Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Featured Replies

ரங்கு சிலிப் ஆகிறவை இது தான் முதல்ல படிக்கனும்..உங்க ஆசிரியர் வந்தால் இதில் ஒரு கொப்பி எடுத்து கொடுத்து விடுங்கோ பிள்ளைகள். :lol:

 

 

ல, ழ, ள உச்சரிப்பு சரியாக வராத சில மாணவர்களுக்கு, உச்சரிப்பு சரியாக வருவதற்காக 'அருணாசல புராணம்' என்ற நூலில் உண்ணாமுலை அம்மன் மீதுள்ள துதிப் பாடல் ஒன்றை பலமுறை படிக்கச் சொல்வாராம் கி.வா.ஜ.

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடை...க் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.

நீங்களும் சொல்லிப்பாருங்கள்

 

சின்ன வயதில் வயதில் இந்த தனத்தால்தான்  படிப்பு கெட்டது. இப்பவுமா? :o:D

 

  • Replies 224
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் வடிவாக இன்னொருமுறை கவனியுங்கள்

சும்மா அடாவடியாக வாத்தியாருக்கு எதிராக அள்ளி வைக்கக் கூடாது. :lol:

நான் நல்ல வாத்தியாராக்கும் :D  :lol:  :lol:

 

மன்னிச்சுக்கொள்ளுங்கோ வாத்தியார். என்னைப்போலவே என்ரை கொம்பியூட்டரும் சரியான பழசு, :(  எல்லாவற்றையும் பிந்தித்தான் விளங்கிக்கொள்ளுது, காட்டுது. இருந்தாலும் அவ, மெசொபொத்தேமியா சுமேரியர் என்னை நல்லாத்தான் உங்களிட்டை போட்டுத்தந்துள்ளா போல் தெரிகிறது. <_<  உங்களுக்கு இப்படிக் கோவம் வந்து நான் பார்த்ததே இல்லை. :blink:  வகுப்பைவிட்டுமட்டும் தூக்கிப்போடாதேங்கோ, இப்போ மெய் எழுத்துக்களைப் படித்துவிட்டேன். என் தவறுக்கு என் மெய்யினால் சட பட என்று எத்தனை தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போடுகிறேன். :huh: 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிச்சுக்கொள்ளுங்கோ வாத்தியார். என்னைப்போலவே என்ரை கொம்பியூட்டரும் சரியான பழசு, :(  எல்லாவற்றையும் பிந்தித்தான் விளங்கிக்கொள்ளுது, காட்டுது. இருந்தாலும் அவ, மெசொபொத்தேமியா சுமேரியர் என்னை நல்லாத்தான் உங்களிட்டை போட்டுத்தந்துள்ளா போல் தெரிகிறது. <_<  உங்களுக்கு இப்படிக் கோவம் வந்து நான் பார்த்ததே இல்லை. :blink:  வகுப்பைவிட்டுமட்டும் தூக்கிப்போடாதேங்கோ, இப்போ மெய் எழுத்துக்களைப் படித்துவிட்டேன். என் தவறுக்கு என் மெய்யினால் சட பட என்று எத்தனை தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போடுகிறேன். :huh: 

 

இவ்வளவு சீக்கிரம் மிரண்டு தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தால், ஹும்ம்... நீங்கள் 'பழசு'ன்னு பேர்ல வருகிற 'இளசு' போல தெரியுது...!  assom.gif

 

கருமமே கண்ணாயிருந்த இந்த 'சுந்தரனை' ஒரு கனநேரம் ஏமாற்றப் பார்த்தீர்களே?  why-us.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சீக்கிரம் மிரண்டு தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தால், ஹும்ம்... நீங்கள் 'பழசு'ன்னு பேர்ல வருகிற 'இளசு' போல தெரியுது...!  assom.gif

 

கருமமே கண்ணாயிருந்த இந்த 'சுந்தரனை' ஒரு கனநேரம் ஏமாற்றப் பார்த்தீர்களே?  why-us.gif

 

 

வன்னியரே, என் வயதைச் சொல்லிவிட்டேன். வாத்தியார் என்னை, மார்க்கண்டு வாத்தியாரின் முதியோர் வகுப்புக்கு மாற்றிவிடுவாரோ தெரியாது. ஆனாலும் என் மனசு என்றும் இளசுதான். இளசுகள் என்னிடம் பயமின்றிப் பழகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடை...க் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.

நீங்களும் சொல்லிப்பாருங்கள்

 

நானும் பல தடவைகள் முயன்று பார்த்தேன்...

 

ம்ம்.. ஒருமுறைகூட அசுர சுத்தமாக, தடுமாற்றமில்லாமல் வாசிக்க இயலவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியரே, என் வயதைச் சொல்லிவிட்டேன். வாத்தியார் என்னை, மார்க்கண்டு வாத்தியாரின் முதியோர் வகுப்புக்கு மாற்றிவிடுவாரோ தெரியாது. ஆனாலும் என் மனசு என்றும் இளசுதான். இளசுகள் என்னிடம் பயமின்றிப் பழகலாம்.

 

பாஞ்ச், உங்கள் வயதை சொல்லவேயில்லையே.. சொன்னால், வகுப்பில் பக்கத்திலேயே இருக்கை தயார் செய்ய வசதியாக இருக்கும், வாத்தியார் அடிக்க வரும் பட்சத்தில், பாஞ்சு பாஞ்சு அவரை தடுக்கவும் முடியும். :)

தமிழ் வகுப்பிற்கு, இந்தி பெயரில்(பாஞ்ச்) வரக்கூடாது! :lol:

 

நானும் 'ராசவன்னியன்' என உருமாற்றம் செய்ய இருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச், உங்கள் வயதை சொல்லவேயில்லையே.. சொன்னால், வகுப்பில் பக்கத்திலேயே இருக்கை தயார் செய்ய வசதியாக இருக்கும், வாத்தியார் அடிக்க வரும் பட்சத்தில், பாஞ்சு பாஞ்சு அவரை தடுக்கவும் முடியும். :)

தமிழ் வகுப்பிற்கு, இந்தி பெயரில்(பாஞ்ச்) வரக்கூடாது! :lol:

 

நானும் 'ராசவன்னியன்' என உருமாற்றம் செய்ய இருக்கிறேன்

 

என் வயதை யாழ்களத்தில் தற்போது அனைவரும் அறிவார்கள் நீங்கள் அறியாதிருப்பது ஆச்சரியமே!

 

என்னைப் பஞ்சு என்றுதான் கூப்பிடுவார்கள் அத்தனை மென்மையானவன் நான். :rolleyes:  ஆனால் பஞ்சு என்ற பெயரில் நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, :huh:  ஆகவேதான் கைக்குவந்ததை ரைப் செய்தேன் பாஞ் என்று வந்தபோது ஏற்றுக்கொண்டது. யாழ்களத்திற்கு இந்திமேல் இத்தனை காதல் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. :wub:

 

வன்னியரே யாழ்களத்தில்தான் தமிழ் வகுப்பு இருக்கிறது. நான் வருவதை எந்தக்கொம்பன் வந்து தடுத்தாலும் களம் விடாது. :D

 

சரி சரி வாங்கோ வாத்தியார் வரப்போறார் வகுப்புக்குப் போவம் மற்றதை பிறகு கதைக்கலாம். :lol:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலெழுத்துக்களாகிய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள் எனப்படும்.
சார்பெழுத்துக்கள் மூன்று எனத் தொல்காப்பியர் கூறினாலும் நன்னூலார் பத்துச் சார்பெழுத்துக்களை கூறுகின்றார்.
 

1. உயிர்மெய்யெழுத்து
2.ஆய்தம் அல்லது அகேனம்
3.உயிரளபெடை
4.ஒற்றளபெடை
5.குற்றியலிகரம்
6.குற்றியலுகரம்
7.ஐகாரக்குறுக்கம்
8.ஒளகாரக்குறுக்கம்
9.மகரக்குறுக்கம்
10.ஆய்தக்குறுக்கம்

 

நன்னூலார் கூறும் இந்தப் பத்துச் சார்பெழுத்துக்களில்
தொல்காப்பியர் கூறுபவை கூற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்பவை மட்டுமே.

 

 

1.உயிர்மெய்யெழுத்து

 

ஒரு மெய்யெழுத்தும் ஒரு  உயிரெழுத்தும் சேருவதனால் பிறக்கும் பிறிதொரு எழுத்திற்கு உயிர்மெய்யெழுத்து என்று பெயர்.
 

உதாரணம் மெய்யெழுத்தாகிய க்  உயிரெழுத்தாகிய வுடன் சேரும்பொழுது  என்ற உயிர்மெய்யெழுத்துப் பிறக்கின்றது.அப்படியே பதினெட்டு மெய்யெழுத்துக்களும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தனித்தனியாக ஒன்றுடன் ஒன்று சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துக்கள் பிறக்கின்றன.
 

12  உயிரெழுத்துக்கள்
18 மெய்யெழுத்துக்கள்
216 உயிர்மெய்யெழுத்துக்கள்
1 ஆய்த எழுத்து
மொத்தம் தமிழ்மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன.
   

     அ ஆ இ ஈ உ ஊ எ    ஏ   ஐ       ஒ        ஓ             ஔ
 

க்   க கா கி கீ கு கூ கெ கே கை கொ     கோ       கௌ
 

ங்  ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
 

ச்   ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
 

ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
 

ட்  ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
 

ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
 

த்  த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
 

ந்   ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
 

ப்  ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
 

ம்  ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
 

ய்  ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
 

ர்  ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
 

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
 

வ்  வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
 

ழ்  ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
 

ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
 

ற்  ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
 

ன்  ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
 

 

Edited by வாத்தியார்

 எழுத்துக்களின் விளக்கத்திற்குப் பாராட்டுக்கள் . வாத்தியார் ஐயா " மகரக் குறுக்கம் " என்றால் ?? என்ன விளக்கம் தாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

முதலெழுத்துக்களாகிய உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள் எனப்படும்.

சார்பெழுத்துக்கள் மூன்று எனத் தொல்காப்பியர் கூறினாலும் நன்னூலார் பத்துச் சார்பெழுத்துக்களை கூறுகின்றார்.

 

1. உயிர்மெய்யெழுத்து

2.ஆய்தம் அல்லது அகேனம்

3.உயிரளபெடை

4.ஒற்றளபெடை

5.குற்றியலிகரம்

6.குற்றியலுகரம்

7.ஐகாரக்குறுக்கம்

8.ஒளகாரக்குறுக்கம்

9.மகரக்குறுக்கம்

10.ஆய்தக்குறுக்கம்

 

ரொம்ப வருடங்களாச்சுது... இந்த குறுக்கங்களின் விளக்கங்களைக் கேட்டு.

அடுத்து அரை மாத்திரை, கால் மாத்திரை, முழு மாத்திரை என குழப்பமான சுவாரசியங்கள் வரவுள்ளன போலும்.

 

அரைச்சி சாப்பிடுவோம்!

 

நன்றி.

சுமே நான் பின்னாலேயே இருக்கிறேன் முன்னுக்கு இருக்கிற ஆட்களைத்தான் வாத்தியார் அடிக்கடி கேள்வி கேட்பார். அதோட முன்னால இருந்தால் கனக்க சங்கடங்கள் வரும் இப்பிடித்தான் போன வருசம் டியூசனில நானும் எனது சிநேகிதியும் முன்னுக்கு அள்ளி அடிச்சு இடம் பிடிச்சு இருந்திட்டம். எங்களுக்கு அண்டைக்கு வகுப்பு எடுக்கிற தமிழ்வாத்தியைப் பெடியளுக்குப்பிடிக்காது என்று எங்களுக்குத் தெரியாது. அவர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று சுந்தர காண்டத்தை படிப்பிக்க பின்னால இருந்த பெடியள் வாத்திக்கு காகித அம்பு எறியத் தொடங்கிடாங்கள் முன்னுக்கு இருந்த எங்களுக்குமேலையும் அம்புகள் விழுந்திச்சு அதில ஒரு அம்பு என்ர சிநேகிதியின் தலையில வந்து செருகி தாழம்பூ மாதிரி நிற்க பெடியளும் சும்மா விட்டாங்களோ கொண்டையிலே தாழம்பூ என்று பாட்டுப்பாடத் தொடங்கிட்டாங்கள்...... அதுக்குப்பிறகு அவளை எங்க கண்டாலும் இவங்கள் தாழம்பூக் கொண்டைக்காரி தமிழுவாத்தி அண்டைகாரி தழுவ வரவா சண்டைக்காரி என்று ஓவராஎல்லாம் பாடுவாங்கள் அதால இப்ப அவள் படிக்கவே வராமல் விட்டுட்டாள். அண்டைக்கு மட்டும் அவளும் நானும் முன்வாங்கிலில இருக்காம விட்டிருந்தா இப்ப அவளும் இங்க படிக்க வந்திருப்பா....முன்னுக்கு இருந்தா  மேடையில இருக்கிற மாதிரி என்னவா இருந்தாலும் எல்லாரும் பாப்பினம். அதால நான் வரேல்லை நீங்கள் இங்க வாங்கோ...... :D

:lol:  :D

ஊக்கம் அளிக்கும் நுணா, சுவி அண்ணா, சுமேரியர், தமிழரசு, யாழ் அன்பு, கோமகன், களான், பான்ச், மற்றும் புத்தன் அனைவருக்கும் நன்றிகள். நாளைக்கு வகுப்பிற்கு எல்லோரும் கட்டாயம் வரவேண்டும் :D

 

நானும் ஒரு ஊக்கியாகவிருந்து பின்னூட்டமிடுகிறேன். தொடருங்கள் போதனையை. படித்ததெல்லாம் நினைவில்லில்லை, எல்லாவற்றையும் மீழ்நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

எல்லோருக்குமே பிரையோசனமான தொடர் . பெரும்பகுதியான பிழைகள் வல்லின , மெல்லின , இடையினங்களிலேயே வருவது கண்கூடு .  தொடருங்கள் வாத்தியார் :) :) .

 

மெல்லினங்களைப் புரிந்துகொள்வதே எனக்கு இப்பொது மெத்தச் சிரமமாக இருக்கிறது...

எ, யா முதலும், ஆ, ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகுமே !

(நன்னூல்)

 

நான் சரியா வாத்தி யார்?

 

இப்ப ஞாபகம் வருகிறதே.... என் தமிழ் வாத்தியார் பத்தாண்டுகளுக்கு முன் செப்பினது.

 

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம்.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன.

 

இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும்.

 

இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல்  எழுதி  வ ரவும்  கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும்.

அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம்.

 

பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் மொழிக்கு இலக்கணமும் துணையாக இருக்கின்றது. 

 

இலக்கணத்தைப் பற்றி விரிவாகப் படிப்பதற்கு இந்த ஆக்கம் எல்லோருக்கும் உதவியாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

 

ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி கள உறவுகளை வேண்டிக்கொள்கின்றேன்  

 

கனம் தமிழ் ஆசான் அவர்கட்கு,

தமிழை மேலும் படித்து இன்னும் பல குசும்புகளைத் தமிழில் செய்யவேண்டுமென்ற ஆர்வக்கோளாறினால் தங்களின் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுளைந்து இதுவரையில் நிகழ்த்திய அனைத்துப் பாடங்களையும் மென்று சுவைத்துத் தின்றுவிட்டேன். மேலும் சுவைக்க ஆவல்லாயுள்ளேன், தயைகூர்ந்து என்னையும் தங்கள் மாணாக்கர்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்ளும்படி இத்தால் வேண்டிக்கொள்கிறேன்.

இங்ஙனம்,

சுயசீர்திருத்தமடைந்த மாணவன்.

 

Edited by Vatha

வாத்தியார் உங்கள் வகுப்புக்கு இனி நான் வரேலை. சுமேரியர் பழைய காதல் கடிதங்களைக் கொண்டு வாறபடியால் எனக்கு மூட் அவுட்டாகுது அதாலை படிக்க முடியலை.  :(  :unsure:  ^_^  :huh:  :mellow:  :lol:  :lol:  :lol:

Edited by அலைமகள்

சுமேரியை வகுப்பாலை நிப்பாட்டினால் தான் ...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்மெய்யெழுத்தாகிய  யா என்ற எழுத்தும் வினாவெழுத்தாகும். யா என்ற வினாவெழுத்து
ஒரு சொல்லின் முதலாக மட்டுமே வரும். சொல்லின் இறுதியில் வராது.
 

உதாரணம் யாது அல்லது யாவன என்பன
 

வந்தாயா என்பது ஒரு வினாச்சொல். இங்கே இறுதியில் யா என்ற வினாவெழுத்து வந்திருக்கின்றதே எனக்கருதக்கூடாது.
 

ஏனெனில் வந்தாயா என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தால் வந்தாய் + ஆ என வரும். ஆகவே இங்கு வினாவெழுத்து ஆ என்பதே ஒழிய யா அல்ல.

 

 

சார்பெழுத்த்க்களில் அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது
 

ஆய்தம்

 

இது  மூன்று புள்ளிகளைக்கொண்ட ஒரு வடிவம். ஒரு கத்தியையும் அதன் பிடியையும் இணைக்கும்போது மூன்று ஆணிகளை அடித்து இணைப்பார்கள். அப்படி அடிக்கப்படும் ஆணிகளின் வடிவத்தில் இருப்பதனால் இந்த எழுத்துக்கும் ஆய்த எழுத்து எனப் பெயர் வந்ததாகக் கருதுகின்றனர்.
 

இந்த எழுத்திற்கு தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து (அடுப்பின் வடிவத்தில் இருப்பதனால்)
எனவும் பெயர்கள் உண்டு.
ஆய்தம் எப்போதும் ஒரு சொல்லின் இடையிலேயே வரும்.ஆய்த எழுத்தைக் கொண்ட ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ஒரு குறில் எழுத்தும் அடுத்து ஆய்தமும் அதற்கடுத்ததாக ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்துமே இருக்கும்.
 

உதாரணம் அஃது அல்லது  எஃகு, அஃதும் என்ற சொற்களாகும்.
 

 

அளபெடை
 

பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை
மிகைப்படுத்துவார்கள். இது அளபெடை எனப்படும்
அளபெடை இரண்டு வகைப்படும்.
1. உயிரளபெடை
2.ஒற்றளபெடை

என்பன அவையிரண்டுமாகும்.
 

 

உயிரளபெடை
 

ஒரு பாடலில் ஓசை குறையும்போது
சொல்லின் முதலிலும் நடுவிலும் இறுதியிலும் வரும் உயிர் நெடில்  எழுத்துக்கள் ஏழும்

அந்த ஓசையின் அளவை நிறைவுசெய்ய அந்த எழுத்துக்களின்
சாதாரண அளவைவிட மிகையாக ஒலிக்கப்படும்
 

அந்த இடத்தில் எழுத்தின் ஓசை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனை அறியச்செய்ய அந்த இடத்தில் வரும் நெடில் எழுத்துக்கு அடுத்ததாக அந்த நெடில் எழுத்தின் இனமாகிய குறில் எழுத்தினை இணைப்பர்.
 

இவ்வாறு ஒரு சொல்லில் உயிர் நெடில் எழுத்தினை அடுத்து அந்த எழுத்தின் உயிர்க்குறில் சேர்க்கப்பட்டு
அங்கு வரும் ஒலியின் அளவினைக் குறித்துக் காட்டுவதற்கு உயிரளபெடை எனப்பெயர்.
 

பகை நட்பாம் காலம் வருங்கால் முக நாட்டு
அகநட்பு   ஒரீஇ விடல்
 

என்ற திருக்குறளின் சீராகிய ஒரீ(இ) என்பதன் ஒலி நீண்டு ஒலிக்க வேண்டும் என்பதற்காக வள்ளுவர்
ர +ஈ என்ற ரீ யுடன் ஈ யின் குறிலாகிய இ யைச் சேர்த்துள்ளார்  
 

 

ஒற்றளபெடை
 

 

பாடலின் ஒலி அல்லது ஓசை குறையும்போது சொல்லின் நடுவிலும் இறுதியிலும் வரும் ங,ஞ,ண ,ந,ம,  ன,வ,ய,ல,ள என்ற  ஒற்றையெழுத்துக்கள் பத்தும் ஆய்த எழுத்து ஒன்றுமாக பதினொரு எழுத்துக்களும் அந்த இடத்தில் வரும் ஒலியை நிறைவடையச் செய்ய அந்த எழுத்துக்களின் சாதாரண ஒலியைவிட மிகையாக ஒலிக்கும் அதனை அறியச்செய்வதற்கு அந்த எழுத்துக்ளுக்கு அடுத்ததாக

இன்னொருமுறை அந்த எழுத்தை இணைத்து விடல் வேண்டும்.

இவ்வாறு சொல்லில் வரும் ஒற்றெழுத்தே மீண்டும் இணைந்து இணையொற்றாக வந்து அந்த இடத்தில் வரும் ஒலி மிகையைக் குறிப்பதையே ஒற்றளபெடை என்பர்
 

 

கண்(ண்) கருவிளை கார்முல்லை கூரெயிறு
பொன்(ன் )பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
மின்(ன்) னுழைமருங்கு மேதகு சாயலாள்
என்(ன் )பிறமகளா மாறு
 

இங்கே ஒவ்வொரு வரிசைகளிலும் முதற் சீர்களில்
வரும் அதாவது முதற்சொல்லின் எழுத்துக்களாகிய  ண், ன் என்ற எழுத்துக்களின் ஒலிகள் நீட்டி ஒலிக்கப்படல்வேண்டும்.

 

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?
வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.
த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.
வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நாங்கள்தான் நெடுக முன்வாங்கில இருக்கிறனாங்கள். இண்டைக்கு தமிழ்ச்சிறியும் வதாவும் வந்தியும் வந்து இருந்திட்டினம். நாங்கள் என்ன செய்யிறது ???எனக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு பின்னால இருந்தால் ஒண்டும் தெரியாது.


students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?
வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.
த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.
வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

 

பணிசும் குடுகிறவையே. எந்தப் பள்ளிக்கூடத்தில.
 


சுமேரியை வகுப்பாலை நிப்பாட்டினால் தான் ...............

 

பிறகு உம்மட கதையையும் எல்லாருக்கும் சொல்லிப்போடுவன் அலை :D
 

பிறகு உம்மட கதையையும் எல்லாருக்கும் சொல்லிப்போடுவன் அலை :D

 

 

 எனக்குத் தெரியாமல் என்னுடைய கதையா  :o 

  • கருத்துக்கள உறவுகள்

students-smiley-emoticon.gif

 

த‌.சி.: வாத்தியார்...  வாத்தியார்...  ஒரு கேள்வி?

வாத்தியார்: சந்தேகங்களை... தயங்காமல் கேட்பவனே... நல்ல மாணவன்.

த‌.சி.: "பணிஸ்" எத்தனை மணிக்கு கொடுப்பினம்... வாத்தியார்.

வாத்தியார்: நீயெல்லாம்... மாடு மேய்க்கத்தான்... லாயக்கு. ஓடுறா... வகுப்பை விட்டு....

 

த‌.சி.: பெண் மாடு தானே?

 

    தனியாகவா?

    கன்றுடனா? :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கும் அமுதென்று பேர். அந்த அமுதை அன்பான வாத்தியார் உங்களிடம் இருந்து பருகியபோது! ஏற்பட்ட ஆனந்த மிகுதியால், :) நீங்கள் சொல்லித்தந்த பாடங்களை சந்தை மடத்தடியிலிருந்து சத்தம்போட்டுப் படித்தேன். :D உயிரளபெடை, ஒற்றளபெடை என்று படித்தபோது! சந்தையிலை குந்தியிருந்த ஒரு மனிசி எனக்கு அடிக்கவந்திட்டா வாத்தியார். :( கட்டையில போற உனக்குப் பெட்டை கேக்குதா! எண்டு அவவுக்கு வந்த கோவம். <_<    

  • கருத்துக்கள உறவுகள்

த‌.சி.: பெண் மாடு தானே?

 

விசுகு அவர்களே! நீங்கள் பூனூல் போட்டவரா? அக்கிரகாரத்துத் பழக்க வழக்கங்கள் உங்களிடம் அத்துப்படியாக வெளிப்படுகிறதே! அங்குதான் பெண்ணுக்கும் மாட்டுக்கும் சிறப்பான ஒற்றுமை உள்ளதாகப் படித்துள்ளேன். மருமகளை, மாட்டுப்பெண் என்று அன்பாக அழைப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாத்திரை
 

எழுத்துக்கள்  ஒலிக்கப்பட வேண்டிய நேரத்தை அளக்கும் முறையே மாத்திரை எனப்படும்

முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்கும் நேரம் ஆகியவற்றை வைத்தே அளந்தனர்.
ஒரு முறை கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் எழுத்துக்கள் ஒலிக்கப்பட்டால் அந்த நேரத்தை ஒரு ஒலி அளவு எனக்கொண்டார்கள்.

அதையே அன்றைய கால இலக்கண நூல்களை எழுதியவர்கள் மாத்திரை என்றார்கள்.

 

ஒரு ஒலி அளவில் ஒரு எழுத்து ஒலிக்கப்பட்டால் அதனை ஒரு மாத்திரை என்றனர்.
இரண்டு ஒலியளவில் ஒலிக்கப்படும் போது இரண்டு மாத்திரை என்றனர்.

அதாவது இரண்டுமுறை கண்ணிமைக்கும் நேரத்தின் அளவிற்கு அல்லது இரண்டு கைநொடிகளின் நேரத்திற்கு  ஒலிக்கப்பட்டால் இரண்டு மாத்திரை என்றனர்.
 

உயிரளபெடை 3 மாத்திரை (சில இடத்தில் 4 மாத்திரை வருவதும் உண்டு)
 

நெடில்  2 மாத்திரை
 

குறில் ,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,ஒற்றளபெடை  1 மாத்திரை

 

மெய்,குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஆய்தம்  1/2 மாத்திரை
 

மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்   1/4 மாத்திரை
 

இவையே எழுத்துக்களின் ஒலி அளவுகளாகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.