Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்

Featured Replies

உண்மையாகச் சொன்னால் இந்தக் கட்டுரையை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வாரம் எழுதலாம்…… இல்லையில்லை அடுத்த வாரம் எழுதலாம் என்று ஒவ்வொரு வாரமும் தள்ளிப் போட்டுக் கொண்டே போன கட்டுரைதான் இது.

அதுவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன?

இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்…..

ஆயிரக்கணக்கான கட்டுரைகள்……

மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்….

என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.?

ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது.

“ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.”

kashmir.jpg?w=460“அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு”

“பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான்.

ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு நூறு உண்மையான செய்திகள்தானா?

அல்லது அத்தனையும் அப்பட்டமான பொய்களா?

இதில் எது உண்மை?

எது பொய்? கொஞ்சம் ஆழமாகக் கவனித்தால் எதார்த்த உண்மை இந்த இரண்டுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது தெரியும்.

அந்த உண்மையை வெளிக்கொணர நாம் காஷ்மீரின் கடந்த கால வரலாற்றினை ஓரளவுக்காவது உள்வாங்கிக் கொண்டால்தான் சாத்தியப்படும்.

இது காஷ்மீருக்கு மட்டும் என்றில்லை. எந்தவொரு போராட்டத்தின் ஆணிவேரையும் அறிந்து கொள்ள இந்த அணுகுமுறைதான் நம்மை ஓரளவுக்காவது உண்மையின் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.

சரி இனி விசயத்திற்குள் வருவோம்.

நாற்பத்தி ஏழாம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி என்ன நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் மட்டும் ஏறக்குறைய 550. இந்த சமஸ்தானங்கள் இந்தியாவோடோ அல்லது பாகிஸ்தானோடோ…… இவர்களில் யாரோடு வேண்டுமானாலும் சேரலாம். அது அவரவர்கள் விருப்பம் என சொல்லிவிட்டு வெள்ளையர் வெளியேற….. பல சமஸ்தானங்கள் சத்தமில்லாமல் இந்தியாவோடு சேர்ந்து கொண்டன.

இதில் ஐதராபாத் சமஸ்தானத்தின் நிஜாம் பாகிஸ்தானோடு போக விரும்பினார். மக்கள் விருப்பத்தைப் புறக்கணித்து பாகிஸ்தானோடு சேரத் துடித்த மன்னனை பட்டேல் அனுப்பிய படைகள் 1948 செப்டம்பர் 13 இல் தோற்கடிக்க…. ஐதராபாத் இந்தியாவோடு சேர்கிறது.

ஆண்ட மன்னனோ இஸ்லாமியர்….. மக்களோ இந்துக்கள்….

தென்னகத்தில்  திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரோ ”திருவாங்கூர் சமஸ்தானம் இனி தனி நாடாக இயங்கும்” என அறிவிக்கிறார்.

இங்கு மன்னனும் மக்களும் ஒரே சமயத்தவர்கள்.

ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த ஹரிசிங் மன்னரோ ”எமக்கு இந்தியாவும் வேண்டாம்….. பாகிஸ்தானும் வேண்டாம் என்று முடிவெடுத்து தனி நாடாக இருக்கவே விருப்பம்” என அறிவிக்கிறார்.

இங்கோ ஆண்ட மன்னன் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இந்து. பெரும்பாலான மக்களோ இஸ்லாமியர்.

அதற்கு முன்னரே காஷ்மீர் மக்களது உரிமை போராட்டங்களுக்கு முன்னனியில் நின்று போராடி வந்தவர்தான் சேக் அப்துல்லா. இவர்sheik.jpg?w=460 தனது கட்சி மதசார்பற்று அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் ”முசுலீம் மாநாட்டுக் கட்சி”  என்கிற தனது கட்சியின் பெயரையே ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி என துணிச்சலாக மாற்றி அமைக்கிறார்.

வெள்ளையர் வெளியேறும் வேளையில் இந்து அரசர் தனி நாடாக இருக்க முடிவெடுக்க சேக் அப்துல்லாவோ இந்தியாவோடுதான் இணையவேண்டும் என போராட்டத்தில் குதிக்கிறார்.

கட்சியின் பெயரை மாற்றுவதில் இருந்து…. மன்னனின் முடிவையே எதிர்த்து இந்தியாவோடுதான் இணைய வேண்டும் என்று போராட்டங்களில் குதித்தது வரைக்கும் சேக் அப்துல்லா உறுதியாக இருந்ததற்கு எது காரணம்?

நேருவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது nehru.jpg?w=460வார்த்தைகளின் மீதும்…. வாக்குறுதிகளின் மீதும் இருந்த அசாத்திய நம்பிக்கை.

இந்த வேளையில்தான் யாரும் எதிர்பாரா வேளையில் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான பழங்குடியினர் படை எடுத்து  காஷ்மீரினுள் நுழைகிறார்கள். இதற்கு பாகிஸ்தானின் படைத் தளபதி அக்பர்கான்தான் தலைமை. இது திட்டமிட்ட படையெடுப்பாக இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்குத் தெரிந்து நடந்த படையெடுப்பு.

உள்ளே நுழைந்த கலகக்காரர்கள் தீ வைப்பு…. கொள்ளை….. பாலியல் பலாத்காரம்….. என சகல விதமான நாசச் செயல்களிலும் ஈடுபட……

மன்னர் ஹரிசிங் நிலைமையைச் சமாளிக்க வழி தெரியாது தத்தளிக்க…..

அபயக்கரம் நீட்டுகிறார் ஜவஹர்லால் நேரு.

ஒரு உன்னதமான உறுதிமொழியோடு……..

என்ன அந்த உன்னத உறுதிமொழி?

http://pamaran.wordpress.com/2010/10/18/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6/

 

  • Replies 101
  • Views 7k
  • Created
  • Last Reply

காஷ்மீரிகளின் தனித்துவம்…..

darha1.jpg?w=460

”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.”

– மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ……

அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்…..

நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின்  தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும்.

பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…. இந்துக்கள் என அனைவருமே உழைத்து உண்டு உறவாடிய மண்தான் காஷ்மீர மண். அவர்களை ஆண்ட ஆட்சியாளர்கள்தான் அடக்குமுறையாளர்களாக வந்து வாய்த்தார்கள்.

அது இந்து மன்னனாக இருந்தாலும் சரி. இசுலாமிய மன்னனாக இருந்தாலும் சரி. இரண்டுமல்லாது சீக்கிய மன்னனாக இருந்தாலும் சரி. இம்மன்னர்களது மொழி என்பது கொடுங்கோலாட்சியும் ஒடுக்குமுறையும்தான்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் துவங்கிய போராட்டங்கள் ஏதோ 1947 இல் தொடங்கிய போராட்டமாக….. அதுவும் இந்திய “சுதந்திரத்தைத்” தொடர்ந்து அதனோடு இணைவதா இல்லையா என்பதில் தொடங்கிய போராட்டமாகத்தான் இன்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் மக்களது விடுதலைக்கான வேட்கை என்பது  1586 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது.

ஆம்.

பேரரசரான அக்பர் தனது அதிகாரத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் விரிவுபடுத்திய ஆண்டுதான் 1586. அப்போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

அதன் பிற்பாடு பிரிட்டிஷ்காரர்கள் 1846 இல் எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய்க்கு  மன்னன் குலாப்சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரை விற்றபோதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

அதற்கும் பிற்பாடு சமஸ்தானங்களின் முழு இறையாண்மையை மதிப்பதாக முகம்மது அலி ஜின்னா உறுதியளித்ததைப் பார்த்து பாகிஸ்தானிடம் போகலாமா? என்று இந்து டோக்ரா மன்னன் ஹரிசிங் ஊசலாட்டத்தில் இருந்த போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

இப்படி எல்லாவற்றுக்கும் பிற்பாடு எதிர்பாராத பழங்குடித் தாக்குதலால் தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் இந்தியாவோடு அதே மன்னன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட போதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

பொதுவாக காஷ்மீரி இஸ்லாமியர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். உலகின் பிற பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.

குறிப்பாகச் சொன்னால் இறுக்கம் நிறைந்த ”ஆச்சாரமான” வைதீக இஸ்லாமியர்களுக்கும் காஷ்மீர இஸ்லாமிய மக்களுக்கும் வாழும் முறையில் இருந்து வழிபடும் முறைகள் வரைக்கும் எண்ணற்ற விசயங்களில் ஒத்துப் போகாது.

காஷ்மீர் இசுலாமியர்கள் இறுக்கமற்ற சூஃபி வழியில் வந்த இசுலாமைப் பின்பற்றுபவர்கள். இந்த வழியில் வந்த சூஃபி ஞானியான ”சில்சிலா ரிசியான்” என்பவரது இசுலாத்தைத்தான் இம்மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இதை நாம் நமக்குத் தெரிந்த அளவில்  புரிந்து கொள்ள வேண்டுமென்றால்  தென்னகத்தில் அர்த்தமற்ற ஆச்சாரங்களையும்….. மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த இறுக்கம் நிறைந்த வைதீக கட்டுப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிய சித்தர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓரளவு இந்த சூஃபி துறவிகளைப் புரிந்து கொள்ளலாம்.

அந்த சில்சிலா பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த ஞானிகளில் மிக முக்கியமானவர்தான் நூருதீன். பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் துறவியை ரிசி என்று இன்றும் அழைக்கிறார்கள். இவரை இசுலாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் பிற சமயத்தவர்களும் கூட பெரும் ஞானியாக மதிக்கிறார்கள்.

மக்களோடு நெருக்கமாக நின்ற நூருதீன் போதித்தபடி வாழாத முசுலீம் துறவிகளை கடுமையாக வெறுத்தார். பேராசை….. பாசாங்கு…. அகந்தை கொண்டு அலைந்த உலோமாக்களை கேலி செய்தார்.

இத்தகைய ஞானிகள் கூட்டத்தில் பெண்களும் அடக்கம் என்பதுதான் ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. இது வைதீக இசுலாமின் கொள்கைக்கு எதிரானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சங்காபீபி, பேகத்பீபி போன்றவர்கள் இந்த சில்சிலா மரபில் பெண் ஞானிகளாகவே வலம் வந்தனர்.

அதைப்போலவே லாலாமாஜி எனும் சைவத் துறவி பெரும் புகழ் பெற்றிருந்தார். தேவையற்ற சடங்குகளையும், ”உயர் சாதி” மனோபாவங்களையும் இவர் மிகக் கடுமையாகச் சாடினார். இவரை காஷ்மீர் முசுலீம்கள் இன்றும் கூட ஒரு பெரும் ஞானியாகப் பார்க்கிறார்கள்.

காஷ்மீரின் இந்து முசுலீம் மக்களுக்கிடையே நிலவிய இத்தகைய ஒரு அற்புதமான சகிப்புத் தன்மையை நான் வேறு எங்கும் கண்டதில்லை என்று ஆங்கிலேய ஆணையர் ஒருவரே ஆச்சர்யப்பட்டு சொல்லியிருக்கிறார்.

காஷ்மீரி இசுலாம் பண்பாடு சகலரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடு. மத ஞானிகளது புனிதத்தலங்களில் காஷ்மீரிகள் செய்து வரும் சடங்குகளில் பிற சமயத்தவர்களது சடங்குகளும் கலந்திருக்கின்றன. மசூதிகளோடு பிற புனிதத் தலங்களையும் வழிபடும் போக்கு காசுமீர இசுலாமியர் மரபு. (இதில் நமக்குத் தெரிந்த உதாரணம் விரும்புபவர் எவர் வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய நாகூர் தர்கா)

nag1.jpg?w=460

ஆனால் வைதீக இசுலாமியர்களுக்கு இப்போக்கு ஏற்புடையதாய் இல்லை.

வைதீக விதிகளில் நாட்டம் கொண்ட இசுலாமியர்களுக்கும் அதை ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர இசுலாமியர்களுக்கும் இடையிலான இந்த நெருடல் காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் மத்தியிலும் கூட எப்படி பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தின என்பதைப் பிற்பாடு பார்ப்போம்.

ஓரளவுக்கு நாம் புரிந்து கொண்ட காஷ்மீர மக்களது தனித்துவங்கள் இவை. மன்னர்கள் மாறி மாறி வந்தாலும் மக்களுக்குள் மகத்தான உறவே நிலவியது. ஏறக்குறைய பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும்பகுதி மத மோதல்களில் மூழ்கிக் கிடந்தபோது காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும் மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டே நின்றது. அதுதான் காஷ்மீரத்தின் தனித்துவம். இன்றைக்கும் காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.

அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947  க்குச் செல்ல வேண்டும்.

(அது அடுத்த வாரம்)

October 26, 2010

http://pamaran.wordpress.com/2010/10/

 

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி…

ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம்.

ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்?

ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்…..

”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.

அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947 குச் செல்ல வேண்டும்.” என்று நாம் கடந்த இதழில் கூறியிருந்தபடி இப்போது அதில் அடியெடுத்து வைப்போம்.

அந்த நாள்தான் அக்டோபர் 24. அன்றுதான் குறிப்பிட்ட மூவாயிரம் பழங்குடியினர் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் நுழைகிறார்கள்.

மன்னர் அரிசிங் இந்தியாவோடு இணைய விரும்பாமலோ அல்லது எந்த முடிவும் எடுக்க தீர்மானிக்க இயலாத நிலையிலோ இருந்த நேரத்தில்தான் இவர்கள் நுழைகிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் இந்துக்களும், சீக்கியர்களும் நுழைய….. இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய இரு புறமும் கொலை, கொள்ளை, தீவைப்பு. இந்தத் தாக்கம் ஜம்மு பகுதியிலும் தொற்றிக் கொள்ள…. அப்போது நுழைந்தவர்கள்தான் அம்மூவாயிரம் பழங்குடியினர்.

இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஆசி இருந்தது. காப்பாற்ற வந்ததாகச் சொன்னவர்களே காஷ்மீரின் பல பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட இசுலாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் இப்பழங்குடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதில் பாரமுல்லா எனும் நகரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் மூவாயிரம் பேர்.

இந்த வேளையில்தான் கலவரக்காரர்களை விரட்டியடிக்க மன்னர் அரிசிங் இந்திய உதவியை நாடுகிறார். இந்த உதவி காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கிடைக்காது என்பது பள்ளிச் சிறுவனுக்குக்கூட தெரியும். அப்புறம் இது மாட்சிமை தாங்கிய மன்னருக்கு தெரியாமலா இருக்கும்.

தெரிகிறது.

புரிகிறது.

1947 அக்டோபர் 26 ஆம் தேதி மன்னருக்கும் இந்தியாவுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அதன்படி பாதுகாப்பு…. வெளியுறவு…. தகவல் தொடர்பு…. இம்மூன்றில் மட்டும்  இந்திய அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்கிறார் மன்னர்..

”ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு மக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்பே இந்த இணைப்பை இறுதியானதாக ஏற்றுக் கொள்வோம்” என்று மறுநாள் இந்தியாவும் பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிடுகிறது.

பிறகு இந்தியப்படைகள் சிறீநகரில் நுழைந்ததும்…..

பள்ளத்தாக்கில் ஊடுருவல்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் என கேள்விப்பட்டு மன்னர் பரம்பரை நிர்வாகத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினரிடம் ஒப்படைத்து விட்டு ஜம்மு நோக்கி ஓட்டம் விட்டதும்……

சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியினர் இந்துக்களையும், இசுலாமியர்களையும் அணி திரட்டி பாலங்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பளித்ததும்……. ஏறக்குறைய அறிந்த செய்திகள்தான்.

இவற்றுக்கு மத்தியில்  நவம்பர் இரண்டாம் நாள் அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் நேரு “ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் அம்மாநில மக்களால் தீர்மானிக்கப்படும் என்கிற வாக்குறுதியை மீண்டும் உறுதிபடுத்துகிறேன். அமைதி நிலைநாட்டப்பட்ட உடனேயே சர்வதேச பார்வையாளர்கள் தலைமையின் கீழ் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.” என்று மீண்டும் ஒரு முறை அடித்துச் சத்தியம் செய்கிறார்.

இந்திய ராணுவம் ஊடுருவல்காரர்களை பாகிஸ்தான் எல்லைக்குள் விரட்டியடிக்க…..பாகிஸ்தான் ராணுவமோ இந்திய எல்லைக்குள் நுழைந்து சண்டையிட போர் உருவாகிறது.

போரின் முடிவோ காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதில் போய் முடிகிறது.

ஊடுருவ வந்து பாகிஸ்தான் கைப்பற்றிய ஒரு பகுதியை ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று இந்தியா அழைக்க……

உதவ வந்து இந்தியா மீட்ட மற்றொரு பகுதியை “இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்க….

அக்பர் தொடங்கி அரிசிங் வரைக்கும் எண்ணற்ற ராஜபரிபாலனைகளைப் பார்த்த காஷ்மீர் மக்கள் வாழ்க்கையில் இனம்புரியாத இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது.

அதுவரையில் மன்னர்களது குத்துகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ”ஜனநாயக” கும்மாங்குத்துக்களை அனுபவிக்கும் ”பாக்கியம்” அப்போதுதான் வாய்க்கிறது.

காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்ட நேரு தலைமையிலான இந்திய அரசு  ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு உறுதிமொழியை ஐ.நா.சபையிடம் சமர்பிக்கிறது. அந்த நாள்தான் 1947 டிசம்பர் 31. அந்த உறுதிமொழி இதுதான்.:

“ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை அரசியல் அறுவடை செய்து கொள்ள இந்திய அரசு பயன்படுத்துகிறது என்ற தவறான கருத்தை அகற்ற பின்வரும் செய்தியை இந்திய அரசு தெளிவாக முன் வைக்கிறது. அதாவது, படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டு இயல்புநிலை நிலைநாட்டப்பட்ட உடனேயே அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பு அல்லது நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக வழிமுறைகள் மூலம் மக்களின் விருப்பம் முடிவு செய்யப்படும். சுதந்திரமான, நியாயமான நேரடி வாக்கெடுப்பிற்கு ஐ.நா.சபையின் மேற்பார்வை அவசியப்படும்.”

இதுதானய்யா அந்த வரலாற்றுச் சிரிப்பு மிக்க வாக்குறுதி.

ஆக இன்னமும் படையெடுப்பாளர்கள் விரட்டப்படவில்லை…. அன்று தொடங்கி இன்று வரை இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை…. அதனால் அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் நேரம் கனியவில்லை… அதனாலேயே நேரடி வாக்கெடுப்பு நடத்த முடியவில்லை….. இதுதான் பல ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருந்த ஒரே பல்லவி.

நேரடி வாக்கெடுப்பு நடந்தால் காஷ்மீர் மக்கள் நம் பக்கம்தான் சாய்வார்கள் என நாக்கைத் தொங்கப்போட்டபடி பாகிஸ்தானும் அதற்கு தலையாட்டியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 47 இல் நடந்த யுத்தம்….. 65 இல் நடந்த யுத்தம்…… 71 இல் நடந்த யுத்தம்…. இவற்றின் போதெல்லாம் பாகிஸ்தான் பக்கம் கனவிலும் தலைவைத்துப் படுக்காத காஷ்மீர் மக்களைப் பற்றி அது அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான்.

இந்தியாவைத் தொடர்ந்து ஐ.நா.வும் தன் பங்குக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்மானத்தை 1948 இல் நிறைவேற்றியது. “சண்டையிடுவதற்காக அம்மாநிலத்திற்குள் நுழைந்த பழங்குடிப் படையெடுப்பாளர்களும், அம்மாநிலத்தில் வசித்து வராத ஏனைய பாகிஸ்தான் தேசிய இனத்தவரும் அம்மாநிலத்திலிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உள்ளூர் அரசாங்கத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச இராணுவத்தை மட்டுமே இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்க வேண்டும். இணைப்பு பிரச்சனையின் மீது அம்மாநில மக்கள் வாக்களிப்பதற்குத் தேவையான முழு சுதந்திரத்தையும், சூழ்நிலையையும் இரு நாட்டு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.”

ஆனால் அவ்வளவு லேசுப்பட்ட நாடுகளா இந்தியாவும்…. பாகிஸ்தானும்….? வெளிப்பார்வைக்கு வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டாலும் இரண்டுக்கும் உள்ளூர ஒரு பயம். இரண்டு நாட்டுக்குமே இந்த மக்கள் அல்வா கொடுத்து விட்டால் என்ன செய்வது என்றுதான்.

kashmir-2.jpg?w=460

அப்புறம் நேரடியாவது….. மறைமுகமாவது……? அப்படியே தொடர்கிறது கதை.

மன்னனிடம் இருந்து விடுபட்டு காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வது என்பதில் தொடங்கிய கதை பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையாக விரிவடைந்து…. அப்புறம் இருநாட்டுக்குமான பாதுகாப்புப் பிரச்சனையாக பரிமாணம் எடுத்ததில் போய் முடிந்தது.

முதலில் காஷ்மீரிகளின் கதி அக்பரின் கைகளில் இருந்தது…..

அப்புறம் சில முகலாய மன்னர்கள் அதை வைத்திருந்தார்கள்…..

பிற்பாடு சீக்கியர்கள் வைத்திருந்தார்கள்….

அடுத்து டோக்ரா இந்து மன்னன் வைத்திருந்தான்…..

அதற்கும் பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் வைத்திருந்தன……

அது சரின்னே…. அப்ப இந்த ரெண்டு நாடுகள வேற யாருன்னே வெச்சிருந்தா? என கரகாட்டக்காரனில் செந்தில் கேட்டதைப் போல யாரேனும் கேட்டால்…?

அதற்கும் இருக்கிறது பதில். அதுதான் அமெரிக்க-சோவியத் வல்லரசுகள்.

ஆம் 1953 க்குப் பிறகு தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க வந்த அமெரிக்காவோடு பாகிஸ்தான் கொண்ட காதலும்….. சோவியத் யூனியனோடு இந்தியா கொண்ட மையலும்….. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையாக உருமாறிப் போயிருந்த காஷ்மீரப் பிரச்சனையை அமெரிக்கா- சோவியத் பிரச்னையாக தடம் மாற்றிப் போட்டன.……

இவ்வளவுக்கும் மத்தியில் “பணிவானவர்கள்….. கோழைகள்” என வர்ணிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஆயுதப் போராட்டத்துக்கு அறிமுகமானதே 1988 க்குப் பிற்பாடுதான்.

இதிலும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற (JKLF) அமைப்பு ”எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம்…. இந்தியாவும் வேண்டாம்…. எங்கள் வாழ்க்கையை நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோம்” என்று போராடுகிற அமைப்பு. ஆனால் இந்த அமைப்பை பாகிஸ்தானுக்கும் பிடிக்காது. இந்தியாவுக்கும் பிடிக்காது. போதாதற்கு ”மதசார்பற்ற அரசுதான் காஷ்மீரில் அமைய வேண்டும்” என்பதுதான் அந்தப் போராளி அமைப்பின் லட்சியமாக சொல்லப்படுகிறது.

இந்த அமைப்பினரை ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்க ஆள் அனுப்பும் ஒரே நாடு பாகிஸ்தான்தான். அதைப் போலவே மதசார்பற்ற ஒரு அமைப்பை எதிரியாகக் காண்பித்து போரை நடத்துவதை விடவும் பாகிஸ்தான் ஆதரவும், மதப்பிடிப்பும் கொண்ட ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற குழுக்களை முன்னிறுத்தி போரிடுவதாகக் காண்பிப்பதுதான் இந்தியாவுக்கு லாபம்.

ஆயுதப் போராட்டம் அறிமுகமானதற்கே முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது அதற்கு முன்னர் நடந்த தேர்தல் கூத்துக்கள்தான் என்பது அநேகரது கருத்து. சனநாயகம் சிரிப்பாய்ச் சிரித்த தேர்தல்கள் அவை. நம்மூர் இடைத் தேர்தல்கள் எல்லாம் இந்தியா நடத்தும் காஷ்மீர் தேர்தல்கள் முன் பிச்சை வாங்க வேண்டும். ஒன்று இந்தியாவுடன் இணைப்பை வலியுறுத்துகிற வேட்பாளர் போட்டியின்றியே ”தேர்ந்தெடுக்கப்படுவார்”. அல்லது எதிர்த்து நிற்கிற வேட்பாளரது மனு தள்ளுபடி பண்ணப்படும். அங்கு எல்லாமே ”சிதம்பரம் பாணி” தேர்தல்கள்தான்.

சட்டப்பிரிவு 370 இன் ஓட்டைகள்….. பாகிஸ்தான் ஆயுத உதவி பெற்ற குழுக்களது வன் செயல்கள்….. நான்கு சதவீதமே உள்ள பண்டிதர்களது அதிகாரப்பகிர்வு….. பெரும்பாலான காஷ்மீரிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாகிஸ்தானின் ஆதரவு குழுக்கள் பண்டிதர்கள் மீது நடத்திய  தாக்குதல்கள்…. இடையில் ஆளுநராக அரசாண்ட ஜக்மோகனின் லீலைகள்….. என எழுதிக் கொண்டே போக ஏராளம் இருக்கிறது.

இந்த மண்ணின் மக்களது தொடரும் துயரங்களை இந்தத் தொடருக்குள்ளேயே முடித்து விட முடியாதுதான். ஆனாலும் இந்த மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதுதான் இம்மூன்று வார கட்டுரையின் நோக்கம்.

ஜம்மு – காஷ்மீரின் அடிப்படைப் பிரச்சனை என்பது இந்து முஸ்லீம் மோதலுமல்ல…… இந்தியா – பாகிஸ்தான் இரண்டுக்குமான போட்டி சமாச்சாரமும் அல்ல. அது காஷ்மீரிகள் தங்களது தன்னுரிமைக்காக ஏங்கும் ஏக்கங்களில் கலந்து நிற்கிறது.

எது எவ்வாறாயினும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அது ஒன்றே ஒன்றுதான்.

சுருக்கமாகச் சொல்வதானால்……

காஷ்மீர் விடுதலைக்காக

ஆயுதம் ஏந்தியவர்களெல்லாம்

போராளிகளும் அல்ல.

 

தன்னுரிமையை

நேசிக்கும் காஷ்மீரிகள் எல்லாம்

தேசத்துரோகிகளும் அல்ல.

http://pamaran.wordpress.com/2010/11/

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அவன் ஊரை அடித்து  உலையில் போட்டாலும்.. சில பேருக்கு கிந்தய பாசம் போகல ...

அவர்கள் கேட்க வேண்டிய பாடல் இதனை தினம் காலை மற்றும் மாலை 4 வேளை மனனம் செய்து பாடிவந்தால் பாரத மாதாவின் அருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது...


 

 

நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தது சரி என அனைவரும் வாக்களியுங்கள்.

 

http://dinamani.com/

 

(கீழே வலது பக்கம் வாக்களிக்கும் பகுதி உள்ளது.)

 

(via facebook)

Edited by துளசி

Rajkumar Palaniswamy

 

காஷ்மீர் விடுதலைப் போராளி ஒருவரை மட்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து இங்குள்ள தமிழர்களிடம் பேசவைப்பது சரியல்ல. இந்தியாவில் இனத்தால் ஒடுக்கப்பட்ட அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து, பஞ்சாப் போன்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராளிகளையும், மொழியால் ஒடுக்கபட்ட இந்தி அல்லாத கன்னடர், தெலுங்கர் , வங்காளி, ஓடிஸா, மராத்தியர்கள் போன்ற தேசிய இன மக்களின் உரிமைப் போராளிகளையும் ஒருங்கே தமிழகத்திற்கு கொண்டு வந்து மாபெரும் உரிமை மீட்பு போராட்டத்தை நாம் நடத்த வேண்டும்.

அப்போது தான் இந்தியாவின் உண்மையான முகம் இந்தியத் தமிழர்களுக்கும், வடஇந்திய அப்பாவி தேசபக்தர்களுக்கும் தெரியவரும்.

 

இது நடக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் கைகோர்த்தால் இந்தியாவின் ஒற்றை ஆட்சியை நிச்சயம் வீழ்த்த முடியும். தேசிய இனங்கள் தன்னாட்சி பெற்று அடக்குமுறையில் இருந்து விடுதலையும் பெறும்.

 

(facebook)

நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தது சரி என அனைவரும் வாக்களியுங்கள்.

 

http://dinamani.com/

 

(கீழே வலது பக்கம் வாக்களிக்கும் பகுதி உள்ளது.)

 

(via facebook)

 

உடன்பாடோ இல்லையோ என்ற குழப்பத்துக்கு அப்பால் "சரி" என்று வாக்களித்து உள்ளேன்!

 

தற்போது

சரி - 59%

தவறு - 39%

 

மக்கள் கருத்து

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்துக்கு பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை அழைத்தது....

  • சரி - 65%

     
  • தவறு - 33%

     
  • கருத்து இல்லை - 2%

     

Total number of votes: 2008

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சரி என்றுதான் வாக்களித்தேன்.. நிழலியின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கிறது.. :D

இதில்.. நமக்கேன் வம்பு.. நம் வீட்டுக்குள் வராதவரைக்கும் பாதகமில்லை என்கிற மனப்பான்மையே தெரிகிறது..

இது கிட்டத்தட்ட சென்னை மக்களின் மீனவர் குறித்த அபிப்பிராயத்தை ஒத்தது.. நம்மள இன்னும் சுடவில்லைதானே.. என்கிற மனப்பான்மை..

அதுபோலவே சென்னையில் படிக்கும் பல மாணவர்களுக்கு கூடங்குளத்தை திறக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு உள்ளது.. தடையற்ற மின்சாரம் அவர்களுக்கு மிக முக்கியம்.. :D

ஒடுக்கப்படும் இனங்கள் கைகோர்க்காமல் முதலாளித்துவ சிந்தனைகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதே என் எண்ணம்..:

நிழலியின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கிறது.. :D

ஒடுக்கப்படும் இனங்கள் கைகோர்க்காமல் முதலாளித்துவ சிந்தனைகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதே என் எண்ணம்..:

 

ஒடுக்கப்படும் இனங்கள் எல்லாம் ஒன்றாக கைகோர்த்து அடிமைத் தளையினை உடைத்து வெளியேறுவது என்பது வாசிக்க நல்லதொரு மார்க்சிய சிந்தனை. ஆனால் இன்றைய அளவில் நடைமுறை சாத்தியமில்லை. புத்தியுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனமும் பல ஆதிக்க சக்திகளுடன் சில சமரசங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் தங்கள் விடுதலையை கட்டம் கட்டமாக பெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஏனெனில் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரச்சனைகளும், அரசியலும், யதார்த்த சூழலும் இன்னொரு இனத்தின் ஒடுக்கப்பட்ட சூழலிற்கு ஒத்ததாக அமைவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தன் நாட்டில் ஒரு இனத்தினை ஒடுக்கிக் கொண்டு இருக்கும் ஒரு அரசு இன்னொரு நாட்டின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கும் அமைப்பினை ஆதரிப்பதும், இன்னொரு நாட்டில் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் அமைப்பு இன்னொரு நாட்டில் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் அமைப்பினை எதிரியாக பார்ப்பதும் வழக்கம்.

 

ஒடுக்குமுறைக்குள்ளாகி சுந்திரம் பெற்ற இனங்களைக் கொண்ட கியூபா, வியட்நாம் போன்ற அரசுகள் கூட எம் விடுதலைப் போருக்கு எதிராகத்தான் இன்று வரைக்கும் இருக்கின்றன. தம்மை ஒடுக்கிய / ஒடுக்கும் அமெரிக்க நலன் சார்ந்தும், சீன நலன் சார்ந்தும்தான் முடிவுகளை எடுக்கின்றன.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் சீமான் காசுமீரப் போராளிக் கூட்டத்துடன் இணைந்து கொள்வது இன்றைய அளவில் சரியான முடிவல்ல. தமிழகத்தில் ஈழ ஆதரவுக்கான தளம் கன காலத்தின் பின் மெல்ல மெல்ல உருவாகி வரும் போது, தமிழக மக்களால் மிகவும் வெறுக்கப்படும் பிரிவினை வாத அரசியலை கொண்டுள்ள காசுமீர போராளிகளுடன் வெளிப்படையாக ஆதரவு கொள்வது அரசியல் தற்கொலைக்குரிய செயல் என்றே நினைக்கின்றேன்.

 

இவற்றை விட காசுமீர முஸ்லிம்கள் காசுமீர மண்ணின் மைந்தர்களான இந்துக்களான பண்டிட்டுகளுக்கு செய்த அநியாயங்களும் கொடூரங்களும் நினைவில் வருகின்றன. இன்று அந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டவர்களாக மண்ணின் மைந்தர்கள்  பண்டிட்டுகள் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை  நம்பி  புருசனைக்கைவிட்ட கதைதான்  :( :(  :(  :(

ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதவர்கள் உண்மையில் விடுதலையை தான் கேக்கின்றார்களா என்பதில் பலருக்கு மிக முக்கியமாக மேற்கத்தைய நாடுகளுக்கு சந்தேகம் வரும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம்... 

 

அருகில் இருக்கும் நாட்டின் மக்கள் முக்கியமாக அசாம், திரிபுரா, மணிப்பூர், காஸ்மீர், ஆந்திரா எண்று நாங்கள் படும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள்...  அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பே அளிக்காமல் விட்டதின் விளைவைதான் இந்தியா எங்களுக்கு காட்டியது...

 

அதேகாரணத்தால் தான் இந்திரா காந்தியை கொண்ற சீக்கியர்களிடம் மன்னிப்பு கேக்கும் நிலையில் இந்திய அரசும் இராசீவை கொண்டார்கள் எண்று எங்கள் மக்கள் ஒட்டு மொத்தத்தையும் தண்டிக்கும் நிலையிலையும் இருக்கிறது...

 

இந்தியாவின் உல்பாவையும்/  பல்வேறுகாஸ்மீர் போராட்ட அணிகளையும்  சீனாவும் பாக்கிஸ்தானும் ஏதோ ஒரு காரணத்தால் ஆதரிக்கிறது...  ஆனால் எங்களை இந்தியா சீனா, பாக்கிஸ்தானும் எதிர்க்கிறது...

 

இவ்வளவும் ஏன் பலஸ்தீனமும் இஸ்ரேலும் கூட எதிர்க்கிறது...  

 

இதில் நான் சொல்ல வருவது  நாங்கள் யாரயும் எதிர்க்க வேண்டாம் எல்லாருடனும் உறவோடு இருப்போம் நடுநிலையோடு நடந்து கொள்வோம்...  அப்படி ஒரு அரசியலைதான் பல சிறிய நாடுகள் செய்கின்றன...   ஒடுக்கப்படும் மக்களுக்கு கொடுமைகள் செய்யாதீர் என்பதான கோரிக்க பலமான அரசியல் நகர்வாக இருக்கும்... 

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்கப்படும் இனங்கள் எல்லாம் ஒன்றாக கைகோர்த்து அடிமைத் தளையினை உடைத்து வெளியேறுவது என்பது வாசிக்க நல்லதொரு மார்க்சிய சிந்தனை. ஆனால் இன்றைய அளவில் நடைமுறை சாத்தியமில்லை. புத்தியுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனமும் பல ஆதிக்க சக்திகளுடன் சில சமரசங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் தங்கள் விடுதலையை கட்டம் கட்டமாக பெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஏனெனில் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரச்சனைகளும், அரசியலும், யதார்த்த சூழலும் இன்னொரு இனத்தின் ஒடுக்கப்பட்ட சூழலிற்கு ஒத்ததாக அமைவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தன் நாட்டில் ஒரு இனத்தினை ஒடுக்கிக் கொண்டு இருக்கும் ஒரு அரசு இன்னொரு நாட்டின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கும் அமைப்பினை ஆதரிப்பதும், இன்னொரு நாட்டில் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் அமைப்பு இன்னொரு நாட்டில் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் அமைப்பினை எதிரியாக பார்ப்பதும் வழக்கம்.

 

ஒடுக்குமுறைக்குள்ளாகி சுந்திரம் பெற்ற இனங்களைக் கொண்ட கியூபா, வியட்நாம் போன்ற அரசுகள் கூட எம் விடுதலைப் போருக்கு எதிராகத்தான் இன்று வரைக்கும் இருக்கின்றன. தம்மை ஒடுக்கிய / ஒடுக்கும் அமெரிக்க நலன் சார்ந்தும், சீன நலன் சார்ந்தும்தான் முடிவுகளை எடுக்கின்றன.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் சீமான் காசுமீரப் போராளிக் கூட்டத்துடன் இணைந்து கொள்வது இன்றைய அளவில் சரியான முடிவல்ல. தமிழகத்தில் ஈழ ஆதரவுக்கான தளம் கன காலத்தின் பின் மெல்ல மெல்ல உருவாகி வரும் போது, தமிழக மக்களால் மிகவும் வெறுக்கப்படும் பிரிவினை வாத அரசியலை கொண்டுள்ள காசுமீர போராளிகளுடன் வெளிப்படையாக ஆதரவு கொள்வது அரசியல் தற்கொலைக்குரிய செயல் என்றே நினைக்கின்றேன்.

 

இவற்றை விட காசுமீர முஸ்லிம்கள் காசுமீர மண்ணின் மைந்தர்களான இந்துக்களான பண்டிட்டுகளுக்கு செய்த அநியாயங்களும் கொடூரங்களும் நினைவில் வருகின்றன. இன்று அந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டவர்களாக மண்ணின் மைந்தர்கள்  பண்டிட்டுகள் உள்ளனர்.

 

42813029303609083192330.jpg இனத்தை வைத்து தானும் தனது குடும்பமும் வாழ நினைத்த திராவிட தலைமைகளில் மத்தியில் தனது இனத்திற்காகவே மொத்த குடும்பத்தையும் களத்திலே பலிகொடுத்தவன் எங்கள் தமிழ்தேசிய தலைவன் பிரபாகரன். அப்படிப்பட்ட பெருமைக்குரிய தமிழ்தேசிய தலைவனை எங்கள் அரசியல் வழிகாட்டியாக தேர்ந்தெடுத்த நாங்கள் இதற்க்கெல்லாம் அஞ்சப்போவது இல்லை. எங்களை " பிரிவினை வாதிகள்" "இறையாண்மைக்கு எதிரானவர்கள்" "தீவிரவாதிகள்" என எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். நாங்கள் வாழ்வதற்காக கட்சி நடத்தவில்லை... எங்கள் இனம் வாழ்வதற்காக இயக்கம் கண்டுள்ளோம். நீங்கள் என்ன சொன்னாலும் எங்களின் இலக்கு ஒன்றுதான் "இனத்தின் விடுதலை"

fb

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பலதிசைகளிலும் உடையும்போது தான் தமிழர்களுக்கு விடுதலை எளிதாகும்.

 

அதனால் இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவுக் கரம் கொடுப்பது ஈழம் அமைவதற்கான போராட்டத்தில் ஈடுபடுபவர்களது கடமை.

 

 

943524_526434247392361_1352447691_n.jpg

 

(facebook)

சரி என வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

 

 

மக்கள் கருத்து

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்துக்கு பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை அழைத்தது....

  • சரி - 65%

     
  • தவறு - 33%

     
  • கருத்து இல்லை - 2%

     

Total number of votes: 2008

 

 

நான் வாக்களிக்கும் போது தவறு என்பதற்கே அதிக வாக்குகள் விழுந்து அதிக வீதத்தில் இருந்தது. பின்னர் முகநூலில் பலர் share பண்ணியதும் சரி என்பதற்கான வாக்கு வீதம் அதிகரித்தது. 

 

இன்னும் அதிகரித்திருப்பதை இறுதியாக பதியப்பட்ட உங்கள் பதிவு காட்டுகிறது. :)

 

இதற்கான வாக்கெடுப்பு முடிந்து விட்டது போலிருக்கு. இப்பொழுது காணவில்லை. வேறு வாக்கெடுப்பு தான் இப்பொழுது உள்ளது. :rolleyes:

 

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

 

இதற்கான வாக்கெடுப்பு முடிந்து விட்டது போலிருக்கு. இப்பொழுது காணவில்லை. வேறு வாக்கெடுப்பு தான் இப்பொழுது உள்ளது. :rolleyes:

சபைக்கு வரப் பிந்தியதால் எனக்கு  வாக்குரிமை இல்லாமல் போய்விட்டது.

அல்லது சரி என்பதற்கு வாக்குகள் அதிகரித்தபடியால் தூக்கிவிட்டார்கள்

இந்தியா பலதிசைகளிலும் உடையும்போது தான் தமிழர்களுக்கு விடுதலை எளிதாகும்.

 

அதனால் இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவுக் கரம் கொடுப்பது ஈழம் அமைவதற்கான போராட்டத்தில் ஈடுபடுபவர்களது கடமை.

 

ஆக, அடுத்த இருநூறு முந்நூறு வருடங்களுக்கு தமிழர்களுக்கு விடுதலை இல்லை என்று சொல்கின்றீர்கள்.

 

இந்தியா எமக்கு கணிக்க கூடிய கால கெதியில் உடையபோவதில்லை. இந்திய உடைவை அமெரிக்க, சீனா ஆகியவை விரும்பப்போவதும் இல்லை. இதுதான் யதார்த்தம். நாம் இந்திய உடைவை விரும்புகின்றோம் என்பதற்காக இந்தியா உடையப்போவதும் இல்லை.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் ஈழத் தமிழர்களுக்கு காசுமீர் மக்களினதும், ஆந்திர மக்களினதும், திரிபுரா மக்களினதும் ஆதரவை விட பல மடங்கு ஆதரவு தமிழக மக்களிடம் இருந்து கிடைப்பதே ஓரளவுக்கு பயன்தரும். தமிழக மக்கள் காசுமீர பிரிவினையை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை. ஏற்கனவே இஸ்லாமியர்கள் தமிழகத்தில் தம் மீதான வெறுப்பினை தம் செயல்களினால் அதிகரித்துக் கொண்டு இருக்கும் போது, காசுமீர மக்களது போராட்டதுக்கு எந்தளவுக்கு ஆதரவு வழங்குவர் என்று தெரியவில்லை. அத்துடன் எமக்கான ஆதரவு தமிழக மக்களிடம் இருந்து ஏனைய மாநிலங்களுக்கும் பரவுவதுதான் நடைமுறையில் சாத்தியமானதும்.

 

இறுதியாக நான் சொல்வது, சீமான் இந்த விடயத்திலும் தவறிழைத்துள்ளார் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?  

1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.

டலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதை காந்தி பெயரை வைத்துக் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் காங்கிரசும், பலான விசயம் மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் விடாது செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் கண்டித்துள்ளன.

yasin-malik.jpg

யாசின் மாலிக்

“வெளிநாடுகளின் தொடர்பு இருப்பதாக யாசின் மாலிக் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் இறையாண்மையை கேள்வி கேட்டு காஷ்மீரத்தை துண்டாடத் துடிக்கும் அவர், கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு அழைத்து வர உதவிய இயக்கங்கள் எவை? இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தமிழகத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தூவும் விஷவித்துக்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தேசபக்தியுள்ள எல்லா கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம் என்று கூறி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை பங்கேற்கச் செய்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைகுனியச் செய்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் இன்றி ஈழத் தமிழர் என்ற அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிக சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 370 என்ற சிறப்பு விதியே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி சலுகைகள் வழங்கினாலும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும் என இந்துக்களை துரத்தியடித்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் யாசின் மாலிக். எனவே, இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு இணைத்துப் பார்ப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மரக்காணம், தருமபுரி போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது அங்குச் செல்ல தமிழகத் தலைவர்கள் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் அனுமதித்தது அபாயகரமானது” என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பேசவில்லையே தவிர அவர் இவர்களை விட இன்னும் ஒருபடி அதிகம் உறுமக்கூடியவர். மேற்கண்ட அறிக்கைகளின் படி காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் நாங்கள் பாசிச கட்சிகள்தான் என்பதை ஒரே குரலில் உறுதி செய்கின்றன.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்கக் கூட அனுமதி இல்லை” என்று பாரதீய ஜனதா தலைவர்கள் புலம்பியிருக்கின்றனர்.

india-army-in-kashmir1.jpg

காஷ்மீரில் இந்திய இராணுவம்

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக யாசின் மாலிக் ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய, பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து இந்திய/பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.

இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளையும் திரும்ப காஷ்மீரில் குடியேற்ற வேண்டும் என்று பேசி வருபவர் யாசின் மாலிக்.

1983 தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், 2002 கலவரத்தில் குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.

சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடும் போது இந்திய அரசால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களே நமது நேச சக்தியாக இருக்க முடியும். ஆனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஈழத்தமிழரின் உரிமைகளை ஒடுக்கி ஆட்டம் போடும் சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்கள். புலி ஆதரவாளர்கள், தமிழின ஆர்வலர்கள் பலரும் கூட பாரதிய ஜனதா கட்சி காங்கிரசுக்கு தேவலாம் என்ற சந்தர்ப்பவாத பார்வை கொண்டவர்களே. அப்படிப்பட்டவர்கள் பாஜகவின் காஷ்மீர் குறித்த ஒடுக்குமுறைப் பார்வையை பார்த்தாவது திருந்தட்டும்.

போர்க்குற்றவாளியும், இனப்படுகொலை செய்தவருமான ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்கும் காங்கிரசும், பாஜகவும்தான் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே அன்றி யாசின் மாலிக் அல்ல.

http://www.vinavu.com/2013/05/22/yasin-malik-kashmir-fighter/

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் பேசும் வலு இல்லாதவர்களை எந்த ஆதிக்க வர்க்கமும் திரும்பிப் பார்க்காது.. இதை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டுள்ளோம்.. புலிகள் இருந்தபோது வன்னிக்கும், கொழும்புக்கும், அமெரிக்காவுக்கும், நோர்வேக்கும் இடையில் ஓடித்திரிந்தவர்களை இன்று காணக்கிடைக்கவில்லை.. அல்லது அவர்களுக்கு இன்று நாம் தேவைப்படவில்லை..

இன்று உள்ள ஒரே வலு தமிழகத்தின் சந்தை வாய்ப்பு மட்டுமே..

1991 இல் இராஜீவ் கொலைக்குப் பின்னும் பல்லாண்டுகள் புலிகள் செல்வாக்குடன் இருந்தார்கள்.. இதில் இந்தியாவுக்கு சில அனுகூலங்களும் இருக்கவே செய்தன.. ஆனால் சுய விருப்புகளுக்காக 2003/04 காலப்பகுதியில் கொள்கைமாற்றம் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவின் பேரம்பேசும் ஆற்றல் 2009 இல் வலுவாகக் குறைந்துவிட்டது.. புலிகள் எப்படியும் காட்டுக்குள் ஓடி நின்று நொட்டுவார்கள் என்று போட்ட தப்புக்கணக்கினால் வந்த நிலை..

புலிகளை அழிக்கத் துணைபோனதன் மூலம் உள்ளூரில் இராஜீவ் காந்தி குற்ற மனப்பான்மையின்பாற்பட்ட பேரம்பேசும் வலுவையும் இந்திய அரசு இழந்துவிட்டது.. இன்று மாலிக்கும் வருகிறார்.. 2009 இன் முன்பு நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிகழ்வு..

எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.. தேசநலனை மீறி சொந்த விருப்பை முன்னிறுத்தியவர்கள் அதற்கான விலையையும் கொடுத்தேயாக வேண்டும்.. கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்கோ டங்கு... சர்வதேசமும் புன்னாக்கு தேசமும்....என்னை பொறுத்த மட்டில் அண்ணன் சீமான் மலிக்கை வர வைத்தது சரியே...

Edited by பையன்26

நான் பிரிவினை வாதி அல்ல. ஆனாலும் சில கருதுகளை இங்கே பதியலாம்.

 

காங்கிரஸ் சிங்காசனத்தில் இருந்த போது இது முடியுமா என்ற கேள்வியிருந்தது. அண்ணத்துரையின் பதில் முடியும் என்றானது. இன்று இந்தியா எங்கனும் மாநிலக்கட்சிகள் வலுத்துவிட்டன.

 

தமிழக தமிழர் காங்கிரஸ் இந்தியாவில் தெய்வபக்த்தி கொண்டாடும் வரையும் காங்கிரஸ் திரும்ப வந்து எல்லாவற்றையும் செய்யும். தமிழகத்திலிருந்து கிந்திய தெய்வபக்தியை அறுப்பதற்கு சீமானிடம் விடை இருந்தால் அவர் வரவேற்கப்பட வேண்டியவர்.

 

அமெரிக்கா, இந்தியா கஸ்மீரை ஆக்கிரமிப்பதை எதிர்க்கிறது. அங்கு கியூபா அமெரிக்கவை எதிர்பது போல தோற்றப்படுகிறது. ஆனால் இதில் கியூபா போன்றவை தமிழ் ஈழத்தை எதிர்க்கும் போது, அமெரிக்கா தமிழ் ஈழத்தை எதிர்க்கும் போது அன்று அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், இன்று அமெரிக்கா சர்வாதிகார இலங்கையை எதிர்க்கும் போது அமெரிக்காவுக்கு எதிராகவும் நடந்து கொள்கிறார்கள் போல் தென்படுகிறது.  ஆனாலும் இவர்களும் கொள்கை இல்லாத மகிந்த சித்தாந்த அரசு போலவே குடும்ப, கொள்கை இல்லாத அரசுக்காரர்கள். இன்றைய காலங்களில் இவர்களால் உலக அரசியல் மாற்றம் பெறுவதில்லை.

 

இந்தியாவை உடைக்க முடிகிறதோ இல்லையோ, மானிலக்கட்சிகளின் கூட்டுறவு மத்திய அரசை சிந்த்திக்கவைக்கும். கஸ்மீருக்குள் மட்டும் இந்துக்கள் இல்லை. தமிழ் ஈழமண்ணிலும் முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.  என்வே முஸ்லீம், இந்துகள் பிரச்சனையானது தீர்த்துவைக்கப்பட வேண்டியது. கஸ்மீர இந்துகளை இந்திய அரசின் கையில் விட முடியாது. இது தமிழக மீனவரை இந்திய அரசின் கையில் விடுவது போன்றது.

இங்கே 'இந்தியாவை' உடைப்பது என்பது இந்திய வல்லாதிக்க ஆளும் சக்திகளை உடைப்பது என்பதே. பல் தேசிய இனங்களின் கூட்டாக இருக்க வேண்டிய இந்திய மத்திய அரசு, ஒரு குறிப்பிட்ட வர்க்க சாதிய அரசாக இருப்பதே உடைக்கப் பட வேண்டியது. இது தமிழ் நாட்டு மக்களால் மட்டும் சாத்தியப் படப் போவதில்லை.

 

பரந்து விரிந்த்த மிகப் பெரிய துணைக் கன்டத்தில் இருக்கும் பல் வேறு தேசிய இனங்களின் கூட்டிணைந்த போராட்டத்தால் மட்டுமே , இந்திய வல்லாதிக்க சக்திகளை வீழ்த்த முடியும்.

 

இதனை இந்தியா எங்கனம் பரந்த்த ஒரு அரசியல் இயக்கமாக நாம் தமிழர் வளர்த்து எடுக்க வேண்டும். இங்கே பிரிவினைப் பூச்சாண்டி காட்டி மக்களைப் பயம் கொள்ள வைப்பதன் மூலம் , இந்திய வல்லாதிக்க சக்திகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள முயல் கின்றன.

 

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் எல்லாம் ஒன்று பட்டால், அம் மக்களது விடுதலை என்பது இலகுவில் பெறப்படக் கூடிய ஒன்று. இதனால் ஈழமும் விடுதலை பெறும். இந்திய உபகண்டத்தில் அரசியல் மாற்றம் நிகழாமல்,எம்மால் விடுதலை அடைய முடியாது என்பதே முள்ளிவாய்க்கால் எமக்குக் கற்றுத் தந்த பாடம். போராட்டம் இன்றி விடுதலை இல்லை.போராடும் சக்திகள் ஒன்று படுதலே போராட்டத்தின் பலம். பலம் அற்ற போராட்டம், இலகுவில் தோற்கடிக்கப்படும்.

 

பலம் பெற்ற போராட்டங்களை சில ஆதிக்க சக்திகள் ஆதரித்தன, புலிகள் பலமாக இருந்த போது, எமக்கான அங்கீகாரம் கிடைத்தது. புலிகள் பலமற்று இருந்த காலத்தில் , அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை.

 

சீமான் இந்த ஒருங்கிணைவை, போராடும் அனைத்து சக்திகளுக்கும் விரிவு படுத்த வேண்டும்.இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் நேச சக்திகளுடனான உறவை வளர்க்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.