Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

32469302418c07f75.jpg

சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி!

 

​செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மோதிய நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. 


போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. 

அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. 

இங்கிலாந்து சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர். 

294 என்ற வெற்றியிலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அபார சதம் மற்றும் குலசேகரவின் அதிரடியின் உதவியில் 47.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 297 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கொண்டது. 

குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் குலசேகர 58 ஓட்டங்களையும் தில்ஷான் 44, ஜயவர்த்தன 42 ஓட்டங்களையும் பெற்றனர். 
 

At the fall of Mahela Jayawardena's wicket, Nuwan Kulasekera was sent in to bat, the experienced cricket commentator, Sunil Gavaskar joked that Sri Lanka has sent in a 'night watchman' - as it is normally done in Tests late in the evening to save a recognized batsman for the following day.

 

கவாஸ்கர் மிக ஒருபக்க சார்பாக வர்ணனை செய்யும் ஒரு ஆள் .வெள்ளைக்காரர்களுக்கு பந்தம் பிடிப்பது இவருக்கு மிக கை வந்த கலை .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன், நீங்கள் கவஸ்கர் வெள்ளைக்காரர்களுக்கு சார்பானவர் என்று சொல்கிறீர்கள். உண்மையில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விமர்சனம் செயபவர். குறிப்பாக 75ம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியில் அணித்தலைவர் வெங்கட்ராமனுடன் முரண்பட்டதினால் வேண்டுமென்றே 174 பந்துகளில் ஆட்டமிழக்காது 36 பெற்றவர். அச்சமயத்தில் இங்கிலாந்து ஊடகங்கள் இவரை நக்கல் செய்து செய்திவெளியிட்டு வந்தன. அதன் பிறகு கவஸ்கர் மறைமுகமாக இங்கிலாந்து அணியினரைத் தாக்கிவருகிறார். 2000ம் ஆண்டுகளில் (2000 - 2011) நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டிகளில் கவஸ்கர் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, கவாஸ்கரின் அன்றைய வர்ணனையைக் கேட்டிருந்தால் நீங்கள் இப்பிடிக் கூற மாட்டீர்கள். மிகவும் பக்கச் சார்பாக வர்ணனை செய்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பழைய போட்டியை பற்றி கதைகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் வர்ணனை கேட்கவில்லை. அத்துடன் கவஸ்கர் போன்ற சில வட இந்தியர்களுக்கு தென்னிந்தியர்கள், இலங்கையர்கள், வங்களதேசத்தினைச் சேர்ந்தவர்களைக் கண்டால் தாங்கள் பெரியவர்கள் என்று நினைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பழைய போட்டியை பற்றி கதைகிறீர்கள்? 

 

இலங்கை இங்கிலாந்து போட்டி அண்ணா.

 

நான் வர்ணனை கேட்கவில்லை. அத்துடன் கவஸ்கர் போன்ற சில வட இந்தியர்களுக்கு தென்னிந்தியர்கள், இலங்கையர்கள், வங்களதேசத்தினைச் சேர்ந்தவர்களைக் கண்டால் தாங்கள் பெரியவர்கள் என்று நினைப்பு

 

அவுஸ் வர்ணனையாளர்கள் இயன் ஹீலியும் ஜேம்ஸ் பரிஷோவும் இலங்கை அவுஸ் வந்திருந்த போது நடந்த இறுதி T20 இலே கேவலமாக விமர்சித்திருந்தார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் மகெல வடே இடையிலான வாய்த் தர்க்கமும் நடந்தது.

ovel-clash7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் கெட்டுச் சிங்களவன் வெண்டதைப் பற்றிப் பெருமை பேசிறியளோ?? :huh:

கூல் டவுன் அக்கா

நாங்கள் கிரிக்கெட்டை பற்றி கதைக்கின்றோம் .அதற்கு இனம் சாதி மதம் இல்லை .

கவாஸ்கர் இந்தியா அக்கா .

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் கெட்டுச் சிங்களவன் வெண்டதைப் பற்றிப் பெருமை பேசிறியளோ?? :huh:

 

நீங்க வேற...........

 

அப்பண்ணா  நாம  இன்னும் ...................???

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் கெட்டுச் சிங்களவன் வெண்டதைப் பற்றிப் பெருமை பேசிறியளோ?? :huh:

 

யாரைச் சொல்றீங்கள் செய்தியைக் கொண்டு வந்து முதலில் இணைச்சவரையோ :unsure: ஏன் என்டால் பிறகு வந்து எழுதினவர்கள் ஒருத்தர் இலங்கை வென்டதை பாராட்டி எழுதேல்ல.நுணா கூட செய்தியை மட்டும் தான் கொண்டு வந்து இணைச்சவர்
 
ஏதோ எழுதோனும் என்கிறதிற்காக எழுதுறதும்,அதுக்கு பச்சை குத்துபவர்களையும் பார்த்தால் :icon_idea:  <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.