Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பன் ஆசைக்காட்டியதால் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கண்ணீர் மல்க ஒப்புதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: தமது நண்பனும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டியதால்தான், தாம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கண்ணீர்விட்டு கதறியபடியே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் என 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில் கைதான ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களும் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த், தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை இந்த ஊழலில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் புலம்பினார். இதனிடையே போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் 5 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ்,"டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிபதியிடம் ஸ்ரீசாந்த் தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை சிக்க வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

 

ஸ்ரீசாந்துக்கு எதிராக போலீசார் நேரடி ஆதாரம் எதுவும் தாக்கல் செய்ய வில்லை. அவர் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் அவரை சிக்க வைத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் எடுக்க முயற்சி செய்து வருகிறேன்" என்றார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்ரீசாந்த்

இதனிடையே ஸ்ரீசாந்திடம் நேற்று டெல்லி போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதாகவும், தனது நண்பரும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டி தம்மை இதில் இழுத்துவிட்டுவிட்டதாக கண்ணீர்விட்டு அழுது புலம்பியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேப்போன்று சூதாட்ட புகாரில் சிக்கி கைதான மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான அங்கீத் சவாணும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்" எனக் கூறியபடியே கண்ணீர்விட்டு அழுததாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதனிடையே இவர்கள் இருவரை தவிர, கைதான மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான அஜித் சந்திலா, ஒரு இடைத்தரகர் மற்றும் 10 புக்கிகளிடமும் இன்று விசாரணை நடைபெற்றதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=14981

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்து வரும் இளம் வீரர்கள்..அநியாயமாக பணத்துக்கு ஆசைப்பட்டு உள்ளதையும் இழக்கிறார்கள்..! :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இப்படியொரு பைத்தியகாரத்தனமான, மக்களை மடையர்களாக்கும் சூதாட்டப் போட்டிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இதுவும் ஒரு குதிரைப் பந்தயமாகவே போதையேற்றும் விடயமாக எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது.

 

புக்கிகள்  ஆசை காட்டினராம், இவர் மயங்கி பெண்கள் மடியில் விழுந்துவிட்டாராம், என்ன பூச் சுற்றல் இது?

 

மக்களை அரசியல்வாதிகளின் பின்புலத்தோடு முட்டாளாக்கும் இம்மாதிரியான விளையாட்டுக் கோழைகள், எந்த நாட்டிற்கும் அவமானச் சின்னங்களே.
 

நாட்டில் நடக்கும் சில விடயங்களை நோக்குகையில், செளதியின் கடுமையான சட்டங்கள் இங்கும் தேவைதான் என தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்து வரும் இளம் வீரர்கள்..அநியாயமாக பணத்துக்கு ஆசைப்பட்டு உள்ளதையும் இழக்கிறார்கள்..! :rolleyes::icon_idea:

 

உலகம் பூராகவும் உள்ள சிக்கல் இது.

பிரான்சிலும்  ஏன்  சில  மாதங்களுக்கு முன் பிரித்தானியாவிலும் (உதைபந்து) நடந்தது தானே இது.

இன்று பணம் கொட்டும் ஒரு தொழிலாக இந்த விளையாட்டுக்கள் இருக்கின்றன.

கோடிக்கணக்கான பணம் புரளும்  இந்த இடத்தில் போதும் என்றநிலையை  எவரும் எடுப்பதில்லை.

மாட்டிக்கொண்டதால் அழுகிறார்கள். இல்லாது விட்டால் நாளைய  கோடீசுவரர்கள் ஏன் நாட்டின் தலைவர்களாக  கூட வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் (royal) இன்னிக்கு எவ்ளோ வேர்த்தாலும் கர்சிப்பே யூஸ் பண்ண மாட்டானுக

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
பிடிபட்டதால் கண்ணீர் மல்கி சுத்துமாத்து விட வேண்டும்.பிடிபடாவிட்டால் காசை வங்கி இலக்கத்துக்கு மாற்றி விடும் படி சொல்லி விடுவார்கள்.பார்வையாளர்களை ஏமாளியாக்குகிறார்கள்.
 
பாகிஸ்தானிய வீரர்களுக்கு வழங்கிய தண்டனை இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும். விளையாட்டை சூதாட்டமாக மாற்ற ஒருவரும் எத்தனிக்கா வண்ணம் தண்டனை வழங்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் தெரியாத பாப்பா, கையை சூப்பிச்சுதாம் சோக்கா....
விளையாட்டிலை உழைக்கிற காசு, காணாதெண்டு... சூதாட்டம் வேறை.
இவங்களை எல்லாம்... முட்டிக்கு, முட்டி தட்டி... எலும்பை முறிச்சு, மைதானப் பக்கமே.. வர விடாமல் செய்ய வேணும்.

306881_10151655610220309_357000889_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

859989214Untitled-1.jpg

சூதாட்டத்தால் ஸ்ரீசாந்தின் திருமணம் தடைப்படுமா?

கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான ஸ்ரீசாந்துக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. 

இது பற்றி ஸ்ரீசாந்த் தனது நண்பர்களிடம் கூறி வந்தார். தற்போது கிரிக்கெட் சூதாட்டம், அழகிகளுடன் உல்லாசம் என தகவல் வெளியாகி இருப்பதால் அவரது திருமணம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது பற்றி ஸ்ரீசாந்த் மைத்துனர் மது பாலகிருஷ்ணன் கூறுகையில்,ஸ்ரீசாந்த் பெயரை கெடுக்க நடந்த சதியால் அவர் சூதாட்ட விவகாரத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவரது திருமண வாழ்க்கை பாதிக்கப்படாது என்றார். 

ஸ்ரீசாந்த் குடும்பத்தினரிடம் கேட்டபோது, திருமண ஏற்பாடு நடந்தது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. மலையாளம் அல்லாத ஒரு பெண்ணைப் பார்த்தோம். ஆனால் முடிவு செய்யவில்லை. இனி என்ன நடக்கும் என்பது தெரியாது என்று கூறினார்கள்.

மணப் பெண் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அவர் கேரளப்பெண் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீசாந்த் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டமை குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

டோனி மற்றும் ஹர்பஜனை குற்றச்சாட்டும் ஸ்ரீசாந்த் அப்பா..

 

Santhakumaran+Sreesanth+2011+ICC+World+Cஸ்ரீசாந்த சூதாட்ட புகாரில் சிக்கியதற்கு டோனி மற்றும் ஹர்பஜனே காரணம் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இந்த ஐ.பி.எல் தொடரில் தொடக்கத்தில் ஹர்பஜன் எதிராக ஸ்ரீசாந்த் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதே போல் டோனியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஸ்ரீசாந்த்துக்கு நன்றாக தெரியும், அதனால் மீண்டும் டெஸ்ட் அணியில் உன்னை எடுக்க மாட்டேன் என்று டோனி மிரட்டினார். இதனால், ஸ்ரீசாந்த்துக்கு எதிராக ஹர்பஜன் மற்றும் டோனி செய்யும் கூட்டு சதி தான் இது என்று கூறினார்.

http://www.tamilyouthcafe.com/news/10788

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.