Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்!

Featured Replies

  • தொடங்கியவர்

இயக்குனர் மணிவண்ணன் மறைவு ~ கருணாநிதி இரங்கல்

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த சில ஆண்டுக் காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்து இன்று காலையில் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய 'பாலைவன ரோஜாக்கள்' என்ற படத்தினை இயக்குனர் மணிவண்ணன் மிகவும் திறம்பட இயக்கி, அந்தப் படம் வெற்றிகரமாக தமிழகத்திலே ஓடிய நேரத்தில், அவருடன் நான் நெருங்கிப் பழகியதால், எப்படிப்பட்ட திறமையாளர் அவர் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அண்மையில் நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய 'இளைஞன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போதே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை என்னிடம் தெரிவித்தார். திறமையான ஒருவர் திடீரென்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய மறைவு குறித்து வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 

 

http://www.newsalai.com/details/Director-manivannan-death-karunanidhi-mourned.html#.Ub2Jitj9VEc


மணிவண்ணன் உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி

 

1371367344.jpeg
பிரபல நடிகரும் டைரக்டருமான மணிவண்ணன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகர் ஜெய் பாலாஜி நகர், திருமலை தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஜே.கே.ரித்தீஷ் எம்.பி., தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், நடிகர்கள் சத்யராஜ், பாக்யராஜ், சுந்தர்.சி, சிவா, சிபிராஜ், ஷக்தி, சாந்தனு, சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், குமரிமுத்து, நடிகைகள் சரண்யா, அனுதாரா, டைரக்டர்கள் விக்ரமன், தங்கர்பச்சான், அகத்தியன், வி.சேகர், டி.பி.கஜேந்திரன், மனோபாலா, ராஜ்கபூர் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று காலை மணிவண்ணன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகை குஷ்பு, நடிகர்கள் பாண்டியராஜன், கவுண்டமணி, டைரக்டர்கள் பாரதி ராஜா, ஹரி, சுபவீரபாண்டியன் ஆகியோரும் மணி வண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மணிவண்ணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மணிவண்ணன் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மணிவண்ணனின் உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 

http://www.newsalai.com/details/vijayakanth-tribute-manivannan-death.html#.Ub2Jjdj9VEc

  • Replies 118
  • Views 12.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இன உணர்வாளர் மணிவண்ணனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்
புலி கொடிகள் சூழ நாம் தமிழர் தம்பிகளின் வீர வணக்கத்தோடு மணிவண்ணன் அப்பாவின் கடைசி பயணம் நடைபெற்றது.

 

945931_10152008760364128_877385364_n.jpg

 

 

969959_10152008760924128_1127878765_n.jp

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படத் துறையச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களாக ஜெயலலிதா.. ரஜனி.. கமல்.. பிரபு.. சிவக்குமார்.. சூரியா.. மற்றும் வைகைப்புயல்.. விவேக்.. போன்ற காமடியன்கள்.. மற்றும் முன்னணி நடிகைகள் எதுவுமே சொல்லேல்லையே..! மணிவண்ணனால் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் கூட.. எதுவும் பேசாமல் இருந்திருந்துப்பது.. அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது..! :(:rolleyes:

 

தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த உதவிய கள உறவு துளசிக்கு நன்றி.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஆயிரக்கணக்கான மக்களின் இறுதிவணக்கத்துடன் மணிவண்ணனின் உடலம் தகனம்!

 

தமிழர் உணர்வாளர்கள் நடிகர்கள்,மக்கள் எனஆயிரக்கணக்கானவர்களின் இறுதி வணக்கத்துடன் இனமான இயக்குனர் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

நாம்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மணிவண்ணின் இறுதி நிகழ்வுகள் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுள்ளது

இன்று இறுதி வணக்க நிகழ்வில் உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன்,நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, காசியானந்தன்,பொ.மணியரசன், வைகோ உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் சத்தியராஜ்,நடிகர் மனோபாலா,தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் சரத்துகுமார்,ராதிகா,உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள் என பெருமளவானர்கள் திரண்டு தங்கள் இறுதி வணக்கத்தினை செலுத்தினார்கள்.

தொடர்ந்து தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின்,தங்கபாலு உள்ளிட்ட வர்களும் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்

இறதியாக மணிவண்ணன் அவர்களின் உடல் ஊர்தியில் எடுத்து சென்று பெரும்திரளான மக்களின் வணக்கத்துடன் ஆட்காட்டு வீதியில் போரூர்பகுதியில் உள்ள மின்சார சுடுகாட்டில் உடலம் தகனம் செய்யப்பட்டது.

 

இயக்குனர் மணிவண்ணின் இழப்புதமீழ மக்களுக்கு ஒருபேரிழப்பாக காணப்படுகின்றது ஒட்டுமொத்த தமிழினத்திற்கம் ஒர் இழப்பாக காணப்படுவதாக உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவரது இல்லத்திற்கு சென்ற திரையுலகத்தினை சேர்ந்த பெருந்திரளானவர்கள் சென்று வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

 

http://www.sankathi24.com/news/30469/64/.aspx#.Ub2904zKJh4.facebook

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

MKS1211A.jpg
ஈழத்தமிழர்கள் உண்மையான நண்பனொருவனை இழந்து மீண்டும் அநாதரவாகியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா.தமிழின உணர்வாளரும் திரைப்பட முன்னணி இயக்குநருமான மணிவண்ணனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையினில் அவர்கள் விடுத்த அஞ்சலிக்குறிப்பினிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.மணிவண்ணனின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்ட இழப்பினை விட ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

 
ஈழப்போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியினில் தமிழகத்தினில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களினில் எல்லாம் மணிவண்ணன் பங்கெடுத்திருந்தார்.அவ்வேளையினில் நாமும் அங்கு சிக்குண்டிருந்த நிலையினில் போராட்டங்களினில்  இணைந்து பங்கெடுத்திருந்தோம். அவ்வேளையினில் எல்லாம் மணிவண்ணனினது  உணர்வு பூர்வமான பங்களிப்புக்களையெல்லாம் கண்கூடாக கண்டிருந்தோம்.

முள்ளிவாய்க்கால்; பேரவலத்தின் பின்னரான சூழலினில் கூட தனது மரணத்தை சந்திக்கும் கணம் வரையினில் தனது நிலைப்பாட்டினில் உறுதியாக நின்றிருந்த மணிவண்ணனது பிரிவு தமிழ் மக்களுக்கு பெரும் கவலையினை தந்திருப்பதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அஞ்சலிக்கூறிப்பினில் தெரிவித்துள்ளனர்.

- See more at: http://www.vannionline.com/2013/06/blog-post_1301.html#sthash.tUL4vB7x.dpuf

  • தொடங்கியவர்

திரைப்படத் துறையச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களாக ஜெயலலிதா.. ரஜனி.. கமல்.. பிரபு.. சிவக்குமார்.. சூரியா.. மற்றும் வைகைப்புயல்.. விவேக்.. போன்ற காமடியன்கள்.. மற்றும் முன்னணி நடிகைகள் எதுவுமே சொல்லேல்லையே..! மணிவண்ணனால் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் கூட.. எதுவும் பேசாமல் இருந்திருந்துப்பது.. அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது..! :(:rolleyes:

 

ஜெயலலிதா ரஜனி, கமல், பிரபு..சூரியா போன்றவர்கள் பற்றி தெரியவில்லை.

 

விவேக் நேற்றே அங்கு சென்றிருந்தார். நேற்றே கருத்து சொல்லி விட்டார்.

 

4.46 ஆவது நிமிடத்திலிருந்து 8.35 வரை பாருங்கள். பலர் சொன்ன கருத்துகள் உள்ளன. 6.39 ஆவது நிமிடத்திலிருந்து விவேக் கருத்தை பார்க்கலாம்.

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

நடிகர் சிவகுமார், கவிஞர் காசி ஆனந்தன், நடிகை ரேகா போன்றவர்கள் கருத்து கூறியுள்ளார்கள்.

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

பகுத்தறிவுப்போராளி இயக்குனர் மணிவண்ணன் உடலுக்கு தேனிசை செல்லப்பா ஐயா அஞ்சலி செலுத்திய போது..

 

1012765_10152933035605637_2123763335_n.j

 

(facebook)


நாம் தமிழர் கட்சியினர் வீர வணக்கம் சொன்ன போது...

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி துளசி

  • தொடங்கியவர்

நேற்றைய தினம் நடிகர் சத்தியராஜ், சீமான் அண்ணா உட்பட பலர் தெரிவித்த கருத்துகள்

 

https://www.youtube.com/watch?v=68oLdas27OI

 

வெள்ளிக்கிழமையன்று காலை, இவரது நகைச்சுவைப் பகுதியினைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவரின் நகைச்சுவைத் திறமையை மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்.  இவர் இவ்வாறு மேலும் பல படங்கள் நடிக்க வேண்டும் என என் மனம் நினைத்துக் கொண்டது.  நீண்ட நாட்களுக்குப் பின்னர் அன்று மட்டும் ஏன் எனக்கு இவ்வாறு தோன்றியது எனப் பின்னர்தான் விளங்கியது.  இவரது மரணம் உண்மையிலேயே என் மனதைப் பாதித்து விட்டது.  இது ஒரு அநியாயச் சாவு.  மணிவண்ணன், சத்தியராஜ், சிவகுமார் போன்றவர்களது செயற்பாடுகள் மதிக்கப்பட முடியாதவை.  இனிமேல் இவரின் படங்கள் பார்க்கும்போது நிச்சயமாக மனம் கலங்கும். 

 

மணிவண்ணனது ஆத்மா சாந்தியடையட்டும். 

  • தொடங்கியவர்

அப்பனே ! மண்ணிழந்த மேனியர் நாம்
மன உறுதி பூண்டு எமக்காய் பல மேடைகளில் பரிவுடன்
எம்மை உறுதி கொண்டெழ வைத்த மன்னனே!

அடங்காப் பற்றுடன் அண்ணன் வழி தான்
தமிழ் செல்ல வழித் தோன்றலாய்
வரி தொடுத்து பகைவன் வாயடைத்தீர்
வரலாறு உமை மதிக்கும்.

வீரப் புலி வீரம் நீர் அறிந்தே
உம் பூதவுடலுக்கு புலிக்கொடி கேட்டீர்
போர்த்தி விட்டோம் போற்றி விட்டோம்
போய்வாரும் அய்யனே.

காலம் கனிகின்ற வேளை எமை
கண்கலங்க வைத்து விட்டு கண் மூடினீரே!

ஏன் அப்பனே மாரடைப்பில் வந்த காலனை
கரிகாலன் இட்ட கடமை இருக்கு என்று சொல்லித் திருப்பி அனுப்ப
ஏன் தயங்கினீர் ?

ஈழம் என்ற சொல்லை இதயத்தில் ஏற்றி வைத்து
இழைப்பாறாத இயக்குனரே !
போய் வாரும் ஆற்றாமையோடு விடைதருகின்றோம்.

 

Svr.Pamini

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழையும் தமிழ் மக்களையும்  உண்மையாக நேசிக்கும் உன்னதமான மனிதர்கள்  நம்மை விட்டு பிரியும் போது நமது மனோ வலிமை குறைந்து சோர்ந்து போய்விடுகிறது. கெடுதல் செய்ய பிறந்தவனுகேல்லாம் 90 வயதிலும் கெடுதல் செய்ய ஆரோக்கியமாக  இருக்கிறான் . அனாதைகளாக கிடக்கும் எம் மக்களின்பால் பேரன்பு கொண்ட மாமனிதர்கள் எம்மை விட்டு சீக்கிரம் போய்விடுகிறார்கள்.

 

உங்களின் நினைவோடு உங்களை போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் குறிக்கோளை நோக்கி எங்கள் 
வாழ்கையின் இறுதி பயணம் அமையும் போய்  வா அண்ணலே 

Edited by kanneer

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும்போது  எப்படி பேசப்பட்டான்  என்பதற்கு மேலாக

 

 இறந்த பின்பு எப்படி கௌரவப்படுத்தப்பட்டான் பேசப்பட்டான்.

 

பேசப்படணும் என்பதற்கு இவரது இன்றைய இறுதி யாத்திரை ஒரு வரலாற்றுப்பதிவு

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1005565_10151637575819827_1931081112_n.j



'கோபுரம் சாய்ந்தது' - இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்!
பெ.மணியரசன்; ஞாயிறு, 16 ஜூன் 2013

 

இயக்குநர் மணிவண்ணன் அவர்கள்,  மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி இடிபோல் தாக்கியது. அவர் இயக்கிய முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, ‘பாலைவன ரோஜாக்கள்’, நூறாவது நாள், அமைதிப்படை என்று சிறந்த படங்கள் வழங்கி, கோபுரம் போல் உயர்ந்தார். ‘இனி ஒரு சுதந்திரம்’ மிகவும் கருத்தான படம். இயக்குநர் என்ற நிலையில் இருந்து கொண்டே பிறர் இயக்கத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். படங்களுக்கு நேரம் கொடுக்க முடியாமல் அவர் திணறிய ஆண்டுகளும் உண்டு.

 

 

manivannan_640.jpg

 

 

திரைத்துறையில் எவ்வளவு உச்சத்திற்குப் போனாலும், பழக்கத்தில் பழையத் தோழராகவே இருந்தார். மார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த்தேசியம் ஆகியவற்றை உள்வாங்கி, அத்திசையில்  மேடைகளில் கருத்துகள் வழங்கி வந்தார். தம் மகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார். அவரே, காதல் திருமணம் - சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் தான்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட பின், இனிமையான தோழர்களாகவே பழகி வந்தோம். தமிழர் கண்ணோட்டம் இதழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தார். ஒருமுறை இதழ் வளர்ச்சிக்கென்று நிதி வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் கேட்டேன். வீட்டிற்குள் சென்றவர் பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார்.

தமிழர் கண்ணோட்டம் வளர்ச்சி நிதிக்காக முனைவர் புதுவை ராஜூ அவர்கள் இயக்கிய ‘நந்தன் கதை’ நாடகத்தை தஞ்சையில் போட்டோம். அதற்கு வந்து தலைமை தாங்கினார். போக்குவரத்து செலவுகூட வாங்கிக் கொள்ளவில்லை. அதே போல் மறுமுறை புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி தஞ்சையில் நடத்தினோம். அதற்கும் வந்து உரையாற்றி சிறப்பித்தார்.

தஞ்சையில் த.தே.பொ.க. சார்பில் பொங்கல் விழா நடத்தினோம். அதில் நடந்த பட்டிமன்றத்திற்கு, நடுவர் மணிவண்ணன்; ஓரணிக்குத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். இன்னொரு அணிக்குத் தலைவர் பேராசிரியர் அப்துல் காதர். அந்தப் பட்டிமன்றம் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். கூடியிருந்த பெருங்கூட்டம் ஆரவாரம் செய்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தீவிர அக்கறை செலுத்தியவர் தோழர் மணிவண்ணன். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது பெரு மதிப்புக் கொண்டவர். எந்த நெருக்கடிக்காகவும் அவர் ஈழஆதரவுக் கருத்துகளை மாற்றிக் கொள்ளவில்லை.

தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழின உணர்வும் தமிழ்த் தேசிய உணர்வும் உள்ளவர்கள் குறைவு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மணிவண்ணன். அந்த கோபுரம் சாய்ந்துவிட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் சார்பிலும் தோழர் மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

- பெ.மணியரசன், தலைவர்,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24147:2013-06-16-02-14-25&catid=1:articles&Itemid=264

  • தொடங்கியவர்
பிரான்சில் நடைபெற்ற தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு
Jun 16, 2013


தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இட்டுச்சென்றிருந்தது.

அவரின் துயர் பகிரும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 15.06.2013 சனிக்கிழமை தொடங்கியிருக்கும் தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தினதும், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013ல் வணக்கம் செலுத்தப்பட்டது.

2ம் நாளாகிய இன்று காலை ஈகைச்சுடரினை வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழின உணர்வாளர் அமரர். மணிவண்ணன் அவர்களுக்காக ஈகைச்சுடரினை பிரான்சு ரிரிஎன் தமிழ்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் ஒருங்கமைப்பாளரும், மணிவண்ணன் அவர்களின் உற்ற நண்பருமாகிய திரு. கணேசு தம்பையா அவர்கள் ஏற்றிவைத்திருந்தார்.

அதேநேரம் பிரான்சின் வெள்ளிக்கிழமை அகாலமரணமடைந்த மூதாளர் அமைப்பின் உறுப்பினரின் துணைவியார் திருமதி. nஐயக்குமார் கண்மணி அம்மா அவர்களையும் நினைவு கூரப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இவரின் பிரிவுத்துயர் ஆற்றிய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரை மற்றும் மக்கள் தொடர்பு பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் அமரர் மணிவண்ணன் அவர்களின் வரலாறு மற்றும் அவரின் தமிழ்மீதான பற்றும் விடுதலைப்போராட்டத்தில் அவருக்கு இருந்த பற்றுதல் பற்றியும் இறுவரை வெளிபடையாக தமிழீழ விடடுதலைப்போராட்டத்தையும், தலைவரையும் எவ்வாறு நேசித்து அதனை துணிந்து குரல் கொடுத்து வாழ்ந்தவர் என்றும் இவரின் உயிர் இழப்பானது ஈழத்தமிழ் மக்களுக்கும், உலகத்தமிழ் மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும் என்றும் இவரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினரோடும், திரைப்பட கலைஞர்கள், தமிழின விடுதலை உணர்வாளர்கள், தமிழ்நாட்டு மற்றும் அனைத்து மொழி மக்களுடனும் பிரான்சுவாழ் தமிழீழ மக்கள் நாமும் பகிர்ந்து கொள்கின்றோம் எனத்தெரிவித்திருந்தார்.

இவ் நினைவு பகிர்வினை 1500 பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னினையில் நடைபெற்றிருந்து.
 
1010635_471070729645223_200542786_n.jpg
 
1012613_471070759645220_1811477049_n.jpg
 
1010766_471070809645215_1910639415_n.jpg
 
1012734_471070842978545_1394371340_n.jpg
 
1000531_471070886311874_1015221631_n.jpg
 
1010933_471070912978538_580637946_n.jpg
 
988599_471070952978534_287292028_n.jpg
 
(facebook)
  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

உணர்வாளர் திரு மணிவண்ணனுக்கு BTF இரங்கல் !

மனிதாபிமானி தமிழின உணர்வாளர் திரு மணிவண்ணன் அவர்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை இரங்கல்.தமிழின உணர்வாளரும் மனிதாபிமானியுமான திரு மணிவண்ணன் அவர்களின் மறைவுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பாக அஞ்சலியைச் செலுத்திக் கொள்கின்றது. பலரும் அறிந்த அவரது திரையுலக சாதனைகளுக்கப்பால் ஈழத்தமிழர்களின் அவலத்தையறிந்து ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தை மனத்தால் நேசித்தவர் என்ற ரீதியில் எம் இதயங்களில் எழுந்துள்ள உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்திக் கொள்கின்றோம்.

தமிழீழத்திற்கு சென்று அங்குள்ள நிலைமையையும் போராடும் மக்களின் மனதையும் நேரடியாக அறிந்து கொண்டவர் என்பதுடன் 2009 மேயில் நடந்த உச்சகட்ட மனித வதைகளுக்குப் பின் பலரையும் உள்வாங்கி தோல்வி மனப்பான்மையை அகற்றி போராட வேண்டும் என்று தமிழகத்திலிருந்து குரல் கொடுத்த, செயல்பட்ட ஒரு உண்மையான தோழரை இழந்து விட்டோம். தமிழத்தின் ஆதரவை எம் போராட்டத்திற்கு திரட்ட இதயசுத்தியுடன் மனப்பூர்வமாக செயல்பட்ட ஒரு உண்மை மனிதனை இழந்திருக்கிறோம்.

உணர்வாளர் என்பதுடன் மட்டுமல்லாது நல்ல அறிவாளியாகவும் போராட்ட சிந்தனைகளை தெளிவாக விளங்கிக் கொண்டவராகவும் வாழ்ந்தவர். தமிழகத்தின் எல்லைப் பரப்புகளைக் கடந்து ஏனைய இந்திய மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லி ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று அறிவுபூர்வமாக செயல்பட்டார். அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தவர், நண்பர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நேசித்து அவருடன் செயல்படும் தோழர்களின் சோகத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை பங்கெடுப்பதுடன் உணர்வுபூர்வமான அஞ்சலியைச செலுத்திக் கொள்கின்றது.

 

1000055_391705560948707_1791161810_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புகளிற்கு நன்றி துளசி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ கடவுளே..இப்பொழுதுதான் பார்த்தேன்..இரண்டு நாட்களாக இணையம் வராததால் பார்க்க முடியவில்லை.. நம்ப முடியவில்லை..ஈழத்தையும் ஈழமக்களையும் அவர்களின் விடுதலையையும் நேசித்த ஒரு உன்னதமான மனிதன்.. துன்பப்பட்ட இனத்திற்கே மேலும் துன்பங்கள் வந்துசேர்வதுதான் விதி போலும்... ஜயா அமைதியாக உறங்குங்கள்..உங்கள் கனவுகள்..நீங்கள் நேசித்த இலட்சியங்கள் எங்களையும் சோர்வின்றி அதே வழியில் நடக்க வழிநடத்தும்...உங்கள் கனவுகளை உங்கள் தம்பிகள் சுமப்போம்..

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும் & அஞ்சலிகளும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.