Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலைக்கு செல்கின்ற பெண்கள் வீட்டில் சமைக்கவேண்டுமா?? வேண்டாமா ??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கிட்டடியிலை ஒரு நிகழ்சி பாத்தன் . அதிலை வேலைசெய்யிற பொம்பிளையள் சமைக்கிறதை பத்தி ஒரு விவாதம் நடந்திது . இது சம்பந்தமாய் எனக்கு சொந்தமாய் கருத்து இருக்குது எண்டாலும் உங்களிட்டையும் கேக்கிறன் . அந்த விவாதம் இதுதான் ......................

************************************************

நம்ம கோபிநாத் வெகு கவனமாக, முழுநேர வீட்டரசிகளை எல்லாம் களை எடுத்துவிட்டு, படித்து வேலைபார்த்துக்கொண்டு சமையலையும் கவனிக்கும் அந்தக்காலத்தில் புதுமைப்பெண்ணாக திகழ்ந்த அம்மாக்களையும், வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது கடினம் என்று வாதிடும் இந்தக்காலத்துப் புதுமைப்பெண்ணாக வாழும் அம்மாக்களையும் ஒன்று கூட்டி எதிர் எதிரணியில் உட்காரவைத்து வாதிடவிட்டு வேடிக்கை பார்த்தார்.

இந்த ஷோவை நடத்த கோபிநாத் மாரி ஆண்களுக்கும், இதை விமர்சிக்க என்னைமாரி ஆம்பளைகளுக்கும் என்ன தகுதி இருக்கு? னு எனக்கே தெரியலை (மனசாட்சி! :-) )

இந்தக்காலத்து,  கொஞ்ச வயசு ஆண்ட்டி ஒண்ணு, சமையல்க்காரி என்கிற ஒரு அடிமையை ( I am sure, her cook is CHEAP and hard to run her life with the salary aunty gives) வைத்துக்கொண்டு, தனக்கும், தன் கணவனுக்கும், குழந்தைக்கும் தேவையானதை அவரிடம் வாய்க்கு ருசியாகச் சமைக்கச் சொல்லிவிட்டு...  "வீட்டு வேலை எல்லாம் பார்த்தால் என்னால் கணவனுக்குத் தேவையான அளவு செக்ஸில் பங்குபெற முடியவில்லை! என்றும், அதனால சமையல் அறையிலெல்லாம் வேர்க்க வேர்க்க அதிக நேரம் என்னால் செலவழிக்க முடியாது" னு வாதிட்டாங்க வாதிட்டாங்க. யப்ப்பா!  என்னவோ கணவனை சந்தோஷப்படுத்தவே இவரு வாழ்றமாரியும், தனக்கு சாப்பாட்டைவிட செக்ஸ்தான் முக்கியமானது என்பது போலவும்..அதனாலதான் நான் சமையலை இன்னொருவர் தலையில் கட்டிவிட வேண்டிய கட்டாய சூழல் வந்ததுபோல் இவரு என்னதான் வாதிட்டாலும், எத்தனை பேரு அவர் வாதத்தை மதித்தார்கள்னு தெரியலை..சரி இவருக்கு வேர்க்க விறுவிறுக்க  சமைத்துப் போடும் "அடிமை" வேலைக்காரி அம்மாவுடைய செக்ஸ் லைஃப் எல்லாம் பத்தி  இந்த ஆண்ட்டியால் யோசிக்க முடியுமா? இன்னொரு பெண்ணை அடிமையாக்கித்தான் இது புதுமைப்பெண்ணா தலைதூக்க முடியுது பாவம்! :( இந்த ஆண்ட்டி சொன்னதிலெல்லாம் உண்மை மட்டும் கெடையாது.. வெறும் வாதம்தான் இது..

அதேபோல் எதிரணியில் உள்ள அம்மாக்கள், சமையல் என் ஏரியா, அதில் நாந்தான் ராணி, அதை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லை என்பதுபோல் வாதம் செய்தார்கள். ஒரு அம்மா, காமம், காதல் எல்லாம் கொஞ்ச நாள்தான், தங்கள் ருசியான சமையல்தான் தங்கள் வாழ்வை காலத்தால் அழியாமல் சிறப்படைய வைக்கிறது என்பதுபோல வாதிட்டாங்க. இதுவும் ஒரு மாதிரியான முழுமையாக ஏற்றுக்க முடியாத வாதம்தான். இவங்க கஷ்டங்களை, வலிகளை எல்லாம் இவங்க ரொம்ப எளிதாக எடுத்துக் கொண்டதுபோல் காட்டிக்கிட்டாங்க..அவ்ளோதான்..

என்னைப்பொறுத்த வரையில் சமையல் என்பது ஒருவருடைய இண்டெரெஸ்ட்டை பொறுத்தது. ஒரு சிலருக்கு அது நல்லா வரும்!  ஒரு சிலருக்கு வராது. இதில், ஆண் பெண் என்கிற பேதம் எல்லாம் இல்லை! வீட்டரசியாகவே உள்ள அம்மாமார்கள்கூட ஒரு சிலர் ரசிச்சி ரசிச்சி சமைப்பார்கள், ஒரு சிலர், சினிமா கோயில்னு ஊர்சுற்றுவது போன்ற மற்றவவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு  சமையல்கட்டிற்கு டிமிக்கி கொடுப்பாங்க..எங்க அம்மா பெருமையெல்லாம் நான் பாடப் போறதில்லை! :-) இதெல்லாம் நம்ம பார்க்கலையா என்ன? "எனக்கு இண்டெரெஸ்ட் இருக்கு சமைக்கிறேன், ஒரு சிலருக்கு இல்லை" என்பதை  யாருமே தெளிவாகச் சொல்லவில்லை.

மேலே சமையல்க்காரி வைச்சு சமைத்து, கணவனை வேர்வையில்லாமல் சந்தோஷப்படுத்திய ஆண்ட்டி (சமைத்துவிட்டு ஒரு குளியல் போட்டா என்னவாம்? ஓ தண்ணீர் பஞ்சமோ? ), எனக்கு சமையலில் இண்டெரெஸ்ட் இல்லை, அதனால என்னதான் கஷ்டப்பட்டாலும் அப்படி ஒண்ணும் என் சமையல் நல்லா வராது. மேலும் பெண்கள் சமைக்கிறது என்பது என்னைப் பொறுத்தவரையில்  அடிமைத்தனம்போல நம் கலாச்சாரத்தில் காலம்காலமாக தொடருகிறது. அதனால நான் அதில் நேரம் செல்வழிப்பதில்லை.. சமையல் செய்வதில் எனக்கு வெறுப்பு, ஆனால் வாய்க்கு ருசியா யாராவது ஒரு அடிமை குறைந்த செலவில் எனக்கு வேளாவேளைக்கு சமைத்துப் போட்டால் நல்லா சாப்பிடப் பிடிக்கும்னு சொல்லியிருக்கலாம்.

Our priorities are mostly based on our interest. We go away from something like cooking because we dont do well in it and we can never excel in it no matter how long we spend. Based on your cooking skills and bed-room skills you prefer one over other. Of course, there are some women, who are skillful in both- may be they are gifted!;)

சொல்ல மறந்துட்டேனே.. ஒரு சிறுகதை எழுத்தாளர்னு ஒரு ஆளு வந்து அவர் தம் மனைவியை சமையல்கட்டுப் பக்கமே விடுவதில்லைனு ஏதோ பேசினார். எத்தனை பெணகள் அல்லது ஆண்கள் அவரோட தியரியை ரசிச்சாங்கனு தெரியலை. அவருக்கு சமையலில் இண்டெரெஸ்ட் அதிகமோ என்னவோ.. எனக்கென்னவோ அவர் பேசியது எல்ல்லாம் எரிச்சலைத்தான் கிளப்பியது..

http://timeforsomelove.blogspot.fr/2013/06/blog-post_25.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு இணைப்பு, மைத்திரேயி!

சும்மா வெறுமனே, 'புதுமை' என்று சொல்லி எல்லாவற்றையும் தூக்கி எறிவதில், எனக்கு உடன்பாடில்லை!

இறுதியாக, எமக்கான எல்லாத் தனித்துவங்களையும் தொலைத்து விட்டு, வெறுமனே அம்மணமாக, அடையாளமிழந்து நிற்கப் போகின்றோம்! :o

நான் ஒரு ஆண்! பல தடவைகள் சமையல் செய்திருக்கின்றேன்! இன்றும் செய்கின்றேன்! எல்லோரும் சொல்லுவது போல, இப்போதெல்லாம் சமையல் பெரிய வேலையில்லை! சின்ன வெங்காயம் உடைச்சு, அரிசிக்குக் கல்லுப் பொறுக்கி, அரிக்கன் சட்டியில அரிச்சா, இப்போதெல்லாம் அரிசி போடுகின்றோம்? வளவுக்குள்ள போய், ஈர விறகெடுத்துக், கண்ணுக்கிள்ள இருந்து தண்ணி வரவா அடுப்பூதுகின்றோம்? குடமெடுத்துக் கொண்டுபோய், நல்ல தண்ணிக் கிணத்தில, தண்ணி அள்ளிக்கொண்டா வாறம்?

ஒரு சோறு, ஒரு மச்சக்கறி, இரண்டு மரக்கறி வைக்க, எவ்வளவு நேரமாகும்? எனக்கு, நாற்பத்தைந்து நிமிடங்கள் எடுக்கும்! நான் CPA (Critical Path Analysis) முறையில தான் சமைக்கிறது! :icon_idea:

ஒரு ஆண் பெண்ணுக்குச் சமைத்துக் கொடுக்கும் போதோ, அல்லது ஒரு பெண் ஆணுக்குச் ஒரு சமைத்துக் கொடுக்கும்போதோ, அங்கு உணவு மட்டும் பரிமாறப்படவில்லை! ஒரு விதமான, அன்பும் பரிமாறப் படுகின்றது!அதுவே, அவர்களுக்குள் ஒரு விதமான புரிந்துணர்வையும் உண்டாக்குகின்றது!

இது எனது வேலை, இது உனது வேலை என்று பிரிப்பதனால், அங்கு ஒரு நிறுவனக் கலாச்சாரம் உருவாகுமேயன்றி, ஒரு ஆரோக்கியமான குடும்பக் கலாச்சாரமல்ல!

எனது கருத்தினுள் 'ஆம்பிளைச் சிங்கங்களை' உள்ளடக்கவில்லை!

சாதாரணமான என்னைப்போன்ற 'சாமானியர்களுக்கே' இது பொருந்தும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள்.. வேலைக்குப் போற பெண்கள் சாப்பிடனுமா.. வேணாமா.. என்பதை வைச்சு இதனை தீர்மானிக்கலாம். பட்டினி கிடப்பன் என்றவங்க சமைக்கத் தேவையில்ல. சாப்பாடு வேணும் என்றவங்க சமைக்கனும்.

பொம்பிளக் காக்கா.. கூட.. கூடு கட்டுது.. குஞ்சுகளைப் பராமரிக்குது. அதுதான் தனக்கும் சாப்பாடு தேடிக்குது. அதுக்கு யாரும் சமைச்சுக் கொடுக்கிறதில்ல. குஞ்சுகளுக்கும் இரை தேடிக்குது.

அது என்னமோ தெரியல்ல.. மனிதப் பெண்கள் வேலைக்குப் போறதும் சாதனை.. விண்வெளிக்குப் போறதும் சாதனை. ஏன்.. அவங்க மனுசங்களே இல்லையா..??! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொருத்தவரை பெண்கள் சமைப்பதில் எந்தக் கடினமும் இல்லை. நேரமின்மை காரணமாக வேறு வழியின்றி சிலவேளைகளில் கடைகளில் வாங்கி உண்பதையும் தவறென்று கூறமாட்டேன். பலர் ஆரோக்கிய உணவு பற்றி அறியாமல் கடைகளில் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாம் வீட்டில் சமைக்கும் உணவுபோல் வராதுதானே. என் கணவர் வீட்டில் இருந்தால் சமைப்பார். பல ஆண்கள் பெண்களிலும் உருசியாகச் சமைப்பார்கள். இரசனை கெட்ட பஞ்சிபிடித்த பெண்கள் தான் சமைக்கத் தெரியாது என்று கூறுவது. சமைக்கவே தெரியாத ஒரு பெண்ணால் மற்ற எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியும் என நான் எண்ணவில்லை. சித்திரமும் கைப்பழக்கம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு எல்லா வேலைகளையும் தான் செய்யும்போது வேலைப்பளு வரும்தான். ஆனால் பணம் தேவை எனில் எல்லாவற்றையும் சமாளிக்கப் பழக வேண்டும். சமைப்பது பெண் அடிமைத்தனம் என நான் எண்ணவில்லை.

ஆனால் புங்கைபோல் என்னால்  45 நிமிடத்தில் சமைக்க முடியாது. மூன்று கறிகள் வைக்க எனக்கு ஒரு மணித்தியாலம் செல்லும். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் புங்கைபோல் என்னால்  45 நிமிடத்தில் சமைக்க முடியாது. மூன்று கறிகள் வைக்க எனக்கு ஒரு மணித்தியாலம் செல்லும்.  :D

அங்கை தான் 'புங்கை' நிற்கிறார்! :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் புங்கைபோல் என்னால்  45 நிமிடத்தில் சமைக்க முடியாது. மூன்று கறிகள் வைக்க எனக்கு ஒரு மணித்தியாலம் செல்லும். :D

நாங்க எல்லாம் ஜஸ்ட் 30 நிமிடத்தில் சமைக்கிறமே..!

விரைவான சமையலுக்கு..

1. வெங்காயத்தை உரித்து நன்று கழுவி.. நறுக்கி.. காற்றுப் புகக் கூடிய டப்பாவில் போட்டு வையுங்கள்.

2. பச்சை மிளகாய் உண்பவராக இருந்தால் அதையும் அப்படியே செய்து கொள்ளலாம்.

3. தக்காளிப் பழம் வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்.

4. துண்டாக அரிந்த கோழி கடையில் விற்குது அல்லது கோழிக்கடைக்காரனிடம் சொன்னால் சும்மாவே வெட்டி தருவான். அதனை கழுவி.. மிளகாய்தூள்.. மஞ்சள் தூள்.. உப்பு.. போன்றவற்றை போட்டு புரட்டி சுத்தமான உணவு பொதி செய்யும் பையில் தேவையான அளவுக்கு இட்டு கட்டி குளிர்சாதனப் பெட்டியில் சமைக்காத உணவுகள் பகுதியில் சேமியுங்கள்.

5. உருளைக்கிழங்கையும் மைகுரோவியில் அவித்து கழுவி.. வெட்டி பேணி வையுங்கள்.

6. தேவையான மளிகைப் பொருட்களையும் அழகான சிறிய இலகுவாக திறந்து மூடக் கூடிய டப்பாக்களில் போட்டு ஒன்றாக ஒரு சிறிய பாஸ்கற்றில் அடுக்கி வையுங்கள். தேவையான போது அப்படியே தூக்கி வந்து பாவிக்கலாம்.

இவற்றை சும்மா வெட்டிக்கு சீரியல் பார்க்கிற நேரமோ.. யாழில்.. ஸ்கைப்பில் அரட்டை அடிக்கிற நேரமோ செய்யலாம்.

அப்புறம் சமையல் கட்டுக்குப் போனதும்..

அடுப்பை பற்ற வைக்க முதல்.. என்ன சமையல் செய்யப் போறம்.. என்ன தேவை என்பதை மனதில் கொண்டு வாருங்கள்.

தேவையான பொருட்களை சுத்தப்படுத்திய சமையல் கட்டு மேசையில் எடுத்து வரிசைக்கிரமமாக கைக்கு எட்ட வையுங்கள்.

தேவையான பாத்திரங்களையும் சுத்தப்படுத்தி வையுங்கள்.

சோறு உண்பவராக இருந்தால்.. கறி சமைக்க முன்னம்.. அரிசியை ரைஸ் குக்கரில் இட்டு சரியான அளவு நீர் மற்றும் வெட்டிய மரக்கறிகளைக் கலந்து..(ஐஸ் லாண்டில் இவை விற்குது) சமைக்க விடுங்கள்.

அதே நேரம்.. கறியை சமைக்க ஆரம்பியுங்கள்.

கறி.. வெறும் 20 நிமிடத்தில் தயார் ஆகிடும். பொதுவாக பிரிட்டனில் 4 அடுப்புகள் உள்ள ஓவன் இருக்கும். தேவையான வெப்ப அளவிற்கு ஏற்ப அதனைப் பாவிக்கலாம். எனவே 4 கறி ஒரே நேரத்தில் சமைக்கலாம்.

எதையும் பிளான் பண்ணிச் செய்தால்.. சமையலை 30 நிமிடத்துக்குள் முடிக்கலாம். சுத்தப்படுத்த முன்னும் பின்னுமாக ஒரு 15 நிமிடம் அவசியம். ஆக 45 நிமிடத்தில் சமயல் கட்டை விட்டு வெளியேறிடலாம்.

24 மணி நேரத்தில் 45 நிமிசம்.. சொந்த உணவுக்காக ஒதுக்க முடியாத மனிசங்க வேலை இடத்தில் எப்படி விசுவாசமா உழைப்பீங்க..??!

நான் ஒரு நிறுவனத்திற்கு முகாமையாளரா இருந்தா சமைக்க பஞ்சிப்படும்.. இப்படியான சோம்பேறிகளை வேலைக்கே எடுக்கமாட்டன்.

உற்பத்தியில் நேரத்தை விரையம் பண்ணுவதும் தவறுக்கு இடமளிப்பதும் உற்பத்திச் செலவை.. வள விரையத்தைக் கூட்டும். அந்த வகையில்.. production and quality control பற்றிய அறிவை நிறுவனங்களில் தான் பாவிக்கனும் என்றில்ல. சமையல்கட்டிலும் பாவிக்கலாம். குறிப்பாக படிச்ச பொண்ணுங்க.. படிச்ச அறிவை பாவிச்சா.. அது சமையல் கட்டிலும்.. கெளரவமா நிற்க உதவும். பையங்களுக்கும் இது பொருந்தும்..! அவரவர் உணவை அவரவர் சுவைக்கும் தேவைக்கும் ஏற்ப தயாரிக்கும் பழக்கம் எல்லோரிடத்திலும் வருவது அவசியம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

வெங்காயத்தையே முதல் நாள் வெட்டி வைப்பவரா நீங்கள்.

உருளைக் கிழங்கை அவித்து முதலே பதப்படுத்துவதா.

உந்தச் சமையலுக்கு வாசமும் உருசியம் இருக்கப் போவதில்லை என்று வடிவாத் தெரியுது.

நான் கூறியது சுவையான சமையல் பற்றி நெடுக்ஸ். :D

ஒரு சின்ன வித்தியாசம், நெடுக்கர்!

கலியாணம் கட்ட முந்தி, சட்டி பானைகளை ஒருக்காக் கழுவினாப் போதும்!

கலியாணம் கட்டின பிறகு, அவற்றை 'மூன்று' தரம் கழுவ வேணும்! :D

அவ்வளவு தான் வித்தியாசம்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  திரிக்கு

குடும்பம் வீடு மனைவி  தாய் என்று வந்துவிட்டால் சமையல் பெண்ணிடம் தான் இருக்கவேண்டும்.

இதில் வேலைக்கு போவது அடுத்த கட்டம்

இந்த சமையல் என்பது ஒரு தாயின் வரப்பிரசாதம்

அதில் பல பிடிமானங்களும் ஒத்தணங்கள் அரவணைப்புக்கள் ரசிப்புக்கள் ............. என்று எத்தனையோ சொல்லாமல் சமையலால் தெரியப்படுத்தப்படும் தொடுகைகள் உண்டு. 

ஆனால் இன்று அதே தொடுகைகளை ஆண்களும் சில சுயநலத்துக்காக பாவிப்பதை  பார்த்ததுண்டு.   இதை தமது அலட்சிய  அல்லது சோம்பேறித்தனத்தால் பெண்கள் தொலைத்துவிட்டார்கள் என்று தான் சொல்லணும்.

இதில் நான் காணும் பெரும் துக்கம் என்னவெனில் ஒரு நாளைக்கு 3 வேலை செய்யும் கணவன் வீடு வந்தும் சமைப்பதும்  வீட்டு வேலை செய்வதும் 

வேலைக்கே போகாத வீட்டு மனைவி இருந்த இடத்தில் சாப்பிடுவதும்....... :(

ஒரு சின்ன வித்தியாசம், நெடுக்கர்!

கலியாணம் கட்ட முந்தி, சட்டி பானைகளை ஒருக்காக் கழுவினாப் போதும்!

கலியாணம் கட்டின பிறகு, அவற்றை 'மூன்று' தரம் கழுவ வேணும்! :D

அவ்வளவு தான் வித்தியாசம்! :icon_idea:

அதன் பின்னரும் அவர்களால் கழுவப்படும்...... :D

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயத்தையே முதல் நாள் வெட்டி வைப்பவரா நீங்கள்.

உருளைக் கிழங்கை அவித்து முதலே பதப்படுத்துவதா.

உந்தச் சமையலுக்கு வாசமும் உருசியம் இருக்கப் போவதில்லை என்று வடிவாத் தெரியுது.

நான் கூறியது சுவையான சமையல் பற்றி நெடுக்ஸ். :D

ஆமா.. மக்டொனால்டிலும்.. கே எவ் சியிலும் உடனவே உருளைக்கிழங்கை வெட்டிப் பொரிச்சுக் கொடுக்கிறாங்க. சிங்கனை வெட்டி மசாலா தூள் தூவி தூக்கலா பொரிச்சுக் கொடுக்கிறாங்க.. ரெஸ்ரோடண்டுகளில பின்னாடி பெரிய பண்ணை வைச்சிருந்து உடன உடன எல்லாம் பறிச்சு வெட்டி செய்து கொடுக்கிறாங்க. அதுதான் அங்க போயி சுவையா மணம் குணத்தோட சாப்பிடறவங்க.. சொல்லுறாங்க கேளுங்க..!

மாதக்கணக்கில பதம் பண்ணி வைச்சதை மூக்கப் பிடிச்சிக்கிட்டு காசையும் கொட்டி சாப்பிடுற கூட்டம்..  3 நாளைக்கு முன்னாடி வெட்டி பத்திரப்பண்ணி வைச்ச வெங்காயத்தில காரம் மணம் போயிடும் என்று அழுகிறது தான்.. ஆச்சரியமா இருக்குது..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் காணும் பெரும் துக்கம் என்னவெனில் ஒரு நாளைக்கு 3 வேலை செய்யும் கணவன் வீடு வந்தும் சமைப்பதும்  வீட்டு வேலை செய்வதும் 

வேலைக்கே போகாத வீட்டு மனைவி இருந்த இடத்தில் சாப்பிடுவதும்.......  :(

அவருக்குப் பேர் கணவரல்ல!

கையாலாகாதவர்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்குப் பேர் கணவரல்ல!

கையாலாகாதவர்! :D

புலம்பெயர் நம்மவர்களிடத்திலும் இந்தப் பழக்கம் நிறைய இருக்குது. மனைவியை நோகாமல் வைச்சிருக்கனமாம்.. என்று அதுக்கு விளக்கம் வேற. சமைச்சு.. நொந்தா கண்டிப்போயிடுமாம் தேகம். அழகு போயிடுமாமில்ல..! (காண்டாமிருகத்திற்கு அழகு வேற.!) :lol:

அதுவும் வேலைக்குப் போற மனைவிமார்..  வேலைவிட்டு வந்தா.. கணவர் தயவோடு.. ஏதும் சாப்பாடு என்று.. இழுத்தாலே... சட்டப் என்று சொல்லுற நிலைமையையும் பார்க்கிறம். (வேலையாள வாற எல்லாருக்குமே களைப்பு அசதி இருக்கும். அதுக்காக பொறுமையிழந்து சட்டப் என்று சொல்லுறது ஓவர்.) ஆனால் என்ன.. அவர்களுக்கு அப்படி ஏச்சு வாங்கியும் மானம் ரோசம் வாறதா இல்லை..! நான்னா.. மிளகாய்த்தூளை தூக்கி அவ மூஞ்சி கொட்டிட்டு.. கோட் வாசலில போய் நிற்பன்..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நம்மவர்களிடத்திலும் இந்தப் பழக்கம் நிறைய இருக்குது. மனைவியை நோகாமல் வைச்சிருக்கனமாம்.. என்று அதுக்கு விளக்கம் வேற. சமைச்சு.. நொந்தா கண்டிப்போயிடுமாம் தேகம். அழகு போயிடுமாமில்ல..! (காண்டாமிருகத்திற்கு அழகு வேற.!) :lol:

ஏனிந்த கொலை வெறி  ராசா.. :D  :D  :D

அதுவும் வேலைக்குப் போற மனைவிமார்..  வேலைவிட்டு வந்தா.. கணவர் தயவோடு.. ஏதும் சாப்பாடு என்று.. இழுத்தாலே... சட்டப் என்று சொல்லுற நிலைமையையும் பார்க்கிறம். (வேலையாள வாற எல்லாருக்குமே களைப்பு அசதி இருக்கும். அதுக்காக பொறுமையிழந்து சட்டப் என்று சொல்லுறது ஓவர்.) ஆனால் என்ன.. அவர்களுக்கு அப்படி ஏச்சு வாங்கியும் மானம் ரோசம் வாறதா இல்லை..! நான்னா.. மிளகாய்த்தூளை தூக்கி அவ மூஞ்சி கொட்டிட்டு.. கோட் வாசலில போய் நிற்பன்..! :D:lol:

வாழ்த்துக்கள்... :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  திரிக்கு

குடும்பம் வீடு மனைவி  தாய் என்று வந்துவிட்டால் சமையல் பெண்ணிடம் தான் இருக்கவேண்டும்.

இதில் வேலைக்கு போவது அடுத்த கட்டம்

இந்த சமையல் என்பது ஒரு தாயின் வரப்பிரசாதம்

அதில் பல பிடிமானங்களும் ஒத்தணங்கள் அரவணைப்புக்கள் ரசிப்புக்கள் ............. என்று எத்தனையோ சொல்லாமல் சமையலால் தெரியப்படுத்தப்படும் தொடுகைகள் உண்டு. 

ஆனால் இன்று அதே தொடுகைகளை ஆண்களும் சில சுயநலத்துக்காக பாவிப்பதை  பார்த்ததுண்டு.   இதை தமது அலட்சிய  அல்லது சோம்பேறித்தனத்தால் பெண்கள் தொலைத்துவிட்டார்கள் என்று தான் சொல்லணும்.

இதில் நான் காணும் பெரும் துக்கம் என்னவெனில் ஒரு நாளைக்கு 3 வேலை செய்யும் கணவன் வீடு வந்தும் சமைப்பதும்  வீட்டு வேலை செய்வதும் 

வேலைக்கே போகாத வீட்டு மனைவி இருந்த இடத்தில் சாப்பிடுவதும்....... :(

அதன் பின்னரும் அவர்களால் கழுவப்படும்...... :D

எங்கட கழுவல்ல, அவங்களுக்கு அப்படியொரு நம்பிக்கை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கழுவல்ல, அவங்களுக்கு அப்படியொரு நம்பிக்கை! :icon_idea:

நம்பிக்கை  இல்லாமலா கொண்டிழுக்கிறார்கள்..... :wub:

நான் நினைக்கின்றேன்

எங்களது வேலை அவ்வளவு வேகம் என்று....... :icon_mrgreen: .

(எங்களை  முழுமையாக அறிந்தவர்கள் அல்லவா :icon_mrgreen: )

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர் இண்டைக்கு சமைக்கிற ஜடியா இல்லியோ ,இங்கேயே நிக்கிரமாதிரி கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர் இண்டைக்கு சமைக்கிற ஜடியா இல்லியோ ,இங்கேயே நிக்கிரமாதிரி கிடக்கு

எங்களுக்கு, இரவு ஒன்பதரை, நந்து!

முருகா, ஞானபண்டிதா எண்டு சொல்லினபடி, படுக்கப் போற நேரம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, இரவு ஒன்பதரை, நந்து!

முருகா, ஞானபண்டிதா எண்டு சொல்லினபடி, படுக்கப் போற நேரம்! :D

ஒரே  ரத்தம்.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே  ரத்தம்.. :D 

எங்கட அம்மா அடிக்கடி சொல்லுற படியால, பழகிப் போச்சு விசுகர்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட அம்மா அடிக்கடி சொல்லுற படியால, பழகிப் போச்சு விசுகர்! :icon_idea:

அப்ப நாங்கள் தாய் வழி  சொந்தக்காறரா?? :icon_idea:

(உங்கள் முடிச்சுக்களை சரியாக விளங்கிக்கொண்டிருந்தால்.... :) ?)

தொலைக்காட்சியில் விவாதிக்கும் அளவுக்கு சமையல் செய்வது ஒன்றும் பெரிய விடயமில்லை. வசதிகளெல்லாம் பெருகிவிட்டது.  ஐந்து சட்டிகளும் நாலு அடுப்பும் இருந்தால் 1 மணித்தியாலத்தில ஐந்து கறி இலகுவாகச்  செய்யலாம்.

சில பெண்கள் பருப்புக் கறியையும் உறைந்த கீரையையும் சமைத்து மூன்று நான்கு நாட்கள் 'பிரிட்ச்' இற்குள் வைத்துக் கொடுப்பதைக் கண்டிருக்கிறேன்.  சோம்பேறித்தனந்தான் காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு இணைப்பு, மைத்திரேயி!

சும்மா வெறுமனே, 'புதுமை' என்று சொல்லி எல்லாவற்றையும் தூக்கி எறிவதில், எனக்கு உடன்பாடில்லை!

இறுதியாக, எமக்கான எல்லாத் தனித்துவங்களையும் தொலைத்து விட்டு, வெறுமனே அம்மணமாக, அடையாளமிழந்து நிற்கப் போகின்றோம்! :o

நான் ஒரு ஆண்! பல தடவைகள் சமையல் செய்திருக்கின்றேன்! இன்றும் செய்கின்றேன்! எல்லோரும் சொல்லுவது போல, இப்போதெல்லாம் சமையல் பெரிய வேலையில்லை! சின்ன வெங்காயம் உடைச்சு, அரிசிக்குக் கல்லுப் பொறுக்கி, அரிக்கன் சட்டியில அரிச்சா, இப்போதெல்லாம் அரிசி போடுகின்றோம்? வளவுக்குள்ள போய், ஈர விறகெடுத்துக், கண்ணுக்கிள்ள இருந்து தண்ணி வரவா அடுப்பூதுகின்றோம்? குடமெடுத்துக் கொண்டுபோய், நல்ல தண்ணிக் கிணத்தில, தண்ணி அள்ளிக்கொண்டா வாறம்?

ஒரு சோறு, ஒரு மச்சக்கறி, இரண்டு மரக்கறி வைக்க, எவ்வளவு நேரமாகும்? எனக்கு, நாற்பத்தைந்து நிமிடங்கள் எடுக்கும்! நான் CPA (Critical Path Analysis) முறையில தான் சமைக்கிறது! :icon_idea:

ஒரு ஆண் பெண்ணுக்குச் சமைத்துக் கொடுக்கும் போதோ, அல்லது ஒரு பெண் ஆணுக்குச் ஒரு சமைத்துக் கொடுக்கும்போதோ, அங்கு உணவு மட்டும் பரிமாறப்படவில்லை! ஒரு விதமான, அன்பும் பரிமாறப் படுகின்றது!அதுவே, அவர்களுக்குள் ஒரு விதமான புரிந்துணர்வையும் உண்டாக்குகின்றது!

இது எனது வேலை, இது உனது வேலை என்று பிரிப்பதனால், அங்கு ஒரு நிறுவனக் கலாச்சாரம் உருவாகுமேயன்றி, ஒரு ஆரோக்கியமான குடும்பக் கலாச்சாரமல்ல!

எனது கருத்தினுள் 'ஆம்பிளைச் சிங்கங்களை' உள்ளடக்கவில்லை!

சாதாரணமான என்னைப்போன்ற 'சாமானியர்களுக்கே' இது பொருந்தும்! :D

அவ்வளவும் முத்தான வார்த்தைகள். பச்சை தான் காலி..

உண்மையில் எனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும், வந்த புதிதில் மெக்சிக்கன் ரெஸ்ராறன்டில் வேலை

பிறகு ஒரு இத்தாலி ரெஸ்ரோறன்டில் வேலை செய்ததால் அனேகம் எல்லாச் சாப்பாடுமே செய்ய தெரியும். முதன் முதல் அவளைப் பார்க்கப் போனபோது கூட தந்தூரி சிக்கன் செய்து குடுத்தேன். அப்போது ஒரு வருடம் நான் அசைவம் சாப்பிடுவதில்லை அவளுக்காகச் செய்து குடுத்தேன்.

எல்லாரும் சாப்பிட்டு நல்லா இருக்கு என்று சொல்லும் போது அதுக்காக அவளிடம் திருட்டுத்தனமா முத்தம் வாங்கும் போதும்... தினமும் சமைக்கலாம் போல இருக்கும்.

ஆனால் கோப்பை கழுவத்தான் பஞ்சி.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சமைக்கிறது பெரிய வேலையில்லை :) சமைச்ச பிறகு அடுப்பை கிளின் பண்ணுறதும்,பாத்திரங்கள் கழுவுவதும் தான் பெரிய வேலை  :lol:  :D

அவ்வளவும் முத்தான வார்த்தைகள். பச்சை தான் காலி..

உண்மையில் எனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும், வந்த புதிதில் மெக்சிக்கன் ரெஸ்ராறன்டில் வேலை

பிறகு ஒரு இத்தாலி ரெஸ்ரோறன்டில் வேலை செய்ததால் அனேகம் எல்லாச் சாப்பாடுமே செய்ய தெரியும். முதன் முதல் அவளைப் பார்க்கப் போனபோது கூட தந்தூரி சிக்கன் செய்து குடுத்தேன். அப்போது ஒரு வருடம் நான் அசைவம் சாப்பிடுவதில்லை அவளுக்காகச் செய்து குடுத்தேன்.

எல்லாரும் சாப்பிட்டு நல்லா இருக்கு என்று சொல்லும் போது அதுக்காக அவளிடம் திருட்டுத்தனமா முத்தம் வாங்கும் போதும்... தினமும் சமைக்கலாம் போல இருக்கும்.

ஆனால் கோப்பை கழுவத்தான் பஞ்சி.. :rolleyes:

பிரியா தொடர்ந்து முத்தங்களை கொடுத்து உங்கள சமைக்க வைக்க போறா :rolleyes:

கொழும்பில் கன ஆண்டுகள், மொன்றியலில் கான ஆண்டுகள் தனிய இருந்தமையால் எனது சைவத்தேவைக்கு நான் சமைத்து எனது ருசிக்கு செய்யப் பழகிக்கொண்டேன். இதனால் நான் சாப்பிடும் சைவக்கறிகள் நான் மட்டும்தான் செய்வேன்.

இன்றும் வீட்டில் சைவக்கறிகள் நான் மட்டும்தான் செய்வேன்.  நண்பர்கள் வீடுக்கு வந்தாலும் சைவக் கறிகள் நான் தான் செய்து வைப்பேன்.

கொழும்பில் இருந்த போது புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமாயின், அம்மா செய்தவற்றை நினவு படுத்திச் செய்யப் பார்ப்பேன். அங்கெல்லாம் புட்டு, தோசை என்பன நினைக்கவும் முடியாது. எந்தச் சமையலும் திருப்திக்கு வருவதும் கிடையாது.

மொன்றியலில் இதுவல்லக் கதை. முதல் மூன்றுமாதம் பல நண்பர்களுடந் ஒன்றாக இருந்தேன்.  அவர்கள் மச்சம் மட்டும்தான் செய்வார்கள். Kitchen வசதிக்குறைவாக இருந்ததால்  அவர்களுடன் சமைப்பதும் சிரமாக இருந்தது. அதனால் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பருப்புக் கறியோடு பொழுது போனது. அதன் பின்னர் 6 மாதம் மூன்று நண்பர்களுடன் வசதியான இடம் ஒன்றில் போய் சேர்ந்தேன்.  ஒருநாள் ஒருவர் சமைப்பார். எனது நாளில் நான் குறைந்தது 2 சைவக்கறிகள் செய்வேன். அவர்களில் ஒருவர் சில சமையங்களில் தமக்குத் தேவையான மச்சமும் செய்வார்கள். ஆனால் அவர்களின் தினங்களில் ஒரு மச்சமும் ஒரு சைவமும் செய்வார்கள். சைவக்கறி சுவையாக இருக்காது. அதனால் சில நாட்களில் நான் இன்னொரு சைவக்கறி செய்து கொள்வேன். ஆனால் எனக்கு அது பெரிய வசதியாக தெரியவில்லை.

ஆறுமாதத்தின் பின்னர்  நான் தனியாகப் போனேன். அதன் பின்னர் 5 வருடம் சமையலில் பல முயற்சிகள் செய்தேன். இலகுவுக்கும், கெதியுக்குமாக வீட்டில் அம்மா செய்யாத முறைகளில் சமைக்க முயன்றேன். மேற்கு நாட்டு, தமிழ் நாட்டு வசதிகளை வாங்கி அடுக்கப் பழகினேன். மேற்கு நாட்டு, பிச்சா, பாஸ்ரா, பல வகை பாண்கள் என்று எல்லாம் முயன்றேன். தயிர் கூட நான்தான் செய்து வந்தேன். ஒருநாள் Jean Coutu வில் தேடிக்கொண்டிருந்த போது தயிர் செய்யும் மதுவப் பக்கெட் ஒன்று இருந்தது. வாங்கி சென்று செய்து பார்த்தேன். அது போல கடைகளில் வாங்கும் தயிர் ய்ருக்கவில்லை. பிற்காலம் Yogurt Maker வாங்கினேன். ஆனால் இன்று Fries தவிர மற்றவையை கைவிட்டு விட்டேன். 

இந்தியன் கடைகளில் விற்கும் எல்லா curry powder, puriyani powders ..... எல்லா Ready Mix களும் வாங்கி வந்து முயற்சிப்பேன். இதனால் இன்று வீட்டில் பல Packet Boxes இன்னும் திறக்காமலும் Kitchen Shelf ல் இருக்கு. எனது ஒரு நண்பன் வரும் போது "உனது Patel Bothers யை மூடிவிட்டாயா, அல்லது இன்னும் இருக்கா" என்று கேட்பான்.  (இப்போது ஆவர்வம் குறைவு. கள்ளம் வந்து விட்டது.  யாழும் ஒரு காரணம் :D )

இனிமேல் யாழுக்கு வராமல் ஒழுங்காச் சமைத்துச் சாப்பிடுங்கோ. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.