Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னத்தை சொல்லுறது (சிறுகதை)

Featured Replies

நித்திரை கொண்டிருப்பதே தெரியாமால் கொண்டிருந்த  நித்திரை தானாகவே  அவனை குழம்பியது.இருட்டில் இப்ப நேரம் என்ன என்று திண்டாடி சுவரில் இருந்த மணிக்கூட்டில் இருந்த  கம்பிகளை அனுமானிக்க  கண்ணை கொண்டு எத்தனை சித்து விளையாட்டுகள் செய்தாலும் முடியவில்லை.கொஞ்ச நாளாக  இப்படித்தான் கொஞ்ச காலமாக  குழப்புகிறது  இந்த நேரத்தில் அந்த நேரம் தான்  இப்பவாக இருக்க கூடும் என்று நினைத்தவன் . என்ன நேரமாக இருந்தாலும் வழமையாக எண்ணங்களோடு போராடி கொண்டு நித்திரைக்கு முயன்று  திருப்ப படுப்பது போல இன்று செய்வதில்லை என்று தீர்மானித்தான்.சோம்பலை கஸ்டப்பட்டு முறித்துக்கொண்டு தூரத்தில் சுவரில் இருந்த சுவிட்சை  தடவி தேடி அமிழ்த்தினான் .வெளிச்சமும் அவனைப் போலவே சோம்பலை முறித்து கொண்டு எழும்புவது போல மெது மெதுவாக அறை முழுவதையும் வெளிச்சமாக்கி அங்கங்கே அநாதையாக ஒழுங்கற்று சிதறி கிடக்கும் பொருட்களை  சுட்டி காட்டியது.

 

இப்படி ஒழுங்கற்று இருந்தது கிடையாது. அது அது அந்த இடத்தில் இருந்து கொண்டு  அழகாக இருந்து கொண்டு இருக்கும் . பார்ப்பவர்களுக்கு அருண்காட்சி சாலை போல இருக்கும் அவனது அறை.இவனை மட்டுமல்ல இவனைப்போல  உந்த ஒழுங்குகளை போன்ற பல நெறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத தெரியாத  பலர் அகதிகளாக இந்த  கிராமத்துக்கு வந்த பொழுது  ஒரு வழிகாட்டியாக செயல்பட்டவனின் பெயர் தான் சுரேஸ்.அவனால் ஒரு ஒழுங்கு முறைக்கு  வழிகாட்டப்பட்ட இவன்  இப்படி கொஞ்சநாளக குழம்பிக் கொண்டிப்பது  அவனால் தான்.அவனை நீண்ட காலத்துக்கு பின்  அந்த நிலமையில் சந்தித்து இருக்காவிட்டால். எப்பவோ  எந்த நேரமோ மறந்த காலத்தை வலிந்து இழுத்து பிடித்து வைத்து கொண்டு தூக்கத்தை தொலைத்து கொண்டு இருக்க மாட்டான். திரைச்சீலையை இழுத்து பார்த்தான். ஹாலந்து நாட்டின்  அந்த கிராமம் இருட்டினுள்  அமைதியாக உறங்கி கொண்டிருந்தது. சரியான நேரம் தெரியாவிட்டாலும் நள்ளிரவு கடந்து உதயத்தை நெருங்காத நேரம் என்று தெரிந்து கொண்டான்.

 

சுரேஸ் என்ற பெயரை கேட்டாலே அகதி நாமம் சூட்டப்பட்ட நம்மவர்களுக்கு இயல்பாக அவனே எதிர்பார்க்காத பயம் கலந்த மரியாதை வரும்..இந்த அடி தொண்டையால் காறி துப்புவது  போல பேச வேண்டிய  இந்த மொழியை பேச மாட்டாமாலும் விளங்க மாட்டாமாலும் தவிக்கும் பொழுது ஆத்பாவனாக வந்து உதவி  செய்து இருக்காவிட்டால் அந்த நிலை எப்படி இருக்கும் .அதை நினைத்து கூட பார்க்க முடியாமால் இருக்கின்றது..இயல்பாக அவன்  தமிழிலில் பேசும் பொழுது  கூட  உடல் மொழி கூட இந்த நாட்டவர் மாதிரி மாறி இருந்தது.பாவித்த இரண்டாம் தர இந்த உடுப்புக்களை றெட் குறஸ் வழங்கியிருந்தது. அதை அணியும் முறை தெரியாமால்  அணிந்து கொண்டு நம்மவர்கள்  வினோத உடை போட்டியில்  திரிவது போல் திரிவார்கள். நேர்த்தியாகவும் அழகாகவும் உடை அணிவது முதற் கொண்டு இதர புதிய  தெரியாத விடயங்களையும்  இதமகாவும் மனம் கோணாமாலும் எடுத்து கூறுவான்.இவருக்கு  பெரிய டச்சுகாரர்  என்ற நினைப்பு  என்று  புறம்போக்குகள்  சில காதில் பட்டும் படாமாலும் கூறுவார்கள் .உதவி பெற்றும் இப்படியெல்லாம் கூறுகிறார்கள்   என எந்த வித கோபமோ எதிர்வினையும் இல்லாமால் எந்த நேரம் சென்றாலும் எப்பவும் உதவி செய்யும்  பிரதி பலனற்ற நேசம் எப்படி வந்தது   என்ற ஆச்சரியங்களோடு சுரேஸோடு மலர்ந்த  நட்பு இன்று போல் இருக்கிறது .ஆனால் நாட்கள் மாதங்கள்  கடந்து வருடங்கள் ஆகிவிட்டன.

 

இது போல் நடுநிசி கடந்த நேரமல்ல.அன்று .கட கட வென அறையை  ஓங்கி அறைவது  மாதிரி சத்தம் கேட்டது. பொதுவாக  இந்த நேரத்தில் நடைபெறாத விடயம் .திறந்து  பார்த்தால் சுரேஸ் வேர்க்க விறுக்க  ஏதோ அதிர்ச்சியான சம்பவத்தில் இருந்து தப்பி வந்தவன் போல் இருந்தான் .என்ன விசயம் என்று கேட்டு வாய் மூட முன் வந்த வேகத்திலை கதவை இறுக சாத்தினான் .என்ன ஏது என்ன விசயம் என்று தொடர்ந்து கேட்டு  அவனுடைய படபடப்பை கூட்டாமால் நிதானமாக கேள்வி குறியுடன் பார்த்தான்.சொல்லுறன்  இரு என்றவன் சொல்லமால்  நீண்ட நேரமாக இருந்தவன்  தீடிரென்று.எல்லாருக்கும் தெரிந்த கதை அவனுக்கும் தெரிந்து இருக்கும் என்ற நினப்பில் குமுறிக்கு கொண்டு வீச்சு வீச்சாக சொல்லி கொண்டிருந்தான். தொடர்ச்சியில்லாத  புத்தகத்தின் பக்கங்களை வாசிப்பது போலிருந்தது அவனுக்கு.

 

எப்பவும் அவவோடைய் தான் திரிவான் , மம் என்று தான்  அழைப்பான் .அப்படி ஏன் அழைக்கிறான்  ஒரு கணத்தில் தோன்றும் .கவர்ச்சியாக அணியும் ஆடைகளும்  அலங்காரங்களும்  அவவுக்கு உதவும் பொழுது..எப்படியோ மறு கணம் நாற்பதை தாண்டிய டச்சு பெண்மணி என்பதை ஏதோ அசைவுகள் காட்டி கொடுத்துவிடும்.இளமையும் கவர்ச்சியும் மொழிவளமும் அவனுக்கும் இருந்தும் தாண்டி

செல்லும்  டச்சு டீன்ஏஜ் பெண்களின் கண் குடுப்புகளுக்கும்  அழைப்பு சிரிப்புக்களுக்கும்  எந்த விதமான  எதிர் வினையாற்றாமால் இருப்பது  இந்த விசயத்தில் எங்கையாடா என்று காத்து இருப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உருவாக்கியது.கற்பனைக்கு கடிவாளத்தை தட்டி விட்டு  ஆளுக்கொரு ஒருவர்  தங்களுக்கு ஒரு கதையை உருவாக்கினார்கள் .எத்தனை கதை உருவாகினாலும் கதையின் போக்கில் வித்தியாசம் இருந்தாலும் பொது அம்சமாக விளங்கியது அவனுக்கும் அவவுக்கும் அது என்றது தான்.

 

இது பற்றி சிலரது கேள்விகளுக்கு அனாசியமாக பதில் சொல்வதுண்டு .அதில் உண்மை பொய்க்கு அப்பாற்றப்பட்ட பதிலாக இருக்கும். சொல்லும் பொழுது சம்பந்தமில்லாத அதிகம் சிரிப்பது ஏனென்று விளங்காத அர்த்தமாக இருக்கும் .இளசு சரி பழசு சரி எல்லாம் ஒன்று தான் என்று அநாசியமாக சொல்லி கடக்கும் பொழுது கண்ணதாசனின் தத்துவம் மாதிரியும் இருக்கும்..எங்கையோ ஓரு கிராமிய சினிமா பாடல்  கிட்டத்தில்  கேட்கும் பொழுது தூரத்தில் போய் விட்டனே என்று குமுறிக் கொண்டு நான்  மீண்டும் தமிழனாக வேண்டும் என்பான். நீ மட்டுமல்ல எங்கோ தொலைத்து விட்டு தொலைத்தது என்னவென்று தெரியாமால் திணறுவது  நாங்கள் எல்லாரும் தான் என்று கூறினாலும் அவன் ஆறுதல் அடைவதில்லை.இவகளெல்லாம் வேசைகள் என்று கூறி தமிழ் பெண்கள்களை எல்லாரையும் கண்ணகிகள் ஆக்கி தெய்வமாக்கி சிலுவையில் அடிக்கும் கருத்துகளை எவ்வளவு விரைந்து நிராகரிக்க முடியுமோ விரைந்து நிராகரிப்பான்.முரண்பாடான அவனாக தோற்றமளித்தாலும் இவர்கள் எல்லாம் இயற்றாத தெரியாத சொல்லாத கதை ஒன்று அவனிடம்  இருக்கு என்று  பலருக்கு தெரியாது.

 

கீழே டாய்லெட்டில் தண்ணி அடிக்கும் சத்தத்துடன் டிவியின் சத்தமும் மெதுவாக கேட்டது அகதி அந்தஸ்த்து ஏற்று கொள்ள படாத பலர் சேர்ந்து வாழும் வீட்டில் இது சகஜம் .அவர்கள் அவர்கள் நேர அட்டவனைக்கு ஏற்றவாறு பகலை இரவாக்கியும் இரவை பகல் ஆக்குவதும் ...இரகசியமான விசயம் போல அவன் சொல்ல தொடங்கும்பொழுது இருந்த தோரணை சுருதி மாறி பலத்த சத்தத்துடன் சொல்ல தொடங்கினான். எத்தனை தரம் தான்டா ஒரு நாளைக்கு செய்யிறது.அடங்க மாட்டா என்கிறாள் என்று ஒருமையில் திட்டியது அவன் மம் என்று இவ்வளவு காலமும் அழைத்தவளை தான் என்று விளங்கியது.அவன் அவவின் வீட்டில் வாழுகின்றான் என்பதை மீறி இப்படி ஒரு உறவு இருந்தாலும் இவனே விரும்பாத இப்படியொரு வன் புணர்வு உறவு இருக்குமென்று கடைசி வரை நினைக்கவில்லை ..

 

அதுவும் ஆண் மேலே..

குடும்ப வறுமையுடன் ஆறு பெண்கள் சகோதரிகள் அதில் ஒன்று ஊமை ஒன்றுக்கு கண் முழுமையாக தெரியாதது, ஒன்றுக்கு காது தெரியாது  ஒன்று கால் ஊனம் என்ற குறைபாடுளுடனும் இருக்க பெண்மையும் ஆண்மையும் சக வீதத்தில் கலந்த லட்சணமான  இவனுக்கு  அனுதாபத்துடன் உதவி செய்வது போல் தொடங்கினாள்.உண்மையில் அப்படித்தான் தொடங்கி இருக்க கூடும்..இதுவும் கூட  அப்படி உருவாகி இருக்கும் என்றும் சொல்லவே முடியாது .நிர்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கி இருக்க கூடும்.ஆணை அப்படி எல்லாம் செய்யலாது என்கிறார்கள் . இல்லை அப்படி நடந்திருக்கு என்று சொல்லுகிறான் ...வேண்டா வெறுப்பாக பங்கு பெறும் இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது ...உனக்கு மல்டிபிள் ஓர்கசம் ஒன்று இருக்கு கேள்விபட்டிருக்கியா என்றான். வந்தது போச்சுது என்று தானே நாம இவ்வளவு காலம் இருந்திருக்கிறம் ,இதை எல்லாம்  எங்கு தெரிஞ்சு வைத்து கொண்டு இருக்கிறம் என்று சொல்ல இவ்வளவு விரக்தியில் இருக்கும் பொழுதே வாய் விட்டு சிரித்து விட்டான்.ஆழ்ந்த நித்திரையில் உள்ளவனை எழுப்பி  முடிஞ்சு படுக்க  மீண்டும் மீண்டும் எழுப்பி பின்  அவள் படுக்கவைத்தாலும் அதில் இயலாமால் போகவில்லை வெறுப்புதான்   அடைந்தான்

 

இவ்வளவு விபரமும் மொழியும் தெரிந்த முட்டாளுக்கு இதிலிருந்த விடுபட வழி சொல்லுவதை விட செயலில் தான் காட்டினான் .இந்த நாட்டின் இந்த எல்லையிலிருந்து வெகு தூரத்திலுள்ள அந்த எல்லையுள்ள கிராமத்தில் உள்ள தமிழ் நண்பர் வீட்டில் வசிப்பதுக்கு  அனுப்பியது மூலம் அவன் வந்த ஆரம்பத்தில் உதவி செய்ததுக்கான  நன்றியை செலுத்தி கொண்டான்.

சில காலத்தின் பின்னர் அந்த தமிழ் நண்பர்  மட்டும் தான் டெலிபோன் எடுத்து அவனைப்பற்றி நேரத்துக்கு நேரம் வித்தியாசம் வித்தியாசமான கதைகள் சொல்லி கொண்டிருப்பார்..அவன் அவனுக்கே ஆயிரம் கதைகள் இருக்கு அதுக்கே முடிச்சு அவிழ்க்க முடியாமல் தவிக்கும் பொழுது உது  எல்லாம் நினைவில் வைத்து காவிக்கொண்டா இருக்க முடியும் அதிலேயே கேட்டு  அதிலையே விட்டு விடுவான் .ஒரு நாள் அவர் எடுத்து அவனை வீட்டாலையே துரத்தி விட்டாதாக கூறினார்.இத்துடன் அவனை பற்றிய டெலிபோன் தொல்லையும் தீர்ந்தது என்ற நிம்மதி.

 

இவ்வளவு காலமும் இருக்கும் அந்ந கிராமத்தின் நகரத்தின் அந்த கோப்பி கடையை எவ்வளவு தரம் கடந்து சென்று இருப்பான். நிலக்கீழ் அறையில் கூட அங்கு  வியாபரம் நடைபெறுவதாக கேள்வி பட்டு இருக்கிறான்  விற்பது கோப்பி இல்லை என்பது மட்டும் தெரியும் மற்றும்படி வேற விபரங்கள் தெரியாதுஅவனுக்கு .தெரிய வேண்டிய நேரமோ என்னவோ தெரியாது  அவனை மாதிரியான உருவம் அசைந்து அந்த கடைக்குள் உள் சென்று கொண்டிருந்தது.அதுவும் இந்த கிராமத்துக்கு வரவே மாட்டன் என்று உறுதியுடன் சென்றவன் ஏன் இப்ப அல்லது ஏற்கனவே இங்கு வந்துவிட்டானா என்று எண்ணங்கள் விரைந்து கேள்வியை பதிலை தந்து திருப்தியடையாமால் மீண்டும் கேள்வியை எழுப்பி கொண்டிருந்தது..தன்னை தூக்க முடியமால் அசைந்து அசைந்து நடந்து  கொண்டிருந்தவனை இவ்வளவு விரைவாக பின் தொடந்து அதுவும் கடைக்குள் சென்றவனை தவறவிட்டு அங்கு மிங்கு தேடி கொண்டிருந்தான் .

 

ஒரே புகைமூட்டமாக விருந்தது.அந்த நேரத்தில் ஒரு கறுப்பன் அவனிடம் நட்பை உருவாக்கும் நோக்கில் புகைக்கிறியா என்று நீட்டினான்.இல்லை என்று சொல்லி கொண்டு திரும்பு பொழுது நெருக்கம்  குறைந்த புகை மூட்ட இடை வெளியூனூடாக கீழே செல்லும் படிக்கட்டு பாதை தெரிந்தது.படிக்கட்டு பாதை கூட ஒரு சரிவாக நடக்க கூடியதாக இருக்காமால்  குத்தனமாக இருந்தது .போதையில் கூட ஒரு அடி பிசகாமால் ஆட்கள் மேலேயும் கீழேயும் போய் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.அதை விட ஆச்சரியம் காத்திருந்தது.அவன் கீழ் தளத்துக்கு சென்ற பொழுது  வேறு  புதிய உலகம் போல் இருந்தது .ஆண்களும் பெண்களும் சிரிப்புகளும் கேலிகளும் சினுங்கலும் அனுங்கலும் இருட்டும் மறைந்து தெரியும் வண்ண ஒளியுமாய் தமிழ் பட கனவு காட்சி பின்புலம் போன்று தோற்றமளித்தது.ஜோடியில்லாமால் சுவரோடு சாய்ந்து கொண்டிருந்த பெண் ஒருத்தி தோளில் கை போட்டு புகைக்கிறீயா நட்புத்துவத்துடன் இவனை அணுகினாள்.இல்லை என்று திரும்பி பார்க்கும் பொழுது அவனும் அவளும் இந்த உலகத்துக்குள்ளேயே வேறு உலகத்தில்  இருந்து கொண்டிருந்தார்கள் முத்தங்களை சொரிந்து கொண்டு அலங்கோலமான நிலையில் அரவணித்துக்கொண்டும் . அவள் அவனின் மம் என்று முன்பு அழைக்க பட்ட அந்த நடுத்தர டச்சு பெண்மணி தான் .இன்னும் மிக படு கிழவியாகி இருந்தாள் போதை மருந்து பாவிப்பினால்  இவனும் தான்...இது எப்ப கூடி என்று அவனை கேட்க மனம் வரவில்லை அப்ப கூடி இருந்திருக்கும்  என்று நினைத்தவன்  இதை மறைத்த கோபத்தில் வந்த வேகத்தில் திரும்பி நடக்க  தொடங்கினான்.

 

பலத்த குரலில் போகாதே நில் என்னவென்று கேட்டு விட்டு செல் என்று தமிழில் அவன் போட்ட கூப்பாடு அந்த இடத்தை அதிர வைத்தது.  அமைதியானது.ஒரு கணம் திரும்பி பார்தவர்கள் மறுகணம்  வேறு உலகத்துக்கு சென்று விட்டனர் .அவன் நிதானமாக அவனிடம் கூறினான் .அண்மையில் தான் ஏதோ விதததில் அறிந்து டெலிபோன் எடுத்து தன்னை ஒருக்கால் வந்து பார்த்து போகும் படி கூறினாள் .விரைவில் செத்து  போய் விடுவனோ என்று பயமாயிருக்கு என்றாள் . இந்த போதை பழக்கத்துக்கு  என்னை அடிமையாக்கி உறவுக்கு பயன் படுத்தினாள் என்றாலும் இப்ப என்னிடமிருந்து அன்பை தேடுகிறாள் ..தனது சொத்தின் ஒரு பகுதியை எனக்கு எழுதி வைத்திருக்கிறாள்.அவள் மாதிரி நானும் செத்து கொண்டிருப்பது  அவளுக்கு தெரியாது..என்னை மறந்து இவ்வளவு காலமும் இருந்த படியால்  ஏதும் உதவி செய்யாமால் இருந்து விட்டேன்  ஊரிலுள்ள வலது குறைந்த சகோதரங்களுக்கு..இதை வைத்து ஏதாவது செய்யணும் போல இருக்கு என்றான்.போதை மருந்து பாவித்தால் நல்ல மகிழ்வான கற்பனை  உருவாக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறான் அது போல  இதுவும்  என நினைத்து  இந்த கர்ம சொத்துகள்  அதுகளுக்கு எதுக்கு என்று கூறி அந்த இடத்தை விட்டு உடனடி வெளியேறினான்.

 

அவள் இறந்து  சில  காலத்துக்கு பின் சுரேஸ் இறந்து விட்டான் என்பது கூட பழைய கதையாகி விட்டது இப்ப.

 

சகோதரங்களுக்கு இந்த சொத்தை ஒப்படைக்க வழி செய்வான் என்று எண்ணி மரண சாசனம் இவன் பெயரில்  எழுதி வைத்திருக்கிறான் .

அது பற்றிய கடிதம் கிடைத்திருக்கிறது என்றது தான் இப்ப புதிய கதை

 

இந்த சொத்தை கொடுப்பான் என்றா  நினைக்கிறியள்?

 

வெள்ளைக்கு கதைக்கும் இவனை  போன்று பன்னாடைகள்  சொத்து விசயத்தில் கில்லாடிகள் ..

 

இவன்  இப்ப ஆணித்திரமாக தீர்மானித்து விட்டான் ..கொடுப்பதில்லை என்று

 

சில வேளை சுரேஸ் உயிர்தெழுந்து வந்து கூறினாலும் கூட

 

http://mithuvin.blogspot.co.uk/2013/08/blog-post.html

 

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின் பின்னர் நல்ல ஒரு கதையுடன் வந்திருக்கின்றீர்கள், நாகேஷ்!

 

தத்துவங்கள் எப்போதுமே வெறுமையில் தான் பிறக்கின்றன!

 

அதனால் தான் சித்தார்த்தன் அரண்மனையை விட்டு முதலில் வெளியேறினான்!

 

அடிக்கடி என்று இல்லாவிட்டாலும், இடைக்கிடையாவது தலையைக் காட்டுங்கள்! :lol:

மற்றவர்கள் தொடத் தயங்கும் பக்கத்தை நீங்கள் தொட்டிருகின்றீர்கள் நாகேஷ் . புங்கையின் கோரிக்கைதான் எனதும் .கதைக்குப் பாராட்டுக்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு தொடருங்கள்

  • தொடங்கியவர்

மற்றவர்கள் தொடத் தயங்கும் பக்கத்தை நீங்கள் தொட்டிருகின்றீர்கள் நாகேஷ் . புங்கையின் கோரிக்கைதான் எனதும் .கதைக்குப் பாராட்டுக்கள் .

வணக்கம் ...புங்கையூரன் , கோமகன் , சுமேரியர் அக்கா...பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிக்ள்

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் மற்றவர்கள் பார்க்காத அல்லது மறைக்கும் ஆனால் ரகசியமாக பேசிக் கொள்ளும் விடயங்களை கதை வடிவத்தில் கொண்டு வருவதில் நாகேசு வெற்றியாளனாகவே இருக்கிறீர்கள். சில சமயங்களில் எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்பதும்  பிரமிப்பாக இருக்கிறது. பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை, நேர்த்தியான அணுகுமுறை ! மேலும் எழுதுங்கள் வாழ்த்துகள் ! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாகேஸ் உங்களுக்கு யாழில் வந்து மற்றவர்களுடைய கதைகளை விமர்சனம் செய்ய நேரம் இல்லை ஆனால் உங்களுடைய  கதையை மற்றவர்கள் விமர்சனம் செய்ய உங்களுக்கு யாழ் தேவை

Edited by ரதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நாகேஷ் அண்ணா,

நீண்ட காலத்தின் பின் நல்ல கனமான ஒரு படைப்போடு காண்பதில் மகிழ்ச்சி.

பேசாப்பொருளாய் இருந்தவை எல்லாம் புலம்பெயர்வாழ்வில் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில்  இப்படியானவர்களைக் கடந்து போயிருப்போம். கலாச்சாரம், வாழ்வியல் என்று பல புதைந்து போயுள்ளன உங்கள் கதைகளில் உங்கள் கதை சொல்லும் விதமும் அருமை. வாழ்த்துக்கள். :icon_idea:

  • தொடங்கியவர்

எப்போதும் மற்றவர்கள் பார்க்காத அல்லது மறைக்கும் ஆனால் ரகசியமாக பேசிக் கொள்ளும் விடயங்களை கதை வடிவத்தில் கொண்டு வருவதில் நாகேசு வெற்றியாளனாகவே இருக்கிறீர்கள். சில சமயங்களில் எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்பதும்  பிரமிப்பாக இருக்கிறது. பாராட்டுகள்

வல்வை அக்கா ...பதிவை பார்த்து  பாராட்டியமைக்கு  நன்றிகள்

 

எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டு இருந்தீர்கள் ...ஏதோ வகையில் சமூகத்தின் போலி விம்பங்களை உடைப்பதற்கு உங்களை போல எழுத்தாளர்கள் எல்லாம் கலகம் செய்வது மாதிரி தான் 

 

நானும்  இந்த விசயத்தை எடுத்து கொண்டு ஒரு கலக காரனாக இருக்கிறேன் அவ்வளவு தான்

நல்ல கதை, நேர்த்தியான அணுகுமுறை ! மேலும் எழுதுங்கள் வாழ்த்துகள் ! :D

வணக்கம் suvy  நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு
  • தொடங்கியவர்

வணக்கம் நாகேஷ் அண்ணா,

நீண்ட காலத்தின் பின் நல்ல கனமான ஒரு படைப்போடு காண்பதில் மகிழ்ச்சி.

பேசாப்பொருளாய் இருந்தவை எல்லாம் புலம்பெயர்வாழ்வில் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில்  இப்படியானவர்களைக் கடந்து போயிருப்போம். கலாச்சாரம், வாழ்வியல் என்று பல புதைந்து போயுள்ளன உங்கள் கதைகளில் உங்கள் கதை சொல்லும் விதமும் அருமை. வாழ்த்துக்கள். :icon_idea:

நன்றி ...

ஜீவா...நன்றி .....உங்கள்  பாரட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்

  • தொடங்கியவர்

ஏன் நாகேஸ் உங்களுக்கு யாழில் வந்து மற்றவர்களுடைய கதைகளை விமர்சனம் செய்ய நேரம் இல்லை ஆனால் உங்களுடைய  கதையை மற்றவர்கள் விமர்சனம் செய்ய உங்களுக்கு யாழ் தேவை

 

 

ரதி அக்கா... உங்கள் வசவுக்களுக்கு நன்றி ....என்னதான் பிரச்சனை உங்களுக்கு ...யாழ் இணையத்தில் கதையை இணைப்பதில் பிரச்சனையா?

 

2005 ஆண்டிலிருந்து ஏதோ வகையில் யாழுக்கிலை இருக்கிறேன்...தமிழில் தட்டச்சு  பழகினது ஆரம்பத்தில் யாழில் என்றால் நம்பவா போறியள்....அதனால் உலாவின பழகின இடம் என்ற படியால்  எனது படைப்புகளின் குற்றம் குறையை யோசிக்காமால் கூச்சமின்றி  இணைத்து வருகிறன்... விமர்சனத்துக்கும்  பதிலுக்கும் காத்திருந்து அல்ல.அப்படி வேண்றுமென்றால் .இன்றைய கால கட்டத்தில் சமூக வலை தளங்கள் டிவிட்டர் ,பேஸ்புக் என்று எத்தனோயோ இருக்கு தானே....

 

எனக்கு எனது படைப்புகளை பற்றிய  தெளிவான விமர்சனங்கள் இருப்பதனால் ...நான் ஒரு முழுமையான எழுத்தாளன் இல்லை எனக்கு ஏற்கனவே தெரிந்தும்  எழுதுகிறேன்.

 

அதனால் வேறு இடங்களுக்கு வலிந்து இணைப்பது இல்லை ..இது எனக்கு பழகின இடம் என்ற படியால் தான் இணைக்கிறன் வேறு ஒரு நோக்கம்  இல்லை ...நீங்கள் விமர்சனம் செய்கிறியள் அதற்கு நான் விமர்சனம் கட்டாயம் செய்யவேணும் என்ற பேரத்துக்கு கட்டாய பட தயாரில்லை ..

..உங்கள் கருத்துக்கு நன்றி  சொல்லாவிட்டால் தான்  அது  தான் பிழை என்று நினைக்கிறன் ...

 

..நீங்கள் என்ன யாழ் கள  சுப்பிர மணிய சுவாமியா? :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா... உங்கள் வசவுக்களுக்கு நன்றி ....என்னதான் பிரச்சனை உங்களுக்கு ...யாழ் இணையத்தில் கதையை இணைப்பதில் பிரச்சனையா?

 

2005 ஆண்டிலிருந்து ஏதோ வகையில் யாழுக்கிலை இருக்கிறேன்...தமிழில் தட்டச்சு  பழகினது ஆரம்பத்தில் யாழில் என்றால் நம்பவா போறியள்....அதனால் உலாவின பழகின இடம் என்ற படியால்  எனது படைப்புகளின் குற்றம் குறையை யோசிக்காமால் கூச்சமின்றி  இணைத்து வருகிறன்... விமர்சனத்துக்கும்  பதிலுக்கும் காத்திருந்து அல்ல.அப்படி வேண்றுமென்றால் .இன்றைய கால கட்டத்தில் சமூக வலை தளங்கள் டிவிட்டர் ,பேஸ்புக் என்று எத்தனோயோ இருக்கு தானே....

 

எனக்கு எனது படைப்புகளை பற்றிய  தெளிவான விமர்சனங்கள் இருப்பதனால் ...நான் ஒரு முழுமையான எழுத்தாளன் இல்லை எனக்கு ஏற்கனவே தெரிந்தும்  எழுதுகிறேன்.

 

அதனால் வேறு இடங்களுக்கு வலிந்து இணைப்பது இல்லை ..இது எனக்கு பழகின இடம் என்ற படியால் தான் இணைக்கிறன் வேறு ஒரு நோக்கம்  இல்லை ...நீங்கள் விமர்சனம் செய்கிறியள் அதற்கு நான் விமர்சனம் கட்டாயம் செய்யவேணும் என்ற பேரத்துக்கு கட்டாய பட தயாரில்லை ..

..உங்கள் கருத்துக்கு நன்றி  சொல்லாவிட்டால் தான்  அது  தான் பிழை என்று நினைக்கிறன் ...

 

..நீங்கள் என்ன யாழ் கள  சுப்பிர மணிய சுவாமியா? :lol:  :lol:

உங்களுடைய எழுத்தைப் பற்றி எழுதக் கூடிய தகுதி எனக்கு இல்லை அதைப் பற்றி விமர்சிக்கவும் இல்லை

 

நீங்கள் தான் சோனியாஜீயா :lol:  :lol:  :lol:
  • தொடங்கியவர்

ரதி சொல்வது மாதிரி ..நான் யாழ் களத்தில் உரையாடுவதோ மற்றவர்களின் ...பதிவுகளுக்கு  கருத்து கூறுவதோ இப்ப குறைவு என்பதை  ஒத்து கொள்ளுகிறேன் .....ரதி சொல்வதில் சில நியாயங்கள் இருப்பதாக கருத்து கொண்டு  இனி வரும் காலங்களில்  எனது  எந்த உருவாக்கங்களை இங்கு இணைப்பதில்லை என தீர்மானித்து உள்ளேன் ...இவ்வளவு காலமும் எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த கள உறவுகள்  யாவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொல்வது மாதிரி ..நான் யாழ் களத்தில் உரையாடுவதோ மற்றவர்களின் ...பதிவுகளுக்கு  கருத்து கூறுவதோ இப்ப குறைவு என்பதை  ஒத்து கொள்ளுகிறேன் .....ரதி சொல்வதில் சில நியாயங்கள் இருப்பதாக கருத்து கொண்டு  இனி வரும் காலங்களில்  எனது  எந்த உருவாக்கங்களை இங்கு இணைப்பதில்லை என தீர்மானித்து உள்ளேன் ...இவ்வளவு காலமும் எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த கள உறவுகள்  யாவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்

 

உங்கட கதையை யாழில் கொண்டு வந்து இணைக்க வேண்டாம் என சொல்லவில்லையே :)  நீங்களும் வளரும் எழுத்தளார்களை யாழுக்கு வந்து ஊக்கப்படுத்தலாம் தானே...உங்களை ஆரம்பத்தில் யாழ் உறவுகள் ஊக்கப்படுத்தியதால் தானே இன்று ஒரு சிறந்த எழுத்தளாராக உள்ளீர்கள்.
 
யாரும் யாழை விட்டுப் போறது,எழுத மாட்டேன் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை

ரதி சொல்வது மாதிரி ..நான் யாழ் களத்தில் உரையாடுவதோ மற்றவர்களின் ...பதிவுகளுக்கு  கருத்து கூறுவதோ இப்ப குறைவு என்பதை  ஒத்து கொள்ளுகிறேன் .....ரதி சொல்வதில் சில நியாயங்கள் இருப்பதாக கருத்து கொண்டு  இனி வரும் காலங்களில்  எனது  எந்த உருவாக்கங்களை இங்கு இணைப்பதில்லை என தீர்மானித்து உள்ளேன் ...இவ்வளவு காலமும் எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த கள உறவுகள்  யாவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்

 

இதென்ன சின்ப்பிளைதனமாய் இருக்கு .............. ரதி அக்கி என்ன சுப்புடுவா  :lol:  :lol::D ??  அவா உங்கடை கதையளுக்கு சரியோ பிழையோ கருத்து தாறா  தானே ! இதுக்கெல்லாம் நீங்கள் போய் கவலைப் பட்டு உங்கடை ஆக்கங்களை போடாமல் விடுவதா ?? ஒரு ஆக்கம் வெற்றியா தோல்வியா  என்று வாசகர்கள் தானே முடிவு செய்வார்கள் . உங்கள் கதைகென்றே ஒரு பெரிய கூட்டம் இங்கு இருகின்றது ,எங்களை ஏமாற்றமாட்டீர்கள் என்று நம்புகின்றேன் :) :) .

 

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.