Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவான கனவுகள்

Featured Replies

Rama_story.jpg

"என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்

என் வீட்டு யன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

என் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாக கேட்டுப்பார்

உன் பெயர் சொல்லுமே"

என்று பொங்கும் பூபாளம் நிகழ்ச்சி காலையில் காதல் நாணத்துடன் இசைத்துக் கொண்டிருந்தது. பாடலின் வரிகளில் தன்னை மறந்து பூக்களுடன் கதைக்க தொடங்கினாள் ஐங்கரி. "என் வீட்டு பூக்கள் என்னவனின் பெயரை கனவிலும் சொல்ல தயங்காது" என காதலனை எண்ணியவறே மல்லிகையில் "இச்"சென்று முத்தம் ஒன்றைப் பதித்ததாள். இலைகளிலிருந்து வந்து சிதறிய பனித்துளிகள் முகத்தில் பட்டதும் சட்டென நினைவுக்கு வந்தாள். காதல் மயக்கத்தில் தான் அங்கே செய்ததை நினைத்து முகம் சிவக்க நாணினாள். திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தவள் "அட 8 மணி ஆகிவிட்டது அப்பாவிற்கு மருந்து கொடுக்கவேணும்" என்ற நினைவுடன் வீட்டு வாசலை நோக்கி விரைவாக நடந்தாள்.

அப்பாவின் அறைக்குள் சென்று மருந்துகளை எல்லாம் கைகளில் எடுத்துவைத்துக்கொண்டு சுட்டு ஆறிய நீரை சிறியதொரு டம்ளருக்குள் நிரப்பிக்கொண்டு அப்பாவின் அருகில் போய் அமர்ந்தாள். மகளின் புன்னகை நிரம்பிய முகத்தை பார்த்த அப்பாவும்

" ஏனம்மா எனக்கு இவ்வளவு மருந்துகளும்? இவ்வளவு மருந்தும் வேண்டாம். இதை சாப்பிட்டு சாப்பிட்டே நான் வேளைக்கு சாகப்போகின்றேன்" என்று கூறி முடிப்பதற்குள் தன் கைகளால் தகப்பனின் வாயைப் பொத்தினாள். தந்தையின் வார்த்தைகளுக்கு பதிலாக பொல பொலவென அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பெருகியது.

மகளின் கண்ணீரைக் கண்ட தந்தையானவர் மறு பேச்சின்றி மருந்தை வேண்டி குடித்து விட்டு

"இப்ப சிரி" என்று கூறி விட்டு தானும் சிரித்தார். ஐங்கரியின் கண்கள் நீரைச் சொரிந்தபோதும் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தாள். இருவரின் சிரிப்புக்களும் ஓய்ந்ததும் உலக விசயங்களை

கதைத்தவறே காலைச் சாப்பாட்டை இருவரும் உண்டனர்.

"சரி அப்பா நான் ஒருக்கால் கண்ணன் வீட்டை போயிட்டு வேளைக்கு வந்து விடுகின்றேன். எல்லமே இந்த மேசையில் இருக்கின்றன. எதாவது வேணும் என்றால் எடுத்து சாப்பிடுங்கள். நான் விரைவாகவே வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

யார் இந்த ஐங்கரி?

உடன் பிறந்தோர் ஐவர் இருந்தும் தாயகத்தில் நடைபெற்ற பிரச்சனைகளால் பிறந்த நாட்டை விட்டு வெளியேறி புகுந்த நாடுகளில் தஞ்சம் கோரி அந்த நாட்டு பிரஐகளாக மாறி இருக்கின்றார்கள். மாதம் ஒரு முறை ஒரு கடிதம் சுகம் விசாரித்து வரும். சிலவேளைகளில் அதுவும் இல்லை. அப்பாவின் மருந்துச் செலவிற்கு என்று கொஞ்சக்காசு உண்டியல் மூலமாக வரும். அதுவும் நீ அனுப்பு நான் அனுப்பு என்ற இழுபறிகளுடன்தான் வந்துசேரும். போதாக்குறைக்கு அப்பாவையும் ஐங்கரியையும் தங்களுடன் வருமாறு நச்சரிப்பு வேறை. "இங்கு இருக்கும்போதே காசு அனுப்ப அடிபடுகின்றவர்கள் நாம் அங்கு போனால் எப்படி நம்மை வைத்து பார்ப்பார்கள் என்று நினைத்து ஐங்கரி வியப்பதுண்டு. ஆனாலும் சகோதரர்கள் மீது பாசம் உண்டு.

யாரவது வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்து திரும்பும்போது கோப்பித்தூள், மிளகாய் தூள் என பார்சல் பார்சலாக கட்டி அனுப்பி விடுவாள். "அண்ணாக்கள் பாவம் அண்ணிமார் தான் அவர்களை காசு அனுப்ப விடுவதில்லை" என்று அடிக்கடி தந்தையிடம் கூறி கவலைப்படுவாள்.

க.பொ.த உயர்தரம் படித்து முடித்து விட்டு பல்கலைக்கழகம் போக புள்ளிகள் போதவில்லையே என்று எவ்வித கவலையும் அடையாதவள். "நான் பல்கலைக்கழகம் போனால் அப்பாவை யார் கவனிப்பது" என்ற ஆதங்கத்தில் தான் உயர்தரம் சித்தியடையாதது அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் ஆங்கில அறிவு தாரளமாக இருந்தபடியால் வீட்டில் கொஞ்ச பிள்ளைகளை வைத்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் கிடைத்த அந்தச் சிறிய வருமானம் அப்போது

பெரியளவில் அவளுக்கு உதவியது.

யார் இந்த கண்ணன்?

கண்ணன் ஐங்கரியின் காதலன் என்பதை விட கணவன் என்றே கூறிக்கொள்ளலாம். ஐங்கரியின் வீட்டின் இன்னொரு சாவி அவன் கையில். இவர்கள் வீட்டிற்கு தேவையான உப்பு, புளி தொடக்கம் அப்பாவிற்குத் தேவையான மருந்துகள் எல்லாம் அவன் கையில்தான் ஒப்படைக்கப்பட்டிக்கின்றது என்பதை விட தானாக எல்லாம் செய்து முடிப்பவன் என்றே சொல்லாம். ஐங்கரி அவசர அலுவலாக கொழும்பு அப்படி எங்காவது சென்றால் மாமனாரை குளிப்பட்டுவதிலிருந்து சாப்பாடு, மருந்துகள் கொடுப்பது எல்லாமே அவன்தான். பாடசாலையில் முழுநேர ஆசிரியராக வேலை செய்தாலும் அடுத்த முழுநேர வேலையாக தாயக பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தான். 95 ஆம் ஆண்டு நடைபெற்ற இடப்பெயர்வின்போது இவனின் பணி சொல்லிடங்காது. காயப்பட்டு வந்த மக்களுக்கும், போராளிகளும் சாவகச்சேரி அரசினர் வைத்தியாசாலையில் இவன் செய்த முதலுதவியால் இன்றும் இவனைக் கண்டால் கண்கலங்க நன்றி கூறுவார்கள். "தலைவர் ஒருவரே அவரே நம்ம தலைவர்" என்ற வேத வாக்கியத்தை தன் மனதில் ஆழப்பதிய விட்டவன். ஐங்கரிக்கு அவன் காதலன் என்றால் ஊர் மக்களுக்கு அவன் ஒரு சமுக சேவகன். ஐங்கரி செய்த தவப்பயனோ என்னமோ கண்ணணை அவளுக்கு காதலனாக அறிமுகப்படுத்தியது.

இப்போ இந்தக் கண்ணன் வீட்டிற்குத்தான் நம்ம நாயகி சைக்கிளை மிதித்தபடி கற்பனைகளில் மிதந்தபடியே போய்க்கொண்டிருக்கின்றார்.

அன்று சனிக்கிழமை ஆனபடியால் கண்ணன் வீட்டில் அம்மாவிற்கு உதவிகளை செய்து கொண்டிருந்தான்.

ஐங்கரியை கண்டவுடன் "என்ன மாகராணி விடியற் காலையில் தரிசனம் தந்து அசத்துறிங்கள்?" என்ற நக்கல் சிரிப்புடன் கேட்டுவிட்டு கிணற்றடியை நோக்கி நகர்ந்தான்.

"உங்களை காணத்தான் வந்தேன். நேற்று வருகின்றேன் என்று போனீர்கள் பின்னர் எங்கள் வீட்டிற்கு வரும் பாதையை மறந்து விட்டீர்களோ" என்று பொய்க்கோபத்தோடு கூறினாள்.

"ம்ம் சொன்னேன் தான் அதற்கு அப்புறம் வெள்ளி பின்னேரம் எனக்கொரு கூட்டம் இருக்கு என்றும் அது வேளைக்கு முடிந்தால் தான் வருவேன் என்றும் சொன்னேன் அல்லவா? அது உங்கள் காதுகளில் விழவில்லையா மாகராணி?" என்று மீண்டும் நக்கல் சிரிப்பை உதிர்ந்தாள்.

"ஆமா உந்த நக்கலுக்கு மட்டும் குறைவில்லை" என்றபடியே" கண்ணன் அப்பாவின் நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு வருகுது. எனக்கு ஒரே பயமாக இருக்கின்றது. ஒப்பரேசன் செய்ய டாக்டர் அதிகளவு பணம் கேட்கின்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறிவிட்டு பொங்கிவரும் கண்ணீரை கட்டுப்படுத்த வேறு பக்கம் தலையை திருப்பினாள்.

"சீ! என்ன சின்னப்பிள்ளை மாதிரி அழுகை. அதுவும் இந்த விடியக்காத்தாலை. முதலில் உதை துடையும். அம்மா வேறை வீட்டிலை நிற்கின்றா. கொஞ்சம் பொறும் நான் வெளிக்கிட்டுக் கொண்டு வாரேன். வெளியில் போய் உதைப்பற்றி பேசுவோம்" என்றபடியே வீட்டிற்குள் நடக்கத் தொடங்கினான்.

சரி வந்தாச்சு மாமியைப்பார்த்து சுகம் விசாரித்து விட்டுப் போவோம் என்றபடியே அவனிற்குப் பின்னால் நடக்கத் தொடங்கினாள்.

"என்ன மாமி இன்னும் உங்களுக்கு இந்தக் குசினி வேலை முடியலையோ?" என்றபடியே உள்ளே நுழைந்தாள்.

"அட ஐங்கரி என்ன இவ்வளவு வேளைக்கு? தம்பி கண்ணன் முன்னால் விறகு கொத்திக் கொண்டு இருந்தவன் கண்டனியோ" என்றபடி அவளுக்கு தான் தயாரித்த அப்பம் இரண்டை எடுத்து கோப்பையில் போட்டு உண்ணும்படி கொடுத்தாள்.

"ஒம் மாமி, கண்ணனைக் கண்டு கதைத்து விட்டுத்தான் வருகின்றேன். அப்பாவிற்கு மருந்து வாங்கணும். வெளியில் வருவதாகச் சொன்னார். அதுதான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்று கூறிவிட்டு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள்.

"ம்ம் என்னமோ உங்கள் கலியாணம் தான் ஒவ்வொரு முறையும் தள்ளிக்கொண்டு போகின்றது. எனக்கும் பேரப்பிள்ளைகளை மடியில் வைத்து கொஞ்ச ஆசை இல்லை என்று எல்லோரும் நினைக்கின்றார்கள் போல"

"ஏன் அம்மா அதுக்கு தானே மூத்த அக்காவின் இரண்டு வாரிசுகளும், இரண்டாவது அக்காவின் ஒரு வாரிசும் ஒவ்வொரு நாளும் வந்து நிற்கிறார்கள். அவங்கள் வந்தால் மட்டும் கடவுளே இவங்களை எப்படித்தான் சமாளிப்பது என்று உலகத்தில் உள்ள கடவுகளை எல்லாம் துணைக்கு கூப்பிடுவிங்கள். இதுக்கை இன்னும் பேரக்குழந்தைகள் வேணுமோ? என்று கூறியபடியே உள்ளே வந்தான் கண்ணன்.

"எத்தனை பேரக்குழந்தைகள் இருந்தாலும் மகனின் குழந்தையை கொஞ்ச எனக்கு ஆசை இல்லையோ" என்று கூறிவிட்டு " சரி பிள்ளை ஏதோ அலுவலாக வந்திருக்கு போல. என்னுடைய புராணத்தை நிற்பாட்டுகின்றேன். இவருவரும் சாப்பிட்டுவிட்டுப் போய் உங்கள் உங்கள் அலுவல்களைப் பாருங்கோ" என்றபடி அடுத்த அறையை நோக்கி நடந்தாள்.

"கலியாணம் கட்டியபிறகு இப்படி அப்பம் எல்லாம் வாய்க்கு ருசியாக கிடைக்காது. ஆகவே இப்பவே எல்லாத்தையும் ரசித்து சாப்பிடுவோம்" என்று ஐங்கரியை கடைக்கண்ணால் பார்த்தபடி கூறினான் கண்ணன்.

அவனின் நையாண்டிகளை கேட்டவள் கேட்காதவள் போல் "அதுகளை எல்லாம் பிறகு கவனிக்கலாம் வேளைக்கு வாங்கோ போவோம்" என்றபடி கைகளைக் கழுவினாள். இருவரும் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே வர காலை 10 மணி ஆகிவிட்டது. காலைச் சூரியன் தன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டிருந்தான்.

"என்ன ஐங்கரி அப்பாவிற்கு எதாவது வித்தியமாக இருக்கா? ஒப்பரெசனுக்குரிய பணத்தை அண்ணாவிடம் கேட்டிரா? என்ன சொன்னார்கள்?" என்று பல கேள்விகளை அடுக்கியபடியே சைக்கிளை மிதித்தான் கண்ணன்.

"அவர்களுக்கு இதைப்பற்றி பல கடிதங்கள் போட்டுவிட்டேன். அனாலும் பதில் ஒன்றும் இல்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறியபடி பல்லைக்கடித்தாள்.

இப்போது என்று என்னிடமும் இவ்வளவு காசும் இல்லை. கடன் வேண்டுவது என்றாலும் இரண்டாவது அக்காவின் கலியாணத்திற்கு வேண்டிய கடனும் கொடுத்து முடிக்கவில்லை. இதற்குள் எங்கே போய் வாங்குவது?" என்று பெருமூச்சுடன் கூறினான்.

"கண்ணன் உங்கள் நிலமை எனக்குத் தெரியாதா? உங்கள் சந்தோசத்தை விட என் நிம்மதியை தானே நீங்கள் அதிகமாக விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியாதா? எதற்கும் வேறு வழி தான் பார்க்க வேண்டும். முதலில் வீட்டை வாங்கோ அப்பாவைப் பார்த்துவிட்டு இதைப்பற்றி விபரமாகக் கதைப்போம்" என்றபடியே வீதியில் கவனத்தைச் செலுத்தினாள்.

வழியில் போவோர் வருவோரில் அநேகமானோர் கண்ணணைப் பார்த்து தலையாட்டியபடியே சென்றார்கள்.

பணம் என்ன பணம். கண்ணனிடம் பணம் இல்லை ஆனால் குணம் இருக்கின்றது. "கடவுளே இந்தக்குணம் மட்டும் என்றுமே நிலைத்திருக்க வேண்டும்." என்று நினைத்தபடியே வீட்டு மல்லிகை முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு "அப்பா" என்று அழைத்தவறே உள்ளே சென்றாள்.

"கண்ணன் ஐய்யோ அப்பாவை பாருங்கள்" என்ற கதறலை கேட்டு கண்ணன் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு உள்ளே ஒடினான்.

"என்ன சாப்பாடு கொடுத்தனீர்? இப்படி நுரை நுரையாக வாய்க்குள் இருந்து வருகுதே" என்று கூறிவிட்டு "சுமதி அக்கா வருகின்றா அவாவுடன் தைரியமாக இரு நான் போய் கார் பிடித்துக் கொண்டு வருகின்றேன்" என்று கூறி அவள் முதுகில் செல்லமாகத் தட்டிவிட்டு ஓடினான் கண்ணன்.

"அப்பா அப்பா அப்பா அப்பா" என்றபடியே வாயின் வழியே வந்த நுரைகளைத் துடைத்தபடி காரின் வரவை எதிர்பார்த்து இருந்தாள் ஐங்கரி.

கார் வந்தவுடன் பின்பக்கத்தில் இருந்த கண்ணன் தன் மடியில் ஐங்கரியின் தகப்பனின் தலையை கிடத்தியபடி "ஐங்கரி சும்மா அழாதையும். அது ஒன்றும் இல்லை. அஸ்பத்திரிக்கு போனால் எல்லாம் சரி ஆகிவிடும்" என்று அவளை ஆறுதல் படுத்திக் கொண்டு வந்தான்.பல சிரமங்களுக்கு மத்தியில் தந்தையை ஒப்பறேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். போன டாக்டர் சிறு நேரம் தந்தையை நன்றாகப் பரிசோதித்துவிட்டு பின்னர் கண்ணனை மட்டும் உள்ளே அழைத்து என்னவோ பேசினார். கண்ணணும் சரியென்று தலையாட்டுவதும்

ஐங்கரியின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. அப்படியே அவள் கண்கள் மங்கி மயக்க நிலையினை அடைந்தாள்.

தலையில் யாரே பலமாக அடித்து இருப்பது போல் இருந்தது. சிறிது நேரத்தின் பின்னர் நினைவுக்கு வந்தவள் தான் இப்பவும் ஆஸ்பத்திரியிலேயே இருப்பதை உணர்ந்தாள். "அப்போ அப்பாவிற்கு என்ன நடந்தது? கண்ணன் எங்கே? என்று பல கேள்விகள் அவள் மனதில் எழுந்தன. மெல்லமாக கண்களைத் திறந்து பார்த்தாள். அருகில் நின்ற சுமதி அக்காவின் விசும்பல் சத்தம் கேட்டு முழு நினைவுக்கு வந்தவளாக கண்களைத் திறந்து எழுந்து உட்கார முயன்றாள்.

அவளின் விழிப்பைக் கண்டதும் "ஐய்யோ ஐங்கரி நீ யாருக்கு என்ன பாவம் செய்தாய்? இப்படியே எல்லோரையும் இழந்து அநாதையாக நிற்கின்றயே" என்று கதறி அழுதாள்.

ஐங்கரிக்கு என்ன நடந்து என்றே விளங்கவில்லை. இந்த சுமதியாக்கா ஏன் கத்துகின்றா. நான் யாரை யாரை இழந்து விட்டேன்? என் அப்பாவுக்கு என்ன நடந்து? கண்ணன் எங்கே? என்று கேட்டு கத்தவேண்டும்போல் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று மனதில் ஆணி அடித்தது போல் உறைத்தது. அப்பா இல்லை, அப்போ கண்ணன் எங்கே என்று கத்தவேண்டும், கதைகள் கேட்க வேண்டும் என்று மனது துடித்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளுக்குப் பதிலாக கண்ணீர் உற்றெடுத்து ஒடியது.

"தகப்பனையும் இழந்து பூவையும், பொட்டையும் ஓரே நாளில் இழந்து விட்டாயே" என்று கத்திக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு சுமதியக்கா.

எங்கு போகின்றோம் என்று தெரியமலே அவளின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்பாவின் உயிரற்ற உடலுடன். கண்ணன் எங்கை? எனது பூவுக்கும் பொட்டுக்கும் என்ன நடந்தது என்று மனதுள் போராடிக் கொண்டிருக்கின்றாள். யார் யாரோ வருகின்றார்கள் என்னமோ எல்லாம் சொல்கின்றார்கள் இவளுக்கு எதுவும் புரியலை.

ஆனாலும் ஆனாலும் அந்த அந்த வரிகள் மட்டும் அவள் காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றது.

"டாக்குத்தார் ஐங்கரியின் அப்பாவின் இரண்டு சிறுநீரகங்களும் வேலை செய்யவில்லை ஒன்றை என்றாலும் கட்டாயம் மாற்றவேணும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்று முடிவாக சொல்லிவிட்டராம். வேறு வழியின்றி கண்ணன் தன் ஒரு சிறுநீரகத்தை எடுத்து மாமனாருக்குக் கொடுக்கும்படி சொன்னவனாம். அப்படி மாற்றும்போது டாக்டர்கள் மாறி ஒப்பரெசன் செய்தபடியால் இருவரின் உயிரும் ஒரே நேரத்தில் போட்டுதாம்!" என்று இரகசியமாக கதைத்து மட்டும் இவள் செவிகளில் விழுந்தது.

அட என் உயிரும் அந்த நேரத்தில் போனதை இவர்கள் அறியவில்லைப்போலும் என்று எண்ணி சிறிதாகப்

புன்னகைத்தவள் கடைசியாக வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். சிரிக்கத் தொடங்கியவள் நிறுத்தமால் சிரித்து கொண்டே இருந்தாள். இவளின் சிரிப்புக்கு அர்த்தம் தெரியமால் நிலா மகளும் முழுநிலாவாக வானத்தில் சிரித்து கொண்டிருந்தாள்.

முற்றும்

மனதை உலுக்கும் கதை. பாராட்டுக்கள்!!

ம்ம்ம் நல்ல கதை.

ரமா அடுத்த கதை சந்தோசமானதாக வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லா இருக்கு.. அட நீங்கள் கதை எழுதியிருக்கிறீங்க என, ஆ கதை நல்லாயிருக்கு, ஆனால் என்ன தமிழ் சினிமா மாதிரி முடிச்சிட்டீங்கள் அதான் சாதுவாய் தண்ணீ வருது கண்ணில :wink:

ம்ம் நல்ல கதை ரமா பாராட்டுக்கள். இப்படி சில வைத்தியர்களின் கவனக் குறைவால் சில உயிர்கள் பலியானதை நேரில் பார்த்திருக்கிறேன். பாவம் ஐங்கரி. :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் ரமா... மீண்டும் ஒரு நல்ல கதையை யாழ் நண்பர்களுக்காக கொடுத்திருக்கிறீர்கள். நிதர்சன் சொன்னமாதிரி தமிழ் சினிமா மாதிரி கொஞ்சம் முடிவை சொகமாட்டிங்க.... அடுத்த கதையை வேறு மாதிரி எழுத முயற்சியுங்கள். ஈழத்துக்கதையாகவோ அல்லது கருத்துக்கூறும் கதையாகவோ உங்கள் அடுத்த கதை அமையட்டும். நன்றி.

நல்ல கதை.ரமா...பாராட்டுக்கள்....தொடர

வலிக்கின்றது..

பாரட்டுக்கள் சகோதரி

றமாக்கா சோகமாக கதை சொல்றதுதான் சுகமா? கதை மிகவும் நல்லா எழுதியிருக்கிறீங்கள்.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

கதையினை வாசித்து கருத்துக்கள் கூறிய சோழி அண்ணா மணிவாசன் நிதர்சன் ரசிகை விஸ்ணு சின்னக்குட்டி தூயா சினேகிதி அனைவருக்கும் எனது நன்றிகள்.

கதைக்குரிய அழகான படத்தை தந்து உதவிய வன்னித்தென்றல் இணையத்திற்கும் எனது நன்றிகள்.

அடுத்த கதையினை சந்தோசமாக எழுத முயற்சிக்கின்றேன். :lol:

ரமாக்கா மீண்டும் உங்களின் சோக கதையை வாசிக்க வைத்தமைக்கு நன்றிகள், பாவம் ஐங்கரி. :cry: :cry: :cry: :cry: எவ்வளவு கனவுகளோடு காலையில் பூவுக்கு முத்தமிட்டவள் அன்றே இரு உறவுகளை பலிகொடுத்து தானும் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டாளே நெஞ்சை நொருக்குட்டீங்க ரமாக்கா கதையால் :cry: :cry: :cry:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றி வெண்ணிலா

நல்ல கதை ரமா பாராட்டுக்கள்...

மேலும் தொடருங்கள்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சண்முகி அக்காஃ

எங்கை உங்களைக் காணக்கிடைக்குது இல்லை இப்போ?

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகயுள்ளது தொடரட்டும் உங்கள் பணி

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நல்ல கதை

உங்கள் எழுத்து திறமைக்கு எனது பாராட்டுக்கள்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இக்கதையினை வாசித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். கதையின் முடிவைத்தான் மற்றையவர்கள் சொன்னது போல தென்னிந்தியாத் திரைப்படத்தில் வருவது போல முடித்துள்ளீர்கள்.

இக்கதையில் வரும் ஜங்கரியின் தகப்பனுக்கு ஒரளவு மருத்துவ வசதி இருக்கும் போதே இறப்பு நேரிடுகிறது.

ஆனால் தற்பொழுது யாழ்குடாவில், வாகரையில் அரசின் தடையினால் மருத்துவ வசதிகள், உணவுகள் இல்லாமையினால் கஸ்டப்படும் நோய் வாய்ப்பட்டிருப்பவர்கள், வயது போனவர்கள், கர்ப்பினிப்பெண்களினை நினைக்கக் கவலையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கதை என்னை ரொம்ப பாதிச்சது ரமா அக்கா

நெடுக நன்றி சொல்ல முயற்சி செய்வன் எழுத முடியலை..இண்டைக்கு அண்ணா ஒராள்தான் காட்டித்தந்தார்..

நன்றி அக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.