Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் பெண்களுக்காகவும் தமிழ்ப் பெண்களுக்காகவும் ஒரு பெண்கள் அமைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் பெண்களுக்காகவும் தமிழ்ப் பெண்களுக்காகவும் ஒரு பெண்கள் அமைப்பு.

logorotate.jpg

உலகில் யுத்தமும் அது தந்த பாதிப்புக்களும் சமூகத்தின் பெரும்பான்மைப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களின் மீதே விழுந்து விடுகிறது. ஒடுக்கப்பட்ட இனங்களின் குரல்களை அடக்கும் ஆயுதமாக எல்லா இனங்களின் பெண்களையும் பெண்ணுடலையுமே அடக்குமுறையாளர்கள் பழிவாங்குதலும் பலியெடுத்தலும் நிகழ்கிறது. இந்நடைமுறையை வளர்ந்த வளர்முக நாடுகள் யாவும் பின்பற்றுவதே தினசரியாகக் காண்கிறோம்.

 

இலங்கையில் நடைபெற்ற ஈழ விடுதலைப் போரிலும் உலகின் வளமையான வக்கிரமும் பழிவாங்கலுக்கும் ஈழப்பெண்களின் மீதான வன்மமாக வன்முறையாக நிகழ்ந்து முடிந்த கதையும் தற்போது வரை பெண்கள் மீதான தாக்குதல்கள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. தன்மீது அடக்குமுறையாளனால் நடத்தப்படும் வன்முறையைத் தடுக்கவோ எதிர்த்துக் குரல் கொடுக்கவோ பலமில்லாத அரசியல் தளத்தைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பெண்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பையும் புதுவாழ்வையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்கிறோம்.

 

இந்தக் கடமையை நிறைவேற்ற கடந்த நான்கு வருடங்களாக புலம்பெயர் பெண்களை இணைத்த பெண்கள் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் பலருடனான உரையாடல்கள் பெண்கள் அமைப்பொன்றின் தேவையை பல வகையிலும் தெளிவுபடுத்த முன்றும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஆள்வளம் கிடைக்காது போனது.

 

அத்தகைய காலத்தில் தான் 2வருடங்கள் முதல் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு கடந்த 18வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றம்’ தொடர்பு கிடைத்தது. தம்மால் முடிந்தவற்றைச் செய்து கொண்டிருக்கும் இந்த அமைப்பின் பணிகளோடு இiணைந்து நாமும் இயங்குவது மேலும் தமிழ்ப்பெண்களுக்கான மாற்றத்தைக் கொண்டு வரமுடியுமென்ற நம்பிக்கையைத் தந்தது. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெறும் பெண்களுடன் இணைந்து ஆனி2013 தொடக்கம் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ஏற்றுள்ளேன்.

 

இந்த முயற்சியில் அனைத்துத் தமிழ்ப் பெண்களும் இணைந்து புலத்திலும் நிலத்திலுமான பெண்களின் பிரச்சனைகள் , தேவைகள் யாவையும் புரிந்து அவர்களுக்கான ஆற்றப்படுத்தலை மேற்கொள்ள அனைத்துப் பெண்களையும் இத்தால் ஒன்றிணையுமாறு வேண்டுகிறோம்.

 

உலகில் விடுதலையடைந்த தேசங்கள் யாவற்றிலும் பெண்களின் பங்களிப்பென்பது அதிகமானது. அதுபோன்றே ஈழவிடுதலைப்போரிலும் உலகில் எங்குமே நிகழாத மாற்றத்தையும் பெண்களது எழுச்சியையும் எங்கள் தமிழ்ப் பெண்கள் மாற்றிக் காட்டினார்கள். போர்க்களம் முதல் அவர்கள் செய்த சாதனைகளும் வெற்றிகளும் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் 2009 மேமாதத்தோடு எல்லாம் போயிற்றென்ற நிலமையே காணப்படுகிறது.

 

ஆணுக்குச் சமனாக ஆயுதம் ஏந்தி பெண்விடுதலையோடு மண்விடுதலையையும் பெற்றுத் தரப்போன பெண்களின் நிலமை இன்று முன்னாள் போராளிகள் என்ற சொல்லில் அடக்கப்பட்டு அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும் கொடுமைகளும் சொல்லில் அடங்காதவை. அந்தப் பெண்களுக்காகவும் உலகில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களுக்காகவும் தமிழ்ப்பெண்களாகிய நாங்களும் குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் அவர்களுக்கான புது வாழ்வை அமைக்க தமிழ்ப்பெண்கள் அமைப்போடு இணையுமாறு தமிழ்ப் பெண்களை வேண்டுகிறோம்.

 

சாந்தி ரமேஷ் வவுனியன்

ஒருங்கிணைப்பாளர் (தமிழ்ப் பெண்கள் அபிவிருத்தி மன்றம்)

 

http://twdf.org/ta/49.html

 

பெண்கள் அமைப்பின் இணையத்தள முகவரி :- http://twdf.org

 

இணையத்தளத்தில் செய்திகள் தகவல்கள் முழுமைப்படுத்தப்படவில்லை. அடுத்து வரும் நாட்களில் அனைத்து விடங்களும் முழுமையாக பதிவு செய்யப்படும்.தமிழ் , ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இணையத்தளம் வடிவமைக்கப்படுகிறது.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சாந்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சாந்தி.

 

நீங்களும் இந்தப்பெண்கள் அமைப்பில் இணையுமாறு வேண்டுகிறேன். பலர் இணைந்தால் பல்லாயிரம் வேலைகளை எங்கள் பெண்களுக்குச் செய்ய முடியும்.

ஐயோ இதிலையெல்லாம் நான் இணையமாட்டேனெண்டு ஒதுங்காமல் ஒரு அங்கத்தவராகவேனும் இணைந்து ஆதரவு தாங்கோ அக்கா.

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா..தொடருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பெண்கள் அமைப்புக்கள் என்று அமைத்துக்கொண்டு போனால், ஆண்கள் நிலைமை மேலும் கவலைக்கிடமாகாதா? :o

 

சும்மா பகிடிக்குச் சாந்தி! :D

 

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா..தொடருங்கோ.

பலரை வெளிப்படுத்தி நன்றி சொல்ல முடிவதில்லை. நன்றிகள் யாயினி.

 

எல்லாரும் பெண்கள் அமைப்புக்கள் என்று அமைத்துக்கொண்டு போனால், ஆண்கள் நிலைமை மேலும் கவலைக்கிடமாகாதா? :o

 

சும்மா பகிடிக்குச் சாந்தி! :D

 

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள!

 

சாட்டோடை சாட்டாக புங்கை மனசில் இருந்த துயரத்தையும் பயத்தையும் பகிர்ந்திட்டீங்கள். :icon_idea:

 

இந்தப் பெண்கள் அமைப்பு போரால் பாதிப்புற்ற சமூக ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவிகளையும் ஆற்றுப்படுத்தலையுமே செய்யும்.

 

நீங்கள் பயப்பிடாமல் உங்கள் மனைவியையும் எமது அமைப்பில் ஒரு அங்கத்தவராக இணைச்சு விடுங்கோ. :lol:

 

புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் இந்த அமைப்பில்  பெண்கள் இணைந்து செயற்படலாம். யாழ் களத்தில் அங்கத்துவம் பெறும் அனைத்து பெண்களையும் இவ்வமையில் இணைந்து செயற்படுமாறு வேண்டுகிறோம்.

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி,

தமிழ் முஸ்லிம் மலையக பெண்கள் மத்தியில் பணிபுரியும் உங்கள் அகன்ற அடித்தளம் ஆர்வம் தருகிறது.

 

ஈழத்தில் போரும் இனக்கொலையும் சுமத்திய எல்லாச் சுமைகளையும் தாங்கிகிறவர்களின் அடி மட்டத்தில் தமிழ் பேசும் பெண்களே உள்ளனர். இதில் விதவைகளதும் உடல் ஊனமுற்றவர்களதும் சிறைப்பட்டவர்களதும் கல்வி போசாக்கு உணவு மறுக்கப்பட்டவர்களதும் நிலமை படு மோசமடைந்து வருகிறது.

 

ஈழத்தில் நிலவும் பணச் சுருக்கம் நிலமைகலை தொடர்ந்து மோசமாக்குகிறது. இதனால் கிராமிய பெண்கள் மட்டத்தில் சிறு சேமிப்பும் சிறு முதலீடுகளும் தொடற்சியாக நான்கு தசப்தங்களாக செய்ற்படவில்லை.  இன்றும் அரசு இந்த பிரச்சினையைக் கண்டுகொள்வில்லை. அரசின் ஆசியுடன் ஏகபோகமாகச் செயல்படும்  சிங்கள தொண்டு நிறுவனங்கள் நமது மக்கலின் நமது பெண்களின் முன்னுரிமை (priority) அடிப்படையில் செயல்படவில்லை.

 

இந்நிலையில் உறவினருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பண உதவி சேரும் - மேற்படி பணம்  ஒழுகிக் கீழ்மட்டங்களைச்சேரும் வாய்ப்புள்ள யாழ்பாணக் குடாநாட்டுக்கு வெளியில் நிலமை இன்னும் மோசமாக உள்ளது. வன்னியில் வாழும் மலையகத் தமிழ் பெண்களின் வாழ்நிலை அதிக கவனத்தைக் கோரி நிற்கிறது.  

 

ஈழத்தின் சமூக பொருளாதார அமைப்புக்குள் பணத்தைச் சேர்க்கும் அவசியமான முயற்ச்சியில் சில சர்வதேச தொண்டு நிறுவனங்களும் மிகச் சிறிய அளவில் ஒரு சில புலம்பெயர் அமைப்புகளும் தவிர அரசு ஆர்வம் காட்டவில்லை. அரசு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பணத்தையும் சிங்கள தொண்டு நிறுவங்கள் மூலம் கையாளுவதால் நிர்வாகச் செலவின் வடிவத்தில் நிதியின் பெரும்பகுதி தென்பகுதிக்கு திரும்பிவிடுகிறது. இதைவிட சர்வதேச உதவிகள் நேரடியாகவே தென்பகுதிகளுக்கு திசை திருப்பப் படுவதாக வலுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் ஈழத்துக்கான சர்வதேச உதவிகளால் உருவாக வேண்டிய நிறுவன அமைப்பு அடிமட்ட மக்களிடை தலைமைத்துவ உருவாக்கம்   பணச்சுளற்ச்சி சேமிப்பு என்பவையும் தென்பகுதிகளுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டு விடுகிறது.

 

அண்மையில் கிடைக்கும் தகவல்கள் நவீன வாழ்க்கைப்போராட்டத்தில் ஈடுபட அதியாவவசியமான “பெண்களுக்கான மாதாந்தர தேவைக்கான Sanitary Napkins சே பெரும் பிரச்சினையாக உள்ளதாக தெரிகிறது. இது எந்த நாகரீகமான தமிழருக்கும் அதிற்ச்சி தரவேண்டும். இத்தகைய சூழல்கலைக் கழையும் பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது. இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளை இனம் காண்பதிலும் தீர்பதிலுமாவது புலம்பெயர்ந்த தமிழ் பெண்களின் உதவிகளையும் அறிவையும் ஈடுபடுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடவேண்டும். மாசம் 200000 Sanitary Napkins ஆவது புலம்பெயர் தமிழ் பெண்களின் அன்பளிப்பாக ஈழத்து வறிய பெண்களுக்குக் கிடைக்கும் காலம் உருவாக வேண்டும்.

 

இன்று நம் பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையான பணச்சுருக்கம் வருமானமும் சேமிப்புமின்மை தொடர்பாகவும் சர்வதேச நிதி வளங்களையும் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் சரியாக கையாள கிராமிய வங்கி முறைமை கட்டமைக்கப் படவேண்டிய அவசியம் உள்ளது. பங்களாதேசம் போன்ற நாடுகளின் அனுபவம் இதற்க்கு உதவும். நிறுவன ரீதியில் யாழ்ப்பானத்தில் சிறப்பாக இயங்கிய 1972ல் சிங்கள அரசால் திட்டமிட்டு அழிக்கதொழிக்கப்பட்ட கூட்டுறவு சங்க அமைப்புகளின் அனுபவங்கள் உதவும். கிராமிய கூட்டுறவு வங்கிகளும் நிறுவனமும் நீண்டகால அடிப்படையில் லாபந்தரும் நிறுவனங்களாகவே வடிவமைக்கப் படலாம். இது புலம் பெய்ர் தமிழர்கலது உதவிகளை ஆர்வம்தரும் முத்லீடுகளாக்க உதவும். உதவிகளை உறவினர்களுக்கு அனுப்பும் பணம் உட்பட சகல நிதி தொடர்புகளை  நீண்டகால அடிப்படையில் லாபந்தரும்வகையில் நிறுவனமயப்படுத்தும் வழி வகைகள் தொடர்பான ஆய்வுகலில்  நமது சமூக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பாக சர்வதேச பல்கலைக் களகங்களில் பயிலும் மானவ மானவிகள் ஈடுபடவேண்டும்.

 

உங்கள் பணிகளின் எல்லா அம்சங்கலையும் நமது சர்வதேச பல்கலைக்களக மானவர்கலை அணிதிரட்டி ஈடுபடுத்த வேண்டும். மற்றும் தமிழகம் மலேசியா சிங்கபூர் புலம்பெய நாடுகலில் வாழும் தமிழர்கள் குறிப்பாக இளய தலைமுறையினரோடு இருவழித் தொடர்பில் இருங்கள். இந்நாடுகளைச் சேர்ந்த தமிழ் மனநல மருத்துவர்களின் பங்களிப்பு நமது உடனடித் தேவையாக உள்ளது.

 

 

ஈழத்து சமூகபொருளாதார கலாச்சார பிரச்சினைகள் தொடர்பாகவும் மேற்படி பின்னணியில் கணிசமான  வறிய விதவைகளையும் ஊனமுற்றோரையும் மன நல சிக்கல்களை  எதிர்கொள்வோரையும் கொண்ட நம் பெண்கள் நிலமை தொடர்பாக நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இதன் அடிப்படையிலான உதவிகளும் மனநல சேவைகளும் கிட்டாவிடின் தற்கொலை விகிதம் அதிகரித்தல்போன்ற பேராபத்துக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். 

 

சாந்தி உங்கள் முயற்ச்சி வெற்றிபெற என்னுடைய நல் வாழ்த்துக்களும் ஆதரவும்.- வ.ஐ.ச.ஜெயபாலன்

 

  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் Poet.

நீண்ட உங்கள் கருத்தில் மிகவும் பயனுள்ள விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள். இப்போது அவசியமான பணியும் அவசரமான பணியாகவும் செய்ய வேண்டியது பெண்களுக்கான ஆதரவும் உதவிகளுமே. தற்போது நடைபெறுகிற இனக்கலப்புத் திருமணம் முதல் திட்டமிட்ட வகையில் பெண்கள் பழி(லி) வாங்கப்படுகிறார்கள்.

 

இந்த நிலமையானது இன்னும் ஒரு 5வருட ஓட்டத்தில் பாரிய பிரச்சனைகளையும் அடுத்த சந்ததியின் வாழ்வையும் திசைமாற்றிவிடும். இதனை கருத்தில் கொண்டு புலம்பெயர் பெண்கள் ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள் மூலம் அந்தப் பெண்களின் வாழ்வை மாற்ற ஆதரவையும் ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.

 

இக்களத்தில் எழுதுகிற தாயகம் பற்றி சிந்திக்கிற அனைத்துப் பெண்களும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். இதில் ஆளாளுக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்த்து எங்கள் பெண்கள் என்ற எண்ணத்தைவலுப்படுத்தி செயலில் இறங்க வேண்டும். இந்தப் பெண்கள் அமைப்பானது உலகின் அனைத்து சமூகங்களோடும் சேர்ந்து இயங்கும் வகையிலேயே மாற்றமடைகிறது.

இப்போதுள்ள இலத்திரனியல் வசதிகள் மூலம் அவரவர் வாழும் நாடுகளில் இருந்து கொண்டே பணிகளை செய்ய முடியும்.

கள உறவுகளாக பங்காற்ற விரும்பும் பெண் உறுப்பினர்கள் அனைவரும் முன்வாருங்கள். இங்கு எனக்கு அறிமுகமான சில பெயர்களை அடையாளப்படுத்தாமல் பொதுவாகவே எல்லோரையும் வேண்கிறேன். சிலவேளை சிலரை நான் மறந்து போனாலும் அது தவறான புரிதலை தந்துவிடும். எனவே இக்களத்தில் எழுதும் அனைத்து பெண்களும் இணையுங்கள்.

 

பலர் இணைந்தால் சர்வதேச சமூகத்தின் கவனத்தை பெற்று எமது பெண்கள் குழந்தைகளுக்கான வாழ்வை மேம்படுத்த பாதுகாப்பான வாழ்வை வழங்க முடியும்.

 

உங்கள் பணிகள் சார்ந்து வேறு வேறு அமைப்புகளில் அங்கம் வகித்தாலும் இப்பெண்கள் அமைப்பில் அங்கத்துவத்தைப் பெற்று பெண்களுக்கான உதவிகளை வழங்கலாம். செயற்படலாம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பில்.... வல்வை சகாறாவையும் உள் வாங்கவேண்டும் சாந்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பில்.... வல்வை சகாறாவையும் உள் வாங்கவேண்டும் சாந்தி.

 

அனைவரையும் வரவேற்கிறோம் தமிழ் சிறி.

 

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

 

ஏற்கனவே இதைப் போன்றதொரு பணியில் ஈடுபட்டிருப்பதால் இன்னொன்றில் இணையமுடியாது. ஆனால் சாந்தியின் முயற்சிக்கு மிக ஆதரவாக இருக்கமுடியும்.

 

"United International Women Organization"  (UIWO)

இது என்போன்ற சிலரால் உருவாக்கம் பெற்று பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. அதற்கான வேலைத்திட்டங்கள் மந்தகதியில்தான் நடைபெறுகிறது. இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை இப்போதைக்கு இங்கு தர முடியாமைக்கு வருந்துகிறேன். பின்னர் இது பற்றிய விபரங்களைத் தருகிறேன்.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

சிறு சிறு குழுக்களாக தனித்து இயங்காமல் குறைந்த பட்சம் வேலைத்திட்ட அடிப்படையிலாவது இணைந்து செயற்படுவது கூடிய பலனை தரும். 

உங்களின் பணி வெற்றி பெற இனிய நல்வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சகாரா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 

உங்கள் பணிகள் சார்ந்து வேறு வேறு அமைப்புகளில் அங்கம் வகித்தாலும் இப்பெண்கள் அமைப்பில் அங்கத்துவத்தைப் பெற்று பெண்களுக்கான உதவிகளை வழங்கலாம். செயற்படலாம்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு சிறு குழுக்களாக தனித்து இயங்காமல் குறைந்த பட்சம் வேலைத்திட்ட அடிப்படையிலாவது இணைந்து செயற்படுவது கூடிய பலனை தரும். 

 

பெண்கள் அமைப்பொன்றின் தேவை 2009இன் பின்னர் தேவைப்பட்டது நுணாவிலான். ஆனால் ஏற்கனவே அரசியல் தளத்தில் செயற்பட்டு ஓய்வில் இருக்கும் சிலரிடமும் ஒரு பெண்கள் அமைப்பு அதாவது வேகமான செயற்பாட்டோடு தேவையென்பதனை தெரிவித்து ஆதரவு கேட்ட போது எல்லோரும் ஒதுங்கியே போனார்கள்.

TWDF அமைப்பு இவ்வருடத்தோடு 18வருடமாகிறது. புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதிலும் பார்க்க இருக்கிற

அமைப்பொன்றைப் புதுப்பித்து அதன் மூலம் செயல்படலாம் என அழைத்த போதும் ஆயிரம் காரணங்கள் சொல்லி பலர் ஒதுங்கினார்கள். யாரும் கைதராத நிலமையிலேயே இவ்வமைப்பின் பெண்களுடன் இணைவதென முடிவெடுத்து இணைந்துள்ளேன்.

 

நிச்சயம் இந்த அமைப்பின் மூலம் போர் விதவைகள் போரால் பாதிப்புற்ற பெண் போராளிகளுக்கான வாழ்வை கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையுள்ளது.இந்த அமைப்பில் செயற்பாட்டாளர்களாக தமிழகத்தில் இருந்தும் நேற்று பெறுமதி மிக்க பணிகளைச் செய்து தற்போது ஒதுங்கியிருக்கும் ஒரு பெண்ணும் எம்மோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து வந்து இணைந்துள்ளார். எமது நோக்கத்தை நிறைவேற்ற நிச்சயம் ஆதரவுகளைத் திரட்ட முடியும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.