Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தம் கொதிக்கிறது..., MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்!

Featured Replies

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J-tYpswVEiA

 

  இரத்தம் கொதிக்கிறது...,

MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்!
நம் தலைவர் பிரபாகரனின் தவறான முடிவுகளால் சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்....

கடைசி வரை அமைதிக்காக தவம் கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன் கொன்றார்...

படம் முழுக்க தமிழ் இனத் துரோகம்!!!

ஆகத்து 23 ஆம் தேதி எங்கெல்லாம் முடியுமோ.. அங்கெல்லாம் படத்தை வெளியிடு!

நாங்களும் வெளியிடுறோம், தெருவுக்கு தெரு... மேடை போடுறோம்! ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? மாநில ஆளுநர்கள் யார்?யார்? உலக நாடுகள் யார்?யார்?

மானமுள்ள மாணவத் தலைமுறைத் தமிழனே வீதிக்கு வா! தமிழன் என்றால் யார் என்று காட்டுவோம்...

-சற்று முன் தமிழக மாணவர்களிடமிருந்து..

முகனூல் ஊடாக 


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J-tYpswVEiA

இணைப்பிற்கு நன்றிகள் அன்பு ...இப்படியான திரைப்படங்கள் மூலம் உண்மையை பொய்யாக்கி சரித்திரத்தை மாற்றி எழுதுவதே  இவர்களது முழு  நோக்கமும் .இதற்கு ஒரே மாற்று மருந்து ........உண்மையை கக்கி ,இந்தியா ,சிறிலங்கா அரசுகள் வெட்கித்தலை குனியும் வகையில் ஒரு திரைப்படத்தை புலம்பெயர்வாழ் மக்கள் உருவாக்கி அதை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்துவதே இப்படியான செயல்களுக்கு நாம் கொடுக்கும் மாற்று மருந்து .............அதுதான் காலத்தின் தேவையும். 

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

1017002_614753681897869_17062627_n.jpg
இலங்கையில் இருந்து வந்த மலையகத் தமிழரான நண்பர் சொன்னது,ஒருமுறை கொழும்பு விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்ட போது,அங்கிருந்த கடைசி அப்பாவி பயணிவரை வெளியேற்றி விட்டு பின் தாக்கினார்களாம்,மேலும் அவர்கள் குழந்தைகளையும்,பெண்களையும் தாக்குவது கிடையாதாம். 

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் போர் மரபுடன் போரிட்ட ஒரே இனமென்றால் அது தமிழினம் தான்.தயவுசெய்து 'மெட்ராஸ் கபே' போன்ற படங்களின் இயக்குனர்கள் அப்படிபட்ட சுத்த வீரர்களை கேலி செய்யாமல் வாசனை பொருட்கள் வாங்க வந்த வெள்ளையனை வாசலில் நிற்க வைக்காமல் படுக்கை அறைக்கு அழைத்து சென்ற கேரளத்தின் பெருமையையோ அல்லது இத்தாலி எப்படி இந்தியாவை கைக்குள் போட்டது என்ற தலையணை மந்திரத்தையோ படமாக எடுத்து வெள்ளிவிழா காணுங்கள்.

 
முகனூல் நண்பர்
 

 

  • தொடங்கியவர்

Pathmanathan Thiru மற்றும் Shritharan Sarangan Vaiko-இன்புகைப்படம்-இனை பகிர்ந்துள்ளனர்.

1004683_562301173829833_1879314859_n.jpg
"மெட்ராஸ் கபே"

"மெட்ராஸ் கபே"

ஈழ விடுதலை போரை கொச்சைபடுத்தி, தமிழீழ விடுதலை புலிகளை தூஷிக்கும் விதமாக சித்தரிக்கபட்டுள்ள "மெட்ராஸ் கபே"

என்ற திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது அடுத்து இன்று தமிழ் அமைப்புகளுக்கு இந்த படத்தை திரையிட்டு காட்டினர் திரைப்படக் குழு.

தமிழ் ஆர்வலர்களும், தமிழர் ஆதரவு அமைப்பினரும் இன்று அந்த திரைப்படத்தை "சிறப்பு காட்சியில்" கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்...

இப்படத்தை பார்த்த பின் இயக்குனர் ஆர் கே செல்வமணி கூறியதாவது ,

மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜபக்சே பணம் கொடுத்து , சோனியா காந்தி இயக்கி , இந்திய ரா உளவுத்துறை கதை வசனம் எழுதியது போல் உள்ளது என்று கூறியுள்ளார் . மேலும் காந்தியை கொன்ற ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றியும், இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய இனவழிப்பு நடந்து முடிந்த பிறகு ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார் செல்வமணி.

இந்த திரைபடத்தில் பொய் புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுஇருகிறார்கள் ..... மாவீரர்திலகம். பிரபாகரன் அவர்களையும், தமிழ்நாட்டில் தமிழ் ஈழத்துக்காக "உண்மையாக எந்த சமரசமும் இன்றி" ஆதரிக்கும் தலைவர்களை தீவிரவாதிகளாகவும், ஒற்றர்களாகவும் சித்தரித்து இருக்கின்றனர்...

விடுதலை புலிகளை கெட்டவர்களாகவும் , இந்திய அமைதிப் படையும் , சிங்கள அரசும் நல்லவர்களாகவும் காட்டியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தை காட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணி குறித்து இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? இந்திய உளவுத்துறையின் கண்ணோட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டது. விடுதலை புலிகளை தீவிரவாதிகளை விடவும் கேவலமாக சித்தரித்து உள்ளனர் படத் தயாரிப்பாளர்கள். விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், அமைதி படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றியும் அல்லவே காட்டியிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து உள்ளனர்.....

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இன உணர்வாளர்கள் நிச்சயம் இத்திரைப்படத்தினைப் புறக்கணிக்கவேண்டும்.

ஒரு நிமிட காட்சியாக இதையும் சேர்த்திருக்கலாமே.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேவலம் புகைபிடித்தல் சம்பந்தமாக பாபா திரைப்படத்திற்கு எதிர்ப்புகாட்டிய பாட்டாளிமக்கள் தலைவர் ராமதாஸ் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் புகைபிடித்தல் சம்பந்தமாக பாபா திரைப்படத்திற்கு எதிர்ப்புகாட்டிய பாட்டாளிமக்கள் தலைவர் ராமதாஸ் எங்கே?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127047

இராமதாஸ் ஏற்கனவே இப்படத்தினை தடைசெய்ய சொல்லியிருக்கிறார். எங்களுக்கு அரசியல் நோக்கத்திற்காவோ அல்லது தமிழ் உணர்விலோ குரல் கொடுப்பவர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தப் படத்தைப் பற்றி.... டைரக்டர் ஆர்.கே. செல்வமணியின் பேட்டி.
 

http://www.youtube.com/watch?v=GPH6wD0gs7k

 

 

Edited by தமிழ் சிறி

 

இண்டைய நிலமையில உந்தப் படத்தை ஓடவிடாமல் செய்ய கொஞ்சம் ரெலிபோன் காசுதான் செலவாகும். :icon_idea:

தலைவா படத்தை இப்பிடித்தானே வரவிடாமல் செய்தவங்கள். அதையே செய்து பாக்கோணும் என்ன நடக்குது எண்டு. :rolleyes:

அப்ப தெரியும் உந்த தமிழ்நாட்டு கிழவன் கிழவியின்ர விளையாட்டெல்லாம் :lol:

 
CTRL + Q to Enable/Disable GoPhoto.it

 

  • தொடங்கியவர்

1146706_408637512580578_789388218_n.jpg
If you can...,

Release Madras Cafe anywhere in India 23rd August 

and we'll start our project Delhi Cafe(either short film or documentary or in any other creative form) the 24th of August...

Post this photo and the description in as many north india FB pages. - Students from Tamilnadu.

23ம் தேதி இந்தியாவில் 

எந்த ஒரு இடத்தில் மெட்ராஸ் கபே படம் 

வெளியிடப்பட்டாலும் 

24ம் தேதி டெல்லி கபே வெளியிடுவோம்....

- தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

 

தமிழ் உணர்வுள்ளவர்களின் இரத்தம் கொதிக்கும்!


கொதிக்க வேண்டும்!

  • தொடங்கியவர்

1208845_225097984310902_1697621371_n.jpg

மெட்ராஸ் கஃபே, ஜான் ஆபிரகாம் இலங்கை தூதரகத்தில், சிக்கியது புகைப்பட ஆதாரம்!

மெட்ராஸ் கஃபே படத்தில் நடித்திருக்கும் ஜான் ஆபிரகாம், தான் இலங்கை அதிகாரிகள் எவரையும் சந்திக்கவில்லை என்றும் அவர்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அறிக்கை விட்டார். இப்போது அவர் இலங்கை அதிகாரிளை சந்திக்க காத்திருந்த வேளையில், சிங்கள ரசிகர் ஒருவர் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து நெட்டில் உலாவ விட்டதனால், சிக்கியுள்ளார் ஆப்ரகாம்.

http://bit.ly/17XAEDU
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கபே திரைப்படத்தை உலகில் எங்கும் திரையிட அனுமதிக்க போவதில்லை - சீமான்.

 

 

seemaan.jpgமெட்ராஸ் கபே படத்தில் முழுக்க முழுக்க ராஜீவ்காந்தியை கதாநாயகனாகவும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை வில்லன் போலவும் சித்தரித்துள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷ தயாரிப்பில், சோனியாகாந்தி இயக்கத்தில், இந்திய உளவுத்துறையான றோ திரைக்கதை�வசனத்தில் உருவாக்கப்பட்ட படம் போல் இந்த படம் அமைந்துள்ளது.
 
இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்கள் மத்தியில், விடுதலைப்புலிகள் மிக கேவலமானவர்கள் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
 
இது, முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம். இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் வெளியிட விடமாட்டோம் என்றார்.
 
ஜான் ஆபிரகாம் நடித்து, சூர்ஜித் சிர்க்கார் இயக்கியுள்ள இந்தி படம், மெட்ராஸ் கபே. இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி திரையிடப்பட உள்ளது.
 
படத்தில் தமிழர்களை தீவிரவாதிகள் போலவும், கேவலமாகவும் சித்தரித்து இருப்பதாக கூறி, தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க போவதில்லை எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
 
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு மெட்ராஸ் கபே  படம் சென்னையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சீமான், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தமிழ் அமைப்புகள், மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த படத்தை பார்த்தனர்.

- See more at: http://vannimedia.com/site/news_detail/21306#sthash.NJgIgkib.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127047

இராமதாஸ் ஏற்கனவே இப்படத்தினை தடைசெய்ய சொல்லியிருக்கிறார். எங்களுக்கு அரசியல் நோக்கத்திற்காவோ அல்லது தமிழ் உணர்விலோ குரல் கொடுப்பவர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

 

மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

1170928_533412880046232_257010366_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் போராட்ட நியாயத்தை திரித்தும், கொச்சைபடுத்தியிருந்தால் நிச்சயம் இப்பட வெளியீடு தடுக்கப்பட வேண்டும். மல்லுகளின் 'டேம் 999' திரைப்படம் போல் ஓரங்கட்டப்பட வேண்டும்.

 

இதை தமிழக அரசே உணர்ந்து செய்தால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: மலையாளியான இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து நடித்துள்ள மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜீவ் காந்தியை நாயகனாகவும், எல்டிடிஇ தலைவர் பிரபாகரனை படுமோசமானவராகவும் சித்தரித்துள்ளதாக படம் பார்த்த தமிழ் அமைப்புகள் கொந்தளித்துள்ளன.

ஜான் ஆபிரகாம் நடித்துள்ள மெட்ராஸ் கபே இந்திப்படம் வருகிற 23ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

விடுதலைப் புலிகளை எதிர்மறையாக சித்தரித்து இதில் காட்சிகள் இருப்பதால் தமிழகத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் எதிர்த்துள்ளன.

 
  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவை சரியான அரசியலில் பயண்படுத்துவதை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் அண்ணா. கருணாந்திகுடும்பம் தமிழக கோலிவூட்டை ஆண்ட பின்னர் அங்கே உருப்படியாக எதும் இல்லை. மலையாளிகள் தமிழருக்கு எதிரான கருத்துகளில் படம் தயாரிப்பதை வழமை ஆக்குகிறார்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் தமிழ் சினிமாவுக்குள் பாடல் பாடுபவர்கள் நடிப்பவர்கள் தொழில்நுட்பம் என்று  மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம் என்பதினை மறுக்கமுடியாது ....  :(

  • தொடங்கியவர்

562321_292930340848472_2075992692_n.jpg

மலையாளிகளுக்கு இருக்கும் தமிழ் வெறுப்பு சொல்லமுடியாதது. அத்தோடு காலை நக்கிப் பிழைக்கும் அவர்களின் வழியும் தனி வழி.

Edited by கறுவல்

  • தொடங்கியவர்

1240657_1411662665715792_1824595267_n.jp
தமிழர்களின் வெற்றி - 

மெட்ராஸ் கபே படத்திற்கு உலகெங்கும் கதவடைப்பு!! தமிழர் பலம் உலகறியும் இப்போது !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.