Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனைவி அமைவதெல்லாம்....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம்....?

 

 

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒருவித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாளே கிடையாது. வரப்போகும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரசியத்தை இன்னும் கூட்டியது. vil-lov4.gif

 

 

 

நிறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன்...வருகிறவளுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும்..ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..?

நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. coeuroeil.gif  aulitseul.gif

 

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து, பார்வையில் படும்படி வைத்தேன்.. 

 

இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.

 

எஸ்.ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.

 

கேரம், செஸ் போர்டு எல்லாம்... இன்னும் பல பல விஷயங்கள்...!

 

ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழத் துவங்கியிருந்தேன். vil-lettre.gif

 

 

 

ஒரு சுபயோக சுபதினத்தில், திருமணம் இனிதே நடந்தது..!  விருந்து முதற்கொண்டு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தன. marie2.gif

 

கீழ்க்கண்ட உரையாடல்கள் இருவருக்குமிடையே சில தினங்களில் நடந்தது.

 

"புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா..?"

"இல்லைங்க.. நான் எந்த புத்தகமும் படிச்சது இல்லை..!"

"எந்த புத்தகமும் படிச்சது இல்லையா...?"

"ஆமாங்க! எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!"

"இந்த குமுதம், ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா...?"

"நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம்தான் நான் கடைசியா படிச்சது..அதுக்கப்புறம் எந்த புத்தகமும் படிச்சது இல்ல...!"

ஏதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லிச் சிரிக்க, நான் வெளிறிப்போனேன் ..! fulminer-2010.gif

 

எனக்கு மண்டை காய்ந்துபோனது... எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள்...? ஒரு அட்டைப்படத்தில் பாலகுமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..! fulmine.gif

 

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..அதை பற்றி அவள் கேட்கவேண்டும்...நான் பீற்றிக் கொள்ளவேண்டும் இதுதான் திட்டம்..!

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது, வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை, கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை. tape-poing.gif

 

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

 

"இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?"

"எதுக்கு வாங்குனீங்க..?"

"இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது.. ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?"

"எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க...எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!"

 

(அதானே...எனக்குன்னு இப்படித்தான் வாய்க்கணும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும்! ) vil-colere1.gif

 

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!!

 

"இந்த பாடகர், பாடகிகள்ல உனக்கு யாரை புடிக்கும்..?"

"ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது...பொதுவா எல்லா பாட்டும் கேட்பேன்..!"

"உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!"

"அட போங்க...! திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?"

"சரி எஸ். ஜானகி புடிக்குமா..?"

"யாரு? கெழவி போல இருக்குமே அதுவா..?"

எஸ்.ஜானகியை கெழவின்னு சொன்னதும் எனக்கு செம கோவம்...! எனக்கு புடிச்ச பாடகி, அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய...? எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.. அவள்மேல் கோபப்பட முடியவில்லை.. ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும், முன்கோபி... என் பாதுகாப்பும் முக்கியமில்லையா...? எதுவும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...! துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை..

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்!

இவள் எனக்கு ஏற்ற ஜோடி இல்லை! vil-ccolere2.gif

கணவன், மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள்.. ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன், பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு, ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான்...வேறு என்ன செய்வது ?

 

எங்களுக்குள் எந்த 'கெமிஸ்ட்ரி'யும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

 

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நாட்கள் நகர்ந்தன..

 

சில மாதங்களில் மனைவி கர்ப்பவதியாகவே நிலைமை மாறத் தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது.. ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

"மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சதை சமைச்சுப் போடணும்" - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்.

"உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும்..? சொல்லு!"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்...!"

"இல்லை சொல்லு..!" நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல...

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள்... நானும் அப்போது சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன்! ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

"இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவரை சொன்னதே இல்லையே ..?"

"ம்ம்ம்.. இப்போதானே நீங்க கேக்குறீங்க..?"

அவள் சிரித்து கொண்டே சொல்ல, எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. vil-rougir.gif

 

பிரசவம் நெருங்க, நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் எனக்குள் தொற்றிக் கொண்டது. இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்தக் கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பியபடியே அழகிய பெண் குழந்தை... நார்மல் டெலிவரிதான்..!

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒருவாரம்..பத்து நாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என.. ஆனால் இவள் மறுநாளே சாதாரணமாக நடமாட ஆரம்பித்தாள். யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால், சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்று கொள்வாள்.

இவளின் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச, எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும், தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில், எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள்..நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.குழந்தையையும் கவனித்துகொண்டு, எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் அவள் வைக்கவில்லை.  mange7.gif   saint-val-24.gif

 

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட, மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவள்மேல் ஒரு மரியாதையே எனக்குள் ஏற்பட துவங்கியது.

வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..! 1bb.gif

சில வருடங்கள் போக,  இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி..ஆனால் இரண்டாவது சிசேரியன். 1mamie.gif

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளைப் பார்க்கச் செல்கிறேன்.. தூக்கம் போலவும் இல்லாமல், மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் ஏதோ ஒரு குழாய் இருக்க, அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன், இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது, என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ..! promesse.gif

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம், கணவன் தன்னிடம் அடங்கிப் போகிறான் என்று ..அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும், அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த "அடங்கிப் போதல்"... மனைவியை ஜெயிக்கவிட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான்!

 

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்கிடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த "மனைவி...இல்லத்தரசி" என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வரூபத்தின் முன் ''நான்'' கொஞ்சம் கொஞ்சமாக நலிந்துகொண்டு இருந்தேன்... பாலகுமாரன், கிரிக்கெட், எஸ்.ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகிச் செல்ல...

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன், ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க, நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

 

 

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்...

ஆனால்..இப்போது எங்களுக்குள்  தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியல் எல்லாமே ஒர்க் அவுட் ஆகி போனது ..!

 

loving02.gif

 

 

 

 

- மின்னஞ்சலில் வந்தது , ரசித்தது.   (முகக்குறிகள் அடியேன் உபயம்! :) )

 

ஆகவே, அருக்காணியோ...ஐஸ்வர்யராயோ... பெண்மை போற்றுதலுக்குரியதுதான்!  (சரியான இடத்தில் அமையும்விடத்து) :rolleyes:

 

 

.

Edited by ராஜவன்னியன்

"பெண்மை போற்றுதலுக்குரியதுதான்"

 

ஆண்மையும் பெண்மையும் ஒன்றாக இணைந்தால்தான் போற்றுதலுக்குரியது. இரண்டும் தராசு மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன், ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க, நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

 

 

ம்ம்ம்

தொடருங்கள்

ஏதோ   நம்மால் முடிந்தது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பதிவு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல... ஒன்றுக்குமே பிடிக்காத மனிசி.. எப்படி கர்ப்பவதியா மட்டும் ஆகிடுது..???! அது மட்டும் பிடிச்சிடுறது தான்.. பிரச்சனையே...!!!!!! :lol::D

 

மேலும்.. தாயான மனிதப் பெண்கள் மட்டுமல்ல.. நாயும் தான் வேளா வேளைக்கு பாலூட்டுது.. குட்டிகளை நக்கி விடுது... ஆபத்துன்னா கவ்விக்கிட்டு ஓடுது.... அதெல்லாம் இயற்கையா அமைவது. ஓமோன்களின். இரசாயனங்களின் தூண்டல்...! இச்சைக்கு அப்பாற்பட்டவை. அதனால் பெண்கள் அப்படிச் செய்ய வேண்டி இருக்குது. அதிலும் இப்ப எல்லாம் பாலூட்டவும் மனிதப் பெண்களுக்கு பாடம் எடுக்க வேண்டி உள்ளது. குழந்தையை தூக்கிறது.. பராமரிக்கிறதுக்கும் கூட. ஆனால் மனிதன் தவிர வேறு எந்த உயிரினத்திலும் பிள்ளை வளர்ப்பிற்கு யாரும் பாடம் எடுப்பதில்லை. இயற்கையின் விதிப்படி அவை நடந்து கொள்கின்றன..! :)

 

அழகான பதிவு. ஆனாலும்.. முரண்பாடுகள் இருக்கு நமக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பதிவு. ஆனாலும்.. முரண்பாடுகள் இருக்கு நமக்கு. :lol:

 

 

நான்   கடவுளோட  கோபம்

நெடுக்கின்  கண்ணில் இது  படக்கூடாது என்று வேண்டினேனே........... :lol:

ஒன்றுக்குமே பிடிக்காத மனிசி.. எப்படி கர்ப்பவதியா மட்டும் ஆகிடுது..???! அது மட்டும் பிடிச்சிடுறது தான்.. பிரச்சனையே...!!!!!! :lol::D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல... ஒன்றுக்குமே பிடிக்காத மனிசி.. எப்படி கர்ப்பவதியா மட்டும் ஆகிடுது..???! அது மட்டும் பிடிச்சிடுறது தான்.. பிரச்சனையே...!

 

அது ஒன்றுமில்லை நெடுக்ஸ்...உங்கள் வாதப்படியே பிறப்பியலின்படி, தனிமையில் ஹார்மோன்கள் வேலை செய்து இரண்டு, நான்காகிவிட்டது...

 

எடக்கு மடக்காக .இப்படி நம் முன்னோர்கள் கேள்வியை கேட்டுகொண்டிருந்திருந்தால், நாம் இப்பூமியில் உதித்திருப்போமா?

 

 

அழகான பதிவு. ஆனாலும்.. முரண்பாடுகள் இருக்கு நமக்கு.

 

முரண்பாடுகளை களையத்தான் கட்டுங்கள், அனுபவித்துணர்வீர்களென்கிறோம்...

 

நான் சம்சார கடலுக்குள் காலையே வைக்கமாட்டேன், மேற்கில் விடியலைக் கண்பேனென்கிறீர்கள்..!

 

உங்கள் 'அம்மன்' கோயில், கிழக்காலே இருக்குதைய்யா..! திரும்புங்கள்..!! :icon_mrgreen:

நல்ல பதிவு வன்னி.

 

 

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பகிர்வு.. முகக்குறிகள் சுவாரசியத்தை அதிகரித்தன.. :D

நல்லதொரு பதிவு

 

பெண்மையை பூரிப்புடன் அணுகுபவர்களுக்குத்தான் தாய்மையின் அழகியலும் புரியும். பெண்மையை புரிதல் தான் ஆண்மையின் வெற்றியே.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு ! கர்ப்பமாவதற்கு பிடிக்கவேணும்  எண்டு கட்டாயமில்லை. உண்மையிலேயே அவருக்கு அவவைப் பிடிக்கேல்ல .அதனால்தான் அவ கஷ்டப்படட்டும்  என்று கர்ப்பமாக்கி விட்டவர் .என்ன செய்வது அந்த முயற்சில அவரே  தன்வயம்  இழந்துட்டார் ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு ! கர்ப்பமாவதற்கு பிடிக்கவேணும்  எண்டு கட்டாயமில்லை. உண்மையிலேயே அவருக்கு அவவைப் பிடிக்கேல்ல .அதனால்தான் அவ கஷ்டப்படட்டும்  என்று கர்ப்பமாக்கி விட்டவர் .என்ன செய்வது அந்த முயற்சில அவரே  தன்வயம்  இழந்துட்டார் ! :lol:

 

 

என்ன  இது?

ஏதோ கோழிச்சண்டை  மாதிரி  முடிக்கிறியள்............ :lol:  :D  :D

நல்லதொரு பதிவு

 

பெண்மையை பூரிப்புடன் அணுகுபவர்களுக்குத்தான் தாய்மையின் அழகியலும் புரியும். பெண்மையை புரிதல் தான் ஆண்மையின் வெற்றியே.

 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு

 

பெண்மையை பூரிப்புடன் அணுகுபவர்களுக்குத்தான் தாய்மையின் அழகியலும் புரியும். பெண்மையை புரிதல் தான் ஆண்மையின் வெற்றியே.

அதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக மிக அருமையான பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

 

மனைவி அமைவதெல்லாம்....?

 

 

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம், கணவன் தன்னிடம் அடங்கிப் போகிறான் என்று ..அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும், அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த "அடங்கிப் போதல்"... மனைவியை ஜெயிக்கவிட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான்!

--------

 

நல்ல தொரு பகிர்வு வன்னியன். அதற்கு நீங்கள் இணைத்த பொருத்தமான‌ சிமைலிகளும், வண்ண எழுத்துக்களும்... மேலும் மெருகூட்டுகின்றது. இரண்டு தரம் வாசித்தேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு மிக்க நன்றி... சாம்பவி, விசு, சுமே, நெடுக்ஸ், அலைமகள், டங்கு, நிழல், சுவி, தமிழ்சூரியன், லியோ  தமிழ்சிறி மற்றும் விரும்பிய அனைவருக்கும்!

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நாள் கழித்து இந்தப் பதிவை மீண்டும் வாசிக்க நேர்ந்தது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.