Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச அமைச்சர் டக்ளஸிற்கு எதிராக துண்டுபிரசுரங்கள் விநியோகித்தவர்கள் மீது யாழில் தாக்குதல்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர்  புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இவர்கள் இன்று காலை முதல் விநியோகித்துள்ளனர். 

 

பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

நான்கு மோட்டார் சைக்கிள்களில் தலா மூவராக சென்றவர்களே தாக்குதல்களை நடத்தியதாக சகாதேவன் தெரிவித்தார்.

தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பதாக வாகன தொடரணியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியால் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

கிரிக்கெட் மட்டைகள் மற்றும் மண்வெட்டி பிடிகளால் தாக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர்  புஸ்பராஜா புவிலன் ஆகிய இருவரும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கமானது வடக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91472/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக்கதின் உச்சம்........

இதுதான் செயலாளர் நாயகத்தின் சனநாயகம். ஒரு சுதந்திரமான தேர்தல் ஒன்று அல்லது சுதந்திரமான சூழ்நிலை ஒன்றின் போது இவரால் தேர்தலிலோ அல்லது மக்கள் முன்போ எக்காலத்திலும் நிற்க முடியாது.

இதை எக்காலமும் நியாயபடுத்தமுடியாது ,

ஆனால் மூன்றாம் உலக நாடுகள் எங்கும் இவை நடைபெறுகின்றன .

டக்கிளஸ் கடைசி அடியோடுவிட்டார் புலிஎன்றால் வெடிதான் .ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அவர்கள் பயந்த அளவிற்கு எவரும் பயப்படவில்லை ..

சகாதேவன் போன்ற போராளிகளே எங்களுக்கு இப்பொழுது தேவை. இவரைப் போன்று பல பேர் வீதியில் இறங்குகின்ற இப்பொழுது ஈபிடிபியினரால் இப்படி அடாவடித்தனம் செய்ய முடியாது போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாதேவன் அடிவாங்கும்போதும் சிரித்துக்கொண்டிருந்தாராம்.. உயிர் போகாது என்கிற களிப்பில்.. இதே பிரிட்டிஷ்காரர் காலமென்றால் தூக்கில் போட்டிருப்பாரகளாம்.. :D

சகாதேவன் அடிவாங்கும்போதும் சிரித்துக்கொண்டிருந்தாராம்.. உயிர் போகாது என்கிற களிப்பில்.. இதே பிரிட்டிஷ்காரர் காலமென்றால் தூக்கில் போட்டிருப்பாரகளாம்.. :D

ஏன் அவருக்கு யாரும்  உடம்பில் தொட்டால் கூச்சம் ஜாஸ்தியா ...இசை 

:lol:  :D

இதை எக்காலமும் நியாயபடுத்தமுடியாது ,

ஆனால் மூன்றாம் உலக நாடுகள் எங்கும் இவை நடைபெறுகின்றன .

டக்கிளஸ் கடைசி அடியோடுவிட்டார் புலிஎன்றால் வெடிதான் .ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அவர்கள் பயந்த அளவிற்கு எவரும் பயப்படவில்லை ..

super appu

உங்க காமெடி ரொம்ப சுப்பர் அப்பு

இதை எக்காலமும் நியாயபடுத்தமுடியாது ,

ஆனால் மூன்றாம் உலக நாடுகள் எங்கும் இவை நடைபெறுகின்றன .

டக்கிளஸ் கடைசி அடியோடுவிட்டார் புலிஎன்றால் வெடிதான் .ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அவர்கள் பயந்த அளவிற்கு எவரும் பயப்படவில்லை ..

 

மூன்றாம் நாடுகளில் யாரும் எதுவும் செய்யலாம். அர்சுன்னு எதிரராக எழுகிறார்கள் என்பதலாக்கும்  புலிகள் செய்தால் மட்டும் குற்றம்.  (மற்றும் படி  மிக்க ஜனநாயக்மான PLOTE ம் போட்டுக்கொடுபட்டது)

 

 

 

டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து துண்டுபிரசுரம் விநியோகித்தவர்கள் மீது தாக்குதல் - அமைச்சர் பார்த்து சென்ற பின் சம்பவம்

ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சரும் ஆகிய டக்ளஸ் தேவானந்தா மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் வடபகுதியில் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டு வருகிறது. இந் நிலையில் இன்று யாழ் கச்சேரி முன்பாக துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்த போது அவ் வீதி வழியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றுள்ளார்.

அவர் சென்று சிறிது நேரத்தின் பின் மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியபடி கொட்டன்கள் மற்றும் பொல்லுகளால் அவ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

...

இதனால் அவர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்குள் புகுந்த போதும் துரத்திச் சென்று அங்கு வைத்தும் தாக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தாக்குதலில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் பொருலாளர் புஸ்பராசா புவிலன் (வயது 26) காயமடைந்த சிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வீ.சகாதேவனை தொடர்பு கொண்டு கேட்ட போது,

இன்று மாலை நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அராஜகங்களை கண்டித்து யாழ் பஸ் நிலையம் அதனைச்சூழவுள்ள பகுதிகளில் துண்டுப்பிரசுர விநியோகம் செய்தோம். இதனைத் தொடர்ந்து யாழ் கச்சேரிப் பகுதியில் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதிக்கு நான்கு மோட்டார் சைக்கிள்களில் கத்திகள், பொல்லுகள், கொட்டன்கள் என்பவற்றுடன் வந்த நபர்கள் எம்மைத்தாக்க முற்பட்டனர். பின்னர் நாம் கச்சேரி வளாக மதில்வழியாக தப்ப முயன்ற போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பேரைக்கூறிக்கொண்டு அமைச்சரின் யாழ் மாவட்டத்திற்குள் என்ன விளையாட்டா காட்டப் பார்க்கிறீங்கள் என்றதுடன், தகாத வார்த்தைகளையும் பேசி, கச்சேரி வளவிற்குள் வைத்து எம்மை தாக்கத் தொடங்கினார்கள்.

மண்வெட்டியினால் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட அமைப்பின் பொருலாளர் திரு.புஸ்பராசா புவிலன் வயது 26 கச்சேரிக்குள் வைத்து மயக்கமான நிலையில் அம்புலன்ஸ் வாகனத்தன் மூலம் யாழ் போதனா வைத்தியசாலையில் கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெறுவதற்கு ஏறத்தாள அரை மணித்தியாலம் முன்னதாக அப்பகுதியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எம்மை நன்கு அவதானித்தவாறு சென்றிருந்தார். என்பதையும் இச்சம்பவத்தோடு தொடர்பு படுத்தி பார்க்கவேண்டியுள்ளது. எனவும் தெரிவித்தார்.

மேலும் பார்க்க
225788_453127848106178_1408180648_n.jpg
944201_453127878106175_1154761868_n.jpg
943498_453127891439507_418178941_n.jpg
945328_453127901439506_496169335_n.jpg
321384_453127924772837_1760482771_n.jpg
945428_453127954772834_1343201449_n.jpg

 

நாம் தமிழர் ஜெர்மனி facebook

 

இதை எக்காலமும் நியாயபடுத்தமுடியாது ,

ஆனால் மூன்றாம் உலக நாடுகள் எங்கும் இவை நடைபெறுகின்றன .

டக்கிளஸ் கடைசி அடியோடுவிட்டார் புலிஎன்றால் வெடிதான் .ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அவர்கள் பயந்த அளவிற்கு எவரும் பயப்படவில்லை ..

 

இப்ப புலிகள் இருந்து இருந்தால்   சகாதேவனை ஈ பி டி பி போட்டு தள்ளி இருப்பார்கள் ஏன் எனில்  புலிகள் செய்த  கொலைகளால் இப்படியான கொலைகள்  மரைபட்டு போகும் அல்லது  கண்டிக்க  முடியாமல் போகும்....

இதை எக்காலமும் நியாயபடுத்தமுடியாது ,

ஆனால் மூன்றாம் உலக நாடுகள் எங்கும் இவை நடைபெறுகின்றன .

டக்கிளஸ் கடைசி அடியோடுவிட்டார் புலிஎன்றால் வெடிதான் .ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அவர்கள் பயந்த அளவிற்கு எவரும் பயப்படவில்லை ..

 

இவர் தனது பொண்டாட்டியிடம் அடி வாங்கினாலும் புலியில் தான் பழியை போடுவார். ஒருவகை மனநோய் இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.