Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசைகள் அலுத்துப் போனவள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டி வைத்த

பைங்கிளிக்கும்

பறந்து பார்க்க ஆசை வரும்

பருவம் கண்ட

பாவைக்கும்

வாழ்ந்து பார்க்க ஆசை வரும்..!

ஆசைகள் கோடி

இதய அறைகள் எங்கும்

பறந்தடிக்க..

சமுதாயக் கேடிகள்

பூட்டிவிடுவர் அவளை

கோட்பாட்டுக் கோட்டைக்குள்..!

நாளும் அவள்

அடக்கி வைத்த

ஆசைகள்

வேட்கைகளாகி

வெறுமையில் கழிய

ஆசைகள் அலுத்து

மனதும் பாளடைந்து

ஆகிறாள் பைத்தியம்..!

இறுதியில்

அருவமும்  உருவரும் அற்ற

பேய்களாய் அவள்

ஆசைகள் ஆடுகின்றன.

கூடி இருக்கும் மனிதரோ

வேப்பிலையால்

போக்குகின்றனராம்

பேய்களை..!!

யார் தான் புரிந்திடுவர்

சமுதாயக் கோட்டைக்குள்

சிறகடிக்க நினைக்கும்

பேதையவள்..

உள்ளுணர்வை..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேதையவள் உள்ளுக்கை இருந்தால் பரிதாபப்படுறியள்..........வெளியிலை வந்து பகட்டாய் திரிஞ்சால் பரிகாசிக்கிறியள்........ :(

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றுதான். ஆனால் என்ன செய்யிறது பெண்களுக்குப் பேய் பிடிக்கிறதே ஆண்கலாலேதான்

இறுதியில்

அருவமும்  உருவரும் அற்ற

பேய்களாய் அவள்

ஆசைகள் ஆடுகின்றன.

கூடி இருக்கும் மனிதரோ

வேப்பிலையால்

போக்குகின்றனராம்

பேய்களை..!!

பெண்களை எப்பொழுதும் ஓர் போகப்பொருளாகவும் , அவர்களை என்றம் பயபீதியில் வைத்திருக்கும் பெரும்பான்மையான அண்களும் இந்தப்பேய்களின் இருப்புக்கு துணைபுரிகின்றனர் .  சிந்திக்கவைக்கும் அருமையான கவி ஆக்கத்திற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேதையவள் உள்ளுக்கை இருந்தால் பரிதாபப்படுறியள்..........வெளியிலை வந்து பகட்டாய் திரிஞ்சால் பரிகாசிக்கிறியள்........ :(

பட்சிக்கும் சுதந்திரம் இருக்குது. அதுவும் ஆகாயத்தில் தான் அதுவும் ஒரு குறிப்பிட்ட உயரம் தான் பறக்க முடியும். விண்வெளியில் பறக்க இயலாது. அது இயற்கையின் அமைப்பு. அந்த அமைப்புக்குள் எவரும் தங்கள் உரிமையை தக்க வைத்துக் கொள்ளலாம். அதில் தவறில்லையே..! அப்படி செய்ய அனுமதித்திட்டாலே.. இப்படியான அபலைகள் தோன்ற மாட்டார்களே..!

சமுதாயக் கண்காணிப்பு இருக்கலாம் கட்டிப்போடல் இருக்கப்படாது..! ஏன்னா நாங்கள் பெரிய மூளை கொண்ட சமூக விலங்குகள். :):icon_idea:

Study confirms social brain theory.

_68374169_122412430.jpg
 
_68374170_c0157532-bonobo_female_sharing
 
A computer model now supports the theory that people need a big brain to cope with living in big social groups
 
The social brain theory - that animals in large social groups have bigger brains - has now been supported by a computer model.

கவிதை நன்றுதான். ஆனால் என்ன செய்யிறது பெண்களுக்குப் பேய் பிடிக்கிறதே ஆண்கலாலேதான்

நீங்களும் அந்த சமுதாயக் கேடிகளில் ஒருவர். அவளின் உள்ளுணர்வைப் புரியச் சொன்னால் நீங்கள் உங்கள் பார்வையில்.. ஆண்களைக் காட்டி அவளின் உணர்வை அடக்க நினைக்கிறீர்கள்..! அவளின் இந்த இருப்புக்கு ஆண்களை பற்றிய பிற பெண்களின் அபரிமிதமான.. பயமுறுத்தல்களும் ஒரு காரணம்..! நீங்கள் எல்லாம் ஆண்களோடு வாழ்ந்து கொண்டே ஆண்களைப் பற்றி குறை சொல்லும்.. ஒரு வகை பேய்கள்....! அவளும் வாழ்ந்து பார்த்திட்டு கருத்துச் சொல்லட்டும் விடுங்களன். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற  பிசாசுகளைச் சமாளிக்க  என்னைப் போன்ற பேய்கள் தேவைதான். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில்

அருவமும்  உருவரும் அற்ற

பேய்களாய் அவள்

ஆசைகள் ஆடுகின்றன.

கூடி இருக்கும் மனிதரோ

வேப்பிலையால்

போக்குகின்றனராம்

பேய்களை..!!

பெண்களை எப்பொழுதும் ஓர் போகப்பொருளாகவும் , அவர்களை என்றம் பயபீதியில் வைத்திருக்கும் பெரும்பான்மையான அண்களும் இந்தப்பேய்களின் இருப்புக்கு துணைபுரிகின்றனர் .  சிந்திக்கவைக்கும் அருமையான கவி ஆக்கத்திற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

தங்கள் கருத்துக்கு நன்றி.

பெண்களின் பிரச்சனைக்கு ஆண்கள் மீது மட்டும் குற்றம் காணும் குறூப்பில் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இப்படியான பிரச்சனைக்கு ஆண்கள் மட்டுமல்ல.. அவளைச் சூழ்ந்துள்ள பெண்களும் அவர்கள் விதைக்கும் கருத்துக்களும் எண்ணங்களும் காரணம்.

ஒரு கணவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்.. அவள் தோழிகளுக்கும் சொல்லிக் கொண்டு இருந்தது.. ஆண்கள் கெட்டவர்கள் என்று. இறுதியில் என்னாச்சு.. அந்தத் தோழியரும்.. ஆண்களை வெறுக்க ஆரம்பித்தார்கள். சிலர் மிசன்களிடம் சரணடைந்தார்களாம். சிலர் விபச்சார விடுதிகளில் சரணடைந்தார்களாம். ஒரு ஆணின் தனிப்பட்ட பிரச்சனையை பொதுவாக ஆண்களின் குணம் என்று காட்டப் போய்.. பாழானது எத்தனை பேர் வாழ்க்கை..???! இது குறித்தும் கவனமாகச்  சிந்திக்கனும்..! :icon_idea::)

உங்களைப் போன்ற  பிசாசுகளைச் சமாளிக்க  என்னைப் போன்ற பேய்கள் தேவைதான். :lol:

அதுதான் உங்க வீட்டிலையே ஒரு பிசாசு கூட பயிற்சி எடுத்திட்டு யாழ் களத்தில.. பேயாட்டம் ஆடுறனீங்களோ..??! :lol::D

நாங்கள் எல்லாம் பிசாசையும் தாண்டின ஆக்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் உங்க வீட்டிலையே ஒரு பிசாசு கூட பயிற்சி எடுத்திட்டு யாழ் களத்தில.. பேயாட்டம் ஆடுறனீங்களோ..??! :lol::D

நாங்கள் எல்லாம் பிசாசையும் தாண்டின ஆக்கள்..! :lol:

நாங்கள் எந்தப் பிசாசையும் எதிர்கொள்ளத் தயங்காத பேய்கள். என்னிலும் சிறந்த பேய் ஒன்றிடம் எப்பவோ ஒருநாள் மாட்டத்தானே போறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் அந்த சமுதாயக் கேடிகளில் ஒருவர். அவளின் உள்ளுணர்வைப் புரியச் சொன்னால் நீங்கள் உங்கள் பார்வையில்.. ஆண்களைக் காட்டி அவளின் உணர்வை அடக்க நினைக்கிறீர்கள்..! அவளின் இந்த இருப்புக்கு ஆண்களை பற்றிய பிற பெண்களின் அபரிமிதமான.. பயமுறுத்தல்களும் ஒரு காரணம்..! நீங்கள் எல்லாம் ஆண்களோடு வாழ்ந்து கொண்டே ஆண்களைப் பற்றி குறை சொல்லும்.. ஒரு வகை பேய்கள்....! அவளும் வாழ்ந்து பார்த்திட்டு கருத்துச் சொல்லட்டும் விடுங்களன். :lol::icon_idea:

ஆடு நனையிது என்று ஓநாய் பாவம் அழுகிறது. :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையிது என்று ஓநாய் பாவம் அழுகிறது. :lol: :lol:

நீங்கள் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஓநாய்களுக்குள்ள இரக்க குணத்தை பழிச்சுக் கொண்டிருக்கப் போறீங்களோ..! கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை நம்புவர்கள்.. ஓநாய்கள் பசித்தால் மட்டுமே புசிக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்..! :D

தலைப்பு... தடம் மாறிப் போகப் போகுது போல..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு... தடம் மாறிப் போகப் போகுது போல..! :lol:

பல இடங்களில் அப்படித்தானே பாஸ் நடக்குது.. :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஓநாய்களுக்குள்ள இரக்க குணத்தை பழிச்சுக் கொண்டிருக்கப் போறீங்களோ..! கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை நம்புவர்கள்.. ஓநாய்கள் பசித்தால் மட்டுமே புசிக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்..! :D

தலைப்பு... தடம் மாறிப் போகப் போகுது போல..! :lol:

தடம் மாத்தினதே நீங்கள்தான். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக இருக்கிறது ஆனால் இந்தக் காணொளிக்கான கவிதையாக இருந்தால் இதில் இன்னுமொன்றைச் சேர்த்திருக்கலாம், இதை அடக்கி வைப்பதால் மட்டும் தான் என்ற வகைக்குள் மட்டும் அடக்கி விடமுடியாது இதற்குப் பின்னால்

ஒரு சமூக அரசியலே இருக்கு, மூட நம்பிக்கை மற்றும் மதம் சார்ந்த இருப்புக்களுக்கும் இவை தேவைப்படுகின்றன வத்திக்கான்,மக்கா,மதீனா, திருப்பதியில் இருந்து புளியமரத்துக்குக் கீழ் வைக்கும் உண்டியல் வரை மதத்தை வைத்து ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வியாபாரமே நடக்கிறது. கட்சிக்காக, கட்சித்தலைமைக்காக தீக்குளிக்கும் தொண்டனின் பின்னணியில் என்ன அரசியல் இருக்கோ இங்கும் அதைத்தான் பார்க்க முடிகிறது. நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

தங்கள் கருத்துக்கு நன்றி.

பெண்களின் பிரச்சனைக்கு ஆண்கள் மீது மட்டும் குற்றம் காணும் குறூப்பில் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இப்படியான பிரச்சனைக்கு ஆண்கள் மட்டுமல்ல.. அவளைச் சூழ்ந்துள்ள பெண்களும் அவர்கள் விதைக்கும் கருத்துக்களும் எண்ணங்களும் காரணம்.

ஒரு கணவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்.. அவள் தோழிகளுக்கும் சொல்லிக் கொண்டு இருந்தது.. ஆண்கள் கெட்டவர்கள் என்று. இறுதியில் என்னாச்சு.. அந்தத் தோழியரும்.. ஆண்களை வெறுக்க ஆரம்பித்தார்கள். சிலர் மிசன்களிடம் சரணடைந்தார்களாம். சிலர் விபச்சார விடுதிகளில் சரணடைந்தார்களாம். ஒரு ஆணின் தனிப்பட்ட பிரச்சனையை பொதுவாக ஆண்களின் குணம் என்று காட்டப் போய்.. பாழானது எத்தனை பேர் வாழ்க்கை..???! இது குறித்தும் கவனமாகச்  சிந்திக்கனும்..! :icon_idea::)

அதுதான் உங்க வீட்டிலையே ஒரு பிசாசு கூட பயிற்சி எடுத்திட்டு யாழ் களத்தில.. பேயாட்டம் ஆடுறனீங்களோ..??! :lol::D

நாங்கள் எல்லாம் பிசாசையும் தாண்டின ஆக்கள்..! :lol:

இதில் குழுமங்களுக்கு இடமில்லை . நடைமுறையில் உள்ளதைத்தானே சொல்லமுடியும் . நாங்கள் அடிப்படையில் தாய்வழி சமூகமாக இருந்தாலும் , அங்கு நடப்பது என்னவோ ஆண்மக்களின் சிந்தனைகளும் , சித்தாந்தங்களுமே இறுதித் தீர்மானமாக உருவெடுக்கின்றது இன்றுங்கூட எமது பெண்கள் தான் பெற்றெடுத்த பிள்ளைக்கு தனது பெயரை முதற்பெயராக வைக்கும் தகுதியை இளக்கின்ற நிலமையே காணப்படுகின்றது. ஓரு பெண் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கத் தொடங்கியது , தமிழர் போராட்டம் மூர்க்கம் அடைந்த பின்பும் , புலப்பெயர்வுக்குப் பின்னாலுமே என்றாலும் ,அதிலும் பல கறுப்பான பக்கங்களே இருக்கின்றன . அதற்கு முன்னயகாலங்கள்  பெண்களைப் பொறுத்தவரையில் இருண்ட காலமே . அதாவது பேய்களின்பிடியில் இருந்தார்கள் . அந்தப்பேய் புலத்தில் சிறிது கூர்ப்படைந்து கலச்சாரக்காவலர்கள் , சாத்திரப்பூசாரிகள் கையில் அகப்பட்டு நன்றாகவே பெண்களைப் பிடித்து ஆட்டுகின்றது . உங்களைப்போலவே எனக்கும் பலசமூகக்கோபங்கள் உண்டு . என்று பெண்கள் இந்தப் பூசாரிகளின் பிடியில் விடுபடுகின்றார்களோ அன்றே இந்தவகையான பேய்களும் விடுபடும் என்பேன் .

  • கருத்துக்கள உறவுகள்

யார் தான் புரிந்திடுவர்

சமுதாயக் கோட்டைக்குள்

சிறகடிக்க நினைக்கும்

பேதையவள்..

உள்ளுணர்வை..??!

எனக்கும் இந்த குற்ற  உணர்வு எப்பொழுதும் உண்டு

நானும் மனிதனப்பா

அவ்வளவு தான்........... :(

நன்றி  கவிதைக்கும் நேரத்திற்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடம் மாத்தினதே நீங்கள்தான். :lol:

இந்த இலட்சனத்தில் ஆண்களில் வேற குற்றம் பிடிக்கிறீங்க. :):lol:

நன்றி ஜீவா, கோமகன் மற்றும் விசுகு அண்ணா. உங்கள் அனைவரினதும்.. தாழ்மையான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்கிறோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை நெடுக்ஸ் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணா தங்கள் வரவிற்கும். கருத்துப் பகிர்விற்கும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்கு ஏற்படுகிற மன நோய்களுக்கு இப்படி ஒரு விஞ்ஞன, சமூக விளக்கத்தை தந்த கவிஞ்சரை என்னவென்று சொல்லுவது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு ஏற்படுகிற மன நோய்களுக்கு இப்படி ஒரு விஞ்ஞன, சமூக விளக்கத்தை தந்த கவிஞ்சரை என்னவென்று சொல்லுவது ?

உங்கள் மொழி நடை புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்.. விபரம் தர வசதியா இருக்கும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக அடக்கி வைக்கப்படும் பெண்களுக்குத்தான் பேய் பிடிக்கும் என நாம் எண்ணுகிறோம். ஆனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கே இப்படியான மன அழுத்தங்கள் ஏற்பட்டு அதை வெளியே கூற முடியாது, இப்படி தம் உணர்வை வெளிப்படுத்துகின்றனர். எம் சமூகங்களில் தெரிந்தும் ஆண்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்க முடியாத பெண்களுக்கே இப்படி நடக்கிறது. ஆண்கள் ஒழுங்காக இருந்தால் எந்தப் பெண்ணுக்கும் பேய் பிடிக்காது என்பதுதான் உண்மை. ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை. அதனால் அவர்களுக்கு பேய் பிடிப்பதில்லை.

வோல்கானோ கூறுவது எனக்கே விளங்குது. உங்களுக்கு விளங்காதது ஆச்சரியம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வோல்கனே அறிவியலுக்கு அப்பாற்பட்டது..! அதுதான் புரியல்ல. உங்கட கருத்து பூமிக்கு அப்பாற்பட்டது..! ஏன்னா பூமியில் ஆணும் பெண்ணும் என்ற அங்கத்தவர்கள் இணைந்த சமூக வாழ்வை வாழும் ஜீவராசிகளே அதிகம் வாழ்கின்றன..! :D:lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.