Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா?

Featured Replies

அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா?

ddfewed.jpegயாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடை யில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன.  யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது. கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன. அதேநேரம் பலாலிக்கும் இரத்மலானைக் கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவையும் இடம்பெறுகின்றது.  இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அதிரடியாகத் தேவைதானா? என்ற கேள்வி எழவே செய்யும்.

இந்திய வீடமைப்புத் திட்டம் இன்னமும் முழு மையடையாத நிலையில் - இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கு வீட்டுத் திட்டம் போதுமானதல்ல என்ற புள்ளி விபரங்களுக்கு மத்தியில்,  யாழ் - கொழும்புக்கு இடையில் அவசரமாக அரங்கேறும் அதிவேகப் பாதையானது முன்னு ரிமை அடிப்படையில் வள ஒதுக்கீடு இடம்பெற வில்லை என்பதை உறுதி செய்கிறது. தமிழர் பிரதேசங்களில் இன்னமும் மிதிவெடி அகற்றப்படாமல் - உடைந்து போன வைத்திய சாலைகள் கட்டப்படாமல் - மீள்குடியமரும் மக் களின் இருப்பிடங்கள் கவனிக்கப்படாமல் இருக்கும்போது, அது தொடர்பான திட்டங்களில் அல்லவா இலங்கை அரசும் சீனாவும் உடன்படிக்கை செய்ய வேண்டும்.

இதைவிடுத்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேகப் பாதை அமைப்பது எந்தத் தேவை கருதியதென்ற சிந்தனையில், நீங்கள் வருவதற்கா? அல்லது நாங்கள் வருவ தற்கா? என்ற புரியாத புதிர் எழுகை பெறுகிறது. அதாவது எதிர்காலங்களில் வட மாகாணத்தில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகள் தொடர்பில் போராட்டங்களை முன்னெடுப்பார்களாக இருந்தால், அதனைத் தடுப்பதற்கும் அடக்குவதற்குமாகத் தென் பகுதியிலிருந்து துருப்புக்களையும் கனரக வாகனங்களையும் அதிவேகமாகக் கொண்டு வருவதற்கு அதிவேகப் பாதை வசதியாக இருக்கும் என்பதால், நீங்கள் வருவதற்காகவா? என்ற கேள்வி முன்னெழுகிறது. மறுபக்கமாக 1958களில், 1983களில் நடந்த தென்பகுதிக் கலாசாரம் வரும் காலங்களில் அரங்கேறினால் சிதம்பரம் கப்பலுக்காக காத்தி ராமல் தமிழ் மக்களாகிய நீங்கள் அதிவேகமாக உங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை உதவும் என்ப தால்,நாங்கள் வருவதற்கா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது. இதில் எது சரி என்பதைத் தவிர வேறு ஏதே னும் காரணம் உண்டா? என்று கேட்பதற்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.

  •  

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்களுக்குமில்லை, அவங்களுக்குமில்லை!

நயினாதீவுப் புத்தனுக்கு..... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

400 Km தூரத்தை கடக்க 2 நாள் பயணம் செய்தவர்களுக்கு, 4 மணித்தியாலத்தில் கொழும்பு-யாழ் பிரயாணம் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

நீர் உயர வரப்பு உயரும் என்கிற காலம் போய். நல்ல ரோடு இருந்தால் வாழ்வு வரும் என்று சொல்லுங்கோ.

அதென்ன இப்ப இருக்கிற A 9 க்கு மேல ரோடு போடுகிற என்கிற பீதிய கிளப்புகிறீர்கள். சில இடங்களில் வரலாம். முழு இடமும் அப்படி வந்தால். உலகத்தில் இருக்க எல்லா சிமேந்தையும் கொட்டித்தான் அப்படி கட்டலாம். பீதி கிளப்ப என்றே இருக்கிறார்கள். :unsure:

நெல்லுக்கிறறைத்த நீர்....................

சரி  சரி

நம்ம ஊரில் நின்று தங்கித்தானே போகணும்..... :D

400 Km தூரத்தை கடக்க 2 நாள் பயணம் செய்தவர்களுக்கு, 4 மணித்தியாலத்தில் கொழும்பு-யாழ் பிரயாணம் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

நீர் உயர வரப்பு உயரும் என்கிற காலம் போய். நல்ல ரோடு இருந்தால் வாழ்வு வரும் என்று சொல்லுங்கோ.

அதென்ன இப்ப இருக்கிற A 9 க்கு மேல ரோடு போடுகிற என்கிற பீதிய கிளப்புகிறீர்கள். சில இடங்களில் வரலாம். முழு இடமும் அப்படி வந்தால். உலகத்தில் இருக்க எல்லா சிமேந்தையும் கொட்டித்தான் அப்படி கட்டலாம். பீதி கிளப்ப என்றே இருக்கிறார்கள். :unsure:

இது எந்தக்காலத்தில்.....???

நானறிந்தவரையில்

இரவு புறப்பட்டால் அடுத்த நாள் அதிகாலையில் தானே.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எந்தக்காலத்தில்.....???

நானறிந்தவரையில்

இரவு புறப்பட்டால் அடுத்த நாள் அதிகாலையில் தானே.........

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி. நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது. உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு -யாழ் அதிவேக வீதி அமைத்ததற்கான கணக்கு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் 

  • தொடங்கியவர்

இனிமேல் யாழ்ப்பணம் வந்து போக பிளேனுக்கு கொடுக்கிற பணம் தெருவுக்கு கொடுப்பார்கள்.

எமது கடந்து போன இளமைகாலங்கள் திரும்பி வராது என்று தெரியும் இருந்தாலும் அதன்  நினைவுகளில் வாழ்கின்றோம் அது போலத்தான் எமது நாட்டு நிலைமையும் .

தமிழரசு காலம் ,கூட்டணி காலங்கள் ,இயக்க காலங்கள் ,புலிகளின் ஆட்சி காலங்கள் இனி திரும்பிவரபோவதில்லை .

இலங்கை வேறு ஒரு உருவில் விரைவில் மாறிவிடும் .தமிழனும் அங்கு பிழைத்துகொள்வான் .

யாழில் பலர் இன்னமும் அந்த இளமை திரும்பிவரும் என்று கனவு காண்கின்றார்கள் .

பிஞ்சிலை கனிந்ததாக்கும். :unsure:

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி. நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது. உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

யாழ் to கொழும்பு 2 நாள் மட்டும் இல்லை சிலநேரம் 3 , 4 நாட்களும் எடுத்ததுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிய, இலங்கையில் இந்த ஹை வே பற்றிய கதை தொடங்கினது- எனக்கு தெரிய- 2003/2004, கண்டி கொழும்பு. ஒரு மணித்தியலத்தில கொழும்புக்கு போகும் என்று கட்டத்த தொடங்கிறார்கள். அந்த நேரத்தில் அது லைன் பஸ்லில் இரண்டரை மணித்தியாலம் எடுக்கும். 105/109 km - அது கட்டி முடிந்ததோ தெரியவில்லை.

பிறகு இப்ப காலி கொழும்பு, கட்டியிருகிரார்கள்...யாழ்- கொழும்பு, இப்ப தொடங்கினார்கள் என்றால் ஒரு 50 வருடத்தில் முடிக்கலாம். கொழும்பு கட்டு நாயக்க கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்திலிருந்து யாழ்தேவி, உத்தர தேவி, Mail Train, இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் அதிகம் பிரசித்தமில்லாத Express Train என்று நான்கு தொடருந்துகள் கொழும்பு போய்வருவதுண்டு.  

சிங்களத்தின் தொடருந்து பாதைகள் மட்டக்களப்பு, திருகோணமலை, பிரதானமாக யாழ்ப்பாண பாதைகளில் கிடைக்கும் ஆதயங்கலிலேயே மற்ற இடங்களுக்கு வண்டிகள் விட்டு வந்தார்கள்.  ஆனால் மிக கேவலமாக கழித்துவைக்கபட்ட பாதையும் அதுதான். (அந்த நேரத்தில் இ.பொ.ச வில் லாபமூட்டும் ஒரு டிப்போ யாமாவட்டம் மட்டும்தான். ஆனால் கொழும்பு செய்வது என்ன வென்றால், தெற்கில் 5 வருடங்கள் ஓடிக் கழித்த பஸ்க்களையே யாழுக்கு அனுப்பிவைக்கும். அதிலும் டெக்கர் பஸ் ஆக இருந்தால் அது லண்டனில் ஓடி 5வருடத்தின் பின் ஏலத்தில் வாங்கி, கொழும்பில் 5 வருடம் ஓடி அதன் பின்னர்தான் யாழ்ப்பாணம் வரும்) பெரும்பாலும் வேலை முடித்துவிட்டு பின்னேரப்பொழுதில் புகையிரத்திற்கு சென்றால் குருநாகல் அநுராதபுரம் செல்லும் சிங்களவர் நேரத்திற்கு வந்து இருக்கைகளை பிடித்து வரவிருக்கும் சிங்களவர்களுக்காக பக்கத்தில் சட்டி பொட்டிகளும் வைத்திருப்பர்கள். நாம் அநுராதபுரம் அல்லது சில சமையங்களில் வவுனியா வரை புட்போட்ல் நிற்க வேண்டி வரும் அல்லது தரைகளில் இருப்போம். கொண்டாட்ட காலங்களில் அது நிச்சயமாக அநுராதபுரம் வரை இருக்கும். கோட்டை மருதானை கடந்து ஏறும் சிங்களவர் நாங்கள் சீட்டுகளில் இருந்தால் அதை பார்த்துக் கொதிப்பார்களும்.

1970 களின் ஆரம்பத்தில் யப்பான் பல நாடுகளில் தனது முதலீடுகளை செய்து வந்தது.  அந்த நேரத்தில் Hitachi காபொறேசன் இலங்கையில் தங்கள் புலட் ட்றைன் மாதிரி இன்னொருவகையை புதிய அதிவேக பாதை ஓன்றை தனியாக அமைத்து கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஓடவிட கேட்டார்கள். அவர்கள் கொடுத்த அந்த நேர விபரங்களின் படி யாழ்ப்பாணத்தொழிலாளர்கள் காலையில் ஏறி வேலை நேரத்திற்கு கொழும்புவில் இருக்க முடியும் என்று கூறிப்பிட்டிருந்தார்கள். வண்டி 90 மைல் வரை அக்சிலறேட் பண்ணத்தக்க பாதையாக புதிய பாதை இருக்கும் என்று வருணித்திருந்தார்கள். இன்றும் கூட அமெரிக்காவில் 90-120 மைல் இருப்பு பாதைகளை போடுவதில் புடுங்குப் பாடுகள் போய்க்கொண்டிருக்கு. ஆனால் கிட்டாச்சி தான் தன் சொந்த செல்வில் பாதை போட்டுவிட்டு 25 வருடங்கள் பதையை தான் வைத்துகொள்ள வேண்டும் என்று கேட்டது. சிறிமா அப்படி ஒரு சிறப்பான சௌகரியம் தமிழருக்கு கிடைக்கவா என்ற மனப்புழுக்கத்தால் மறுத்துவிட்டா.

இன்று பாதைகள் போட வருவது இராணுவத்திற்கும், அரசகுடும்ப பொக்கெட்டுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி. நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது. உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

உண்மைதான் எரிமலை. விடியக் காத்தாலை ஊரிலிருந்து கார்பிடிச்சு சாவச்சேரி போய்  அங்க இருந்து கிளாலி போய் இருட்டுமட்டும் இருந்து உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கிளாலியால போட் ஏறி இரவிரவ பஸ் ஓடி புளியங்குளம், ஓமந்தை வந்து பாக்குகள தூக்கிக் கொண்டு No Mans Land எல்லாம் நடந்து வவுனியா வர அடுத்த இரவு வந்திடும். பிறகு இரவு வவுனியாவில இருந்து கோட்டைக்கு கோச்சி பிடிச்சு வந்து சேர மூண்டாம் நாள் விடிஞ்சிடும். கப்பல் ரூட்டும் எடுத்திருக்கிறன். குமணவில ஏறி கக்கூசுக்குப் போக வெளிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. நல்ல காலம் நான் அப்ப சின்னப் பொடியன். ஒருமுறை கப்பல் கிடைக்காமல் திருகோண மலையில் இரண்டு மாசம் அப்பாவோட தங்கி நிண்டு வந்தேன். கஷ்டப் பட்டவனுக்குத்தான் அது அதிண்ட கஷ்டம் புரியும்.

கலவரம் நடந்தால் அதே அனுபவம் தான். 1983ல் நான் நிற்க இடமில்லாமால், இருக்க இடமில்லாமல், ஆபத்தான  கொழும்பு தெருவுகளில் இரவு பகல் திரிந்தனான். கையில் இருந்த காசு கரைய முதல் வீட்டை போய் சேர்ந்திட வேண்டும் என்று படாத பாடு பட்டனாங்கள். கப்பலில் போனவர்கள் சொன்ன கதைகள் பல. அவ்வளவற்றுக்கும் கித்தாச்சி தன்னுடையை செலவில், தெற்காசிய நாடுகள் எங்குமே இருந்திருக்காத 90மைல் வேக பாதை போட வர சிங்கள அரசாங்கம் மட்டும்தான் தடையாக இருந்தது.

இன்று போடப்படும் அந்த வேகப்பாதையில் பயணம் செய்ய ஆட்கள் இல்லை. அன்று கித்தாச்சி அந்த வேகப்பாதையை போட்டிருந்தால் கூட சனத்தை கட்டுப்படுத்தியிருந்திருக்க முடியாது. அழிவை கொண்டுவந்த அரசை இந்த பாதையை வைத்து மெச்சுவது, நாயை கட்டி வைத்து நாய் சண்டைக்கு  பயன்படுத்தும் எஜமான், ஒவ்வொருதடவையும் சாப்பாடு போட வரும் போது, அதற்கு அவன் அடுத்த சண்டைக்கு அனுப்பி தன் உடம்புமுழுக்க புண்ணாகபோகிறது என்பதை அறியாமல் வாலை ஆட்டி ஆட்டி எஜமானுக்கு நன்றி தெரிவித்து சாப்பாட்டை ரசிப்பது போன்றது. இந்த வேகப்பதைகளின் கடன்களைக் கட்டப் போபவர்கள் தமிழர். இவை போடபடும் நோக்கம் இராணுவம் யாழ்பாணத்தால் வெளியேற்றப்பட வேண்டிய நிலை வந்தால் அதை நான்கு மணித்தியால நோட்டிசில் திரும்ப யாழ்ப்பாணம் கொண்டே இறக்குவதற்காக த்தான். அதாவது தமிழ்மக்கள் தங்களை அடிப்பதற்கு கடன் பட்டு பாதை போடுகிறார்கள். தமது மக்கள் அதே நேரம் பட்டிணி கிடக்கிறார்கள். அதற்கு யாழ்தேவிக்கு பிறகு தங்களுக் நடக்க நேர்தாக நினைத்து நன்றிக்கடன் இருப்பத்தாக சொல்கிறார்கள்.  அந்த கடனை பட்டு தமது மக்களுக்கு வீடும் உணவும்தான் தர வேண்டும் என்று கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை.

மல்லை  அண்ணா, கலவரத்தால் சனம் கஷ்டப்பட்டது உண்மை. எமது குடும்பம் கூட கலவரத்தால் இடம்பெயர்ந்தார்களாம், அப்ப நான் பிறக்கவில்லை. ஆனால் பின்னர், குறிப்பாக இறுதிக் காலத்தில் சனம் பட்ட கஷ்டத்துடன் ஒப்பிடும் போது கலவரம் வெறும் தூசு. இனியொரு கலவரம் ஒருபோதும் வராது, அப்படி வருவதையும் சிங்களத் தலைமைகள் அனுமதிக்காது.

றோட்டப் போட்டா ஆமிய எத்தி இறக்குவான். இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்கோ. எங்கட சனம் கிளாலி கொம்படி எண்டு அலஞ்சு திரியோனுமோ இல்லாட்டிக்கு கப்பல் பிளேன் எண்டு காசைக் கரியாக்கோணுமோ?

அளவான கடனும் அளவான சொகுசுமாக இந்திய பாதை புனர் அமைப்பு போதுமானது. சீனா பதைகள் போட்ட வெளிநாடுகள் ஒன்றிலும் அந்த பாதைகள் பாவிக்கபடுவதில்லை என்பது மட்டுமல்ல. சீனாவில் கட்டப்பட்ட உலக பெரிய shopping mall சீனாவில் 99% பாவிக்கபடாமல் எட்டுவருடங்கள் ஆகிவிட்டன. இந்தமாதிரி அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நாடுகளை சீனா பழுதாக்க அதற்கு  தமிழர் இடம் கொடுக்கும் நிலையில் அவரகளின் பொருளாதாரம் இல்லை.

New South China Mall 22px-Flag_of_the_People%27s_Republic_of_ China Dongguan 2005 659,612 m² (7.1 million sq ft)[1] 892,000 m² (9,600,000 sq ft) 47 99% vacant since 2005. Potential 2,350 stores. Classified as a "dead mall" by Emporis, a global building data firm.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் எரிமலை. விடியக் காத்தாலை ஊரிலிருந்து கார்பிடிச்சு சாவச்சேரி போய்  அங்க இருந்து கிளாலி போய் இருட்டுமட்டும் இருந்து உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கிளாலியால போட் ஏறி இரவிரவ பஸ் ஓடி புளியங்குளம், ஓமந்தை வந்து பாக்குகள தூக்கிக் கொண்டு No Mans Land எல்லாம் நடந்து வவுனியா வர அடுத்த இரவு வந்திடும். பிறகு இரவு வவுனியாவில இருந்து கோட்டைக்கு கோச்சி பிடிச்சு வந்து சேர மூண்டாம் நாள் விடிஞ்சிடும். கப்பல் ரூட்டும் எடுத்திருக்கிறன். குமணவில ஏறி கக்கூசுக்குப் போக வெளிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. நல்ல காலம் நான் அப்ப சின்னப் பொடியன். ஒருமுறை கப்பல் கிடைக்காமல் திருகோண மலையில் இரண்டு மாசம் அப்பாவோட தங்கி நிண்டு வந்தேன். கஷ்டப் பட்டவனுக்குத்தான் அது அதிண்ட கஷ்டம் புரியும்.

பாஸ் எடுத்து போட்டு ஒரு நாள் வெயிட் பண்ண வேண்டும். எனக்கு ஒரு மீட்டிங் போரதிற்கு கடைசி நேரத்தில அழைப்பு வந்தது. பொற்பதி ரோட்டில் இரு இரு என்று இருந்தா பிறகு 3.30/4.00 பாஸ்  தந்தார்கள். பிறகு அதை கொண்டு டவுன் இல் இருக்கிற ஒருவரிடம் போகவேண்டும், முன் உரிமை கடிதம் எடுக்க...பிறகு  கிளாலி போய், நல்லூர் போய், பிறகு ரக்கர் இல போய் பிறகு எங்கேயோ ஒரு இடத்தில் வான், கிளிநொச்சி மட்டும் ஒரு வான், பிறகு இன்னும் ஒன்று..ஒரு லோட்ச்  ஒன்றில் நிற்க வேண்டும், காலமை 4.30/5.00 அடித்து போட்டு 6.30 க்கு வெளிகிட்டதிர்ற்கு லோட்ச், காசு கட்ட வேண்டும். அங்கே இன்னுமொராளை சந்தித்தா அவர் சொன்னார்-இப்ப சிங்கர்பூரில் இருக்கிறார்- தங்கட  வானுக்கு 5 சில்லு மாத்தினதாம்.-நான் வந்ததில 2 தரம் மாத்தினது.. 

கப்பல் அனுபவமும் கனக்க இருக்கு...முதலில் போனது ஒரு பிராணிகள் கப்பல் ஒன்று.- பேர் மறந்து போட்டுது..பின்னேரம் 6/7 மணிக்கு எத்திபோட்டு 11/12 மணி மட்டும் KKS கப்பல் ஆடுது ஆடுது ஒரு கணக்கு வழக்கு இல்லை ..?அரைவாசி சனம் அப்பவே சத்தி எடு எடு எடுத்து களைச்சி போய்விட்டது..பிறகு ஓடத்தொடங்க..மடுச் செபமாலை மாதவே..முன் குடல் பின் குடல் எல்லாம் வெளியால வந்து விட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அண்ணே யுத்தத்தை அனுபவித்தவனுக்கும், வாசித்து அறிந்தவருக்கமான இடைவெளி.

நீங்கள் யாழ்தேவி ஓடின காலத்தில நிற்கிறீர்கள், நாங்கள் காலமை வெளிகிட்டு அலைந்து திரிந்து வாவுனிய வந்து, அங்கே இருந்து ரயில் ஏறுகிற காலத்தில் நிற்கிறம்.

இடையில் நடத்த கூத்துக்கள் உங்களுக்கு தெரிய ஞாயம் இல்லைத்தானே. அதுகளை ஏன் இப்ப கிளறுவான். எதோ நீங்களும் இருக்கிற படியால் அப்ப அப்ப இப்படி நனவிடை தோய்ந்த கதைகளை கேக்க கூடியதாக இருக்கிறது.

உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும்தான். மற்றும் படி ஒரு குறையும் இல்லை.

தவறுதலான புரிதலுக்காக மன்னிக்க வேண்டுகின்றேன்.

தற்பொழுது அப்படி இருப்பதாக(அதாவது 2 நாட்கள்) விளங்கிக்கொண்டேன்.

மற்றும்படி  தாயகத்தில் இருந்து  எப்பொழுதும் தள்ளி  நின்றதில்லை. பார்வையாளனாக இருந்ததில்லை.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அளவான கடனும் அளவான சொகுசுமாக இந்திய பாதை புனர் அமைப்பு போதுமானது. சீனா பதைகள் போட்ட வெளிநாடுகள் ஒன்றிலும் அந்த பாதைகள் பாவிக்கபடுவதில்லை என்பது மட்டுமல்ல. சீனாவில் கட்டப்பட்ட உலக பெரிய shopping mall சீனாவில் 99% பாவிக்கபடாமல் எட்டுவருடங்கள் ஆகிவிட்டன. இந்தமாதிரி அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நாடுகளை சீனா பழுதாக்க அதற்கு  தமிழர் இடம் கொடுக்கும் நிலையில் அவரகளின் பொருளாதாரம் இல்லை.

New South China Mall

22px-Flag_of_the_People%27s_Republic_of_ China

Dongguan

2005

659,612 m² (7.1 million sq ft)[1]

892,000 m² (9,600,000 sq ft)

47

99% vacant since 2005. Potential 2,350 stores. Classified as a "dead mall" by Emporis, a global building data firm.

அண்ணா சீனா வேற எந்த நாடுகளில ரோட்டுப் போட்டு அது பாவிக்கப் படாமல் இருக்கு? அதோட நீங்கள் கூறிய சொப்பிங் மால் பிழைத்ததுக்கு வேற காரணங்கள் இருக்கு. அதுபற்றிய சில விபரணப் படங்களும் இருக்கு, தேடிப் பாருங்கள். அத்துடன் இந்தியாவின் அம்பது வருஷ பழைய தொழில் நுட்பத்தை விட சீனாவின் தொழில் நுட்பம் நல்லது. நீங்கள் ஊருக்குப் போய்  எவ்வளவு வருசமோ தெரியாது ஆனால் நான் அடிக்கடி போய் வருபவன், தெற்கு அதிவேக வீதியில் காரும் ஓடியிருக்கிறேன். அவுஸ் வீதிகளின் தரத்திற்குப் போட்டிருக்கிறார்கள்.

பாஸ் எடுத்து போட்டு ஒரு நாள் வெயிட் பண்ண வேண்டும். எனக்கு ஒரு மீட்டிங் போரதிற்கு கடைசி நேரத்தில அழைப்பு வந்தது. பொற்பதி ரோட்டில் இரு இரு என்று இருந்தா பிறகு 3.30/4.00 பாஸ்  தந்தார்கள். பிறகு அதை கொண்டு டவுன் இல் இருக்கிற ஒருவரிடம் போகவேண்டும், முன் உரிமை கடிதம் எடுக்க...பிறகு  கிளாலி போய், நல்லூர் போய், பிறகு ரக்கர் இல போய் பிறகு எங்கேயோ ஒரு இடத்தில் வான், கிளிநொச்சி மட்டும் ஒரு வான், பிறகு இன்னும் ஒன்று..ஒரு லோட்ச்  ஒன்றில் நிற்க வேண்டும், காலமை 4.30/5.00 அடித்து போட்டு 6.30 க்கு வெளிகிட்டதிர்ற்கு லோட்ச், காசு கட்ட வேண்டும். அங்கே இன்னுமொராளை சந்தித்தா அவர் சொன்னார்-இப்ப சிங்கர்பூரில் இருக்கிறார்- தங்கட  வானுக்கு 5 சில்லு மாத்தினதாம்.-நான் வந்ததில 2 தரம் மாத்தினது.. 

கப்பல் அனுபவமும் கனக்க இருக்கு...முதலில் போனது ஒரு பிராணிகள் கப்பல் ஒன்று.- பேர் மறந்து போட்டுது..பின்னேரம் 6/7 மணிக்கு எத்திபோட்டு 11/12 மணி மட்டும் KKS கப்பல் ஆடுது ஆடுது ஒரு கணக்கு வழக்கு இல்லை ..?அரைவாசி சனம் அப்பவே சத்தி எடு எடு எடுத்து களைச்சி போய்விட்டது..பிறகு ஓடத்தொடங்க..மடுச் செபமாலை மாதவே..முன் குடல் பின் குடல் எல்லாம் வெளியால வந்து விட்டது..

குமண, தராக்கி, சிட்டி ஒப் ற்றின்கோ என்பவை நான் ஏறியவை. முல்லைத் தீவு தாண்டுவதுக்கு முன்னர் ஆழக்கடல் மட்டும் போய் சுத்திக் கொண்டு வருவார்கள், அத்துடன் லைட்டெல்லாம் நூத்துப்போட்டுத் தான் ஓடுவார்கள். கப்பல் ஆடுற ஆட்டத்துக்கு கரைக்கு வந்தாப் பிறகும் ரெண்டு நாளைக்கு கப்பலில இருக்கிற மாதிரித்தான் இருக்கும். சத்தியைக் குறைக்கிறதுக்கு  பெனாகன் எண்டொரு சத்திக் குளிசையைப் போட்டிட்டு சாப்பாடு தண்ணி இல்லாமல் காயிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.