Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுவின் கருத்து பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்டுவிட்டது என்றுதான் நானும் நினைக்கிறேன்.

  • Replies 64
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி இப்படி கேவலப்பட்டு நாளுக்கு நாள் இறப்பதற்கு அன்றே குப்பி கடித்து இறந்திருக்கலாம். 

அப்படி இறந்திருந்தால் எப்படி போராடி இறந்தவர்களை  பலர் மறந்தார்களோ அப்படியே மறந்திருப்பார்கள்.

தன் இனம்வாழ தங்களை அர்ப்பணித்தவர்களின் துயர நிலை ..  :(   

உங்கள் வேதனை புரிகிறது. சுதந்திரப் போராளிகளுக்கு.. சரணடைதல் வாழ்க்கை என்பது உண்மையில் மிகக் கசப்பான ஒன்று. அதையே தமிழினி உட்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் அனுபவிக்கின்றனர்.

குப்பி கடித்து வீரமரணம் அடைந்தவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்த அல்லது தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில் அதைச் செய்தார்கள். அந்தத் தியாகங்களே போராட்டத்தை இத்தனை தூரம் வலுப்படுத்தியும் நின்றது. அவர்கள் மறக்கப்படவோ வெறுக்கப்படவோ முடியாத அற்புதப் பிறவிகள்..!

ஆனால் முள்ளிவாய்க்கால் என்பது அத்தியாயம் ஒன்றுக்கான.. முடிவுரை என்று ஆன பின்.. இவர்களைக் குப்பி கடிக்க தலைமை கேட்டும் இருக்காது.. அப்படிச் செய்யச் சொல்ல வேண்டிய தேவையும் இருந்திருக்காது. இவர்கள் எப்படியாவது மீண்டு கொள்வார்கள் என்ற நம்பிக்கையே இருந்திருக்கும். ஆனால் மீட்பர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில்... இவர்கள் விதி மாறிப் போய்விட்டது. இன்னும் பலவற்றை சகித்துக் கொண்டு.. சோரம் போகாமல்.. இலக்கு நோக்கிய அடுத்த அத்தியாயத்தில் பயணிப்பதே ஒரு போராட்ட இனத்திற்கு அவசியம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் போன்ற தியாகிகளுக்கு முன்னால் தமிழினியென்ற போராளி இப்படித்தான் கேட்க வேண்டுமென்ற விதியையும் இதே தமிழர்கள் எழுதி வைத்தோம். உங்கள் கூற்றுப்படி இறுதியில் சரணடைந்த எல்லாரும் குப்பியடித்திருக்க வேணும். அப்பதான் உங்களுக்கு உணர்வு பொங்கும்.

இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும் ஆனால் உங்களது எழுத்துக்கு என் மனதில் பட்ட பதில் இது.

கருத்தை முழுமையாக படிக்காது தவறாக புரிந்து கொண்டு அவசரப்பட்டு என்மீது தயவு செய்து பழிபோடாதீர்கள். 

தமிழரசு தமிழினியை சாக சொல்லவில்லை,  உயிரோடு இருக்கும் போராளியை நாங்கள் கேவலப்படுத்துகின்றோம் என்ற பச்சாதாபத்தில் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

தமிழினி அரசியலில் ஈடுபட்டு தன்னால் இயன்றதை ஆத்ரவில்லாதவர்களுக்கு செய்தால் அதுவும் நல்லதே

எனது கருத்தை சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி 

தமிழரசுவின் கருத்து பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்டுவிட்டது என்றுதான் நானும் நினைக்கிறேன்.

நீங்கள் நினைப்பது சரி 
புரிந்தமைக்கு நன்றி இசைக்கலைஞன். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி இப்படி கேவலப்பட்டு நாளுக்கு நாள் இறப்பதற்கு அன்றே குப்பி கடித்து இறந்திருக்கலாம். 

தமிழரசு நீங்கள் இப்படி எழுதியதன் பொருள் என்ன ?

கருத்தை முழுமையாக படிக்காது தவறாக புரிந்து கொண்டு அவசரப்பட்டு என்மீது தயவு செய்து பழிபோடாதீர்கள். 

நீங்கள் எழுதிய 3வரிக்கருத்தை வாசித்துவிட்டுத்தான் தமிழரசு பதில் எழுதினேன்.

தமிழினி குப்பிடியத்திருக்கலாம் என்று எழுதியது உங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடெனில் அதனை எம்போன்ற சாதாரண வாசகர்களுக்கு புரியுமாறு எழுதுவதுதான் கருத்துமயக்கத்தை தவிர்க்கும்.

இந்தச் செய்தியை வெளியிட்ட ஊடகப்பெருச்சாளிகள் செய்தி எழுதிய மூலம் யாதெனில் :-

இலங்கை வானொலியொன்றின் செய்தியில் அண்மையில் சொல்லப்பட்டிருந்தது. அதாவது தமிழினியும் சிலவேளை எலெக்சனில் நிற்கக்கூடுமென்று. அந்த ஊடகம் தனது செய்தியில் கூறிய ஒன்றை எங்கள் அதிமேதாவி ஊடகவியாபாரிகள் தமிழினி தேர்தலில் நிற்கப் போகிறார் என்று கதைவசனம் எழுதி பரபரப்புச் செய்தியாக்கிவிட்டார்கள்.

ஊடகம் உண்மையைச் சொல்லுமென்ற நம்பிக்கை இத்தகைய வியாபாரிகளால் விற்கப்படுவது மட்டுமன்றி குறித்த போராளிகளையும் மனவுளைச்சலுக்கு ஆளாக்குகிறது.குறித்தவர்களின் குடும்பங்களையும் துன்பத்துக்கு உள்ளாக்குகிறது.

தமிழ் உறவுகளிடம் நிதி திரட்டி முன்னாள் போராளிகளை பார்க்கும் உங்களின் தியாகத்துக்கு முன்னால் உடன் பிறப்பையும் பல உறவுகளும் இழந்த எனக்கு என்ன தகுதி இருக்கிறது அதனால் இந்த திரிக்கு உங்களின் கருத்துக்கு பதில் கருத்து உங்களுக்கு எழும் தகுதி எனக்கு இல்லை என்பதனால் நிறுத்தி கொள்கின்றேன்.   :(

உங்கள் தியாகத்தக்கு முன்னால் நானொன்றையும் இழக்கவில்லை தமிழரசு. உங்களைப்போல இந்த விடுதலைப்போராட்டத்தில் எனக்கும் இழப்புகளும் வலிகளும் நிறையவே. உங்களிடம் தகுதி கேட்கவில்லை. ஒரு போராளியை குப்பியடித்திருக்கலாம் என்று கேட்கிற தைரியம் எனக்கில்லை.

கருத்தொன்றை புரியும் வகை எழுதுங்களென்ற வேண்டுதலுக்கு உங்கள் கருத்து இதுதானோ ?

பி.கு :- ஈழவிடுதலைப்போராட்டம் உங்கள் சொத்திலும் எனது சேமிப்பிலும் நடக்கவில்லை. உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழரின் நிதியிலும் உழைப்பிலும் உறுதியிலுமே நடந்தது. இனியும் அது தனது பாதையிலும் இப்படித்தான் பயணிக்கவுள்ளது.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் போன்றவர்கள் வெற்றி பெறுவதை விட, முன்னாள் போராளிகள் மாகாணசபைக்கு தெரிவாவது நல்லது. ஆளும் கட்சி வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சி வரிசையில் முன்னாள் போராளிகள்... நன்றாகத்தானே இருக்கிறது!!

சிந்தனையின் பயணம் விவேகமான பாதைகளைத் தேடுவது ஒரு மடங்கு ஆச்சரியமானது. ஆனால் அது எவரும் அறிந்திராத பாதைகளைத் தேடுவதே பலமடங்கு ஆச்சரியமானது!

"இலங்கை வானொலியொன்றின் செய்தியில் அண்மையில் சொல்லப்பட்டிருந்தது. அதாவது தமிழினியும் சிலவேளை எலெக்சனில் நிற்கக்கூடுமென்று."

அரசவானொலி இதை செய்ய முதல் அரசு தமிழினியை எப்படி நடத்தியது என்பது நமக்கு தெரியாது.  நிச்சயம் அரச வானொலியை காப்பற்ற வேண்டிய அளவுக்கு குறைவாக இருக்காது.  ஊடகம் பெருச்சாளியாக மாறும் போது அரச ஊடகம் அப்பவியாக மாறி சிறையில் இருப்பவர் தேர்தலில் நிற்கலாம் என்று கூற அதை பின்னர் அரச அதிகாரிகள், அது நம்ம "லிட்டில் பேபி" இப்படிதான் சில வேலைகளில் தெரியாத்தனமாக கேட்ட வார்த்தைகளும் பேசிப்போடுகிறான என்று  மறுக்கிறார்கள்.  இதை விட அரச வானொலிக்கு செய்தியில் வாசிக்க ஒன்றும் கிடைக்காமை கவலையே.  வரிப்பணந்தில் வம்பு என்று இதை விட இருந்தால் அதையும் கேட்க ஆவல்தான்.

1.தமிழினி இதற்கு முதல் பொம்பிளை தோழியாக போன படங்களை யார் வெளியே விட்டது?

2.யார் அதில் பங்கு பற்ற சொல்லி தமிழ்னியை கேட்டது?

3.தமிழினி 18 வயதிற்கு மேற்பட்ட அரசியல் வாதி. இருந்தாலும் அவரின் குடுப்பம்பம் இது பற்றி வெளியே அல்லது திரை மறைவில் தன்னும் ஏதாவது பிரஸ்தாபித்திருக்கா?

இப்ப கொஞ்சபேர்

எல்லாப்போராளிகளையும குத்தகைக்கு எடுத்துவிட்டினம்

இனி................

நாம பேசக்கூடாதாம்

பொத்திக்கொண்டு இருக்கட்டாம் :(  :(  :(

சரி இப்ப தமிழினி அக்கா தேர்தலில் நிக்க விரும்பினால் கூட்டமைப்பு தேர்தல் ஆசனம் குடுக்குமா....???

நிறைய முன்னாள் ஆயுதக்குழுக்கள் கூட்டமைப்புக்குள் இருக்கு ஆனால் புலிகளின் உறுப்பினராக இருந்தவர்கள் இருக்க முடியாது இதுதான் இப்போதைய நிலை... #

சிறைப்பிடிக்கப்படுவதுக்கும் சரண் அடைவதுக்கும் உள்ள வித்தியாசத்தை பலர் விளங்கிக்கொள்ளவில்லை...   இங்கை KP. கருணா, தயாவாத்தி போண்று சரணாகதி அடைந்து பலன் பெறுபவர்கள் இருக்கிறார்கள்,  அதே போல சிறைகளில் இருந்த வஞ்சிக்கப்படும்  தமிழினி அக்காவும் பதினொராயிரம் போராளிகளும் போர்க்கைதிகள்... 

இதில் 20 வருடங்களுக்கு மேலாக இண்று வரை தன்னை தன் இனத்துக்காக வருத்திக்கொண்ட ஒரு பெண் போராளி தனது சுதந்திரத்துக்காக  மகிந்தவின் கீழ் தேர்தலில் நிண்றால் நிச்சயமாக பிழை இல்லை... 

வாழ்கையே ஒரு சிறைதான்.

இதில் "வாழ்க்கை", "சிறை" என்ற இரண்டு சொற்களையும் மாற்றி மாற்றிப் பாவித்துவிட்டால் போராளிகளுக்கோ, தமிழினியிற்கோ, தயா மாஸ்டருக்கோ, K.P. க்கோ வாழ்வில் வசந்தம் வந்துவிடுமா?

தமிழினி தேர்தலில் நிற்க வேண்டுமாயின், அரசிந் தயவில் அல்லது கூட்டமைப்பின் தயவில்தான் நிற்க வேண்டுமா? வேறே வழி கிடையாதா?

அரசு, தமிழினியை வெளியில் விடுவதற்கு நிபந்தனையானாக,  கூட்டமைப்பு அவருக்கு ஒரு தேர்தல் ஆசனம் கொடுக்க வேண்டும் என்றால் அதை கூட்டமைப்பிடம் கேட்டுப்பெற்று தமிழினியை விடுதலை செய்விக்க வேண்டியது எல்லோருடையதும் பொறுப்புத்தானே. இதில் ஏன் கூட்டமைப்பை மட்டும் பிழை சாட்டுவான்.

தத்துவங்கள் வாழ்க்கையை முன் நகர்த்திறது இல்லை...   இண்று வரைக்கும் சிறையிலை இருக்கும் போராளிகளுக்கு சல்லிக்காசுக்கு  பிரியோசனம் இல்லாதவர்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எண்று சொல்ல தகுதி இல்லை... 

அவர்களுக்கு வேறை வளியை நீங்கள் எல்லாம் காட்டுவீர்கள் எண்டு தான் காத்திருந்தவை 4 வருடம் போனதை தவிர வேறை எதை உங்களாலை காட்ட முடிஞ்சது...?? 

சரி கூட்டமைப்பிலை பிழை சொல்லாமல் இருக்க இண்று வரைக்கும் கூட்டமைப்பு சாதிச்ச எதாவது ஒண்றை சொல்லுங்கோவன்....?? 

Edited by தயா

கூட்டமைப்பு எதை சாதித்திருக்கலாம் என்று எனக்கு தெரியாது. எந்த வந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் என்று எனக்கு தெரியாது.

எந்த வாக்குறுதியும் குடுக்காமல் கூட்டமைப்பு  தான் வாக்கு கேட்டார்களோ...??    

வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதியாக இல்லாமல் மனோகனணேசன் ஐயாவால் முடியும் போது கூட்டமைப்பால் முடியவில்லையாக்கும்....   ஒருவேளை சிட்டுக்குருவி லேகியம் பாயிச்சால் முடியலாம்... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்கையே ஒரு சிறைதான்.

இதில் "வாழ்க்கை", "சிறை" என்ற இரண்டு சொற்களையும் மாற்றி மாற்றிப் பாவித்துவிட்டால் போராளிகளுக்கோ, தமிழினியிற்கோ, தயா மாஸ்டருக்கோ, K.P. க்கோ வாழ்வில் வசந்தம் வந்துவிடுமா?

தமிழினி தேர்தலில் நிற்க வேண்டுமாயின், அரசிந் தயவில் அல்லது கூட்டமைப்பின் தயவில்தான் நிற்க வேண்டுமா? வேறே வழி கிடையாதா?

அரசு, தமிழினியை வெளியில் விடுவதற்கு நிபந்தனையானாக,  கூட்டமைப்பு அவருக்கு ஒரு தேர்தல் ஆசனம் கொடுக்க வேண்டும் என்றால் அதை கூட்டமைப்பிடம் கேட்டுப்பெற்று தமிழினியை விடுதலை செய்விக்க வேண்டியது எல்லோருடையதும் பொறுப்புத்தானே. இதில் ஏன் கூட்டமைப்பை மட்டும் பிழை சாட்டுவான்.

நல்ல கேள்வி...நல்ல ஆரம்பம்....

அண்ணே நீங்கள் எப்பையாவது இலங்கைக்கு போனநீங்களா? (என்றாவது இருந்தநீர்கள் என்று கேக்கவில்லை)

-எனக்கு தெரிய மகேஸ்வரனை தவிர, நீங்கள் சொல்லிக்கிற இரண்டு பகுதியையும் தவிர்த்து வென்றவர்கள் இல்லை. மகேஸ்வரன் வென்றதற்கும் நிறைய காரணங்கள்,- காரைநகர், St John, UNP,.....)

சரி இப்ப தமிழினி அக்கா தேர்தலில் நிக்க விரும்பினால் கூட்டமைப்பு தேர்தல் ஆசனம் குடுக்குமா....???

நிறைய முன்னாள் ஆயுதக்குழுக்கள் கூட்டமைப்புக்குள் இருக்கு ஆனால் புலிகளின் உறுப்பினராக இருந்தவர்கள் இருக்க முடியாது இதுதான் இப்போதைய நிலை... #

சிறைப்பிடிக்கப்படுவதுக்கும் சரண் அடைவதுக்கும் உள்ள வித்தியாசத்தை பலர் விளங்கிக்கொள்ளவில்லை...   இங்கை KP. கருணா, தயாவாத்தி போண்று சரணாகதி அடைந்து பலன் பெறுபவர்கள் இருக்கிறார்கள்,  அதே போல சிறைகளில் இருந்த வஞ்சிக்கப்படும்  தமிழினி அக்காவும் பதினொராயிரம் போராளிகளும் போர்க்கைதிகள்... 

இதில் 20 வருடங்களுக்கு மேலாக இண்று வரை தன்னை தன் இனத்துக்காக வருத்திக்கொண்ட ஒரு பெண் போராளி தனது சுதந்திரத்துக்காக  மகிந்தவின் கீழ் தேர்தலில் நிண்றால் நிச்சயமாக பிழை இல்லை... 

இதை ஏற்கும்  பக்குவம் எம்மவருக்கு இன்னமும் வரவில்லை .தமது அரசியலுக்கு அவரை துரோகியாக்கதான் முனைவார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை ஏற்கும்  பக்குவம் எம்மவருக்கு இன்னமும் வரவில்லை .தமது அரசியலுக்கு அவரை துரோகியாக்கதான் முனைவார்கள் .

புலியின் நிகழ்சி நிரலுக்கு மகிந்த தேர்தலில் நின்றிருந்தால்கூட மாறாத அந்தப் ''புலி எரிச்சல்'' மகிந்தாவின் நிகழ்சி நிரலுக்கு புலி நின்றால் மாறி இருக்கும் அந்தவகைகுரிய யோக்கியமான புலி எரிச்சல்!

  • கருத்துக்கள உறவுகள்
தமிழினிக்கு உள்ள தெரிவுகளாவன:
 
தமிழினியை மகிந்த  தேர்த்தலில் நிறுத்தினால் தான் இவரை வைத்து வடக்கில் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கமாகவே இருக்கும். இதுவே இவரை வெளியில் விட்டு கூட்டமைப்பில் போட்டியிட்டால் அவர் புலி.தீவிரவாதி.பயங்கரவாதி என பல பேர்கள் அரசால் சூட்டப்படும்.இந்த பெயரை விரும்பாத சம்பந்தர் தான் தனிநாட்டுக்கு எதிரானவர் என கூறி தனிநாடு பற்றி பேசியோரை வெளியேற்றி அரசின் நல்ல பெயரை எடுத்தவர் சம்பந்தர் ஐயா. ஆகவே தமிழினியை கூட்டமைப்பு ஏற்கமாட்டார்கள்.ஏற்றாலும் சாட்டு போக்கு சொல்லி அவரை வெளியில் விடமாட்டார்கள். ஏனெனில் கூட்டமைப்பின் வாக்குகளை பிரிப்பதே அரசின் திட்டமாகும். கடந்த கிழக்கு தேர்த்தலில் இதனை அரசு வெற்றிகரமாக செய்தது நினைவு கூரத்தக்கது.
 
சுயேச்சையாக தமிழினி போட்டியிட விரும்பினாலும் அரசு அவரை போட்டியிட விடமாட்டார்கள்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழினியின் சுய விருப்பம் தான் என்ன என்ற கேள்வியும் உள்ளது.
 
தமிழினி விடுதலை பெற வேண்டும். வெளியில்(புலம் பெயர் நாடுகல்) வர வேண்டும். அரசியலில் பாரவையாளராக தேவையான காலம் வரைக்கும் இருக்க வேண்டும்.  அரசு வலோற்காரப்படுத்தி தேர்தலில் இறக்கினால் அவரால் செய்யத்தக்கது ஒன்றும் இல்லை. சுய விருப்பத்தின் பேரில் கூட்டமைப்பிலோ சுயேட்சையாகவோ இன்றைய நிலைமையில் தேர்தலில் இறங்கக் கூடாது. வெல்லாவிட்டால் ஒன்றும் இல்லை. ஆனால் வெல்லாமலிருக்க தேர்தலில் இறங்கிப் பயன் இல்லை. மற்றயது எதுவும் காலத்திற்கு உகந்ததில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தமிழினி  பற்றி பேச எங்களுக்கு தகுதியில்லை  என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

அவரது சேவை நிர்ப்பந்தம் மற்றும் வலிகளில் ஒரு துளியைக்கூட  நாம் முகம் கொடுத்ததில்லை.

ஆனால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தமிழினத்தின் தலைவிதி  சார்ந்த   தேர்தல் என்பதால் ஒவ்வொரு தமிழனுக்கும  அதை விமர்சிக்கவும் பங்கேற்கவும் உரிமையுண்டு.  அந்த வகையில்  மகிந்த நிறுத்தும் எந்த வேட்பாளரையும் விமர்சிக்கமுடியும்.  விமர்சிக்கலாம்.

அதையே  தமிழினியும் விரும்புவார்.

அவரை வவுனியாவில் பார்த்தபோது அவரது முகம் இதற்கான சாட்சியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவங்கள் வாழ்க்கையை முன் நகர்த்திறது இல்லை...   இண்று வரைக்கும் சிறையிலை இருக்கும் போராளிகளுக்கு சல்லிக்காசுக்கு  பிரியோசனம் இல்லாதவர்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எண்று சொல்ல தகுதி இல்லை... 

அவர்களுக்கு வேறை வளியை நீங்கள் எல்லாம் காட்டுவீர்கள் எண்டு தான் காத்திருந்தவை 4 வருடம் போனதை தவிர வேறை எதை உங்களாலை காட்ட முடிஞ்சது...?? 

சரி கூட்டமைப்பிலை பிழை சொல்லாமல் இருக்க இண்று வரைக்கும் கூட்டமைப்பு சாதிச்ச எதாவது ஒண்றை சொல்லுங்கோவன்....?? 

தயா உங்கள் கருத்துக்கு ஆயிரம் பச்சைப்புள்ளிகள் தர வேணும். ஆனால் இருப்பது ஒன்று மட்டுமே.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழினியின் சுய விருப்பம் தான் என்ன என்ற கேள்வியும் உள்ளது.

சுயவிருப்பம் என்ன என்பதை இந்த ஊடகங்களால் கேட்டறிந்து எழுத முடியவில்லை நுணா ஊகத்தின் அடிப்படையில் அந்தப் பெண்ணை சாகடிக்கிறார்கள் எல்லோரும்.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் என்றால் இரத்தம் வடிக்கும் சிலருக்கு குத்தகையில் உழைத்த உழைப்பின் ருசி போகாமல் இருக்கிறது. 

தமிழினி ஓர் போர்க்கைதி எதிரியின் கையில் இருக்கிற ஒரு போர்க்கைதி. என்பதனை புரிந்தால் இந்து நீண்ட விவாதம் தேவையாக இருக்காது.

எல்லாவற்றுக்கும் மேலாக சுகமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு தேசியசாசனத்தை சுமக்கிற சிலருக்கு மட்டும் தமிழினியை மட்டுமல்ல இந்த துப்புக்கெட்ட இனத்துக்காக போராடி வலியோடு தினம் வதைபடுகிற போராளிகளை தமிழன் என்ற பெயரால் விமர்சிக்கவும் பங்கெடுக்கவும் பங்கிருப்பதாகவும் வேறு வீராப்பு. வாழ்க இந்தத் தமிழனும் தமிழ் உணர்வும்.

வவுனியாவில் தமிழினியின் முகத்தை தரிசித்தவர்களுக்கு தமிழினி எதையும் முகத்தில் எழுதி ஒட்டி வைத்து தன்னை பொதுச்சொத்தாக பிரகடனப்படுத்தவில்லையென்ற உயர்திரு தமிழர்களுக்கு தெரியாதோ என்னவோ. இவர்களது எண்ணத்தை தமிழினியும் விரும்புகிறராம். பூவைக்கிறதெண்டு முடிவெடுத்த பிறகு பூசையும் நேரமும் பொதுவானது தான்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக சுகமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு தேசியசாசனத்தை சுமக்கிற சிலருக்கு மட்டும் தமிழினியை மட்டுமல்ல

திறமையான மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்குமான முடிச்சு.

வெளிநாடுகளில் பணம் சேர்த்து தமிழ் அகதிகளுக்கு உதவினால் தமிழினிக்கு வலிகளுக்குள்ளால் போகமால் விடுதலை தரப்படும் என்று ஒரு நம்ப்பிக்கை இப்போது இல்லைதானே?

அந்த நம்பிக்கையால் நீங்கள் உங்கள் தொண்டுகளை செய்யவில்லை தானே.

தேசியன சாசனத்தை நாளை மறுநாள் வெளிவிடப் போபவர்கள் எப்படி தமிழினியின் வலியோடு தொடர்பு படுகிறார்கள் என்பதை நீங்கள் வெளிப்பையாக எழுதி பிரசுரிப்பதாலேயே அவர்களுக்கு அந்த வலியை கூறைக்க மனம் இருந்தால் குறைக்க முயல்வார்கள்.

ஆனால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தமிழினத்தின் தலைவிதி  சார்ந்த   தேர்தல் என்பதால் ஒவ்வொரு தமிழனுக்கும  அதை விமர்சிக்கவும் பங்கேற்கவும் உரிமையுண்டு.  அந்த வகையில்  மகிந்த நிறுத்தும் எந்த வேட்பாளரையும் விமர்சிக்கமுடியும்.  விமர்சிக்கலாம்.

விமர்சிக்கும் முன்னாலை சில கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக்கொள்ள வேண்டும் அண்ணை...  

நீங்கள் கூட்டமைப்பை அங்கீகரிக்கிறீர்களா...??  

அப்படி அங்கீகரிக்க முடிந்தால் அவர்களுள் அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி சம்பந்தர் வரை,  1986ல் இந்திய இராணுவ கால  EPRLF, 1989 முதல் PLOT, TELO  எல்லோரும்  இலங்கை அரசின் அதோடு  இராணுவத்தின்  நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுக்குள் செயற்பட்டார்கள் என்பதை மறுக்கிறீர்களா...??   இல்லை வெளிநாட்டு அழுத்தங்களுக்காக குமார் பொன்னம்பலம்  அவர்களை சுட்டதை போல சுடாமல் வைத்து தமிழர்களின் அரசியல் தலைமையை சிங்கள அரசு மனிதாபிமானத்தோடு பாதுகாத்தது எண்று சொல்ல வருகிறீர்களா...?? 

கூட்டமைப்பு அமையும் முன்னர் வந்த தேர்தல்கள் எல்லாவற்றையும் நீங்களுக்கும் எதிர்த்த போதும் அவர்கள் தனித்தனியாக  தேர்தலில் நிண்றார்கள் இப்போது கூட்டமைப்பாக போர் முடிந்த பின்னர்  நிற்க்க போகிறார்கள்...  வித்தியாசம் அவ்வளவுதான்.... 

மாற்றம் ஒண்றுதான் இண்று வரைக்கும் மாறாமல் இருக்கிறது... 

அல்லது நீங்கள் சொல்ல வருவது கைது செய்யப்பட்ட ஒருவர் அரசியலில் தலைமைக்கு வரமுடியாது எண்று சொல்ல வருகிறீர்களா...??  

Edited by தயா

K.P. துரோகியா, கனகரத்தினம் துரோகியா, கருணாதுரோகியா என்பதோ அல்லது இவர்கள் எல்லோருமே ஒரு தோட்டத்து முல்லைகள் என்பதோ அல்ல யார் இனிமேலைய தலைமையை எடுத்து செல்லத்தக்கவர்கள் என்று நிர்ணயிப்பது.

அரசுக்கெதிராக கருத்துக்கூறக் கூடாது என்பது இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ள சட்டம்.  அதில் போராடுவது என்பது இனி எடுக்க முடியாத கருத்து.  அரசுக்கெதிரான ஜனநாயக போராட்டங்கள் இலங்கைக்கு வெளியில் இருந்துதான் தொழில் படவேண்டியவை.

எனவே அரசின் மேலாதிக்கம் இருக்கத்தக்க நிலைமையில் இருந்து அரசுக்கெதிரான பொறாட்டம் முன்னால் செல்ல முடியாது. தமிழினி இன்னும் 3, 4 வருடங்களுக்கு அரசியலில் பிரவேசித்தாரானால் "K.P துரோகியா கதைக்கு" மேல் போரட்டம் செல்ல முடியாது. தமிழினி நல்ல மனத்தோடு ஆரம்பிக்கும் எந்த முயற்சியையும் அவர் அரச சம்பள பட்டியலில் இருக்கிறா எந்த கட்டுகதை மூலமே அரசு தோற்கடிக்கும்.

எனவே அவரின் விடுதலையை வேண்டுமென்றெ இலங்கை வானொலி அரசியலில் இணைத்தது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நெல்சன் மண்டல்ல சிறையை விட்டு வெளியே வந்து சுதந்திரம் பெற்றுத்தந்த மாதிரி இது அமையாது.

அவரின் விடுதலையை சிக்கலாகத்தான் இலங்கை வானொலி சதி செய்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.