Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி: சிங்கப்பூரின்முதல் பிரதமர்

Featured Replies

இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.

லீ குவான் யூ உடனான உரையாடல்கள் (‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில்தான் இவ்வாறு ராஜபக்ச குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ.

அதில் சில பகுதிகள்…

இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.

தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.

நூலாசிரியர் கேட்ட சில கேள்விகளுக்கு லீ அளித்துள்ள பதில்கள்…

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று ஒரு நாள் மலேசியா, சிங்கப்பூரை தனியாக கழற்றி விட்டது. அப்போது நிலை குலைந்து போனார்கள் சிங்கப்பூர் மக்கள். ஆனால் அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ க்வான் யூ என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://goldtamil.com/?p=6300

சிங்கப்பூர்: இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்ச குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப்புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.

முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல் இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்திரிகையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு நீ வேண்டாம், தேவையில்லாத சுமை என்று சிங்கப்பூரை மலேசியா தனியாக கழற்றி விட்டது. அப்போது சிங்கப்பூர் மக்கள் நிலை குலைந்து போனார்கள். ஆனால், அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ குவான் யூ என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.radarnews.com

ராஜபக்ச ஒரு திருத்த முடியாத சிங்கள தீவிரவாதி- சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ @

http://transcurrents.com/tc/2010/05/mahinda_rajapakse_is_a_sinhale.html

ராஜபக்ச ஒரு திருத்த முடியாத சிங்கள தீவிரவாதி- சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு போட்டி

 

உலகமே சொல்ல வேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது அப்படி..?!  நம்ம சம்பந்தன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. டக்கிளஸ்.. சுமந்திரன்... ஹக்கீம்.. திருத்துவார்களே. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது அப்படி..?!  நம்ம சம்பந்தன்.. சங்கரி.. சித்தார்த்தன்.. டக்கிளஸ்.. சுமந்திரன்... ஹக்கீம்.. திருத்துவார்களே. :lol::D

அப்படி சொன்னால் சோத்துக்கு எங்க போறது ....... :D   

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சொன்னால் சோத்துக்கு எங்க போறது ....... :D   

 

லீ குவானுக்கு பிரபாகரனுக்கு ராஜபக்ச மேல ஒரு கட்டத்தில் நம்பிக்கை வரேல்ல அல்லது இழந்து போச்சுது. ஆனால் இன்றும்.. "எமது ஜனாதிபதி" என்று விளிக்கும் மேற்படி ஆட்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கும் தானே தமிழரசு. அவர்கள் திருத்துவார்கள்... அல்ல அல்ல.. ராஜபக்ச அவர்களைத் திருத்துவார்..! :lol::D

சாதனைகளை செய்த ஒருவரின் கருத்து வலிமை கொண்டது!

இவர் காரியவாதி! அறிக்கை மன்னர் இல்லை என்று நிரூபித்தவர்.

தமிழர் எப்போது நிம்மதியாக வாழமுடியும் என்று தெளிவாக கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமருக்கு நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

லீ குவான் யூ அவர்களின் பேட்டி ஒரு தீப்பொறிஉலகத்தால் போற்றப்படும் தலைவர்கள் எவருமே இப்படியான ஒரு பேட்டியை, இதுவரையில் கொடுத்ததில்லை. இந்தத் தீ காட்டுத்தீயாகப் பரவாமல் தடுக்கக்கூடிய சக்தி சிங்களமக்களிடமே உள்ளது. இதனை அவர்கள் அலட்சியப்படுத்தினால் என்றோ ஒருநாள் அதற்கான விலையைக் கொடுக்கவேண்டிய நிலமை வந்தேதீரும். 2000 வருடங்கள் கடந்தபின்பும் இயேசுக்கிறிஸ்த்துவை சிலுவையில் அறைந்து கொன்றது தவறு என்பதை உலகநீதிமன்றம் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இயேசுக்கிறிஸ்த்துவை அழித்தாலும் அவர் சீடர்கள் இன்று உலகம் முழுவதுமே பல்கிப் பெருகியுள்ளனர்.

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

இவரது தலைமைத்துவம், ஆளுமை குறித்து நான் வாசித்த ஒரு விடயம்.

 

அவரது அமைச்சரவையில் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக பொலிசார் கண்டறிந்து, கைது செய்ய தயாரானார்கள்.

அவரோ, இவரிடம், தன்னை காக்குமாறு கேட்டு ஓடி வந்தார்.

 

இவர் அவரிடம் சொன்னார்: நண்பரே, உனக்கு இருவழிகள் தான் உண்டு. ஒன்று சிறை செல்வது. அடுத்தது தற்கொலை செய்வது. எதுவானாலும் தேர்வு செய்.

 

அவர் தற்கொலை செய்து கொண்டார்.

 

மறு நாள், அமைச்சரவையில் அனுதாபம் தெரிவித்ததுடன், எல்லோருக்கும், சம்பளத்தினை 100% கூட்டும், தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப் பட்டது.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சொன்னால் சோத்துக்கு எங்க போறது ....... :D   

 

 

விட்டது சுரேஸ்...கிந்தியன் பின்னாடி ஏன் திரியறீங்க?
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னேற்றம்..!

சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது. சிறிலங்காவில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.li-kuwan-yu-150.jpg

தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. சிறிலங்கா ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. சிறிலங்காவில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்மூலம் சிறிலங்கா இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று சிறிலங்காஅதிபர் ராஜபக்ச கூறி வருகிறார்.

இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிப் போகமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன்.

அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது.

சிறிலங்கா இன்று மகிழ்ச்சியுடன் இல்லை.சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.

யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முனைகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகிறார்கள்.

ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். சிறிலங்காவில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது.

ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்டகாலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்றபடி தான் சிறிலங்கா அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத் தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும்.

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், தமிழ் தேசியம், தமிழ் உணர்வு எல்லாம் பொங்கிப் பீறிடும். தேர்தல் முடிந்தவுடன், சிங்கக் கொடியை ஆட்டுவதும், தாயகமா?...அப்படி ஒன்று இருக்கிறதா என்று முழிப்பதும், எம்மிடத்தில் பலம் இல்லையென்று கூனிக்குறுகுவதுமாக, தமிழ் தேசிய அரசியல் வெளியை நிரப்பிவிடும். மறுபடியும் ஒரு தேர்தல் வருகிறது. புது முகமொன்றை நிறுத்தினால், 2010 இல் ஏற்பட்ட வாக்களிப்பு வீழ்ச்சியை சரிசெய்து விடலாம் என்பது முடிவாகி விட்டது
அதேவேளை, முதன்மை வேட்பாளரின் பேச்சில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் திடமாக முன்வைக்கும், சர்வதேச சுயாதீன விசாரணை என்கிற விடயம் அன்னியமாகி விட்டது. மாகாணசபைக்கும் சர்வதேச விசாரணைக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லையென்று அவர் எண்ணி விட்டார் போலிருக்கிறது. கொலையாளிகளிடமே, கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் விசாரிக்கச் சொன்னால் எப்படி இருக்கும்?. அதற்கு பக்கபலமாக இருந்தோர், உள் நாட்டு விசாரணை போதும் என்கிறார்கள். வட மாகாணசபைத் தேர்தலும் நடாத்தப்பட வேண்டுமென்கிறார்கள். ஆகவே அந்த வல்லரசுகளின் அறிவுரைகளை அனுசரித்துப் போவோர், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றிக்காக குரல் கொடுப்பார்கள் எப்படி என்று எதிர்பார்க்க முடியும்?. 
ஆகவே, யாருடைய நிகழ்ச்சி நிரலில், இந்த தேர்தல் நடை பெறுகிறது என்கிற புவிசார் அரசியல் பக்கத்தைத் தவிர்த்து, எதையும் ஆழமாகப் பார்க்க முடியாது.தமிழ் தேசிய அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளை செயலிழக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகளில், இந்த மாகாணசபை முறைமையும் ஒன்று என்பதனை நிராகரித்து,' திணிக்கப்படுவதை உள்வாங்கும் பலவீன அரசியலிற்குள் மக்கள் தள்ளப்படப்போகிறார்களா?. வாக்குவங்கி அரசியல் என்பது, யாரோ ஒருவரிடம் அல்லது சிறு குழுவிடம், மக்கள் தமது அபிலாசைகளை இறக்கி வைத்துவிட்டு, அரசியல் வாழ்விலிருந்து அந்நியமாகிப் போகும் சடங்காகிவிட்டது. தேசியம் பேசுவதாலும் எதிர்ப்பரசியல் செய்வதாலும், சிங்கக்கொடி பிடித்தவர் பின்னாலும், போராடிய மக்கள் கூட்டத்தை ஆயுதக்குழுவென்று விளித்தவர் பின்னாலும், வேறுவழியின்றி இழுபட்டுச் செல்லவேண்டிய அவலநிலைக்குள் மக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்
Border division of Mannaar district Sinhalicised [TamilNet, Monday, 12 August 2013, 19:35 GMT]

After Sinhalicising a border division in the Mullaiththeevu district of the Northern Province as ‘Weli-Oya’ on the eastern coast, genocidal Sri Lanka is now engaged in the Sinhalicisation of a border division, Musali, in the Mannaar district of the Northern Province on the western coast, news sources in Mannaar said. Both the Sinhala colonisations take place as demographic projections from the Anuradhapura district of the North Central Province. Around 400 acres of forest has been cleared for settling 1300 Sinhala families at the Ko’ndaichchi coast of Mannaar district. The families, who have nothing to do with the district are not only brought down hurriedly and settled as ‘re-settlers’, but also are advised to register as voters before the NPC elections. 

New Delhi and Washington talking about the NPC elections without recognising and guaranteeing the territoriality and demography of Eezham Tamils, amounts to nothing but blatant complicity in the demographic genocide as continuity of their complicity in the genocidal war, commented Tamil activists for alternative politics in the island.

Tamils in all around the should understand that most of the Tamil National Alliance parliamentarians are working for deadliest evil giant powers and well paid by genocidal states and couldn't able to find any single genuine Thamil Thesiam members within poisonous TNA political party most of them are non intellectuals and haven't got any basic knowledge to lead Thamileelam Tamils and mainly those members selected by innocent uneducate Tamils in Thamileelam and this should be replace in next elections by genuine Thamil Thesiam Political Party TNPF and by Tamil Civil Society as well as by Jaffna University but so far any genuine Thamileelam organisations haven't shown or increased their members knowledge by any powerful genuine intellectuals advises from all around the world which is the only one give powerful changes within powerful Thamil Thesiam Organisations / Political Parties / Civil Societies. 
அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க போகும் எதிர்கால தலைமுறைக்கு ஒரு சரியான வரலாற்றை சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. இந்த பதிவுகள் அதை செய்யும் என்று நம்புகிறோம்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பும், இந்தியாவும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றன – குமாரவடிவேல் குருபரன்- (விரிவுரையாளர், சட்டத்துறை, யாழ் பல்கலைக்கழகம் – பொதுமக்கள் அமைப்பு பிரதிநிதி )

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசியல் தீர்வுக்கான ஆரம்பமல்ல. அது மிகவும் அதிகாரமிக்க ஓற்றை ஆட்சி என்ற பதத்திற்குள் புதைந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரினால் நியமிக்கப்படும் ஆளுணரிடமே எல்லா அதிகாரங்களும் உள்ளன.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்கவேண்டும் என்ற அழுத்தத்தை இந்திய மத்திய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது திணித்துள்ளது.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் சம்பந்தன் அவர்கள் 13 ஆவது திருத்தம் தொடர்பான ராஜுவ் – தமிழர் விடுதலைக்கூட்டணியின் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர். 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாகும் என்ற கருத்தை விதைப்பதன் மூலம் தமிழத் தேசியக் கூட்டமைப்பும், இந்தியாவும் தமிழ் மக்களை ஏமாற்ற முற்பட்டுள்ளன.

There are many deadliest Tamil Organisations  and Tamil Medias are working for deadliest evil indian powers and showing their poisonous cruel faces through their ugliest statements which is well showing that they were behind the deadliest genocidal powers who were carried out the cruel barbarian style genocide on innocent Tamils in Thamileelam. This deadliest Tamil organisations wanted to have close relationship with evil genocidal powers who brutally massacred painfully many thousand Tamil babies mothers youths in Thamileelam and this statements openly shows who they are and whom they born to in Thamileelam. Tamils in all around the world should identify those deadliest Tamil speaking people who born to unknown ethnic groups in Thamileelam is never undergone any pain of those Tamil babies mothers youths lives and if they origin of Tamils never goes against to Tamil genocide victims souls which will expect that Tamils in Thamileelam shouldn't have any relationship for many thousand years with those deadliest evil giant genocidal powers which is the only one give absolute respect to Tamil genocide victims. 

மீண்டுமொருமுறை பொறிக்குள் சிக்கியுள்ள தமிழர் அரசியல் -பாலசுந்தரம் நிர்மானுசன்

(ஊடகவியலாளர் – மனித உரிமைச் செயற்பாட்டாளார், ஐரோப்பா)

சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையின் கீழான 13ம் திருத்தச்சட்டம், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ அல்லது இறுதித் தீர்வாகவோ அமையாது என  நீண்டகால வாதங்களுக்கு பின்னர் வெளிப்படையாகக் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பு, 13ம் திருத்தச்சட்டத்துக்கு அமைவாக நடைபெறவுள்ள எதிர்வரும் வடமாகண சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதென்பது, தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரதானமான காரணங்களில் ஒன்றான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஏற்றுக்கொள்வதோடு, தமிழர் தாயகம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு தமிழர் தரப்பிலிருந்தே மறைமுகமாக அங்கீகாரம் வழங்குவதாகவும் அமையும்.

வடமாகாண சபை தேர்தல் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக நடைபெறுவதோடு, சிங்கள பேரினவாதிகளும் அதை எதிர்கிறார்கள் என்ற காரணத்திற்காக, அந்தத் தேர்தல் தமிழர்களுக்கு சாதகமாக அமையும் என்ற வாதம், அரசியல் சாணக்கியம் அற்றதோடு, தமிழ் அரசியல் பீடத்தின் ஒரு பிரிவிலுள்ள அரசறிவியலின் வெறுமையை வெளிக்காட்டுகின்ற அரசியல் அபிவிருத்தியாவும் காணப்படுகிறது.

இந்த துன்பியல் சம்பவம், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பான விடயங்கள், தமிழர் தேசத்தின் நலனுக்கு அமைய, பன்மைத்துவம் கொண்ட ஆக்கபூர்வமான அரசியல் கலந்துரையாடலின் பின்னர் முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி நிற்பதோடு, அத்தகைய கட்டமைப்புக்கான தேவையை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.

இன்று பிரிக்கப்பட்ட மாகாண சபையில் போட்டியிடுவதன் மூலம் வடக்கு கிழக்கு பிரிப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறதா? வடக்கு கிழக்குப் பிரிப்பு என்பது எமது போராட்டத்திற்கு எதிரானது. மாகாண சபை குறித்தோ, 13ஆவது திருத்தத்தை அழிக்கும் நடவடிக்கை குறித்தோ எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் கூட்டமைப்பு மூழ்கியிருக்கிறது.

நாம் எதற்காக போராடினோம்? எத்தனை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை ஆயிரம் பேராளிகளை இழந்திருக்கிறோம்? கூட்டமைப்பு வரலாற்றுத் தவறிழைக்கிறது. போராடத் தயாராக இருக்கும் மக்களுக்கு முன்னின்று போராட்டத்தை முன்னெடுக்கத் தெரியாத அரசியல்வாதிகளால் வேறு என்ன செய்ய முடியும்?

தந்தை செல்வாவின் பாசறையில் ‘களமாடிக்’ களைத்த ‘பழுத்த’ அரசியல்வாதி.தளபதி அமிர்தலிங்கத்தின் உழுத்துப்போன உடைவாளை சுமந்துநிற்கும் ‘மதிவியூகி’.கொழும்பில் கடைவிரித்து டில்லிக்கும், வோசிங்கடனுக்கும் அடிக்கடி படையெடுத்து மேனனுடனும், ஓ பிளேக்குடனும் கண்ணாடிக் குவளையில் திராட்சை மதுரசம் அருந்தும் அரசியல் சாணக்கியன்.தம்பி செய்த தவறை ‘திருத்த’ பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்து மண்கவ்விய ‘மாமேதை’. சிங்கத்தை தனது கொடியில் சிங்களம் பொறித்து நிற்பதால் அதனை உவகையுடன் கையில் ஆட்டி அசைத்து ஆனந்தக்கூத்தாடும் அறிவுக்கடல்.மிழ்த் தேசியக் கூத்தமைப்பின் (கூட்டமைப்பு அல்ல) தலைவர் சம்பந்தர் இன்று கனடா ஏகி புலம்பெயர் தமிழர்களுடன் இராப்போசன விருந்துண்கின்றார். ‘பெருந்தலைவர்’ சம்பந்தருடன் இணைந்து மதுபான ஆற்றில் நீந்தித் திளைத்து தமிழீழத்தை மறப்பதற்கு அனைவரும் திரண்டு வாரீர். நுழைவுக் கட்டணம் வெறும் நூறு டொலர்கள் மட்டுமே.
தமிழர் தேசியக்கூட்டமைப்போ தாங்கள் மாகாண சபையை கைப்பற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் சட்ட அறிவைப்பயன்படுத்தி இந்தியாவின் உதவியோடு போராடி தமிழர்களுக்கான உரிமையை பெறுவோம் என்கிறது. இதைவிட உலக நகைச்சுவை வேறு இல்லை என்பதே இந்தப்பதிவின் கருத்து. 

 

இந்திய அரசு 2009ல் இனப்படுகொலை செய்வதற்கு சிங்கள அரசுக்கு எந்தளவுக்கு உதவி நின்றது என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை. 

இன்றைக்கு இனப்படுகொலையை நடத்தியவர்களும்  கூட்டாளிகளும்,   இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்து மவுனம் சாதித்தவர்களும்,   அரசியல் இலாபம் கருதி தமது கறையை மறைத்துவிடுவதற்காக மாற்று வேடமிட்டு அரசியல் செய்துகொண்டிருப்பதும் உலகம் அறியாததல்ல.  மறதி கொண்ட பாழாகிப்போன மனித இனத்தின் பலவீனத்தை,  கொலைகாரர்களும் துரோகிகளும் மிகச்சரியாக அருமையாக பயன்படுத்த போட்டி போட்டு நிற்கின்றனர். அவர்கள்பின்னால் மறதி நிறைந்த தமிழினமும்,  தமிழ் அரசியற் பயணிகளும் வளர்ப்புப்பிராணிகளின் பவ்வியத்துடன்  பின்னோக்கி சென்று கொண்டிருப்பதை என்னவென்று சொல்லமுடியும். 
Tamils in all around the world should understand that these deadliest Tamil organisations were behind the genocide of Tamils in Thamileelam and these world Tamil organisations leaders were well identified by genuine World Tamil Medias and by genuine Tamil intellectual Members of Tamil Liberation Organisations World Tamil Youths Liberation Organisations as well as by genuine Thamileelam Thamilnaadu Thamil Thesiam Political Parties Tamil Organisations Tamil Movements Tamil intellectuals. The World Tamil Organisations genuine Thamil Thesiam Members should immediately come forward to remove those evil traitors from their organisations who were behind the genocide of Tamils in Thamileelam and now who were openly shown their real policies through the poisonous statements who wanted to hug ugly thugs of evil congress and their RAW barbarian vampires and wanted to drink Tamil blood on same plate with deadliest devils. Now these Tamil speaking evils openly shown their real ugly cruel face to Tamils in all around the world. Tamil genuine medias should bring these Tamil speaking Traitors ugliness through their genuine medias to world Tamils. 
 எட்டப்பர்களின் தலையீட்டாலும்,  பச்சோந்திகளின் நடமாட்டத்தாலும் , உலக மட்டத்தில் செய்யப்பட்ட திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களினாலும்  சோரம்போகும் தற்குறி அரசியற் பயணிகளாலும்,  ஈழத்தமிழர்களின்  உரிமைக்கான ஆயுதப்போராட்டம் மனித படுகொலை என்ற மனித நாகரீகமற்ற அழிப்பு அடக்குமுறையால் வெல்லப்பட்டுவிட்டதாக தெரியலாம்.  ஆனால்   நாகரீக சனநாயக அரசியல் முன்னெடுப்பாலும்  அடுத்து  தோன்றிய உணர்வு மயமான உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தாலும் பெற்றெடுக்க முடியாத சுய வாழ்வியலுக்கான விடுதலையை பெற்றெடுப்பதற்காக அந்த மக்கள் இன்னொரு மாற்று வழியை தேர்ந்தெடுத்து வேறு மாதிரியான போராட்ட உத்தியை பிரயோகிக்க பின் நிற்க மாட்டார்கள் என்று எந்த வல்லரசுகளாலும் விஞ்ஞானிகளாலும் கணிப்பிட முடியாது,   என்பதாகவே கள நிலவரங்களும் சூழ்நிலைகளும் கோடிட்டு காட்டி நிற்கின்றன.  

உலகத் தமிழ் இளையோர் கவனத்திற்கு ஒரு அறை கூவல் - சேரன் சிறீபாலன் (மனித உரிமைச் செயற்பாட்டாளர், தமிழ் செயற்பாட்டாளர் – அவுஸ்திரேலியா)

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போர் முள்ளிவாய்க்காலிலே முடிவுற்று நான்கு வருடங்கள் சென்று விட்டன. ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுவரை அரசியல் உரிமையும், வறுமை அற்ற வாழ்வும் கிட்டவில்லை.

இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல் புத்தமத மாக்கல் என்பன தீவீரமாக நடக்கின்றன. வெளித்தோற்றத்திற்கு வடக்கு கிழக்கில் பொருளாதார வளர்ச்சி இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. கிராமப் புறங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகிவிட்டது.

மாகாணசபைத் தேர்தலுக்கான தயாரிப்புக்கள் வேகமாக நடக்கின்றன. மக்கள் குறைகள் வெளிவராமல் தொண்டையோடு நிற்கின்றன. புலனாய்வுத் துறையினரின் கழுகுப் பார்வை காரணமாக மக்கள் தமது கருத்தை சொல்ல அஞ்சுகின்றார்கள். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சதித்திட்டங்களால் உருவாக்கப்படுகின்ற தலைவர்கள், மக்கள் வெறுப்புக்கு இலக்கான விக்னேஸ்வரன் போன்ற தான்தோன்றித் தலைவர்கள் மழைக்கு முளைத்த காளான்கள் போல் தோன்றிவிட்டனர்.

அவர்களின் நோக்கம் தமிழ்மக்களின் விடுதலைக்காகவோ, தமிழீழத்தின் விடுதலைக்காகவோ இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கையாலாகத தனத்தை மீண்டும் நிருபித்துள்ளது. அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசிற்கு சார்பாகவும் இராசதந்திரம் நடத்தும் புதுடில்லி அரசை நம்பி அரசியல் நடத்துகின்றனர். இந்தியா தமிழ்தேசியக் கூட்டமைப்பை தனது கைப்பொம்மையாக பயன் படுத்துகிறது. ஒன்றைமாத்திரம் இவ்விடத்தில் சொல்கிறோம் காலம் ஈழத்தமிழனை கொன்று விடும் தமிழீழம் காலத்தை வென்றுவிடும்.

தமிழீழத்தின் தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ம் நூற்றாண்டிலும் மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும். அன்புகண்ட நாடுகளில் கடல் கடந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்த ஈழப்போராக இடம்பெறுகின்றது எமது விடுதலைப்போர்.

தமிழீழம் ஒரு சர்வதேச விவகாரம் அது இலங்கைத் தீவுக்குள் அடங்கியதல்ல. செத்துபோன குதிரையை அடித்து எழுப்பும் முயற்சியே 13ம் திருத்தம் என்ற போலி அதிகாரப் பகிர்வு. இந்த 13ம் திருத்தம் எப்போ இறந்துவிட்டது. ஆனால் இன்றும் அதை அரசியல் இலாபத்திற்காக கையில் எடுத்து பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். 1987ல் செய்யப்பட்ட 13ம் திருத்தம் காலாவதியாகி கால் நூற்றாண்டாகிவிட்டது.

வலதுகை கொடுக்க இடதுகை பறிக்க என்று சொல்வார்கள் 13ம் திருத்தம் வழங்கிய அரசியல் உரிமைகளை மீளபெறும் உபாயத்தை அதே 13ம் திருத்தத்தில் உள்ளடக்கி உள்ளனர். இதன் காரணமாகவே மிகப்பெரிய அரசியல் மோசடி 13ம் திருத்தம் வர்ணிக்கப்படுகின்றது. இலங்கை அரசின் பிரதிநிதியாக செயற்படும் மாகாணசபை ஆளுனரின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்படும் இந்த பிரதிநிதிகள் வெறும் தலையாட்டி பொம்மைகள் மாத்திரமே.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போருக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும்போது 13ம் திருத்தத்தின் மூலம் அரசியல் உரிமைகளை வழங்கப்போவதாக உறுதி மொழி வழங்கியது இலங்கை அரசு ஆனால் நடந்தது என்ன? போரில் வெற்றிபெற்றுவிட்டோம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்கவேண்டிய அவசியம் இப்போதில்லை என்று சிங்கள பேரினவாதிகள் கூறத்தொடங்கிவிட்டார்கள். சர்வதேச சமூகத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் எழும்போதெல்லாம் 13ம் திருத்தத் சட்டத்தை பற்றி பேசுவது இலங்கை அரசின் வழமை.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நாடக்கப் போகிறது அதற்கு முன்னார் தேர்தலும் 13ம் திருத்தத் சட்டமும் என்ற நாடகம் தொடங்கிவிட்டது. ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் வெலிஓயா சிங்கள குடியேற்றத்தைபோல பிரிக்கப்பட்டுவிட்டன. நிரந்தரமாக பிரிக்கப்பட்டுவிட்டன. வெலிஓயா என்பது தமிழர் தாயகம் மணலாறின் புதிய பெயர் மணலறில் வாழ்ந்த தமிழர்கள் ஏதிலிகளாக படகுகளில் புகலிடம் தேடுகிறார்கள். அவர்கள் சிந்திய கண்ணீர் கடல் நீரை உப்பு நீராக மாற்றுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதா? உள்ளத்தில் உறுதியும் செயலில் உண்மையும் இருக்குமானால் தாய் மண்ணுக்கான விடுதலைப் போர் ஒரு போதும் தோல்வி காணமாட்டாது. காலம் பிந்தினாலும் தமிழீழம் நிட்சயம் கிடைக்கும். இளையோர்களே நிகழ்வுகளை அவதானியுங்கள் உறுதியாக செயற்படுங்கள் எமது  எதிர்காலம் எங்கள் கைகளில் தங்கியுள்ளது.

அரசியல் அதிகாரம் அற்று,   ஈழத்தில் வாழ்ந்த தேசிய இனமான இனமானத் தமிழர்களை,  எந்த ஒரு ஆதிக்க வர்க்கசக்தியும் மனிதப்பிறப்பாக மதிக்கவில்லை.  மனு தர்மத்தை அதிகாரவர்க்கம் கூட்டுச்சேர்ந்து காலில் போட்டு மிதித்தது.  குப்பை கூளங்கள் போல வெட்டவெளியில் போட்டு எரிக்கப்பட்ட தமிழினத்தின் அவலத்தை எவரும் கண்டுகொள்ளவில்லை.  அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு  குளிர்சாதன அறைகளிலிருந்து  பம்மாத்து அறிக்கை விட்ட எவனுக்கும் அந்த அவலம் புரிந்துகொள்ள முடியாதவை. 
ஈழ இனப்படுகொலையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்த நாடான இந்தியாவின் தமிழ்நாட்டில் மட்டும் "இந்திய இனக்கொலை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக"  போராடி இனப்படுகொலையை நிறுத்தக்கோரி இருபதுக்கு மேற்பட்ட மனித உயிர்கள் அடுத்தடுத்து தீயில் விழுந்து கருகி உயிரை மாய்த்துக்கொண்டனர்.  (இவற்றை அப்போது அதிகாரத்திலிருந்த எவரும் கண்டுகொள்ளவுமில்லை.  இப்போ எவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவுமில்லை.)  அவை எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித நேய மாண்பின் அடிப்படையில் பின்புலத்தில் துளி அரசியல் ஆதாய நோக்கமில்லாமல் உணர்வின் அடிப்படையில் இயல்பாக அரங்கேறின  

கூட்டமைப்பு உருவாக்கும் “மிகை போலி பிம்ப உலகு” – பரணி கிருஸ்ணரஜனி (பெண்ணிய மற்றும் அரசியல் ஆய்வாளர், வியன்னா, ஒஸ்ரியா)

முள்ளிவாய்க்காலில் நாம் வீழ்த்தப்பட்ட போதும் எமக்கான அரசியல் இருப்பு என்பது அப்படியேதான் இருந்தது. யதார்த்தம் அதை மறுத்தாலும் உண்மை அதுதான். அழிவும் அவலமும் நிகழ்ந்தாலும் எமது இருப்பு தொடர்பான வரலாற்று செய்தி அந்த அழிநிலத்தில் வைத்து தெளிவாக எழுதப்பட்டதை இப்போது யாரும் உணரலாம். ஆனால் தமிழர்களின் பிரதிநிதிகள் தாங்கள்தான் என்ற கோசத்துடன் கூட்டமைப்பு பிரிக்கப்பட்ட கிழக்கு மகாணசபை தேர்தலில் பங்கெடுத்த போதே அந்த இருப்பு லேசாக ஆட்டம் காணத்தொடங்கிவிட்டது. எனவே வடக்கு மகாண தேர்தலில் கூட்டமைப்பு பங்கெடுப்பது என்பது அந்த இருப்பின் மீதியை அழித்தொழிக்கும் முயற்சியே..

எல்லாத்தையும் விட அபத்தம் அரசியல் தீர்விற்கான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளவே முடியாத 13 வது சட்ட திருத்தத்தை முன்மொழிந்தவாறு கூட்டமைப்பு இந்த தேர்தலில் குதிப்பது. ஒற்றை அரசியலமைப்பையும் அதன் கீழான மகாணசபை முறைமையையும் நிராகரித்த எமது போராட்டம் இன்று அதன் நோக்கத்தையே இழந்து அனாதையாக நிற்கிறது. உண்மையான “முள்ளிவாய்க்கால்” இதுதான்.

தேர்தலில் பங்கு பற்றுவதனூடாக சில சாத்தியமான மக்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற சிக்கலான வாதத்தையம் கள யதாhத்தத்தையும் கணக்கில் கொண்டு பல நிபந்தனைகளுடன் முன்பு கிழக்கு மகாண தேர்தலிலும் சரி தற்போது வடக்கு தேர்தலிலும்சரி சிவில் சமூகம் மற்றும் பல அரசியல், சமூக – உளவியல் பகுப்பாய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட எந்த கருத்துக்களையும் செவிமடு;க்காத கூட்டமைப்பு தன்னிச்சையாக செயல்படுவது துரதிஸ்டவசமானது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

இந்த இடத்தில்தான் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாகிறது. புலிகளால் உருவாக்கபட்ட அமைப்பு என்ற வாதத்தை தம்மை நோக்கி மக்கள் விமர்சனம் செய்ய முற்படும்போதே பயன்படுத்தும் கூட்டமைப்பு நோக்கத்தில் செயற்பாடுகளில் அதற்கு எதிர்நிலையே எடுத்து வருகிறது. புலிகளால் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட யாருமே இன்று கூட்டமைப்பில் இல்லை என்பதே இந்த யதார்த்தத்தை உணர போதுமானது. பிரச்சினை தற்போது அதுவல்ல.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சாவுமணி அடிக்கும் செயற்பாடுகளுக்கு நாம் எத்தனை நாட்கள்தான் துணையாக இருப்பது? இப்போது தேர்தலில் வாக்களிக்க சொல்லி கேட்பதனூடாக இந்த வரலாற்று துரோகத்தில் மக்களையும் பங்காளிகளாக்கும் வேலையை செய்கிறது கூட்டமைப்பு என்றே எண்ணத் தோன்றுகிறது.

மே 18 உடன் புலிகளின் ஆயுதபோராட்டம் முடிவுக்கு வந்தபோதே புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் செயற்திறனும் – அதற்கான இடமும் முடிவுக்கு வந்துவிட்டது. வெளிப்படை உண்மை அதுதான் என்ற போதிலும் இதை நாம் சொல்லவில்லை. கூட்டமைப்பே அதை தினமும் நிருபிக்கிறது. எனவே சம்பந்தர் கூட்டமைப்பை கலைத்து விட்டு புதிதாக ஒரு பெயரிலோ அல்லது தமிழரசுக்கட்சியின் பெயரிலோ இந்த தேர்தல்களாகட்டும் வேறு பல இனத்தை கூறுபோடும் வேலைகளாகட்டும் செய்யலாம்.

ஏனென்றால் அதில் எமக்கு தீர்வுகள் கிடைத்தால் சந்தோசம். மறுவளமாக தோல்வி கிடைத்தால் அது எமக்கு பிரச்சினையல்ல. அது தமிழர்களின் அரசியல் தோல்வியாக இருக்காது. ஒரு கட்சியின் – அமைப்பின் இராஜதந்திர சறுக்கலாகவே இருக்கும். ஆனால் புலிகளால் முன்மொழியப்படவர்கள் என்ற அடையாளத்துடன் – தமிழர்களின் பிரதிநிதிகளாக இத்தகைய வரலாற்று தவறுகளை புரிவது தமிழர்களின் ஒட்டு மொத்த தோல்வியாகவே போய் விடும் ஆபத்த இருக்கிறது. அத்துடன் இலட்சக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் இரத்தத்தில் கட்டி எழுப்பபப்ட்ட ஒரு நிழல் -நிகர் அரசின் போராட்ட விழுமியங்களை தார்மீக நெறிகளை இப்படியான வெளிஅழுத்தங்களினாலும் பதவி ஆசைகளினாலும் குழிதோண்டிப் புதைப்பதை அனுமதிக்கவும் முடியாது.

அதை விட முக்கியமானது. இன்று ஏகப்பிரதிநிதிகள் என்ற போர்வையில் தமிழர் அபிலாசைகளை நாசம் செய்துவிட்டு இவர்கள் ஒரு கட்டத்தில் ஓடும்போது அடுத்த தலைமுறை அதை மீட்டெடுத்து முன்னகர்த்துவது என்பது முடியாததாகவே இருக்கும்.

வரும் மனிதஉரிமை பேரவை ஒன்றுகூடல், பொதுநலவாய மாநாடு, நவநீதம்பிள்ளையின் வருகை என்ற சமகால நிகழ்வுகளை மையப்படுத்தியும் தூரநோக்கில் போர்க்குற்ற – இனப்படுகொலை விசாரணைகளிலிருந்து தப்பிக்கவும் என்று பல நோக்கங்களுடன் ஒன்றுக்குமே உதவாத ஒரு தேர்தலை ஏதோ தமிழீழ ரேஞ்சுக்கு கற்பிதம் செய்தபடி இராஜதந்திர கபடியாடும் இன அழிப்பு அரசின் சூழ்ச்சி வலைக்குள் கூட்டமைப்பு சிக்குண்டது துரதிஸ்டவசமானது.

அதை மக்கள் நம்பும்படி வற்புறுத்தும் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது.? ழான் போத்திரியா என்று பிரெஞ்சு தத்துவமேதை ஊடக வெளியின் அபத்தங்களை முன்வைத்து “மிகைப்போலி பிம்ப உலகு” என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்தார்.

அதாவது உண்மை எது பொய் எது கண்டறிய முடியாமல் இனி ஊடகங்கள் கட்டமைப்பதே உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்று..

கூட்டமைப்பும் தனது இயலாமையினாலும் ஆளுமை சிக்கலினாலும் பதவி ஆசையினாலும் தமிழ் மக்களை சுற்றி ஒரு “மிகை போலி பிம்ப உலகை” கட்டமைக்க முற்படுகிறது. 13 வது திருத்த சட்டம், பிரிக்கப்பட்ட மகாண சபை தேர்தல் எல்லாம் எமக்கு ஏதோ விடிவின் ஒரு புள்ளி என்று தமிழ்மக்களை நம்ப வைத்ததே இதற்கு சாட்சி.

எதிரிகள், வெளிச்சக்திகள், மற்றும் கூட்டமைப்பு சேர்ந்து விரிக்கும் இந்த பிம்ப உலகில் சிக்குண்டும் இன அழிப்பை சந்தித்து பேதலித்து போயுள்ள உளவியலும் சேர்ந்து மக்களை இந்த உண்மைகளை உணரவிடாமல் தடுக்கின்றன. விளைவாக வரலாறு ஒரு முட்டுச்சந்தியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

Diaspora would love to influence India but India will not agree with TGTE's Tamil Eelam concept, Suryanarayana said. 

Significantly, Tamil National Alliance (TNA), Tamil political alliance in Sri Lanka, has been closely in touch with Indian government in recent years.

தவறான பாதையில் நிறுத்தப்பட்டுள்ள தவறான தெரிவு – அருஷ் ( படைத்துறை ஆய்வாளர். பிரித்தானியா).

வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சிறீலங்கா அரசு கூறும் நிபந்தனைகளை அப்படியே ஏற்று அதில் போட்டியிட்டு சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஏறத்தாள 65 வருட இனஅடக்குமுறை, 40 வருடங்களுக்கு மேற்பட்ட இனஅழிப்பின் வலிகள், ஆயுதப்போராட்டத்தின் மூலம் சிந்தப்பட்ட குருதி என்பன மூலம் ஏற்படுத்தப்பட்ட பேரம் பேசும் வல்லமை, சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்பு தொடர்பில் திரும்பியுள்ள அனைத்துலகத்தின் கவனம் என்பன பதவி மோகத்திற்காக சிதைக்கப்படப் போகின்றன.

சிறீலங்கா அரசின் இரணுவ ஆளுணர்கள் கூறும் இடத்தில் உக்கார்ந்து, அவர்கள் கூறும் கட்டளைகளை நிறைவேற்றும் வடமாகாணசபை முதலமைச்சரினால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் எதனையும் செய்யமுடியாது என்பது தெளிவானது.

ஆனால் சிறீலங்கா அரசையும், அதன் இனப்படுகொலைக்கு துணைநின்ற இந்திய மத்திய அரசையும் அனைத்துலகத்தின் அழுத்தங்களில் இருந்து காப்பாற்றவும், இந்திய அரசின் பூகோள நலனைக் காப்பாற்றவும்  இது  உதவலாம்.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமம் இந்த தேர்தலிலும் அதன் நிழலில் போட்டியிடுபவர்களுக்கு வாக்குகளை அள்ளி வழங்கும் என்பது உண்மை.

எனவே தான் தமிழரசுக் கட்சியும், ஏனைய ஆயுதக்குழுக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை விட்டு வெளிவருவதற்கு அஞ்சுகின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள ஆதிக்கத்தையோ அதன் கூலிப்படையாக செயற்படும் ஒட்டுக்குழுக்களையோ தமது பகுதிகளில் இருந்து தள்ளிவைப்பதையே விரும்புகின்றனர். எனவே தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை நிறுத்துகின்றதோ அதற்கு வாக்களிக்க வேண்டிய கட்டயம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுகின்றதா? என்பது கேள்விக்குறியானது. ஏனெனில் அவர்களால் நிறுத்ததப்பட்டுள்ள முதலமைச்சர் வேட்பாளர் என்பவர், தவறான பாதையில் நிறுத்தப்பட்டுள்ள தவறான தெரிவாகவே காணப்படுகின்றார்.

அவர் தெரிவித்துவரும் கருத்துக்களும் நம்பிக்கை கொண்டதாக காணப்படவில்லை. தமிழ் மக்களுகளின் தேவை என்பது அர்பணிப்பும், விட்டுக்கொடுக்காத தைரியமும், அரசியல் முதிர்ச்சியும் கொண்ட ஒரு அரசியல் தலைவரே தவிர இந்தியாவினதும், சிறீலங்காவினதும் விருப்பத்திற்குரியவர் அல்ல. அதற்காக எமது இனம் குருதி சிந்தவும் இல்லை.

வடக்கில் சீனாவின் உதவியுடன், ஒரு இலட்சம் இராணுவக் குடியிருப்புக்களை உருவாக்குவதற்கு சிங்கள அரசாங்கம் முயற்ச்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். குறிப்பாக வலி வடக்குப் பிரதேசத்தில் 6,500 ஏக்கருக்கு அதிகமான தமிழர்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்து சீனாவின் உதவியுடன் நிரந்திரமான படை முகாங்களை அமைந்து வருகின்றது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
 
E-mail

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.