ஒற்றுமையாக போராடி இப்ப நாடு வேறு எடுத்துவிட்டான் .

உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை தமிழனுக்கே என்றுமே விடிவில்லை .

இதை அர்யூன் சொல்லக்கூடாது........ :(  :(  :(

யாழில் வேண்டுமென்றே முஸ்லீம் மக்கள் குடியேறாமல் இருக்கின்றார்கள். இதில் சிங்கள அரசும் சில முஸ்லீம் தலைவர்களும் இணைந்து நாடகம் ஆடுகின்றார்கள்.

 

அதேவேளை வன்னியில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தாரளமாக குடியேறுகின்றார்கள்.

நான் இன்னொரு திரியில் எழுதியதை இங்கும் இடலாம் என நினைக்கின்றேன்.

 

 

--------------------------------

 

சிங்களம் தன் அடுத்த கட்ட பிரித்தாளும் சூட்சியை, தமிழர்களில் இருந்தும் முஸ்லிம்களில் இருந்தும் பொறுக்கப்பட்ட சுயநலமிகளைக் கொண்டு நன்கு திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றது.

 

1. முல்லைத்தீவு, மன்னார் பிரதேசங்களில் ரிசாத், முனைஸ் பாறுக் ஆகியோர் உட்பட இன்னும் சிலரைக் கொண்டு தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் முஸ்லிம்களை குடியேற்றி இனப் பரம்பல் விகிதாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வருதல். இதன் மூலம் தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுடன் மோத விடுவதும், இருவருக்குமான இடைவெளிகளை இன்னும் அதிகரிப்பதும்.

 

2. முஸ்லிம்களும் தமிழர்களும் செறிந்து வாழும் கொழும்பு, கிழக்கு போன்ற பிரதேசங்களில் பொதுபல சேனாவிற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சிகள் எடுத்து முஸ்லிம் மக்களை தமிழ் மக்களுடன் மோத விட்டு இரு இனங்களும் இடையில் மேலும் பிரிவினைகளை ஏற்படுத்துதல்.

 

இந்த இரண்டு ஒன்றுக்கொன்று வேறுபாடான செயல்கள் மூலம் சிங்களம் தன் பொது இலக்கான பேரினவாத அரசியலை மேலும் மேலும் தீவிரமாக்கிக் கொண்டு செல்கின்றது. இதனை முறியடிக்கக் கூடிய தெளிவான சிந்தனையுடைய தமிழர் தலைமையோ முஸ்லிம் தலைமையோ இன்று இலங்கையில் இல்லாமல் இருப்பதும், இதனைப் புரியாது முஸ்லிம் அடிப்படைவாதிகள் தமிழர்களுக்கு எதிராக செயல்களை ஊக்குவிப்பதும், தமிழ் இனவாதிகள் பொது பல சேனாவின் செயல்களை ஆதரிப்பதும் மிகவும் மோசமான விளைவுகளை சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இலங்கையில் தோற்றுவித்து ஈற்றில் முற்று முழுதான இனவழிப்பு நடைபெறப் போகின்றது.

 

தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை.  அதனால் இந்த எஜமானில்லாதவர்களை ஊளையிட விட்டிருக்கு. இதை சாட்டாக வைத்து தேர்தலை(தேவைப்பட்டால்) இல்லாமல் செய்துவிடுவார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊதுராங்க ஊதுராங்க .....புகை கூட வருதில்ல ....

பத்தவைக்க மறந்துட்டாங்களோ...  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை 2 பேர் ரிசாத்துக்கு கொள்ளிக்கட்டை கொடுக்கிறாக்கள்....இவைக்கு இனம் மொழி பற்றி அக்கறை இல்லை....புலி எதிர்ப்பு மட்டுமே குறிக்கோள்....சோனிகளும் சிங்களவனும் சேர்ந்து கிழக்கு னிலைமைக்கு கொண்டுவர பாடு படுகிறார்கள்....இதையறியாமல்..இவை சுங்கான் பத்தவைக்க கொள்ளி குடுக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு எதிர்ப்புக்கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

 வன்னியில் மீள்  குடியேற்றம் என்ற போர்வையில் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட அனைத்து 

சிங்களவர்களும் முஸ்லீம்களும்  முதலில் வெளியேற்றப்பட வேண்டும்

என்ற கோரிக்கையுடன் நானும் அதனை எதிர்க்கின்றேன்   

 

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான வார்த்தை வாத்தியார்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனையைக் கையாள நல்ல வழி இருக்குது. வடக்குக் கிழக்கு தமிழ் மக்களும் மலைய மக்களும் கருத்தடை சாதனங்களைப் பாவிப்பதை விடுத்து குடும்பத்திற்கு குறைந்தது 5 பிள்ளை பெற வேண்டும். 5 பிள்ளை பெறுபவர்களுக்கு குழந்தைக்கு ஒரு இலட்சம் ரூபா என்று வங்கியில் நிரந்தர வைப்புச் செய்ய புலம்பெயர் தமிழ் மக்கள் பங்களிக்க வேண்டும்.

 

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களின் குடித்தொகையைப் பெருக்க புத்தளத்தில் இருந்த முஸ்லீம்கள் மத்தியில்.. சந்திரிக்கா அம்மையார் காலத்தில் அஷ்ரப் இலவசத் திருமணங்களைச் செய்து வைத்ததோடு.. குடும்பத்திற்கு 20,000 ரூபாய்கள் (அன்றைய மதிப்பில்) மற்றும் வீட்டு வசதி.. வழங்கி முஸ்லீம்கள் நிறைய குழந்தை குட்டி பெற ஊக்குவித்தார். அதன் விளைவு 100,000 மாக வெளியேறிய முஸ்லீம்கள்.. 2 இலட்சத்துக்கும் அதிகமாக திரும்பப் போகிறார்கள். அதற்கு குடியிருக்க மேலதிக நிலங்களும் அவசியம். அதை தமிழர்களிடம் தட்டிப்பறிக்கக் கூடிய ஏது நிலை இன்றுள்ளதால்.. சிங்களவர்களும் தொல்லை தங்களை விட்டு வடக்கு நோக்கிப் போனால் போகட்டும் என்று.. இவற்றை ஊக்குவிப்பதால் தமிழர்களின் நிலமும் தேசமுமே இந்த சமூகத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகின்றது. இது முஸ்லீம் காங்கிரஸின் திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்புச் செயற்பாடாகும்.

 

இதனைச் சரிக்கட்ட தமிழர்கள் தரப்பிலும்.. நிறைய பிள்ளைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பதோடு அடுத்த 5 ஆண்டுகளில் வடக்குக் கிழக்கு மற்றும் மலையகத்தில்.. தமிழர்களின் சனத்தொகையை குறைந்தது ஒரு மடங்கால் ஆவது அதிகரிக்கச் செய்ய வேண்டும். விகிதாசார தேர்தல் முறையில் இது மிகுந்த செல்வாக்குச் செய்யும்..! நிலம் பறிபோவதையும் தடுக்கும்..! இது தேர்தலுக்காக அல்ல.. நில இருப்புக்கான ஒரு உக்தியாக எனிக் கையாளப்படுவது அவசியமாகிறது. :icon_idea:

Edited by nedukkalapoovan

பொதுபலசேனாவை விட த.தே.கூ மோசமாம்: றிசாட் பதியூன்

 

Risad%20pathithine.jpg
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து முஸ்லிம்களையும் மீள்குடியேற்றாமல் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அதனை தமது கட்சி முற்றாக எதிர்க்கும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

அமைச்சர் றிஸாத் பதியுதீனின் தலைமையிலான இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் இது குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் மேலும் கூறியதாவது,

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் மீளக்குடியமர்த்திய பின்னரே அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென நாம் ஜனாதிபதியை கோரவுள்ளோம்.

பொதுபல சேனாவை விட மிக மோசமான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடபகுதி முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகிறது. பொதுபல சேனா அறிக்கைகளுடன் பெரும்பாலும் நின்று விடுகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்தையும் செய்து காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.