Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது போன்ற ஒரு பாடலை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.!!

Featured Replies

1098043_419133161536975_241431758_n.jpg

 

இது போன்ற ஒரு பாடலை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.!!

தயவு செய்து இதைப் படித்து விட்டுக் கடைக்கோடித் தமிழன் வரை பகிரவும்.!!!

வில்லிப்புத்தூரார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.

... 

அவர் வருவோர் போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால் தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால் இவர் வில்லிப்பூத்தூராரிடம் வாதில் தோற்றவர் என தெரிந்து கொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சியிருந்தனர்.

எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒருவர் இருப்பார் இல்லையா? இருந்தார். வில்லிப்பூத்தூராரின் ஆணவம் அழியும் காலம் வந்தது.

தமிழ் அழகன் முருகனைப்பாடும் அருணகிரிநாதர் அந்த ஊருக்கு வந்தார். ஒரு புலவர் வந்தது அறிந்த வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரையும் வாதுக்கழைத்தார்.

அருணகிரிநாதர் சம்மதித்து விட்டார். ஒரு புது கட்டளையும் போட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். வென்றவர் தொரண்டியை ஒரு இழுப்பு. தோற்றவர் காது அறுந்து வந்துவிடும்.

வில்லிப்புத்தூராருக்கு கிலி வந்துவி்ட்டது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் சம்மதித்துவிட்டார்.

போட்டி ஆரம்பமாகியது.

54வது பாடலை அருணகிரிநாதர் பாடினார்.

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

பாடி முடித்து அதன் பொருள் கேட்டார்.

வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் விட்டார்.

எத்தனை பாடலை பாடியிருப்போம். எத்தனை பேரின் காதை அறுத்திருப்போம்.

ஆனால் இப்பாடல் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.

தோல்வியை சம்மதிப்பதைத்தவிர வேறு வழியில்லை. காதை இழக்கப்போவது உறுதி.

அவரது ஆணவம் அழிந்தது. தோல்வியை ஒப்புக்கொண்டார். பாடலுக்கு விளக்கம் கேட்டார்.

அருணகிரிநாதரோ போட்டிவிதி்ப்படி அவர் காதை அறுக்கவில்லை. மேன்மக்கள் மேன்மக்களே.

அந்த பாடலுக்கான விளக்கம் இதுவே.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,

திதி - திருநடனத்தால் காக்கின்ற

தாதை - பரமசிவனும்

தாத - பிரமனும்

துத்தி - படப்பொறியினையுடைய

தத்தி - பாம்பினுடைய

தா - இடத்தையும்

தித - நிலைபெற்று

தத்து - ததும்புகின்ற

அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி - தயிரானது

தித்தித்ததே - தித்திக்கின்றதென்று

து - உண்ட கண்ணனும்

துதித்து - துதி செய்து வணங்குகின்ற

இதத்து - பேரின்ப சொரூபியான

ஆதி - முதல்வனே!

தத்தத்து - தந்தத்தையுடைய

அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத - தொண்டனே!

தீதே - தீமையே

துதை - நெருங்கிய

தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து - மரணத்தோடும்

உதி - ஜனனத்தோடும்

தத்தும் - பல தத்துக்களோடும்

அத்து - இசைவுற்றதுமான

அத்தி - எலும்புகளை மூடிய

தித்தி - பையாகிய இவ்வுடல்

தீ - அக்கினியினால்

தீ - தகிக்கப்படுகின்ற

திதி - அந்நாளிலே

துதி - உன்னைத் துதிக்கும்

தீ - புத்தி

தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இவ்வகைப்பாடல்கள் "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். ஏகம் என்றால் ஒன்று. அக்ஷரம் என்றால் எழுத்து. ஓரெழுத்து பாடல்.

அப்பாடல் அருணகிரிநாதரின் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல்.

அதிசயம் அதிசயிக்கும்.!!!

 
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் சொன்னாலும் இந்தப் பாடல் விளங்குதில்லை.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் சொன்னாலும் இந்தப் பாடல் விளங்குதில்லை.. :(:D

 

அருணகிரி நாதர் காலத்தில் வாழ்ந்திருந்தால், இரண்டு காதும் போயிருக்கும்!

 

முதலாவது காது- பொருள் தெரியாததுக்கு! :lol:

 

இரண்டாவது காது- பொருள் கூறியும் விளங்காததுக்கு! :lol:

 

பி.கு: எனக்கும் தான் போயிருக்கும், இசை! :icon_idea:

படுக்கப் போக முன் இரண்டு மூன்று தரம் பாடிப்பார்த்து விட்டு இப்ப படுக்கப் போறன்...  நாக்கு அடி நாக்கினைத் தொட்டு விட்டு, மீண்டும் பற்களுக்கிடையில் பரம சாது போல பயத்தில் படுத்து விட்டது. இனி 'த' எழுத்தை கூட அது உச்சரிக்க பயப்பிடப் போகுது பாவம்.

 

 இரவு எழும்பி தத்தத் தரிகிட தகதிமித்தோம் என்று ஆடப் போகின்றேனோ அல்லது விக்கித் திக்கி திணறடிக்கப் போகின்றேனோ தெரியவில்லை......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடலைப் படித்து மனனம் செய்து, ஒருவர் திரும்பத் தவறின்றி ஒரேமுறையில் ஒப்புவிப்பாரேயானால் அவர் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்கு சிபாரிசு செய்யலாம்.

 

ஆகா என்ன அருமையான..... பாடல்......என்ன அருமையான.... :rolleyes: . பாடல். காதுக்கு இனிமையாகவும் ,சுவையாகவும் இருக்குது .............
 
இப்படியான பாடல்களை மேலும் மேலும் கேட்க ஆவலாய் உள்...............
 
.இணைப்பிற்கு மெத்தப்பெரிய உபகாரம் அன்பு ..தொடர்ந்து இணையுங்கள்  :D
 
 
 
 
 
 
நாக்க்கு  விறைச்சு இறுகிபோனதை ...........பப்பிலிக்காய்  எழுமுடியாமல் .......................

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடலைப் படித்து மனனம் செய்து, ஒருவர் திரும்பத் தவறின்றி ஒரேமுறையில் ஒப்புவிப்பாரேயானால் அவர் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்கு சிபாரிசு செய்யலாம்.

 

கனபேர் பாடமாக்கிப் போடுவினம். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ,   அள்ள ,அள்ள  குறையாத பொக்கிஷம் ! :D

  • கருத்துக்கள உறவுகள்

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

இந்தப் பாடலை சித்திரக்கவி என்று கூறுவர். இதை  மடக்கணி வகைக்குள்ளும் உள்ளடக்கலாம் என்பது என் எண்ணம்.ஒருமுறை வந்த சொற்களோ, சொற்றொடரோ மீண்டும் வந்து வேறுபொருளைத் தருவது மடக்கணியாகும்.

 

சித்திரக்கவி

Eight_joined_cobra_poem_in_Tamil.jpg

 

 

 

காளமேகப் புலவர் எழுதிய ஒரு பாடல்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!

காக்கைக்கா காகூகை - கூகையை(கோட்டான் அல்லது ஆந்தை)இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.
கூகைக்கா காகாக்கை - பகலில் கூகையால் காக்கையை வெல்ல முடியாது.
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பாற்ற கொக்கு தனக்குத் தேவையான உணவு கிடைக்கும் வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும்
கைக்கு எட்டாமல் போய்விடும் - இல்லையெனில் பகையை எதிர்த்து பாதுகாத்தல் கைக்கு எட்டாமல் போய்விடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.