Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – நோர்வே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – நோர்வே
19 மே 2013


இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.

கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளது என நோர்வே வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் ப்ரோட் அன்டர்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ஏனைய தரப்பின் கருத்துக்கைள நீதிமன்றம் உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தூதரக அதிகாரிகள் ராஜதந்திர வரப்பிரசாதம் உடையவர்கள் எனவும் இதனால் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் n;தாடர முடியாது எனவும் நோர்வே ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ராஜதந்திர வரப்பிரசாதங்கள் தொடர்பிலான வியன்னா பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டுமென தற்போதைய நோர்வே தூதுவர் க்ரேட் லொச்சின் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் வியன்னா பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நீதிமன்றின் உத்தரவு தொடர்பான மொழிபெயர்ப்பு அறிக்கையை உன்னிப்பதாக கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91938/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நீதித்துறை குறித்து ஏன் அதிர்ச்சி? உலக நீதியின் பிறப்பிடம் அல்லவா அது? :D

இப்படி ஒரு தீர்ப்பு வராமல் இருந்திருந்தால் தான் நாங்கள் அதிர்சி அடைந்து இருப்பம்

போர்நிறுத்த ஒப்பந்தத்தை தனிச்சையாக மீறியமைக்காக சிங்கள அரசுக்கெதிராக பல பில்லியன் டொலர் நட்டஈடு கேட்டு நோர்வேயும் அதே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த நேரத்தில் நோர்வே காரர்களுக்கு ஸெல் அடித்தது (பூநகரி, வாகரை) போன்றவற்றுக்கு கோத்தபாயவிடம் நட்ட ஈடு வாங்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இவையளுக்கு ஆப்புக்குமேல் ஆப்பு இறக்கினாலும் திருந்தமாட்டினம், இன்னமும் இருக்கு உங்களுக்கு ஆப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

•Norway’s decision to terminate the agreement with FCE was done in accordance with the termination clauses in the agreement relating to non-fulfillment of the recipient’s obligations. •We have just received a translation of the court order which we are now carefully studying. •Norway’s position has always been that we do expect Sri Lanka to comply with well-established international rules on immunity, including those contained in the Vienna Convention on Diplomatic relations to which also Sri Lanka is a party. Diplomats and state officials from Sri Lanka are enjoying the same privileges when serving for their government.

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, ராஜதந்திர வரப்பிரசாதங்கள் தொடர்பிலான வியன்னா பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டுமென தற்போதைய நோர்வே தூதுவர் க்ரேட் லொச்சின் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் வியன்னா பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை அரசுபற்றிய பாடத்தைப் படித்துச் சித்தியடையாமல், க்ரேட் லொச்சின் குதிரையோடி இலங்கைக்கான தூதுவர் பதவியை பெற்றுக்கொண்டதுபோல் தெரிகிறது. :blink:.

Edited by Paanch

சொல்யும் நிரம்பி வழியும் பொக்கெட்டுக்குலிருந்து எடுத்து கொடுக்க வேண்டியதுதானே.

 

அதாவது சொலெமை பதவில் வைத்திருக்க வேண்டுமாயின் நோர்வே அரசங்கம் பொட்டுக்கட்டத்தான் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.